திருவண்ணாமலையில் புதிய மிருகக்காட்சிசாலை!

February 24, 2017

(அல்லது) திமுக தீவட்டிக்கொள்ளைக்காரர்களின் அறப் போராட்ட நாடகம்.

‘விடுதலைச் சிறுத்தை’க்கார நண்பர் அனுப்பிய நீளோதிநீளமான ஆங்கில மின்னஞ்சலின் ஒருமாதிரியான தமிழ்ப்படுத்திஎடுத்தல் கீழே. தனிப்பட்ட  ஷேக்ஸ்பியர்மேற்கோள் / அரட்டை / குடும்பவிவரங்களைக் கத்தரித்துவிட்டேன். முடிந்தவரை ‘கெட்ட’வார்த்தைகளையும் எடுத்துவிட்டேன்; நண்பருக்குக் கோபம்வரும்போது வாயைத் திறந்தால் அது fuckin’ sonuvabitch எனத்தான் ஆரம்பிக்கும்.

தமிழக அரசியலென்றால் நம் கருணாநிதி வகையறாக்களைப் பற்றி அமர்க்களமாகக் கிண்டல் செய்வார். அண்ணாதுரை மாதிரி வழவழாகொழகொழா வெற்றிலை நடுங்கல் பேச்சிற்குப் பின் கரகரத்தகுரலில் கருனாநிதிபோலஆரம்பித்து திடீரென்று எம்ஆர் ராதா மாதிரிப் பேச ஆரம்பித்து எம்ஜிஆர் வரை ஒரு ரவுண்ட். இன்னொரு ரவுண்ட் ஆரம்பித்தால் – அவருடைய சொந்தக் கட்சியிலிருந்து ஆரம்பித்து ஈவேரா ஊடாக  நேருகாந்திஅம்பேட்கரையும் விட்டுவிடாமல் அனைவரையும் ஒரு பிடிபிடித்துவிட்டுத்தான் ஓய்வார். மூளையுள்ள, சிந்திக்கும் ஆசாமி. ஆனால், அவர் பேச்சில் நானுமேகூட கேள்விப்பட்டிருக்காத திராவிடக் கொச்சை வசைகளும் இருக்கும். :-)) ஆகவே.

வாழ்க்கையில் நிறைய அடிபட்டிருக்கிறார் பாவம். அவருடைய கட்சியிலேயே அவரை அறிந்திருப்பவர்கள் மிகக் குறைவு, ஏன், ஒருவருமேயில்லை எனக்கூடச் சொல்லிவிடலாம். ஏனெனில் தன் ஆகிருதியை அவர் வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை – இதற்கு ஏதேதோ தனிப்பட்ட காரணங்கள், அயர்ச்சி. 2011 தமிழகத்தேர்தலில் நானும் மிக ஆவேசத்துடன் தேர்தல்பணி(!) புரிந்து கொண்டிருந்தபோது எனக்கு அறிமுகமான நபர் இவர். மிகவும் பேசும் (என்னைப்போல) பழக்கமில்லை அவருக்கு – நெருங்கிப் பழகினால் வேறுவிதம். ஜொலிப்பவர். புகழையும் பணத்தையும் துச்சமாக மதிக்கும் தன்மை. பொதுவாகவே – தானுண்டு தன்வேலையுண்டு என இருப்பவர். நானும் இவரும் டிஆர் நாகராஜ் பற்றியும் ஸ்ரீ தரம்பால் பற்றியும் அவ்வளவு பேசியிருக்கிறோம்! நான் கொடுத்து வைத்தவன், வேறென்ன சொல்ல.

-0-0-0-0-0-0-0-

இத்தனை நாட்களுக்குப் பின் மறுபடியும் தொடர்புகொண்டதில் மகிழ்ச்சி. நாட்கள் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கின்றன.

ஏதோ கவைக்குதவாத விஷயம் பேசினோம் – ஒரு வாரம்போல இங்கு வந்தால் பேசுவதற்கு நிறைய இருக்கின்றன. ஊர் சுற்றலாம். மருதம் எனவொரு அழகான பள்ளியை ஆரம்பித்திருக்கிறார்கள். உனக்கு இதுபற்றித் தெரிந்திருக்கலாம். அங்கு போகலாம். செஞ்சி பக்க கன்னியம்மன் மலையில் சில நாட்களைக் கழிக்கலாம். முடிந்தால் மே மாதத்தில் பெங்களூர் வருகிறேன். எனக்கு ஏரோப்ளேன் ம்யூசியம் பார்க்கவேண்டும்.

உன்னைப்போலல்லாமல் கட்சியில் இருப்பதில் ஏகப்பட்ட பிரச்சினைகள். தவறு செய்துவிட்டேனோ எனத் தோன்றுகிறது. சுதந்திரப் பறவையாக இருக்கமுடியவில்லை. சில சமயம் கட்சியும் தலைமையும் பேசுவதையும் செய்வதையும் பார்த்தால் வெட்கம் பிடுங்கித் தின்கிறது.

அரசியலில் அவரவர் சக்திக்கு ஏற்றவாறு ஈடுபடவேண்டும் என நினைப்பவன் நான் – அதனால், தற்போதைக்கு விசிக-வில் தான் இருக்கப் போகிறேன். வேறு வழியில்லை.
மேற்படிப்பு ஏதாவது படிக்க வெளிநாடு போகலாமா எனக்கூட யோசனை. 50 வயதில் இப்படியொரு ஆசை.

உன்னிடம் சொன்னேனேயென்று திமுகவினர் நடத்திய நிகழ்ச்சிக்குச் சென்றேன். குதூகலம். ஒரு மிருகக் காட்சிச்சாலைக்குச் சென்றது போல இருந்தது. கொள்ளைக்கார நாய்கள்.

தெருவை அடைத்து, மக்களுக்குத் தொந்திரவு கொடுத்து ஒரு நீளமான ஷாமியானா. அதில் மின்விசிறிகள். கீழே கம்பளம். உட்கார வசதியான ப்ளாஸ்டிக் இருக்கைகள். காலை ஒன்பது மணிக்குத் தொடங்கியிருக்கவேண்டும். மாலை வரை எப்படியோ கஷ்டப்பட்டு சாப்பிடாமல் இருந்திருப்பார்கள். எப்படியாப்பட்ட தொந்திதொப்பைகள். தொப்பைகளை நோண்டினால் கரன்ஸி நோட்டு வரும். வெள்ளைவெளேரென்று கறைபட்ட வேட்டிகள். அழுக்கு மனதுகள். கிரிமினல் மூளைகள்.

இந்த மிருகங்களெல்லாம் காலையிலே வேண்டுமளவு மூச்சுமுட்ட சாப்பிட்டுவிட்டு இங்கு உண்ணாவிரதமிருக்க வந்திருக்கவேண்டும்; உண்ணாவிரதம் அறப்போர் எனப் பம்மாத்து செய்துகொண்டிருக்கும்போதே ஏவேவ் என ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தார்கள். வாய் வழியாக ஏதாவது முழுங்கப்பட்ட கரன்ஸி நோட்டு வெளிவருமா எனப் பார்த்தேன். ஆனால் அவை அனைத்தும் ஜெரிக்கப்பட்டிருக்கவேண்டும்.

எனக்குத் தெரிந்தே மேடையில் பார்த்த ஆறேழு திமுகவினர் – ஆதிதிராவிடர்கள்; வெட்கம் கெட்டுப்போய்தான் இவர்கள், ஒரு தலித்துக்கெதிராக ஸ்டாலின் கும்பல் நடத்திய  வன்முறையை ஆதரிக்கிறார்கள், அறப் போராட்டம் எனக் கதைக்கிறார்கள். கருணாநிதியின் குடும்பம், அழகிரியின் மனைவியை – அவர் ஆதிதிராவிடர் என்ற காரணத்தினாலேயே ஒருகாலத்தில் அலட்சியம் செய்ததையெல்லாம் மறந்துவிட்டு திமுகமுதன்மைக் குடும்பத்துக்கு ஜால்ரா போடுகிறார்கள். இப்படி இளிப்பதற்கும் அவர்களுக்கு ஒரு பைசா பிரயோஜனமும் இல்லை. எனக்கு நேரடியாகப் போய் அவர்களுடைய முகத்தில் காறி உமிழலாமா எனத்தான் பட்டது. திராவிடர்களுக்கு எடுபிடிவேலை செய்து அவர்களுடைய தேர்தல்களுக்காக ஆதிதிராவிடன் மானம்கெட்டு உதவுவான். அவர்களுக்காக உதை வாங்குவான். அவர்களிடமே உதையும் படுவான். அப்படி உதைபடுவதையும் ஆதரிப்பான். அவனுக்குக் கீழே இருப்பவனை ஒடுக்குவான். அரசியலில் குவியமும், பொதுவாழ்வில் நேர்மையும், வளையாத முதுகெலும்பும், சரியான வரலாற்றறிவும் இல்லாத ஒருவன் எப்படித் தன்னை தலித் என அழைத்துக்கொள்ளமுடியும்?

எனக்கு ப்ரேண்ட்ஸ் ஃபேனனின் ‘கறுப்புத் தோல், வெள்ளை முகமூடி‘ புத்தகம்தான் நினைவுக்கு வருகிறது.
screenshot-from-2017-02-23-232429

(வெ.ராமசாமி குறிப்பு: இது என்னுடைய புத்தகப் பிரதி; இந்த நண்பருக்கு இதனைக் கடன்கொடுத்து, பின் நச்சரித்துத் திரும்பப் பிடுங்கிக்கொண்டும் விட்டேன். :-) என் நூலகத்தில் இப்புத்தகம் பத்திரமாக இருக்கிறது, இப்போது! எவரையும் நம்ப முடியாது இந்தக் காலத்தில்! ;-) எவ்வளவு புத்தகங்களைத் தொலைத்திருக்கிறேன் இப்படி!)

 

அடாவடியும் செய்துவிட்டு இப்படி அறப்போராட்டமும் செய்கிறார்கள். இந்த அழகில் இந்த அயோக்கியர்களுடன் ஒன்றிரண்டு காங்கிரஸ் கோமாளிகள் வேறு!

ஒரு முகத்திலாவது ஏதாவது படித்தகளையோ, அமைதியோ இருந்ததா? எல்லாம் குடிகாரன்கள். பலருக்குக் கழுத்தேயில்லை. இருந்தாலும் தங்கச் செய்ன் போட்டுக்கொண்டு மினுக்கல். எவரிடமிருந்து திருடினார்களோ?

இவர்கள் ஷாமியானாவில் வசதியாக உட்காரவைக்கப்பட்டு மினுக்கவில்லையானால் நேரடிக் கொள்ளையில் ஈடுபடுவார்கள்; இல்லாவிட்டால் ஊர்மேய்ந்து பிரச்சினை செய்வார்கள்; இவர்களுடைய கும்பல் சேர்ந்தால், கல்லெறிவார்கள். தெருவில் போகிறவருகிற பெண்களை வன்புணர்ச்சி செய்துவிடுவார்கள். அராஜகப் பொறுக்கிக்கூட்டம். அதற்கு இந்த ஷாமியானா அறப்போராட்ட நாடகம் பரவாயில்லை.

நல்ல தள்ளுவண்டித் தலைவர், நல்ல செயல் தலைவர்! திமுக இளைஞர் அணியின் தலைவர் ஸ்டாலினுக்கு 66வயது மட்டுமே எனக் கிண்டல் செய்தாய். ஆனால் இன்னொரு விஷயம் தெரியுமா உனக்கு? திமுக மாணவர் அணித் தலைவருக்கு 62 வயது. நல்ல சரியான மாணவனையும் இளைஞனையும் தான் பிடித்துத் தலைவர்களாகப் போட்டிருக்கிறார்கள்! ஒருவிதத்திலும் தகுதி இல்லாமை என்பதுதான் திராவிடத் தலைமையின் முக்கியமான தகுதி. எனக்கு விதி மேல் தீராத நம்பிக்கை வந்துவிட்டது. நீ சொன்னது போல – காமராஜையும் கக்கனையும் ஓமாந்தூராரையும் தோற்கடித்த பாவம்தான் நம்மை இந்த ஆட்டு ஆட்டுகிறது. சாத்தான்கள்.
 

குளிர்காலம் கோடைக்காலம் எனக்கூடப் பார்க்காமல் மக்களிடமிருந்து திருடிய பணத்தில் குளிரூட்டப்பட்ட அறைகளிலேயே இருந்து பழக்கப்பட்டவர்கள்தாம்  இந்த ‘உண்ணாவிரதம்’ இருந்தவர்கள் – ஏனெனில் உஸ் உஸ் என உஸ்ஸுக்கொட்டிக்கொண்டேயிருந்தார்கள், மக்கள் தொண்டர்கள், பாட்டாளிகள்! இத்தனைக்கும் பெடெஸ்டெல் மின்விசிறிகளும் ஏர்கூலர்களும் ஓடியமணியம் இருந்தன. சொகுசு உண்ணாவிரதம் என்று இதனைச் சொல்லலாமா?

மேடையில் இரண்டுமூன்று இளம்பிள்ளைகளும் இருந்தார்கள். சோகம். இன்னுமா இவர்களுக்கு திமுக பற்றிப் புரியவில்லை?  இல்லை, அப்பன் திராவிடத்தனமாகத் திருடிய சொத்துக்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக மேலும் வளர்த்துக்கொள்வதற்காக காரியார்த்தமாகக் கட்சியில் இருக்கிறார்களா இந்த இளவல்கள்?

இதில் சிலர் கால்சராய் – ஆனால் அங்கவஸ்திரம் போல ஒரு துண்டை மேலே போட்டுக்கொண்டிருந்தார்கள் – கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டுபோக வசதியாக இருக்குமென்றோ?

கூட்டம் நிறைய. அதுவும் எங்கள் ஊர் திருவிழாக்களுக்குப் பழக்கப்பட்டது. கோவில் பார்க்க வந்தவர்கள், பராக்கிரமம் மிக்க கோமாளிகளையும் பார்க்க ஆசைப்பட்டிருக்கலாம்.

டொம்பங் கூத்தாடிகளைப் பார்த்து இறும்பூதடையவும் மிருகக்காட்சிசாலைகளில் வினோத ஜந்துக்களை பார்த்து ஆச்சரியப் படவும் கூட்டம் திரள்வதில் என்ன ஆச்சரியம். எனக்குப் பக்கத்தில் நின்றிருந்த கோவில்பூக்கார அம்மா சொன்னர் – “உண்ணாவெரதம் இருக்கற மூஞ்சப் பாரு!” எனக்குச் சிரிப்புத் தாளவில்லை.

உண்ணாவிரதமிஸ்ட் ஒருவருக்கும்கூட தம் கோமாளித்தனத்தைப் பற்றிய பிரக்ஞையேயில்லை. ரொம்ப ஸீரியஸ்ஸாக முகத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள். இறுக்கம். அல்லது இரவு உணவு என்ன சாப்பிடுவது என யோசித்துக்கொண்டும் இருந்திருக்கலாம். அல்லது ஷாமியானா உட்காரலினால் இன்றைய கலெக் ஷன் போச்சே எனும் பிழியவைக்கும் சோகமாகவும் இருக்கலாம்.

திராவிடனுக்குச் ‘சாப்பிடாமல்’ இருக்கவே முடியாதே! தனிச்சுற்று முறையில் கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு கமுக்கமாகச் சாப்பிட்டுவிட்டுவந்து பின்னர் உண்ணாவிரதத்தைத்  தொடர்வார்களோ?

பலருக்குப் பொழுதுபோகவில்லை – சிலர் தினசரிகளைப் படித்தார்கள், பலர் கொறட்டை. கட்சிப் பணி அய்யா, கட்சிப்பணி. யாரை ஏமாற்றுகிறார்கள் இந்த அயோக்கியர்கள்?

யார் உன்னுடைய அந்த எஸ்கேபி கருணா எனத் தெரியவில்லை; எனக்கு அவர் தந்தையைத்தான் அடையாளம் தெரியும். விசாரித்தவர்களுக்கும் தெரியவில்லை. அவர் வரவில்லையென்றால் திராவிடக் கொள்ளைவளையத்தை விட்டு, திருட்டு சொத்துகளை அனுபவிப்பதைத் தவிர்த்து,  திராவிட நாடகமாடும் திமுக பாணியை விட்டுவிட்டார் எனச் சொல்லலாமோ? இவர் எப்படி உனக்கு அறிமுகமானார்?

 (வெ. ராமசாமி குறிப்பு: ஐயா நண்பரே, அறிமுகமுமில்லை நரிமுகமுமில்லை. எனக்கு இந்த எஸ்கேபிகருணா என ஒருவர் இருப்பதே அண்மையில் தான் தெரியும்; முதலில் பெயரை மட்டும் பார்த்துவிட்டு இவரை ஒரு ஒரு பெண் எனவே நினைத்தேன். நினைவில் இருக்கிறாரா நம் உமா கருணா தர்மன்? கில்பில்?? :-) ஆக, இவர் நண்பர்கிண்பரென்றெல்லாம் இல்லை. ஆனால், முன்னமே எப்போதோ ஒருமுறை இதே அல்லது இதேபோன்ற பெயரை இப்படி EsCaPee எனக் கிண்டல் செய்திருக்கிறேனோ? நினைவில்லை! ஆனால், திராவிடத் திராபைக் கட்சிகளிலும் எனக்கு சிலபல நண்பர்கள் இருக்கிறார்கள் –  அவர்களில் சிலர், ‘திராவிட எதிர்ப் பக்கங்கள்’ ரசிகர்கள் கூட!)

ஃபோன் கொண்டுபோக மறந்துவிட்டேன். மன்னிக்கவும். ஆகவே படமெடுக்கவில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களின் ஏதாவது  உடன்பிறப்புக்கழுதை அவசியம் இது குறித்த பெருமைப் படங்களை பீற்றிக்கொண்டு ஷேர் செய்திருக்கும். போய்ப் பார்த்துக்கொள்!

(வெ.ராமசாமி குறிப்பு: அய்யோ! நான் திருவண்ணாமலை அறப்போராட்டப் படங்களுக்கு இப்போது எங்கே போவேன்! உன்னை நம்பினேன், என்னை நட்டாற்றில் விட்டுவிட்டாயே, பாவி!)
 

இன்னொரு தடவை என்னை இப்படி அலைய விடாதே! இவர்களைப் பார்த்து எனக்கு வெறுப்பு வந்து, வாழ்க்கையின் மீது நம்பிக்கையே போய்விட்டது.

எப்படிப்பட்ட ஆட்கள் இவர்கள்! இவர்களா அடுத்தமுறை நம்மை ஆளப்போகிறார்கள்? என்ன செய்யலாம்? அடுத்த தேர்தலில் மறுபடியும் வேலை செய்யலாமா? வருகிறாயா?

(வெ. ராமசாமி குறிப்பு: நண்பரே, கண்டிப்பாக!)

-0-0-0-0-0-0-0-

இவரை, நேரடியாகத் தமிழில் எழுதக் கோரியிருக்கிறேன். பிரச்சினையென்னவென்றால், தமிழில் எழுதி அதிகம் பழக்கமில்லை அவருக்கு. பார்க்கலாம். அவர் எழுதினால் (அது என்னையே கண்டபடி கிண்டல் செய்தோ அல்லது திட்டியோ இருந்தாலும்கூட) அதனைக் கண்டிப்பாகப் பிரசுரிக்கிறேன்.

பார்க்கலாம், நம் அண்டம் எப்படி விரிகிறதென்று! நன்றி.

9 Responses to “திருவண்ணாமலையில் புதிய மிருகக்காட்சிசாலை!”

 1. g s lenin Says:

  Sir, I’m really proud of you. Charu Nivedita always tells this is ‘philistine’ society. You confirmed it through your friend. I’m 31yr old youngster (may be :-)) & these information helps me to understand the political parties in a clear way. Thanks a lot for telling truth openly.

 2. Anonymous Says:

  😂😂


  • இன்னுமொன்று: உண்மையை மிக்க நகைச்சுவையுடன் கூறிவிட்டார் இந்த இளம் எஸ்கேபி கருணா அவர்கள்! :-))

   “சிறையிலிருந்தே நடப்படும் பினாமி ஆட்சியைக் கண்டித்து திமுக ஒருங்கிணைத்து நடத்தும் உண்ணவிரதம் அறப்போராட்டத்தில்..,”

   அதாவது உண்ணவிரதம் = பிற்காலத்தில் அமோகமாக உண்பதற்காக நடக்கும் விரதம். அதாவது, திராவிடர்கள் சாப்பிடத்தான் விரதம் இருப்பார்களே ஒழிய சாப்பிடாமல் இருக்கமாட்டார்கள்! :-)

   இப்படி ஒரு மாபெரும் தன்னிலை வாக்குமூலமா! மாபெரும் சிரிப்புத்தான் வருகுதய்யா!

   மாபெரும் நன்றி,

   மாபெரும் ராமசாமி. ;-)


 3. ஆ! நீங்கள் யார் புதிதாகச் செந்தில்நாதன்? என் திருவண்ணாமலை நண்பரில்லையே நீங்கள்! :-)

  உடனே பிடித்து விட்டீர்களே இந்த எழவெடுத்த மினுக்கல் புகைப்படங்களை! நன்றி! நன்றீ!! ணண்றீ!!!

  மாபெரும் உண்ணாவிரதம் என்றா போட்டிருக்கிறார்கள், பின்பக்கத்திலுள்ள வெட்டித்தட்டியில்?

  அதாவது, மாபெரும் உணவு அல்ல, ஆனால் கொஞ்சமாக ஏதாவது கொறித்துக்கொள்கிறோம் பரவாயில்லையா என்கிறார்களா? இந்த டிவிட்டர் பிரபுதாம் அந்தக் கருணாவா, பாவம்.

  கொஞ்சம் வருடங்களுக்கு முன் இதே ஊரில் சீரழிந்தது – ஒரு மாபெரும் மாணவர் மன்றம். (மகாமகோ குண்டோதிகுண்டு மாணவர் மன்றம்: சில குறிப்புகள்
  16/09/2015 — https://othisaivu.wordpress.com/2015/09/16/post-553/)

  இப்போது இன்னொரு மாபெரும். போங்கடா போக்கத்த மாபெரும் கூவான்களா! நீங்களும் உங்களோட அற்ப மாபெரும் உண்ணாவிரதமும். மாபெரும் சிரிப்புசிரிப்பாக வருகிறது, மாபெரும் ஃராடானா மாபெரும் திமுக மாபெரும் கோமாளிக் கொள்ளையர்களின் மாபெரும் கூடாரம்தான்!

  மாபெரும் திருவண்ணாமலை மாபெரும் சக்கைப்போடு மாபெரும் போடுகிறது.

  மாபெரும் இப்படிக்கு:

  மாபெரும் ராமசாமி.

 4. Aekaanthan Says:

  வெள்ளைச்சட்டைகளின் கறுப்புக் காரியங்களுக்கு இத்தகைய ரன்னிங் காமெண்ட்ரி தேவைதானா? வேறு செய்வதற்கு ஒன்றும் இல்லையா!

 5. selvarajan Says:

  அய்யா … ! // ரொம்ப ஸீரியஸ்ஸாக முகத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள். இறுக்கம். அல்லது இரவு உணவு என்ன சாப்பிடுவது என யோசித்துக்கொண்டும் இருந்திருக்கலாம். அல்லது ஷாமியானா உட்காரலினால் இன்றைய கலெக் ஷன் போச்சே எனும் பிழியவைக்கும் சோகமாகவும் இருக்கலாம் .// முக்கியமான ஒன்றை மிஸ் பண்ணிட்டிங்களே — ” கட்டிங் ” சமாசாரத்தை — பேஸ்து அடித்து இறுக்கமானதின் காரணமே அது தானே ….

  எப்போதுமே … நைனா காலந்தொட்டு இவர்களின் ” உண்ணா விரத நாடகமே ” ஒரு காமெடி செக்க்ஷன் தானே … இரண்டு அ . தி.மு. க — வும் அமைதியா இருந்தபோதும் — — எப்படியாவது பெட்டி வைத்து வாக்குமுறை நடைபெற்றால் ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் அதிகமாகி — இவர்களது ஆதரவும் சேர்ந்து — ஆட்சி அமைக்கும் உரிமை கிடைத்தால் ” ஒரு மைனாரிட்டி அரசாக ” புதல்வர் முதல்வர் நாற்காலியில் குந்திக்கலாம் என்ற கனவு வீணானதில் ஏற்பட்ட வெறுப்பு …

  சட்டசபை அமளியாக அரங்கேற்றி — சட்டமன்ற தலைவரை அவமானப்படுத்தி விட்டு — அதை மறைக்க என்னென்னவோ சப்பைக்கட்டு சமாசாரங்களை கையில் எடுத்து காட்டுகிற வித்தையில் ” இந்த அற.? போராட்டம் ” ஒரு நம்மை சிரிப்புமூட்ட நடத்திய காட்சி என்பதை தவிர வேறு என்ன … ? இனி ” நமக்கு நாமே ” என்று நமக்கு காட்ட ஏகப்பட்ட அவதாரங்கள் வரும் … அப்படித்தானே … ?


 6. […] படித்த அதே திருவண்ணாமலை பக்க பழைய மாஜி-விடுதலைச் சிறுத்தை நண்பருடன் நேற்றைய முன்தின இரவு, பொதுவாகப் […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s