நல்லதங்காள் 2.0: ஒருமாதிரி ஜென்-ஸீக்களுக்காகவென ஆரம்பித்து வழக்கமான பாணியில் போஸ்ட்-மாடர்ன் கதை சொல்லல்
August 5, 2026
இதனை, கிணற்றின் விளிம்பில் ஒரு deconstruction எனவொரு மாதிரியாகவும் புரிந்து கொல்லலாம்.
ஒரு காலத்தில், அதாவது Wi-Fi கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பும், ப்ளெட்டி குடும்ப WhatsApp குழுக்கள் தோன்றுவதற்கு முன்பும், நல்லதங்காள் என்ற பெண் வாழ்ந்தாள். அவளுடைய வாழ்க்கையைப் பற்றிய எல்லா முடிவுகளையும் அவளைத் தவிர மற்றவர்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். இதுதான் அந்தக் காலத்தின் ‘குடும்ப விழுமியங்கள்’. என்ன wtf. இது அப்பட்டமான patriarchy. அவ்ளோதான் கதை.
-0-0-0-0-0-
நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள். ‘Family planning என்பது மேற்கத்திய சதி’ என்று அக்கால சமூகமே முடிவு செய்திருக்க வேண்டும். கணவன் காசிராஜன். குடிகாரன். டாஸ்மாக்கில் செந்தில்பாலாஜிக்குக் கப்பம் கட்டவே அவனுக்கு நேரம் போதவில்லை. எப்படியும், திருட்டுத் திராவிட அரசுகள் கொடுத்த பிச்சை ‘உரிமைத் தொகை’ களை அப்படியே திருப்பி டாஸ்மாக் கடைகளுக்கே கொடுத்துக்கொண்டிருந்த குடிமகன் தான் அவன்.
காசிராஜன் பெயரில் ராஜா இருந்தாலும் வீட்டில் காசே இல்லை, cause இல்லையென்றால் பின்னர் எப்படி எஃபெக்ட் வரும்? ரேஷன் கடை புழுத்த அரிசிகூட வீட்டில் இல்லை. வறட்சி வந்தது.
வழக்கம்போல ‘ஏ திமிர் பிடித்த கர்நாடகாவே! காவிரி நீரைத் திறந்து விடு’ எனச் சொல்ல முடியாது. ஏனெனில் அது வைகைக் கறை படிந்த நிலம். தமிழகத்தின் தென்னகம்.
நீரில்லை. வயலில் பயிர் இல்லை. வீட்டில் உணவு இல்லை. ஆனால் ஊர்ப் பெரியவர்கள் ஆலோசனை மட்டும் டன் கணக்கில் வைத்திருந்தார்கள். கேட்டால் வாட்ஸ்அப் ஃபார்வர்ட் என்றார்கள். இருந்தாலும், நாங்க பேக்வர்ட் எங்களை வறட்சிப் படுத்திவிட்டார்கள் வந்தேறி ஆரியர் என்றார்கள். பெரிசுங்கன்னாலே தொல்லைதான்.
“பெண் என்றால் பொறுமையாக இருக்க வேண்டும்.” – ஆனா அதே சமயம் – ராணிமங்கம்மா அல்லிராணி வேலு நாச்சியார் எனப் புல்லரித்துக் கொள்வார்கள், ப்ளடி.
“குடும்ப மானம் காக்க வேண்டும்.” – அதே சமயம் குடித்துவிட்டு வந்து சொந்த மகளையே ரேப் செய்வார்கள்…
“கஷ்டம் வந்தால் கடவுளை நினைக்க வேண்டும்.” – ஆனா கஷ்டம் என் மூலமா வந்தா பேசாம மூடிக்கினு போய்டணும், கேட்டியா?
அரிசி கேட்டால் அப்ஸ்ட்ராக்ட் தத்துவம் இலவசமாகக் கிடைத்தது. வெளங்கிடும்.
ஒருநாள் நல்லதங்காள் தன் அண்ணன் நல்லண்ணன் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்தாள். ‘Blood is thicker than water’ என்ற பழமொழியை நம்பினாள். ஆனால் அந்தப் பழமொழிக்கு கீழே சிறிய எழுத்தில் ‘Terms and conditions apply. Sister-in-law approval mandatory’ என்று இருந்ததை அவள் கவனிக்கவில்லை. அண்ணி நல்லதங்காளை கெட்டநாத்தியாக நினைத்தாள்; ஏனெனில், அவள் கூகில் ட்ரான்ஸ்லேஷன் சரியில்லை.
எது எப்படியோ. வேறுவழியில்லாத நல்லதங்காள், ஏழு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு காசிராஜன் சகவாசமே வேண்டாம் என வெளி நடப்பு செய்தாள். குழந்தைகள் வழியில் தொடர்ந்து கேட்டனர்:
“அம்மா, இன்னும் எவ்வளவு டிஸ்டென்ஸ்?”
“பொட்டிக் கடேல குர்குரே பாக்கெட் வாங்கிக் கொடுக்கறியா?”
“அம்மா, அடுத்த மீல்ஸ் எங்க? எவ்ளோ நேரம் நான் மீம்ஸ் பாத்துக்கிட்டு இருக்கறது?”
“அம்மா, hotspot இருக்கா? டவரே கெடக்க மாட்டேங்குதே!”
கடைசி இரண்டு கேள்விகளை யார் கேட்டார்கள் என்பது வரலாற்றுக் கதையாடல் பிரச்சினை. சில ஆய்வாளர்கள் அது பின்னாளில் சேர்க்கப்பட்ட இடைச்செருகல் என்கிறார்கள். பல தமிழ்தேசியப் பேராசிரியர்கள், ஏன் அந்தக் காலத்திலேயே எங்கள் செந்தமிழ் முப்பாட்டனார்கள் இண்டெர்னெட் மொபைல் ஃபோன் கண்டுபிடித்திருக்க மாட்டார்களா எனக் கேட்டார்கள். “உலகத்துக்கே இரும்பைக் கண்டுபிடித்துச் சொன்னவர்கள் எங்கள் லெமூரியர்கள்தாமே?”
நல்லண்ணன் அப்போது வீட்டில் இல்லை. அவனுடைய மனைவி மூளியலங்காரி இருந்தாள். பழைய கதையில் அவள் ‘கொடூர அண்ணி.’ நம்முடைய புதிய critical edition-ல் அவள் patriarchy-யின் middle-management அதிகாரி. வீட்டின் உணவு, கதவு, சமையலறை, குடும்ப மரியாதை ஆகிய சிறு அதிகாரங்கள் மட்டுமே அவளிடம் இருந்தன. அவற்றை அவள் முழு தீவிரத்துடன் பயன்படுத்தினாள்.
ஏனெனில் மேலிருந்து ஒடுக்கப்பட்டவர் கீழே ஒருவரைக் கண்டால், hierarchy தன்னை reproduce செய்துகொள்ளும்.
“எதற்காக வந்தாய்?” என்றாள் மூளியலங்காரி.
நல்லதங்காள்: “குழந்தைகள் பசித்திருக்கிறார்கள்.”
“அதற்காக இங்கேயா வருவாய்? குடும்பத்தோடு வந்திருக்கிறாயே! முன்பே calendar invite அனுப்பியிருக்கலாமே?”
“நான் கூக்ல் calendar உபயோகிப்பது இல்லை, .”
“குறைந்த பட்சம் ஒரு வாட்ஸ்அப் மெஸ்ஸேஜ்?”
“என் ஃபோன்ல சார்ஜே இல்லை! நல்லண்ணன் தான் நல்லெண்ணத்தோட டாப்-அப் செஞ்சி கொடுக்கறேன்னான்…”
“அதுதான் பிரச்சினை. திட்டமிடல் இல்லை. Financial literacy இல்லை. இப்போது emotional blackmail. தேவையா? உன்னோட எக்ஸ்பெக்டேஷனுக்கும் ஒரு எல்லை வேண்டாமா?”
இதைச் சொல்லிக்கொண்டே மூளியலங்காரி தன் LinkedIn-ல் “boundaries are part of self-care” என்று சாட்ஜிபிடி உதவியுடன் பதிவிட்டாள். பதிலுக்கு நிறைய லிங்க்ட்இன்ன ஆண்கள் DM செய்து “ஏன், நாங்களும் உனக்கு உதவி செய்ய முடியுமே! பக்கத்து கஃபேகாஃபிடேயில் ஆரம்பிக்கலாமா? உன் முகம் அழகாக இருக்கிறது… உன் கட்டுரை அதை விட…”
…மூளியலங்காரி, நல்லதங்காளுக்கு உடைந்த பாத்திரத்தில் பழைய அழுகிய ஜவ்வரிசி மாவைத் தந்தாள். அடுப்புக்கு ஈர விறகு. சமைக்க துளையுள்ள பானை. பின்னர், “வாய்ப்பு கொடுத்தேன்; பயன்படுத்தத் தெரியவில்லை” என்றாள். இது சமகால நிறுவனங்களில் PIP performance improvement plan என்று அழைக்கப்படுகிறது.
குழந்தைகள் அழுதனர், அவர்களுக்கு வேற என்ன வேலை.
நல்லதங்காள் மௌனமாக இருந்தாள். ஏனெனில் ஜென்ஸீ கதையாசிரியர்கள் துன்புறும் பெண்களுக்கு நீண்ட உரையாடல் எழுத மாட்டார்கள். அவர்கள் கண்ணீர், கற்பு, தியாகம் ஆகிய மூன்று reaction emojis மட்டுமே வழங்குவார்கள். உங்களுக்கு எந்த இமோஜி தேவையோ இட்டுக் கொள்ளவும்.
சரி. இப்போது நல்லதங்காள் வெளியேறினாள். ஏனெனில், முன்னதாக மூளியலங்காரி கதவடைப்பு செய்திருந்தாள்.
இங்கே narrator (நான் தான்!) திடீரென்று கதையை நிறுத்துகிறான்.
Narrator: “டேய் வாசகா! அடுத்ததாக நீ எதிர்பார்ப்பது கிணறு.” (வாசகிக்கு இதனைப் பெண்படுத்திக்கொள்ளவும்)
வாசகர்: “ஆம். எனக்கும் Original plot தெரியும். இப்பதான் ஜெமினியில் கேட்டேன். ஆனால் அந்த ஸ்டூடியோவ எப்பவோ இழுத்து மூடிட்டாங்களாம்!”
நல்லதங்காள்: “ஒரு நிமிடம்! என் வாழ்க்கையை ஏன் எல்லோரும் spoiler-alert பண்ணுகிறீர்கள்?”
களிம்பு தடவிக் கொள்ளாமல் விளிம்பு நிலையில் இருந்த அவள் கதையின் ஓரத்திலிருந்து வெளியே வந்து ஆசிரியரிடம் கேட்டாள்:
“எனக்கு வேறு option இருக்கறாமாறீ எழுதவே முடியாதா?”
ஆசிரியர் பதற்றமடைந்தார். (இவரும் அதே நர்ரேட்டர் தான்!)
“இது புகழ்பெற்ற சோகக் கதை. நீ கிணற்றில் குதிக்காவிட்டால் cultural authenticity போய்விடும். அந்த்ரொபாலஜி பத்தி ராஜன்குறை கிருஷ்ணன் ரோஸா வஸந்தெல்லாம் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?”
நல்லதங்காள்: “என் குழந்தைகள் இறந்தால்தான் உங்கள் culture authentic ஆகுமா?”
“அது தாய்மையின் உச்சம். அதைத்தான் எங்களுக்கு மிஷெல் ஃபூக்கோ சொல்லிக் கொடுத்திருக்கிறார்… ஜெயுமோகன் கூட இது குறித்து ஒரு சுயமுன்னேற்றப் பதிவு போட்டிருக்கார்!”
“ஜெயமோகனோட எல்லா பதிவும் சுயமுன்னேற்றம் பத்திதான்… எனக்கு அதுதான் இப்ப ரொம்ப தேவையா?”
“அப்ப சாரு நிவேதிதா? எஸ் ராமகிருஷ்ணன்?? இவங்க சொன்னா பரவாயில்லயா?”
“கண்ட கழுதெங்க பத்தி பேச நான் இங்க வரல… சாப்பாடு கொடுக்காத சமூகம் குற்றமற்றது; ஆனால் – குழந்தைகளோடு இறந்த பெண் தெய்வமா?”
Critical theory அங்கே background music போல ஒலித்தது.
நல்லதங்காள் கிணற்றின் அருகில் நின்றாள். குழந்தைகளைப் பார்த்தாள். கிணற்றைப் பார்த்தாள். பின்னர் camera-வைப் பார்த்தாள். சமூக சாட்சியமாக ஒரு கடைசி ஸெல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது.
“இந்தக் கிணறு வெறும் கிணறு அல்ல. இது feudal patriarchy-யின் narrative apparatus. குடும்பம் என்னை வெளியே தள்ளியது. சமூகம் உதவி செய்யவில்லை. ஆனால் climax-ல் என் தனிப்பட்ட முடிவையே moral lesson ஆக்கப் போகிறார்கள்.”
மூத்த குழந்தை கேட்டது:
“அம்மா, அப்படின்னா, நாம என்ன செய்யப் போறோம்?”
“கிணற்றை deconstruct செய்யப் போகிறோம்.”
அவர்கள் கிணற்றுக்குள் குதிக்கவில்லை. அதற்கு முன் ஒரு selfie எடுத்தனர்.
Caption: “All is well, that ends in a well.”
இன்ஸ்டாவுக்காக ஒரு ரீலும் போட்டனர். விஜய் படப்பாட்டு மெட்டு ஒன்றின் பின்புலத்தில் குடும்பத்தோடு குத்தாட்டம்.
பின்னர் நல்லதங்காள் அருகிலிருந்த திராவிட அபலைப் பெண்களைச் சேர்த்தாள். விதவைகள், பசியால் தவித்தவர்கள், வீட்டிலிருந்து விரட்டப்பட்டவர்கள், குடிகாரர்களால் உதைத்துத் துரத்தப் பட்டவர்கள். வீச்சரிவாளால் வெட்டப் பட்டவர்கள், குடிகார சொந்தத் தகப்பன்/சகோதரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டவர்கள், அநாதையாக விடப்பட்ட இரண்டாம்/மூன்றாம் தாரப் பெண்டாட்டிகள். திராவிட இளைஞர்களால் விரட்டப் பட்ட தாய்மார்கள்…
அவர்கள் “நல்லதங்காள் பரஸ்பர உதவி சங்கம்” என ஒரு Selfie Help Group தொடங்கினர்.
முதல் தீர்மானம் போட்டனர்:
“தற்கொலைக்குத் தள்ளும் கதைகளை பக்திப் பாடலாக்கவோ நாட்டார் கதையாக்கவோ கூடாது.”
இந்த இயக்கம் viral ஆனது. #JusticeForNallathangal, #SevenKidsSevenRights, #OpenTheGranary ஆகிய hashtags, trend ஆயின.
நல்லண்ணன் திரும்பிவந்தான். நடந்ததை அறிந்து வீச்சரிவாளை எடுத்தான். சாதிப் பெருமை பேசினான். அவன் திராவிடன்.
“என் மனைவியைத் தண்டிப்பேன்!”
நல்லதங்காள் கையை உயர்த்தினாள்.
“Stop. இதுதான் toxic masculinity season two. நான் உதவி கேட்டபோது நீ எங்கே இருந்தாய்? இப்போது வாள் எடுத்தால் hero ஆகி விடுவாயா? அடுத்து முதலையமச்சராகவே ஆகிவிடலாம் எனக் கனவு காண்கிறாயா?”
நல்லண்ணன் வாளை மெதுவாகக் கீழே வைத்தான். வாளாவிருந்தான். வாள்வாங்கு வாள்ந்தான், ஏனெனில் அவன் திராவிடன், தனித்தமிழ் வெறியன், ழ அவனுக்குச் சுட்டுப்போட்டாலும் வராது.
எது எப்படியோ – நல்லண்ணன் நல்லதங்காளைக் கேட்டான்: “அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?”
“முதலில் கேள். மன்னிப்பு கேள். பிறகு மறுபடியும் மன்னிப்பு கேள். அடுத்து, வீட்டிலுள்ள தானியத்தைப் பகிர். அதன் பின் unpaid care, household work பற்றி workshop attend பண்ணு. அது வரை நீ அண்ணனில்ல, நீ எனக்கு அண்ணனில்ல – அப்டிதான் மணிரத்னம் படத்துல வசனம் இருக்கும்.”
மூளியலங்காரியும் முன்வந்தாள்.
“பழி… வேண்டாம், எனக்கு வேண்டாம்… villain ஆக்கிட்டாங்க… என்னை மட்டும் villain ஆக்கிட்டாங்க. மணிரத்ன வசனம் எனக்கும்தான் தெரியும்… இந்த வீட்டில் உணவின் மீது உண்மையான உரிமை யாருக்கு இருந்தது? நான் வீட்டின் கதவை அடைத்தேன் – ஆனால் கதவை அமைத்தது யார்? ஒரு ஆணாதிக்க தச்சர் தானே? வீட்டைக் கட்டியது யார்? ஆதிக்கவெறி கொண்ட ஒரு ஆண் மேஸ்திரிதானே?”
அனைவரும் சில நொடிகள் அமைதியாக இருந்தனர். பின்னர் narrator நைஸாக மெதுவாகக் கதையை முடிக்க முயன்றான். ஏனெனில் அவன் மனைவி அவனுக்கு ultimatum கொடுத்திருந்தாள். “சும்மா கதை எழுதறேன் கட்டுரை எழுதறேன் கத்தரிக்கா நறுக்கறேன்னு கதவுடாம மொதல்ல பத்துபாத்திரம் தேய்!”
…நல்லதங்காள் தடுத்தாள்.
“இன்னும் முடிவில்லை.”
“என்ன வேண்டும்?”
“எனக்கு கோவில் வேண்டாம். பொங்கல் விழாவில் அழுது பாடும் கதை வேண்டாம். உயிரோடு இருக்கும் பெண்களுக்கு உணவு, பாதுகாப்பு, சொத்துரிமை, மனநல உதவி வேண்டும்.”
“அது climax-க்கு சற்றே policy-heavy ஆக இருக்கிறது.”
“அப்படியே எழுதுங்கள்.”
இறுதியில் நல்லதங்காள் தெய்வமாகவில்லை. Motivational speaker-ஆகவும் மாறவில்லை. நாட்டாரியல் ஆராய்ச்சி என்ற பெயரில் பாளையங்கோட்டைப் பாதிரிகளால் கழிசடை ரிஸர்ச்சும் செய்யப் படவில்லை.
மாறாக – அவள் ஊரில் பொதுச் சமையலறை, குழந்தை பராமரிப்பு மையம், பெண்களுக்கான அவசர நிதி ஆகியவற்றை உருவாக்கினாள். டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடி எரித்துச் சாம்பலாக்கினாள்.
கே அண்ணாமலை அவர் பங்குக்கு அகமகிழ்ந்து அவளுக்கு விழா எடுத்து வீ-த-லீடர்ஸ் உறுப்பினர் அட்டையை வழங்கினார். “எனக்கு அம்பது லட்சம் லீடர்ஸ் வேண்டும். ஆகவே தமிழ்நாட்டில் பெண்கள் படும் பாட்டுக்கு பாரதீயஜனதா கட்சி பொறுப்பானால், பாஜகவையும் எதிர்த்து விமர்சிப்பேன்” என்றார்.
ஆனால் – தவேக விஜய் விசிறியான நல்லதங்காள், லீடர்-உறுப்பினராக மறுத்தாள். மேலும் அவளுக்கு அட்டை என்பது ரத்தத்தை உறிஞ்சிவிடும் என முந்தா நாள் வாட்ஸ்அப் செய்தி வந்திருந்தது.
அனைவராலும் அம்போவென விடப்பட்ட கிணறு மட்டும் தனிமையில் வாடிக்கொண்டு இருந்தது. பாவம்.
சுபம்.


August 6, 2026 at 13:55
Ram Fabulous!
August 6, 2026 at 16:00
நீண்டநாள் செல்ல, நல்லதொரு கட்டுரை படித்தேன். ரசித்தேன்