~13ஆம் நூற்றாண்டு ஸ்ரீலங்கா பதவியா வெண்கல முத்திரையும், ஈழத்துத் தமிழ்ப்புளுகு செம்புளுகுகளும், நம் போக்கற்ற/கவைக்குதவாத பெருமிதங்களும்…

October 18, 2026

தமிழ் ஆர்வலர்களாகிய நாம் – இதயமே இல்லாமல் வெட்டியாக, வெட்கமோ கூச்சமோ துளிக்கூட இல்லாமல் ஏனிப்படித் தொடர்ந்து பொய் சொல்கிறோம்?

சரி. கீழே 3 பகுதிகள். முதல்பகுதியில் பொய்மைகளும் உளறல்களும் அவற்றின் ஆமோதிப்பும்… இரண்டாவது பகுதி: என் உடனடி எதிர்கொள்ளல் (ஏனெனில் இம்மாதிரிப் பொய்மைகள் மலிந்துவருகின்றன – முந்தைய காலங்களை விட மிக அதிக அளவில்… சொல்லப்போனால் தமிழக/தமிழ் வரலாறுகளே பொய்மைப்படுத்தப் படுகின்றன… திராவிடமாடல் + தமிழ்வெறியர்களின் துணையுடன்…) மூன்றாவது பகுதி: தரவுகள் சார்ந்த உண்மைகள். அவ்வளவுதான்.

1

தமிழைக் கூடச் சரியாகப் படிக்கத்தெரியாத நபர், ஆனால் தன் கற்பனைக் கழுதையை உசுப்பி ஓட்டியபடி ஒரு மசுத்துக்கும் புரிதலில்லாமல், அல்லது பொய்பொய்யாக அட்ச்சிவுடுகிறார்…

ஈழத்தின் லென்ஸ் என்பது ஒரு கேடு… அதை வைத்து வரலாற்றையே வெற்றிப் பெருமிதத்துடன் சுட்டெரிக்கும் பண்போதி பண்பு…

(Source: https://x.com/anpaa23/status/2111128415961006341)

மேற்படி உடான்ஸ்களை ஆமோதித்து ஒரு மசுத்துக்கும் மூளையை உபயோகிக்காமல் அதனை ஆங்கிலச் சுருக்கம் செய்து இன்னொரு எழவார் உளறிக்கொட்டுகிறார்…

(Source: https://x.com/Vaangalyappa/status/2111162298329092423)

எனக்கு நெடு நாள் அறிமுகம் (அவருடைய ‘எழுத்துகள்’ மூலம் மட்டும்) உள்ள நாஸா கணேசன் – இதனைப் பரிசோதிக்காமல், உடனடியாக இது தமிழ் சாஸனம் எனப் பொத்தாம் பொதுவாக அட்ச்சிவுடுகிறார் – தேவையா?

2

மேற்படி சோகங்களுக்கான என் நேரடி எதிர்வினைகள் கீழே…

3

இந்தப் பதிவின் முக்கியக் கூற்றுக்குச் சான்றில்லை. படத்திலுள்ள பதவியா முத்திரையில் “ஸ்ரீமத் திசையாயிரத்து ஐந்நூற்றுவர்” என்று தமிழில் எழுதப்பட்டுள்ளதாகக் கூறுவது, வெளியிடப்பட்ட ஆய்வு வாசிப்புடன் முரண்படுகிறது.

ஆய்வுகளின்படி அதன் மொழி சமஸ்கிருதம்; எழுத்து கிரந்தம்.

பேராசிரியர் சி. பத்மநாதன் வெளியிட்ட வாசிப்பும் விளக்கமும் ஸ்ரீபதி கிராமத்தில் வாழும் மகேசரை — சிவனை — குறிப்பிடுகின்றன. அவர் இதைச் சிவாலய நிர்வாகத்துக்குரிய முத்திரையாகக் கருதுகிறார். அந்த வாசிப்பில் “திசையாயிரத்து ஐந்நூற்றுவர்” என்ற வணிகக் குழுவின் பெயர் இல்லை.1

பதவியாவில் ஐந்நூற்றுவர் வணிகர்கள் செயல்பட்டதற்குத் தனியான தமிழ்க் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. அவற்றின் தகவலை இந்த முத்திரையின் வாசகமாகக் கூற முடியாது.

நந்தி உருவமோ “ஸ்ரீமத்” என்ற சொல்லோ மட்டும் ஒரு குறிப்பிட்ட வணிகக் குழுவின் உரிமையை நிரூபிக்காது.

“பதவி” பின்னர் “பதவியா” எனச் சிங்களமயமாக்கப்பட்டது என்ற கூற்றையும் இந்த முத்திரை நிரூபிக்கவில்லை; அதற்குத் தனியான மொழியியல் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் தேவை.2

தமிழ் வணிகர்களின் வரலாற்றுப் பங்களிப்பை ஏற்கலாம்; ஆனால் ஆதாரமற்ற வாசகத்தை முத்திரையில் இருப்பதாகக் கூறுவது வரலாற்று விளக்கம் ஆகாது.

இந்த முத்திரையில் பொறிக்கப்பட்டு இருக்கும் வாசகம் என்ன?

‘நவீன’ க்ரந்தம்:

ஸ்வஸ்தி ஸ்ரீமத்³-த்³விஜாவாஸ-ஸ்ரீபதிகிராமவாஸிந​: மஹேஶஸ்யைதத்³ இந்த்³ராதி³-மௌலிராஜிதஶாஸநம்

ஸமஸ்க்ருதம்:

स्वस्ति श्रीमद्-द्विजावास-श्रीपतिग्रामवासिनः महेशस्यैतद् इन्द्रादि-मौलिराजितशासनम्

ஆங்கிலம்:

svasti śrīmad-dvijāvāsa-śrīpatigrāmavāsinaḥ
maheśasyaitad indrādi-maulirājitaśāsanam

May there be prosperity. This declaration belongs to Maheśa, who resides at Śrīpati-grāma, a settlement of twice-born. Indra and the other gods bow before him, their crowns honouring his feet.

தமிழாக்கம்:

மங்கலம் உண்டாகுக! இருபிறப்பாளர் வாழும் ஸ்ரீபதி கிராமத்தில் எழுந்தருளியுள்ள மகேசருடைய ஆணை இது. இந்திரனும் பிற தேவர்களும் தங்கள் மகுடங்கள் அவரது திருவடிகளைத் தொட்டு வணங்கும்படி அவர்முன் தலைவணங்குகின்றனர்.

-0-0-0-0-0-

இங்கு எங்கே வந்துள்ளது வணிகர் குழுமம்? எப்படியெல்லாம் தொழில்முறையில் திரிதிரி எனத் திரிக்கிறார்கள் நம்மவர்கள்!

1 S. Pathmanathan, The Kingdom of Jaffna (1978), p. 120, note 85. The interpretation is paraphrased here; no new letter-by-letter decipherment is claimed. https://noolaham.net/project/38/3706/3706.pdf#page=69

2 Separate Padaviya merchant inscription: see the catalogue entry citing S. Pathmanathan, Tamil Inscriptions in Sri Lanka, vol. 1 (2019), pp. 393–411. https://en.wikipedia.org/wiki/Tamil_inscriptions_in_Sri_Lanka#Padaviya_Virasasana_inscription

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *