தமிழ் ஆவண மாநாடு (2013)
January 31, 2013
பத்மனாப ஐயர், சசீவன் கணேசநாதன், கோபினாத் தில்லைநாதன், சேரன் சிவானந்தமூர்த்தி ஆகியோரால் தொடங்கப் பெற்று, அவர்களை அறங்காவலர்களாகக் கொண்டு, ஒரு சுயஅர்ப்பணிப்பு மிகுந்த குழுவினருடன், கடந்த எட்டு ஆண்டுகளாக, இலங்கையின் கொழும்புவிலிருந்து, பல தளங்களில், பல தடைகளையும் இன்னல்களையும் மீறி, மகத்தான பணியாற்றி வருகிறது நூலகம் அறக்கட்டளை (நூலகம் ஃபௌன்டேஷன்).
நம்மைப் போன்ற தமிழகம்சார் நபும்சகத் தமிழர்கள், நம் தமிழக அரசு நிறுவனங்கள், தமிழர்(!) இயக்கங்கள்(!!), இலங்கைத் தமிழரைப் பற்றிக் கவலைப் படுவதாகக் காட்டிக் கொண்டு பசப்பும் நம் அரசியல்/பண்பாட்டு/திராவிட அயோக்கியர்கள் – இவர்கள் எல்லாம் செய்யாததை, செய்யக் கூட நினையாததை, நூலகம் தொடர்ந்து செய்வது – நமக்கு மகிழ்ச்சியையும் துக்கத்தையும் ஒருசேர அளிக்கும் விஷயம்.
Read the rest of this entry »
அபு ல்-வலித் மொஹம்மத் பின் அஹ்மத் பின் ரஷித் எனும் அவெர்ரீஸ்
January 28, 2013
ஏதோ ஒன்றிரண்டு கொர்ரான் செய்யுட்களை மட்டும் படித்து விட்டு அதனையும் புரிந்து கொள்ளாமல் இருக்கும் அரைகுறைகள் தான் இஸ்லாமின் பெயரால் அட்டூழியம் செய்வார்கள்.
— இப்ன் ரஷித் (அவெர்ரீஸ் – Averroës) (1126-1198)
என் இளமைக்கால அதிமனிதர்களில் (’ஹீரோ’க்களின் தமிழ்ப்’படுத்தல்’ தான், பயப்படாதீர்கள்) ஒருவர் இந்த இப்ன் ரஷித் – அவருடைய சமகால ஐரோப்பியர்களால் லத்தீன்மயமாக்கப் பட்டு அவெர்ரீஸ் என அழைக்கப் பட்டவர்.
Read the rest of this entry »
“இன்டர்நெட்டுக்கு வயது முப்பது”
January 22, 2013
அப்படியானால், எனக்கு வயது ஒன்று. நம்பினால் நம்புங்கள் – மேலே படியுங்கள்.
நம்பாவிட்டால் எக்கேடோ கெட்டு (சுஜாதா (PBUH) அவர்களின் அங்கீகாரம் பெற்ற) யுவகிருஷ்ணா அவர்கள் மிக ஜனரஞ்சகமாக எழுதியிருக்கும் ’இண்டர்நெட்டுக்கு வயது முப்பது’ கட்டுரையைப் படித்துவிட்டு வாருங்கள்.
அப்போதுதான், எனக்கு ஒரு வயது என்று பொய் சொல்லியிருக்கிறேன் – ஆனால் நான் பிறக்கவேயில்லை – இருந்தாலும் நான் ஒரு தேவமைந்தனானதால், என்னால் இப்படி எழுதமுடிகிறது என ஒப்புக் கொள்வீர்கள். நான் என் கால்விரல்களால் தட்டச்சு செய்து மூக்கு நுனியால் என் வாலில்லாப்பூச்சியான செல்ல எலியின் கொட்டையைக் கசக்கி உருட்டி, கர்ஸரை நகர்த்தி, காதால் பார்த்து, கண்ணால் கேட்டு, வாயால் கொட்டாவி விடுவதையும் நீங்கள் வெகு இயல்பாகப் புரிந்து கொள்வீர்கள்.
Read the rest of this entry »
சென்னை புத்தகச் சந்தை நினைவுகள்…
January 20, 2013
சரியாக நினைவில்லை எந்த வருடம் என்று. 1992 / 3 /4 ஆக இருக்கலாமோ?
ஆனால் அன்று காலை 5:30 மணி போல அகாலமாக அழைப்புமணி அடித்தது எனக்கு மிக நன்றாக நினைவில் இருக்கிறது.
யார்டா இது இவ்வளவு காலையில் என்று முணுமுணுத்துக் கொண்டே திறந்தால், மகாதேவன். (முன்பு ஒரு பதிவில் இவனைப் பற்றி எழுதியிருக்கிறேன்).
முந்தின நாள் இரவு மிகத் தாமதமாகத்தான் புத்தகச் சந்தையை விட்டுக் கிளம்ப முடிந்திருந்தது, எங்களால்… மிகவும் அலுப்பினால் அவதிப்பட்ட காலங்கள் அவை – அவனுக்கும் எனக்கும் புத்தகங்களைத் தவிர, அங்கும் இங்கும் ஓடிஓடி அற்புதமான படங்களைப் பார்ப்பதைத் தவிர, பல ஈடுபாடுகளும் தொழில்களும் இருந்தன அக்காலங்களில்.
Read the rest of this entry »
பேருரை (அய்யய்யோ!)
January 18, 2013
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பேருரை நிமித்தம் ஒரு சிறு கூட்டத்திற்குச் சென்றிருந்தேன்.
உட்கார நிற்க, நம் தமிழர் பண்பாட்டில், அது படும் பாட்டில், எந்த ஒரு கருத்தார்ந்த, செறிவுமிக்க விஷயத்தைப் பற்றிய கூட்டமும், என்னதான் அதன் பாடுபொருள் மிகமிக முக்கியமாக இருந்தாலும், உரையாடலுக்கு மகாமகோ அவசியம் இருந்தாலும் – அதற்கு நூறு பேர் வந்தாலே மிக அதிகம் – கடந்த பல்லாயிரம் வருடங்களாக இதுதாம் நம் பண்டமிழ் முறை, தொல் மரபு. ஆனால் விதம் விதமான பட்டி விக்கிரமாதித்த மன்றங்களுக்கு, அல்லது வழக்காடும் கிழட்டு மன்றங்களுக்கு, இன்னல்பிற நிகழ்ச்சிகளுக்கு, கெக்கெக்கெ என்று சிரிக்க, கூட்டம் அலை மோதும். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுபவை என்றால் கேட்கவே வேண்டாம். நிரக்ஷரகுக்ஷிகளின், அரைகுறைகளின் சொர்க்கங்களல்லவா அவை? Read the rest of this entry »
கணிதமே, உன்னை நான் ஆராதிக்கிறேன்!
January 9, 2013
நாம் ஒரு கோளத்தை (sphere) ஒரு கனசதுரத்துக்குள் (cube), முன்னதை நசுக்காமல், பின்னதைப் பிதுக்காமல் – அடைக்கிறோம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அதாவது ஒரு டென்னிஸ் பந்தை, அதற்கென்றே வடிவமைக்கப்பட்ட ஒரு சதுர டப்பியில் (டப்பாவின் பெண்பால்) வைக்கிறோம் எனவும் நினைத்துக் கொள்ளலாம்.
இப்போது, கிட்டத்தட்ட அந்தக் கோளத்தின் விட்டம் = டப்பியின் ஒரு ஓரத்தின் நீளம்தானே?
மேலும், விகிதாச்சாரமாக (proportion) இதனைப் பார்க்கும்போது, அந்தக் கோளத்தின் கொள்ளளவு, அது இருக்கும் டப்பியின் கொள்ளளவில் மிகப்பெரிய பகுதியாகத்தானே இருக்க வேண்டும், அல்லவா?
ஃப்பூ! இதென்ன பெரிய விஷயம் என்கிறீர்களா? என்ன கிழவா சொல்ல வருகிறாய் என்று கேட்பீர்கள் கூட! இருங்கள்…
திமுகவுடன், தமிழகமும் பிளக்கிறது!
January 7, 2013
ஆக, நான், படிக்காதுப் படிக்காது நம் தலைவர் கருணாநிதி அவர்களுக்கு சொன்ன அறிவுரை(!) போலக் கடைசியில் உண்மையாகவே, நடக்கவே ஆரம்பித்து விட்டதோ?
ஊழிற் பெருவலி யாவுள !:-(
திமுகவின் இடியாப்பச் சிக்கல்களுக்கு ஒரே தீர்வு, நான் ஏற்கனவே சொன்னது போல, அதனை (அதாவது, பின்னதை) சாம்பாருடன் சேர்த்து, சாம்பாரகத்தை, நமது சாம்பார்நாட்டை, மூன்று பாத்திரங்களில் ஊத்திமூடி. ஒரு முடிவுக்குக் கொணடு வருவதுதான்.