wrong day, basandhi ! @ ~ &^ $#
November 30, 2015
இந்தியாவில் சகிப்புத் தன்மையே இல்லை: தகவல்தொழில்நுட்ப(!) தட்டச்சு குமாஸ்தா எடிஷன்!
November 29, 2015
உங்களால் சகித்துக்கொள்ள முடிந்தால், இது இரண்டாவது சகிப்புத் தன்மையற்ற பதிவு.
முதலாவது, சகித்துக்கொள்ளவே முடியாத மேதகு நடிகர் ஆமீர் கானனைய பதிவு இங்கே: ஆ! இந்தியாவில் சகிப்புத் தன்மை மிகவும் குறைந்துவிட்டது!! வேறு வழியேயில்லை!!! ஆனவே நானும்… 28/11/2015
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி, வஞ்சனை செய்வாரடி, சகித்துக் கொள்ளடி சளியே… வாய்ச்சொல்லில் வீரரடி சகியே!
ஆ! இந்தியாவில் சகிப்புத் தன்மை மிகவும் குறைந்துவிட்டது!! வேறு வழியேயில்லை!!! ஆகவே நானும்…
November 28, 2015
…இந்தியாவை விட்டு வெளியே போய்விடலாம் என்று நினைக்கிறேன். அந்த மும்முரத்தில் இருந்ததனால்தான் கடந்த பலவாரங்களாக ஒரு எழவு பதிவும் எழுதவேயில்லை! :-(
எப்படியாவது இந்த எழவெடுத்த, சகிப்புத் தன்மையேயற்ற இந்தியாவை விட்டுவிட்டு ஓடிப்போய் அமெரிக்காவே கோயிந்தா (அல்லது யேஸ்ஸூ அல்லது அல்லா; எனது சர்வமதச் சார்பின்மையைக் காட்டிக்கொண்டு கூத்தாடவேண்டுமல்லவா?) என நிபந்தனையற்றுச் சரணாகதி அடைந்துவிட்டுதான் அடுத்த வேலை. மன்னிக்கவும்.
… ஆனால், அதற்கு முன்னால் இரண்டு ஸீன்களில் ஒரே கந்தறகோளக் கதை! நானே எழுதி நடித்து டைரடக்கரும் செய்த என் சொந்தக் கதை… வெறுமனே நான் ஸீன் போடுவதாக மட்டும் நினைத்துக் கொண்டு விடாதீர்கள், சரியா? Read the rest of this entry »