கருணாநிதி பெருங்குடும்பக் கருமாந்திரம் >> சசிகலா குறுங்குடும்பக் கருமாந்திரம்: சில குறிப்புகள்

February 18, 2017

சசிகலாக்களைக் குற்றம் சொன்னால், ஜெயலலிதாக்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்கிறார்கள். ஆம். தமிழகத்துக்கென (திமுக கொள்ளையர்கள் போலல்லாமல்) சிலபல நல்ல காரியங்களை தம் இயல்பான திராவிடத்தனத்தை மீறிச் செய்திருந்தாலும், அகங்காரமிக்க ஜெயலலிதாக்களும் இந்த ஊழல் குட்டையில் உழன்ற உலுத்தர்களே. அமோகமாகக் கொள்ளையடித்தவர்களே. செத்தார்கள் என்று பண்பு(!) பார்த்து, ச்சூ கொட்டுவது எனக்கு முடியாது. ஆகவே ச்சீ! – ஒழிந்தார்கள் சரி, ஆனால் ஒழியவேண்டியவர்கள் என ஆயிரக்கணக்கில் இருக்கிறார்களே!

…இந்தத் திராவிடலை உடன்பிறப்புகள், அதுவும் ‘திராவிடப் பொதுவாழ்வில் தூய்மை’ எனும் நேனோ தூசியை 100000000000X பூதக் கண்ணாடி வைத்துக்கொண்டு பார்ப்பவர்கள் – ஆகவே, போயும் போயும் இந்தக் கருணாநிதிகளைப் போற்றி ஆராதிப்பவர்கள், இந்தக் குற்றம்காணும் விஷயத்தை ஜெயலலிதாவோடு மட்டும் நிறுத்திவிடுவார்கள். என்னவோ கருணாநிதிகளும் இசுடாலிர்களும் கனிமொழிகளும் பண்பாளச் சத்தியசந்தர்கள் போல, தமிழகத்தின் மேன்மைக்காக மட்டுமே உழையோவுழை எனக் கண் துஞ்சாமல் மெய் நோக்காமல் உழைத்துவருபவர்கள் போல… உண்மையாகவே, இது ஒரு நகைக்கத்தக்க பிரச்சினைதான். :-)

ஏனெனில் ஊழலின், திராவிடத்துடன் பிறந்த  கருமாந்திரங்களின் முழுமுதல் ஊற்றுக்கண்ணுக்குச் செல்லவேண்டாமோ? சசிகலா ஈயங்களைப் பார்த்து திமுக பித்தளைகள் இளிப்பதைப் பார்த்துக்கொண்டு நாம் நமட்டுச் சிரிப்புகளை மட்டுமே நல்கிக்கொண்டு இருக்கக்கூடாதல்லவா?

(இந்தப் பதிவில் சுமார் 2050 வார்த்தைகள்; நீஈஈஈஈஈஈளம்; பொறுமை தேவை – கைவசம் அது இல்லையென்றால் அல்லது நீங்கள் ஒரு திராவிட அபிமானியென்றால், விட்டுவிட்டு ஓடவும். நன்றி!)

ஆகவே, காரியார்த்தமாக அப்படிச் செய்யமுடியாதுபோய்  உடன்பிறப்புடிடிஸ் வியாதியில் அல்லலுறும் திராவிடலைகளுக்காக, இந்தக் குறிப்புகள், அளவிலாக் காதலுடனும் தாங்கொணாக் கரிசனத்துடனும் எழுதப் படுகின்றன. நன்றி.

ஏனெனில், கருணாநிதிகளின் கயமை உச்சங்களை எட்டிப் பிடிக்க, சசிகலாக்கள் செல்லவேண்டிய தூரம் மிக மிக மிக அதிகம்!

-0-0-0-0-0-0-

ஓராயிரம் சசிகலாக்களை அவர்கள் குடும்பங்களுடன் முழுங்கி ஏப்பம் விடக்கூடிய அளவில் இருப்பவர்கள் கருணாநிதிகள். இந்த அடிப்படை உண்மையைத் தமிழகம் புரிந்துகொள்ளவேண்டும் என்பதென் அவா. ஆகவே, நான்  ஆவ்ற வேலையப் பார்க்காதவன் என்பதும் சரியே! :-(

ஏனெனில்,  கொடிது கொடிது – கருணாநிதிகளின் பெருங்குடும்பக் கொள்ளைக்கும்பல்  கொடிது. ஆமென்.

சரி. கருணாநிதிகளின் பெருங்குடும்பக் கருமாந்திரத்துக்கும், சசிகலாக்களின் குடும்பக் கருமாந்திரங்களுக்கும் பலப்பல ஒற்றுமைகள் – அந்த ஓற்றுமைகளில் பல குறிப்பிடத்தக்க வேற்றுமைகள் என்றெல்லாம் அமோகமாக உள்ளன; மேலதிகமாக சில முக்கியமான வேற்றுமைகளும் உள்ளன. இவற்றில் சிலவற்றை, சிறு/உபதலைப்புகளில்முடிந்தவரை இடஞ்சுட்டிப் பொருள்விளக்குகிறேன்.

இதனால் பெருங்கொள்ளைக்காரக் கருணாநிதிகள் மட்டும் தமிழகத்தை விட்டு விரட்டப்படவேண்டும் எனச் சொல்லவரவில்லை – சசிகலாக்கள் உட்பட, அனைத்து திராவிடத் தீவட்டிக் கொள்ளையர்களும் தமிழக அரசியலிலிருந்து துப்புரவாக ஒழிக்கப்படவேண்டும் எனத்தான் சொல்கிறேன்; ஜாதிமதபேதமற்ற தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லும் அரசியல்/அதிகாரம் இந்த அயோக்கியர்களைத் துப்புரவாகப் பிடுங்கிப் போட்டால்தான் சாத்தியமாகும் எனத் திடமாக நம்புகிறேன். இது என்னுடைய அடக்கமுடியாத அவா/ஆவல். பார்க்கலாம், எதிர்கால உலகம் எப்படி விரிகிறதென்று…

கூட்டுக்கொள்ளைக் குடும்பம்:

இரண்டு கும்பல்களிலும் குடும்பம் தான் பிரதானம். ஆட்சியில் இருக்கிறோமோ இல்லையோ, இவர்களுடைய வானளாவிய பேராசைக் குறிக்கோள்: குடும்பத்தினருக்குப் பெருந்தீனி போட்டே ஆகவேண்டிய தேவை.  இவர்களுக்குக் கட்சி என்பது – ஊழல் பணத்தை அமோகமாக அள்ளுவதற்கான ஒரு கருவி; அதற்காக மட்டுமே கட்சி உபயோகிக்கப்படும். ஏனெனில் கட்சியில் அவர்களுடைய  லட்சியமுதலீடுகள் அப்படி. மற்றபடி இந்த இரண்டு கும்பல்களும் கொள்ளை என்பதைக் கொள்கை என அமோகமாகப் புரிந்துகொண்டிருக்கும் ஜென்மங்கள்.  கட்சி எக்கேடோ போனால் என்ன? படித்தவர்களற்ற பாமரர்களால், விசிலடிச்சான் குஞ்சப்பர்களால், காரியவாதிப் பேடிகளால் நிரப்பப்பட்ட கட்சி பலம் – இதில் அவர்களுக்கு உறுதுணை.
இந்தக் கொள்ளையர்களில் சொத்துசக்தி, பினாமிகள் உட்பட்டு – என் அனுமானத்தில் இப்படிப்பட்ட இறங்குவரிசையிருக்கும்: மாறன்கள் > கருணாநிதி  > இசுடாலிர் > கனிமொழி > அழகிரி > செல்வி > இன்ன பிறர்; சசிகலாக்கள் ‘உழைத்து’ ஈட்டிய சொத்து – கருணாநிதிக்கும் இசுடாலிருக்கும் நடுவில் இருக்கலாம்.

குறுநில மன்னர்களும் கப்பமும்:

கருணாநிதிகள், இசுடாலிர்கள் – நம் தமிழகத்தைக் கூறுபோட்டு அதனை அமைப்புரீதியாகக் குறுநில மன்னர்களுடன் இணைத்து விட்டார்கள். பெரும்பாலான இடங்களில்  மாவட்டச் செயலாளர்கள் என்ற பெயரில் நடனமாடிக்கொண்டிருக்கும் கபோதிகள்தாம் இவர்கள். திமுக மாவட்டங்களில், உட்போட்டியில்லாமல் கொள்ளையடிப்பதற்கு இது வசதி. இந்த வசதியை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு — கட்சி மேலிடத்துக்கும், அது சுட்டும் குடும்ப மனிதக்குப்பைகளுக்கும் கப்பம் கட்டவேண்டும், ஆவன செய்யவேண்டும். மேலதிகமாக அவ்வப்போது மாநாடுகள் போட்டு மந்தைத் திராவிட ஆடுகளை அழைத்து பிரியாணி போட்டு செயல்வீரக் குண்டப் பாசறைகளை அமைத்து அதற்கு மேலிடப் பெருந்தகைகளைக் கூப்பிட்டு மாலை போட்டு:

குப்பையாக ஏதோவொரு மூலையில் சாக்கடையில் மிதக்கும் செத்த எலியாக இருந்த என்னை, மாவட்டச் செயலாளறாக்கி அளகு பாற்க்கும் இணமாணத் தளைவரே, பொருலாளரே! ணண்றீ! ணண்றீ!! ணண்றீஈஈஈ!!!

…என்கிற ரீதியில் உளறிக்கொட்டினால் போதும்; ஆனந்தமாகத் தீவட்டிக்கொள்ளையைத் தொடர்ந்துகொண்டிருக்கலாம். தம் பிள்ளைகளை திமுக தொழிலுக்கு அறிமுகப் படுத்தலாம். உபதொழில்களான கல்விப்பிணி, கான்ட்ராக்ட், சினிமாவேசைத்தனம், ரவுடிகும்பல் எனத் தொடர்ந்து வாழையடிகோழையாக தலைமுறைதலைமுறையாக அமோகமாக அசிங்கமாக அள்ளலாம். இதுதான் திராவிடக் கட்டுக்கோப்பு, கட்சியை நிர்வகிப்பது என்பவற்றின் அரிச்சுவடி என்பதை அறிந்து இன்புறுக. நன்றி.

ஆனால், சசிகலாக்கள் இன்னமும் இம்மாதிரி தமிழகமளாவிய ஒரு அமைப்பையும் திராவிடக் கட்டுக்கோப்பையும் வளர்க்கவில்லை; அதிகபட்சம் அவர்கள் தங்கள்  குடும்பத்தினருக்குள்ளே, சிலசமயம் வெளியாட்களுக்கு எனத்தான் இவர்கள் தங்கள் சிறுகொள்ளையை பாகப் பிரிவினை செய்துகொள்கிறார்கள். ஆகவே இவர்கள் செல்லவேண்டிய தூரம் இதிலும் அதிகம்.

ஜாதியை வைத்து அற்ப அரசியல்:

ஒரு விஷயம்: திராவிடம் என்பது தமிழகத்தைப் பீடித்த ஏழரையாம் திணை = கொள்ளைக்காரச் சுரண்டல்வாத கும்பலும் அவர்களைச் சார்ந்த இடமும்;  ஆகவே, அனைத்துப் பொருட்படுத்தத்தக்க  ஜாதியினரும் மதத்தினரும் இந்தச் சமஅதர்மப்பூங்காவில் – இரண்டாம் அடுக்குத் தலைமையில் இருக்கிறார்கள். ஆனால் – இவர்கள் அனைவரும் அந்தந்தச் சமூகப் பிரிவுகளில் அயோக்கியர்கள், கடைந்தெடுத்த கயவர்கள்.

இந்தக் கயமை இரண்டாம் அடுக்குத் தலைவர்களை வைத்துக்கொண்டு அந்த அந்தப் பிரிவுகளை மடக்கிப் போட்டு ஓட்டை அள்ளுவது என்பது ஒரு திராவிடத் தலைமை வழி; இந்த வழியில் அவ்வப்போது திராவிடர்களுடன் சேர்ந்து கபடியாட ஜாதிக்கட்சிகளும் (பாமக, விசிக), தீவிர/உளறல்வாத அமைப்புகளும் (தமுமுக, சிலபல ‘திருச்’சபைகள், திராவிடர்கழகம்++) வேறு!

ஆனால் – இந்த விகுதியிலும் சசிகலாக்கள் போகவேண்டிய தூரம் அதிகம்; கருணாநிதிகளைப் பார்க்கும்போது இவர்கள் பச்சிளம்குழந்தைகள்.

மானமற்ற தன்மை:

எவ்வளவு தடவை, கையும் களவுமாக மாட்டிக்கொண்டாலும், ஒன்றுமே நடக்காதது போல எக்காளச் சிரிப்புடன் அலைபவர்கள் கருணா நிதிகள்; விதம் விதமாகப் பொய் சொல்லி மாட்டிக் கொண்டாலும் தொடர்ந்து விடா முயற்சி செய்பவர்கள். முன்னொன்று சொல்லி பின்னர் அதனைச் சொல்லவேயில்லை என்பதும், ‘காகிதத்தைத் தானே எரித்தேன்’ என்பதும், யார் சரிபார்க்கப் போகிறார்கள், இறந்தவர்கள் வந்துவிடவா போகிறார்கள் என சரமாரியாகப் புளுகுகளை அவிழ்த்துவிடுவார்கள் இவர்கள். கனிமொழி போல மாட்டிக்கொண்டு திஹார் சிறையில் உட்காரவைக்கப்பட்டால் – அய்யோ அங்கு மேலை நாட்டு வகை கழிப்பறையில்லையே, இந்திய வகைக் கழிப்பானில் உட்கார்ந்தால் முட்டி வலிக்கிறதே என்பார்கள்…

திமுக மானமற்றமறவர்களை எட்டிப் பிடிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள் சசிகலாவில் நடராஜன்கள்… எப்படியெல்லாம் பீலா விடுகிறார் இந்தத் திரிக்கும்சடைக்கடவுள்! என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது. ஆனால், திருட்டுத்தனத்துக்காகத் தன்னிலை வாக்குமூலம் கொடுத்து பிலாக்கணம் வைப்பதில் ‘தேனை எடுத்தவன் புறங்கையை நக்கிவிட்டேன்’ கவிதைக்கும் ‘அக்கா, நான் என் உறவினர்களை இனித் திருடவிடமாட்டேன்’ என்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறதா என்ன?

மானமற்ற ஜென்மங்கள், வேறென்ன சொல்ல!

கல்வி மாமாத்தனம்:

இதில் இரு குடும்பங்களும் ஈடுபட்டுள்ளன – தமிழகத்துக் கல்வி மேம்படுதலில் எவ்வளவு கரிசனம் பாருங்கள்!

ஆனால் – திமுக குடும்பமும் அவர்களுடைய சொந்தச் சொத்தான திமுகவின் திராவிடச் சொம்புதங்களும் நடத்து வரும் பரந்துபட்ட கல்விக்கொள்ளை + கொலை என்பது படுமோசம். ஒரு எடுத்துக்காட்டாக – நான் பணி(!) புரிந்த பகுதியில் கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் இரு திருவண்ணாமலை கல்லூரிகள் (கு. பிச்சாண்டி வகையறாக்களின் எஸ்கேபி கல்வித் தொழிற்சாலைகள், எவ வேலு வகையறாக்களின் அருணை கல்வித் தொழிற்சாலைகள் – முன்னவரின் தந்தையார் ஒரு லாரி புரோக்கராக இருந்தவர், இவர் ரியல் எஸ்டேட் வகையறாக்களில் சிறிய அளவில் ஈடுபட்டவர்; பின்னவர் தனியார் பஸ் கண்டக்டராக இருந்தவர். இருந்தாலும் அசுரவுழைப்பினால் (=திராவிடம் என்றறிக!) திரவியம் தேடி இந்த கல்விக் கல்லறைகளைக் கட்டியிருக்கிறார்கள், என்னே அவர்களின் தொண்டு!); இந்தக் கல்லூரிகளில் படித்து(!) பாழடிக்கப்பட்ட இளைஞர்களைப் பார்த்து (அதிக பட்சம் ஓரிருவர், உதவாக்கரை தட்டச்சுக் குளுவான்களான உருமாறியிருக்கிறார்கள்; ஆனால் இவர்கள் விஞ்ஞானிகளாகியிருக்கக் கூடியவர்கள்!)  நொந்துபோய்தான் இப்படிச் சொல்கிறேன்; சொல்லச்சொல்லக் கேட்காமல் இந்தக் கல்லறைகளில் பிள்ளைகளைச் சேர்ந்த கூறுகெட்ட பெற்றோர்களைப் பார்த்து மனபேதலித்துப்போய்தான் இப்படி எழுதுகிறேன். நரகம் எனவொன்று இருந்தால் – தீவட்டிக்கொள்ளையடித்து கல்விபாவலா செய்துகொண்டிருக்கும் இம்மாதிரி உதிரிகளுக்கு – அதில் பிஸினெஸ் க்லாஸ் வகை இடம்தான் அளிக்கப்படவேண்டும்.  :-(((

இருந்தாலும், கல்விச்சேவையில் மிகமிக முந்தியிருப்பவர்கள் கருணாநிதிகளும் பிற மாவட்டச் செயலாள அல்லக்கைகளுமே!

‘கௌரவ’ டாக்டர் பட்டங்கள்:

சசிகலா குடும்பத்தில் யாருக்கும் இப்படிப் பட்டம் பட்டொளி வீசிப் பறக்கவில்லை; ஆனால் கருணாநிதியாருக்கு இருமுறை மாஞ்சா பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் அண்ணாமலை கொடுத்த டாக்டர் பட்டம் டீல் போது, ஒரு இளைஞன் (உதயகுமார்) படுகொலை செய்யப்பட்டான்.

இசுடாலிர் அவர்களுக்கும் லண்டன் ஐரிஷ்(!) இண்டர்னேஷனல்(!!) பல்கலைக்கழகம்(?!!) – ஒரு டாக்டர் பட்டத்தை அழுதிருக்கிறது. இதை திமுகவினர் எப்படித்தான் வாங்கினார்களோ? கட்சியின் மைனாரிட்டி அடிப்பொடி – எஸ்ரா துர்குணம் போன்ற யாரோ இதற்காக புத்தம் ‘புதிய ஏற்பாடு’ செய்திருப்பார்களோ என்ன எழவோ. ஹ்ம்ம்ம்… எது எப்படியோ, அதன் காணொலியைப் பார்த்து இன்புறவும்.

 

screenshot-from-2017-02-15-203711
(எப்படி, அசப்பில் உலகம் சுற்றும் வாலிபர், அல்லது சார்லீசாப்ளின் போலவேயில்லை நம் செல்லமான இசுடாலிர்? ஆனால், எனக்கே இந்த எழவுகளைப் பார்த்தால் கூச்சமாக இருக்கிறது; தமிழனின் மானம் இப்படியெல்லாமா கரையேற வேண்டும், சொல்லுங்கள்?)

இன்னொரு விஷயம்: இந்தப் பல்கலைக்கழக எழவுக்கு திமுகவினர் சரியாக துட்டு அழவில்லையோ? ஏனெனில் மேடையின் பின்புற பேனர் எழவில் 2002 என, முந்தைய வருடத்தில் தொங்கவிட்டதற்குமேல் ஒரு காகிதத்தில் 2003 என எழுதி ஒட்டியிருக்கிறார்கள்! என்ன நகைச்சுவை, போங்கள்!
screenshot-from-2017-02-15-204328

அதையும் கோணாமாணா என ஒட்டி ஒப்பேற்றியிருக்கிறார்கள்; திராவிட வெள்ளிமூக்குக் குதிரைகளுக்கு இதுபோதும் என நினைத்துவிட்டார்களோ என்னவோ!

இதிலிருந்தே தெரிகிறது – இந்தப் பட்டம் பறக்கும் பாடு, இந்த உதவாக்கரை பல்கலைக் கழகத்தின் தகுதி! அவர்களுடைய பட்டத் தொழிற்சாலை கந்தறகோளத்தின் மட்டரகம்.

… திராவிடஸ்தானில் யாருக்கும் வெட்கமில்லை. சசிகலாக்களில் டாக்டர்பட்ட கல்லா கட்டல் என்பது இனிமேல்தான் ஆரம்பிக்கவேண்டும்; அவர்கள் டாக்டர் பட்டம்விட ஆரம்பிக்க என் தாழ்மையான வாழ்த்துகள்!

சினிமா + நடிகக் கோமாளித்தனம்:

நடிப்பது என்பது மற்ற தொழில்களைப் போலவே ஒரு தொழில் மட்டுமே. பணத்துக்காக நாமெல்லாரும் (ஒருவர் மிச்சம் விடாமல்) ஆட்டம் போடுவதுபோலவே, அவர்களும் போடுகிறார்கள் – அவ்வளவுதான். நாமெல்லாரும் கூலிக்கு மாரடிக்கும் வேலைக்காரர்கள்தாம். சரி. அவர்கள் போடும் பவுடரை, வீரச்சண்டைகளை, உருக்கவசனங்களை – போடாத உடைகள் மூடியிருக்கக்கூடிய பிரதேசங்களை – எல்லாம் பார்த்து வெறித்து நாமெல்லாரும் குதூகலப்படுகிறோம். ஆகவே, இந்தக் கிளர்ச்சி+பொழுதுபோக்கு அம்சங்களுக்குமேல் அவர்களுக்கு உன்னதம் தரவேண்டியதில்லை.

…சசிகலாக்களை வேலைக்காரிகள் என இளக்காரமாகப் பேசுவதும், கருணாநிதிகளை வசனகர்த்தாக்கள், இசுடாலிர்-எம்ஜியார்-ஜெயலலிதாக்களை நடிகர்கள், கலைத் தொண்டர்கள் என்றெல்லாம் போற்றுவதும் – நம் இழி நிலையையே, நம் பேடித்தனத்தையே, அதிகபட்சம் நம் அறியாமையையே குறிக்கிறது.

(இந்த விஷயம் குறித்து எனக்கு ஒரு ஆச்சரியம்! எனக்கு,  சொற்ப நபர்கள்தாம் கடிதம் எழுதும் பாவத்தைச் செய்பவர்கள், இவர்களில் ஒருவர் – சசிகலாவை இழிசொற்களால் பழிக்கும்போது சங்கடமாக மட்டுமல்ல, கோபமாக இருக்கிறது. உடலுழைப்பை நாம் எவ்வளவு மோசமாக மதிக்கிறோம் எனத் தெரிகிறது. ‘ஆஃப்டர் ஆல், சசி ஒரு வேலைக்காரிதானே!‘ எனப் பேசும் பண்பிலாப் பேடிகளைப் பார்த்தால் எனக்கு அசிங்கமாக இருக்கிறது. என்ன மேட்டிமைத்தனம்! அற்பர்கள்! சசிகலாவை ஒரு வளரும் கருணாநிதி எனப் படுமோசமாகத் திட்டலாம், அது சரியே – ஆனால் உங்களுடைய சொந்த அசிங்கமான உள்ளார்ந்த அடுக்குப்பிரிவு உணர்ச்சியை இங்கு கொண்டுவராதீர்கள் பேடிகளே, நன்றி! ஒருகாலத்தில் ஜெயலலிதாக்களும், சசிகலாக்களும், ஏன் கருணாநிதியுமேகூட – உழைத்துச் சம்பாதித்திருக்கிறார்கள், வேலைக்காரர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது நல்லவிஷயம்தானே!)

கருணாநிதிகள் – தயாரிப்பிலும், நடிப்புக் கோமாளித் தொழிலிலும் (இசுடாலிர் + அவர் மகர்கள் நடித்த படங்களின் சிறு பகுதிகளைப் பார்த்து வாந்தியெடுத்திருக்கிறேன், நன்றி!), தொலைக்காட்சி மொத்தவியாபாரத்திலும் அமோகமாக ஈடுபட்டு வருகிறார்கள். எனக்கு ஒரே புளகாங்கிதம்.

சரி. சசிகலாக்கள் – அப்படியிப்படி என வினியோக உரிமைகளிலும், தியேட்டர் தொழிலிலும்  ஈடுபட்டிருக்கிறார்கள்; ஆனால் இதெல்லாம் கருணாநிதிகளைப் பொறுத்தவரை பிச்சைக்காசு. கருணாநிதிகளுடைய  ஆழமும் திருட்டுவீச்சும் இந்தத் துறையிலும் மிகமிக அதிகம். பாவம் தமிழகம்.

கமுக்கம்:

சசிகலாக்களைப் பொருத்திப் பார்க்கும்போது கருணாநிதிகள் காரியத்தில் (=கொள்ளை) குறியாக இருப்பவர்கள்; வெட்டிப் பேச்சுகளில், சுயதம்பட்டங்களில் அதிகம் ஈடுபடாமல் (ஆனால் மற்றவர்கள் கொடுக்கும் கேனத்தனமான புகழ்ச்சியில் புளகாங்கிதம் அடைபவர்கள்), தம் உழைப்பில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள். அறிவியல் ரீதியாக ஊழல் செய்வதில் பழம் பெருச்சாளிகள். கமுக்கமானவர்கள். பணபலத்தையும் பிணபலத்தையும் அதிகமாக வெளிக்காட்டாமல் கமுக்கமாக இருப்பவர்கள். (இவர்களில் மாறன்கள் விதிவிலக்குகள்)

முன்னவர்களுக்குப் பேச்சு அதிகம். தம்பட்டம் அடித்துத் தங்களது சுயசொரூபத்தை வெளிக்காட்டிவிடுபவர்கள், பாவம்! ;-) கமுக்கம் குறைவு. அறிவியல் ரீதியாக இவர்கள் போகவேண்டிய தூரம் அதிகம்.

சிறுபான்மைமுதல்வாதம்:

இதனை அப்பட்டமாகச் செய்பவர்கள் கருணா நிதிகள்; அதுவும், சிறுபான்மையினரில் போற்றத்தக்க பலர் இருக்க, அவர்களில் பொறுக்கிமுதல்வாதிகளையும் வன்முறையாளர்களையும், படிப்பறிவற்றவர்களையும் மட்டுமே ஊக்குவிப்பவர்கள்; மேலும், இந்த  லும்பன்களின் நடையுடை பாவனைகளை மேற்கொண்டு அயோக்கியத்தனத்துடன் — பரந்துபட்ட சிறுபான்மையினரின் நீண்டகால நலனுக்கு துரோகம் இழைப்பவர்கள் இவர்கள்.

இதில் சசிகலாக்கள், சிறு பிள்ளைகள் மட்டுமே!

மிரட்டல்கள் அதட்டல்கள் உருட்டல்கள்:

கருணாநிதிகள் இதில் பாரம்பரியம் மிக்கவர்கள்; உதயகுமாரின் பெற்றோர்களை விட்டு உதயகுமாரின் பிணத்தை – அது தங்கள் மகனுடையது அல்ல எனச் சொல்லவைத்ததிலிருந்து… …அண்மையில் கனிமொழி, டாடா குழுமத்தை மிரட்டி, தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரி எதிரில் இருக்கும் பல ஏக்கர் பெறுமான வோல்டாஸ் நிலத்தை கபளீகரம் செய்தது முதல் — பலப்பல அடாவடி விஷயங்களில் அனுபவஸ்தர்கள்.

சசிகலாக்களும் அப்படியே; எனக்குத் தெரிந்தே கங்கைஅமரன் தோட்டத்தைக் கபளீகரம் செய்தது முதல், கல்ராயன் மலையில் ஆயிரக் கணக்கில் ஏக்கரா ஏக்கராவாக வாங்கிக் குவித்திருக்கிறார்கள்; ஆனாலும் கருணா நிதிகள் போல கூட்டுக் கொள்ளையில்லை. ஆஃப்ரிகா என்றெல்லாம் நிலபுலங்களை உருட்டிமிரட்டி வாங்கவில்லை.

உள்ளடி சர்ச்சைகள்:

கொள்ளைப் பாரம்பரியம் மிக்க பெருங்குடும்பமாதலால் – அதுவும் பேரண்டப் பேராசை பிடித்த பிசாசுகள் ஏகோபித்து நிரம்பியிருப்பதால் கருணாநிதிகளுக்கு இடையே அவ்வப்போது பாகப் பிரிவினை, வாய்க்கால் தகராறுகள் என எழும்பிக் கொண்டே இருக்கும். ஒதுக்குதல், திட்டுதல், அரவணைத்தல் என நடந்துகொண்டே இருக்கும். ஆனால், அதே சமயம் பிணங்களுக்கு வாய்க்கரிசி போடுவது போல – திருட்டுச்சொத்து நியாயமான(!) முறையில் அவ்வப்போது பகிர்ந்தளிக்கப்பட்டு – பின்னர் ‘இதயம் இனித்து, கண்கள் பனித்து‘ குடும்பமே ராசியாகிவிடும்.

ஆனால், நானறிந்த வரையில் சசிகலாக்களுக்கிடையே இப்படிப்பட்ட பாகப்பிரிவினைத் தகராறுகள் எழும்பவில்லை. ஏனெனில் அவர்கள் அடைய வேண்டிய கருணாநிதிய இலக்கு நெடுந்தூரத்தில் இருக்கிறது. ஆகவே திரவியம் சேர்ப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள்.
பாவம், அவர்களுக்குத் தெரியாது – கருணாநிதிகளின் நிதியில் கால்வாசி கூட அவர்களால் எட்டிப்பிடிக்கமுடியாது என்பது. முட்டாட்கள்.

கலைச் சேவை:

கருணாநிதிகளுக்கு – கவிதாயினிகளாகவும், திரைச்சதை வசனகர்த்தாக்களாகவும், பழுத்த இலக்கியவாதிகளாகவும், திரைப்பட நடிகர்களாகவும் இன்னபிற கலைச்சேவை பல செய்வதாகவும் ஒரு சுய அபிமானம் இருக்கிறது. இது எனக்கு அதிகப்படியான படபடப்பைத் தருகிறது; கனிமொழியின் பொய்ப்பம்மாத்துக் கவிதைகளைப் படித்தும் ரோமாபுரிராணியைப் பார்த்தும் சித்தம் கலங்கிப் போயிருக்கிறவன் நான்.
ஆனால், சசிகலாக்களுக்கு இம்மாதிரி பிரமையோ பிம்பமோ இல்லவேயில்லை. நடராஜனார் அவ்வப்போது இலக்கியம் அலக்கியம் என அவ்வப்போது அலைந்துகொண்டிருந்தாலும் – சசிகலாக்கள், இப்படி வெறிபிடித்து டமில்ட்டாயைப் பகீரங்கமாகக் கற்பழித்தே தீரவேண்டும் எனக் கருணாநிதிகள் போல அலையவில்லை. கடவுளுக்கு நன்றி.

கொலைச்சேவை (அல்லது) குடும்பத்தினரால் ஏற்பட்ட/தொடர்புள்ள ‘சந்தேகாஸ்பதமான’ சாவுகள்:

கருணாநிதி தொடர்பாகப் பலப்பல கொலைகள் – எனக்குத் தெரிந்தே இது உதயகுமாரிலிருந்து ஆரம்பிக்கிறது; அதற்கும் முன்னமேயும் கூட இப்படித்தான், ஆனால் அவற்றைப் பற்றி எனக்குச் சரியாக நினைவில்லை; தற்காலத்தில் அழகிரி தொடர்பாகப் பல கொலைகளும் (தோழர் லீலாவதி, தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு, மற்றும் சிலபல தாகிருஷ்ணக் கொலைகள்), இசுடாலிர் தொடர்பாக (எகா: அண்ணா நகர் ரமேஷ்; மிசா சமயம் சிட்டிபாபு இந்த மனிதரைக் காப்பாற்ற தன் உயிரைக்கொடுத்தார் எனவொரு கதை இருக்கிறது! ஏன் இசுடாலிர் அவர்களே அந்த அடிகளை சிட்டிபாபு வாங்காமல் தடுத்திருக்கக்கூடாதா? இதென்ன பெட்டைத்தனம் – ஒருவர் பின்னால் திராவிடத்தனமாக ஒளிந்துகொள்ளுதல்? இதற்குப் போய், மிசா கொடுமை கடுமை என்றெல்லாம் கதை! தேவையா??), கனிமொழி 2ஜி விவகாரம் தொடர்பாக (எகா: சாதிக் பாட்சா)  என அமோகமாக இருக்கின்றன. இவையெல்லாம் வழக்காக மாறித் தேய்ந்து நீதிமன்றங்களில், போலீஸ்வட்டங்களில் என அமைதியாக இறந்துவிட்டன அல்லது கோமாவில் இருக்கின்றன. ஆமென்.

எனக்குத் தெரிந்து இதுவரை சசிகலாக்கள் இப்படிப்பட்ட நேரடி மக்கட்தொகைக் குறைப்பு முயற்சிகளில் ஈடுபடவில்லை. (விவரஸ்தர்கள் சொன்னால் கேட்டுக்கொள்கிறேன்)

குடும்பத்தினர் மீதான ‘கொலை’ முயற்சிகள்:

இவை, கருணாநிதிகளின் நகைச்சுவை உணர்ச்சியையும், உயிர்ப் பயத்தையும், குள்ள நரித்தனத்தையும் கோடிட்டுக் காண்பிப்பவை.

இதன் பேராசான் – குடமுருட்டி குண்டு புகழ் கருணாநிதி அவர்களே! தேவையென்றால் ‘என்னைக் கொல்ல முயற்சி’ எனும் புளுகு மூட்டையை அவ்வப்போது அவிழ்த்து விடுவார் அவர்; வை ‘வைகோ’ கோபால்சாமி விடுதலைப்புளிகளுடன் சதிசெய்து கொலை செய்யமுயற்சி என்பதும் இந்த மாய்மாலம்தான்.

சிலபல வருடங்களுக்கு முன் இசுடாலிர் தொடர்பாகவும் இந்த டகீல் பொய் ஒன்று அரங்கேறியது. அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்திருக்கும் கைப்பிள்ளை, வேறென்ன சொல்ல; மதுரை ரயில் நிலயத்தில் யாரோ ஒருவர் இவரைக் கொலை செய்யக் கத்தியோடு வந்ததாகப் புரளி. (சும்மா கத்திக்கினே வந்த ஒருவரைப் பார்த்து இசுடாலிர் பயந்துவிட்டாரோ என்னவோ!)

ஆனால், எனக்குத் தெரிந்தவரை – இந்தச் சசிகலாக்கள் இப்படி நடுங்கல் பிலாக்கணப்புராணத்தை ரீல் சுற்றியதில்லை.

பிற, அதிராவிடப் பிரதேசங்கள், கொள்ளைகள்:

பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் கருணாநிதிகளின் சொத்துகளும் வங்கிக்கணக்குகளும் இருக்கும் அளவு சசிகலாக்களுக்கு இருக்கிறதா என்பது எனக்குச் சந்தேகமே.

எதிர்காலங்களில் – ஆட்சி கையில் இருந்தால் இம்மாதிரி விஷயங்களில் இவர்களும் முன்னேறுவார்கள் எனத்தான் படுகிறது.

பலப்பல தொழில்களில் முனைவது (=முயங்குவது):

தங்கள் அதிகார பலத்தை  அமோகமாக துஷ்பிரயோகம் செய்து  பல தொழில்களில் ஈடுபட்டு வருபவர்கள், கருணாநிதிகள். சாராயம் ஷாம்பூ கல்வி கோழி தொலைக்காட்சி மணல் க்ரானைட் ரியல் எஸ்டேட் எனப் பலப்பல நானாவிதமான ‘தொளில்’களில் ஈடுபட்டு திரவியம் தேடுபவர்கள்.

அண்மையில் மும்பய் துறைமுக அலுவலகத்து உச்சாணிக்கிளை ஆசாமி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். திமுக அங்கும் காலைப் பதித்திருக்கிறது என்றறிந்து இன்புற்றேன்; டிஆர் பாலு + கனிமொழி தில்லியில் ‘பணி’யாற்றுக்கொண்டிருக்கும்போது – இப்படி ஒவ்வொரு துறைமுக ட்ரஸ்ட் எழவிலும், தங்கள் பிரதிநிதியை உட்புகுத்தியிருக்கிறார்கள் என அறியப்பெற்றேன். சென்னைத் துறைமுகத்தில் அள்ளுவது கனிமொழி அவர்களுக்குப் போதவில்லை போலும், பாவம்! (இந்த கருணாநிதிகளுக்கு என்ன இப்படியொரு தாங்கொணா பற்றாக்குறை மனப்பான்மை! இந்த விஷங்களெல்லாம் எனக்கு ஜென்மத்துக்கும் புரிபடப் போவதில்லை!)

ஆனால், சசிகலாக்கள் இந்த மாதிரி தங்கள் வலையை விரிக்கமுடியவில்லை, இதுவரை. ஏனெனில் அவர்கள் குடும்பம் – கருணா நிதிகளைப் போல வீச்சும் வீச்சமும் அதிகமானதொன்றல்ல.

அதிகாரவர்க்கத் தொடர்புகள்:

தங்கள் ஆட்சி பலத்தையும் குண்டர்+பண பலத்தையும் வைத்துக்கொண்டு – தங்கள் ஆட்களுக்கு அரசுவேலையும், ஆமாஞ்சாமிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் அடியாட்களுக்கும் கொழிக்கும் பதவிகளும் கொடுத்து (எகா: ஜாஃபர் ஷெரிஃப், இன்பசாகரன்) அதிகாரவர்க்கத்தின் அனைத்து அடுக்குகளிலும் கணிசமான அளவு அற்பர்களாகப் பொறுக்கிப்பொறுக்கி – பொறுக்கி எடுத்து – அரசு இயந்திரத்தையே உதிரிவர்க்கமாக ஆக்கியதில் பெரும்பங்கும் பொறுப்பும்(!) கருணாநிதிகளையே சாரும்.

இன்னமும் பலர் இப்படி இருப்பதால் அவர்களுக்கு ஒரு கணிசமான ஆதரவு இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் – நினைத்த காரியத்தை, ஆட்சியில் இருக்கிறார்களோ இல்லையோ ஆனந்தமாகச் சாதித்துக்கொள்ளலாம். அரசினுள்ளிருந்தே பொதுமக்களையும் சொத்தையும் அசிங்கமாகத் தாக்கும் திராவிடப் புற்று நோய்  இது.

…ஆனால் சசிகலாக்களும் கடந்த பலவருடங்களாக இந்தத் அரசின் ஆன்மா கையாடல் விஷயத்தில் முன்னேறிவருகின்றனர்.

பத்திரிகை, ஊடக பலம்:

கருணாநிதிகளுக்கு, பாரம்பரியமாகவே(!) ஊடக பலம் அதிகம்; இப்போது தொலைக்காட்சி அலைவரிசைகள் வேறு. அமோகமாக ‘அடிக்கறாங்க, அடிக்கறாங்க’ என ரீல் சுற்றலாம். தமிழர்களை அறியாமையில் ஆழ்த்தலாம். மசுர்க்கூச்செறிக்க வைக்கலாம். ஆனந்தம்.

சசிகலாக்கள் இந்தத் தொழிலில், பரப்புரையில் சிறுவர்கள். பப்பரப்பாவைக் கிளப்பிவிட்டே காலட்சேபம் செய்வதில் கற்றுக்குட்டிகள், இருந்தாலும் தேறிவிடுவார்கள்.

பத்திரிகை பலம் என்பது கருணா நிதிகளுக்கு அதிகம். மேலும் உடன்பிறப்புகள் (= மாமாகூலிக்கு மாரடிக்கும் பேடிகள் அல்லது போக்கத்த விசிலடிச்சான் குஞ்சப்பர்கள்) சமூகவளைத்தல எலிகளாகவும் பெருச்சாளிகளாகவும் உலாவரும் போக்கும் இருக்கிறது. சசிகலாக்களுக்கு இந்தப் பலம்(!) ஜாதிபலமாக மட்டுமே இருக்கிறது, கட்சியினால் இல்லை.

அனுபவம்:

இந்த ஒரு விதத்தில் கருணா நிதிகளுக்கும் சசிகலாக்களுக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம். அறிவியல் பூர்வமாக ஊழல் செய்வதை தடங்களை மறைப்பதை ஒரு கலையாகவே கருதி அதில் விற்பன்னர்களாக இருப்பவர்கள் நம் கருணாநிதிகள்.

ஆனால், பாவம் சசிகலாக்கள் – மாட்டிக்கொண்டு முழிக்கிறார் பாருங்கள்! ;-)

கருணாநிதிகளின் அபாரமான மூளையைப் பற்றி, எங்கே எந்த சாமிக்குப் படையல் வைத்தால் பைசா தேத்தலாம் என்ற துல்லியமான மதிப்பிடுதல்கள் பற்றி – ஓடும் மீன்களையும் உண்டு, உறுமீன் வரும்போது அதனையும் கபளீகரம் செய்து ஏப்பம் விடும் தன்மை பற்றி – உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு பிரமிப்புதான்.

ஆனால் நரகம் எனவொன்று இருந்தால் – அதில் திராவிடர்களுக்கு எனத் தனியாக சுடச்சுட விசேஷ எண்ணெய்க் கப்பரைகள் இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. பாவிகள்! பாவப்பட்ட தமிழர்களை ஞான மலடுகளாகவும், பிச்சைக்காரர்களாகவும், அயோக்கியர்களாகவும் ஆக்கிவிட்டார்கள்! இவர்கள் குடும்பங்கள் விளங்கவேகூடாது!

இந்த ஆற்றாமைச் சாபத்துடன், உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

போங்கடா நீங்களும் வொங்களோட தெராவெடக் குடும்பக் கொள்ளையும்… :-(

திராவிட (எதிர்ப்)பக்கங்கள்…

7 Responses to “கருணாநிதி பெருங்குடும்பக் கருமாந்திரம் >> சசிகலா குறுங்குடும்பக் கருமாந்திரம்: சில குறிப்புகள்”

 1. Anonymous Says:

  ராம், திருவண்ணாமலை எச்கேபி, கல்லூரி எச்கேபிகருணா என்பவரால் நடத்தப்படுகிறது. இவர் திமுக சார்பினராக இருந்தாலும் நேர்மையானவர். எனக்கு அறிமுகமானவர். இலக்கிய ஆர்வலர். உங்கள் மதிப்புக்குரிய ஜெயமோகன் இவருடைய சிறுகதையை ரசித்து பரிந்துரை செஉதிருக்கிறார்.

  அந்தக் கல்லூரிக்கெஇத்ரான உங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்விர்கள் என நம்புகிறேன்.

 2. ஆனந்தம் Says:

  கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் உள்ள தொழில்முறை வேறுபாட்டின் தொழில்முறை ரகசியம் இதோ: விமலாதித்த மாமல்லனின் முகநூல் பக்கத்திலிருந்து:

 3. ஆனந்தம் Says:

  தளத்தின் அமைப்பை மீண்டும் மாற்றியதற்கு நன்றி. இதுதான் பழகிவிட்டது. :-)))

 4. selvarajan Says:

  அய்யா …! அற்புதமான பதிவு … // கருணாநிதிகளின் கயமை உச்சங்களை எட்டிப் பிடிக்க, சசிகலாக்கள் செல்லவேண்டிய தூரம் மிக மிக மிக அதிகம்! // உண்மை … உண்மையிலும் உண்மை … ” சசிகலா & கோ ” மட்டுமல்ல — வேறு எந்த கொம்பனாலும் இந்த பிரபஞ்சத்தில் எட்டிப் பி ….. டி ….. க் ….. க …… முடியவே முடியாது …. !!
  // உதயகுமாரின் பெற்றோர்களை விட்டு உதயகுமாரின் பிணத்தை – அது தங்கள் மகனுடையவை எனச் சொல்லவைத்ததிலிருந்த… // இதில் மகனுடையவை ” அல்ல ” என்று தானே இருக்க வேண்டும் …. ?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s