ஆம்.

1

இந்த மாதிரி பணம் கொடுத்து, சதித்திட்டச் சதிராடி தொழில்முறையில் பெரிய அளவில் எம்எல்ஏக்களை (அதுவும் சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை) மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கும் ஈனச் செயலை (எனக்குத் தெரிந்து) இந்தியாவிலேயே முதலில் செய்த அயோக்கியக் கும்பல் இந்தப் பொறுக்கிகளுக்காக, பொறுக்கிகளால், பொறுக்கித்தனமாக நடத்தப்படும் திமுக – திராவிட முன்னேற்றக் கழகமே. 

இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை!

அதிலும், இந்த கருணாநிதிதான் முதலில் இந்தக் கேவலமான அசிங்கத்தைச் செய்தது… நிலைமை இப்படித் தொடர்ந்து இருக்கையிலே இந்த திமுக கும்பலுக்கு எப்படி இந்த நடிகர் விஜய்குஜய் விசிலடிச்சான் குஞ்சப்பர்கள் நடத்தும் குதிரைபேர அரசியல் பற்றிப் பேச வக்கிருக்கிறது, சொல்லுங்கள்?

2

1969: திராவிட ‘அறிஞர்’ அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு, திமுகவில் ஏற்பட்ட சதிகார-அதிகாரப் போட்டியின் போது, கருணாநிதி, தனக்கே உரித்தான மிகுந்த குள்ளநரித்தனச் சூழ்ச்சியுடனும் வக்கிரத் தந்திரத்தனத்துடனும் – முழு செயல் முறையையும் தன் வசப்படுத்தினார்.

…அதில், தமக்கு ஆதரவு கொடுப்பதற்காக ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் தலா ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை நிதி ஊக்கத்தொகை வழங்கியதும் அடங்கும்…

3

கள்ளத்தனம் செய்த காதகன் கருணாநிதி & கம்பெனி லீலைகள் 1967ல் திமுக ஆட்சிக்கு முன்பே பரவலாகத் தெரிந்தாலும், சிலபல முறை அண்ணாத்துரையே அதற்கு அரைகுறை மனதுடன் முட்டுக் கட்டைகள் போட்டாலும், ஆட்சி அமைந்த பின் கருணாநிதியின் அழிச்சாட்டியம் அதிகமானது.

இந்தப் பின்னணியில் – 1968 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் மேயரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்தபோது, பல காரணிகள் திமுகவுக்குச் சாதமாகவும் பாதகமாகவும் இருந்த நிலையில் –  ஒரு நல்ல ஆத்மாவும் இந்தக் கேடுகெட்ட திராவிட திமுகவில் இருந்தது தெரியவந்தது… மேலும், இயற்கையாகவே, கருணாநிதி கோஷ்டியினரையும் அம்முடிவு பாதித்தது.

சரி.

முதலாவதாக, மாநகராட்சி தேர்தல்களில் திமுக ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவான ஒட்டுவித்தியாச வெற்றிகளையே பெற்றது – இதற்குக் காரணம் ‘படித்த வகுப்பினர்’ வாக்களிக்கவே (வழக்கம்போலவே!) செல்லவில்லை – மேலும், இம்மாதிரி நடுத்தர மற்றும் உயர்வர்க்க வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்திருந்தால், முடிவுகள் இன்னும் மோசமாக ஆகி திமுக தோற்றிருக்கலாம் (ஆகவே காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கலாம்) எனவும் ஒரு சாத்தியக் கூறு இருந்தது… அண்ணாதுரைக்கு இது ஒருமாதிரி கலக்கமாக இருந்தது. ஆனால், அவர் சுதாரித்துக்கொண்டு கருணாநிதி கும்பலை மட்டுப் படுத்தியதால்தான் ஒருமாதிரி முதலுக்கே மோசமில்லாமல் போயிற்று.

இரண்டாவதாக, முன்னாள் திமுக மேயர் முனுசாமி + மாநகராட்சியில் முனுசாமி அணியைச் சேர்ந்த உறுப்பினரான மைனர் மோசஸ் ஆகியோரின் மீது சுமத்தப்பட்ட காத்திரமான ஊழல் குற்றச்சாட்டுகள் பலப்பல இருந்தன. மேலும் இவர்கள் இருவரும், இயற்கையாகவே (‘பாம்பின் கால் பாம்பறியும்’ + ‘ஈனம் ஈனத்தோடு சேரும்’) கருணாநிதி கோஷ்டியின்அசைக்கமுடியாத ஆதரவாளர்களாகக் கருதப்பட்டனர். கருணாநிதியும் தம் பாம்புகளாகிய அவர்களுக்காக மிகவும் தீவிரமாகப் பணியாற்றியதும் நடந்தது – அதாவது ஊழலுக்காக மெனக்கெட்டு, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார் அந்த ஆசாமி.

மூன்றாவதாக, திமுக ஆட்சியின் கீழ் சென்னை நகரம் சீரழிய அனுமதிக்கப்பட்டதாக பத்திரிகைகள் பரவலாக விமர்சித்தன. (அப்போதைய ‘த ஹிந்து’ உட்பட – அது இன்று திராவிட திமுகவின் நிரந்தர ஜால்ரா என்பது ஒரு நகைமுரண், வேறென்ன சொல்ல…)

இந்தச் சூழ்நிலையில், அடுத்த மேயர் யார் என்பதைக் குறித்து முடிவெடுப்பது தானாக மட்டுமே இருக்கும் என்று அண்ணாதுரை பகிரங்கமாக அறிவித்தார்.யோசனைக்குப் பின், அணி/கோஷ்டி சார் தொடர்புகள் குறைவாக இருந்த இளம் வழக்கறிஞரான வேலூர் நாராயணனைத் தேர்ந்தெடுத்தார். இவர் பேரில் பெரிதாக ஊழல் குற்றச்சாட்டுகளும் இருந்திருக்கவில்லை…

ஆகவே, பேராசைப் பேய்களான கருணாநிதிகள் மேலெழும்ப முடியாது போய், வேலூர் டி நாராயணன் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

அவர் உடனடியாக, சென்னை நகரைச் சுத்தப்படுத்தும் ஒரு திட்டத்தை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தனது ஒரு ஆண்டு பதவிக்காலம் முழுவதும் அவர் அந்தத் திட்டத்தை குறிப்பிடத்தக்க உற்சாகத்துடனும் தீவிரத்துடனும் முன்னெடுத்துச் சென்றார்.

(3 டிஸெம்பர் 1968 அன்று வேலூர் நாராயணன் மெட்றாஸ் ரோட்டரி க்ளப் கூட்டம் ஒன்றில் பேசியபோது…)

ஏறத்தாழ – கருணாநிதி கோஷ்டியினருக்கு எதிராக அண்ணாதுரை எடுத்த கடைசி நடவடிக்கை இதுவாகத் தான் இருந்திருக்கவேண்டும். மேலும். இது, ஊழலும் பூசலும் மிகுந்த கட்சியைப் புத்துயிர் பெறச் செய்வதற்கும், அணிப்பிரிவினை உள்ளிட்ட ஒழுக்கக்கேடுகளை வேரறுக்க முனைவதற்குமான ஒரு முயற்சியின் தொடக்கமாக இருந்திருக்கலாம்.

ஆனால் இது 1968 நவம்பர் மாதத்தில் நடந்தது. ஜனவரி மாதத்திற்குள் அண்ணாதுரையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அவர் உடல்ரீதியாக செயல்பட முடியாத நிலையில் இருந்தார். 1969 பிப்ரவரி 3 ஆம் தேதி அவர் போய்ச் சேர்ந்தார்.. கருணா நிதி கும்பலுக்குக் குஷிதான்! 

…அண்ணாதுரை போய்ச் சேர்ந்த பிறகு, கட்சிக்கும் ஆட்சிக்கும் யார் தலைமை ஏற்க வேண்டும் என்ற கேள்வி எழும்பியது – யாராக அது இருக்கலாம் என்பதும்    தெளிவாக உருவானது. ஏனெனில் கட்சியில் வலுவான இரண்டு அணிகள் மட்டுமே இருந்தன; மேலும் அடுத்த முதலமைச்சர் திமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதி தனது அணியை வலுப்படுத்திக் கொண்டதுடன், எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) தலைமையிலான அணியின் ஆதரவையும் பெற முடிந்தது.

மதியழகன் தலைமையிலான அணி, அவர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுமளவுக்கு வலிமையானதாக இல்லை என்பது தெளிவாக இருந்தது. இதனால் போட்டியில் எஞ்சியவர் நெடுஞ்செழியன் மட்டுமே. ஆங்கில ஊடகங்களும், கட்சிக்குள் இருந்த பலருடைய ஆதரவும், அவருக்கு வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகக் கருதப் பட வைத்தன. காரணம், அண்ணாதுரையின் விருப்பத் தேர்வாக நெடுஞ்செழியன் இருந்தார் என்ற நம்பிக்கை பரவலாக நிலவியதுதான் – இதுதான் உண்மையும் கூட. மேலும், கட்சிக்குள் அவருக்கு வெளிப்படையான எதிரிகள் யாரும் இல்லை என அவரும் நம்பினார்; அதிசயிக்கத்தக்க வகையில், கல்வியறிவு பெற்ற கட்சி உறுப்பின சக திராவிடர்களிடையிலும், பொதுமக்களிடையிலும் அவருக்கு பரவலான ஆதரவு இருந்தது.

ஆயினும், நெடுஞ்செழியனை எதிர்த்து சில தீர்மானகரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. முதலாவதாக, கருணாநிதி “கட்சியின் வலுவான தலைவன்” எனக் கருதப்பட்ட நிலையில், நெடுஞ்செழியன் முதலமைச்சராகவும் கட்சித் தலைவராகவும் செயல்படுவதற்கு போதிய வலிமை இல்லாதவர் என்ற கருத்து வலிந்து பரப்பப்பட்டது. இதன் சூத்ரதாரி, மு கருணா நிதி என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

இரண்டாவதாக, நெடுஞ்செழியன் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்; மேலும் அவர் எம். பக்தவத்சலத்தின் தூரத்து உறவினராவார். பக்தவத்சலம் முப்பது ஆண்டுகளாக காங்கிரஸ் அரசுகளில் அமைச்சராக இருந்தவர்; 1965 மொழிப்போராட்டக் காலத்தில் முதலமைச்சராகவும் இருந்தார். அடிப்படையில் அப்பழுக்கற்ற காங்கிரஸ் காரர் அவர்… திராவிடர்களின் வைரி.

ஆனால் + ஆகவே கருணாநிதி கும்பல் கயமையுடன் – நெடுஞ்செழியன் மீது பக்தவத்சலம் மிகுந்த செல்வாக்கு செலுத்தி வந்தார் எனப் பரப்புரை செய்தது – அதாவது, இக்கால வழக்கப்படிச் சொல்வதானால் – நெடுஞ்செழியன், காங்கிரஸ் கட்சியின் ‘பி டீம்’ எனச் சித்திரம் விரிக்கப் பட்டது….

4

கீழேயுள்ள புத்தகப் பகுதியும் பிற சிலபல விவரங்களும், Marguerite Ross Barnett எழுதிய The Politics of Cultural Nationalism in South India (1976) புத்தகத்தில் இருந்து (p.289-90) எடுக்கப் பட்டது. அதற்குக் கீழே, அதன் ஒருமாதிரி தமிழாக்கத்தைக் கொடுக்கிறேன்.

“நெடுஞ்செழியனை எதிர்த்த கூட்டணி, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாதங்களைவிட இன்னமும் வலிமையானதாக இருந்தது. ஈ.வெ. ராமசாமி (பெரியார்), கருணாநிதி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். பக்தவத்சலத்துடன் நெடுஞ்செழியன் கொண்டிருந்த உறவின் காரணமாக அவர் நெடுஞ்செழியனை எதிர்த்தார். (எம். பக்தவத்சலம் முதலமைச்சரானபோது, ஈ.வெ. ராமசாமி காங்கிரசுக்கான தனது ஆதரவை வாபஸ் பெற்றதை நினைவுகூரலாம்.)

ஈ.வெ. ராமசாமி, எஸ்.பி. ஆதித்தனார், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜி.டி. நாயுடு (கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர், கல்வியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர்), ராஜா சர் முத்தையா செட்டியார் (செல்வந்த தொழிலதிபர்), கருணாநிதி ஆகியோர் ஒன்றிணைந்து, கருணாநிதியின் தேர்வுக்குத் தேவையான உத்தி, தார்மீக ஆதரவு மற்றும் நிதி ஆதரவை வழங்கினர்.

முதலமைச்சர் பதவியைப் பற்றிய விவகாரத்தில் மனமாற்றம் செய்ய வேண்டியிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வழங்குவதற்கான நிதி திரட்டல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எப்படியும் – அண்ணாதுரையின் உடல்நலக்குறைவின்போதே, நெடுஞ்செழியன் செயல் முதலமைச்சராக ஆவதைத் தடுக்குமளவிற்கு கருணாநிதிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஏற்கனவே போதுமான ஆதரவு இருந்தது. மேலும், நெடுஞ்செழியன் தேர்ந்தெடுக்கப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவேன் என்று கருணாநிதி எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சில தனித்து நின்ற தலைவர்களை சம்மதிக்கச் செய்வது மட்டுமே எஞ்சியிருந்தது. கருணாநிதிக்கு கிடைத்த ஆதரவின் வலிமை தெளிவாக வெளிப்பட்ட பிறகு, மதியழகன் அவருக்கு ஆதரவளிக்க சம்மதித்தார். ஒரு அமைச்சர், கருணாநிதி முதலமைச்சராக்கப்பட்டால் பதவி விலகுவதாக மிரட்டினார்; ஆனால் மதியழகன் அவரை அமைச்சரவையில் தொடருமாறு சம்மதிக்க வைத்தார்.

இறுதியில், கருணாநிதி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அதனைத் தொடர்ந்து நெடுஞ்செழியன் அமைச்சரவையிலிருந்து விலகினார்.”

சுபம். :-)

5

ஒவ்வொரு ஐந்துவருடங்களுக்கும் முதலீடுகள் இரண்டுமடங்காகும் என வைத்துக்கொண்டு – 1969ல் சராசரியாக ஒவ்வொரு திமுக எம்எல்ஏ அயோக்கியனும் ரூ 7500/- பெற்றான் என எடுத்துக்கொண்டால் – அதுவே இந்த 12 ஐந்துவருட கணக்கில் சுமார் 3 கோடி. இதில் விலைவாசி உயர்வுகியர்வு என மேலதிக விஷயங்களைக் கணக்கில் கொண்டால் – அது குறைந்த பட்சம், குண்ஸாக ரூ 10-15 கோடியைத் தொடும்.

ஆகவே, இந்த 5000-10000 என்பது அக்கால மதிப்பில் பெரும்பணம் என்பதைக் கருத்தில் கொள்ளவும்…

இப்போது சொல்லுங்கள் – பதவி ஆசைக்காக, புறங்கையை நக்குவதற்காகக் கருணாநிதி கும்பல் (எம்ஜிஆர் உட்பட) அப்போது செய்ததுதானே குதிரைபேரம்? பாரத அளவில் இம்மாதிரி சொந்தக் கட்சி எம்எல்ஏக்களையே மிகப் பெரிய அளவில் பேரம் பேசி சல்லீசாக வாங்கிய ஆசாமி இந்த திமுக கருணாநிதிதானே? அந்தத் தெருப்பொறுக்கிகளும் தொடர்ந்து ஊழல் செய்வதற்குத்தானே கருணாநிதி கோஷ்டியில் ஐக்கியமானார்கள்?

இதையே தானே அந்த அஇஅதிமுக ஆசாமி எடப்பாடி பழநிச்சாமியும் செய்தார்?

நான் விஜய்குஜய் ஆதரவாளனல்லன் – அந்த ஆளின் கூறுகெட்ட ‘கண்களைக் கட்டிக் காட்டில் விட்ட’ ஜிகினா அரசியலை வெறுப்பவன். திராவிடக்கட்சி1 = திமுக, திராவிடக்கட்சி2 = அஇஅதிமுக, திராவிடக்கட்சி3 = தவெக என வெகுகாலத்துக்கு முன்பே உணர்ந்தவன். 

இருந்தாலும் சொல்வேன் – விஜய்குஜய் நடத்திய குதிரைபேரம், பிற கட்சி அயோக்கியர்களை உள்ளிழுக்கச் செய்யப் பட்டதேயன்றி – படு கேவலமாக பிற மூத்த திராவிடக்குட்டை மட்டைகள் செய்ததைப் போல, தன் கட்சி குண்டர்களுக்கே வாய்க்கரிசி போடும் அவலம் இல்லை.

எப்படியும் ஊழலின் ஊற்றுக்கண் திராவிடம் என்பதுதான் உண்மை.

அதிலும் படுகேவல அதலபாதாளங்களை அடைந்தது, இந்தக் கருணாநிதி கும்பலே.

ஆமென்.

கேள்விப்படும் விஷயங்கள் ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை – மாறாக எல்லாம் எதிர்பார்த்ததுதான்; இந்த தமிழக வெற்றிக் கழகம் உண்மையில் ஒருமாதிரி வெறிக் கழகம் என்பதுதான் உண்மையென நிரூபிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்.

எப்படியும், ஏற்கனவே தெரியும் – இந்த வெறிக்கழகமும் ஒரு திராவிடமாடல் காட்சிதான் என்று!

-0-0-0-0-0-0-

சிலபல சகவேலைவெட்டியற்ற நண்பர்கள் (‘நல்லெண்ணத்துடன்’ என எடுத்துக்கொண்டு தொலைக்கிறேன்; + இவர்களில் சிலர் மகன் சொன்னான் அல்லது பேரன்/பேத்தி பரிந்துரைத்தனர் ப்ளடிஹெல் என நடிகருக்கு வாக்களித்திருக்கின்றனர் என்பது உபரித் தகவல் – ஆகவே அவர்களுடைய ‘இருப்பின் அவஸ்தை’ எழவானது புரிந்துகொள்ளக் கூடியதே!) சொல்வது என்னவென்றால்… 

(not that any of us old/decrepit crones really matters, in the big picture after all, but still…)

“கொஞ்ச நாளாவது இந்த விஜய் அரசுக்கு அவகாசம் அளிக்க வேண்டாமா? முதலையமைச்சர் உட்பட அனைவருக்கும், இந்த நாட்டு நிர்வாக விஷயங்களைப் பற்றிப் பெரும்பாலும் முன்னனுபவம் இருந்திருக்கவில்லைதாமே? எப்படித்தான் ஒரே மாதத்தில் ஊழல் திராவிடத்தால் துப்புரவாக ஒழிக்கப் பட்ட நிர்வாகத்தைச் சரி செய்ய முடியும்? ஆறுமாதம் ஒருவருடம் என ஹனிமூன் சனிமூன் கொடுப்பது நியாயமாகத்தானே இருக்கும்?”

சரிதான்.உங்கள் வாதம் முழுக்க முழுக்க தவறு, பிறழ்வு என்று ஒர்ரேயடியாகச் சொல்ல முடியாது; புதிய ஆட்சிக்கு ஒரு அளவு அவகாசம் தேவை என்பதும் ஒருமாதிரி (பிற சமயங்களில்) ஒப்புக்கொள்ளக்கூடிய நியாயமான கருத்துதான். ஆனால், அதையே காரணமாகக் கொண்டு எந்த விமர்சனத்தையும் ஒத்திவைக்க முடியாது என்பதும் உண்மை. 

எது எப்படியோ… நண்பர்களின் கருணையும் கரிசனமும் மிகுந்த பார்வையைக் கேள்விக்குள்ளாக்க, சில தர்க்கரீதியான(!) எதிர்வாதங்களை முன் வைத்தேன் – அவற்றை ஒருமாதிரி தொகுத்து அளிக்கிறேன்… (எதிர்கருத்துகளைத் தாராளமாக முன்வைக்கலாம்)

-0-0-0-0-0-0-

தேர்தலுக்கு முன் இருந்த அசாத்தியமான தன்னம்பிக்கை, தேர்தலுக்குப் பிறகும் பொருந்தி வரவேண்டும், செயலில் காண்பிக்கப் படவேண்டும்

ஆட்சி நடத்தத் தயாராக இருக்கிறோம் என்று சொல்லித்தான் வாக்கு கேட்டார்கள். வென்ற பிறகு மட்டும் ‘எங்களுக்கு அனுபவம் இல்லை, நேரம் கொடுங்கள்’ என்றால், தேர்தலுக்கு முன் சொன்ன தயார்நிலை என்ன ஆனது?

அது அட்ச்சிவுடல் புளுகுதானே?

“அனுபவம் இல்லை” என்பது பொறுப்பிலிருந்து விலக்கு அளித்துக்கொள்ள சால்ஜாப்பு அல்ல

விமானம் ஓட்ட அனுபவம் இல்லாதவரிடம் விமானத்தை ஒப்படைத்த பிறகு, ‘அவருக்கு அனுபவம் இல்லையே, கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்’ என்று பயணிகளிடம் சொல்ல முடியுமா? அனுபவம் இல்லாதது நடப்புக்குக் காரணமாக இருக்கலாம்; ஆனால் அது தோல்விக்கான, நொதுமல் நிலைக்கான நியாயம் ஆகாது.

எதற்கெடுத்தாலும் பழைய ஆட்சியைக் குறை மட்டும் (அவை அனைத்தும் உண்மைதான் என்றாலும், திமுக அஇஅதிமுக திராவிடன்கள் அயோக்கியப் பொறுக்கி ராஸ்கல்ஸ் என்றாலும்) கூறுவது செயல்திறன் அல்ல

ஒரு மருத்துவர் நோயாளியைப் பார்த்து, ‘முந்தைய மருத்துவர் எல்லாம் கெடுத்து விட்டார், சொதப்பியிருக்கிறார்’ என்று ஒரு மாதம் சொல்லிக்கொண்டே இருந்தால், நோயாளி குணமாகிவிட மாட்டார். குறையை கண்டுபிடிப்பதோடு, சிகிச்சையும் தொடங்க வேண்டும் அல்லவா?

அவகாசம் கேட்பவர்களும் முன்னேற்றத்தின் அறிகுறிகளைக் காட்ட வேண்டும்

புதிய வீட்டை வாங்கியவர், ‘முந்தைய உரிமையாளர் வீடு மோசமாக வைத்திருந்தார்’ என்று சொல்லலாம். ஆனால் ஒரு மாதம் கழித்தும் தூசி துடைக்கப் படவில்லை, ஒட்டடை அடிக்கப்படவில்லை, பெருச்சாளிகள் அகற்றப்படவில்லை என்றால், ‘சுத்தம் செய்யத் தொடங்கவே இல்லையா?’ என்ற கேள்வி வருவது இயல்புதானே?

நிர்வாகம் ஒரேஒரு ‘அதி’மனிதரின் அனுபவத்தால் மட்டும் இயங்காது

முதல்வருக்கு அனுபவம் இல்லாவிட்டாலும், அதிகாரிகள், ஆலோசகர்கள், அமைச்சர்கள், நிர்வாக அமைப்புகள் எல்லாம் இருக்கின்றன. அப்படியிருக்க, எல்லா குறைகளுக்கும் ‘அனுபவமின்மை’யை மட்டும் காரணமாகச் சொல்வது எளிமைப்படுத்தப்பட்ட தேய்வழக்கு விளக்கமல்லவா? (அவர் அனுபவஸ்த வெளியாட்களிடம் அறிவுரை கூடக் கேட்டுப் பெறலாமே?

அவகாசம் கொடுப்பதும், கண்காணிப்பதும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல

ஒரு மாணவருக்கு ஆண்டு முழுவதும் படிக்க நேரம் கொடுக்கலாம். ஆனால் முதல் தேர்விலேயே 0 மதிப்பெண் எடுத்தால், ‘என்ன மசுத்துக்குப் படித்தாய்?’ என்று கேட்பது தவறல்லவே?

“முந்தைய ஆட்சி மோசம்” என்பது நிரூபிக்கப்பட வேண்டிய முன்னூகம் (இது 100% உண்மையென்றாலும், இதற்கான எதிர்வினையை, குறைந்த பட்சம் சட்ட-நிர்வாக ரீதியிலாவது செயலில் காட்டவேண்டாமா?)

திராவிட ஆட்சி நிர்வாகத்தை முழுவதும் ஒழித்துவிட்டது என்று முதலில் நிரூபிக்க வேண்டும். நிரூபிக்கப்படாத ஒரு முன்னூகத்தின் மீது முழு வாதத்தையும் கட்டுவது தர்க்கப் பிழை. அரசுப் பதவிகளுக்கு, விசிலடிச்சான் குஞ்சப்ப வெறியர்களும் பிறகட்சிகளிலிருந்து வந்த ஓடுகாலிகளும் வந்தேறி ஒருமாதம்+ ஆகிவிட்டது.

ஆக, குறைந்த பட்சம் – இந்த சமயத்தில் ஒவ்வொரு துறைக்கும், மிக விலாவாரியான ஒரு ‘வெள்ளை அறிக்கை’ வந்திருக்க வேண்டுமா இல்லையா?

வாக்குறுதிகள் உடனடி மதிப்பீட்டுக்கு உட்பட்டவையே

5 ஆண்டுகளில் செய்யும் திட்டங்களுக்கு அவகாசம் தேவை. ஆனால் முதல் நாளிலிருந்தே செய்யலாம் என்று கூறிய நடவடிக்கைகள் தொடங்கியுள்ளனவா என்று கேட்பது, சர்வ நிச்சயமாக நியாயமானது.

தொடரும் ஊழல்கள், நியமனங்கள், ரீல்ஸ்முதல்வாதம், போலீஸ் சொதப்பல்கள், லஞ்ச ஒழிப்பு ஒழிப்புத் துறை

கடந்த வாரம் நடந்த, எனக்குத் தெரிந்த மூன்று ரியல் எஸ்டேட் நிலப் பரிவர்த்தனைகளில் (வேலூர், மதுரை, மதுராந்தகம் வட்டாரங்கள்) – லஞ்சம் பெற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது. மேலிடத்துக்கும் அவர்களுக்குப் பாத்தியதைப் பட்டதைக் கொடுக்கவேண்டும் என்கிற முனகலோடு.

வருவாய்த்துறை/பத்திரப்பதிவுசார் அதிகார வட்டங்களில் தொடர்ந்து லஞ்சவூழல்கள் நடந்த மணியம் தான். டாஸ்மாக் ஊழலும் தொடர்கிறது. நிலவளத்துறை சார் பாறை, மணல் கடத்தல்கள்+அதிசுரண்டல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எம்எம்டிஏவிலும் அப்படியே.

லஞ்ச ஒழிப்பு ஒழிப்புத் துறையின் தலைவராக அருண் எனும் ஒரு ஐபிஎஸ் நபர் நியமிக்கப் பட்டிருக்கிறார். வெளங்கிடும். மேலும் வெளங்க வாழ்த்து.

சந்தேகாஸ்பதமான பல அதிகாரி நியமனங்கள்… ஒரு சிலர் பழுதுபார்த்து டிங்கரிங் செய்யப்பட்டாலும் அதிகாரப்ரோக்கர்கள் சிலர் ஓரங்கட்டப் பட்டாலும், பெரும்பாலோர் பழைய கதைகளின் தொடர்ச்சியே. திராவிடமயமாக்கப்பட்ட தமிழகத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்: எண்ணிக்கைகள், நிதர்சன உண்மைகள், ஆகவே கவலைகள் May 17, 2026

முதலையமைச்ச நடிகரின் அமைச்சர்கள் – இவர்களில் பலரைப் பற்றிக் கேள்விப்பட்டால் பாவமாக இருக்கிறது. இவர்களில் சிலபலர் பாவம் செய்பவர்களாக மாறினாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை. சர்வம் அதிகாரிமயம் தமிழகஜகத்.

நடிகரின் உள்வட்டத்தில் இருக்கும் ஆசாமிகள் சந்தேகாஸ்பதம். ஆனால் – இன்னமும் சபரீசன் போன்ற ஈசல்கள் உள்வட்டத்துக்கு வரவில்லை என்பதுதான் ஊசலாடிக்கொண்டிருக்கும் எனக்கு ஆச்சரியம்.

ரீல்ஸ் அவ்ளோ பார்ப்பதில்லை, சக்தியில்லை; ஆனால் சிலபல செய்திகளாகவாவது தெரிந்துகொள்வதற்கு – பத்ரி சேஷாத்ரியின் கருணைதான் காரணம் – அவருடைய கிழக்கு நியூஸ் செய்தியலசல்கள் தரம் வாய்ந்தவையாக இருக்கின்றன. அவருக்கு என் நன்றி.

…ஆனால், இப்படியே இன்னும் எவ்ளோ நாட்களுக்குத் தொடரும்? சலிப்பாக இருக்கிறது…

வீட்டு-தொழில் நிர்வாகத்துக்கு ஒரு விதி, அரசுக்கு ஒரு விதி என இருக்க முடியுமா

நமது வீட்டிலோ தொழில்முறையாகவோ, புத்தம்புதிதாக ஒரு பணியாளரை நியமனம் செய்கிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். அவர் வீட்டில் கூடமாட ஓடியாடி உதவி செய்பவராகவோ, அல்லது ஒரு தொழில்முறை எஞ்ஜினீயர்-கஞ்சிநீராகவோ இருக்கலாம் – இவர்களுக்கு அதிகபட்சம் எவ்வளவு நாட்கள் ‘வேலை கற்றுக் கொள்ள’ அப்படியிப்படி எனப் பொறுமை காத்திருப்போம்? 

“தம்பி, நீ எலக்ட்ரானிக் ஸ் படித்திருக்கிறாய் அல்லவா? உன் முதல் வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்களாகிவிட்டன – நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

“சார், நான் என் மேனேஜரை ஆய்வு செய்து இன்ஸ்டா ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறேன்!”

“அம்மா, நீங்கள் எங்கள் வீட்டில் சமையல் வேலை செய்ய வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது, அடுத்த மாதமாவது ஒரு வாய் டீ போடக் கற்றுக் கொள்வீர்களா?”

“மாட்டேன். உங்கள் வீட்டில் ஆகும் டீ செலவைப் பற்றி மிக விரிவான ஒரு பழுப்பு அறிக்கையை அடுத்த மாதம் கொடுக்கப் போகிறேன்; பிறகு ஆவன செய்கிறேன்…”

…இந்த நிலைமையை நாம் ஒப்புக் கொள்வோமா? மாட்டோமல்லவா?

இந்த விஜய்குஜய் ரீல்ஸ் கதிகலக்கல் வாதிகளுக்கு மட்டும் நாம் ஒருமாதிரி விதிவிலக்கம் கொடுக்கவேண்டும், சொல்லுங்கள்?

நம்மைப் போன்ற சாமானியர்களில் பெரும்பான்மையினர் (அதாவது நம் தேர்தல் ஜனநாயகத்தின் first past the post முறைமைப் படி) பலரால் நமக்கும் நம் தேசத்துக்கும் பணிவிடை செய்வதற்காக, ஒருமாதிரியாகத் தெரிவு செய்யப் பட்ட கட்சிதானே இந்த தமிழக வெறிக் கழகம்?

-0-0-0-0-0-

சுருக்கமாகச் சொன்னால், நண்பர்களின் வாதத்தில் உள்ள முக்கியமான தர்க்கப் பிழை: “புதிய அரசு என்பதால் விமர்சிக்கக் கூடாது” என்கிற முட்டாள்தனமான முடிவுக்கு செல்வது.

சரி. அப்படியானால் – சரியான நிலைப்பாடு எப்படி இருக்கவேண்டும்?

“புதிய அரசுக்கு நியாயமான அவகாசம் கொடுக்கலாம் – அதாவது நாம் கருணைமுதல்வாதிகளாக இருந்தால்; அதே நேரத்தில் அல்லது ஆனால், அவர்கள் எடுத்த/எடுக்கும் நடவடிக்கைகள், நியமனங்கள், முடிவுகள், முன்னேற்றங்கள், ஊழல்-தொடர்கதைகள் ஆகியவற்றை ஆரம்பத்திலிருந்தே கேள்வி கேட்கவும் மதிப்பிடவும் முடியும்.”

இதுதான், அரசியல் சார்பற்ற, நிர்வாகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்ட எதிர்வாதமாக இருக்கும்.