ஆம். நீங்கள் சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள்; அதுவும், தினசரி குறிப்பிட்ட வேளைகளில், பலவந்தமாகப்  பாலியல் பலாகாரம் செய்தால் கிடைக்கக்கூடிய பலான   பலன்களைப் பற்றித்தான் எழுதப் போகிறேன்.

இது அக்கப்போர் அல்ல. இதனை இன்னொரு முறை அடிக்கோடிட்டுக் கொள்ளவும். Read the rest of this entry »

(அல்லது) டக்ளஸ் ஹோஃப்ஸ்டேட்டர்: கெடல், எஷர், பாஹ்: ஒரு முடிவற்ற தங்கப் பின்னல்

1977லேயே வெளிவந்திருந்தாலும், இதனை நான் முதலில் படித்தது 1982ல்தான் என நினைவு. என்னுடைய கல்லூரி நூலகத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது அகஸ்மாத்தாகக் கிடைத்த பொக்கிஷம்; உலகமே அற்புதமாகிவிட்டது எனக்கு! 5 நாட்கள் தொடர்ந்து உட்கார்ந்து, நோட்டுப்புத்தகத்தில் குறிப்பெடுத்துக்கொண்டு படித்து முடித்தேன். படிக்கப் படிக்க பிரமிப்பு. இப்படியெல்லாம் கூட புத்தகங்களை எழுதமுடியுமா என்று. படித்து விட்டு சுமார் மூன்று நாட்கள் தொடர்ந்து சொக்கிப்போய் இதனைப் பற்றியேதான் பேச்சு, மூச்சு எல்லாம். எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் – இரண்டு பாவப்பட்ட  பேராசிரியர்கள் உட்பட – ஒரேயடியாக அதன் புகழ்தான்! அந்தக் காலத்தில், கல்லூரி விடுதியில் என் மாடியில் இருந்த என் சகமாணவர்கள் என்னைப் பார்த்தாலே பின்னங்கால் பிடறியில் பட ஓட ஆரம்பித்து விடுவார்கள் – பாவம். :-)

இந்த கிறங்கல் கலைந்து சமன நிலைக்கு வர, எனக்குக் கொஞ்ச நாட்களாகியது. ஐந்து முறைக்கும் மேலாக இந்த நூலகக்கடன் புத்தகத்தை துணைநூலகருடன் சண்டைபோட்டு நீட்டிப்பு செய்து (ஒவ்வொரு முறையும் 14 நாட்கள்) – கடைசியில் வேறு வழியேயில்லாமல், திருப்தியேயில்லாமல், வேண்டாவெறுப்பாகத் திருப்பிக் கொடுத்தேன். Read the rest of this entry »

Move over, you ‘world famous astrologers’ such as Besan Daroowallah, go start making besan laddoos, or even start brewing liquor… But, stop making those terrible, horrible, no-good, very bad  horrorscopes please!

Try to earn a honest  day’s wages, surely it is not that very difficult…

=-=-=-=-=-=-=-=

I pretend to ‘do’ mainly science with our ‘earth children’ – but I also drift off in various directions, to do history, geography, angrezi (hic), math and stuff. Heck, I even pretend to be a choir conductor. Don’t get me wrong, there are quite a few other adults (who actually are more able & capable than yours truly) in the picture too, so there is no need to ring the alarm bells… The truth is that, they are all busy working, whereas I am busy posting blog entries! Read the rest of this entry »

வெறுப்பும் சலிப்பும் தொடர்வதைகளாகத் தொடரும் காலங்களில், வாழ்க்கையின் அர்த்தம் என்ன, எனக்கும் என்னுள் பொதிந்திருக்கும் வெளியுலகத்திற்குமான தொடர்புகள் யாவை, இப்போது நான் என்னதான் செய்யவேண்டும் என, வேலைவெட்டியற்றுக் கேள்விகள் பொசுக்கும் நேரங்களில், ஆன்மாவை உருக்கும் மகாமகோ இசைகூட உதவிக்கு வரமுடியாத தருணங்களில், தோட்டவேலை சார்ந்த வியர்வை சொட்டும் உன்மத்த உடலுழைப்பினாலோ,  நெடுநீள ஓட்டத்தினூடேயோ, கடினமான கணித/அறிவியல் கேள்விகளுக்கு உட்கார்ந்த வாக்கில் ஒரு நோட்டுப்புத்தகம் + பென்ஸிலின் உதவியோடு மட்டுமே கூட பதில் பெற விழையவோ முடியாத அச்சந்தர்ப்பங்களில் — மறுபடியும், மறுபடியும்  நான் நிபந்தனையற்றுச் சரணடைவது என்பது, ஒரு முப்பத்திச் சொச்ச புத்தகங்களிடம் மட்டுமேதான். கடந்த 35 வருடங்களாக இப்படித்தான்.

“தாங்கள் எவ்வளவு பக்கங்களை எழுதியிருக்கிறோம் என்பதைப் பற்றி மற்றவர்கள் கர்வப் பட்டுக்கொள்ளட்டும்; ஆனால் நான், படித்த புத்தகங்களைப் பற்றிப் பிலுக்கிக் கொள்ளவே விரும்புவேன்.”

— ஹோற்ஹெ லூயிஸ் போற்ஹெஸ்

Read the rest of this entry »

பள்ளி: சென்ற கல்விவருடமுடிவுச் சிந்தனைகள், குறிப்புகள்  பதிவுக்கு பத்ரி + சிலர் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் கூறும் முகமாக இது…

இவற்றை எழுதும்போதே, ஏனடா இந்த தனிப்பட்ட முறை எழவுகளையெல்லாம் சபைக்குக் கொண்டுசெல்லவேண்டும் எனத் தோன்றிக் கொண்டேயிருந்தது. இருந்தாலும், ஒரு முழுமைக்காகவும், தமிழகத்தில் ஒரு தரமான நிறுவனத்தை (அரசிடம் ஒரு சுக்கு உதவியையும் எதிர்பார்க்காமல்,  பலன்பெறும் சமூகத்தின் முட்டுக்கட்டைகளை மட்டும் பெற்றுக்கொண்டு –  ஆகவே எதிர்நீச்சல் மட்டுமே போட்டு)  நடத்த வேண்டுமென்றால், எதிர்கொள்ளப் படவேண்டிய சகதிகளில் சிலவற்றைப்  பற்றி சில  கருத்துகளை,  என்னுடைய  பார்வையில் வெளிப்படுத்தவும் மட்டுமே இந்த தவணைப் பதிவும். இனிமேல், இம்மாதிரி பிலாக்கணம் வைக்கமாட்டேன். பயப்பட வேண்டாம்.

-0-0-0-0-0-0-0-0-0-

பத்ரிபாய்ஸாஹேப், உங்களுடைய கருத்துகளுக்கு [1] [2] நன்றி. அய்யாமார்கள் ரமணன், க்ருஷ்ணகுமார், கௌதமன் ராமசாமி, ரங்கன், பக்கிரிசாமி அவர்களுக்கும் நன்றி.

… உண்மையில் எனக்கும், பல சமயங்களில் பத்ரியைப் போன்ற எண்ணங்களும் – அதுவும் அதிதீவிர எண்ணங்களும் வருவதுண்டு. Read the rest of this entry »

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு உருப்படியான, அழகான  இலக்கியப் புனைவுகளை மொழிபெயர்ப்பு செய்யும் மாமனிதர்களில் ஒருவரான (இவர் ஒரே ஒருவர்தானோ இப்படி, என்பது என் சந்தேகம்!) ‘சிவசங்கரா’ கல்யாணராமன் அவர்கள், ‘அசோகமித்திரனை வாசித்தல்’ எனும் நிகழ்ச்சிக்கான ஒரு அழைப்பிதழை அனுப்பியிருக்கிறார்.

அசோகமித்திரன் எழுத்துகள் எனக்குப் பிடிக்கும் – அவர் போற்றப் படவேண்டியவர்தான்.  சென்னையில் வசித்தால், நிச்சயம் போகவேண்டிய நிகழ்ச்சிதான்; ஆனால், பேரறிவாளர் ராஜன் குறை அவர்களும் அதில், தமிழ் போன்ற ஒரு மொழியில் ஒரு சிடுக்கல் கட்டுரை (= ‘வரலாற்றிற்கப்பால் அன்றாடம்: அசோகமித்திரன் அழகியல் காட்டும் மீட்சி’)வாசிக்கப் போகிறார் என்பது, எனக்கு அடிவயிற்றில் இனம்புரியாத கலக்கத்தையும் பயபீதியையும் ஏற்படுத்துவது. (ஆனால் அதீதமாகப் பயப்படவேண்டாம் – ஆறு கட்டுரையாளர்களில் ஒருவர்தான் ராஜன் குறை அவர்கள் என்பது கொஞ்சம் ஆசுவாசமளிக்கும் விஷயம் என எஸ்ரா அவர்கள் போலச் சொல்லிக்கொள்கிறேன். குறை ஒன்று  போதுமே கோவிந்தா!)

மேலதிக விவரங்கள்: கருத்தரங்கம்  / ஜூன் 7 சனிக்கிழமை / மயிலை ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால் / 10:00 – 16:45 /

அழைப்பிதழ் Ashokamitran 1Ashokamitran 2

இந்த நிகழ்வில் அசோகமித்திரன் அவர்கள் ஒரு சிற்றுரை (=30 நிமிடங்கள்!) மட்டுமே ஆற்றுவார் எனும் செய்தி,  எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் பேருரைகளில் சிலவற்றைக் கேட்டு மனம் பேதலித்துப் பாயைப் பிறாண்டிக் கொண்டிருக்கும் எனக்கு – நிச்சயம் ஆத்தும சுகம் அளிக்கக் கூடியதுதான்; ஆனாலும்,  போகமுடியாது.

 -0-0-0-0-0-0-0-0-

 ஷிவ் விஸ்வ நாதன் அவர்களின் ஒரு ஆங்கிலக் கட்டுரையைச் சுட்டி(ஷிவ் விஸ்வநாதன்: மோதி, என்னைப் போன்ற லிபரல்களை (=முற்போக்காளர்களை) எப்படித் தோற்கடித்தார்? , அதன் தமிழ் வடிவத்தை யாராவது உருவாக்க முடியுமா என்று கேட்டதற்கு,  திரு அர. வெங்கடாசலம் அவர்கள், வேலைமெனெக்கட்டு உழைத்து மொழிபெயர்ப்பு ஒன்றை அனுப்பியிருக்கிறார். அவருக்கு என் நன்றி.

இத்தனைக்கும் அதன் தமிழ் வடிவம் ஒன்றை ‘த அன்டி தமிழ் ஹிந்து’  பிரசுரித்த விஷயத்தை அவருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தேன். ஆனால், அவர் அதனை அவர் கவனிக்கவில்லை.

ஆக, கீழே இருக்கும் இரு விதமான கட்டுரை மொழிபெயர்ப்புகளைப் படித்து இன்புறவும்.

அர. வெங்கடாசலம் வடிவம்: மோடி என்னைப் போன்ற தாராளவாதிகளைத்...  ‘த அன்டி தமிழ் ஹிந்து’  வடிவம்.

என் பங்கிற்கு – இவை இரண்டையும் அலசி ஆராய்ந்து – ‘மொழிபெயர்ப்புக்கப்பால் ஆரூடம்: ஸெக்யூலரிஸ எழவியல் ஓட்டும் ஈ’ என ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதலாமென்றிருக்கிறேன்.

எப்படியோ, ஒவ்வொரு முற்போக்காள லிபரலும், ஸெக்யூலரிஸ மாயவாத மரத்தை விட்டு வாலைச் சுருட்டிக் கொண்டு கீழிறங்கிவந்து உழைத்துச் சம்பாதித்துச் சாப்பிட்டால், அதை வரவேற்பவனே நான்தான்! ;-)

-0-0-0-0-0-0-0-

இதனைப் படிக்கும் எவ்வளவு பேர், 1980களின் ஆரம்பத்தில் நடந்த பஞ்சாப் படுகொலைகள் (அதாவது, சீக்கியர்களில் ஒரு வெறியனின் அடிவருடிகள், ஹிந்துக்களைக் (+சில சீக்கியர்களையும் கம்யூனிஸ்ட்களையும்) குறிவைத்துக் கொன்றது) பற்றிய நினைவுகளைச் சுமந்து கொண்டிருப்பார்கள் எனத் தெரியாது.

இந்த விஷயம் தொடர்பாக – நான் மிகவும் மதிக்கும் ஷேகர் குப்தா (இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் நாளிதழின் தலைமையாசிரியர்) அவர்களின் – ஜர்னைல் ஸிங் பிந்த்ரான்வாலே பற்றிய, அவசியம் படிக்கவேண்டிய ஆங்கிலக் கட்டுரை.

ஷேகர் குப்தா அவர்கள் என்னை இதுவரை ஏமாற்றியதே இல்லை. கண்ட கழிசடைகளும் தினசரி ஆசிரியர்கள் எனக் கும்மாளமிட்டுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டங்களில் இவர் அபூர்வப் பிறவிதான்.

-0-0-0-0-0-0-0-0-

நகைச்சுவைப் பகுதி #1: நேற்றும் வினவு தளம் சென்று (=fatal attraction?) சில கட்டுரைகளைப் படித்தேன். சில சோகமான தருணங்களில்,  என்னை மீட்டுக்கொள்வதற்காக வினவிடம் சரணாகதியடைவது என்னுடைய தொடரும் வியாதிகளில் ஒன்று.

ஒரு எழவையும் தெரிந்துகொள்ளாமல்,  அறிவியல்-வரலாறு போன்றவையெல்லாம் என்ன ஜந்துக்கள் என கடுகளவு கூட புரிந்துகொள்ளாமல், ஆவண மூலங்களைப் படிக்காமல், காப்பியடித்து அதுவும் தப்பும்தவறுமாக ஒற்றியெடுத்து, உணர்ச்சிகரமாக புரட்சிகர முஷ்டிமைதுனத்தை உயர்த்திப் பிடிக்கும் திடுக்கிடும் வினவுதரக் கட்டுரைகள் கீழே:

படித்து வாய் விட்டுச் சிரிக்கவும். வரிக்கு வரி அபத்தங்கள், அபுரிதல்கள், அற்பத்தனங்கள்.

-0-0-0-0-0-0-0-0-0-

நகைச்சுவைப் பகுதி #2: சிலமாதங்கள் முன் மேதகு ‘மைக்குக்கு முன்னால் அழும்’  வைகோ அவர்களுடைய தொழில் நுட்பத்திற்கெதிரான அறியாமையின் பாற்பட்ட போராட்டம் ஒன்றைப் பற்றி எழுதியிருந்தேன். (நம் தமிழ்த் திரைப்படங்களில் அறிவியல் படும் பாடு! 08/11/2013)

ஆனால், அய்யய்யோ  – எனக்கு நண்பர் ஒருவர் நேற்று அனுப்பிய சுட்டியில் இன்னுமொரு திடுக்கிடவைக்கும் அஅறிவியல் கட்டுரை பரபரப்புப் பப்பரப்பா!

இதில் ந்யூட்ரினோ ஆய்வு மையம் குறித்த திரித்தல் செய்திகள் – போதாக்குறைக்கு ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் (= ‘தொழில் நுட்பத்தின் எதிரிகள் – ஆனால் தொழில் நுட்பத்தைமட்டும் வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள்’) நிரந்தரத் தலைவரான  ‘அய்யய்யோ அணுசக்தி’ புகழ் சுந்தர்ராஜப் பொரியியலாளரின் பொரி பொரித்தல்கள். இவர்களுக்கெல்லாம் நான் சொல்வது – உருப்படியாக ஒரு காரியமாவது செய்துவிட்டு, பின்னர் தூசி வாரியிறைக்க வாருங்கள்.

நியூட்ரினோ ஆய்வு மையம்… ஆராய்ச்சியா? அணுக்கழிவா?

“அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தை அலறவைக்கப்போகிற சொல்… ‘நியூட்ரினோ’!

“நியூட்ரினோ என்பது சூரியனில் இருந்தும், இந்தப் பேரண்டத்தின் மற்ற விண்மீன்களில் இருந்தும் வெளிப்படும் துகள்”

… என்பது போல ஆரம்பிக்கும் தமாஷ் இந்தக் காட்டுரை. தொடர்ந்து  விழுந்துவிழுந்து சிரிக்கவைக்கும் கோமாளித்தனம் இது.

தொடர்ந்து ஒரே ரோல்லர்-கோஸ்டர் பப்பரப்பா!

கருத்துப் பிழைகள் (இவைகளையாவது, செல்லமாக மண்டையில் குட்டிப் புறம்தள்ளிவிடலாம்) மலிந்திருக்கும் இக்கட்டுரையில் – தகவல் பிழைகளும் முதலிடத்திற்குப் போட்டியிடுகின்றன என்பது ஓரு கூடுதல் மகிழ்ச்சி தரும் விஷயம்.

அணுக்கருவுலை, சக்தி, அணுத் துகள்கள், அணுக்கழிவு போன்றவற்றைக் கொஞ்சமேனும் அறிந்த விஞ்ஞானிகளிடம் இதனைப் பற்றி விசாரித்து எழுதாமல் ஏன் அரைவேக்காட்டுத்தனத்திலேயே மூழ்கியிருக்கிறார்கள்?

அறிவியல் கட்டுரை என்பது – ஒரு அற்ப தமிழ்சினிமாப் பட விமர்சனம் இல்லை என்பதை எப்போது இவர்கள் உணர்வார்கள்?

இயற்கைக்கும் செயற்கைக்கும் உள்ள தொடரும் முரணியக்கம் என்பதும்தான் மனிதகுலத்தின் தொடர்ந்த வளர்ச்சியைச் சாத்தியப் படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவ்வளவு கஷ்டமா என்ன?

குறைந்தபட்சம் இந்த ந்யூட்ரினோ ஆய்வு மையத்தின் தளத்தையாவது முழுமையாகப் படித்திருக்கவேண்டாமா? இவருக்கு என்ன, தான் யுவகிருஷ்ணா என்ற நினைப்பா?

இந்த அரைகுறை ஆனந்தவிகடன் தான் – இந்த அரைகுறைக் கட்டுரைகளைப் பதிப்பிக்கமுடியும். இந்த ‘பாரதி தம்பி’ யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால், இவர் காந்திமதி நாதன் அவர்கள் சொல்லியிருக்கக் கூடுவது போல – ‘சின்னப் பயலோ’ என்ன எழவோ…

ஆனாலும் மேதகு பாரதிதம்பி அண்ணன் அவர்கள்,  கூடிய விரைவில் மேலும் அமோகமாக வளர்ந்து, பொலிய,  ப்ரபஞ்ச தாத்பரியத்தைக் கண்டுணர்ந்து முட்டாள் சகதமிழர்களை அறிவியல் ரீதியாகத் தடுத்தாட்கொள்ள என் ஆசிகள்.

-0-0-0-0-

ஆம். எனக்கு,  தற்போது வேறுவேலையே இல்லை! 8-)

அலக்கியம், காப்பிக்கடை, இன்னபிற இழவுகள்…

ஹ்ம்ம்...

ஹ்ம்ம்…

ஒரு வழியாக, இந்த 2013-14 கல்வி வருடமும் சுமார் இரண்டு வாரங்களுக்குமுன் முடிந்தது.  அயர்வாகத்தான் இருக்கிறது.  இனி நான்கு வாரங்கள், எனக்கே எனக்கு எனச் செலவழிக்கவேண்டும்; மீளவேண்டும். ஆரம்ப விழாவாக – மூன்று நாட்கள் விமரிசையாகத் தூங்கினேன். :-)

-0-0-0-0-0-0-0-

என் பள்ளியில் பத்தாம் வகுப்புப் பிள்ளைகள் பரீட்சையில் தேர்வடைந்து / கெலித்து விட்டார்கள். சந்தோஷமான செய்திதான்; எப்படியோ வெளியுலகத்திற்குச் சென்று, தேவையான மேற்படிப்பு படித்து, உழைத்துச் சம்பாதித்து, இவர்கள் முன்மாதிரிப் பிரஜைகளாக விளங்கினால் சரி.

… சென்ற ஒரு வருடமாக, இந்தப் பிள்ளைகள் +2 இங்கேயே படிக்கிறோம், தமிழக அரசின் ஹையர் ஸெகன்டரி பரீட்சைகளையும் இன்னொரு இரண்டு வருடம் இந்தப் பள்ளியிலேயே படித்து எழுதுகிறோம் என்றார்கள். மகாமகோ அழுத்தம் கொடுத்தார்கள். எங்களுக்காக மேலதிகமாக இரண்டு வருடம் செலவழிக்க முடியாதா எனப் பரிதாபமான, நியாயமான, கோபமான, வருத்தமான கெஞ்சல்கள். அவர்களுக்கு இப்பள்ளியை விட்டுவிட்டு வெளியேறவே ஆசையில்லை. ஆனாலும் – நான் முதலில் இருந்தே அது முடியாது என்றுதான் சொல்லி வந்திருக்கிறேன். Read the rest of this entry »

Ha Ha! Sorry. I actually wanted to title the post ‘Fathers-children ratio’ or ‘Mothers-children ratio’ – or to avoid any possible controversy, ‘parents-child ratio.’ But, sanity prevailed on me, obviously.

This is one of the really cutesy questions people (not all folks, but the urban types) rather habitually ask, when they are seeking admission for their wards into any school. And, of course, on the face of it, it sounds like a very normal,  anxious  question, but…

I will tell you why.

The assumption behind this duh question is, a ‘good’ ratio of  say, 10:1 (or less) would automatically ensure that their ward would get individual attention, their child would be personally addressed with respect to its unique abilities and ‘weaknesses,’ the child will have all round growth and would ace in all competitive exams eventually and get into some nondescript IIT and then land a software pogromer’s job in some silly IT services company, neighbor’s (and relatives’) envy, owner’s pride and all that!

On the contrary, a ratio of say, 20:1 (or above) would automatically mean that the school is desperate for resources (funds, teachers and what not!) and/or the children do not get individual attention at all, the classes will be chaotic, the development of multifarious capabilities of your child would be stunted and so he will merely graduate from some nondescript IIT and then land a software programmer’s  job eventually, in some silly IT services company, oh the horror, the horror! Read the rest of this entry »