ஆனால்… புறநானூற்றுக் காலத்தில் ஆனை கட்டிப் போரடித்த தமிழனுக்கு, மொழிப்போர் இனப்போர் தன்மானப்போர் சுயமரியாதைப்போர் ஈழப்போர் அக்கப்போர் எனப் போர்பல கண்ட மரத்தமிழனுக்கு, நீளநீள மெகாமகோ தொலைக்காட்சி ஸீரியல்களையும் வைத்து தொழில் நுட்ப ரீதியாகவும் தொடர்ந்து போரடிக்கும் தமிழனுக்கு – இந்தப் போர் எம்மாத்திரம்! ஹ்.

Read the rest of this entry »

மன்னிக்கவும். கருணாநிதி அவர்கள் 1960களிலேயே உலகம் போற்றும் கடற்புல உயிரியல் ஆராய்ச்சியாளராக இருந்திருக்கிறார்! மிக முக்கியமாக, கடற்சார் பாலூட்டி உயிரினங்களைப் பற்றி அசத்தவைக்கும் அதியுன்னத அகழ்வாராய்ச்சிகளைச் செய்து நம் செல்ல திராவிட இனமானத்தை விண்ணோக்கிச் செலுத்தியிருக்கிறார்! சுயமரியாதையைச் சூடுபறக்கப் பரப்பியிருக்கிறார்!! பகுத்தறிவைத் தொகுத்தளித்திருக்கிறார்!!! இதற்காகவே இவருக்கு ஆருடத்துக்கான 2017 நொபெல் பரிசு கொடுக்கப்படவிருக்கிறது என்பதைத் தரணி அறியும்! ஆனால், கேடுகெட்ட நமக்குத்தான் இவருடைய மேதமையைச் சரியாக மதிக்கத் தெரியவில்லை. ஹ்ம்ம்… Read the rest of this entry »

#1. திராவிட இயக்கத் தோழர்கள் ஒருவரிடம் கூட, ஈவெரா அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
#2. ஈவெரா அவர்களைக் சுற்றி இருந்த பல திராவிட இயக்கத் தோழர்கள், களவாணிகள்.

Read the rest of this entry »

பேராசிரியர் + வரலாற்றாளர் + மொழிபெயர்ப்பாளர் + ‘த மண்டு’ தினசரியின் ஆஸ்தான அறிவுஜீவிகளில் ஒருவர் + ஆ + அய்யய்யோ புகழ் — ஆஇரா வேங்கடாசலபதி அவர்களுடைய வீரதீரப் பராக்கிரமங்களை ஏகத்துக்கும் ‘புகழ்கிற’ சந்தடி சாக்கில், அவருடைய ‘த மண்டு’ தினசரிக் கட்டுரைகளைச் சிலாகிக்கிற போதெல்லாம் — அவர் பணி(!) புரிந்துகொண்டிருக்கும் MIDS நிறுவனத்தையும், நான் என்னவோ தேவையேயில்லாமல் ‘புகழ்கிறேன்’ என என் கிழட்டு நண்பர் ஒருவர் (80+) பிலாக்கணம் வைத்திருக்கிறார் – மேலும் கெட்டவார்த்தைகளை அளவுக்கதிகமாக உபயோகிக்கிறேன் ;-) என்றும் அபாண்டமாகப் பொய் சொல்கிறார்.

கிழவனாரின் அபாண்டத்தைக் கடாசிவிட்டு – பாதிக் கிழக்கோட்டானாகிய நானும் அவருடைய குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நம் பேராசிரியச் சலபதியாரின் அதிஅற்புதத் திறமைக்கு, அவர் பணிபுரியுமிடம்  MIDS எப்படி ஜவாப்தாரியாக முடியும், ஹ்ம்ம்? Read the rest of this entry »

பேலியோ டயட் மஹாத்மியம் குறித்த என் கடவுள் வாழ்த்துகளைப் (ஒன்று, இரண்டு) பற்றி நண்பர் வெங்கடேசன் ஒரு பின்னூட்டமிட்டிருந்தார்:

கடவுள் வாழ்த்து எல்லாம் நல்லா இருக்கு சார். மெயின் மேட்டருக்கு வாங்க. ஏன் பேலியோ உடல் நலத்திற்கு கேடுன்னு சொல்றீங்க? அறிவியல் தரவுகளோடு எழுதுங்க சார்.

Read the rest of this entry »

இந்தப் பேலியோ ‘மேல்மாடி காலி’களின் அலப்பரையும் வெறியும் தாங்கவேமுடியாமல் போய்க்கொண்டிருக்கிறது!

“திருப்பூரில் உணவு இல்லன்னா கல்யாணத்தில் சாப்பிடமட்டோம்னு 1000 பேர் சொன்னதால் திருமணவிருந்தில் பேலியோ உனவு பரிமாறப்பட்டது”

Read the rest of this entry »

பொதுவாகவே, நம் தங்கத் தமிழ் நாட்டில், திராவிடத்தின் ‘வீறு’ குறித்த பிரமைகள் அதிகம்.

Read the rest of this entry »

நேர்கோணல் மூலமாகப் பெறப்பட்ட அய்யா திருமாவளவன் அவர்களுடைய கருத்துகள் சிலவற்றை  ‘கழித்துக்கட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள் காட்டுவது போகாத ஊருக்கு வழி’ (=‘Demonetisation is a road to nowhere’) என்ற தலைப்பில், என்னுடைய பிரத்தியேகச் செல்லமான ‘த மண்டு’ பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.

Read the rest of this entry »

புரட்சிகர பென்ஸில் ஃபேக்டரி அவர்கள், போய்ச் சேர்ந்துவிட்டார். அவரது உடல், அவர் விருப்பப்படியே, செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரிக்கு தானம் செய்யப்படும் என்பதை ‘த மண்டு‘ தினசரி மூலம் இன்று அறிந்துகொண்டேன். ஒர்ரே அந்தக்கால நினைவுகள்…

screenshot-from-2016-12-03-083749 Read the rest of this entry »