சித்பவன்காரர், காந்தி, கோட்ஸே, ஜோதிடம் – சில குறிப்புகள் (2/2)
February 23, 2015
… சிறு வயதிலிருந்து கடுமையான உடல் உழைப்பு (தங்கள் 140 அடி ஆழக் கிணற்றை இவரும், இவர் தந்தையாரும் மட்டுமே தோண்டியிருக்கின்றனர்) – வயல்களில் போராட்டம். தங்களுக்குத் தேவையான உணவு, சோப்பு, துணி என அத்தனை பொருட்களையும் அவர்களே தயாரித்துக் கொண்டிருந்தனர், வீட்டில்/பண்ணையில் உதவிக்கு வேறு ஆட்களை வைத்துக்கொள்ளவில்லை. அவர்கள் இரு விஷயங்களுக்குத்தான் வெளியே சென்று கடையில் நிற்க வேண்டியிருந்தது – 1) வெள்ளைச் சர்க்கரை – இதையும் ஏதாவது விசேஷங்களில்தான் உபயோகித்திருக்கிறார்கள்; 2) தேயிலை – இதன் தேவையும் சொற்பமே! மற்றெல்லாவற்றையும் அவர்களுடைய சிறு பண்ணையிலேயே தயாரித்துக் கொண்டனர்.
சித்பவன்காரர், காந்தி, கோட்ஸே, ஜோதிடம் – சில குறிப்புகள் (1/2)
February 23, 2015
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால், ஒரு முறை ஸ்ரீ தரம்பால் அவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தபோது, அவருடன் — கம்பி மாதிரி ஒல்லியாகவும், முகமெல்லாம் கருணையும், பாண்டித்தியமும் ஒழுகும் சித்பவன்காரர் ஒருவரும் (90+) இருந்தார். பார்த்த மாத்திரத்திலேயே மகாமகோ மேதைகள் எனச் சிலசமயம், நம்மால் சிலரை உணர்ந்துகொள்ள முடியுமல்லவா? அவர் அப்படித்தான்.கூட இருந்த ஆஸாதி பசாவ் ஆந்தோலன்காரரான (=’சுதந்திரத்தைக் காப்பாற்று’ இயக்கம்) ராஜீவ் தீக்ஷித் போன்றவர்கள் ஸ்ரீ தரம்பால் அவர்களை என்னென்னமோ கேட்டுக்கொண்டிருந்தார்கள். சுவாரசியமான விவாதங்கள். காரத்தன்மை மிக்கவையும் இளமைத் துடிப்பால் விசிறப்பட்டவையுமான பல பார்வைகள், கருத்துகள் முன்வைக்கப்பட்டன. சுமார் 11 மணிக்கு ஏறக்குறைய எல்லோரும் கிளம்பிப் போனபோது – நாங்கள் மூவர் மட்டுமே இருந்தோம்.
மறுபடியும் ‘ஹிந்த் ஸ்வராஜ்’ பற்றிப் பேச்சு கிளம்பியது. அதுவரை உன்னிப்பாக உரையாடல்களைக் கவனித்தாலும் ஒன்றுமே பேசாத அந்த பெரியமனிதர் – நடுக்கமற்ற, தெளிவான குரலில் சுமார் 4 மணி நேரம் போல – காலை 3 மணி வரை, தொடர்ந்து பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். நான் கேட்ட சில அதிகப் பிரசங்கித்தனமான கேள்விகளுக்கும் பதில் அளித்தார். ‘ஆஹா’ தருணங்கள். இந்தியாவைப் பற்றியும் பாரதத்தைப் பற்றியும் இன்னும் பல செறிவான பார்வைகள் கிடைத்தன. நான் கொடுத்து வைத்தவன்.
அப்போது அவர் உபயோகித்த பல நுணுக்கமான பதங்களில் ஒன்று – सुकृति, நான் உபயோகப் படுத்தியுள்ள அர்த்தத்தில்.
நான் இம்மாதிரி அர்த்தத்தில் ஸுக்ரிதியைக் கேள்விப்பட்டதில்லையே என்று சொன்னதற்கு, அவருடைய பதில் – ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு டிக்ஷனரி மூலமாக மட்டுமே பல விஷயங்களை அணுகமுடியாது அல்லவா? ஸம்ஸ்க்ருதத்தில் – பலவகைகளில், பேச்சுவழக்குகளில், தொன்மங்களில் இந்த குறியீட்டு விரிவாக்கல் (~symbol overloading) இருக்கிறது என்றார். காளிதாஸனிடமிருந்து ஒரு மேற்கோள் கொடுத்தார் என மங்கலாக நினைவு.
ஆகவேதான் – நான் ‘பாரதத்தின் மைய நீரோட்டங்களான அணுகுமுறைகளில் ஒன்று – ஸுக்ரிதி: இதன் பலவிதமான அர்த்தங்களில் சில =’ என எழுதினேன்.
ப்ரூவர்’ஸ் டிக்ஷனரி போல ஒன்று ஸம்ஸ்க்ருதத்திற்கு இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்?
ஏன், நம் தமிழுக்குக் இப்படிப்பட்ட ஒரு புத்தகம் இருந்தால் நன்றாக இருக்கும்தானே?கூட
குறிப்பு: இந்த சித்பவன்காரரைப் பற்றிப் பின்னொரு சமயம் எழுதுகிறேன். (3 ஃபெப்ருவரி, 2015)
-0-0-0-0-0-
சரி. பலவிதமான சிந்தனைகளில் அலைக்கழிக்கப் பட்டு, இன்னமும் முழித்துக் கொண்டிருக்கிறேன்; பொதுவாக இரவு ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கியே போய்விடுவேன். இன்று, இந்த அலறும் நினைவுகளுக்கு நேரமிருக்கிறது. ஆகவே, இவரைப் பற்றிய சில குறிப்புகளை தூசி தட்டி எழுதுகிறேன்.
Read the rest of this entry »
இதுதாண்டா டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் படுபீதி பயங்கர பகீர் ரிப்போர்ட்!! (2/2)
February 20, 2015
(அல்லது) டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் எனும் ஆக்ஸிடேன் அரக்கன்: படுபீதி பயங்கரம் — தமிழகம் அழியப் போகிறதா? ஒரு பகீர் ரிப்போர்ட்! (2/2)
முதல் பகுதி: டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் எனும் ஆக்ஸிடேன் அரக்கன்: படுபீதி பயங்கரம் — தமிழகம் அழியப் போகிறதா? ஒரு பகீர் ரிப்போர்ட்! (1/2)19/02/2015
-0-0-0-0-0-0-0-
… … என் மதிப்புக்கும் அன்புக்கும் (+கிஂண்டலுக்கும்) உரிய ஞாநி அவர்கள் குதித்தெழுந்துகொண்டு ஏன் இதனைப் பற்றி ( μ-ஆக்ஸிடோ டைஹைட்ரஜன்) ஒரு துண்டுப் பிரச்சாரமோ பிரசுரமோ செய்யவில்லை / வெளியிடவில்லை?
இருபதுமுப்பது வருடங்களுக்கு முன், கல்பாக்கப் பயங்கரத்தைப் பற்றி தீம்தரிக்கிட்டுக்கொண்டே மாய்ந்து மாய்ந்து எழுதியது அவருக்கு நினைவிலேயே இல்லையா?
டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் எனும் ஆக்ஸிடேன் அரக்கன்: படுபீதி பயங்கரம் — தமிழகம் அழியப் போகிறதா? ஒரு பகீர் ரிப்போர்ட்! (1/2)
February 19, 2015
… ஏற்கனவே மேற்கண்டவற்றால் கண்டமேனிக்கும் பீதியில் இருக்கும் – திராவிடம் போன்ற மொக்கைப் படுபயங்கரங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கும், பொட்டல் காடாகப்பட்டுக்கொண்டிருக்கும் நம் தமிழகத்தில்…
ஜிட்டு ‘கே’ கிருஷ்ணமூர்த்தி – சில குறிப்புகள்
February 17, 2015
29 வருடங்கள் முன் – இந்த ஃபெப்ருவரி 17 அன்று 1986ல், ‘கே’ போய்ச்சேர்ந்தார்.

படம் இங்கிருந்து.
இதில், எனக்கு நினைவிலிருக்கும் ஒரு சுவாரசியமான விஷயம் – ‘கே’ சென்னையில் ஆற்றிய அவருடைய கடைசிச் சொற்பொழிவில் (4, ஜனவரி, 1986), தருமுசிவராமு அவர்களால் தேவைமெனக்கெட்டு ஏற்படுத்தப்பட்ட, நம்பவேமுடியாத ஒரு சிறு சலசலப்பும் அடங்கும். நானும் என்னுடைய சில நண்பர்களுடன் அந்தச் சொற்பொழிவுக்குச் சென்றிருந்தேன். விக்கித்துப் போனேன். (இது ஒரு தனிக்கதை)
Read the rest of this entry »
கனிமொழி: என் அம்மா, அப்பா, அண்ணன்கள், கணவன், மகன், நண்பர், நண்பி(!) பெயர்களை உடனடியாக மாற்றவேண்டும்!
February 14, 2015
கனிமொழி அவர்களின் மகாமகோ கவிதைகளைப் படித்துவிட்டு இக்காலம் வரை – அவருக்குத் தமிழைக் கண்டாலே அதிவெறுப்பு என்றுதானே நினைத்துக்கொண்டிருந்தேன்? அநியாயமாகத் தவறு செய்து விட்டேனோ??
“… அ.தி.மு.க. அரசிற்கு தமிழ் உணர்வு இல்லை. எனவே தான் சிறீரங்கத்தில் கட்டப்பட்டுள்ள பயணிகள் தங்கும் விடுதிக்கு யாத்ரிகர் நிவாஸ் என பெயர் இட்டுள்ளனர். அழகிய தமிழ் பெயரில் அதை அழைக்க அரசுக்கு மனம் இல்லையா?”
— — கனிமொழி (தன்மானம் காக்க தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் – கனிமொழி பேச்சு – (ஞாயிறு, 08 பிப்ரவரி 2015))
ஹ்ம்ம்ம்… இருக்காதுதான். நிச்சயம் நான் தவறு செய்யவில்லை எனத்தான் தோன்றுகிறது. அவருக்குத் தமிழ் ஒத்துவராதுதான். ஆனால், ஆனால்… தொழில்முறை திராவிடனின் தமிழுணர்வு என்பது சும்மா ஆடுமா, சொல்லுங்கள்? :-)
[இதன் முந்தைய இரு பாகங்கள்…] [1] முடிவிலா உரையாடல்: என் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் (1/n) 10/02/2015 [2] முடிவிலா உரையாடல்: என் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் (2/n) 12/02/2015
…மேலும், கல்வி என்பது ஒரு ஒற்றைப்படைப் பார்வையில் “நல்லா படிச்சி, வேல கெடச்சி, கண்ணாலம் கட்டி, கொளந்த பெத்து” எனச் சுருக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப் படக்கூடாது என நினைக்கிறவன் நான். இவற்றைப் பற்றிப் பின்னர் பார்க்கலாம். [தொடர்ச்சி…]
1. பணம்: முதலில், நம் வாழ்வின் அடிப்படைத் தேவைகளின் ஒன்றான ‘பணம்’ என்பதைப் பற்றி, சிறிது தர்க்கரீதியாக, ஆழமாகப் பார்க்கலாம். ஏனெனில், இவ்விஷயத்தில் சமனநிலைக்கு வருவது நம் எல்லோருக்கும் முக்கியம்தான்.
உங்களுக்கு – தினந்தோறும் குடும்பத்தைப் பேணுவதும், தினசரி வாழ்க்கையை எதிர்கொள்வதுமே பிரச்சினைகளாக இருக்கலாம் என்பது எனக்கு ஓரளவுக்குப் புரிகிறது. ஆம் – நான் இக்கடிதத்தில், கீழே குறிப்பிட்டிருக்கும் பல விஷயங்களுக்கு, ஓரளவுக்குப் பணம் தேவைதான். ஆனால் அபரிமிதமான அளவுக்குத் தேவையல்ல – ஏனெனில், பெரும்பாலும் உங்கள் குழந்தைகள் பொறுத்த உங்கள் கரிசனத்தை, அன்பை, அரவணைப்பைக் காட்ட – உங்களுடைய நேரத்தை அவர்களுக்காகவும் ஒதுக்குவதே போதுமானது.
இருந்தாலும் இதை நான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது. கீழ்கண்டவற்றை – உங்கள் வாழ்க்கையை நோக்கிய என் புரிதலின் மீது கட்டமைத்திருக்கிறேன் என்பதையும் – தவறுகள் இருப்பின், அவற்றைத் திருத்திக்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன் என்பதையும் உங்களுக்குக் தெரிவிக்கிறேன்.
[தொடர்ச்சி…]
நானும், ஒரு பத்து நிமிடம் பார்த்துவிட்டு, என்ன சொல்லியும் குழப்பம் அடங்காததால், கூட்டம் முடிந்து விட்டது என்று சொல்லி, அறையை விட்டு அலுப்புடன் வெளியேறி விட்டேன். ஏறத்தாழ இம்மாதிரி, ஒருமுறையல்ல – இருமுறை நடந்தது, உங்களுக்கு நினைவிருக்கிறதா? முதலில் எனக்கு இவற்றையெல்லாம் பார்த்து-கேட்டு மிகமிகக் கோபம் வந்தாலும் உங்கள் ஒருவரையும் துளிக்கூட அவமரியாதையாகப் பேசவில்லை என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
உண்மை இப்படி இருக்கையில், உங்களில் சிலர், இம்மாதிரி கூட்டங்களை நான் ஏன் கூட்டுவதில்லை என முறையீடு செய்வது திகைப்பாகவே இருக்கிறது. வெட்டிக் கேளிக்கைகளுக்குத் தான் திரைப்படங்கள் இருக்கின்றனவே!
பலவருடங்களாக, தேவைமெனக்கெட்டு நம் சமூகத்துடன் ஊடாடி வரும் எனக்கு, நம் தமிழ்ச் சமூகத்தை நினைத்து எப்போதுமே ஆச்சரியம் கலந்த வருத்தம்தான். வெறுப்பு இல்லை – ஏனெனில் எனது குவியம் என்பது பெரும்பாலும் உங்கள் குழந்தைகள் மீதுதான். மேலும் நாமெல்லாரும் காலாகாலத்தில் போய்ச் சேரவேண்டியவர்கள் – ஆனால், நம் குழந்தைகள் அப்படியல்லர்; அவர்களுடைய எதிர்காலம் அவர்களுக்காக ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.
“சிலர், மற்ற மனிதர்களுக்கு உதவியென்று ஏதாவதைச் செய்தால் – அதற்கான பிரதிபலனை, பதில் உதவியை எப்படிப் பெறுவது என்று சதா நோக்கியவண்ணம் இருப்பர். மற்றும் சிலர், இந்த பதிலுதவி பெறுவதில் இவ்வளவு மும்முரமாக இருக்க மாட்டார்கள் – ஆனால் அவர்களுக்குத் தாங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்தது பின்புலத்தில் இருக்கும் – ஆகவே, அந்த உதவியை, ஒரு கடனாகத்தான் பாவிப்பர். ஆனால் இன்னும் சிலர் இப்படியெல்லாம் செய்யமாட்டார்கள். அவர்கள் திராட்சைக்கொடியைப் போன்றவர்கள் – ஒரு பிரதிபலனையும் பார்க்காமல் கனிகளை உற்பத்தி செய்து கொண்டிருப்பார்கள். அளித்த உதவிகளுக்குப் பின்னர் மற்றவேலைகளுக்குத் தொடர்ந்து சென்று கொண்டேயிருப்பார்கள்… நாம் அப்படித்தான் இருக்கவேண்டும்.”
மார்க்கஸ் ஆரீலியஸ், ரோமன் சக்ரவர்த்தி. (தியானங்கள் / எழுதிய வருடங்கள்: 0161 – 0180 ஸிஇ / மொழிபெயர்ப்பு: க்ரிகரி ஹெய்ஸ் / பக்கம் 55 / ரேன்டம்ஹவ்ஸ், நியூயார்க் / என்னிடமிருக்கும் பதிப்பு 2002 / நான் இப்புத்தகத்தை வெகுவாகப் பரிந்துரை செய்வேன்.)
நம் கீதை சொல்வதும், அடிக்கோடிடுவதும் இதனைத்தான். ஆனால் நான் பரிணாம வளர்ச்சியற்றவன். கிடந்து உழன்று கொண்டிருக்கும் சாதாரணன் தான். ஆகவே – நான், சக்ரவர்த்தி அவர்களின் பகுப்பில், இந்த ‘முதல் சிலர்’ வகையறாக்களில் இருப்பவன். இப்படிச் சொல்வதில் எனக்குக் குற்றவுணர்ச்சியோ போதாமையோ இல்லை; வெறும் வருத்தம்தான். ஏனெனில் நான் போகவேண்டிய தூரம் அதிகம். Read the rest of this entry »
இதுதாண்டா மாணவர் ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ போராட்ட நினைவுச் சின்னம்!
February 8, 2015
2013 மார்ச் திங்கள் எட்டாம் தேதி! நினைவிருக்கிறதா?
… வரும் மார்ச் எட்டாம்தேதி – தமிழக மாணவக் குஞ்சாமணிகளின் யுகப்புரட்சி வெடித்துக் கிளம்பிய தினத்தின் இரண்டாம் ஆண்டு கருமாந்திர திவசம்! இதற்கு இன்னும் சரியாக ஒருமாதம்தான் இருக்கிறது!
இது – தினவெடுத்த மாணவமணிகள், தங்கள் தமிழீழக் கனவுகளைக் கைமுஷ்டிகளின் ஏந்தி குவலயபீடங்கள் போல ஆர்ப்பரித்துக் கிளம்பிய தினம்!!
தமிழக மாணவமறவர்கள், ஈழத்தைக் காப்பதற்காக ஒருவேளை மட்டும் சாப்பிடாமல் ஷாமியானாக்களில் வாடி வதங்கிய தினங்கள்!!!
பராக்கிரமம் மிக்க அடலேறு, மரியாதைக்குரிய மானமிகு மாமனிதர், மகாமகோ பேராசிரியர் இளைஞக்கருப்பனார்: சில குறிப்புகள்
February 6, 2015
… ஒரு இப்போதைய ‘அப்பாவி‘ இளைஞன், திராவிட இயக்க மறவன், சொல்லின் சிங்கம், ஜால்ராக்களின் ஜிங்கம், பப்பரப்பா பத்திரிகையாளர்களில் பர்க்காதத், சினிமா விமர்சனத்தில் வின்சென்ட்கேன்பி, புரட்சிக்காரர்களில் சேகுவேரா, பிரபாகரன்களில் புலி, புளிகளின் கொட்டை, காஃபியில் நரசூஸ், காப்பியின் ஸெராக்ஸ் — பிற்காலப் பேராசிரியனாய், பின் நவீனத்துவத் திராவிடப் பேராசானாய் – 2040 வாக்கில் அறியப்படமாட்டானா என்ன?
ஏனெனில், நம் தமிழ்த்திருநாட்டில் எப்போதுமே ஜனரஞ்சக நாயகர்கள் தாம் வழிகாட்டுபவர்களாக, சமூகத்தை மேல் நடத்திச் செல்பவர்களாக இருக்கிறார்கள் அல்லவா? :-(
Read the rest of this entry »
மாதொருபாகன், முட்டாள்தனம், குயுக்தி, ஸுக்ரிதி: சில குறிப்புகள்
February 3, 2015
இந்த பெருமாள் ‘மாதொருபாகன்’ முருகன் விஷயத்திலும் அப்படித்தான்.