திமுக வாரிசுப் பிரச்சினை தீர்ந்தது: முக அழகிரியின் மனைவியாகிவிட்டார் ஸ்டாலின்!
September 30, 2015
என்னிடம் எல்லாவற்றுக்கும் பக்கா ஆதாரமிருக்கிறது, சரியா? கலைஞர் கருணாநிதி அவர்கள் நினைத்தால் நடத்திக்காட்டாத விஷயம் ஒன்றுமே இல்லைதான் – பலஹீனத்துடன் இதை ஒப்புக்கொள்வதை விட்டால் எனக்கு வேறுவழியேயில்லை! :-(
-0-0-0-0-0-0-
முக அழகிரி அவர்களின் மனைவி பெயர் = காந்தி — சமன்பாடு (1)
மோஹன்தாஸ் கரம்சந்த் அவர்களின் பொதுவாக அறியப் படும் பெயர் = காந்தி — சமன்பாடு (2)
சமன்பாடுகள் 1, 2 தீர்க்கப்பட்டால், எஞ்சுவது:
முக அழகிரி அவர்களின் மனைவி = காந்தி — சமன்பாடு (3)
ஸ்டாலின் அவர்கள் ஜீன்ஸ், சப்பளாங்கால், ஸ்னீக்கர் போட்டுக்கொண்டு சுற்றுவது = ராட்டை — சமன்பாடு (4)

ஆதாரம்: துளிக்கூட வெட்கமேயல்லாமல், ஜீன்ஸ் போட்டுக்கொள்ளாமல், ஏன், சட்டைகூடப் போட்டுக்கொள்ளாமல் மார்பகத்தை ஆபாசமாகக் காட்டிக்கொண்டு, சுதந்திரம் வாங்கித்தருகிறேன் என்று ரீல் சுற்றும் காந்தி படம்.
சமன்பாடுகள் 4, 5 – ராட்டை எனும் பொதுக்காரணி நீக்கப்பட்டுத் தீர்க்கப்பட்டால், எஞ்சுவது:
ஸ்டாலின் = காந்தி — சமன்பாடு (6)
இப்போது சமன்பாடு 3ஐயும் 6ஐயும் தீர்த்தால் கிடைப்பது:
முக அழகிரி அவர்களின் மனைவி = ஸ்டாலின்
QED.
-0-0-0-0-0-0-
ஆட்டோவில் மருமகள் அழைப்பு: சந்தோஷத்தில் டாடா காட்டும் மணமகள்!

மருமகன் அழைப்பு: மாலை அணிவிப்பவர் நெப்போலியன். மற்றபடி, பிற விருந்தினர்கள் – சர்ச்சில், ஹிட்லர், ஸ்டாலின்(ஒரிஜினல்), ஐஸன்ஹோவர், ஹிரோஹிடோ, லெனின், அம்பேட்கர், புத்தர், மஹாவீரர், ராஜராஜசோழன் போன்றவர்கள் பின்னால் நின்றுகொண்டிருக்கிறார்கள்; உற்றுப் பார்க்கவும்.
கன்னத்தில் முத்தமிட்டால்: மணப்பெண் கன்னத்தைத் தடவிக்கொண்டும், மாப்பிள்ளை உதட்டைக் குவித்துக்கொண்டும் இருக்கும் அன்னியோன்னியமான படம். ஆ பாசம்!
ஒரே சமயத்தில் மணமகனுக்கும் மணமகளுக்கும் – ஒரு சேர, தகப்பனாகவும் மாமனாராகவும் இருக்க, ஒரு மனிதன் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கவேண்டும்!
ஆனால் ஒரே சமயத்தில் பல படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதிக்கொண்டே, முழு நேர முதலையமைச்சராகவும் இருந்த கருணாநிதி அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமேயில்லை என, இதயம் இனிக்க, கண்கள் பனிக்கச் சொல்லிக் கொள்கிறேன்.
வாழ்க மணமக்கள்!
வாழ்க களவுடன்!!
-0-0-0-0-0-0-
திமுகவின் வாரிசுப் பிரச்சினை இவ்வளவு புத்திகூர்மையுடன் தீர்க்கப்பட்டுவிட்டதால் (என்னே கலைஞரின் அரசியல் சாணக்கியம்!) சர்வ நிச்சயமாக அடுத்த முதலையமைச்சர் திருமதி ஸ்டாலின் அழகிரி அவர்கள்தான் என்பதை நினைத்தால், திராவிட இயக்கம் பெண்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து புளகாங்கிதத்தை அடைவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை!
October 1, 2015 at 05:18
Sir,
For your safety I kindly request you to remove this post.
Though it seems you are not scared of maniac DMK goondas, sometimes they can be extremely unpredictable.
“அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்”.
In these days of extreme scarcity of rational people in Tamil Nadu,
we don’t want you to fight with idiots.
October 1, 2015 at 08:35
சிவா சார் கருத்துதான் எனது கருத்தும்.நீங்கள் தேவையே இல்லாமல் சில சமயங்களில் எல்லை மீறுகிறீர்கள் எனத்தோன்றுகிறது.கவனம் (தங்கள் நலன் கருதி.)
October 1, 2015 at 10:35
Ram, don’t wrestle with pigs
October 1, 2015 at 19:52
மாய யதார்த்தவாதம்ங்கிறாங்களே, அது இதானா நைனா?
October 1, 2015 at 20:02
ஐயோ கடவுளே, விழுந்து புரண்டு சிரிக்க தோணுவதை ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.