*பகீர் செய்தி* … … *பயபீதி* … *படுபயங்கரம்*… … *மகா கோரம்*… :-( இந்த அவலத்தைக் கேட்பாரில்லையா? :-(
திருவண்ணாமலையில் புதிய மிருகக்காட்சிசாலை!
February 24, 2017
(அல்லது) திமுக தீவட்டிக்கொள்ளைக்காரர்களின் அறப் போராட்ட நாடகம்.
தமிழக அரசியலென்றால் நம் கருணாநிதி வகையறாக்களைப் பற்றி அமர்க்களமாகக் கிண்டல் செய்வார். அண்ணாதுரை மாதிரி வழவழாகொழகொழா வெற்றிலை நடுங்கல் பேச்சிற்குப் பின் கரகரத்தகுரலில் கருனாநிதிபோலஆரம்பித்து திடீரென்று எம்ஆர் ராதா மாதிரிப் பேச ஆரம்பித்து எம்ஜிஆர் வரை ஒரு ரவுண்ட். இன்னொரு ரவுண்ட் ஆரம்பித்தால் – அவருடைய சொந்தக் கட்சியிலிருந்து ஆரம்பித்து ஈவேரா ஊடாக நேருகாந்திஅம்பேட்கரையும் விட்டுவிடாமல் அனைவரையும் ஒரு பிடிபிடித்துவிட்டுத்தான் ஓய்வார். மூளையுள்ள, சிந்திக்கும் ஆசாமி. ஆனால், அவர் பேச்சில் நானுமேகூட கேள்விப்பட்டிருக்காத திராவிடக் கொச்சை வசைகளும் இருக்கும். :-)) ஆகவே.
Read the rest of this entry »
கருணாநிதி பெருங்குடும்பக் கருமாந்திரம் >> சசிகலா குறுங்குடும்பக் கருமாந்திரம்: சில குறிப்புகள்
February 18, 2017
சசிகலாக்களைக் குற்றம் சொன்னால், ஜெயலலிதாக்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்கிறார்கள். ஆம். தமிழகத்துக்கென (திமுக கொள்ளையர்கள் போலல்லாமல்) சிலபல நல்ல காரியங்களை தம் இயல்பான திராவிடத்தனத்தை மீறிச் செய்திருந்தாலும், அகங்காரமிக்க ஜெயலலிதாக்களும் இந்த ஊழல் குட்டையில் உழன்ற உலுத்தர்களே. அமோகமாகக் கொள்ளையடித்தவர்களே. செத்தார்கள் என்று பண்பு(!) பார்த்து, ச்சூ கொட்டுவது எனக்கு முடியாது. ஆகவே ச்சீ! – ஒழிந்தார்கள் சரி, ஆனால் ஒழியவேண்டியவர்கள் என ஆயிரக்கணக்கில் இருக்கிறார்களே!
…இந்தத் திராவிடலை உடன்பிறப்புகள், அதுவும் ‘திராவிடப் பொதுவாழ்வில் தூய்மை’ எனும் நேனோ தூசியை 100000000000X பூதக் கண்ணாடி வைத்துக்கொண்டு பார்ப்பவர்கள் – ஆகவே, போயும் போயும் இந்தக் கருணாநிதிகளைப் போற்றி ஆராதிப்பவர்கள், இந்தக் குற்றம்காணும் விஷயத்தை ஜெயலலிதாவோடு மட்டும் நிறுத்திவிடுவார்கள். என்னவோ கருணாநிதிகளும் இசுடாலிர்களும் கனிமொழிகளும் பண்பாளச் சத்தியசந்தர்கள் போல, தமிழகத்தின் மேன்மைக்காக மட்டுமே உழையோவுழை எனக் கண் துஞ்சாமல் மெய் நோக்காமல் உழைத்துவருபவர்கள் போல… உண்மையாகவே, இது ஒரு நகைக்கத்தக்க பிரச்சினைதான். :-)
ஏனெனில் ஊழலின், திராவிடத்துடன் பிறந்த கருமாந்திரங்களின் முழுமுதல் ஊற்றுக்கண்ணுக்குச் செல்லவேண்டாமோ? சசிகலா ஈயங்களைப் பார்த்து திமுக பித்தளைகள் இளிப்பதைப் பார்த்துக்கொண்டு நாம் நமட்டுச் சிரிப்புகளை மட்டுமே நல்கிக்கொண்டு இருக்கக்கூடாதல்லவா?
யுஃப்ரெடீஸின் சீற்றம் (Wrath of Euphrates) – இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு எதிரான குர்தி+அமெரிக்க+ஸிரிய வீரர்களின் முன்னெடுப்பு
January 17, 2017
கடந்த அக்டோபர்2016லிருந்து இஸ்லாமிக் ஸ்டேட் வெறியர்களின் ‘தலை’நகரான ரக்கா-வைப் பிடிப்பதற்காகத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் யுத்தம்தான் இந்த ரேத் ஆஃப் யுஃப்ரெடீஸ். இதற்கு உலகம் கொடுக்கும் விலை மிக அதிகம் என்றாலும் (இதில் பெரும்பாலும் குர்திகளின் ரத்தம்தான் தியாகம் செய்யப் படுகிறது; மற்ற ‘இஸ்லாமிய’ தேசங்களெல்லாம், தங்கள் சொந்தச் சாக்கடையை ‘யுஃப்ரெடீஸின் சீற்றம்’ சுத்தம் செய்துகொண்டிருக்கும்போது, ஆனந்தமாகத் தம் பெண்பிள்ளைகளை ஒடுக்கிக்கொண்டு 1500ஆண்டுகளுக்கு முன் சென்று வாழ்வாங்குவாழ்வது எப்படி எனக் காலட்சேபம் செய்து கொண்டிருக்கிறார்கள்!) கொஞ்சம்கொஞ்சமாக அயோக்கியம் நசுக்கப்பட்டுகொண்டிருக்கிறது. Read the rest of this entry »
நேர்கோணல் மூலமாகப் பெறப்பட்ட அய்யா திருமாவளவன் அவர்களுடைய கருத்துகள் சிலவற்றை ‘கழித்துக்கட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள் காட்டுவது போகாத ஊருக்கு வழி’ (=‘Demonetisation is a road to nowhere’) என்ற தலைப்பில், என்னுடைய பிரத்தியேகச் செல்லமான ‘த மண்டு’ பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.
அஹ்மெத் ஷா மஸூத், பஞ்ச்ஷேரின் சிங்கம், ஆஃப்கனிஸ்தானின் ஒப்பற்ற தலைவன்: சில குறிப்புகள், படங்கள்
September 9, 2016
“எவ்வளவோ வரலாற்று நாயகர்கள் இருந்திருக்கிறார்கள்… ஆனால் அவர்களில் பலரும் – பாடப்படாமல், பேசப்படாமல், போற்றப்படாமல் ஏகோபித்த இருளில் மறைந்துவிட்டார்கள்; ஏனெனில் அவர்களைப் பற்றிய நினைவுகளை எழுதக்கூடிய வீரியம் மிக்கவர்கள் இல்லை…”
க்வின்டுஸ் ஹொராடியஸ் ஃளாக்கூஸ் (65 – 8; ஏசு பிறந்ததற்கு முன்னால்) (எனது மேற்கண்ட நிர்மூலத்தின் லத்தீன்வழி ஆங்கில மூலம்= Many heroes lived . . . but all are unknown and unwept, extinguished in everlasting night, because they have no spirited chronicler)
மகாமகோ அஹ்மெத் ஷா மஸூத், சந்தேகத்திற்கிடமின்றி நமது சமகால வரலாற்று நாயகன் தான்! பலப்பல போற்றுதற்குரிய கல்யாண குணங்களை உடையவன்; வாழ்க்கையைத் தீவிரமாக அணுகியவன், புத்திமான். பலவான். மிக முக்கியமாக, அவன் மிக அற்புதமான மனிதன்.
சர்வ நிச்சயமாக, நான் மகாமகோ வீரியமுள்ள எழுத்தாளன் என்றெல்லாம் இல்லை. ஏன், சொல்லப்போனால், நான் எழுத்தாளனேகூட அல்லன். ஆனால், அஹ்மெத் ஷா மஸூத் போன்றவர்கள் மறக்கப் படவே கூடாது. அவர்கள், அபூர்வமாகவே பூக்கும் விடிவெள்ளிகள்.
ஆகவேதான் இதனைப் பதிக்கிறேன்..
ஒரு கல்வித்தந்தையின் இறப்பு (good riddance too!)
June 22, 2016
பொய்கள், அண்டப் புளுகுகள், புள்ளியியல் விவரணைகள் – என, ஒரு ஆங்கிலப் பதம் (= Lies, Big lies & Statistics) உண்டு. Read the rest of this entry »
மு. கருணாநிதி வெற்றிக்காகக்கூட பாவம், திமுக, லஞ்ச துட்டு கொடுத்திருக்கிறது! படுகேவலம்!!!
May 15, 2016
என் திருவாரூர் நண்பர் ஒருவர் (இவரது நம்பகத்தன்மை அதிகம்) இரண்டு நாட்களுக்கு முன்னர் எனக்குத் தெரிவித்துள்ளபடிக்கு:
அவருக்கு நேரடியாகத் தெரிந்தே திருவாரூர் சட்டசபை தொகுதியின் விஜயாரூரம், கிடாரம்கொண்டான் பகுதிகளில் திமுக சார்பாக பணம் அமோகமாக விநியோகிக்கப்பட்டிருக்கிறது! (நண்பர், பணத்தை வாங்கிக்கொள்ளாமல் திமுக களவாணிகளைத் திட்டி அனுப்பிவிட்டார்)
பாளாப்போற எலிக்ஸன் முடிய்ற வரிக்கும் இவ்னுங்களோட வாந்திகள பொற்த்துக்கணுமேடா! கெதி கலங்குதேடா என்க்கு! :-( Read the rest of this entry »
எனக்கு இது மாளா ஆச்சரியம் தரும் விஷயம். ++ அரைகுறைகளின் சொம்புதூக்குதல்களையும் அவர்களுடைய அற்ப மலைப்பையும் அவதானிக்கும்போதெல்லாம் ஏற்படும் அலுப்பும் சலிப்பும், ஊக்க போனஸ்.
மும்பய், பல பேராசிரியர்கள், சில மாணவர்கள் – குறிப்புகள்
March 19, 2016
கடந்த சில தினங்களை மும்பய் மாநகரில் கழிக்கவேண்டியிருந்தது; என்னுடைய நேரம், ஆனந்தமாக – டாடா சமூக அறிவியல் கழகம் (Tata Institute of Social Sciences), ஹோமிபாபா அறிவியல் கல்வி மையம் (Homi Bhabha Centre for Science Education ) சார்ந்த பல போற்றத்தக்க பேராசிரியர்களுடன் ‘அதிகாரபூர்வமாகவும்,’ சிலபல மாணவர்களுடன் இலக்கற்ற உரையாடல்களுடனும் கழிந்தது. (பின்புலம்: அரசுப் பள்ளிகள், கல்வி, நாம் என்ன செய்யவேண்டும், எந்தவகையான தொழில்நுட்பங்களை நாம் உபயோகிக்கலாம், ஆசிரியர்களுக்கு உதவுவது எப்படி, பாரதமுழுவதற்குமான வீச்சை ஏகோபித்துக் கட்டியெழுப்புவது எப்படி… … இன்னபிற)
ஆனால், பேச்சு பேச்சு பேச்சு பேச்சு பேச்சு பேச்சு… … Read the rest of this entry »
2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (3/3)
March 15, 2016
இவ்வரிசையின் முதற்பகுதி: 2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (1/3); இரண்டாம் பகுதி: 2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (2/3)
இப்பதிவு, இவ்வரிசையில் கடைசி: 3/3. … தொடர்ச்சி… …
2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (2/3)
March 14, 2016
இவ்வரிசையின் முதற்பகுதி: 2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (1/3)
… தொடர்ச்சி… …
3. அஇஅதிமுக-வும் ஒரு கடைந்தெடுத்த திராவிடக் கட்சிதான். ஆகவே, இதுவும் ஒரு மகாமகோ கொள்ளைக்கார நிறுவனம் மட்டுமே.
2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (1/3)
March 13, 2016
பீடிகை (= CigaretteHand ©எஸ். ராமகிருஷ்ணன்): என்னுடைய மகாமகோ செல்ல அகதிகளான ‘அமெரிக்க’ என்ஆர்ஐ சொகுசு அறிமுகங்களுக்கும் (இவர்களில் பலர், என்னுடைய அக்கால வகுப்பு/கல்லூரித் தோழர்கள்) என்னைப்போலவே வேறு வேலையேயில்லை – ஆனால், என்னைப்போலல்லாமல் மாதாமாதம் ‘டாண்டாண்‘என்று டாலர் $$$$ சம்பளம் வந்துவிடுகிறது என நினைக்கிறேன். B-)
[ஷகீல் ஹாஷிம்] வன்முறைகளுக்குப் பின், இஸ்லாமின் ஒரு புதிய மறு உருவாக்கத்திற்கான நேரம் வந்துவிட்டது!
February 25, 2016
இங்கிலாந்தில் வாழும் ஷகீல் ஹாஷிம் எனும், பதினெட்டு வயதேயாகும் இந்த இளைஞன், ஒரு பள்ளி மாணவன்; இந்தச் சிறு வயதிலேயே ‘த எகனாமிஸ்ட்,’ ‘த ஸன்’ போன்ற பத்திரிகைகளில் கட்டுரை எழுதும் அளவுக்குத் திறன். இவன் போன்றவர்கள் (எல்லா விதங்களிலும்) வளர்ந்து, இஸ்லாமையும் முஸ்லீம் இளைஞர்களையும் கடைந்தேற்றுவார்கள் எனத்தான் படுகிறது. Read the rest of this entry »
“சுப. வீரபாண்டியன் போன்றவர்களைத் திருத்தவே முடியாது! இவர்கள் விவகாரமெல்லாம் சுத்த வேஸ்ட்!!” + இரு ஊக்கபோனஸ்கள்
December 26, 2015
வெறுத்துப்போன (அக்கால சுபவீ, அக்கால+இக்கால அடியேனின்) ஆருயிர் நண்பரொருவர் சொன்னதுதான் இது!
ஆதாரம்:
Read the rest of this entry »
See, I do not normally write about anything that I do not pretend to know about. But, the truth is that, I have been a reluctant witness occasionally, to what passes for learned TV discussions, in the hysterically farcical Indian TV channels, mostly courtesy: youtube.
என்னிடம் எல்லாவற்றுக்கும் பக்கா ஆதாரமிருக்கிறது, சரியா? கலைஞர் கருணாநிதி அவர்கள் நினைத்தால் நடத்திக்காட்டாத விஷயம் ஒன்றுமே இல்லைதான் – பலஹீனத்துடன் இதை ஒப்புக்கொள்வதை விட்டால் எனக்கு வேறுவழியேயில்லை! :-(
Read the rest of this entry »
அரவிந்தன் ‘அதீநியம்’ கண்ணையன்: ஒரு புதிர் (1/n)
September 10, 2015
(அல்லது) ஒரு சுக்குத் தேவையுமில்லாமல், ஒரு சலிக்கவைக்கும் என்ஆர்ஐ(NRI)தனமான அரைகுறைப் பார்வையுடன் இந்தியாவைத் தொடர்ந்து மட்டம் தட்டுவது எப்படி…
முகாந்திரம்: அக (=அரவிந்தன் கண்ணையன்) அவர்கள், என்னுடைய இஸ்ரோ தொடர்பான குறிப்புகளின் மீது விமர்சனம் வைத்து ஒரு ஆங்கிலக் கட்டுரையை, சிலபல உள்முரண்களுடனும் விலாவாரியாக எழுதியிருக்கிறார்கள். அவருடைய பொன்னான நேரத்தைச் செலவுசெய்து அறிவுரைகள் பலவற்றையும் ஊக்கபோனஸாக வழங்கியிருக்கிறார்கள். கண்ணீர் மல்க முதற்கண், நாத்தழுதழுக்க முதல்நாக்கு, அவருக்கு நன்றி பலவற்றைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
Read the rest of this entry »

