“சுப. வீரபாண்டியன் போன்றவர்களைத் திருத்தவே முடியாது! இவர்கள் விவகாரமெல்லாம் சுத்த வேஸ்ட்!!” + இரு ஊக்கபோனஸ்கள்
December 26, 2015
வெறுத்துப்போன (அக்கால சுபவீ, அக்கால+இக்கால அடியேனின்) ஆருயிர் நண்பரொருவர் சொன்னதுதான் இது!
ஆதாரம்:
On 24 Mar 2015, at 09:40, வெ. ராமசாமி < … … > wrote:
> https://othisaivu.wordpress.com/2015/03/24/post-472/ (ஸ்ரீஸ்ரீ சுபவீரபாண்டியனார் அருளிச் செய்த ‘பின் நவீனத்துவ சோழர் வரலாறு!’ 24/03/2015)
> யோவ் வெள்ளக்கார தொர, உன் குடுமியையும் கொஞ்சம் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.
> என்னடா ஆச்சு, வொங்காளுக்கு?
> அனைவரும் நலமா?> ரா.
-0-0-0-0-0-
பாண்டித்துரை, நல்லாகீரோம்பா. ஊட்ல அல்லாரும் நல்லா கீராங்களா? ரொம்ப கலாய்க்க போரேனு பேஜாராயிட்டேன் எஸ்கேப்பாயிட்டேன். ஏன்பா இதெல்லாம் பாத்து டயம் வேஸ்ட் பண்றே? மாத்த முடியாதத உட்று. நெறய மாத்த கீதே. ஒரு டபா போன் போடரேன். வர்ட்டா ராசா.
குறிப்பு: நண்பர் மேலேகண்டது போல் எழுதியதைத் திரித்து, கொஞ்சம் தினசரித்தனமாக, ஊடகப் பேடித்தனமாக, ஜனரஞ்சகமாக – தலைப்பை வைத்திருக்கிறேன். எப்படியிருக்கிறது? 8-)
ஊக்க போனஸ் #1
கத்தியால குத்துவேன் – சீமான்; தம்பி கையால் கொல்லப்படுவது யாருக்கு வாய்க்கும் – சுபவீ!!
சீமானார்-சுபவீயார் தரும் இன்பம்ஸ்களுக்கு ஒரு அளவேயில்லை! செந்தில்-கவுண்டமணி தோற்றார்கள் போங்கள்!!
ஊக்க போனஸ் #2
“அஷ்டமி கோகுலாஷ்டமி கிருஷ்ணன் பிறந்த நாள்னு கொண்டாடறான் ஆனா அஷ்டமி கெட்டதுங்கறான். நவமி ராமநவமி ராமர் பிறந்த நாள்னு கொண்டாடறான் ஆனா நவமி கெட்டதுங்கறான்.”
இப்படியா ஒருவர் தன் அறிவற்ற பகுத்தறிவை வெளிப் படுத்திக்கொள்வார்?
அவருடைய இளமையில் புத்திசாலியாகவே இருந்த சுப. வீரபாண்டியன் அவர்கள் – பின்னர், தன் மூளையை திமுக திராவிடத்திடம் விற்றுவிட்டு வந்த/வரும் ரொக்கத்தை திராவிடப் பேச்சுகளில் முதலீடு செய்து, தொடர் வட்டிலாப அமோக வரும்படியில் சந்தோஷமாக இருக்கிறார்; முட்டாள்களை அறுவடை செய்யும் அக்கப்போர்களில் கிடைக்கும் இன்பம்ஸ்களில் புளகாங்கிதமடைகிறார்.
ஏனெனில் மூளை இருந்தால்தானே யோசனை? யோசனை இருந்தால்தானே கவலையும் கரிசனமும்? கரிசனம் இருந்தால் தானே ஏதாவது ஆக்கபூர்வமான செயல்பாடு இருக்கும்? இந்தத் தொடர்ச்சங்கிலி இல்லாததால்தானே டமால்டுமீல் என்று அட்ச்சுவுட முடிகிறது!
கல்யாணராமன் ரீட்வீட் (=விமலாதித்த மாமல்லன் ட்வீட்/பதிவு வழியாக) வழியாக இன்று நான் தெரிந்துகொண்ட விஷயத்தைப் பற்றித்தான் சொல்லவருகிறேன்: சுபவீயும் அசுபவீயும் :) — https://www.facebook.com/vmaamallan/posts/1025601617503044?pnref=story
(அப்பதிவை மட்டும் படிக்காமல், அதன் பின்னூட்டங்களையும் படிக்கவும்; சுபவீ அவர்களின் சராசரித்தனமான பஞ்சாங்க அரிச்சுவடி விளக்கத்தையும், ஒண்ணாம் வகுப்புதர பாலபாடத்தினையும் பார்த்து/கேட்டு புல்லரித்துக்கொள்ளவும்)
ஒருகாலத்தில் – அடிப்படையில் புத்திசாலிகளாக, படிப்பாளிகளாக இருந்திருந்தாலும், திராவிட பொய்ய நீரோட்டத்தில் கலந்தால், தரதரவென்று சிண்டைப் பிடித்துக்கொண்டு கீழே இழுத்துவரப்பட்டு, சாதாரண தெருவோர உதிரிகள் அளவுக்கு அவர்கள் செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள நேரிடும் என்பதற்கு இவர் போன்றவர்கள் ஒரு உதாரணம்.
சுபவீ அவர்களின் வீழ்ச்சி என்பது ஒரு தொடரும் திராவிடச் சோகம்.