பல புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளன – இன்னும் எவ்வளவு என உறுதியாக முடிவாகவில்லை.  இப்போதைக்கு ஏழு புத்தகங்கள் மட்டுமே நிச்சயம்.

அனைத்தையும் இதுவரை என் நண்பர் பத்ரி சேஷாத்ரி அவர்களின் உழக்கு பதிப்பகமே வெளியிடுகிறது – சென்ற வருடம் என் மொழிபெயர்ப்பு ஒன்றை இவர்கள் வெளியிட்டு அது சக்கைப்போடு போட்டு, தமிழ்ப் பதிப்பக உலகிலேயே முதல் முறையாக, முதல் ஆண்டிலேயே இரண்டு பிரதிகள் விற்றது நினைவில் இருக்கலாம்… அத்தனையும் சீமார் அவர்கலுடைய ஆவேஷப் படத்தைப் போட்டதற்காகவே விட்றது என்றாள் பார்த்துக்கொல்லுங்கல். எள்ளாப் புகலும் நாம் டமிளர் இயக்கத்துக்கே!

book_frontandbackஇந்தப் புத்தகத்தைப் பற்றிய மேலதிக விவரங்கள் இங்கே! ஒத்திசைவின் மூன்றாண்டுகால மகாமகோ வரலாற்றில் ஏகோபித்த ஆதரவு பெற்ற பதிவுகளில் இதுவும் ஒன்று. ;-) அப்பதிவில், பின்னட்டைக் குறிப்புகளும் படிக்கும்படியாக விரிக்கப் பட்டிருக்கின்றன. பாவம், நீங்கள். ஆகவே…

Read the rest of this entry »

கடந்த பதினைந்து நாட்களில் கண்டமேனிக்கும்  வேலை தொடர்பான/தொடர்பில்லாத அலைச்சல்; சென்னைக்கு 6 முறை சூறாவளிச் சுற்றுப்பயணம் (எல்லாம் அரசுப் பேருந்துகளில்தான்!) செய்தேன். வழக்கம்போல, சென்னையின் மஹாநதி வண்டிப் பிரவாகங்களில் வழிதெரியாமல் தலைசுற்றிய படலங்களும் நடந்தேறின. :-(

ஆனால் சுவாரசியத்துக்கும் குறைவில்லை. ஏனெனில், பயணங்களின்போது – பேருந்து கிளம்பியவுடன், படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு – பக்கத்திலிருப்பவர்களுடன் (அவர்கள் தோதுப்பட்டு வந்தால்) கதைக்க ஆரம்பித்து விடுவேன்.

Dravidian Zeitgeist! Here I come… :-)

திராவிட மாயை அக்கப்போர்களில் கிடைக்கும் இன்பம்ஸ் கொஞ்சம் அலாதிதான்! சுவையோ சுவைதான்!!  ஒரேயொரு பிரச்சினை என்னவென்றால், சிலசமயங்களில் சிரித்துச் சிரித்து மாரடைப்பு வரும் நிலைக்குப் போய்விடுகிறது – என்ன செய்வது சொல்லுங்கள்… ;-)

சரி. இப்போது மூன்று சுவாரஸ்யங்கள்… Read the rest of this entry »