பாவப்பட்ட ஜீவனான, கருத்துரிமைப் பிரகடனங்களிடும் சக வீரத்தமிழ்ப் போராளிகளால் முட்டுக்கொடுத்து நிற்கவைக்கப்படவேண்டிய பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்ட மாஜி நக்ஸலைட் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு, ஏதோ என்னாலான ஆதரவு. ஹ்ம்ம்ம்…
பெருமாள் ‘மாதொருபாகன்’ முருகன் பிரச்சினையின் மூலகாரணம் யார்? (ஒரு திடுக்கிடும் தகவல்!)
January 30, 2015
பெருமாள்முருகன் அவர்களின் பாதிநரைத்த தாடியையும் (=வெள்ளைத்தாடியொரு பாகன்?) – நெற்றியின் கவலைவரிகளையும், அவரது கையறு நிலையையும் பார்த்தால் கண்றாவியாக இருக்கிறது.
…அசப்பில், என்னை நான் எவ்வளவோமுறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு நெகிழ்ந்துகொண்டிருக்கும்போது என் பிம்பம் எனக்கு அனாதிகாலம் தொட்டு அறிவுரையை மௌனமாக காலத்தின் நீட்டிப்பில் உரக்க வழங்குவது போன்ற ஒரு உணர்ச்சி! ஒருமாதிரி ஜென் பௌத்த நிலைதான். எனக்கு நானே தன்னில்தானே அமைதியடைந்து என்னைப் பார்த்து சிரித்துக்கொள்வேன். அந்தச் சிரிப்புகள் என்னைப் பார்த்து அழும், பாவம்! என்னமோ தெரியவில்லை, இப்போது எனக்கு என் நண்பரும், பேராசானும், நகைச்சுவையுணர்ச்சி கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவேயுள்ளவருமான எஸ்ரா அவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். YesRaw! HeeHaw!!
என்னுடைய பாரதம் மஹோன்னதமானது!
January 26, 2015
இப்படிப் பெருமைப்படுவதால் நான் சிறுமைப்படுவதாக உணரவேயில்லை! ஏனெனில் நான் கருத்துவெடிகுண்டுகளைக் கண்டமேனிக்கும் வீசிக் கொண்டிருக்கும் மயக்கம் கொண்ட ஒரு கவைக்குதவாத சாய்வு நாற்காலி அறிவுஜீவிப்போராளியல்லன் – வெறும் சாமானியன் தான். மன்னிக்கவும்.
… இன்று நமது குடியரசு தினம், அமைதியாக வீட்டில் கழிந்துகொண்டிருக்கிறது. ஏதேதோ சிந்தனைகள் – ஆக, அவை தொடர்பாக அலைக்கழிக்கும் நினைவுகளும் எண்ணக்கோவைகளும்.
மாறன்கள், மாறவே மாட்டான்கள்!
January 24, 2015
மகாமகோ மாறன் சகோதரர்களின் ஊழல்கூத்து என்பது ஒரு தொடரும் சோகம்!
மத்திய தகவல்துறை/தொலைத்தொடர்புத் துறை ‘அமைச்சராக’ இருந்தபோது, படுகேவலமாகவும் படுமோசமான பிச்சைக்காரத்தனமாகவும் – தன் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்தே திருட்டு ‘ஸப்-கான்ட்ரேக்ட்’ ;-) எடுத்து தன் வீட்டிலிருந்தும் ஒரு எக்ஸ்சேஞ்ச்(!) நடத்திய மேதகு தயாநிதி மாறன் அவர்களின் கூத்துகள் அம்பலமாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்…
திராவிடத் தமிழனானவன் புண்படுவது எப்படி?
January 22, 2015
… ஆனால் அதற்கு, சோம்பேறித் தமிழனான அவன் — — பெண்-பெண்ணின்மை, ஆண்-ஆணின்மை, திருநங்கை-திருமதிநம்பி, ஜாதி-ஜாதியின்மை, மதம்-மதச்சார்பின்மை, புண்-புண்ணின்மை, சீழ்-சீழின்மை, சினிமா-உப்புமா என்றெல்லாம் விலாவாரியாக, பொதுவாக மூளை-மூளையின்மை எனக் காரணம் கொடுப்பான் என்பது ஒரு நடைமுறை உண்மை; சார்லி ஹெப்டொ கொலைகாரர்களே, அடிப்படையில் திராவிடர்களாமே! அய்யய்யோ!!
தமிழனுக்கு பண்படுதல் என்பதே புண்படுதல்தான்!
(இன்று) கொலையொன்றுமில்லை, கோவிந்தா!
January 19, 2015
மூன்று வாரங்கட்கு முன்னால் பள்ளியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு ஆள், வீச்சறிவாள் கும்பலால் துரத்தித் துரத்திக் கொலைசெய்யப்பட்டார். இது ஏதோ பழைய கணக்கு தீர்த்தலுக்காக என +1.
ஐந்தாறு நாட்களுக்கு முன்னால் எங்கள் பள்ளி வாயிலில் இருந்து 120 மீட்டர் தொலைவில் ஒரு பட்டப்பகல் வழி மறிப்புக் கொலை. இப்போது இந்தப் பக்கமும் +1. படு கோரம். ரத்தக் களறி. பதிலுக்குப் பதில் திராவிடப் புறநானூற்று வீரம்! கொலை செய்யப்பட்டவர் ஓடியிருக்கலாம், தப்பிக்கூடப் பிழைத்திருக்கலாம். ஆனால் நான்கைந்து வருடங்கள் முன் அவர் ஒரு சுயதொழில்முனைவோனாக இருந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்துக்கொண்டிருந்தபோது தற்செயலாக அவர் காலிலேயே ஒரு குண்டு விழுந்து, பாவம், ஒருகால் போய்விட்டிருந்தது. ஆகவே.
ஓரிருமாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வு இது: நண்பர் ஒருவருடன் மாமலைகளையும் (ஹரல்ட் கார்ஃபின்கெல், எர்விங் காஃப்மன்) அதலபாதாள மடுக்களையும் (ஆஇரா வேங்கடாசலபதியின் பிரமிக்கவைக்கும் ‘ஆராய்ச்சி!’, ஜேஆர்ஆர் டோல்கீனின் அலுப்பு சராசரிக் களஞ்சியமான ‘லார்ட் ஆஃப் த ரிங்ஸ்‘) பற்றியெல்லாம் சுகமாக அளவளாவிவிட்டு திரும்பி வீட்டுக்குவந்து, மாலைக்கடனெழவுகளை முடித்துவிட்டு, யார்யார் மின்னஞ்சல்களில் திட்டியிருக்கிறார்கள் எனப் பார்க்கலாம் எனக் கொஞ்சம் கணினி முன் உட்கார்ந்தால் ஒரு அதிர்ச்சி!
பார், யாருக்கெல்லாம் இந்த விருது கிடைக்கலாம் என்று புளகாங்கிதமுற்ற நண்பனின் பரவசம். “தமிழ்ஹிந்து-வில் எப்படி மெனெக்கெடுகிறார்கள் பார்!” அந்த சுட்டி எழவு இங்கேயிருக்கிறது: சாகித்ய விருது இந்த ஆண்டு யாருக்கு?
“இந்தியாவில் இப்படியொரு சமூகவியல் ஆராய்ச்சி நடக்கத்தான் கூடுமா?”
January 12, 2015
சரி. அதன் சாராம்சத்தைக் குறிப்பிடுவதற்கு முன்னால் – ஏன் இதனை அனுப்பினான் என்ற கேள்வி எனக்குள் எழும்பி என்னை அரித்ததைக் குறிப்பிடவேண்டும். “ஏண்டா, நான் இதைப் படிக்கவேண்டும்?” எனக் கேட்டதற்குப் பதில் “ஃபெர்கூஸன் நிகழ்ச்சி!” – ஒரு கருப்பன் அக்கிரமமாகத் தண்டிக்கப்பட்டமை + பின்விளைவுகள். அமெரிக்காவே பற்றியெறிகிறதே தெரியாதா, அறிவிலியே! அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிந்து, இனவாதம் நொறுங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை!”
<இங்கு, பெங்காலிபாபுவின் உணர்ச்சிகளைப் பொங்கவைக்கும், முக நரம்புகளைத் தெறிக்கவைக்கும், ரத்தத்தைச் சுண்டவைக்கும், உட்கார்ந்த இடத்திலிருந்தே முஷ்டிதூக்கிய லால்ஸலாம் (=புரட்சிகர செவ்வணக்கம்!) ஒன்றை இலவச இணைப்பாக கற்பனை செய்துகொள்ளுங்கள்!>
ஒரு வழியாகச் சென்றவாரம்தான் அதனைச் சுமார் இரண்டு மணி நேரம் செலவழித்துக் கவனமாகப் படித்தேன். இருந்தாலும், பெங்காலிபாபுவால் சுட்டப்பட்டதே? ஒவ்வொரு வரியையும் உன்னிப்பாகப் படிக்கவேண்டுமே! பின்னர் தானே, வரிக்கு வரியாகவும், சாராம்சமாகவும் விமர்சனம் செய்ய முடியும்? ஆகவே. (அந்த ஆவணம்: Are Emily & Greg more employable than Lakisha & Jamal? A field experiment on labor market – authored by Mariyann Bertrand & Senthil Mullainathan – மரியான் பெர்ட்ரன்ட் & செந்தில் முல்லைநாதன் (ஆ! தமிழர்!!) எழுதிய – “லகிஷா, ஜமால்களை விட எமிலி, க்ரெக்குகளுக்கு வேலை கிடைப்பது சுளுவா? வேலைவாய்ப்புச் சந்தையிலொரு களப் பரிசோதனை“)
இது ஒரு சராசரித்தர ஆராய்ச்சி ஆவணம்தான். என் நோக்கில் – இவ்வாவணம், ஒரு பரிசோதனை அளவில் இருக்கிறதே தவிர ஒரு சீரிய ஆய்வு என்கிற முறையில் இல்லை. பல சிடுக்கல்கள் – ஆனால் வெகுசுலபமான சிடுக்கவிழ்த்தல்கள்!
ஒரு சராசரி ஐடி குளுவான் என்பவன், நவீன அடிமையா?
January 10, 2015
சர்வ நிச்சயமாக, அவன் அப்படி இல்லவேயில்லை! தன்னை இப்படிச் சொல்லிக்கொள்பவன், விவரித்துக் கொள்பவன் ஒரு அயோக்கியன் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. (கொஞ்சம் தேவையற்ற கருணையுடன் இதனைச் சொல்லவேண்டுமென்றால் – அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு, பிறரையும் ஏமாற்றுபவன். அவ்வளவுதான்!)
நவீனகுளுவானிய கட்டுரை [=0] ஒன்றின் மேலான எதிர்வினையான – என் மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுடைய கட்டுரையின் [1] மீதான ஒரு எதிர்வினையாக, சில மேலதிகமான கருத்துகளை கொஞ்சம் காட்டமாகவே கொடுக்கும் என்னுடைய காட்டுரைகள் – [2], [3], [4] இவற்றைப் படித்துவிட்டு முடிந்தால் தொடரவும்.(பின்புலம்: டிஸிஎஸ் நிறுவனம், தனக்குத் தேவையற்ற 25000 வேலையாட்களை – அவர்கள் தங்களைச் செழுமை செய்துகொள்ள உதவிகரமாக, சராசரித்தனத்திலிருந்து மேலெழும்ப ஏதுவாக – வெளியே அனுப்பப்போகும் சாதாரணச் செய்தி)
… ஐடி/தகவல் நுட்ப வேலையாட்கள் தொடர்பான பல சுவாரசியமான பரப்புரைகள் பதவிசாகப் பரப்பப் பட்டுக்கொண்டே வருகின்றன. சில அப்பாவிகள் இதனையும் நம்பியும் விடுகின்றனர் என்பது தான் சோகம்!
“ஐடி துறையில் வேலை கொடுத்துக்கொடுத்துப் பிழிந்து எடுத்துவிடுவார்கள்!”
“ஐடிகாரர்களுக்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது! முதலாளிகள் ரத்தத்தை உறிஞ்சி விடுவார்கள்!”“வேலை ஸ்திரம் இல்லை! எப்போது வேண்டுமானாலும் கழுத்தைப் பிடித்து வெளியே துரத்தி விடுவார்கள்!”“லாபம் பார்த்தவுடன், அந்த முதலாளிகள் மூட்டையைக் கட்டிக்கொண்டு போய் விடுவார்கள்”“திருட்டு முதலாளிகள் விரித்த வலை தெரியாமல், பாவம் இளைஞர்கள் சிக்கி விட்டார்கள்!”
“கடன் வாங்க ஊக்குவிக்கிறார்கள்!”
“நடுவரிசை அதிகாரிகள், மிட்டில் லெவெல் மேனேஜர்கள் நிர்வாகத்துக்குத் தாளம் போட்டு அடிமட்ட (அதிமட்ட?) ஊழியர்களை நசுக்குகிறார்கள்!”
ஐயாமார்களே, கொஞ்சம்கூடக் கூச்ச நாச்சமேயில்லாமல் குளுவான்களால் பரப்பப்படும் இந்தப் பொய்மைகளை நீங்கள் இன்னுமா நம்புகிறீர்கள்? இவை உண்மையா என்று பரிசோதிக்கவே மாட்டீர்களா? :-(
ஐடி தொழில், குளுவானியம், முதலாளியம், ஜெயமோகன், நமது ஜொலிக்கும் இஸ்ரோ ஆட்கள், வாய்ப்புகள், நம் பிரச்சினைகள், – சில குறிப்புகள்
January 8, 2015
முதலில் மூன்று வெவ்வேறூ எதிர்வினையாளர்களின் மின்னஞ்சல் கருத்துகளின் சாராம்சம்:
1. எனக்கு, கஷ்டத்திலிருப்பவர்களிடம், கடும் துன்பத்தில், திக்குத் தெரியாமல் வாடுபவர்களிடம் கரிசனம் இல்லை. மனிதாபிமானமேயில்லை.
2. நான் ஒரு மேட்டிமைவாதி (elitist!). உச்சாணிக் கொம்புகளில் இருக்கும் ஆட்களைப் பற்றி மட்டும்தான் எனக்குக் கவலை. என் பார்வையில், கீழே இருப்பவர்களெல்லாம் ஒதுக்கத் தக்கவர்கள், வெறுக்கப் படவேண்டியவர்கள்.
3. ஜெயமோகன் மேல் பொறாமையுடன் புழுதி வாரியிறைக்கும் கும்பலில் நான் ஐக்கியமாகி விட்டேன். நான் அவருடன் நேரடியாக கடிதப் போக்குவரத்து வைத்துக்கொள்வதை விடுத்து, எதிர்க்கருத்து சொல்லி, ஒத்திசைவில் பதிவிடுகிறேன். நேரடியாகப் பேசித் தீர்த்துக்கொள்ளக் கூடிய விஷயங்களை இப்படியா வெளியில் கொட்டுவது, கல்லெறிவது?
இதுதாண்டா சராசரி தகவல்(!)தொழில்(!!)நுட்பக்(!!!) குளுவான்!!!!
January 7, 2015
(அல்லது ) ஐடி குளுவான்களின், பரவலாக வெளியே தெரியவராத பிரச்சினைகள்!!!!!
அய்யய்யோ! குளுவான்களென்றாலே எனக்கு ஆச்சரியம்தான்!! அதனால்தான் கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே இந்த எழவெடுத்த ஆச்சரியக்குறிகளை உபயோகித்து விட்டேன்!!! மன்னிக்கவும்!!!!
சரி!!!!! இவ்வரிசைப் பதிவுகளின் முதல்பாகம்!!!!!! இது இரண்டாம் பாகம்!!!!!!!
-0-0-0-0-0-0-0-
ஆம்.
ஐடி குளுவான் மந்தையினர் அபாக்கியவான்கள். பரலோக நரகம் மட்டுமல்ல, இகலோக நரகமும் அவர்களுடையதே! யேசுவுக்கு நன்றி. [மேத்யு( 5: 3)]
விடலைப் பருவத்திலிருந்து – மேலெழும்பவே மாட்டோம், வளரவே மாட்டோம் என அடம் பிடித்து, ‘எனக்கு அந்த வேல பொம்மெ வேணும்’ என மூக்குச் சளி ஒழுக உருண்டுபுரண்டு ஒப்பாரி சகிதம் பிலாக்கணம் வைக்கும் குளுவான் கும்பலுக்கு, ‘ஐயகோ, எங்கள் நிராதரவான கையறு நிலையைப் பாரீர்‘ என விசும்பிவிசும்பி அழும் அரைகுறைகளுக்கு – ஒரேயொரு அருமருந்துதான் இருக்கிறது என்று – என் பேராசானும் சித்தபைத்திய குருநாதருமான சிவபோதைவார்த்தையார் அவர்கள் தன்னுடைய தேரையதவளையர் நிகண்டுவில் இப்படிச் சொல்கிறார்:
Read the rest of this entry »
எனது ஏழு நூல்கள் – அட்டைப்பட ரிலீஸ்!
January 6, 2015
வாசகர்களுக்கு ஓர் நற்செய்தி!
ஒரு வழியாக, அட்டைப்படம் தயாராகி விட்டது – இதைச் சரி செய்வதற்குள் நான் உண்மையிலேயே நொந்து நூலாகிவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
நானும் ஒரு ‘அக்கால’ தகவல்தொழில் நுட்ப வேலையாள் எனும் பின்புலத்தில் – மேற்கண்ட நான்கு பிரிவுகளிலும் இல்லாத ஐந்தாம் வர்ணத்தினரையும் அறிவேன். ப்ர்ஹ்மத்துக்கு, ப்ரபஞ்சத்துக்கு நன்றி.
இந்தப் பஞ்சமர்கள்தாம் ஐடி, இன்ஃபொர்மேஷன் டெக்னாலஜி கணினியியல் எனப் பலவாறு அழைக்கப்படும், ஆனால் தொடர்புள்ள துறைகளின் ஆதார சுருதிகள் – தொழில் நுட்ப நுண்மான் நுழைபுலம் காணல், தொடர்ந்து மகிழ்வுடன் மேம்படுத்திக்கொள்ளப்படும் அறிவுப்புலம், அயரா உழைப்பு, நேர்மை, மகத்தான குடிமை உணர்ச்சி, போற்றுதற்குரிய பொறுப்புணர்ச்சி, தொழில்தர்மம், விசாலமான பார்வை, விமர்சனங்கள் தாங்குதிறன், நேரமேலாண்மை, திட்டமிடுதல், தவறுகளைத் தொடர்ந்து திருத்திக் கொண்டுமேலெழும்புதல், தயாளகுணம், மற்ற துறைகளிலும் மேன்மையைப் பேணல், சுறுசுறுப்பு போன்றவை சார்ந்த பலகூறுகளில் ஜொலிப்பவர்கள்; என் கணிப்பில், மொத்த ஐடி வேலையாட்களில், இவர்கள் அதிக பட்சம், 5-8% இருந்தால் அதுவே மிகமிக அதிகம்.
இவற்றைச் சொல்வதில் எனக்குச் சந்தேகமோ தயக்கமோ இல்லவேயில்லை, மாறாக, பெருமை மட்டுமே! ஆம், இவர்களால்தான், இவர்களால் மட்டுமேதான் வண்டி ஓடுகிறது; காலாண்டுக்குக் காலாண்டு வளர்ச்சியில் வருமானம் தொடர்ந்து மேலெழும்பிக் கொண்டிருக்கிறது. இவர்கள் சராசரித்தனத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் குளுவான்கள் அல்லர்.
இதுதாண்டா (பல)புத்தக வெளியீடு!
January 2, 2015
இதன் முதல் பாகத்தில் (= நான் நாளொருபாகன், வேறொன்றுமில்லை) கீழ்கண்ட மூன்று விஷயங்கள் பற்றி எழுதப் பட்டன:
- ஏன் நீங்கள், சென்னை புத்தகச் சந்தை தொடங்குவதற்கு முன்னால், என் புத்தகங்களில் ஒன்றையாவது எரித்தேயாகவேண்டும்
- எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் முன்னுரைதாங்கி வெளிவரும் ‘“உபபெருங்காயணம்” – சமையற்கலை நூல் பற்றிய குறிப்புகள்
- சாரு நிவேதிதா அவர்களின் முன்னுரைகொண்டு வெளிவரும் – “பழைய இம்மைக்ரன்ட்” – புதினம் பற்றிய குறிப்புகள்
முதல் பாகம். இந்த இரண்டாம் பாகத்தில் – என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜெயமோகன், ஆஇராவேங்கடாசலபதி, யுவகிருஷ்ணா, வா மணிகண்டன், மருதன் ஆகியோரின் முன்னுரையோடு வெளிவர இருக்கும் மீதமிருக்கும் ஐந்து புத்தகங்களைப் பற்றிய விவரங்கள்… உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.
ஆனால் மன்னிக்கவும். இந்த வருடம் கவிதைத் தொகுப்போ, சினிமா விமர்சனத் தொகுப்போ வெளியிடவில்லை. என்னைப் போன்ற க்ரியாசக்தி ஊறிப்பொங்கும் ஒரு திராவிடப் படைப்பாளிக்கு இம்மாதிரி நிலை, மகத்தான வெட்கம் தரும் விஷயம்தான் – ஆனாலும், கவிதை, சினிமாவிமர்சனத் தொகுப்புகளையாவது – இவற்றை மட்டுமாவது மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கவேண்டும் எனப் பெரியமனதுடன் நினைக்கிறேன். ஆகவே மற்றவர்களின் கழுதைத் தொகுப்பு எதையாவது வாங்கிப் படித்தோ படிக்காமலேயோ, மகிழ்ச்சியாகத் தூக்கு மாட்டிக்கொண்டு சாகவும். Read the rest of this entry »