(அல்லது)

குண்ஸாக: ஒரு சராசரி (அதிசராசரி!) விஜய்குஜய்(ரசிகன்) = முட்டாக்கூ.

(மன்னிக்கவும் – தேவையானால் தொடர்ந்து படியுங்கள்… பாவம்…)

…இக்காலங்களில் – பொதுவாகவே எனக்கு அவ்வளவு உபரி நேரம் இல்லாத காரணத்தால், பல, எனக்கு மிகவும் ப்ரீதியான/உவப்பான விஷயங்களைக் கூடச் செய்ய முடிவதில்லை.

(இந்த ஒத்திசைவெழவு எனும் பயிற்சி தொடர்ந்து எழுதப்படாமல் இருப்பதற்கும், ஆகவே பாவப்பட்ட சகஏழரைகளின் ரத்த அழுத்தம் சீராகத் தொடர்வதற்கும் – இந்த க்ரஹஸ்தி விஷயமும் ஒரு காரணம்/சால்ஜாப்பு; கடந்த நான்கைந்து மாதங்களில், ஒரேயொரு முறைதான் வீட்டைச் சுற்றி அரை கிலோமீட்டர் ஆர வட்டம் தாண்டி சென்றிருக்கிறேன் – இதுவானது, சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு, இளம் நண்பர் ஒருவரைச் சந்திக்கிறேன் பேர்வழியென்று ஹோட்டலொன்றில் நான் காணாததைக் கண்டவன்போல மூச்சுமுட்டத் தின்றதில் முடிந்தது – இளைஞருக்கு வாயடைத்துப் போய்விட்டது என நினைக்கிறேன், பாவம், என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை! இருந்தாலும், வீட்டுக்கு வந்து மனக்கலக்கத்துடன் உடல் எடையைப் பரிசீலித்துப் பார்த்தேன் – அதேயதே 49 கிலோகிராம்தான், நல்லவேளை; கொஞ்சம் நிம்மதிதான்…)

…வழக்கம்போல எங்கோ சென்றுவிட்டேன்.

இருந்தாலும் – சிலபல நண்பர்கள் உதவி எனக் கேட்டு வரும்போது என்னால் தட்டிக் கழிக்கமுடிவதில்லை. பிரச்சினை, பிரச்சினை

இப்படியாகத்தானே.

ஒரு தமிழ்மாமா செம்மாமா (இவர் ஏழரைகளில் ஒருவரல்லர் என்றாலும் சிலபல வருடங்களாகத் தொடர்பில் (விட்டுவிட்டு) இருப்பவர் –  ஒத்திசைவு மூலமாகத் தான் நரிமுகம்) தன் அசமந்த மருமகனுக்குக் எஞ்ஜினீயரிங் கணக்கு தொடர்பாக சிலபல சந்தேகங்கள் இருப்பதாகவும் நான் அதற்கு உதவ முடியுமா எனவும் கேட்டார். (இவர் அடிப்படையில் நல்ல ஆசாமிதான்… ஒருவிதமான நல்லெண்ணத்துடன் தான் இந்த கோர்த்துவிடுவதைச் செய்திருப்பார் என ஒருமாதிரி சந்தேகிக்கிறேன்)

…நானும் ஏதோ ஒரு மூளைகலங்கிய தருணத்தில் சரி என்று சொல்லிவிட்டேன். அது மட்டமல்ல – அவர் சொன்ன விஷயங்களுக்கு அதிகபட்சம் 2-3 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் எனக் கொஞ்சம் தப்புக் கணக்கு போட்டுவிட்டேன் – இத்தனைக்கும் நான் 12ஆம் வகுப்புக்குமேல் எந்தப் பிள்ளையுடனும் இந்த ‘ட்யூஷன்’ வகையறாவைச் செய்வதேயில்லை – ஏனெனில் நிறையப் பட்டிருக்கிறேன், சுயநம்பிக்கை மிக்க இளம் மூடர்களைச் சந்திப்பது என்பது வாழ்க்கையில் விரக்தியைக் கொடுப்பதொன்றல்லவோ?

(இத்தனைக்கும் ஜொலிக்கும் சிலபல இளைஞர்களுடன் அப்படியும்இப்படியும் பழகும் வாய்ப்பு இருந்தாலும் 10 ஜொலிப்பான்கள் தரும் சந்தோஷத்தை ஒரேயொரு விஜய்/சூர்யா/சீமான் வகையறா இருட்டுத்திரை ரசிகன் லெஃப்ட் ஹேண்டால் அனாயாசமாக அழித்தொழிப்பான் என்பதையும் அறிவேன்)

…இருந்தாலும், பையனுடன் துளிக்கூட, ஒரு முன்னோட்டமாகவே கூடப் பேசாமல், அவனுடைய ஐக்யூவை அனுமானிக்காமல், அடிப்படை ஞானத்தைக் கணிக்காமல், அவனுடைய தொழிலறத்தைப் பற்றித் துளிக்கூட அறியாமல் ஒப்புக்கொண்டேன். தேவையா? (நான் அடுத்தமுறை போகவேண்டிய தூரம் மிக அதிகம்!) 

செய்வினை தன்வினை, தன்னைச் சுட்டேவிட்டது.

பையனுக்கு கணிதத்தின் பல அடிப்படைகளில் ததிங்கிணத்தோம். எப்படித்தான் இவன் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பான் என்பதே எனக்கு மூச்சுமுட்டவைத்த ஆச்சரியம்.

அந்தப் பையனுடன் பேச ஆரம்பித்த இரண்டு நிமிடங்களிலேயே… என்னால் குத்துமதிப்பாக அனுமானிக்கப் பட்ட 2-3 மணி நேரம் என்பது, குறைந்த பட்சம் 2000-3000 மணிநேரமாவது ஆகும் எனத் தெரிந்துவிட்டது.

ஏன்?

மாணவன் இந்த ப்ளடி ஹையர்ஸெகண்டரி ‘படித்தது’ சென்னை சார் அரசுப் பள்ளி ஒன்றில். ஆங்கிலமீடியம் (ஒரு கேடு). படுபீதியளிக்கும் அளவுக்கு 90%+ மதிப்பெண்கள். ஆச்சரியம், ஆச்சரியம். கணிதத்தில் 95%! (எனச் சொன்னான்!)

இருந்தாலும்.

அடிப்படை திரிகோணமிதி எழவுகளில் அளவுக்கதிகமான கற்பனை. stonepalm.

ஏதோ ஒரு தொகையீட்டு நுண்கணித (Integral Calculus!) விஷயத்தைப் பற்றி ஆங்கிலத்தில் அவனுக்கு விவரணை கொடுத்துக் கொண்டிருக்கும் போது கீழ்கண்ட கேள்வி எழும்பியது….

(Cosine(A) + Sine(A))2 = ? (அவனிடம் நான் எதிர்பார்த்தது 1+Sine2A போல…)

ஆனால், அவன் (Cosine(A))2 = Cosine2 x A2 எனச் சொல்ல ஆரம்பித்தானே பார்க்கலாம்!

எனக்கு விக்கித்துப் போய்விட்டது!

சில வினாடித் திகைப்புக்குப் பின், எப்படி தம்பி அப்படிச் சொல்றீங்க எனக் கேட்டதற்கு, Cosine, A ரெண்டையும் பெருக்கினால் வருவது CosineA தானே சார் என்றான்! “product of Cosine & A தானே CosineA?”

விதம்விதமாக, கலர்கலராக அவனுக்கு ஃபங்க்ஷன் என்றால் என்ன, அதற்குக் கொடுக்கப்படும் ஆர்க்யுமெண்ட்ஸ் என்பவை யாவை? அந்த பேராமீட்டர்களை அந்த ஃபங்க்ஷனுக்குக் கொடுத்தால் அவை என்ன செய்யப்படும், அந்த ஃபங்க்ஷன் என்ன கொடுக்கும் என்றெல்லாம்… 

கொடுத்த பல எடுத்துக்காட்டுகளில் நான் பொறுமையாக விளக்க முயன்ற இந்த எழவும் ஒன்று: ப்ரெட் டோஸ்டர் என்பது ஃபங்க்ஷன் போல, அதில் நாம் போடும் ப்ரெட் ஸ்லைஸ் ஒரு பேராமீட்டர். அந்த டோஸ்டர், அந்த ப்ரெட்டை எடுத்துக் கொண்டு மொறுமொறுவென வறுக்கப்பட்ட ப்ரெட்டை அளிப்பதில்லையா? நிறைய டோஸ்ட் செய்யப்பட்ட ப்ரெட் ஸ்லைஸ்கள் வேண்டுமென்றால், ப்ரெட்டைத்தான்அதிகமாக வாங்க வேண்டி வருமே தவிர… அத்தனை டோஸ்டர்கள் தேவையல்ல அல்லவா? அதைப்போலத்தான் இந்த கொசைனையும் அணுகவேண்டும்… கொசைன் ஒரு ஃபங்க்ஷன்… அந்த ஏ என்பது ஒரு கோணம்/ஆங்கிள்…  இந்த கோணத்தை இன்னொரு பளப்பளா டோஸ்டரில் இட்டால், அது ஜாமையும் வெண்ணையையும் தடவித் தரக்கூடும்… ஒருமாதிரி சைன் ஃபங்க்ஷன் போல…

… … அவன் மரமண்டையில் எதுவும் ஏறவில்லை. என் மரமண்டைக்கும் அவன் மூளையில் ஏற்றும் படிக்கு விளக்கத் தெரியவில்லை! ஸப்பாஷ், ஸர்யான போட்டீ!

இருந்தாலும். வேதாள விக்கிரமனாகிய நான் என் முயற்சியைக் கைவிடவில்லை….

சரி. Cosine60 என்பதற்கு உன் வழியை உபயோகித்து எது என்பதைப் பார்க்கலாமா?

“(Cosine60)2 = Cosine2602 = Cosine23600 = …. … இதை ஸிம்ப்ளிஃபை செய்யணுமா?”

வேண்டாம் – ஆனால் உன் கேல்குலேட்டரில் Cosine60ஐ சரிபார்.

பார்த்தான். “சார் இது 0.5ன்னு சொல்லுது.”

அப்படியா சரி.  Cosine3600 க்கு என்ன சொல்லுது?

“ஐயோ!  இது ஒண்ணுன்னு காமிக்குது!” 

அடப் பாவமே என்றேன்!

“ஆனால் Cosine2 வோட வேல்யு என்னன்னு தெரியலையே! இந்த டப்பா பழய கால்குலேட்டர கடாசிட்டு புது கேல்குலேட்டர் வாங்க டாட்டியைக் கேக்கறேன்!

!!!!

அப்ப தம்பி… இதை எப்படி அணுகுவீங்க? CosineA/SineA =? இத Co எனச் சுருக்க முடியுமா?

இதற்கு அவன் “ஆமாம்” என்றானே பார்க்கலாம்!!

நான் இத்துடன் விட்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்தேன்! எனெனில் அவன், பிற எல்லா திராவிடலைகளைப் போலவே (செங்கோட்டையன் உட்பட) விஜய்குஜய் ரசிகன் என அவனுடைய மாமா என்னிடம் சொல்லியிருந்தார்! (இந்த ப்ளடி விஜய்வியாதி ஒரு பெருந்தொற்றுப் பெருங்கொடுமைதான்!)

தம்பீ, உங்களுக்கு இந்த எடுத்துக்காட்டு பிடிக்கலாம் என, பசும்பலகையில்  விஜய்(ரசிகன்)=முட்டாக்கூ என எழுதினேன்.

விஜய்ன்றது ஒரு ஃபங்க்ஷன், ரசிகன் என்பது  அதற்கு ஒரு ஆர்க்யுமெண்ட் – இந்த ஃபங்க்ஷன் இந்த ஆர்க்யுமெண்டை எடுத்துக்கொண்டு வெளியே காரித் துப்பும் விஷயம் ஒரு முட்டாக்கூ…

அவனுக்கு (என் விருப்பக் குறிக்கோள் படியே!) கொஞ்சம் சோகமாகி விட்டது. “நான் விஜய் ரசிகன்” என்றான்… “அவரு ஒரு பெரிய்ய தலைவர்” என இழுத்தான்…

எனக்கும் கொஞ்சம் சங்கடமாகிவிட்டதால், சரி, விஜய்குஜய்க்கு பதிலா சூர்யா என வெச்சுக்கலாமா? அதில் ஒரு பிரச்சினையுமில்லையே!

அவன் மகிழ்ச்சியுடன், “சரி சார்!”

சூர்யா(ரசிகன்) = முட்டாக்கூ

இதை ரெண்டு பக்கத்திலும் 2ஆல பெருக்கினா…

2Xசூர்யா(ரசிகன்) = 2Xமுட்டாக்கூ

இதன் இடதுபக்கத்த உன்னோட வழில உள்ளுக்குள்ள பெருக்கினா…

2Xசூர்யா(2Xரசிகன்) – அதாவது ஒரு சூர்யா போன்ற ஒத்தை பொறுக்கியையே தமிழகம் தாங்க முடியாது… ஆனாக்க… … உன் மெதட்ல ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒரு சூர்யான்னு ஆய்ட்டா… அத விட.. இடதுபக்கம் நாலு முட்டாக்கூ, வலதுபக்கம் ரெண்டு முட்டாக்கூ… இது சரியாகவா இருக்கு?

அவன் சிரித்துவிட்டான். நானும் சிரித்தேன். 

“ஆனா, எங்க விஜய் மாஸ் சார்!”

அவனுக்கு ஏதாவது புரிந்ததா எனத் தெரியவில்லை. ஆனால், சுபம்.

அடுத்த முதலையமைச்சர்  சோசப்பு விசய் வாள்க!

-0-0-0-0-

என் மனைவியிடம் இதைப் பற்றிச் சுயபச்சாதாபத்துடன் புலம்பிவிட்டு இக்காட்டுரையை எழுத ஆரம்பித்தேன்…

தேவையா?

“ஐயய்யோ! திரும்ப ஒன்னோட ப்ளாக்க எழுத ஆரம்பிச்சுட்டியா! கடவுளே!!”

(எப்படி இவன்களெல்லாம் 95% மதிப்பெண்கள், அதுவும் கணிதத்தில் வாங்கியிருப்பார்கள்?

#DravidianModel தமிழகத்தின் கல்வி(!)த்தர(!!) கிடுகிடு அதலபாதாளஅவலத்துக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்!!)

A while ago, the Ministry of Culture (of Govt of India) came out with a tweet on bharatanatyam in good faith, which was canonically correct and backed up by evidence. There was no hearsay or stupidity involved at all, but then… Read the rest of this entry »

ஆச்சரியமாக இருக்கிறதா? நானும் இது குறித்து நேற்றிரவு கேள்விப்பட்டபோது, திடுக்கிட்டேவிட்டேன்! Read the rest of this entry »

இதில் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சாருநிவேதிதா – ஒரு அதிநுணுக்கமான தினசரி சம்பவம் ஒன்றை அவருக்கேயுரித்த போராளி-ரிபெல் பார்வையுடன், கலகப்பிரதித்தனமாக அணுகுகிறார் – இதற்குள், ஆழமான வரலாற்று, இலக்கிய, பெண்ணியக் கண்ணோட்டச் சாயல்கள், சுவையான உணர்ச்சிப் பிரவாக கருத்துத்தெறிப்புகள், வாதக் கோடுகள்+புள்ளிகள், மற்றும் அவருக்கென்றே பிரத்தியேகமாக உருவகப்படும் ஏதேனும் ஒரு உணவுப் பொருளின் பிரபஞ்ச தாத்பரியங்களை உள்ளடக்கும் கட்டமைப்போடு பரிமளிக்கின்றன. Read the rest of this entry »

இந்த விருந்தினர் பதிவு, வேர்ல்ட்ஃபேமஸ் தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அருளிச் செய்தது: (முடிந்தவரை, அவருடைய ஆக்கத்தில், ஒற்றெழுத்தெழவுகளை மட்டும் நான் மண்டையில் தட்டி பட்டிபார்த்து டிங்கரிங் செய்திருக்கிறேன்) Read the rest of this entry »

 இப்படியெல்லாம் அநியாயத்துக்குக் கரித்துக் கொட்டுகிறார்கள், பாவிகள், திராவிடமாடலின் எதிரிகள்! :-(

…எங்கள் உசுடாலிரின் (ஐயோ! இசுடாலிர் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்! Of course, shit by any other name is still shit, yeah – as the great Shakespeare said, something to that effect; especially in the context of #DravidianModel) ஓங்கும் புகழை மறைக்க வசைபாட, என்னவெல்லாம் சதிகளைச் செய்கிறார்கள், இந்த ப்ளடி சங்கி அயோக்கியர்கள்! 

* திரு: பொதுவாக திராவிடர்களைக் குறிப்பிடும்போது மட்டும்/மட்டம், இது ‘திருடன்‘ எனும் சொல்லின் சுருக்கமாகக் கருதப்படும் எனும் உண்மை, நீங்கள் அறியாதது அல்ல. அதிராவிடத் தமிழர்களை பொதுப்பட்ட மரியாதையுடன் குறிப்பிட திரு (எனும் வடமொழிச் சொல் ஸ்ரீ-யின் தமிழ்த் தழுவல்/அபேஸ்) என்பது உபயோகப் படுத்தப்படுவதையும் நீங்கள் அறியாததல்ல.

(துணுக்குச் செய்தி: முகஸ்டாலினும் அந்த ஆளின் மகன் உதையும் 2010ல் பாவப்பட்ட பிராம்மணர்/தமிழர் ஒருவரை உருட்டிமிரட்டி அடாவடி செய்த சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலை  6000 சதுர அடி வீட்டுமனை அபகரிப்பையும் பின்னர் அதன் ‘சந்தைவிலைக்கு அதிகமாகச் செய்யப்பட்ட சமரசத்தையும்’ அறியாதோர் யாவர், சொல்லுங்கள்?)

…என்னவோ, சொல்வதைச் சொல்லிவிட்டேன் – மற்றபடி திரு என்பது ஸ்டாலினுக்கு எவ்வாறு பொருத்தப்படலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், சரியா?

Read the rest of this entry »

Not infrequently, I get asked: ‘could you list-out some good colleges/univs in India for my kids, nephews, nieces, neighbor-kids++’ by anxious parents & neighbors – as if I know everything and maintain an uptodate repository of informed-knowledge about all of them – and if I feel like, sometimes I do respond.

The following was one such case, and here it is – FWIW. Read the rest of this entry »

அவ்வப்போது இந்த வகையறா தொகையறாக்களின் ஏதாவது ‘காணொளி’ கனைப்பொலி எனச் சிலவற்றைப் பார்ப்பதுண்டு. காலம் பொன்னானது என்பதை நிபந்தனையற்று நம்பும் எனக்கு, என்னுடைய இந்த எப்போதாவது ‘பொழுதுபோக்கு’மேகூடப் படுகேவலமானதுதான் என்பதை ஒப்புக்கொள்கிறேன்; என்னை மன்னித்து லூஸ்லவுடுங்கள். (நல்லவேளை, இந்த தண்டக்கருமாந்திரங்களைப் பார்க்க முனையும்போது முதல் ரெண்டு நிமிடங்களில் போர்க்காலரீதியில் பின்வாங்குவதைப் பழக்கமாக வைத்திருக்கிறேன்)

(நான் பார்க்கும்வரை/பார்த்தவரை – ஒருசில விதிவிலக்குகள் இருக்கின்றனர் – (என் செல்ல) அண்ணாமலை, தமிழருவி மணியன், பத்ரிசேஷாத்ரி, பிரபாகரன்++ என்பவர்கள்போல – இவர்கள் தொழில்முறை வளவளாக்கார யூட்யூபர்களாக இல்லாமல் இருப்பது ஆசுவாசம் தருவது. அவர்கள் பெரும் ஆவேசமில்லாமல் கருத்துகளை முன்வைப்பது கொஞ்சம் நிம்மதியையும் தருவது… மேலதிகமாக இன்னமும் சிலர் இப்படி இருக்கலாம்)

மற்றபடி, இந்த ‘நெறி’யாளக் கூப்பாட்டுக் கூவான்கள்:

“இப்ப தமிளக அரசியல் களம் சூடுபுட்ச்சிடிச்சி… நீங்க என்ன நெனக்கிறீங்க…?”

ப்ளடி போக்கத்த பேஸ்கெட்ஸ்.

(அவ்ளோதான் இந்தப் பதிவு)

Is there any evidence to say that ‘Sangam Age’ is a myth & that things do not add up? (of course this is not to say that ettuthogai works or later patthu-p-pattu collection don’t exist)

Let us explore just one point in this context. Read the rest of this entry »

வடக்கிருத்தல் எனும் தற்கொலை முயற்சிக் கட்டுக்கதைகளைப் பற்றி, நாம் நம்முடைய ‘சங்ககால’ பெருமைப் பீற்றல்களின் மூலம் ஏகத்துக்கும் அறிவோம். Read the rest of this entry »

1

இதை, ஒருமாதிரி உணர்ச்சியேயில்லாமல், ரெண்டுமூன்று வாரங்கள் முன் சொன்னது, இன்றுவரை திமுக அனுதாபியாக இருக்கும்… Read the rest of this entry »

(or) …the tragedy of Muslims of India (um, mainly for the Hindus) – an averse text: Read the rest of this entry »

வேறு வழியேயில்லை, ஆகவே! Read the rest of this entry »

…இதற்கு மாறாக, ஏன் – தியாகி செல்வப்பெருந்தொகை மீது, தமிழக அரசினால் ஒருமாதிரி சட்டரீதியான நடவடிக்கையும், இந்திய தோசைய காங்கிரஸால் ஒருமாதிரி ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என விருப்பப் படுகிறார்?

எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை. வெறும் திராவிடச் சாக்கடை மலத்தைத்தானே கூலிப்படைத் தெருப்பொறுக்கிகள் வீசினார்கள்? Read the rest of this entry »

ஒரு அன்பர், கீழ்கண்டவாறு இதற்கு முந்தைய பதிவில் (பீம்ராவ் ராம்ஜி ஆம்பேட்கர்: “…ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியது… தமிழர்களின் கடமை… இல்லையேல் அவர்கள் இந்தியர்களாக இருப்பதற்குத் தகுதியற்றவர்கள்… அவர்கள் இந்தியர்களே அல்லர்!” March 16, 2025) கேட்டிருந்தார்:

Raalraa Says: March 18, 2025 at 09:43

அம்பேத்கர் மற்றும் அப்போதைய பல தலைவர்கள் இந்திய அரசியலை இந்து முஸ்லிம் பிரச்சினை என்னும் கண்ணோட்டத்திலும் தலித் உயர்சாதி என்னும் கண்ணோட்டத்திலும் தான் பார்த்தார்கள். மற்ற விசயங்கள் அவர்களுக்கு தெரியவில்லை. ஈவேரா இந்தி பள்ளிக்கூடம் தொடங்கியவர். தனது கடைசி காலத்தில் கூட இந்தி எதிர்ப்பாளர்களை காலிகள் என விமர்சித்தார். அவர் குறித்து ஏன் குறிப்பிடவில்லை.

மேற்கண்ட பின்னூட்டத்துக்கு என் ஒருமாதிரியான பதில்:

வெ. ராமசாமி Says: March 20, 2025 at 20:21

ஐயன்மீர்! கருத்துகளுக்கு நன்றி. ஈவெ ராமசாமி, தன் இறுதிக் காலங்களில் ஹிந்திஎதிர்ப்பை எதிர்த்தார் என்பது சரிதான்.

  1. மேற்கண்ட காட்டுரை ஆம்பேட்கரின் ‘ஹிந்தி வெறி’ பற்றியது. ஆகவே ஈவெராவைப் பற்றிக் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.
  2. ஈவெரா ஒரு மகத்தான அரைகுறை, வாய்க்கு வந்தபடி அனைவரையும் ஏசிக் கொண்டிருந்தவர், தம் நிலைபாடுகளை வசதிவாய்ப்பு ஆதாயங்களுக்கேற்ப மாற்றிக் கொண்டே இருந்தவர், அறிவியல்-வரலாறுகளின் அடித்தளங்களைக்கூட அறியாதவர் என்பது ஐயமில்லை. வரலாற்றின் குப்பைமேட்டுக்குள் கடாசப்படவேண்டியவர். ஆகவேதான் அவரைப் பற்றி மேற்கண்டபதிவில் குறிப்பிடக் கூட இல்லை.
  3. மானுடப் பரிணாம வளர்ச்சி, மக்கட்திரள்கள் ஒருங்கிணைக்கப்படுவது, படி நிலை வரிசைகள் சமூகங்களில் அமைவதும் வளர்வதும் எப்படி என்பவற்றைப் பற்றிய அடிப்படை அறிவில்லாமல் பினாத்திக் கொண்டு விஷத்தைப் பரப்பியவர் அவர் –  ஹரிஜன, பெண், பிராம்மண எதிர்ப்பு என்பதற்கு அப்பாற்பட்டு அவ்வாசாமியிடம் வேறுஒன்றும் இருந்திருக்கவில்லை. இதற்கு மேற்பட்டும், அவர் ‘சமூக நீதி’ என்பதையே படுகேவலமான கேலிக்கூத்தாக்கியவர். தமிழையும் அற்பத்தனமாக ஈனப் படுத்தியவர்.
  4. இந்த ஆசாமி தமிழகப் பகுதிக்கு ஏற்பட்ட ஒரு துரதிருஷ்டம், சாபக்கேடு. ஈவெரா ஒரு கட்ட,மைக்கப் பட்ட அரசியல் பிம்பம்.
  5. பெரும்பாலும் – தமிழர்களானவர்களும் உணர்ச்சிகளின் பிரவாகத்தில் நீந்துபவர்களே தவிர, ஹீரோக்களின் மைக்ரோகுஞ்சாமணிகளைச் சப்புவதில் ஆர்வமுள்ளவர்களே தவிர –  ஆழமான, அறிவியல் பூர்வமான முன்னேற்றச் சிந்தனைகளில் ஈடுபடுபவர்கள் அல்லர். அவர்களுக்கு அதற்கான தொடர்வரலாற்றுப் பின்புலமும் இல்லை.
  6. ஆகவே, உணர்ச்சிபூர்வ-ஈனமானத் தமிழ்/திராவிட வெறியர்களும், ஈவெராமசாமி எனும் அறிவிலியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். மிகப் பொருத்தமான ஜோடி நம்பர்1கள்.

அவ்ளொதான்.

ஆம். சர்வ நிச்சயமாக. பூசி மெழுகல் செய்து வழுக்கிக்கொண்டு ஒடி ஒளியாமல், திராவிடத் தகிடுதத்தங்களில் ஈடுபடாமல் எழுதியிருக்கிறார். Read the rest of this entry »

ப்ளடி சாதாரணமான ஜெயமோக சாருநிவேதித எஸ்ரா வகையறாக்களையே என்னால்நம்மால் தாங்கமுடியவில்லை, இந்த அழகில் இந்த ப்ளடி அலக்கியவாதி, இப்படி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.  Read the rest of this entry »

(…before some #D lapdog comes running around pitifully whining & wailing that this post is, in poor-taste-as-usual & is actually a grave mistake – well, I can only say in self-offence that, I did not write it.

In fact, ChatGPT wrote it for me. Honestly. No kidding.

Also, I did not even have to write a labored prompt to elicit this response – fact is that, #DravidianModel is of course world-famous (don’t we all know that?) and the staggering volumes of trainable-data and labelled information that is available on the model is indeed the world’s BIGGEST LLM – Large Language Model!

So, it is no wonder – even when I was merely asking for ‘ideas to beautify the Marina beach of Chennai‘ – the generative AI could give me a massive dissertation on it, worth multiple PhDs!!!)

Anyway. Read the rest of this entry »

எல்லாவற்றிலும் தன்பங்கு பெரும்பங்கு செம்பங்காக, மூட்டைமூட்டையாகக் கமிஷன் அடிக்கும் தமிஷனை, அதாவது திராவிஷனை, பின்னர் எப்படித்தான் அழைப்பதாம், சொல்லுங்கள்?

பங்குத்தந்தை ஸ்டாலின் கும்பலினரின் கமிஷன் அடிப்பு பற்றி நான் மட்டும் சொல்லவில்லை. அவருடன் கூட கெவர்னமெண்டு அட்வைசரி கௌன்சில் பணிபுரியும் ஆசாமி ஜே ஜெயரஞ்சனே சொல்லியிருக்கிறார்.

முழு விவரங்களுக்கு: சுட்டி

…உங்கள் உடனடி உடும்படித்தேவைக்கு, சங்ககால பொற்கால-போர்க்கால ரீதியில், அதன் ஏகபோக டீலர்களை அணுகவும்:

திராவிடமாடல் + தமிழ்க்குடிபெருங்குடி வெறியர்கள்,

c/o லெமூரியக் குமரிக்கண்டம்.

ஹோல்ஸேல் ரேட்டில் சகாய விலை! ஸ்டாக்குகள் தீர்ந்துகொண்டே இருக்கின்றன, உஷார்!!

அல்லது, படிக்கவும்: தமிழப் பிரமைகள் – Tamil delusions, கலவை வெங்கட் அவர்களின் ஃபேஸ்புக் பதிவு.   (சுட்டி அனுப்பிய நண்பருக்கு நன்றி.)

நானும் ஒருமாதிரி இவ்விஷயங்களைப் பற்றி (தமிழுக்குத் தேவையேயற்ற அண்டப் புளுகுகள்) சிலபல முறை எழுதியிருக்கிறேன்.

இந்தத் தமிழப் பிரமைகளைக் குறித்து துண்டு துண்டாகவாவது ஆதாரங்களுடன் எழுதி, பின்னர் பின்னடித்து வெண்முரசு ஸைஸுக்குப் புத்தகமாக வெளியிட்டால், வரலாறு காணாத ரீதியில் இன்னமும் அலைமோதிக்கொண்டு எண்ணிறந்தவர், லட்சக்கணக்கானவர்கள் படிப்பார்கள் எனவொரு பகீர்பிரமை எனக்கு… 

அதாவது 7½ (ஏற்கனவே உள்ள வாசகர் படை, அடியேன் உட்பட) + 2 (அதிகப்படியாகப் படிக்கப் போகிறவர்கள்) =  100,000+.

உங்களுடைய தொடர்ந்த அனாதரவுக்கு நன்றி. ஆனால் உடும்புத்தைலம் முக்கியம், சரீங்களா?