ஜேஜே: சில குறிப்புகள் (கருணாநிதிகள் போன்றவர்களின் ‘உழைப்பு’) = புரிதல்கள்

April 14, 2016

எனக்கு இது மாளா ஆச்சரியம் தரும் விஷயம்.  ++ அரைகுறைகளின் சொம்புதூக்குதல்களையும் அவர்களுடைய அற்ப மலைப்பையும் அவதானிக்கும்போதெல்லாம் ஏற்படும் அலுப்பும் சலிப்பும், ஊக்க போனஸ்.

இன்று காலை ஷதாப்தி எக்ஸ்ப்ரஸ்ஸில்,  சென்னையிலிருந்து பெங்களூர் வந்துகொண்டிருந்தபோது, பக்கத்தில் உட்கார்ந்த சொம்புகுமாரர் ஒருவர், ‘அரசியல்’ பேசிக்கொண்டிருந்தார். பேசியதைக் கவனித்தால் – இவர் படித்தவர்,  ஓரளவுக்காவது சிந்திக்கும் ஜாதி என்றுதான் தோன்றியது. அவர் கையில், எங்கு சென்றாலும் தப்பமுடியாத ஒரு அரைகுறைராய் புத்தகம்; அவர் வயதும் சுமார் 50ஆவது இருந்திருக்கவேண்டும்.

ஆனால்,  இவரும் இப்படி மலைத்துப்போய் பேசிய எழவினால் உந்தப்பட்ட பதிவு இது… ( இது தொடர்பான இன்னொரு பதிவு: கலைஞர் ‘எதிர்நீச்சல்’ வீரர்! (ஐயோ!!)  05/06/2011)

-0-0-0-0-0-0-0-

…தமிழகத்தின் கலாச்சாரவேர்களை தொடர்ந்து அரிக்க நெளிந்துகொண்டிருக்கும் புழுக்களை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கும் கருணாநிதிகளையும், உள்ளூற உளுத்துக்கொண்டு இளிக்கும் திராவிடத்தையும் முட்டுக்கொடுத்து நிற்க வைக்க, இம்மாதிரி ஜந்துக்கள் அவ்வப்போது சொல்வது என்னவென்றால்:
…கலைஞர் கருணாநிதிக்கு 92 வயதாகிறது. இன்னமும் என்னமா உழைக்கிறார், இந்த மனிதர்! சுழன்று சுழன்று தேர்தல் பணிகளிலும், திட்டமிடல்களிலும், பயணங்களிலும், பரப்புரைகளிலும் மாய்ந்து மாய்ந்து, அயராமல் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்!  எப்படிப்பட்ட சுறுசுறுப்பு! எப்படிப்பட்ட செயலூக்கம்!! தமிழகத்துத் தமிழர்களிடம் மட்டுமல்ல, ஈழத் தமிழர்கள் மேலும் கரிசனம். இவரைப் போன்ற இன்னொரு தலைவரை நீங்கள் காண்பிக்க முடியுமா?

…அவர் வயதில் பாதிகூட இல்லாத நான், இவர் செய்துகொண்டிருக்கும் வேலையில் ஒரு பத்து சதவீதம் செய்யக்கூட முடியாது!

வாழ்க நீ எம்மான்!
…இன்னபிற. இன்னாபிற…

நான் கொஞ்சம் கிண்டலாகவே அவரிடம் சொன்னேன் – நீங்கள் கட்டைப் பிரம்மச்சாரி போலும். உங்களுக்கும் அவரைப் போலவே பெரிய குடும்பம் ஒன்று இருந்தால், உங்கள் மகனுக்குப் பட்டாபிஷேகம் செய்யவேண்டியிருந்தால், நீங்களும் அவரைப் போலவே, குடும்பத்தின் எதிர்காலத்துக்காக உழைப்பீர்களோ என்னவோ?

அவருக்கு ஆச்சரியம், பாவம் – என் கிண்டலையும் புரிந்துகொள்ளவில்லை; ஆக, ஆச்சரியத்துடன் கேட்டார் – ‘உங்களுக்கு எப்படித் தெரிந்தது, நான் ஒரு பேச்சிலர் என்று?‘ – நான் மானசீகமாக என் மண்டையில் அடித்துக்கொண்டேன், வேறென்ன செய்ய…
-0-0-0-0-0-0-0-

நம் மக்களின் ‘உழைப்பு’ பற்றிய இப்படிப்பட்ட சிந்தனைப்போக்குகளை அவதானித்தால், எனக்கு இரு விஷயங்கள் பிடிபடுகின்றன:

  • இவர்கள், வெறும் கடின உழைப்பை மட்டுமே ஏதோ ஒரு பெரிய விஷயமாக நினைத்துக்கொண்டுவிடுகிறார்கள். எதற்காக இந்த உழைப்பு உழைக்கப்படுகிறது என்பதை அறிந்தாரில்லை. அடிப்படை விழைவுகளுக்கும், வழிகளுக்கும், குறிக்கோட்களுக்கும் இடையே ஒருவித மயக்க நிலையிலேயே விஷயங்களை அணுகுகிறார்கள். இவர்களுக்கு வழிகள் மட்டுமே பிரதானமாக இருப்பவை. உழைப்பின் தன்மையோ,  அதன் ஊற்றுக்கண்ணோ இரண்டாம் பட்சம்தான். இது ஒரு விதமான குருட்டாம்போக்கான, கண் மறைக்கப்பட்ட குதிரையைப் போன்ற பார்வை.
  • தங்களுடைய சோம்பேறித்தனத்துடனும், தாமஸ குணத்துடனும், விட்டேற்றியாக ஒப்பேற்றப்படும் வாழ்க்கையுடனும் – சிலபலரின் உழைப்பை மட்டும் ஒப்பு நோக்கி, அந்தச் சிலபலர் உழைக்கும் நேரம் அதிகம் என்றால், அதை ஏதோ ஒரு பிரம்மாண்டமான காரியம் என மனதாற நம்பும் அளவுக்கு அரைகுறைத்தனமும் நிரம்பியவர்கள் இவர்கள். அதாவது  தாங்கள் மட்டும் இப்படிப்பட்ட உழைப்பை உழையோவுழை என்று உழைக்க முடிந்தால், ஏதோ அதிமனிதர்கள் ஆகிவிடக்கூடும் என படு ஸீரியஸாக நம்புபவர்கள்… கோமாளிக் கோமகன்கள்…
-0-0-0-0-0-0-0-
இச்சமயம் ‘ஜேஜே: சில குறிப்புகள்’ என்கிற புதினத்தில், சுந்தர ராமசாமி எழுதிய மிக அழகான, தருக்கமும் நேர்மையும் சார்ந்த வரிகளை, உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்: (இப்புதினம், தமிழின் 100 குறிப்பிடத்தக்க புத்தகங்களில் முக்கியமான ஒன்றாக பல வருடங்கள் இருக்கும் என்பது என் எண்ணம்)
27.10.1953: எனக்கும் கவி கோவிந்த குருப்புக்கும் நேற்று வாய்ச் சண்டை. கம்பம் நட்டு மின்சாரக் கம்பிகளை இழுத்துத் தெரு விளக்குப் போடும் குஞ்சுண்ணியைப் பற்றி நீளமாகப் பாடி இருக்கிறான். குறுங்காவியம் என்றான் குருப். நான் நீண்ட பாட்டு என்றேன். இந்த இடத்திலேயே கிறீச்சிட்டுவிட்டது. ‘உழைப்பு உன்னதமானது என்று சொல்ல மாக்ஸிம் கார்க்கியை ஏன் இழுத்தாய்? உனக்குத் தெரியாதா?’ என்று கேட்டேன். ‘நீ மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்கிறவன் தானே?’ என்று கேட்டேன். அவன் முகம் சிவந்தது. ‘உழைப்பு உன்னதமானது என்று எண்ணற்ற தடவைகள் நீ சொல்லும்போது இது பற்றி உனக்கே சந்தேகம் இருக்கிறதோ என்று எனக்குத் தோன்றிவிடுகிறது’ என்றேன். ‘மேலான உறவுகளை நாம் பறை சாற்றுவது உண்டா?’ என்று கேட்டேன். ‘தாய்  மீது கொண்டிருக்கும் பாசம், மனைவி மீது கொண்டிருக்கும் அன்பு, காதலியின் மீது கொண்டிருக்கும் பிரியம், குழந்தைகளின் மீது கொண்டிருக்கும் கவலை, நண்பர்களின் மீது கொள்ளும் பாராட்டுணர்வு இவை பறைசாற்றப் படுவதுண்டா? மின்சாரத்தைக் கண்டுபிடித்தவன் யார் என்பது தெரியுமா?’ என்று கேட்டேன். அவனுக்குத் தெரியாது. ‘தெருவில் விளக்குப் போடுபவன்தான் எனக்கு முக்கியம்’ என்றான். ‘மின்சாரத்தை ஒருவன் கண்டுபிடிக்கவில்லை என்றால் குஞ்சுண்ணி எப்படி விளக்கு போடுவான்?’ என்று கேட்டேன். ‘குஞ்சுண்ணிகள் தான் ஒளியைப் பரப்பினார்கள். அதுதான் எனக்கு முக்கியம்’ என்றான். ‘குஞ்சுண்ணி அதிகச் சம்பளம் கிடைத்தால் மிலிட்டரியில் சேர்ந்து விடுவானே’ என்றேன். ‘ விஞ்ஞானிகளும் தங்களை விற்றுக் கொண்டுதானே இருக்கிறார்கள்’ என்றான். ‘ஆக, மிகையான நிலைகள் வேண்டாம். உழைப்பைத் தன்னளவில் போற்றிப் பேசுவது தவறானது. உழைப்பின்றிக் கற்பழிப்பு இல்லை. போற்றப்பட வேண்டியது உழைப்பின் பின்னுள்ள பிரக்ஞை. உடல் உழைப்பு ஆயினும் சரி. மன உழைப்பு ஆயினும் சரி’ என்றேன்.”
-0-0-0-0-0-0-

சரி. கருணாநிதி உழைக்கிறார். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அந்த உழைப்பின் பின் உள்ள ப்ரக்ஞை என்ன? எனக்கு இது மிகவும் முக்கியம். ஏன், இம்மாதிரி தெளிவு நம் அனைவருக்குமே மிக முக்கியம் என்றே நினைக்கிறேன்.

அவருடைய உழைப்பு எதற்காக நடக்கிறது? தேனை எடுக்கும்போது புறங்கையில் வழிவதை நக்குவதற்குத்தானே?

அவருடைய தேர்தல்கால உழைப்பு என்பது தமிழகத்தை, தமிழர்களை, பாரதத்தைத் தொடர்ந்து கற்பழிக்கவேண்டும் என்பதுதானே? எப்படியும் அவர் தனிமனிதர்களுக்கும், பலப்பல இளம்பெண்களுக்கும் இப்படிப்பட்ட சேவைகளைப் பலமுறை தம் இறந்தகாலங்களில் அருளியுள்ளவர்தானே?

அவருடைய உழைப்பு என்பது தம் குடும்ப மேம்பாட்டுக்கும், திராவிடத்தின் ஐம்பெரும் கொள்கைகளைக் கொண்டு நம்மைச் சுரண்டவும் மட்டும்தானே? (திராவிடர்களுடைய ஐம்பெரும் கொள்கைகள் என்றாலே நமக்குத் தெரியும், அவை – குடியும், கூத்தும், கொள்ளையும், ஜாதிவெறியும், பொய்மையும் மட்டுமேயென்று!))

ஆகவே, இம்மாதிரி சுயகாரியப்புலி உழைப்பினை நான் மதிக்கமாட்டேன்.

ஏனெனில் – கற்பழிப்பிலும் உடலுழைப்பு உண்டு. ஆகவே இம்மாதிரி தன்னளவில் உடலுழைப்பினை மதிக்கும் படித்த/படிப்பறிவற்ற அயோக்கியர்களில் ஒருவனாக நான் நிச்சயமாக இருக்கமாட்டேன்.

ஆக, மிகையான நிலைகள் வேண்டாம். உழைப்பைத் தன்னளவில் போற்றிப் பேசுவது தவறானது. உழைப்பின்றிக் கற்பழிப்பு இல்லை. போற்றப்பட வேண்டியது உழைப்பின் பின்னுள்ள பிரக்ஞை. உடல் உழைப்பு ஆயினும் சரி. மன உழைப்பு ஆயினும் சரி

-0-0-0-0-0-0-

பின்குறிப்பு:  நான் கருணாநிதிகளைப் பற்றி எழுதியுள்ள அனைத்தும் ஜெயலலிதாக்கள், விஜயகாந்த்கள், திருமாவளவன்கள் வகையறா என அனைத்து திராவிடச் சிகாமணி ஜந்துக்களுக்கும் பொருந்தும். இதைச் சொல்வதில் எனக்குத் தயக்கமேயில்லை.

நன்றி.

3 Responses to “ஜேஜே: சில குறிப்புகள் (கருணாநிதிகள் போன்றவர்களின் ‘உழைப்பு’) = புரிதல்கள்”

  1. ஆனந்தம் Says:

    அவரோட உழைப்புக்கு ஈடா குறிப்பிட்டு சொல்ல வேண்டியது அவரோட தமிழ் ;-) அதை விட்டுட்டீங்களே?;-)

  2. nparamasivam1951 Says:

    அவரின் “உழைப்பு” பற்றி அவருடன் இருந்த சிவாஜி கணேசன் முன்பே கூறி இருந்தார். ஆனால் சொம்பு தூக்கிகள் புற்றீசல் போல் எங்கும் வியாபித்து மறைத்து விடுகிறார்கள்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s