யுஃப்ரெடீஸின் சீற்றம் (Wrath of Euphrates) – இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு எதிரான குர்தி+அமெரிக்க+ஸிரிய வீரர்களின் முன்னெடுப்பு
January 17, 2017
கடந்த அக்டோபர்2016லிருந்து இஸ்லாமிக் ஸ்டேட் வெறியர்களின் ‘தலை’நகரான ரக்கா-வைப் பிடிப்பதற்காகத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் யுத்தம்தான் இந்த ரேத் ஆஃப் யுஃப்ரெடீஸ். இதற்கு உலகம் கொடுக்கும் விலை மிக அதிகம் என்றாலும் (இதில் பெரும்பாலும் குர்திகளின் ரத்தம்தான் தியாகம் செய்யப் படுகிறது; மற்ற ‘இஸ்லாமிய’ தேசங்களெல்லாம், தங்கள் சொந்தச் சாக்கடையை ‘யுஃப்ரெடீஸின் சீற்றம்’ சுத்தம் செய்துகொண்டிருக்கும்போது, ஆனந்தமாகத் தம் பெண்பிள்ளைகளை ஒடுக்கிக்கொண்டு 1500ஆண்டுகளுக்கு முன் சென்று வாழ்வாங்குவாழ்வது எப்படி எனக் காலட்சேபம் செய்து கொண்டிருக்கிறார்கள்!) கொஞ்சம்கொஞ்சமாக அயோக்கியம் நசுக்கப்பட்டுகொண்டிருக்கிறது.
* இதில் ஜனநாயகத்துக்காகப் போராடுபவர்கள் பக்கம் – ஸிரியா நாட்டினுள் இருக்கும் பலப்பல ஜனநாயகவாதக் குழுக்களின் கூட்டமைப்பு (இவற்றில் பெரும்பாலும் குர்திகள், அஸ்ஸீரியர்கள், சில அரேபியர்கள் என ஒரு ரேக்டேக் கூட்டணி) + குர்திஸ்தானின் பல அமைப்புகள் (பெரும்பாலும் பெஷ்மெர்கெ நீங்கலாக) + அமெரிக்கத் தலைமையில் மேற்கத்திய நாடுகளின் கூட்டணி.
[ருடாநெட் தொலைக்காட்சி சேனலில் வந்த படம் – ‘யுஃப்ரெடீஸின் சீற்றம்’ தலைவர்களில் சிலர் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அளிக்கும்போது எடுக்கப்பட்டது (நன்றி: @vissergovert)]
* அயோக்கியத்துக்கு ஆதரவாக இயற்கையாகவே போராடுபவர்கள் – இஸ்லாமிக்ஸ்டேட் + அல்கைய்தா கய்தேகள் + (பணமும், ஊடக ஆதரவும், யுத்ததளவாடங்களும் கொடுக்கும்)ஸவுதிஅரேபியா & கத்தார் + கூச்சமே இல்லாத துருக்கியின் படைப்பகுதிகள்
என்னைப் பொறுத்தவரை, நான் அறிந்துகொண்டவரை, முன்னவர்கள் வெல்வார்கள் – அதாவது பின்னவர்களின் மிருகபலத்தையும், பணபலத்தையும், ரத்தவெறியையும் மீறி. நன்றி.
இந்த ‘யுஃப்ரெடீஸின் சீற்றம்’ எனும் முன்னெடுப்புக்கு — இஸ்லாமிய வெறியர்களை ஒழிப்பது என்பது உடனடிக் குறிக்கோளானாலும் – அதனை விடப் பெரிய குறிக்கோளான – மதச் சார்பற்ற, வெறியற்ற தேசத்தை நிர்மாணிப்பது, அனைத்துப் பிரிவு மக்களையும் அரவணைப்பது என்பதற்குள் அடங்குவதொன்று. இந்த வகை அரசாங்கத்துக்கு ஒரு குர்தி மாடல் – ரொஜாவா. நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அற்புதம்.
1. லைவ்மேப் மூலம் – இந்தக் கருமாந்திரத்துக்கு எதிரான தர்மயுத்தத்தில் — இன்று, இப்போது எங்கெங்கே என்னென்ன நடந்துகொண்டிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம் – http://isis.liveuamap.com/
2. இந்த ரக்காவுக்கான போர் பற்றிய விவரங்கள் இந்த எழவெடுத்த விக்கிபீடியா பக்கத்தில் இருக்கின்றன; இதில் ஒரு சிலவிவரங்கள் சரியில்லை என்றாலுமே, இது பரவாயில்லைதான் – https://en.wikipedia.org/wiki/Raqqa_offensive_(2016%E2%80%93present)
3. இஸ்லாமிய கிலாஃபா குண்டர்களின் காட்டுமிராண்டிக் கழுத்தறுப்பு வீடியோக்களை, சிறுமிகளின்மீதான பாலியல்பலாத்காரங்களை, போர்க்கைதிகள் இரும்புக் கூண்டுகளில் அடைக்கப்பட்டு உயிரோடு எரிக்கப்படுவதை, அறியாக் குழந்தைகள் ஜிஹாதிக் கொலைகாரர்களாக ஆக்கப் படுவதை, பண்டைப் பாரம்பரியங்கள்-சின்னங்கள் அழிக்கப்படுவதையெல்லாம் பார்த்துப்பார்த்து மனம் பேதலித்திருக்கக்கூடும் உங்களுக்கு, இந்த சிறு நான்கு நிமிட விடியோ சிறிதாவது ஆசுவாசம் தரலாம். நன்றி. Wrath of Euphrates
இது அவசியம் பார்க்கப்படவேண்டியதொன்று. ரத்தக் களறியுமில்லை, கவலை வேண்டேல்! ஸர்வைவர் எனும் ராக் க்ரூப் ஒன்றினுடைய பாடல் – புலியின் கண் (Eye of the Tiger – Survivor) என்பது பின்னணியில் ஒடுகிறது. எனக்குப் பிடித்தமான இந்தப் பாடலில் இருந்து சில வரிகள்:
Risin’ up, back on the street,Did my time, took my chances,Went the distance, now I’m back on my feet,Just a man and his will to survive…
:-) …இந்தப் பாடல் ஏதோவொரு அந்தக்காலத்து ஸில்வெஸ்டர் ஸ்டேல்லன் படத்தில் வந்தது என்று நினைவு. இது தவறாகவும் இருக்கலாம்.
[இஸ்லாமிக்ஸ்டேட் ரத்தவெறியர்களிடமிருந்து ஸிரியக் குழந்தைகளையும் தாயையும் காப்பாற்றும் குர்திப் போர்வீரர்கள்]
சரி. கர்டிஸ்தான் அல்லது குர்திஸ்தான் (அதன் ரொஜாவா உட்பட), இஸ்லாம் தொடர்புள்ள பிற பதிவுகள்:
-
ஜெயமோகன் -> தமீம் அஹெம்மத், நூருன்னிஸா -> அலறும் நினைவுகள்: சில குறிப்புகள்
-
நம் சமகாலத்தில் நடந்துகொண்டிருக்கும் அற்புதம், அதற்காக உதவவேண்டிய நமது கடமை…
- அயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர்: இரான் அரசின் இரட்டைவேடமும், நடைமுறை இஸ்லாமின் பெரும்பாலும் கதிமோட்சம் இல்லாத நிலைமையும் 08/01/2016
- 21/12/2015السهل الممتنع
- ஃபில் கேம்பியன்: இஸ்லாமிக்ஸ்டேட் அட்டூழிய கும்பலுடன் பொருதுவது எப்படி? (+ சில கோரிக்கைக் குறிப்புகள்) 20/10/2015
- 9/11 நிகழ்வுக்குப் பின், முஸ்லீம் இளைஞர்களுக்கு மேலதிகமாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி? (1/4) 22/09/2015
- மசூதிக்கும் போகும் மன்னாரு 07/09/2015
- மறுபடியும் ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத், ஸ்ரீரங்கப்பட்டணத்தின் ஜமா மஸூதி – சில குறிப்புகள், எண்ணங்கள்25/08/2015
- மொஹெம்மத் நபி, பன்முக இஸ்லாம், ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத் சாபம்: சில குறிப்புகள் 22/08/2015
- இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (6/n) 18/08/2015
- மதங்கள், நடைமுறை இஸ்லாம், அதன் வரலாற்றுப் பின்னணி – சில குறிப்புகள் (5/n) 10/08/2015
- வாடிக்கையாளர்களுக்கொரு நற்செய்தி! நாம்தமிழர் சீமாரின் புதிய பிரகடனம்!! + மூன்று குறிப்புகள் 04/08/2015
- அப்துல் கலாம் மறுசுழற்சி: சமன நிலைக் கருத்துகளும், குளுவான் ஜிஹாதி வகையறா அரைகுறைகளின் படுகேவலமான அற்பத்தனமும் 29/07/2015
- இஸ்லாம், முஸ்லீம், நான்: சில மேற்குவிதல்கள் பற்றிய குறிப்புகள் (4/n) 27/07/2015
- ‘முஸ்லீம்களைப் பற்றிப் பேச நான் யார்’ உட்பட, என் குறிப்புகள் (3/n)26/07/2015
- மொஹி பஹாஉத்-தீன் டாகர்: ருத்ரவீணையில் த்ருபத்22/07/2015
- அம்னெஸ்டி இன்டர்நேஷனல் – எனும் அயோக்கிய, கொடும்வன்முறை ஆதரவு (=பாரத எதிர்ப்பு) அமைப்பு: சில குறிப்புகள்19/07/2015
- பாவப்பட்ட இஸ்லாமியர்களுக்கும் பெருமளவில் தொடர்ந்து உதவும் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் அவர்களுக்குக் கொலைமிரட்டல்கள்: ஒரு கர்ட் எதிர்வினை18/07/2015
- ஆம்பூர் அட்டூழியங்கள், தமிழகத்தில் இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு ஆதரவு, என் தம்பி – நடைமுறை தமிழக இஸ்லாம் (2/3)15/07/2015
- இந்திய முஸ்லீம் சமூகம், அதன் ஏகோபித்த சுயலாப-பழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில குறிப்புகள் (1/3)13/07/2015
- மைக்கெல் என்ரய்ட், ஹாலிவுட் நடிகர் – தற்போது கர்டிஸ்தானில், இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு எதிராக… (+இலவசை இணைப்பு: தமிழ்சினிமா எனும் அற்பம்) 18/05/2015
- அயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர்: சில குறிப்புகள் 12/05/2015
- தொழில்முறை அமெரிக்க எதிர்ப்பாளர்களுக்கு, கர்ட்களின் பதில் 07/05/2015
- இரு வீடியோக்கள்: பெண்களை மதிக்கும் கர்டிஸ்தானின், பெண் வீரர்கள் (சிறு இலவச இணைப்பு: ‘NRI’ மஹாத்மியம்) 05/05/2015
- ஸுன்னிமுதல்வாத இஸ்லாமிக்ஸ்டேட் வெறியர்கள், நேற்றும் 500க்கு மேற்பட்ட மாற்றுமத அப்பாவிகளைப் படுகொலை செய்தனர்! (+ இஸ்லாமிக்ஸ்டேட் கொலையாளிகளுக்கு, தமிழ் நாட்டில் ஆதரவும் சப்பைக்கட்டலும்) 02/05/2015
- பாகிஸ்தானிய பத்திரிகையாளர் நதீம் ஃபரூக் பராச்சா அவர்களை முன்வைத்து – சில சிந்தனைகள் 01/05/2015
- இஸ்லாமிக்ஸ்டேட் தீவிரப் பொறுக்கிமுதல்வாதத்தின் படி, குழந்தைகளுக்கு இரண்டு வழிகளே: 1) படுகொலையாவது, அல்லது 2) படுகொலையாளியாவது 26/04/2015
- கில்யஸ் மறுசுழற்சி: சில குறிப்புகள் 24/04/2015
- இஸ்லாமிக்ஸ்டேட் பெருச்சாளிகளை விரட்டியடிக்கும் கர்டிஸ்தானின் கபானி நகரம்: சில குறிப்புகள் 21/04/2015
- ஜிஹாத், ஜிலேபி, ஜிகர்தண்டா 10/04/2015
- கில்யஸ்: மேலும் சில நினைவுகள் + இந்திய/நடைமுறை இஸ்லாம்: சில குறிப்புகள் 09/04/2015
- கில்யஸ் – ஒரு கர்ட் பெஷ்மெர்கெ ஆளுமை, நடைமுறை இஸ்லாம்: சில நினைவுகள், குறிப்புகள் (1/2) 08/04/2015
- இதுதாண்டா மாவோயிஸம்! :-(02/03/2014
- முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி? 10/02/2014
- இன்று, கஷ்மீரி பண்டிதர்கள் சிதறடிக்கப்பட ஆரம்பித்த தினம் (19 ஜனவரி 1990)19/01/2014
- களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி? 26/02/2013
- அபு ல்-வலித் மொஹம்மத் பின் அஹ்மத் பின் ரஷித் எனும் அவெர்ரீஸ் 28/01/2013
- குழந்தைப் படுகொலைகள், எல்டிடிஇ பிரபாகரன், போராட்டங்கள்: சில சிந்தனைகள், குறிப்புகள் 25/03/2013