தமிழ்மொழி வழி, தரம் வாய்ந்த அறிவியல் + தொழில்நுட்ப அறிவுப்பெருக்குகள்/புத்தகங்கள் வெளிவர ஏன் துளிக்கூட வாய்ப்பே இல்லை?
August 25, 2026
…இந்தச் சோக நிலைக்கு – கடந்த 60 வருடங்களுக்கான மூலக் காரண எழவு: பொறுக்கித் திராவிடமாடல், கல்வி திராவிடமயமாக்கப்படல். அதன் காரணமாக, தமிழக அறிவியல் ஞானத்தின் அதலபாதாள உச்சங்கள். நன்றி.
இன்னொரு முக்கியகாரணம்:
தமிழ்மொழியின் நெடிய நெடிதரும் வரலாற்றில் (~1700-2000 வருடங்கள்?) என்றுமே ஒரிஜினல், முதன்மைச் சிந்தனை அறிவியல் சார் புத்தகங்களோ ஆக்கங்களோ ஏன் அறிவியலாளர்களோகூட இருந்ததேயில்லை.
மாறாக, மாரடைப்பாக – வாயோயாமல் ‘லெமூரியா காலத்திலேயே கால்குலசு கண்டுபிடித்தான்’ + ‘திருமந்திரத்தில் பரிணாமச் சிந்தனைகள்’ வகை நகைச்சுவைப் புனைவுகள் தாம் நிதர்சனங்கள்.
(உடனே – ஸ்ரீநிவாஸராமானுஜன் ஸிவிராமன் சுப்ரமணியம்சந்திரசேகர் எனத் தூக்கிக்கொண்டு வராதீர்கள், அவர்கள் ‘ஆரியர்கள்’ – மேலும் அவர்கள் தமிழ்மொழிவழி சிந்தித்து ஊடாடியதாகத் தெரியவில்லை – எப்படியும் ‘தொழில்நுட்ப-அறிவியல் தமிழ்’ எனவொரு பாரம்பரியம், தமிழகத்தில் இருந்தால்தானே – ஆகவே அவர்களைக் குற்றம் சொல்லியும் பயனில்லை!)
‘தமிழனும் சங்ககால அறிவியலும்’ போன்ற அபத்தங்கள், கொட்டை நசுக்கப்பட்ட அல்லது கொட்டையற்ற தமிழ் ‘அறிஞர்கள்’ பகிரங்கமாகத் தொடர்ந்து செய்யும் கைமுட்டியடித்தலுக்குச் சமம், அதுவும் அதிக பட்சம். அவ்வளவுதான்.
எனக்குத் தெரிந்து ‘திருவள்ளுவரும் அணுசக்தியும்’ என – குடமுருட்டிக் குண்டினைப் போட்ட கருணாநிதி போல், ஒரு எம்ஃபில் ‘ஸ்காலர்’ என் மேல் (செப்பனிட) வீசியதும் நடந்திருக்கிறது.
பரிசீலனை/ரிவ்யூ செய்கிறேன் பேர்வழியென அதன் வரைவைப் போய் வேலை வெட்டியில்லாமற் படித்து, புத்தி பேதலித்து, மயிரைப் பிய்த்துக்கொண்டு அலைந்ததும்தான்.
பேடிகள். படு கேவலர்கள். அற்பர்கள்.
மலையாளத்தில் கூட வந்திருக்கும் முதன்மை கணிதச் சிந்தனை நூல்கள் (எடுத்துக்காட்டாக – 1530 வாக்கில், ஜ்யேஷ்டதேவ அவர்களால் எழுதப்பட்ட மலையாளக் கணித நூலான கணிதயுக்திபாஷா), தமிழனுக்கு அந்தப் பாரம்பரியமே இருந்ததில்லை என்பதைத் தெளிவுபடுத்துவது என்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது. மகா சோகம்.
மஹா ஷோ கேம். இதுதாண்டா திராவிடம்! இத்தாண்டா டமீள் தேசீயொம்…
2
சுமார் 8 வருடங்கள் முன், ஓரளவுக்கு விஷ(ய)ஞானமுள்ள சக-கிழம் ஒன்றிடம் (அது ஒருமாதிரி தனித்தமிழ்க் கிழம், ‘உலகத்தின் முதல் பெருச்சாளி தமிழ்ப்பெருச்சாளி’ வகையறா திராவிட விசித்திரபித்தம்) இது குறித்து உரையாடியபோது (…பரஸ்பர பணிவுடன் தான் இந்தச் சொற்போர் ஆரம்பித்தது, ஆனால் வாதங்களோ தரவுகளோ ஒன்றுமேயற்ற நிலையில் அக்கிழத்திற்கு ரத்த அழுத்தம் அதிகமாக ஆகிப்போய்…) அதற்குப் படுகோபம் வந்து, “வாயை மூட்றா, வந்தேறி பாப்பாரத் தாயோளீ நாயே” என்று முடிந்தது, சுபம் – என்பதை வாஞ்சையுடனும் பெருமிதத்துடனும் நினைவு கூர்கிறேன்.
அதற்குப் பின், ரூம்போடாமல் மிகுந்த யோசனை செய்து:
“தமிழரின் அறிவியற்புல/தொழில்நுட்பப் பண்பாடு? தமிழில் ஆவணப்படுத்தப்பட்ட அறிவியல் வரலாறுகள், ஆராய்ச்சிகள்?? தமிழில் முதன்மை அறிவியல் அடிப்படைப் புத்தகங்கள்???
= 0.
…சுழியம். பூஜ்யம். ஸீரோ. முட்டை. கோளம். பந்து. அடிக் கொட்டை…
…எனவொரு தரவுகள்சார் பதிவு ஆரம்பித்து 2000 வார்த்தைகளுக்குப் பின்னும் முடிவடையாமல், நானும் அவ்வரைவுப்பதிவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருக்கிறோம்.
ஏனெனில். தமிழின், தமிழகத்தின் அறியாமை என்பது ஒரு ஹிமாலய சாதனை, அவ்வளவுதான்.
தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் 1970களில் சிலபல (ஆங்கில மூலங்களிலிருந்து) பாடப்புத்தக மொழிபெயர்ப்புகளைக் கொணர்ந்தது என்பதை அறிவேன். இவற்றில் சில ஓரளவுக்கு நன்றாகவே வந்தன. பின்னர் வரவேற்பின்மையினால் கூழாக்கப் பட்டன; சில தப்பிப் பிழைத்து நூலகங்களில் தஞ்சமடைந்து கேட்பாரற்றுக் கிடந்தன; சென்னை கன்னிமரா நூலகத்தில் சிலவற்றைப் புரட்டிப் பார்த்த நினைவு.
அவ்வளவுதான் தமிழ்மொழி பாடப் புத்தகங்களுக்கு வரவேற்பு. பகற்கொள்ளைக்காரத் திராவிடர்கள் நடத்தும் கல்விசாலைகளில் கூட தமிழுக்கு முன்னுரிமையில்லை.
பள்ளிக் கல்வி முழுவதையும் தமிழ்வழியில் படித்து நொந்த நான், மனம் வெதும்பித்தான் இப்படி எழுதிக் கொண்டிருக்கிறேன்.
சுமார் 3.5 கோடி போலிஷ் மொழி பேசும் மனிதர்களுள்ள போலண்ட் தேசத்தில், அவர்கள் மொழியில் எப்பேர்ப்பட்ட அருமையான புத்தகங்கள் வந்திருக்கின்றன!
சுமார் 1 கோடி மக்களேயிருக்கும் மிகச் சிறிய தேசமான இஸ்ரயேலில் – சுமார் 60 லட்சம் பேர் யூத மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்… ஆனாலும் அங்கு எவ்வளவு ஆயிரக்கணக்கில் சமகால அறிவியல் தொழில் நுட்பப் புத்தகங்கள் ஹீப்ரு மொழியில் வந்திருக்கின்றன!
இங்கே? நம் ப்ளடி தமிழகத்தில்?? 7.2 கோடி பேர் வசிக்கும், அதில் 6+ கோடியினர் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கும் நம் ‘செம்மொழி தமிழ்மொழி’ பிரதேசத்தில்??? கடந்த 1-2 ஆண்டுகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட அற்புதமான பிறமொழி உயர் அறிவியல்-தொழில் நுட்பப் புத்தகங்கள்???? அவற்றை நுகரக் கூடியவர்கள்????? அதற்கான அரசு-செயல்திட்டங்கள்??????
0.
ஏன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பேயும் அது சுழி தான்! நன்றி!!
சுழியம் தான் நம் பெரும்பாரியம். ஆனால் அந்தச் சுழியையும் கண்டுபிடித்தது தமிழனில்லை.
இத்தனைக்கும், உலக அளவில் தமிழ் மொழி அறிந்தவர்கள் சுமார் 9-10 கோடியாமே!
-0-0-0-0-
இந்த அழகில், திராவிடக் குப்பையொன்று இப்படி மினுக்கிக் கொள்கிறது:
சுமார் அரை கோடி பேர் அளவில் மட்டுமே இருக்கும் நார்வே நாட்டின் நார்வீஜியன் மொழி பேசும் மக்களுக்காகத் தொடர்ச்சியாக வெளிவரும் அவர்களுடைய தாய்மொழி வழி தொழில் நுட்பப் புத்தகங்கள்? அதே அளவில் இருக்கும் ஃபின்லேண்ட் – ஃபின்னிஷ் காரர்களுக்கும் அப்படியே!
…இவை கிட்டே கூட தமிழால் போகவே முடியாது. நமக்கு அதற்கான பாரம்பரியமும் இல்லை, ஆர்வமும் இல்லை… வெறும் வெட்டிப்பேச்சு ‘தமிழ் எங்கள் மூச்சு’ வாயோர நுரைதள்ளலோடு சரி.
“தமிழ் எங்கள் உயிர், மண்டையில் எங்கள் மயிர்!!”
நம் இழி நிலையைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகுதய்யா!
ஜென்ஸீக்களுக்கான, ஆகவே தேவையற்ற (அவர்கள் எங்கே பத்துவார்த்தைகளுக்கு அப்பால் படிக்கப் போகிறார்கள், எனிவே அவர்கள் படிப்பார்கள் என, மனப்பால் குடிப்பது ஒருமாதிரி வோக்கே?) குறிப்பு: கீழே வரும் “பாரி” மற்றும் “மன்னர்” ஆகியோர் நிஜ நபர்களின் கருத்துகளைப் பதிவு செய்யும் ஆவணபூர்வ வடிவங்கள் அல்ல, ஏன் – கோவணபூர்வம் கூட இல்லை – பிரச்சினை என்னவென்றால், ப்ளடி ஆரியர்கள் அதையும் உருவிவிட்டார்கள், பாவிகள்!
மேலும் இந்த உண்மை உரையாடலின் சாரம் – தமிழ் இணைய உலகில் பெருமளவில் காணப்படும் பாடு (படுத்தும்) பொருட்களான சதித் திட்டம், பொய் வரலாறு, புளுகு அறிவியல், “எல்லாவற்றையும் மறைத்துவிட்டார்கள்” வகைச் சொல்லாடல்களை மிகைப்படுத்தி உருவாக்கப்பட்ட கேலிச்சித்திர வடிவம்… (இந்த எழவை எல்லாம் சொல்லவேண்டியிருக்கிறதே, இல்லாவிட்டால் இந்த உண்மைகளைப் பொய் என்று நம்பிவிடுவார்களே, என் ஏழரைத் தமிழர்கள் என்பதை நினைத்தால்…. ….)
சரி. ஆங்கிலப் பதங்களை முடிந்தவரை ஆங்கிலத்திலேயே கொடுக்கிறேன். தமிழ்மொழி வாழ்க!
(எது எப்படியோ… இவ்வுரையாடல் நடைபெற ஸ்டூடியோ உபகரணங்களையும் நடத்துமிடத்தையும் கொடுத்த ‘இது கிழக்கு ந்யூஸ் – நான் பத்ரி சேஷாத்ரி” அவர்களுக்கு என் நன்றி.
இதன் விடியோவையும் ஸென்ஸார்/தணிக்கை செய்யாமல் வெளியிட்டால் அகமகிழ்வேன்!)
ஏலியன்களுக்கு முன்பே எலியன்ஸ்!
பாரி: வணக்கம் தமிழர்களே. இன்று நான் பேசப்போகிற விஷயம் சாதாரண விஷயம் கிடையாது. இதைப் பேசினதுக்குப் பிறகு இந்த வீடியோ YouTube-ல இருக்குமா என்பதே சந்தேகம். ஏனென்றால் இது NASA, CIA, RAW, Mossad, Illuminati, World Economic Forum, Discovery Channel, National Geographic தமிழ் பிராம்மணர்கள் என எல்லாரையும் நேரடியாகப் பாதிக்கும் தகவல்.
மன்னர்: ஒரு நிமிஷம். RAW எதுக்கு?
பாரி: அதுதான் உங்களுக்கு இன்னும் geopolitics புரியலைன்னு சொல்றேன். RAW இல்லாம எந்த conspiracy-யும் complete ஆகாது.
மன்னர்: சரி. Continue.
பாரி: இன்றைய கேள்வி: Alien என்றால் யார்? நமக்கு Alien என்று சொல்லிக் கொடுத்தது Hollywood. ஆனா தமிழ் மொழியில்? அது… …எலியன்!
மன்னர்: ஏலியன்? எலியன்??
பாரி: அதுதான் trap! நீங்கள் ஏற்கெனவே pronunciation colonialism-க்கு பலியாகிட்டீங்க.
தமிழ் உயிரெழுத்தைப் பாருங்க: அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ.
இதுல எ முதல்ல வருதா? ஏ முதல்ல வருதா?
மன்னர்: எ! ஓஓஓஓஓஓஓ!!!
பாரி: அப்ப முடிஞ்சுது! எலியன்ஸ் ஏலியன்ஸுக்கு முன்னாடி வந்தவங்க!
மன்னர்: என்னது?!
பாரி: Evolutionary sequence! பரிணாம வளர்ச்சியின் பரிமாணம்… அதுமட்டுமில்லை – இனமாணம்!!
முதல்ல எலி. அதுக்கப்புறம் எலியன். அதுக்கப்புறம் vowel elongation நீட்சி ஏற்பட்டு ஏலியன்.
இதுதான் Darwin கூட சொல்ல முடியாதபடி அவாள் மறைத்த Dravidian Evolution.
மன்னர்: ஆ! ஒரு நிமிஷம். Darwin எங்கிருந்து வந்தார்?
பாரி: Darwin என்பதே தமிழ் பெயர்.
மன்னர்: எப்படி?
பாரி: “தருவின்”… மரத்தினுடையது என்று பொருள்.
தரு + இன் = தருவின். அதை வெள்ளைக்கார ஆங்கிலேயன் Darwin ஆக்கிட்டான்.
மன்னர்: அது கொஞ்சம்… …
பாரி: உங்களுக்கு எல்லாமே கொஞ்சம்தான் இருக்கும். உண்மை பெரியது.
அதெல்லாம் சரி… நான் இன்னும் சொல்லவே இல்லை இதை… நான் சொல்லவந்த விஷயமே வேறு!
மன்னர்: ஐயோ! இன்னும் வேற ஏதோவா? அது எதொ பின்னாடி வந்ததா?
பாரி: திசை திருப்பவேண்டாம்… எ, ஏக்கு அப்புறம் என்ன எழுத்து?
மன்னர்: ஐ.
பாரி: அதான்! இன்றைக்கு உலகம் பேசுற அடுத்த பெரிய technology என்ன?
AI.
தமிழ்ல? ஏ-ஐ…
மன்னர்: ஐ! இது உண்மைதான்!!
பாரி: புரிஞ்சிடிச்சா? அப்படின்னா எல்லாமே ஒரு evolutionary sequence தான்…
எலியன் >> ஏலியன் >> ஐலியன்!
அதாவது, Rat intelligence >> Alien intelligence >> Artificial Intelligence!
இதைத்தான் நம்ப சங்ககாலத் தமிழன் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே உயிரெழுத்து வரிசையில encode பண்ணி வச்சிருக்கான்.
மன்னர்: இதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. வாதம் சரியில்லை…
பாரி: ஏன்?
மன்னர்: நீங்க வரலாற்றை linguistic-ஆ மட்டும் பார்க்கிறீங்க. Material evidence பார்க்கணும்.
என்னிடம் நாணயம் இருக்கு.
பாரி: என்ன நாணயம்?
மன்னர்: ஒரு coin.
ஒரு பக்கம் எலி மாதிரி ஒரு உருவம். இன்னொரு பக்கம் வட்டம். நடுவுல மூன்று புள்ளி.
பாரி: எங்க கிடைச்சது?
மன்னர்: அதை இப்ப சொல்ல முடியாது.
பாரி: Carbon dating?
மன்னர்: Coin-ஐ carbon dating செய்ய முடியாது.
பாரி: அப்படித்தான் establishment சொல்லும்! தமிழன் என்ன சான்று கொடுத்தாலும் ஒத்துக்க மாட்டானுங்க… கீழடில…
மன்னர்: Metal-க்கு carbon இல்லை.
பாரி: Metal-க்கு carbon இல்லையா? Steel-ல carbon இருக்கே!
மன்னர்: இது steel இல்லை.
பாரி: அப்ப இன்னும் suspicious. ஒரு எடத்துல நிக்காம குதிச்சிக்கிட்டே ஒண்ணுலேர்ந்து இன்னோணுக்குத் தாவுறீங்க…
மன்னர்: நான் சொல்ல வர்றது என்னன்னா, அந்த மூன்று புள்ளி சாதாரணமில்லை. Orion Belt-ல மூன்று நட்சத்திரம் இருக்கு.
பாரி: மூன் று?? அப்ப ஏதாவது சந்திரன் தொடர்பு இருக்குங்கிறீங்களா? இல்லாட்டா ஏதாவது மூஞ்சூறு வகை குறியீடோ? ஆதித் தமிழன்… …
மன்னர்: நீங்கதான் குதிச்சிக்கிட்டே இருக்கீங்க…நான் சொல்லவந்தது- Coin-ல மூன்று.
பாரி: அப்ப?
மன்னர்: Connection. தொடர்பு படுத்தி மாத்தி யோசீங்க…
பாரி: இல்லை. நீங்க இங்கே ஒரு பெரிய தவறு பண்றீங்க.
Orion என்பதே தமிழ்ச் சொல்.
மன்னர்: எப்படி?
பாரி: “ஓர் இயன்”.
ஒரே ஒரு மனிதன். ஓர் + இயன் = ஓரியன்.
பிறகு Greek-காரன் Orion. திருடிக்கிட்டான்… சங்ககாலத்துல இங்க வந்து மிளகு வாங்கிட்டுப் போகாம, பிச்சைக்காரப் பசங்க நம்ப பண்பாட்டுக் கூறுகள திருடிக்கிட்டாங்க… ஆரியன் உடந்தையா இருந்திருக்கான்…
ஆரியன் X ஓரியன் என்பது ஆதிகாலத்துலேர்ந்து தொடருது…
மன்னர்: அப்படியானால் Greek civilization…
பாரி: தமிழர் கிளை.
மன்னர்: எகிப்து? சுமேரியா? மாயா? மச்சீந்திரா??
பாரி: எல்லாம் தமிழர் கிளைகள்
மன்னர்: Aztec?
பாரி: Signal weak. ஆனாலும் வாய்ப்பு இருக்கு. தேவனேயப் பாவாணர் அப்டிதான் சொல்லியிருக்கார்…
மன்னர்: Neanderthal?
பாரி: அவங்க Tamil அல்ல. அவர்கள் நம்மிடம் வந்து வேலை பார்த்தவர்கள். நம் அடிமைகள்…
நியாண்டர் செல்வன் அப்டீன்னு ஒருத்தர் ஹண்டர்-கேதரரா தமிழகத்துல பணி செய்து வேட்டையாடி கெடச்சத வெச்சி, ஃபேஸ்புக்குல பேலியோ டயட் சாப்டிட்டு இருந்தார் – உங்களுக்கு நினைவிருக்கா? எல்லாம் பண்பாடற்ற காட்டுமிராண்டி கும்பல் அடிமைங்க…
மன்னர்: அப்ப எதுக்கு அவங்கள அடிமையா வெச்சிருந்தோம்?
பாரி: Kumari Kandam Metro Phase 2. உடலுழைப்பை உயிர திரணமா மதிச்சி அந்த அடிமேங்கதான் அப்படி அசுரவேலைங்கள செய்யமுடியும்…
…தமிழர்கள் எல்லாம் சங்ககாலத்துல பிஸியா இருந்தோமில்ல… ஆற்றுப்படை…
மன்னர்: நான் இன்னொரு முக்கியமான archaeological evidence சொல்றேன்.
Mars-க்கு தமிழ்ல என்ன?
பாரி: செவ்வாய்.
மன்னர்: அதுதான்! NASA Mars-ஐ “Mars” என்கிறது. தமிழன் ஆயிரம் வருடங்களுக்கு முன்னாடியே அதுக்கு செவ்வாய்ன்னு பெயர் வைத்திருக்கான். அவன் அங்கே போகாம எப்படி பெயர் வைத்தான்?
பாரி: எப்டீ? சிவந்த வாய்? அல்லது க்ளாஸ்ஸிகல் வாய்?
மன்னர்:அப்படின்னா தமிழர்கள் solar system-ஐ ஏற்கெனவே survey பண்ணியிருக்காங்க – அவ்வளவுதான் அர்த்தம்…
பாரி: யோசிச்சா – அது Survey மட்டும் இல்லை. Colony.
மன்னர்: ஆதாரம்?
பாரி: “செவ்வாய் தோஷம்”. ஏன் Mars-ல இருக்கிற விஷயம் தமிழ்நாட்டுல கல்யாணத்தை பாதிக்கணும்? Interplanetary administrative jurisdiction!
மன்னர்: அடடா! “செவ்வாய் தோசை” அப்டீங்கறதுலேர்ந்தும் வந்திருக்கும்… அதாவது குமரிக் கண்டத்துக் குமரி ஒருத்தி அவளுடைய செம்பவள வாயைத் திறந்து தோசைத் துணுக்கைச் சாப்பிட்டாள்… இதுதான் உண்மை.
பாரி: Mars Embassy இங்க இருந்திருக்கு. அவனுங்க இங்க வந்திருக்கானுவ…பெரிய அளவில் தமிழன் செவ்வாய் கிரகத்துக்கு ஏற்றுமதி செய்து பொருளீட்டியதற்கு இதே ஒரு பெரிய சான்று…
மன்னர்: ஆ! இது எனக்கே புது தகவலா இருக்கே! எங்கே அந்த Embassy?
பாரி: செவ்வாய்ப்பேட்டை. சேலத்துல இன்னிக்குக் கூட இருக்கு!
மன்னர்: ஆனா நான் இன்னும் deep ஆ போறேன்.
Tamil alphabet மொத்தம் எத்தனை?
பாரி: 247.
மன்னர்: 247. அதை எப்படி எழுதுவீங்க English-ல?
24/7.
பாரி: அய்யய்யோ!
மன்னர்:Tamil civilisation was operational 24/7! தொடர்ந்து அயராமல் கண் துஞ்சாமல் ஆதித் தமிழன் உழைத்திருக்கிறான்…
இதுதான் 247 letters-ன் உண்மையான secret.
பாரி: அய்யோ! நான் இதை miss பண்ணிட்டேன்.
மன்னர்:அதான் field research வேணும்னு சொல்றேன்.
12 உயிர்.
18 மெய்.
12 × 18?
பாரி: 216.
மன்னர்: 216 என்ன?
பாரி: Six cube. 6 × 6 × 6.
மன்னர்: 666!
பாரி: இல்லை, 216.
மன்னர்: Numerically வேற. Symbolically 666. சாத்தான் பைபிள்ல சொல்லியிருக்கிற எண்!!
பாரி: அப்ப Illuminati! இல்லுமினேட்டி கம்மினாட்டிங்க… சதிகாரனுங்க
மன்னர்: அதே!
இப்ப புரியுதா ஏன் அவர்கள் தமிழ் இலக்கணத்தைப் படிக்க விடமாட்டேங்கிறாங்க?
பாரி: யார் படிக்க விடலை?
மன்னர்: அவர்கள்.
பாரி: அவர்கள் யார்?
மன்னர்:அவாள் பெயர நாம்ப சொல்லக்கூடாது.
பாரி: ஆரிய Illuminati?
மன்னர்: நீங்களே சொல்லிட்டீங்க.
பாரி: சொல்லப்போனா actually “Illuminati” என்பதே தமிழிலிருந்து போன வார்த்தை.
மன்னர்: இதையும் விடப் போறதில்லையா… வேர்ச்சொல் ஆராய்ச்சிய ஆரம்பிச்சிட்டீங்களா?
பாரி: “இல் + உமி + நாட்டி.”
இல்லத்தில் உமியை நாட்டியவர்கள். Ancient domestic energy technology.
மன்னர்: உமி என்றால்?
பாரி: அதை அடுத்த வீடியோவில் சொல்றேன்.
Subscribers 5 லட்சம் வந்ததும் Part 2.
மன்னர்: Scientific information ஐ ஆதாரத்தோட பகிர்வதற்கு subscriber target எதுக்கு?
பாரி: Research funding. நம்ப தர்க்கரீதியான ஆராய்ச்சிங்களுக்கும் நிதி தேவைப்படுதுல்ல
மன்னர்: எனக்கு Area 51 பற்றியும் ஒரு theory இருக்கு.
பாரி: Area 51 என்ற பெயரே suspicious. 5 + 1 = 6.
Six directions? வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மேல், கீழ்.
ஆறு திசைகள். ஆறு என்றால்?
மன்னர்: கூவம்?
பாரி: மாத்தி – தமிழ்ப் பண்பாடோட யோசீங்க…
மன்னர்: ஆ! முருகன்!!
பாரி: Exactly! ஆறுமுகம்.
Six faces. Area 51 = Six. Murugan = Six. Murugan = extraterrestrial commander.
மன்னர்: இது கொஞ்சம் ஓவர். நான் இதை ஏற்க மாட்டேன்.
பாரி: ஏன்?
மன்னர்: முருகனை alien என்று சொல்வது colonial framing.
Alien தான் முருகனுடைய descendant.
பாரி:எப்படிங்க சொல்றீங்க?
மன்னர்:முருகனுக்கு வேல். Alien spacecraft-க்கு?
பாரி: Antenna?
மன்னர்: அதுதான் broken Vel.
பாரி: என்னங்க இது?
மன்னர்: நீங்க imagination-ஐ evidence-ஆ பயன்படுத்துறீங்க. நான் evidence-ஐ imagination-ஆ பயன்படுத்துறேன். Difference புரிஞ்சுக்கோங்க.
(...அப்போது ஸ்டூடியோவின் ஒரு மூலையில் இருந்து… கீச்… கீச்… என்று சத்தம். பத்ரியிடம் இது குறித்து, ஒரு பிராது வைக்கவேண்டுமோ?)
பாரி: ஒரு நிமிஷம்.
மன்னர்: என்ன?
பாரி: Camera 3 zoom பண்ணுங்க.
மேசைக்குக் கீழே ஒரு எலி.
(இருவரும் அமைதி காத்தனர்… எலி இவர்களைப் பார்த்தது. இருவரும் எலியைப் பார்த்தார்கள். மூவரையும் நான் பார்த்தேன். எஸ்ராமகிருஷ்ணன் உஷார்!!)
பாரி மெதுவாக: நான் அப்பவே சொன்னேன்ல…
மன்னர்: என்ன?
பாரி: They are already among us. நம்ம கூடவே எப்போதுமே நம்ப மூதாதை எலியன்கள் இருக்கிறார்கள்… நமக்குதான் அவங்களப் பத்தின புரிதல் இல்ல…
(சரி. அடுத்த பகுதியில் இச்சுவையான உரையாடல் தொடரலாம்…)
On Dr N Ganesan’s Claim: “Sanskrit बीज/bīja ‘seed’ derives from Dravidian vittu/viccu/vīca வித்து/விதை/விசை..”
August 7, 2026
This longform post is about languages, roots, transmission directions in the context of Sanskrit & Tamil…
… and more importantly, it seeks to deal with suspect methodologies, premature optimizations, simplistic/superficial generalizations, giant logical leaps, self-referential statements, circular-reasoning, non-existing citations and the like, around some ideas – that have been plaguing the Tamil ‘discourse’ – or what passes for it.
I would also like to ascribe such seemingly unscholarly & infructuous approaches to a child-like eagerness/enthusiasm of some fundamentally good people – to ‘prove’ the ancientestest nature & origins of Tamil, in spite of all the evidence that stare at us in our face and associated kanging – and not to some deleterious motive. Okay – I agree that NOT all such folks are decent & ethical – leave alone being scholarly.
Normally, I do not indulge in major or sustained battles/discussions on X, because in my opinion, the context for the X-platform is not really about longform idea exchanges and also because I am not blue-ticked yet which would have otherwise allowed me to respond in longform. Also – ars longa vita brevis.
Again, I wanted to put in some significant time-effort in terms of approaching & analyzing this particular claim – as there are many many such types of uncalled-for claims that seem to be proliferating in the Tamil<->Sanskrit relationships – and I want to create some kind of a ‘template approach’ to deal with them. An exemplar, if you will.
Yes. I want to approach the claim as rigorously & as politely as possible, with a clear logic and marshalling of whatever evidence that I could muster; but of course I am not at all a Mr KnowAll and I do not have any scholarly pretensions. I continue to be an eager student of Tamil, Sanskrit & English – and assorted other things.
In any case, linguistics++ is only one of my minor interests, really. So, feel free to rebut/join etc in this discussion. Let us all learn together, if we can – with as much civility as needed and possible.
1
Background:
On July 29, 2026 this following discussion happened and I was not privy to that – am providing just the immediate context.
It was one rabid, frothing-at-the-mouth ‘Aravind’ who started off with an obtuse set of TamilSupremacist-Dravidian assertions. Pure unadulterated hatecraft. Usual story/fiction: Aryan invaders foisted themselves and Sanskrit on Tamilnadu post 13th century CE.
Here’s were Sri N Ganesan (henceforth NG) introduces the idea as in the subject/title of this post.
And ‘dagalti’ asks a follow-up query and NG answers, looping me in. As under.
I responded to him – and this post is the result of that undertaking from me to respond soon.
There was also another short exchange between me and NG:
Rest of the post is going to be about expanding on my observation:
~”Sanskrit bīja ‘seed’ derives from Dravidian vittu/viccu/vīca” is NOT established by DEDR 5401 & is phonologically weak as presented.
Ideally I would like to use ‘Dravidian’ instead of Dravidian, since it is a made up category-name chistened fairly recently, unlike the monikers Tamil or Sanskrit. It also has this heavy baggage of having been politically loaded. But, writing ‘Dravidian’ everytime could be jarring, so am avoiding that.
To the extent that my typing would allow for, I have used International Phonetic Alphabet (IPA), showing the correct pronunciation..
2
DEDR 5401
Dravidian Etymological Dictionary of 1984 (often abbreviated as DEDR), is a major academic resource painstakingly compiled and annotated by T. Burrow and M. B. Emeneau. Very reasonably comprehensive.
DEDR 5401 refers to a particular entry – that groups a large set of Dravidian forms meaning ‘sow’, ‘seed’, ‘semen’, ‘testicle’, and related notions. The distribution across South, Central and North Dravidian languages makes the underlying Dravidian family cohesive.
It is important to remember as a backgrounder that, DEDR is a comparative dictionary organised into proposed etymological groups, rather than a series of claims that every listed surface form must be inherited directly and regularly.
The important qualification occurs in the entry itself:
“Go., Kuwi, and Malt. words for ‘seed’ may be < IA.”
That warning matters. Burrow and Emeneau were explicitly allowing that forms such as Gondi vījā, Kuwi bica/bicca, and Malto bíci might be loans from Indo-Aryan, presumably from forms related to Sanskrit bīja.
Therefore, these particular forms cannot safely be used as independent evidence for a Dravidian development.
vittu -> viccu -> vīca -> bīja
That would risk circular reasoning. Some of the closest-sounding forms may already be Indo-Aryan loans.
3
What can reasonably be reconstructed for Dravidian?
The underlying family is usually represented approximately as something like:
- verbal base *vit- / *vitt-, ‘to sow, scatter seed’
- noun *vitt-, ‘seed’
- derivatives with suffixes, such as Tamil vitai
The exact Proto-Dravidian reconstruction depends on how alternations among vit-, vitt-, vitay-, vicc- are analysed.
Tamil forms such as:
- வித்து vittu, seed, semen
- விதை vitai, seed
- விதை- vita(i)-, to sow
- விச்சு viccu, seed or sowing-related form
…belong to the same general Dravidian lexical family according to DEDR. That much is reasonable.
But DEDR 5401 does not itself reconstruct Sanskrit bīja from this family.
So, the reason as to why this extract was used by NG is not at all clear!
4
Is vittu > viccu plausible?
Tamil and its sister/other languages exhibit historically conditioned palatalisation and alternations involving k/c, c/y, and consonants adjacent to front vowels or y. However, a specific development vittu > viccu requires its own comparative and morphological evidence and should not be justified by a general Tamil rule tt > cc.
One cannot simply posit a general rule: tt > cc, without specifying:
- the earlier phonological environment
- the chronological stage
- parallel examples
- whether the form is inherited, dialectal, analogical or expressive
The examples given in the claim of NG do NOT establish such a rule.
பச்சை : பாசி – paccai and pāci cannot simply be treated as an illustration of free cc : c alternation. Their vowel quantities, morphology and lexical histories also need explanation.
கொவ்வை : கோவை – This pair likewise involves more than geminate simplification. It has differences in vowel length and medial consonantal structure.
Similarity alone does not prove that it illustrates the development required for vittu > viccu.
விச்சு : வீசு – This comparison is particularly problematic.
Tamil வீசு vīcu, ‘to throw, fling, wave, blow, spread’, belongs in DEDR to a separate comparison associated with scattering or throwing, referenced by DEDR 5400 vitir- in the quoted entry. DEDR’s “Cf. 5400 Ta. vitir” indicates comparison, not an assertion that vīcu regularly derives from vittu.
A derivation such as vittu > viccu > vīcu would require, at minimum:
- tt > cc
- loss of gemination cc > c
- i > ī
- and a semantic development
It may possible that each step might conceivably occur somewhere, but the sequence needs evidence.
It cannot be inferred merely from resemblance as comfortingly assumed & indicated by NG.
In fact, this ‘resemblance’ issue is the one that is there in most of the takes of ‘folk etymologists’ like Mannarmannan & Paari Saalan, that plague the Tamil discussions.
5
The proposed vīca > bīja equation
This is the weakest part of the argument or the process for claim by NG.
Sanskrit bīja /biːd͡ʑa/ ‘seed’ and a proposed Dravidian form vīca or vīja look moderately similar, but historical etymology requires regular sound correspondences.
A borrowing from Dravidian *vitt- into Indo-Aryan as bīja (as claimed by NG) would definitely require explanations for:
| Dravidian | Sanskrit | Problem |
|---|---|---|
| initial v- | b- | Possible in some borrowing situations, but must be demonstrated |
| medial -tt- | -j- | No obvious regular substitution |
| final consonant | final -a | Sanskrit nominal adaptation is possible |
| short i | long ī | Requires an account or an example |
| geminate stop | voiced palatal affricate | Major unexplained change, this is surprising |
The change *vitt- > bīja- is therefore not a transparent or recognised sound substitution – UNLESS NG can satisfy every one of the above 5 criteria.
One might instead compare the later Dravidian forms vīja, bica, bíci, but DEDR itself warns that precisely these may come from Indo-Aryan.
They are consequently poor evidence for the opposite direction (Dravidian -> Sanskrit) of borrowing.
6
What is the accepted etymology of Sanskrit bīja?
Sanskrit bīja unquestionably means ‘seed’, and by extension ‘germ’, ‘source’, ‘cause’, generative material, semen and, in tantric usage, a ‘seed syllable’. The semantic explanation of bīja-mantra as a compact sound containing generative spiritual potency is traditional and unobjectionable.
I will NOT dispute that its deeper etymology, however, is uncertain at least in my limited knowledge. It seems to lack a straightforward and universally accepted Indo-European derivation. Such uncertainty makes a substrate or borrowing hypothesis possible in principle, but:
‘Uncertain within Indo-European’ does not automatically mean ‘borrowed from Dravidian!’
To establish Dravidian origin, scholars like NG would definitely need:
- a reconstructible Dravidian source form predating Indo-Aryan attestation
- regular or independently paralleled sound substitutions
- plausible geographical and chronological contact
- and exclusion of borrowing in the reverse direction
The proposed argument of NG supplies mainly semantic similarity and surface resemblance.
But one needs arguments that are really sound and substantive to present a scholarly take!
7
Is vit- a Sanskrit dhātu derived from Dravidian?
The wording of NG: “vit- is the dhātu-vēr in Dravidian” unfortunately mixes Sanskrit grammatical terminology with comparative reconstruction.
A better formulation would perhaps be: “Proto-Dravidian appears to have had a verbal root or base *vit- / *vitt-, ‘sow’.”
Calling it a dhātu is understandable informally, but Sanskrit grammatical roots and comparative Dravidian reconstructions belong to different descriptive frameworks.
Further, the existence of a (A) Dravidian root *vit- does not show that (B) Sanskrit bīja comes from it.
The two propositions A and B are separate which NG has to note of.
8
The Vināyakar Akaval claim
The contentious line is: “மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்..”
Project Madurai’s text (specifically cited by NG) and commentary interpret மும்மதச் சுவடு as the marks or traces produced by three kinds or streams of elephant rut-fluid. The particular commentary of the great Sri TP Meenakshi Sundaram Pillai, hosted there gives the names of those 3 as: கன்ன மதம், கபோல மதம், கோச மதம்…
…one would suppose that, after referring to the Project Madurai in the context of Akaval, NG would quote this exact reference, actually cited by him!
But NG ‘quotes’ something different! கர்ண மதம், கபோல மதம், பீஜ மதம்!! பீஜ and NOT கோச as in his reference! When asked about NG replied, as in the snippet from the Section1 above – “many scholars explain the பீஜ மதம்.”
I was slightly surprised by the defensive ‘I am my own citation’ kind of response, but that’s not a significant issue in the big picture of a host of other concerning lacunae in the claims of NG.
Of course one is aware that in a few glosses of the phrase mummdam, bīja-mada is given as a lexical explanation – but then NONE of them are of the incredible scholarly levels of Sri TPM Pillai!
Therefore:
- மும்மதம் in the poem has no etymological bearing on Sanskrit bīja.
- The reading பீஜ மதம் appears to be one modern anatomical or Sanskritising gloss among variants.
- Even were bīja-mada an authentic technical term, it would merely use Sanskrit bīja in the sense ‘semen/generative fluid’. It would not prove that bīja originated in Tamil or Dravidian.
The poem ‘Vinayakar Akaval’ brought in by NG to prove his claim, is consequently irrelevant to the proposed etymology.
9
Conclusion
I hope, at least Dr N Ganesan has read this far… :-) In spite of this post is already some 1900+ words in length! Loooooong form indeed! But I think it would be an useful template or a framework to respond to such claims, hopefully… at least for me!
It also took me upwards of 7 hours to process claims, collect details, organize them and then respond comprehensively (one hopes so!) to the claims made by NG.
But.
I would be very eager to know NG’s response (and interested others) in terms of defending or revising his claims – point-by-point AND with tangible, verifiable & scholarly evidence.
Anyway. Here’s hoping this would encourage decent & evidence-logic based discussions on one of the vexatious issues with our Tamil. Thanks.
(END)
நல்லதங்காள் 2.0: ஒருமாதிரி ஜென்-ஸீக்களுக்காகவென ஆரம்பித்து வழக்கமான பாணியில் போஸ்ட்-மாடர்ன் கதை சொல்லல்
August 5, 2026
இதனை, கிணற்றின் விளிம்பில் ஒரு deconstruction எனவொரு மாதிரியாகவும் புரிந்து கொல்லலாம்.
ஒரு காலத்தில், அதாவது Wi-Fi கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பும், ப்ளெட்டி குடும்ப WhatsApp குழுக்கள் தோன்றுவதற்கு முன்பும், நல்லதங்காள் என்ற பெண் வாழ்ந்தாள். அவளுடைய வாழ்க்கையைப் பற்றிய எல்லா முடிவுகளையும் அவளைத் தவிர மற்றவர்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். இதுதான் அந்தக் காலத்தின் ‘குடும்ப விழுமியங்கள்’. என்ன wtf. இது அப்பட்டமான patriarchy. அவ்ளோதான் கதை.
-0-0-0-0-0-
நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள். ‘Family planning என்பது மேற்கத்திய சதி’ என்று அக்கால சமூகமே முடிவு செய்திருக்க வேண்டும். கணவன் காசிராஜன். குடிகாரன். டாஸ்மாக்கில் செந்தில்பாலாஜிக்குக் கப்பம் கட்டவே அவனுக்கு நேரம் போதவில்லை. எப்படியும், திருட்டுத் திராவிட அரசுகள் கொடுத்த பிச்சை ‘உரிமைத் தொகை’ களை அப்படியே திருப்பி டாஸ்மாக் கடைகளுக்கே கொடுத்துக்கொண்டிருந்த குடிமகன் தான் அவன்.
காசிராஜன் பெயரில் ராஜா இருந்தாலும் வீட்டில் காசே இல்லை, cause இல்லையென்றால் பின்னர் எப்படி எஃபெக்ட் வரும்? ரேஷன் கடை புழுத்த அரிசிகூட வீட்டில் இல்லை. வறட்சி வந்தது.
வழக்கம்போல ‘ஏ திமிர் பிடித்த கர்நாடகாவே! காவிரி நீரைத் திறந்து விடு’ எனச் சொல்ல முடியாது. ஏனெனில் அது வைகைக் கறை படிந்த நிலம். தமிழகத்தின் தென்னகம்.
நீரில்லை. வயலில் பயிர் இல்லை. வீட்டில் உணவு இல்லை. ஆனால் ஊர்ப் பெரியவர்கள் ஆலோசனை மட்டும் டன் கணக்கில் வைத்திருந்தார்கள். கேட்டால் வாட்ஸ்அப் ஃபார்வர்ட் என்றார்கள். இருந்தாலும், நாங்க பேக்வர்ட் எங்களை வறட்சிப் படுத்திவிட்டார்கள் வந்தேறி ஆரியர் என்றார்கள். பெரிசுங்கன்னாலே தொல்லைதான்.
“பெண் என்றால் பொறுமையாக இருக்க வேண்டும்.” – ஆனா அதே சமயம் – ராணிமங்கம்மா அல்லிராணி வேலு நாச்சியார் எனப் புல்லரித்துக் கொள்வார்கள், ப்ளடி.
“குடும்ப மானம் காக்க வேண்டும்.” – அதே சமயம் குடித்துவிட்டு வந்து சொந்த மகளையே ரேப் செய்வார்கள்…
“கஷ்டம் வந்தால் கடவுளை நினைக்க வேண்டும்.” – ஆனா கஷ்டம் என் மூலமா வந்தா பேசாம மூடிக்கினு போய்டணும், கேட்டியா?
அரிசி கேட்டால் அப்ஸ்ட்ராக்ட் தத்துவம் இலவசமாகக் கிடைத்தது. வெளங்கிடும்.
ஒருநாள் நல்லதங்காள் தன் அண்ணன் நல்லண்ணன் வீட்டுக்குச் செல்ல முடிவு செய்தாள். ‘Blood is thicker than water’ என்ற பழமொழியை நம்பினாள். ஆனால் அந்தப் பழமொழிக்கு கீழே சிறிய எழுத்தில் ‘Terms and conditions apply. Sister-in-law approval mandatory’ என்று இருந்ததை அவள் கவனிக்கவில்லை. அண்ணி நல்லதங்காளை கெட்டநாத்தியாக நினைத்தாள்; ஏனெனில், அவள் கூகில் ட்ரான்ஸ்லேஷன் சரியில்லை.
எது எப்படியோ. வேறுவழியில்லாத நல்லதங்காள், ஏழு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு காசிராஜன் சகவாசமே வேண்டாம் என வெளி நடப்பு செய்தாள். குழந்தைகள் வழியில் தொடர்ந்து கேட்டனர்:
“அம்மா, இன்னும் எவ்வளவு டிஸ்டென்ஸ்?”
“பொட்டிக் கடேல குர்குரே பாக்கெட் வாங்கிக் கொடுக்கறியா?”
“அம்மா, அடுத்த மீல்ஸ் எங்க? எவ்ளோ நேரம் நான் மீம்ஸ் பாத்துக்கிட்டு இருக்கறது?”
“அம்மா, hotspot இருக்கா? டவரே கெடக்க மாட்டேங்குதே!”
கடைசி இரண்டு கேள்விகளை யார் கேட்டார்கள் என்பது வரலாற்றுக் கதையாடல் பிரச்சினை. சில ஆய்வாளர்கள் அது பின்னாளில் சேர்க்கப்பட்ட இடைச்செருகல் என்கிறார்கள். பல தமிழ்தேசியப் பேராசிரியர்கள், ஏன் அந்தக் காலத்திலேயே எங்கள் செந்தமிழ் முப்பாட்டனார்கள் இண்டெர்னெட் மொபைல் ஃபோன் கண்டுபிடித்திருக்க மாட்டார்களா எனக் கேட்டார்கள். “உலகத்துக்கே இரும்பைக் கண்டுபிடித்துச் சொன்னவர்கள் எங்கள் லெமூரியர்கள்தாமே?”
நல்லண்ணன் அப்போது வீட்டில் இல்லை. அவனுடைய மனைவி மூளியலங்காரி இருந்தாள். பழைய கதையில் அவள் ‘கொடூர அண்ணி.’ நம்முடைய புதிய critical edition-ல் அவள் patriarchy-யின் middle-management அதிகாரி. வீட்டின் உணவு, கதவு, சமையலறை, குடும்ப மரியாதை ஆகிய சிறு அதிகாரங்கள் மட்டுமே அவளிடம் இருந்தன. அவற்றை அவள் முழு தீவிரத்துடன் பயன்படுத்தினாள்.
ஏனெனில் மேலிருந்து ஒடுக்கப்பட்டவர் கீழே ஒருவரைக் கண்டால், hierarchy தன்னை reproduce செய்துகொள்ளும்.
“எதற்காக வந்தாய்?” என்றாள் மூளியலங்காரி.
நல்லதங்காள்: “குழந்தைகள் பசித்திருக்கிறார்கள்.”
“அதற்காக இங்கேயா வருவாய்? குடும்பத்தோடு வந்திருக்கிறாயே! முன்பே calendar invite அனுப்பியிருக்கலாமே?”
“நான் கூக்ல் calendar உபயோகிப்பது இல்லை, .”
“குறைந்த பட்சம் ஒரு வாட்ஸ்அப் மெஸ்ஸேஜ்?”
“என் ஃபோன்ல சார்ஜே இல்லை! நல்லண்ணன் தான் நல்லெண்ணத்தோட டாப்-அப் செஞ்சி கொடுக்கறேன்னான்…”
“அதுதான் பிரச்சினை. திட்டமிடல் இல்லை. Financial literacy இல்லை. இப்போது emotional blackmail. தேவையா? உன்னோட எக்ஸ்பெக்டேஷனுக்கும் ஒரு எல்லை வேண்டாமா?”
இதைச் சொல்லிக்கொண்டே மூளியலங்காரி தன் LinkedIn-ல் “boundaries are part of self-care” என்று சாட்ஜிபிடி உதவியுடன் பதிவிட்டாள். பதிலுக்கு நிறைய லிங்க்ட்இன்ன ஆண்கள் DM செய்து “ஏன், நாங்களும் உனக்கு உதவி செய்ய முடியுமே! பக்கத்து கஃபேகாஃபிடேயில் ஆரம்பிக்கலாமா? உன் முகம் அழகாக இருக்கிறது… உன் கட்டுரை அதை விட…”
…மூளியலங்காரி, நல்லதங்காளுக்கு உடைந்த பாத்திரத்தில் பழைய அழுகிய ஜவ்வரிசி மாவைத் தந்தாள். அடுப்புக்கு ஈர விறகு. சமைக்க துளையுள்ள பானை. பின்னர், “வாய்ப்பு கொடுத்தேன்; பயன்படுத்தத் தெரியவில்லை” என்றாள். இது சமகால நிறுவனங்களில் PIP performance improvement plan என்று அழைக்கப்படுகிறது.
குழந்தைகள் அழுதனர், அவர்களுக்கு வேற என்ன வேலை.
நல்லதங்காள் மௌனமாக இருந்தாள். ஏனெனில் ஜென்ஸீ கதையாசிரியர்கள் துன்புறும் பெண்களுக்கு நீண்ட உரையாடல் எழுத மாட்டார்கள். அவர்கள் கண்ணீர், கற்பு, தியாகம் ஆகிய மூன்று reaction emojis மட்டுமே வழங்குவார்கள். உங்களுக்கு எந்த இமோஜி தேவையோ இட்டுக் கொள்ளவும்.
சரி. இப்போது நல்லதங்காள் வெளியேறினாள். ஏனெனில், முன்னதாக மூளியலங்காரி கதவடைப்பு செய்திருந்தாள்.
இங்கே narrator (நான் தான்!) திடீரென்று கதையை நிறுத்துகிறான்.
Narrator: “டேய் வாசகா! அடுத்ததாக நீ எதிர்பார்ப்பது கிணறு.” (வாசகிக்கு இதனைப் பெண்படுத்திக்கொள்ளவும்)
வாசகர்: “ஆம். எனக்கும் Original plot தெரியும். இப்பதான் ஜெமினியில் கேட்டேன். ஆனால் அந்த ஸ்டூடியோவ எப்பவோ இழுத்து மூடிட்டாங்களாம்!”
நல்லதங்காள்: “ஒரு நிமிடம்! என் வாழ்க்கையை ஏன் எல்லோரும் spoiler-alert பண்ணுகிறீர்கள்?”
களிம்பு தடவிக் கொள்ளாமல் விளிம்பு நிலையில் இருந்த அவள் கதையின் ஓரத்திலிருந்து வெளியே வந்து ஆசிரியரிடம் கேட்டாள்:
“எனக்கு வேறு option இருக்கறாமாறீ எழுதவே முடியாதா?”
ஆசிரியர் பதற்றமடைந்தார். (இவரும் அதே நர்ரேட்டர் தான்!)
“இது புகழ்பெற்ற சோகக் கதை. நீ கிணற்றில் குதிக்காவிட்டால் cultural authenticity போய்விடும். அந்த்ரொபாலஜி பத்தி ராஜன்குறை கிருஷ்ணன் ரோஸா வஸந்தெல்லாம் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?”
நல்லதங்காள்: “என் குழந்தைகள் இறந்தால்தான் உங்கள் culture authentic ஆகுமா?”
“அது தாய்மையின் உச்சம். அதைத்தான் எங்களுக்கு மிஷெல் ஃபூக்கோ சொல்லிக் கொடுத்திருக்கிறார்… ஜெயுமோகன் கூட இது குறித்து ஒரு சுயமுன்னேற்றப் பதிவு போட்டிருக்கார்!”
“ஜெயமோகனோட எல்லா பதிவும் சுயமுன்னேற்றம் பத்திதான்… எனக்கு அதுதான் இப்ப ரொம்ப தேவையா?”
“அப்ப சாரு நிவேதிதா? எஸ் ராமகிருஷ்ணன்?? இவங்க சொன்னா பரவாயில்லயா?”
“கண்ட கழுதெங்க பத்தி பேச நான் இங்க வரல… சாப்பாடு கொடுக்காத சமூகம் குற்றமற்றது; ஆனால் – குழந்தைகளோடு இறந்த பெண் தெய்வமா?”
Critical theory அங்கே background music போல ஒலித்தது.
நல்லதங்காள் கிணற்றின் அருகில் நின்றாள். குழந்தைகளைப் பார்த்தாள். கிணற்றைப் பார்த்தாள். பின்னர் camera-வைப் பார்த்தாள். சமூக சாட்சியமாக ஒரு கடைசி ஸெல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது.
“இந்தக் கிணறு வெறும் கிணறு அல்ல. இது feudal patriarchy-யின் narrative apparatus. குடும்பம் என்னை வெளியே தள்ளியது. சமூகம் உதவி செய்யவில்லை. ஆனால் climax-ல் என் தனிப்பட்ட முடிவையே moral lesson ஆக்கப் போகிறார்கள்.”
மூத்த குழந்தை கேட்டது:
“அம்மா, அப்படின்னா, நாம என்ன செய்யப் போறோம்?”
“கிணற்றை deconstruct செய்யப் போகிறோம்.”
அவர்கள் கிணற்றுக்குள் குதிக்கவில்லை. அதற்கு முன் ஒரு selfie எடுத்தனர்.
Caption: “All is well, that ends in a well.”
இன்ஸ்டாவுக்காக ஒரு ரீலும் போட்டனர். விஜய் படப்பாட்டு மெட்டு ஒன்றின் பின்புலத்தில் குடும்பத்தோடு குத்தாட்டம்.
பின்னர் நல்லதங்காள் அருகிலிருந்த திராவிட அபலைப் பெண்களைச் சேர்த்தாள். விதவைகள், பசியால் தவித்தவர்கள், வீட்டிலிருந்து விரட்டப்பட்டவர்கள், குடிகாரர்களால் உதைத்துத் துரத்தப் பட்டவர்கள். வீச்சரிவாளால் வெட்டப் பட்டவர்கள், குடிகார சொந்தத் தகப்பன்/சகோதரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டவர்கள், அநாதையாக விடப்பட்ட இரண்டாம்/மூன்றாம் தாரப் பெண்டாட்டிகள். திராவிட இளைஞர்களால் விரட்டப் பட்ட தாய்மார்கள்…
அவர்கள் “நல்லதங்காள் பரஸ்பர உதவி சங்கம்” என ஒரு Selfie Help Group தொடங்கினர்.
முதல் தீர்மானம் போட்டனர்:
“தற்கொலைக்குத் தள்ளும் கதைகளை பக்திப் பாடலாக்கவோ நாட்டார் கதையாக்கவோ கூடாது.”
இந்த இயக்கம் viral ஆனது. #JusticeForNallathangal, #SevenKidsSevenRights, #OpenTheGranary ஆகிய hashtags, trend ஆயின.
நல்லண்ணன் திரும்பிவந்தான். நடந்ததை அறிந்து வீச்சரிவாளை எடுத்தான். சாதிப் பெருமை பேசினான். அவன் திராவிடன்.
“என் மனைவியைத் தண்டிப்பேன்!”
நல்லதங்காள் கையை உயர்த்தினாள்.
“Stop. இதுதான் toxic masculinity season two. நான் உதவி கேட்டபோது நீ எங்கே இருந்தாய்? இப்போது வாள் எடுத்தால் hero ஆகி விடுவாயா? அடுத்து முதலையமச்சராகவே ஆகிவிடலாம் எனக் கனவு காண்கிறாயா?”
நல்லண்ணன் வாளை மெதுவாகக் கீழே வைத்தான். வாளாவிருந்தான். வாள்வாங்கு வாள்ந்தான், ஏனெனில் அவன் திராவிடன், தனித்தமிழ் வெறியன், ழ அவனுக்குச் சுட்டுப்போட்டாலும் வராது.
எது எப்படியோ – நல்லண்ணன் நல்லதங்காளைக் கேட்டான்: “அப்படியானால் என்ன செய்ய வேண்டும்?”
“முதலில் கேள். மன்னிப்பு கேள். பிறகு மறுபடியும் மன்னிப்பு கேள். அடுத்து, வீட்டிலுள்ள தானியத்தைப் பகிர். அதன் பின் unpaid care, household work பற்றி workshop attend பண்ணு. அது வரை நீ அண்ணனில்ல, நீ எனக்கு அண்ணனில்ல – அப்டிதான் மணிரத்னம் படத்துல வசனம் இருக்கும்.”
மூளியலங்காரியும் முன்வந்தாள்.
“பழி… வேண்டாம், எனக்கு வேண்டாம்… villain ஆக்கிட்டாங்க… என்னை மட்டும் villain ஆக்கிட்டாங்க. மணிரத்ன வசனம் எனக்கும்தான் தெரியும்… இந்த வீட்டில் உணவின் மீது உண்மையான உரிமை யாருக்கு இருந்தது? நான் வீட்டின் கதவை அடைத்தேன் – ஆனால் கதவை அமைத்தது யார்? ஒரு ஆணாதிக்க தச்சர் தானே? வீட்டைக் கட்டியது யார்? ஆதிக்கவெறி கொண்ட ஒரு ஆண் மேஸ்திரிதானே?”
அனைவரும் சில நொடிகள் அமைதியாக இருந்தனர். பின்னர் narrator நைஸாக மெதுவாகக் கதையை முடிக்க முயன்றான். ஏனெனில் அவன் மனைவி அவனுக்கு ultimatum கொடுத்திருந்தாள். “சும்மா கதை எழுதறேன் கட்டுரை எழுதறேன் கத்தரிக்கா நறுக்கறேன்னு கதவுடாம மொதல்ல பத்துபாத்திரம் தேய்!”
…நல்லதங்காள் தடுத்தாள்.
“இன்னும் முடிவில்லை.”
“என்ன வேண்டும்?”
“எனக்கு கோவில் வேண்டாம். பொங்கல் விழாவில் அழுது பாடும் கதை வேண்டாம். உயிரோடு இருக்கும் பெண்களுக்கு உணவு, பாதுகாப்பு, சொத்துரிமை, மனநல உதவி வேண்டும்.”
“அது climax-க்கு சற்றே policy-heavy ஆக இருக்கிறது.”
“அப்படியே எழுதுங்கள்.”
இறுதியில் நல்லதங்காள் தெய்வமாகவில்லை. Motivational speaker-ஆகவும் மாறவில்லை. நாட்டாரியல் ஆராய்ச்சி என்ற பெயரில் பாளையங்கோட்டைப் பாதிரிகளால் கழிசடை ரிஸர்ச்சும் செய்யப் படவில்லை.
மாறாக – அவள் ஊரில் பொதுச் சமையலறை, குழந்தை பராமரிப்பு மையம், பெண்களுக்கான அவசர நிதி ஆகியவற்றை உருவாக்கினாள். டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடி எரித்துச் சாம்பலாக்கினாள்.
கே அண்ணாமலை அவர் பங்குக்கு அகமகிழ்ந்து அவளுக்கு விழா எடுத்து வீ-த-லீடர்ஸ் உறுப்பினர் அட்டையை வழங்கினார். “எனக்கு அம்பது லட்சம் லீடர்ஸ் வேண்டும். ஆகவே தமிழ்நாட்டில் பெண்கள் படும் பாட்டுக்கு பாரதீயஜனதா கட்சி பொறுப்பானால், பாஜகவையும் எதிர்த்து விமர்சிப்பேன்” என்றார்.
ஆனால் – தவேக விஜய் விசிறியான நல்லதங்காள், லீடர்-உறுப்பினராக மறுத்தாள். மேலும் அவளுக்கு அட்டை என்பது ரத்தத்தை உறிஞ்சிவிடும் என முந்தா நாள் வாட்ஸ்அப் செய்தி வந்திருந்தது.
அனைவராலும் அம்போவென விடப்பட்ட கிணறு மட்டும் தனிமையில் வாடிக்கொண்டு இருந்தது. பாவம்.
சுபம்.
ஆம்.
1
இந்த மாதிரி பணம் கொடுத்து, சதித்திட்டச் சதிராடி தொழில்முறையில் பெரிய அளவில் எம்எல்ஏக்களை (அதுவும் சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை) மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கும் ஈனச் செயலை (எனக்குத் தெரிந்து) இந்தியாவிலேயே முதலில் செய்த அயோக்கியக் கும்பல் இந்தப் பொறுக்கிகளுக்காக, பொறுக்கிகளால், பொறுக்கித்தனமாக நடத்தப்படும் திமுக – திராவிட முன்னேற்றக் கழகமே.
இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை!
அதிலும், இந்த கருணாநிதிதான் முதலில் இந்தக் கேவலமான அசிங்கத்தைச் செய்தது… நிலைமை இப்படித் தொடர்ந்து இருக்கையிலே இந்த திமுக கும்பலுக்கு எப்படி இந்த நடிகர் விஜய்குஜய் விசிலடிச்சான் குஞ்சப்பர்கள் நடத்தும் குதிரைபேர அரசியல் பற்றிப் பேச வக்கிருக்கிறது, சொல்லுங்கள்?
2
1969: திராவிட ‘அறிஞர்’ அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு, திமுகவில் ஏற்பட்ட சதிகார-அதிகாரப் போட்டியின் போது, கருணாநிதி, தனக்கே உரித்தான மிகுந்த குள்ளநரித்தனச் சூழ்ச்சியுடனும் வக்கிரத் தந்திரத்தனத்துடனும் – முழு செயல் முறையையும் தன் வசப்படுத்தினார்.
…அதில், தமக்கு ஆதரவு கொடுப்பதற்காக ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் தலா ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை நிதி ஊக்கத்தொகை வழங்கியதும் அடங்கும்…
3
கள்ளத்தனம் செய்த காதகன் கருணாநிதி & கம்பெனி லீலைகள் 1967ல் திமுக ஆட்சிக்கு முன்பே பரவலாகத் தெரிந்தாலும், சிலபல முறை அண்ணாத்துரையே அதற்கு அரைகுறை மனதுடன் முட்டுக் கட்டைகள் போட்டாலும், ஆட்சி அமைந்த பின் கருணாநிதியின் அழிச்சாட்டியம் அதிகமானது.
இந்தப் பின்னணியில் – 1968 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் மேயரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் வந்தபோது, பல காரணிகள் திமுகவுக்குச் சாதமாகவும் பாதகமாகவும் இருந்த நிலையில் – ஒரு நல்ல ஆத்மாவும் இந்தக் கேடுகெட்ட திராவிட திமுகவில் இருந்தது தெரியவந்தது… மேலும், இயற்கையாகவே, கருணாநிதி கோஷ்டியினரையும் அம்முடிவு பாதித்தது.
சரி.
முதலாவதாக, மாநகராட்சி தேர்தல்களில் திமுக ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவான ஒட்டுவித்தியாச வெற்றிகளையே பெற்றது – இதற்குக் காரணம் ‘படித்த வகுப்பினர்’ வாக்களிக்கவே (வழக்கம்போலவே!) செல்லவில்லை – மேலும், இம்மாதிரி நடுத்தர மற்றும் உயர்வர்க்க வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்திருந்தால், முடிவுகள் இன்னும் மோசமாக ஆகி திமுக தோற்றிருக்கலாம் (ஆகவே காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கலாம்) எனவும் ஒரு சாத்தியக் கூறு இருந்தது… அண்ணாதுரைக்கு இது ஒருமாதிரி கலக்கமாக இருந்தது. ஆனால், அவர் சுதாரித்துக்கொண்டு கருணாநிதி கும்பலை மட்டுப் படுத்தியதால்தான் ஒருமாதிரி முதலுக்கே மோசமில்லாமல் போயிற்று.
இரண்டாவதாக, முன்னாள் திமுக மேயர் முனுசாமி + மாநகராட்சியில் முனுசாமி அணியைச் சேர்ந்த உறுப்பினரான மைனர் மோசஸ் ஆகியோரின் மீது சுமத்தப்பட்ட காத்திரமான ஊழல் குற்றச்சாட்டுகள் பலப்பல இருந்தன. மேலும் இவர்கள் இருவரும், இயற்கையாகவே (‘பாம்பின் கால் பாம்பறியும்’ + ‘ஈனம் ஈனத்தோடு சேரும்’) கருணாநிதி கோஷ்டியின்அசைக்கமுடியாத ஆதரவாளர்களாகக் கருதப்பட்டனர். கருணாநிதியும் தம் பாம்புகளாகிய அவர்களுக்காக மிகவும் தீவிரமாகப் பணியாற்றியதும் நடந்தது – அதாவது ஊழலுக்காக மெனக்கெட்டு, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார் அந்த ஆசாமி.
மூன்றாவதாக, திமுக ஆட்சியின் கீழ் சென்னை நகரம் சீரழிய அனுமதிக்கப்பட்டதாக பத்திரிகைகள் பரவலாக விமர்சித்தன. (அப்போதைய ‘த ஹிந்து’ உட்பட – அது இன்று திராவிட திமுகவின் நிரந்தர ஜால்ரா என்பது ஒரு நகைமுரண், வேறென்ன சொல்ல…)
இந்தச் சூழ்நிலையில், அடுத்த மேயர் யார் என்பதைக் குறித்து முடிவெடுப்பது தானாக மட்டுமே இருக்கும் என்று அண்ணாதுரை பகிரங்கமாக அறிவித்தார்.யோசனைக்குப் பின், அணி/கோஷ்டி சார் தொடர்புகள் குறைவாக இருந்த இளம் வழக்கறிஞரான வேலூர் நாராயணனைத் தேர்ந்தெடுத்தார். இவர் பேரில் பெரிதாக ஊழல் குற்றச்சாட்டுகளும் இருந்திருக்கவில்லை…
ஆகவே, பேராசைப் பேய்களான கருணாநிதிகள் மேலெழும்ப முடியாது போய், வேலூர் டி நாராயணன் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
அவர் உடனடியாக, சென்னை நகரைச் சுத்தப்படுத்தும் ஒரு திட்டத்தை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தனது ஒரு ஆண்டு பதவிக்காலம் முழுவதும் அவர் அந்தத் திட்டத்தை குறிப்பிடத்தக்க உற்சாகத்துடனும் தீவிரத்துடனும் முன்னெடுத்துச் சென்றார்.
(3 டிஸெம்பர் 1968 அன்று வேலூர் நாராயணன் மெட்றாஸ் ரோட்டரி க்ளப் கூட்டம் ஒன்றில் பேசியபோது…)
ஏறத்தாழ – கருணாநிதி கோஷ்டியினருக்கு எதிராக அண்ணாதுரை எடுத்த கடைசி நடவடிக்கை இதுவாகத் தான் இருந்திருக்கவேண்டும். மேலும். இது, ஊழலும் பூசலும் மிகுந்த கட்சியைப் புத்துயிர் பெறச் செய்வதற்கும், அணிப்பிரிவினை உள்ளிட்ட ஒழுக்கக்கேடுகளை வேரறுக்க முனைவதற்குமான ஒரு முயற்சியின் தொடக்கமாக இருந்திருக்கலாம்.
ஆனால் இது 1968 நவம்பர் மாதத்தில் நடந்தது. ஜனவரி மாதத்திற்குள் அண்ணாதுரையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அவர் உடல்ரீதியாக செயல்பட முடியாத நிலையில் இருந்தார். 1969 பிப்ரவரி 3 ஆம் தேதி அவர் போய்ச் சேர்ந்தார்.. கருணா நிதி கும்பலுக்குக் குஷிதான்!
…அண்ணாதுரை போய்ச் சேர்ந்த பிறகு, கட்சிக்கும் ஆட்சிக்கும் யார் தலைமை ஏற்க வேண்டும் என்ற கேள்வி எழும்பியது – யாராக அது இருக்கலாம் என்பதும் தெளிவாக உருவானது. ஏனெனில் கட்சியில் வலுவான இரண்டு அணிகள் மட்டுமே இருந்தன; மேலும் அடுத்த முதலமைச்சர் திமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதி தனது அணியை வலுப்படுத்திக் கொண்டதுடன், எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) தலைமையிலான அணியின் ஆதரவையும் பெற முடிந்தது.
மதியழகன் தலைமையிலான அணி, அவர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுமளவுக்கு வலிமையானதாக இல்லை என்பது தெளிவாக இருந்தது. இதனால் போட்டியில் எஞ்சியவர் நெடுஞ்செழியன் மட்டுமே. ஆங்கில ஊடகங்களும், கட்சிக்குள் இருந்த பலருடைய ஆதரவும், அவருக்கு வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகக் கருதப் பட வைத்தன. காரணம், அண்ணாதுரையின் விருப்பத் தேர்வாக நெடுஞ்செழியன் இருந்தார் என்ற நம்பிக்கை பரவலாக நிலவியதுதான் – இதுதான் உண்மையும் கூட. மேலும், கட்சிக்குள் அவருக்கு வெளிப்படையான எதிரிகள் யாரும் இல்லை என அவரும் நம்பினார்; அதிசயிக்கத்தக்க வகையில், கல்வியறிவு பெற்ற கட்சி உறுப்பின சக திராவிடர்களிடையிலும், பொதுமக்களிடையிலும் அவருக்கு பரவலான ஆதரவு இருந்தது.
ஆயினும், நெடுஞ்செழியனை எதிர்த்து சில தீர்மானகரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. முதலாவதாக, கருணாநிதி “கட்சியின் வலுவான தலைவன்” எனக் கருதப்பட்ட நிலையில், நெடுஞ்செழியன் முதலமைச்சராகவும் கட்சித் தலைவராகவும் செயல்படுவதற்கு போதிய வலிமை இல்லாதவர் என்ற கருத்து வலிந்து பரப்பப்பட்டது. இதன் சூத்ரதாரி, மு கருணா நிதி என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!
இரண்டாவதாக, நெடுஞ்செழியன் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்; மேலும் அவர் எம். பக்தவத்சலத்தின் தூரத்து உறவினராவார். பக்தவத்சலம் முப்பது ஆண்டுகளாக காங்கிரஸ் அரசுகளில் அமைச்சராக இருந்தவர்; 1965 மொழிப்போராட்டக் காலத்தில் முதலமைச்சராகவும் இருந்தார். அடிப்படையில் அப்பழுக்கற்ற காங்கிரஸ் காரர் அவர்… திராவிடர்களின் வைரி.
ஆனால் + ஆகவே கருணாநிதி கும்பல் கயமையுடன் – நெடுஞ்செழியன் மீது பக்தவத்சலம் மிகுந்த செல்வாக்கு செலுத்தி வந்தார் எனப் பரப்புரை செய்தது – அதாவது, இக்கால வழக்கப்படிச் சொல்வதானால் – நெடுஞ்செழியன், காங்கிரஸ் கட்சியின் ‘பி டீம்’ எனச் சித்திரம் விரிக்கப் பட்டது….
4
கீழேயுள்ள புத்தகப் பகுதியும் பிற சிலபல விவரங்களும், Marguerite Ross Barnett எழுதிய The Politics of Cultural Nationalism in South India (1976) புத்தகத்தில் இருந்து (p.289-90) எடுக்கப் பட்டது. அதற்குக் கீழே, அதன் ஒருமாதிரி தமிழாக்கத்தைக் கொடுக்கிறேன்.
“நெடுஞ்செழியனை எதிர்த்த கூட்டணி, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாதங்களைவிட இன்னமும் வலிமையானதாக இருந்தது. ஈ.வெ. ராமசாமி (பெரியார்), கருணாநிதி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். பக்தவத்சலத்துடன் நெடுஞ்செழியன் கொண்டிருந்த உறவின் காரணமாக அவர் நெடுஞ்செழியனை எதிர்த்தார். (எம். பக்தவத்சலம் முதலமைச்சரானபோது, ஈ.வெ. ராமசாமி காங்கிரசுக்கான தனது ஆதரவை வாபஸ் பெற்றதை நினைவுகூரலாம்.)
ஈ.வெ. ராமசாமி, எஸ்.பி. ஆதித்தனார், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜி.டி. நாயுடு (கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர், கல்வியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர்), ராஜா சர் முத்தையா செட்டியார் (செல்வந்த தொழிலதிபர்), கருணாநிதி ஆகியோர் ஒன்றிணைந்து, கருணாநிதியின் தேர்வுக்குத் தேவையான உத்தி, தார்மீக ஆதரவு மற்றும் நிதி ஆதரவை வழங்கினர்.
முதலமைச்சர் பதவியைப் பற்றிய விவகாரத்தில் மனமாற்றம் செய்ய வேண்டியிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வழங்குவதற்கான நிதி திரட்டல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எப்படியும் – அண்ணாதுரையின் உடல்நலக்குறைவின்போதே, நெடுஞ்செழியன் செயல் முதலமைச்சராக ஆவதைத் தடுக்குமளவிற்கு கருணாநிதிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஏற்கனவே போதுமான ஆதரவு இருந்தது. மேலும், நெடுஞ்செழியன் தேர்ந்தெடுக்கப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவேன் என்று கருணாநிதி எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சில தனித்து நின்ற தலைவர்களை சம்மதிக்கச் செய்வது மட்டுமே எஞ்சியிருந்தது. கருணாநிதிக்கு கிடைத்த ஆதரவின் வலிமை தெளிவாக வெளிப்பட்ட பிறகு, மதியழகன் அவருக்கு ஆதரவளிக்க சம்மதித்தார். ஒரு அமைச்சர், கருணாநிதி முதலமைச்சராக்கப்பட்டால் பதவி விலகுவதாக மிரட்டினார்; ஆனால் மதியழகன் அவரை அமைச்சரவையில் தொடருமாறு சம்மதிக்க வைத்தார்.
இறுதியில், கருணாநிதி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அதனைத் தொடர்ந்து நெடுஞ்செழியன் அமைச்சரவையிலிருந்து விலகினார்.”
சுபம். :-)
5
ஒவ்வொரு ஐந்துவருடங்களுக்கும் முதலீடுகள் இரண்டுமடங்காகும் என வைத்துக்கொண்டு – 1969ல் சராசரியாக ஒவ்வொரு திமுக எம்எல்ஏ அயோக்கியனும் ரூ 7500/- பெற்றான் என எடுத்துக்கொண்டால் – அதுவே இந்த 12 ஐந்துவருட கணக்கில் சுமார் 3 கோடி. இதில் விலைவாசி உயர்வுகியர்வு என மேலதிக விஷயங்களைக் கணக்கில் கொண்டால் – அது குறைந்த பட்சம், குண்ஸாக ரூ 10-15 கோடியைத் தொடும்.
ஆகவே, இந்த 5000-10000 என்பது அக்கால மதிப்பில் பெரும்பணம் என்பதைக் கருத்தில் கொள்ளவும்…
இப்போது சொல்லுங்கள் – பதவி ஆசைக்காக, புறங்கையை நக்குவதற்காகக் கருணாநிதி கும்பல் (எம்ஜிஆர் உட்பட) அப்போது செய்ததுதானே குதிரைபேரம்? பாரத அளவில் இம்மாதிரி சொந்தக் கட்சி எம்எல்ஏக்களையே மிகப் பெரிய அளவில் பேரம் பேசி சல்லீசாக வாங்கிய ஆசாமி இந்த திமுக கருணாநிதிதானே? அந்தத் தெருப்பொறுக்கிகளும் தொடர்ந்து ஊழல் செய்வதற்குத்தானே கருணாநிதி கோஷ்டியில் ஐக்கியமானார்கள்?
இதையே தானே அந்த அஇஅதிமுக ஆசாமி எடப்பாடி பழநிச்சாமியும் செய்தார்?
நான் விஜய்குஜய் ஆதரவாளனல்லன் – அந்த ஆளின் கூறுகெட்ட ‘கண்களைக் கட்டிக் காட்டில் விட்ட’ ஜிகினா அரசியலை வெறுப்பவன். திராவிடக்கட்சி1 = திமுக, திராவிடக்கட்சி2 = அஇஅதிமுக, திராவிடக்கட்சி3 = தவெக என வெகுகாலத்துக்கு முன்பே உணர்ந்தவன்.
இருந்தாலும் சொல்வேன் – விஜய்குஜய் நடத்திய குதிரைபேரம், பிற கட்சி அயோக்கியர்களை உள்ளிழுக்கச் செய்யப் பட்டதேயன்றி – படு கேவலமாக பிற மூத்த திராவிடக்குட்டை மட்டைகள் செய்ததைப் போல, தன் கட்சி குண்டர்களுக்கே வாய்க்கரிசி போடும் அவலம் இல்லை.
எப்படியும் ஊழலின் ஊற்றுக்கண் திராவிடம் என்பதுதான் உண்மை.
அதிலும் படுகேவல அதலபாதாளங்களை அடைந்தது, இந்தக் கருணாநிதி கும்பலே.
ஆமென்.
KYCmania & OTPphobia
May 24, 2026
(or) KYCism & OTPtva
“The horror! The horror!“
— Joseph Conrad (in his 1899 novella ‘Heart of Darkness’)
(THIS, even before KYC and OTP were nowhere on the event horizon? Are you for real, you bloody wimpy JConrad?)
(skip to section 1, if you only want to read a real life horror story – if not, you can start reading right from here; of course, I would never ask for your personal details or OTPs so beware of scamsters! Don’t click on suspicious links!!)*
1
The normal ‘we all happily died ever after’ kind of innocent fairytale narratives about the OTP (One Time Password – that, one receives on a mobilephone as SMS/WhatsApp msg or on email for pre-verification, leading to some transaction) and the process of KYC (Know Your Customer, supposedly) are that – any given service enterprise ought to do periodically – pre birth, life, quick-death AND after-death of the ‘Customer.’
Of course, all very understandable in the current contexts of frauds, need to establish a clear identification of a person & the necessity to maintain trails to establish accountability & traceability in processes.
But.
OTPs have taken over every aspect of life in the given shortened-life of the average citizens – and not only that, they attack in a pack with ravenous KYC processes.
Oh, the horror, the horror…
2
Dunno when I fell asleep. Actually I don’t even know whether I even slept, given my continuing OTP-KYC nightmares. May be I am still caught in the same web of mortal terror.
It doesn’t matter. I think I am awake now, so I am.
However, I see the distant hellfires of jahannum (© Islam) and gehannah (© Christianity) – the former, obviously the forward integrated & shamelessly copied version of the latter, including the name…
…I think, it all started when I suddenly realized that I had become a senior citizen and that I was going to be taken over by the hordes of 3letter abbreviations. No. It wasn’t G.O.D. Silly. Realize that It/He/She GOD may not be omnipotent, omnipresent and omniscient – but OTPs and KYCs certainly are.
…But, even then, I didn’t know what was to come and hit me hard, real hard… In fact, I knew naught, how the damn OTP ensured total KYC – Kill Your Customer. The details of the hit of course included recursively handing over multiple copies of Aadhaar Identification and Income tax PAN cards (of both sides) of course, which had to be self-certified, signed in black ink etc… (the only saving grace is that, one does not need to get notarized notorious public lawyers’ authenticating signature and stuff)
Fact & single sentence story is that, I merely went to a Bank, and then all hell broke loose and I was quickly caught-up in a massively tangled web of OTPs and KYC processes… As the natural and logical following step, I fainted…
3
By the year 2032, India had finally achieved what emperors, invading islamic hordes, marauding christian padres, economystics, socialists, congressis, left-liberals, homeland visiting NRIs & dravidian scum never could:
total citizen obedience through OTP verification!
Nothing moved without a One-Time Password & KYC.
Weddings. Funerals. You name it..
Not even bowel movements in AI enabled premium smart toilets.
Sixty-eight-year-old Mr. Ramasami Othisaivu discovered this on a humid Tuesday morning when he tried to die peacefully at his home in the outskirts of Bengaluru.
The heart attack itself proceeded rather smoothly.
But the ambulance did not. Oh what to do…
“Sir,” said the paramedic, kneeling beside the semi-unconscious man, “before we begin CPR, please confirm the OTP sent to your registered mobile number ending in 7407.”
Ramasami, being temporarily & incrementally dead, did not respond.
The paramedic sighed. “Happens every day.”
His wife, Lalitha, grabbed the phone. “Ayyo! It’s asking for biometric confirmation also!”
“Madam, government regulations! Too many fraudulent resuscitations.”
But the OTP got delayed, because the SMS gateway was crawling to a halt thanks to millions of citizens simultaneously verifying attendance for National Productivity Yoga Hour & billions booking FirstDayFirstShow tickets all over the world for the Vijay blockbuster ‘DigVijay, The Permanent Emperor of India.’
Incidentally, this film release was the only promise made in the manifesto of his political party “Thamizhaga Vetri Kazhagam’ (Tamilnadu Victory Party) that successfully formed the Union Government in India post the 2029 Loksabha elections, after a massive sweep of 540 out of ~544 seats!

…
…however, the WhatsApp OTP came faster, but only after watching a 50-second ad for just-in-time Life Insurance for soon-to-be-dead Customers, of course subject to KYC – followed by a 30 second promo for DigVijay, with some recommendations of Instagram reels of Vijay fans.
…In the meantime, Ramasami briefly regained consciousness just long enough to whisper, “Check spam folder… in gmail, just in case…”
Then flatlined again.
An offer from Amazon (co-sponsored by Project Vaikuntha) landed in Laitha’s mobile – about, a cool & attractive ‘premium branded ashes immersion package’ in Kashi, at 90% final rebate + GST.
Another cheerful duplicate OTP made it to Ramasami’s WhatsApp, saying “In case you are already dead, kindly ignore this OTP. In case you didn’t receive this message, send an YES to +91 19119 11911 via SMS.”
4
At the hospital reception, the young lady with a plastic smile, responded professionally, in an accent halfway between India and USA. Probably an AI enabled hologram.
“Say 1 for English, 2 for Hindi, 3 for Kannada, 4 for Braille, 6 for Signlanguage, 7 for ASCII, 8 for Morse code, 9 for back to previous menu…”
“1”
“Thanks for choosing 1. Say 1 for American English, 2 for British English, 3 for Indian English…”
“3”
“Thanks for choosing 3. Say 1 for Hinglish, 2 for Kinglish, 3 for Tanglish, 4 for Telgish, 5 for Mallish…”
“3”
“Check your OTP”
…
…
“Welcome to Kailash Direct Hospitals. How can I serve you?”
“QUICKLY?!”
“Ok Madam… Death or semi-death package, madam?”
“Death.”
“Due to what?”
“Due to OTPs and KYC. And delays…”
“Okay, we are sorry to hear that,” the young lady smiles, while checking her WhatsApp for VIjay film release updates, “but was it Basic death or Aadhaar-linked death?”
“What’s the difference?”
“In Aadhaar-linked death, your husband receives loyalty points redeemable in the afterlife ecosystem.”
Lalitha stared.
“Fine,” said the clerk. “I’ll select maybe.”
A new OTP got generated and sent.
But, unfortunately, the OTP was sent to Ramasami’s old SIM card, which had been deactivated because he had failed re-KYC for insufficient blinking during facial verification.
“Can we use my number?” asked Lalitha desperately.
“No, madam. Relationship transfer requires Form 18-C, notarized by two blood relatives and one chartered accountant. And, we will have to do fresh KYC for all of them, including the Notary Public lawyer.”
5
At the crematorium, things got better.
The electric cremation chamber displayed:
USER NOT VERIFIED
PLEASE COMPLETE MANDATORY KYC BEFORE POWER-ON
A weary employee approached carrying a ring light and fingerprint scanner.
“Thumb impression of the deceased, please.”
“He’s dead!”
“Yes madam, but system should know that.”
“But you can SEE he’s dead!”
“Madam, emotionally maybe. Technically pending approval.”
“Really??”
“Yes madam – it is the usual KYC process here, Know Your Corpse.”
They pressed Ramasami’s thumb onto the scanner.
FINGER NOT ALIVE ENOUGH
“Try other hand, or some other finger…,” suggested the employee.
6
Meanwhile, the family WhatsApp group exploded.
“UNCLE DEAD??? SOURCE??”
“Too much fake news these days.”
“Please share OTP for condolences.”
“Om shanti RIP!”
“In ‘States’ nobody asks for Aadhaar!”
“Fake news! Uncle was heartless! How can HE have a heart attack!!??”
“gr8 news brb”
…
A cousin in Dubai launched a Google Meet prayer session, but nobody could join because the authentication SMS was delayed.
This was because Dubai data centers & telecommunication providers hosting SMS gateways were hit by missiles from Iran.
7
Then came the final obstacle: ‘Ashes Release Authorization.”
The municipal officer adjusted his spectacles.
“Madam, before collecting ashes, kindly verify whether the deceased wishes to remain carbon-neutral.”
“How would he know?”
“AI prediction available for Rs. 299/- plus GST.”
Lalitha finally snapped.
“For FIFTY years this man paid taxes, linked Aadhaar, linked PAN, linked LPG, linked bank accounts, linked voter ID, linked water pipeline, linked insurance, linked Spotify family plan, linked Netflix subscription — and now even his soul is buffering??! What the hell!!”
The officer nodded sympathetically.
“Happened to my father also. His reincarnation got delayed because OTP server was down.”
At sunset, Ramasami was finally cremated after successful e-KYC, OTP verification, liveness non-detection, and acceptance of updated Terms & Conditions.
…
Far above, at the entrance to heaven, a celestial receptionist looked up.
“Welcome, Mr. Othisaivu. Are you part of DIE quota?”
“Am not sure madam. I am already dead!”
“Nonno sir, we want to know whether you are protected by Diversity-Inclusion-Equity laws?”
“Well, I am from OTP positive community, not sure whether…”
“Okay, okay – I get it. You are cattle-class – now, before entry, please verify the OTP sent to your registered WhatsApp.”
Ramasami closed his eyes in weariness.
“Send me to hell,” he said quietly. “At least there they pick up the phone & don’t play hold-music.”
“Sir, their AI call-center has a five-star rating, but they will still have to do a fresh KYC, link your hell admit card to Aadhaar and of course there would be OTPs and further physical residential address & conduct verifications by their Yama’s agents…”
“Send me back to earth, please!”
“Yes, but first take our Customer Satisfaction Survey. Be sure to give me a five-star rating because my performance appraisal is due next week!”
“Sure, am used to these surveys. where is the link?”
“Scan this QR code first and then you will get an OTP; a KYC check would be done by the way, and here is the form – and please note – this conversation is being recorded for Quality Improvement & Training purposes…”
8
Ramasami woke up in cold sweat and promptly had a real heart-attack.
THE END
*

திராவிடமயமாக்கப்பட்ட தமிழகத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்: எண்ணிக்கைகள், நிதர்சன உண்மைகள், ஆகவே கவலைகள்
May 17, 2026
1
கடந்தமாதம் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தல் (ஏப்ரல் 23, 2026) சமயத்துக்குச் சுமார் மூன்றுநான்கு வாரங்கள் முன், நானும் ஒரு நண்பனும் தமிழக அதிகார வர்க்கச் சூழல் குறித்தும் உரையாடவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்கு முகாந்திரங்களாக இருந்தவை, மூன்று விஷயங்கள்:
- மத்திய அரசின் ப்ரெஸ் இன்ஃபர்மேஷன் ப்யூரொ (PIB) 26 மார்ச் 2026 அன்று வெளியிட்ட, ஒரு நாடாளுமன்ற கேள்விபதில்: PARLIAMENT QUESTION: SANCTIONED POSTS OF IAS/IPS – Posted On: 25 MAR 2026 1:34PM by PIB Delhi
- என் தூரத்து நண்பன் ஒருவன், தான் ஆரம்பிக்கவிருக்கும் (ஒரு MSME வகை ஆனால் அதிதொழில் நுட்பம்) தொழிற்சாலைக்காக வசதிவாய்ப்புக்காக காலதேசவர்த்தமானம் பார்க்க ஒருமாதிரி அணில்முதுகு மணற்துளியாகவாவது உதவிசெய்யலாமோ என்றொரு எனதெண்ணம்.
- நம் அண்ணாமலை அல்லது விஜய்குஜய் அல்லது சீமானோ தப்பித்தவறி முதலமைச்சராக ஆகிகீகிவிட்டால், அப்போதாவது ஏதாவது நல்லது தமிழகத்துக்கு நடக்கக்கூடுமா?
…நண்பன் பொதுவாக, ஒருமாதிரி தேசியச் சிந்தனை கொண்டவன். படித்தவன். பண்பாளன். தொழில் முனைவோன். அரசாங்கங்களின் உயர்மட்டங்களில் ஊடாடுபவன்; பலப்பல அரசியல் விவகாரங்களையும் வினோதங்களையும் விசித்திரங்களையும் அறியக்கூடிய நிலையில் சமூகத்தில் ‘அட்ஜஸ்ட் செய்துகொண்டு’ இருப்பவன். முடிந்தவரை பிறருக்கு உதவியாக இருப்பவன், விளம்பரம் இல்லாமல் பணி செய்பவன். என்னிடம் சர்வ நிச்சயமாக உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவன்… அதே சமயம், realpolitik எனப்படும் ‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’ போக்குகளையும் வெறும் நமட்டுச்சிரிப்புடன் பார்க்காமல், அரசியல் அத்தியாவசியங்களின் வழி நோக்குபவன் – ஒப்புக் கொள்கிறானோ இல்லையோ, புரிந்தாவது கொள்பவன். + பிரமிக்கத் தக்க வகையில், ஒருமாதிரி ‘காமராஜ்’ காங்கிரஸ் வகை அனுதாபியாக (கோமாளிக்கோமக ராஹுல்காந்தி பாரத எதிரியாக முழுமையாக உருமாறிய வரையாவது) இருந்தாலும், ஒருகாலத்திலும் மோதியையோ பாஜகவையோ நம் அண்ணாமலையையோ தேஜஸ்வி ஸூர்யாவையோ தேவையற்று கரித்துக் கொட்டியிருந்திருப்பவனல்லன். தொழில்நுட்ப பொருளாதார வளர்ச்சி மூலமே சுபிட்சம் சாத்தியப்படும் என நினைப்பவன். பொதுவாகவே திராவிடனல்லன், ஈவெராவுக்கு நன்றி. கொங்கு நாடன். பலவகைகளிலும் கோணங்களிலும் என்னுடன் ஒத்துப்போகிறவன்.
இவனுக்கு, தமிழக அதிகாரவர்க்கம், அரசியற்கோலாகலம், ஊழற்சூழல் பற்றி அளவுக்கதிகமாகவே (நேரடியாகவோ அல்லது அவன் நண்பர்கள் மூலமாகவோ) தெரிந்திருக்கிறது என்பதென் எண்ணம்.
எனக்கு அப்படியில்லை – மூன்று நான்கு ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகளானவர்கள் இந்த ஒத்திசைவு எழவு மூலமாகக் கொஞ்சம் அறிமுகமாகியிருந்தாலும், அவர்களுடனும் அதுவும் வெகு அபூர்வமாகவே ‘வணக்கம் சௌக்கியமா, இந்தப் புத்தகம்/கட்டுரையைப் படித்திருக்கிறீர்களா?’ வகை உரையாடல்கள் மட்டுமே, பெரும்பாலும் இதுவரை நடந்திருக்கின்றன, பாவம், தப்பித்தார்கள் அவர்கள்… (எப்படியும், அவர்கள் இன்றைய தேதியில் எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பவற்றைத் துளிக்கூட அறியேன்)
2
எங்கள் உரையாடல்/நரையாடல்களில் இருந்த – இந்தப் பதிவின் தலைப்பு/பாடுபொருளுக்கான விஷயங்களை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.
சரி. தமிழகத்தில் எவ்வளவு இந்திய ஆட்சி/காவல் துறை உயர் அதிகாரிகள் இருக்கவேண்டும், இருக்கிறார்கள்? (பிற மத்திய சேவை அதிகாரிகள், தமிழக ஆட்சித்துறைக்காரர்கள் தாஸில்தார்கள், பிடிஓ, பிற ரெவின்யு அதிகாரிகள், பிற அரசதிகாரிகள் (ஆசிரியர்கள், மருத்துவர்கள்++ கணக்கீடுகள் இதில் சேர்க்கப்படவில்லை)
கீழ்க்கண்ட (மார்ச் 2026 கால எண்ணிக்கைகளைக் கொண்ட) அட்டவணை, பிஐபி தளத்திலிருந்து எடுக்கப் பட்டது.
| Service / பணி | Total authorised strength / மொத்த அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் | Officers in position / தற்போது பணியில் உள்ள அதிகாரிகள் | Shortfall / பற்றாக்குறை |
|---|---|---|---|
| IAS / இந்திய ஆட்சிப் பணி | 394 | 343 | 51 |
| IPS / இந்திய காவல் பணி | 276 | 242 | 34 |
இதன் படி, 670 அதிகாரிகள் இருக்கவேண்டிய இடத்தில் 585 அதிகாரிகள் இருக்கிறார்கள். பற்றாக்குறை = 85, அதாவது ~13%.
சரி.
ஒரு பேச்சு வாக்கில், இவர்களில் எவ்வளவு பேர், செய்நேர்த்தியும் துணிவும் செயல்திறனும் கொண்ட நேர்மையான அரசதிகாரர்களாக இருப்பார்கள் என நம்மால் அனுமானிக்கக் கூடும் எனக் கேட்டேன். அரசசதிகாரிகள் சதவீதத்தையும் தான்.
அவன் சொன்னது, நேர்மையானவர்கள் சுமார் 5% இருக்கலாம் என்றான். எனக்குப் பெரிதாகத் தூக்கிவாரிப் போடவில்லை என்கிற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால், அது 10-15% இருக்கலாம் என அனுமானித்திருந்தேன்.
மேலும், அரசதிகாரிகள் அனைவருமே ஊழல் பெருச்சாளிகள் என ஒரு முன்முடிவுக்கு வருவது சரியல்ல என்பதையும் அறிந்துதான் இருக்கிறேன் – ஏனெனில், அவர்களில் பலர் ஊழல் எலிகளாகவும் ஊழல் மூஞ்சூறுகளாகவும் இருக்கக்கூடும் என்கிற சாத்தியக்கூறையும் கணக்கில் கொள்ள வேண்டுமல்லவா?
எது எப்படியோ – கீழ்கண்டவைகள் உரையாடப் பட்டன.
- பொதுவாகவே, இந்த ~95% வகை அதிகாரிகளை உந்தும் க்ரியாசக்திகளாவன, அதாவது அவர்களின் ‘பண்பு’களானவை:
- ‘புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’ மனப்பாங்கு + சுயகாரியப் புலித்தனம் + தேனை எடுக்கும்போது புறங்கையையும் நக்குதல் + உயர்தர, உயர்மட்ட அடியாட்களாகச் செயல்படுவது + தடிமன் தோல் + மாட்டிக்கொண்டாலும் தப்பிவிடும் பாங்கு + அவர்களுடைய அஸோஸியேஷனை வைத்து எதிர்மறை விஷயங்களை அமுக்குவது + ஜால்ரா போடும் வல்லமை + அனுசரித்துப் போகும் தன்மை + ‘நெளிவு சுளிவுகள்’ அறிதல், திராவிட அரசியல்வாதிகளுக்கே பாடம் எடுக்கும் வல்லமை மிக்க திறமை இன்னபிற…
- முட்டுக்கட்டைகள் போடும் திறன் மிக்கவர்கள் ஆனால், அதே முட்டுக்கட்டைகளைத் தாண்டி அல்லது அவற்றைச் சுற்றிக் கொண்டு வழி காண்பதிலும் சமர்த்தர்கள் அவர்கள். சட்டங்களையும் சட்டகங்களையும் மாண்புகளையும் செல்லாக்காசாக ஆக்கும் வழிமுறைகளை ஐயந்திரிபற அறிந்தவர்கள்.
- கலெக்டர் என்கிற வேலைப்பெயருக்கு ஏற்ப கலெக்ட் செய்து கொடுக்கும் வழிமுறைப் பழங்களைத் தின்று கொட்டையும் போட்டவர்கள்.
- அவர்களுக்கு எதிரான விசாரணைகளை முடுக்கிவிட மத்திய அரசின் டிஓபிடி (dopt.gov.in/) செல்லவேண்டும் – ஆனால் அதுவரை செல்லவிடாமல், மாநில திராவிட அரசுகளே, அதன் அரசியல்வாதிகளே காப்பாற்றும் படிக்கு, விசுவாசமானவர்களாக அவர்கள் திகழ்கின்றனர்.
- கடந்த சிலபல பத்தாண்டுகளாக, யூபிஎஸ்ஸி பரீட்சைகள் எழுதுவதற்கு முன்பிலிருந்தே ‘பணம் பண்ண வேண்டும்’ என்கிற முக்கிய அடிநாதக் குறிக்கோளுடன் தான் பல இளைஞர்கள் இருக்கிறார்கள் – ஆக, அவர்களிடமிருந்து எப்படி தரத்தை எதிர்பார்க்க முடியும்?
(இன்னமும் நீண்ட ஜாபிதா இருக்கிறது – ஆனால் எனக்கு அயர்வாகவும் சலிப்பாகவும் இருக்கிறது, ஆகவே…)
அதே சமயம் நாமெல்லாம் ஒர்ரேயடியாகத் தளர்ந்து தத்தளித்துத் தவிக்கவேண்டிய அவசியமும் இல்லைதான். ஜொலிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளும் இருக்கிறார்கள். வெறும் ஏவல்துறை ஏவலாட்களாக இல்லாத, மனச்சாட்சிமிக்க ஐபிஎஸ் காவல் துறை உயரதிகாரிகளும் இருக்கிறார்கள்கூட. ஆனால் எண்ணிக்கையில், மொத்தமாக அவர்கள் சுமார் 20-30 பேர் இருக்கலாம் என்றான்.
சரியென்ற நான் அவனிடம், “அண்ணாமலை போன்ற ஐபிஎஸ் அதிகாரியையும் அஷோக் கெம்கா போன்ற ஐஏஎஸ் அதிகாரியையும் நாம் ஒரு முன்மாதிரிகளாக, உதாரணபுருஷர்களாக வைக்கக் கூடுமானால், உன்னால் எவ்வளவு தமிழக அதிகாரிகளைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும்? அவர்களையே ஒற்றி எடுக்கவேண்டிய அவசியமில்லை – ஆனால் தன்னளவில் செய்நேர்த்தியும், தன்னூக்கமும் தொழில்தர்மமும் அவர்கள் கொண்டிருந்தால் போதுமானது… எனக்குப் பெயர்களைச் சொல்லவேண்டிய அவசியமில்லை…”
அவசர கதியில் சிந்தித்த அவன், தனக்குள்ள செய்திவாய்ப்புகளின்படி – சுமார் 30 பேர் தமிழக அளவில் அப்படி இருக்கலாம் என்றான். நானும் அடுத்த வாரம் இதுகுறித்து மறுபடியும் பேசலாம், யோசித்து என்னை திடுக்கிட வைக்காத ஒருமாதிரி மதிக்கத்தக்க எண்ணிக்கையைக் கொடு, ஏற்கனவே எனக்கு இதயம் நலிந்த நிலைமையில் இருக்கிறது, கபர்தார் – என்றேன். “If not anything else, I am very curious about what the final numbers would be, in your opinion…”
பிரச்சினை என்னவென்றால் – அவன் தன் சிலபல நண்பர்/அறிமுகங்களிடம் இது குறித்து தேவை மெனெக்கெட்டு விசாரித்திருக்கிறான். ஆக, அடுத்தவாரம் அவன் சொன்னது – தான் 16 பேர் தான் இந்த ஜொலிக்கும் வகைப் பகுப்பில் இருக்கிறார்கள் என்பதை நிறுவமுடியும் என்றான்! அடக் கடவுளே!!
அவர்களுடைய பெயர்களைப் படிக்கவா என்றான் – நான் அதெல்லாம் வேண்டாம் என்றேன். (ஏனெனில், என்னுடைய அறிமுகங்கள் அந்த ஜாபிதாவில் இல்லாமல் போய்விட்டால் நான் என்ன செய்வேன், சொல்லுங்கள்? மேலும் – அவனும் அத்தனை 580+ பேர்களின் ஜாதகங்களைக் கணித்திருப்பானா என்ன, எல்லாம் ஒரு மாதிரி குண்ட்ஸ்தான் – என்பது என் சால்ஜாப்பு)
எப்படியும் ‘பெய்யெனப் பெய்யும் மழை’ வகையினராகக் குறைந்தபட்சம் 16 பேர் சர்வ நிச்சயமாக, நம் தமிழகத்தில் (அதன் திராவிடத் தொற்றையும் மீறி!!) இருக்கிறார்கள் என்பதே எனக்குக் குதூகலம் கொடுப்பது…. அவ்ளோதான். :-)
3
நிலைமை இப்படி இருக்கிறது. 16 பேர்களில்லை, 100 பேர்கள் இப்படி இருக்கிறார்கள் – நண்பனுக்குத்தான் தெளிவில்லை, சும்மா உதைநிதி ஸ்டாலின் போல அட்ச்சிவுடுகிறான், எத்தையாவது குட்டையைக் குழப்பிக் கிளப்பிவிடுகிறான் என்று வைத்துக்கொண்டாலும் [ எல்லாம் ஒரு சால்ஜாப்புக்குத்தான் சொல்கிறேன், என்னெருமை சக ஏழரைகளே! :-( ]இது வெறும் 17% தான். வருத்தமாக இருக்கிறது.
சரி.
ஏதாவது பயங்கர ஆச்சரியம் நிகழ்ந்து நம் அண்ணாமலையோ அல்லது விஜய்குஜய்யோ அல்லது சீமானோ அறுதிப் பெரும்பான்மை கிடைத்து, தமிழக முதலமைச்சராகும் வினோதம் நிகழ்ந்தால், அவர்கள் எப்படி இந்தத் தரம் தாழ்ந்த உயரதிகார வட்டத்தைச் செப்பனிட முடியும் என்று கதிகலங்கிப் போய் கேட்டேன்… பின் அவனும் நானும் அடித்த அரட்டையின்படி ஒருமாதிரி எனக்குத் தெளிவான விஷயங்கள்…
- முக்கியமான துறைகளில் இந்தப் பதினாறு பேரில் பத்துபேர் போல வைக்கலாம்.
மிச்சமுள்ள ஐந்தாறு பேரை (இவர்கள் வெகு ஸீனியர்களாக இருக்கவேண்டும்) ஒரு நேர்த்தியான குழுவாக அமைக்கவேண்டும்; முதல்வரைச் சுற்றிய முதல் வளையமாக, அவருடைய குறிக்கோட்களை நிறைவேற்றுபவர்களாக, அவருக்கு ஆலோசனை கூறுபவர்களாக இவர்கள் இருக்கவேண்டும். இக்குழு, பிற அதிகாரிகளையும் அமைச்சர்களையும் துறைகளையும் தயவு தாட்சண்யமின்றி மேற்பார்வை செய்யக்கூடிய தகுதி அளிக்கப் பட்டதாக இருக்கவேண்டும். - மத்திய அரசோடு இணக்கமான போக்கைக் கையாளக் கூடிய தன்மை படைத்ததாகவும் இருக்கவேண்டும். ஊழல் வழக்குகளில் நீதிமன்றங்களுடனும், மத்திய அரசமைப்புகளுடனும் ஒத்துழைக்கும் மனப்பான்மையுடைவர்களாகவும், பழம்பெருச்சாளிகளை (கட்சிபேதமே பார்க்காமல்) உள்ளே தள்ளுபவர்களாகவும் இருக்கவேண்டும். ஓசிகளைப் படிப்படியாகக் குறைக்கும் மனவலி படைத்தவர்களாகவும் +++
- ~85 காலியிடங்கள் – இவற்றை மேற்கண்ட குழுதான் நிர்ணயித்துச் சரியான நபர்களால் ஈடுகட்ட வேண்டும்; தேவைப்பட்டால், வெளி மாநிலங்களிலிருந்து இவர்களைக் கடன் வாங்க முடியுமா எனப் பார்க்கவேண்டும் – இதனைச் செய்தாலே, ஒரு பெரிய நல்ல வழிகாட்டுதலாக இருக்கும்.
- இப்போது யார் வந்தால் இதெல்லாம் (அப்படியே அல்ல – அதாவது ஒருமாதிரி நல்லாட்சி நடத்தப்படுவதற்கான முஸ்தீபுகள், உந்துதல்களாவது) நடக்க வாய்ப்புகள் இருக்கும் எனப் பார்த்தால்
- சீமான்: ஏறத்தாழ நடக்கலாம் – ஆனால் உணர்ச்சி கரமைதுனமும் பாரத எதிர்ப்பும் தலை தூக்கலாம்.
- விஜய்: இதில் ஒன்றும் நடக்காது – நல்லெண்ணங்களே இருந்தாலும் நடக்காது; அவருடைய கட்சியின் கட்டமைப்பும், எதிர்பார்ப்புகளும், நிதர்சன உண்மைகளும் அப்படி. மேலும் இவர் தவெக என்பது ஒரு உணர்ச்சிகர திராவிடக் கட்சி மட்டுமே; அதில் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பது ஒரே சமயத்தில் ஆதூரத்தையும் துக்கத்தையும் அளிப்பது.
- அண்ணாமலை: இவர் கீழ் நல்ல விஷயங்கள் நிச்சயமாக நடக்கும். அதற்கேற்ற உழைப்பும், மூளையும், காலமும் அவருக்கு இருக்கிறது. அதிகாரிகளை அரவணைத்தும் அடாவடி செய்தும் இணங்கவைத்து தேசவளர்ச்சிக் காரியங்களை செய்துகொள்ள அவரிடம் அனுபவமும் ஆற்றலும் இருக்கிறது.
(ஆனால், நானுமே பெரிதாக எதிர்பார்க்காத – ஆனால் என் முன்னாள் மாணவர்களின் ப்ரத்யட்ச விஜய்விசிறித்தனங்களால் ஒருமாதிரி நிலைக்கு வந்து தமிழகவெற்றிக்கழகமேகூட ஒரு மாதிரி வெற்றி பெறலாம் எனப் பயந்துகொண்டிருந்ததே ப்ளடி நடந்தேறி விட்டது; திமுக அஇஅதிமுக பொறுக்கிப் பெருச்சாளிகள் நேரடி ஆட்சியில் இல்லை – ஆனால் ஊழல்பெருச்சாளிகளையும் கம்யூனிஸ்ட் தண்டங்களின் ஆதரவையும் கடன்வாங்கி மடியில் கட்டிக்கொண்டு ஆட்சியோட்ட முனையும்போது, அவருடைய குஞ்சாமணியும் ஏகத்துக்குக் கடித்துக் குதறப்பட்டுக் கொண்டிருந்தால், தேசஒருமைப்பாடாவது, வளர்ச்சியாவது, சுபிட்சமாவது, ஊழலின்மையாவது… பார்க்கலாம், விஜய்குஜய் மூலம் தமிழகத்துக்குக் கொஞ்சமாவது விடியல் கிடைக்குமா என்று…)
4
சரி, தொழில்முனைய விழைந்த என் நண்பனுக்கு என்னவாயிற்று.
திராவிடமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்த பையடா
தமிழகத்தின் (தொழில்முனைவு தொடர்பான) பலப்பல விஷயங்கள் எனக்கு ஒத்துவரவில்லை.
ஆகவே. அவனை எனக்குத் தெரிந்த உத்தரப் பிரதேச நொய்டா பகுதிக்காரர் ஒருவரிடமும், ஹைதராபாத்-விசாகப்பட்டினம் பகுதிகளில் நல்ல அறிமுகங்களைக் கொண்ட இன்னொருவரிடமும் கோர்த்து விட்டிருக்கிறேன்; பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.
(ஏனெனில் அங்குள்ள ஆட்சியாளர்கள் தகுதிவாய்ந்த அரசதிகாரிகளை நியமித்திருக்கிறார்கள் என என் நண்பர்கள் சொல்கிறார்கள், ஊழலும் தமிழக அளவு உச்சாணிக்கிளையில் இல்லை எனவும் சொல்கிறார்கள்)
மற்றபடி, நான்… 🧘🏾
முன்னதாக, இளந்தளபதி ஸ்டாலின் பனையூர் சென்று தமிழகவெற்றிக்கழகத் தளபதி ஜோஸஃப் விஜய் அவர்களுக்கு மாலை அணிவித்துத் துண்டு போர்த்தி, காலடியில் வீழ்ந்து நல்லாசி பெற்றுக் கொண்டார்.
107 + 59 = 168!
அதாவது: 168 >> 117 !!
இதனை அடுத்து, ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், “ஆக. பாஜக சங்கி ஆளுநர் அதிமுக கொத்தடிமைகளின் பேச்சைக்கேட்டு தளபதி விஜயை அரசமைக்க் அழைக்காமல் ஆரிய-வடவ சதி செய்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, என் தலைவர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் ஆணைக்கிணங்க, அண்ணாவின் ‘பதவி வேண்டுமென்றால் மாற்றான் தோட்டத்து வாகையையும் வணங்குவோம்’ கோட்பாட்டை ஒட்டி, அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவினை அளிப்பது மட்டுமல்லாமல், அவருடைய கூட்டணியில் இணைகிறோம்!”
கேள்வி: விஜய் உங்களைத் தீய சக்தி என்று அழுத்தம்திருத்தமாகப் பலமுறை குறிப்பிட்டுள்ளாரே!
பதில்: ஆக. உண்மையென்னவென்றால் ‘திமுக ஒரு தீயசக்தி’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் எங்கள் கட்சி டிஎம்கே D M K. – இதுகூடத் தெரியாதா உங்களுக்கு. டிஎம்கே திமுக இரண்டையும் போட்டு மாங்காய்புளித்ததோ தேங்காய்தளித்ததோவெனக் குழப்பிக் கொள்ளக்கூடாது.
கேள்வி: அப்போது அவர் தூயசக்தி என. தன் தவெகவைக் குறிப்பிட்டது பற்றி…
பதில்: ஆக. தீய என்பதற்கு தூய எனத் திராவிட அடுக்குமொழி உணர்ச்சிகர உச்சாடன நடைப் பாணியில் பேசியிருக்கிறார். உண்மைதானே? ஆனால் நீங்கள் ஏன் அதிமுக ஒரு ஈய சக்தி எனப் பேசுவதில்லை? எங்கள் டிஎம்கே பித்தளையைப் பார்த்து இளித்த ஈய ஈனப் பிறவிதானே எடப்பாடி?? ஆனால் நாம் இப்போது இணைந்திருப்பது தங்கத்திராவிடத் தமிழன், சிறுபான்மையினரின் காவலன், ஆகச் சிறந்த ஆளுமை மிக்க தகத்தகாய தளபதி விஜய்யோடுதானே!
கேள்வி: உங்களுடைய மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் என்னவாயின?
பதில்: ஆக. அவர்கள் அனைவரும் முதகில் குத்துபவர்கள், செய்நன்றி மறந்த ஈனப் பிறவிகள். பச்சோந்திகள்… சாக்கடைக் குப்பைகள்… காங்கிரஸ் போன்ற துரோகிகள். விடுதலைச்சிறுத்தைகள் போன்ற ஜாதிவெறிக் கட்சிகள். உண்டியல் குலுக்கி கம்மீனிஸ்ட்ஜால்ராக்கள். மதவெறிமிக்க முஸ்லீம் கட்சிகள்… எங்களை அம்போவென விட்டுவிட்டு, ஓடிப்போய் தவெகவுக்கு வெண்சாமரம் வீசப் பார்த்தவர்கள்… ஆனால் அவர்களுக்கு, எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்த்தந்திரம் பற்றித் தெரியாது. கேடுகெட்ட கூட்டாளிகளைவிட, பஜனை மடத் துரோகிகளைவிட விரோதியே மேல் என இனமானத்துடன் இனம் கண்டுகொண்ட நாங்கள், அவர்களின் சதித் திட்டத்தை அம்பலப்படுத்த, நாங்களே தளபதி விஜய்யின் முதன்மை ஆதரவாளர்களாக மாறிவிட்டோம்… ஸ்ட்ரேட்டஜியில் எங்களையும் மிஞ்சிய ஆட்கள் இருக்கிறார்களா என்ன? ஹ்ஹா!
கே: எதிர்காலத்தில் திமுக என்னவாகும்?
ப: ஆக. எங்கள் தலைவர் தளபதியின் அறிவுரைக்கிணங்க எங்கள் கட்சியை தவெகவுடன் இணைக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். இணைத்தால் என்னை ‘தவெக இளைஞர் அணி’ தலைவராக பதவியேற்றம் கொடுப்பதாகத் தளபதி வாக்குறுதி அளித்திருக்கிறார். ஊக்கபோனஸ்ஸாக, என் மகன் உதய்: தவெக விடலையணித் தலைவர்; என் பேரன் இன்பா: தவெக குழந்தைகளணித் தலைவர்.
கே: உங்கள் உடன்பிறவாத் தங்கை கனிமொழியின் எதிர்காலம்?
ப: ஆக அவருக்கு நிகழ்காலமே இல்லை. எல்லாமே இறந்தகாலம் தான். அவர் அமித்ஷாவின் வாலைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது எனக்குத் தெரியாதா?
கே: உங்களுக்கும் தவெகவுக்கும் கொள்கை, கோட்பாடு எப்படி ஒத்துப் போகும்?
ப: ஆக. இரண்டுமே திராவிடக் கட்சிகள்தாம். மதச்சார்பின்மைத் தத்துவம் தான் எங்களை ஒருங்கிணைக்கிறது. இரு கட்சிகளும் நீட் தேர்வை எதிர்ப்பவை. திரைப்படத் துறைக்கு உரிய உயரிய மதிப்பு கொடுப்பவை.
கே: இருந்தாலும்…
ப: எப்பாடு பட்டாவது, எந்த விலை கொடுத்தாவது பாரதீயஜனதா சங்கிமங்கிகளை நம் சங்கம்போற்றிய தமிழகத்தினுள் உள்ளே வரவிடாமல் தடுப்பது முக்கியம்.
கே: தளபதி பலமுறை உங்களைக் கிண்டலும் கேலியும் செய்திருக்கிறாரே!
ப: ஆக. அதில் எள்ளளவும் உண்மையில்லை. என்னை வெகுமரியாதையாக ‘ஸ்டாலின் சார்’ எனத்தான் அழைத்திருக்கிறார்… ‘ஸ்டாலின் அங்கிள்’ எனவும் என்னை மிக அன்புடனும் மரியாதையுடனும்தான் அழைத்திருக்கிறார். செய்திகளைத் திரிக்காதீர்கள்! எங்களுக்குத் தெரியாதா? எங்கள் ஆட்சியின்போது எங்கள் ஆணைப்படி, பலமுறை தொழில்முறையில் செய்திகளைத் திரித்த, ரூ200/- ஃபார்மூலா படி எங்கள் பிச்சையில் வாழ்ந்த பதர்கள்தானே நீங்கள்!!
கே: தளபதி ஒற்றைக் குடும்ப ஆட்சி என விமர்சனம் வைத்திருக்கிறாரே!
ப: ஆக. என் ஒரே பதில் – எங்கள் தளபதி சொன்னவைகளைத் திரித்து மதவெறியர்களின் ஊதுகுழலாக, பிரிவினைவாதிகளின் பிரதிவாதியாக ஐந்தாம்படை வேலை செய்யாதீர்கள்! எங்கள் தளபதி, தன் கட்சியையே ஒரு பெரும் குடும்பமாக நினைப்பவர்; கட்சித் தொண்டர்களைக் குடும்ப உறவினர்களாக நினைப்பவர். குடும்பமே கட்சி. கட்சியே குடும்பம். எங்கள் கட்சியும் அப்படியேதான், அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.
கே: உங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி… விஜய் பலமுறை இவை குறித்துப் பேசியிருக்கிறாரே!
ப: ஆக. தமிழகக் காவல்துறை எங்கள் ஆட்சிக் காலத்தில் எப்போதாவது எங்கள் மீது ஒரு குற்றப்பத்திரிகையாவது தாக்கல் செய்ததுண்டா? மதவெறியர்களின் பரப்புரைகளை நம்பவேண்டாம்… எங்கள் ஆட்சி பரிசுத்தமான ஆட்சி, மதச்சார்பின்மை மிக்கது. மேலும், எங்களுக்கு முன்பே தவெகவில் ஐக்கியமான செங்கொட்டையன், ஆதவ்அர்ஜுனாக்களின் வழி எங்களை நடத்தி, ஆற்றுப் படுத்தும் பராக்கிரமம் மிக்கவர்தாம் இளவல் தளபதி விஜய்.
கே: தளபதி அவர்கள் பலமுறை, உங்கள் திமுக பணம்கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்க முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளாரே!
ப: தளபதியின் கருத்துகள்தான் எங்கள் கருத்துகளும் கூட. அவர் திமுக பற்றிச் சொன்னார் – ஆனால் நாங்கள் டிஎம்கே. மேலும் நாங்கள் கொடுத்ததாகச் சொல்லியிருக்கும் பணம் உண்மையில் எங்கள் பணமே அல்ல என்பதற்கு மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது. ஆக. மக்கள் பணத்தைப் பத்திரமாகச் சேமித்து அதே மக்களிடமே உரிய நேரத்தில் திரும்ப அளிப்பதை எப்படிக் குற்றம் சொல்லமுடியும். வாய்புளித்ததோ பேய்கிலித்ததோ எனத் தற்குறித்தனமாகக் குதர்க்கக் கேள்விகளைக் கேட்கக்கூடாது… நீங்கள் பாசிச சக்திகளின் ஏஜெண்டா?
கே: உங்களை நோக்கிக் கிண்டல்கணைகளே ஏவுவார்களே, அந்த மற்றும்-பலர், மதவெறி தலைக்கேறிய இந்துத்துவ சக்தியும் அதன் அடிமைகளும்… இவற்றை எப்படி எதிர்கொள்வீர்கள்?
ப: ஆக: அவர்களுக்கெல்லாம் எங்களுடைய ஒரே பதில், எங்கள் ஈவெரா பெரியாரே சொல்லியிருக்கிறார்… “பதவிக்காக, பொண்டாட்டியையும் கூட்டிக் கொடுப்பான் கழகக்காரன்’ (பக்கம் 21). இதுதான் எங்கள் முதன்மைத் தத்துவம். முழுக் கோட்பாடு. ஒரே அடிப்படை.
கே: கடைசியாக ஒரேயொரு கேள்வி சார்… உங்கள் கூட்டணியாட்சி எப்படி ஜெல்லாகும்?
ப: ஆக. தளபதியின் அறிவுரைப்படிதான் அனைத்தும் நடக்கும். ஒரு பிரச்சினையுமில்லை. நாங்கள் எல்லோருமே நடிகர்கள்தாம். திரைப்படச் சூழலில் இருந்தவர்கள், இருப்பவர்கள், இருக்கப் போகிறவர்கள். தவிர, எங்கள் கொள்கைத்தலைவர் பெரியார் சொன்னதை மறுபடியும் அசைபோடவும். எங்களுக்கு பெரியார் கொள்கைகளும் தத்துவங்களும் முக்கியம்…
கே: மிகக் கடைசியாக… தமிழக மக்களுக்கு உங்கள் செய்தியென்ன?
ப: ஆக. திராவிடம் வெல்லும். மதவாதச் சக்திகளை முறியடிப்போம். நம் அடுத்த இலக்கு, டெல்லிதான். தளபதி நாமம் வாழ்க. அவர் தொடர்ந்து வெற்றிவாகை சூடுக…
எங்கள் உயரிய இலக்குகளை அடைய என்ன தியாகங்களைச் செய்யவேண்டுமோ அவை அனைத்தையும் எங்கள் திராவிட உடன்பிறப்புகள் செய்வோம்…
சாருநிபேதிதா: தமிழகச் சட்டசபைத் தேர்தல் 2026 – எக்ஸிஸ்டென்ஷியல் ‘எக்ஸிட் போல்’ கணிப்புகள்
May 3, 2026
என் ஆருயிர் ஆசானும், ஸல்ஸா தென்னமெரிக்க ஃப்லமென்கொ கும்மாள குத்தாட்ட லத்தீனமெரிக்க உற்சாக டான்ஸ் வாத்யாருமான சாரு நிபேதிதாவுக்கு என் ஆத்மார்த்தமான நன்றி – அதாவது இந்த விருந்தினர் பதிவை, அதுவும் அட்டகாசமான கணிப்புகளுடன் கொடுத்தமைக்கு.
(முன்னர், இதே தேர்தல் தொடர்பாகத் தத்தம் கருத்துக் காட்டுரைகளை அளித்திருப்பவர்கள் எழுத்தாள அறிவுஜீவிகள் ஜெயமோகனும், எஸ்ராமகிருஷ்ணனும் – தெம்பு இருந்தால் படிக்கவும், நன்றி!)
தேர்தல் ஸல்ஸா – அவநம்பிக்கையில் நம்பிக்கை
தேர்தல் முடிந்த 23 ஏப்ரல் இரவு நான் தூங்கவில்லை. டிவி ரிமோட்டை கையில் பிடித்தபடி சேனல்கள் மாற்றிக்கொண்டு மாறியவண்ணம் இருந்தேன். ஒவ்வொரு சேனலும் ஒரு சின்ன போர் களம். அங்கே எண்ணிக்கைகள் ஓடின — 123, 98, 45 — ஆனால் அவை எண்கள் அல்ல; அவை மனிதர்களின் நரம்புத் துடிப்புகள்.
ஒரு தேநீர் குடித்தேன். அது கசப்பாக இருந்தது. அந்தக் கசப்பு, இந்தத் தேர்தலின் உண்மையான சுவை என்று தோன்றியது.
நாம் அரசியலை இன்னும் ஒரு சீரியஸான விஷயமாக எடுத்துக் கொள்கிறோம். அது ஒரு தவறு. அரசியல் என்பது ஒரு பர்ஃபார்மன்ஸ். ஒரு பெரிய, கொஞ்சம் மோசமான, கொஞ்சம் காமெடியான பர்ஃபார்மன்ஸ். எல்லாரும் அதில் நடிகர்கள். சிலர் ஹீரோ. சிலர் வில்லன். சிலர் எக்ஸ்ட்ரா. சிலர் பெண்கள். மற்றும் பலர். ஆனால் இறுதியில், எல்லாரும் ஒரு மாதிரி வியர்க்கிறார்கள். வியர்க்கவைக்கிறார்கள்.
இந்தத் தேர்தல் ஒரு எக்ஸிஸ்டென்ஷியல் ஜோக். நீ வாக்களிக்கிறாய். நீ நம்புகிறாய். பிறகு முடிவுகள் வருகிறது. நீ சிரிக்கிறாய். அல்லது கோபப்படுகிறாய். ஆனால் அடுத்த நாள் காலை, நீ வேலைக்கு போகவேண்டும். அந்த இடத்தில் தான் இந்த அவல ஜோக் மிகப் பெரியதாகிறது.
ஒரு நண்பன் என்னிடம் கேட்டான்: “மச்சி, யாரு ஜெயிச்சாங்க?” நான் அவனை பார்த்தேன். சிரித்தேன். “யாரும் இல்லடா. எல்லாரும் ஜெயிச்சாங்க. அதனால தான் நாம தான் தோற்றோம் போல இருக்கு.”
அவன் சிரிக்கவில்லை.
இந்த நாட்டில், நம்முடைய பிரச்சினை அரசியல்வாதிகள் இல்லை. நம்முடைய பிரச்சினை நம்முடைய கற்பனை. நாம் இன்னும் ஒரு ‘ரட்சகர்’ வருவார் எனக் காத்திருக்கிறோம். ஒரு ஹீரோ வந்து எல்லாத்தையும் சரி பண்ணுவான் என்று நம்புகிறோம். அது சினிமா. இது வாழ்க்கை. வாழ்க்கையில் ஹீரோ வரமாட்டான். அதிகபட்சம், ஒரு காமெடி கேரக்டர் தான் வரும்.
சோஷியல் மீடியா இந்த முறை ஒரு சைக்கடெலிக் அனுபவம். எல்லாரும் ஒரே நேரத்தில் கத்தினார்கள். ஒரே நேரத்தில் அழுதார்கள். ஒரே நேரத்தில் மீம்ஸ் போட்டார்கள். ஒரே நேரத்தில் டென்ஷன் ஆனார்கள். அது ஒரு டிஜிட்டல் திருவிழா. ஆனால் அந்த திருவிழாவில் யாரும் உண்மையில் இருக்கவில்லை. எல்லாரும் அவதார்களாக இருந்தார்கள்.
நான் ஒரு பழைய தெருவில் நடந்தேன். அங்கே ஒரு சுவரில் இன்னும் ஒரு போஸ்டர் ஒட்டியிருந்தது. பாதி கிழிந்தது. அதில் ஒரு முகம். அந்த முகம் இப்போது முக்கியமில்லை. அந்தக் கிழிந்த காகிதம் தான் முக்கியம். கட்டுடைத்தால் அது நமக்கு ஒரு ரியாலிட்டி செக்.
இந்தத் தேர்தல் நமக்கு என்ன கற்றுக்கொடுத்தது? ஒன்றும் இல்லை. அதுதான் அதன் அழகு. நாம் மீண்டும் அதே தவறுகளை செய்வோம். மீண்டும் அதே நம்பிக்கைகளை வைத்துக் கொள்வோம். மீண்டும் அதே முறையில் ஏமாறுவோம். அது ஒரு சைக்கிள். ஒரு மிகவும் கவர்ச்சியான, மிகவும் சலிப்பான சைக்கிள். மித் ஆஃப் ஸிஸிபஸ்.
ஆனால், இதை எல்லாம் சொல்லிக்கொண்டே நான் இன்னொரு தேநீர் ஆர்டர் பண்ணுகிறேன். ஏன் தெரியுமா? இந்த கசப்பு எனக்கு பிடித்து விட்டது.
இறுதியில், ஜனநாயகம் என்பது ஒரு மாசோகிஸ்டிக் பிளஷர். அது நம்மை காயப்படுத்தும். ஆனால் நாம் அதை விட்டுவிடமாட்டோம். ஏனெனில் அந்த வலியில் ஒரு சின்ன சுகம் இருக்கிறது.
அதனால், அடுத்த தேர்தல் வரைக்கும், இந்த நகைச்சுவையை ரசிப்போம். சிரிப்போம். சண்டையிடுவோம். மீண்டும் வாக்களிப்போம்.
ஏனெனில், நம்மிடம் வேறு எந்த நல்ல கதையும் இல்லை.
என்னைப் போன்ற நல்ல கதைகளை எழுதுபவனுக்கும் கலைமாமணி விருதோ, ஸாஹித்ய அகடெமி விருதோ – அவற்றையே விடுங்கள், ஒரு நோபல் புக்கர் பரிசுகூட கொடுக்கமாட்டார்கள். அழகுணர்ச்சி அற்ற ஃபிலிஸ்டைன்ஸ். என்ன செய்வது.
நடிகர் விஜய் கட்சியின் மேல்தான் என்னுடைய தற்போதைய முழு நம்பிக்கை. ஆகவே விஜய் ரசிகர்கள் அனைவரும் , கீழ்கண்ட என் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பவும். அதை வைத்துத்தான், என் நெடுநாள் கனவான தைவான் போய் தையா தக்கா எனக் குதித்தாட வேண்டும்.
நானும் துரந்தர் 1 & 2 படங்களை ஒருவழியாகப் பார்த்துவிட்டேன் – அதாவது, காதும்காதும் வைத்தாற்போல இரவு 10 மணிக்குமேல் ஒருமாதிரி திருட்டுத்தனமாகக் கிளம்பி, பின்னர் தூக்கக் கலக்கத்துடன் அதிகாலை 2-3 மணிக்குத் திரும்பவருகயென…
…எது எப்படியோ… அப்படங்கள் குறித்த என் கழுதைத் தனமான கருத்துகள் ஒருபுறமிருக்கட்டும் – நம் பொதுவெளி அறிவுஜீவிகள், அரசியல் விமர்சகர்கள், யூடூப்பர் பெருந்தகைகள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்….
துரந்தர் என்றால் என்ன?
கோலாஹல ஸ்ரீநிவாஸ்
“அனைவரும் இதை வடமொழி-ஹிந்திச் சொல்லாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் உண்மையென்னவென்றால், இந்தப் படத்தின் ஹீரோ, ஆஃப்கனிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடைப்பட்ட துரந்த் லைன் Durand line எனப்படும் எல்லைக் கோட்டைத் தாண்டி, பாகிஸ்தானுக்குள் சென்று (இந்த உள்ளே என்பதை ஹிந்தியில் ‘அந்தர்’ எனச் சொல்வார்கள்) தாக்குகிறான்.
ஆகவே இவன் துரந்த் + அந்தர் = துரந்தர்.
நான் சிறுவயதிலேயே என்னுடைய அஞ்சாங்க்ளாஸ் அட்லஸ்ஸில் இந்தச் சிவப்புக் கோட்டைப் பார்த்திருக்கிறேன்!”
சீமான்
“படத்தின் தமிழினப் போராளி தன்னுடைய எல்லாவற்றையும் துறந்துவிட்டு இனப்போர்த் தியாகியாக உருமாறி இனமானத்தைக் காக்க அன்னியதேசத்துக்குச் சென்று, நம் தேசியத் தலைவரைப் போல பகையை வென்று வெற்றிவாகை சூட்டிக் கொள்கிறான்!
…அவன் திறைமைசாலி. தோள்வலி மிக்கவன்! தோல்வியே காணாதவன்… அவன் தன் குறிக்கோளைத் தவிர அனைத்தையும் துறந்தவன். ஆகவே அவன் துறந்தர். ஹஹ்ஹா!!!!”
டெல்லி ராஜகோபாலன்
“டெல்லியிலிருந்து இந்த ஸ்கூப்! ஒத்திசைவுடீவி சேன்னல் ஓனர் ராமசாமிக்கும், அவருடைய ஏழரைத்தன ரசிகர்களுக்கும் மட்டும், இதை பிரத்தியேகமாக, இந்த ஏப்பிரல் 1 தேதியன்று சொல்வதில், எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. படத்தின் ஹீரோ, இந்தியாவின் ரகசிய உளவாளி என்பதுதான் பெரிதும் வெளிவராத ஸ்கூப் தகவல்!
இன்னொரு பயங்கர ஸ்கூப் என்னவென்றால் அமித்ஷா, தமிழகத் தேர்தலுக்கு முன் தமிழகம் விஜயம் செய்யவிருக்கிறார். அவர் தங்கும் ஹோட்டல் சென்னை லீமெரிடியன் எனச் சொல்கிறார்கள். ரூம் எண் 007.”
மூத்த பத்திரிகையாளர் மணி
“தூர தேசத்துக்குச் சென்று, அந்த எதிரிதேசத்தின் தொங்குசதையாக இருந்து தந்திரமாக காரியம் சாதித்துக்கொண்டு, வெற்றிபெறுகிறான் இதன் ஹீரோ என நினைக்கிறேன். ஆகவே தூர + தந்திரர் = துரந்திரர் எனவாக இருப்பதுதான் தமிழிலக்கணம் வழியாகச் சரி என்பதை தொல்காப்பியர் ஒப்புக்கொள்வார்.
ஸ்டாலின் ஆட்சி மட்டமாக ஆட்சி. ஆனா எக்காரணம் கொண்டும் பாஜக உள்ள வந்துடக் கூடாது. ஸ்டாலின் ஊழல். ஆனா ஹிந்துத்துவாவோட அடிமை அதிமுக அதுக்கு ஒரு மாற்று இல்லை. திமுக கொத்தடிமைங்க ஸ்டாலினுக்கு தான் ஜால்ரா போடுவாங்க. ஆனால் நான் அப்படியில்ல – எனக்கு சமூக நீதி முக்கியம். ஆகவே விஜய் கட்சியும் வராம இருக்கணும்னா, திமுகதான் திரும்ப வரணும்…”
ரவீந்திரன் துரைசாமி
“அங்கிட்டு இந்த ஒற்றன் போறான். நாம் மோதிக்கு முன்னமே அறிவுரை சொன்னதுபோல, பாகிஸ்தானில் 24% பலூச்சி ஜாதியினர் கீ ஃபேக்டர் ஆய்ட்டு – அவ்ங்க ஒப்புதல் இல்லாம ஒண்ணுமே அங்கே நடக்காது.
…அதே சமயம் அவங்களோட ஒற்றுமையாக, சப்போர்ட்டாக இருக்கிற இன்னொரு ஜாதி தான் இந்த துரந்தவங்க – இவங்களுக்கு நேப்பாள்ல 3% ஓட்டு கேரண்டி. கூட்டணிலே இருந்தாலும் தூர தேசத்துக்காரனுங்கன்னு ஒரு ஃபேக்டர். இவங்கதான் ஆஃப்கனிஸ்தான்ல பக்தூன் ஜாதியோட இன்னொரு மறைமுகக் கூட்டணி வெச்சி செக்கோஸ்லாவியாவுக்கு செக் வெக்கறாங்க. அதனாலதான் துரந்தர் பேரு வந்திட்டு.”
ரங்கராஜ் பாண்டே
“முறையாக இதைப் பற்றி அறியாமல் கருத்து சொல்லமுடியாது. நான் பிஹார்லேர்ந்து வந்தவன். ஆகவே எனக்குத் தெரிந்த ஸமஸ்க்ருதத்தின் படி சொல்லவேண்டாம் என்றாலும், ஒரு கருத்துக் கணிப்பு நடத்திச் சொல்லவேண்டும் என்பதால், பெரும்பாலோர் 11% கருத்துப் படி, இது தூர + இந்திரர் என்பதன் மாடிஃபிகேஷனாக ஒரு ரெட்டாரிக்கா இருக்கலாம். அதுல ஒரு பிரச்சினையுமில்ல…
ஆனா தேர்தலுக்குப் பின்புதான் அதன் முடிவுகள் எப்படி அமையும் எனச் சொல்லமுடியும். எல்லாம் சுமுகமாக முடியும்.”
பாரிசாலன்
“இந்த படத்தோட ஹீரோ ரண்வீர்சிங் இல்லுமினேட்டி வடவ சதிகாரன். தமிழ்த் துரோகி, ஏகாதிபத்தியன். அவன் தன்னோட சொந்த வரலாற்றைத்தான் கதை போல எடுத்திருக்கிறான். நாமதான் அவனத் தூக்கிக் கொண்டாடிட்டு இருக்கோம்…
ஒரு தமிழின உணர்வாளனாக, ஆகவே உலகப் புகழ்பெற்ற வேர்ச்சொல் ஆராய்ச்சியாளனாக உண்மையைக் கூறவேண்டுமென்றால், இந்த துரந்தர் என்பதே தமிழ் வார்த்தைதான். துரோகி என்கிற தமிழ்ச் சொல்லில் இருந்து துர வந்தது; அந்த என்பது தமிழ் அந்த தான்; + ர் என்பது மரியாதைக்குரிய ஒட்டு – அதுவும் தனக்குத்தானே அவன் சுயமரியாதை கொடுத்துக் கொண்டதுதான்… துர + அந்த + ர். இதெல்லாம் புரியாம பேசிட்டிருக்கோம்!”
ஜெயமோகன்
“அப்படத்தின் டைரக்டர் ஆதித்ய தர் அதன் திரைக்கதை வசனத்துக்காக என்னைத் தான் முதலில் அணுகினார். கொஞ்சம் சுயவிலக்கத் தயக்கத்துடன் தான் அதற்கே ஒப்புக்கொண்டேன் – ஏனெனில் தீவிரவாதக் கருத்துகளை நான் உள்வாங்குவதைவிட வெளிவிற்பதுதான் சாலச் சிறந்தது எனும் என்னுளப்பாங்கை நான் என் சிறுவயதிலேயே உள்ளமர்த்திக் கொண்டுவிட்டேன்.
…மேலும், உள்நோக்கிய நுணுக்கமான ஆன்மிகத் தேடலில் துரிய நிலையை துரிதமாக அறியவோ அடையவோ முடியாது. அந்தப் படக்கதையில் கதாநாயகன் சுயதேடலில் ஈடுபட அதன்வழியாக வன்முறையக் கண்டுகொள்வதைத்தான் துரந்தர் எனும் ஒரு பெரும்வரலாற்றுப் படிம உருவகமாக, ஒரு கோட்டோவியமாகக் காண்பிக்க முயன்றேன் – அவரிடம் வாதம் செய்தேன். ஆனால், என் பங்களிப்பை இருட்டடிப்பு செய்து வைரமுத்துக்கு ஞானபீடம் கொடுத்துவிட்டார்கள்.”
பிடிஆர் பழநிவேல்ராஜன் / ஆ இராசா
“இந்தப் படத்தில் வரும் துரந்தர் நானில்லை. ஏதோ ஏஐ ஆர்ட்டிஃபிஷியல் இண்டெல்லிஜென்ஸ் வைத்து மார்ஃப் செய்து விஎஃபெக்ஸ் பண்ணி என் குரல்நடையுடை பாவனைகளைச் சேர்த்துக் கோர்த்துவிட்டார்கள்.
நான் மான நஷ்ட வழக்குப் போடப்போகிறேன். லீகல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன்.”
(சரி. அண்ணாமலையும் பத்ரிசேஷாத்ரியும் இதில் விதிவிலக்குகள் – அவர்கள் தொழில்முறை யூடூப்பர்களோ கண்டமேனிக்கும் கருத்துதிர்ப்பாளர்களோ அல்லர், நல்லவேளை!)
அண்ணாமலை
“நான் அந்தப் படத்த பாக்கலீங்கண்ணா. பாத்துட்டு கருத்து சொல்றேன். ஹிந்தியும் ஓரளவுதான் தெரியும். நீங்க எவ்வளவு முறை, எந்த மாதிரி மாத்திமாத்திக் கேட்டாலும் இதுதான் என் பதில். தெரியாத விஷயத்த தெரியறமாரீ காட்டிக்கறது ஊழலில் திளைக்கும் திராவிடர் குணம். ஆனா அந்தச் சண்டையை இப்ப போடவேண்டாம், அததுக்கு நேரம் சமயம் வரரும்.
ஆகவே அண்ணாதிராவிட ஆட்சியை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவோம்.”
பத்ரி சேஷாத்ரி
“ஸ்ஸ்ஸ்… அப்பாடா… இந்தக் கட்டுரையை அப்படியே படித்துவிடுகிறேன். அதையே இந்தக் கேள்விக்கான என் கருத்தாக வைத்துக் கொள்ளுங்கள்..
நான் பத்ரிசேஷாத்ரி, இது கிழக்கு நியூஸ்!”
“களம் சூட் புட்ச்சிட்ச்சி, நீங்க அத எப்டீ பாக்றீங்க…”
March 10, 2026
:-(
“அந்தக் கூட்டணி அடிமட்டத்துல ஜெல்லே ஆகல, அத எப்டி பாக்றீங்க?”
“ஹிஸ்டாரிக்கலா பாத்தா நம்ப தமிளகத்ல கூட்டணி அரித்தமேட்டிக் கெமிஸ்ட்டிரிண்றது, பிஸிகல்லா எப்டி வர்க் அவுட் ஆவும்?”
“விடுதலைச் சிறுத்தை கச்சிக்கு தெராவிடக் கழுதைங்க ஓட்டு ட்ரான்ஸ்பர் ஆவுமா?”
“அதிமுகவோட பி-டீம்தான் இந்த டீஎம்கே! பள்நிசாமி எவ்ளோ ராஜதந்த்ரத்தோட பன்னீர அங்க தெளிச்சுவுட்டுறுக்கார்!”
“கூட்டணி வேற கூட்டாளியணி வேறண்றத தமிலக வாக்காலர்கல் புர்ஞ்சிக்கல… இதப் பத்தீ என்ன நெனக்கறீங்க?”
“தலித்துங்க நாடாருங்கஅம்பது % வோட்டு, மொதலியாருங்க 80% வோட்டு, எல்லாம் டீஎம்கேவுக்குதான்! எங்க அபார்ட்மென்ட் டவர்ல, என் ஃப்ளோர்ல எடுத்த கருத்துக்கணிப்பு அதத்தான் காண்பிக்குது!”
“பூத் கமிட்டீங்க எங்கே? ப்ரேத் கமிட்டியாச்சும்? கொறஞ்ச பட்சம் வேதாளக் கமிட்டிங்களாவது இர்க்குமா இந்த தற்குறி விஜய்க்கு?”
“நாங்க டேட்டா வெச்சிட்டுதான் பேசுவோம்! பொத்தாம்பொதுவா கணிக்கமாட்டோம்! க்ண்டிப்பா அடுத்த மொதல்வர் எங்க பிகில் தளபதி விஜய்தான்!”
“கூட்ற கூட்டத்த வெச்சி ஓட்டு விகிதம் சொல்லவே முடியாது… ஆனா தானா சேர்ற கூட்டம், ஊக்கம்கொடுத்துக் சேர்க்கற கூட்டம்னு வித்தியாசம் பாக்கணும்ல?”
“ஆனா பாருங்க, டோப்பா ஸ்டாலினுக்கு கூட்டம் கூடுது. உண்மை. ஆனாக்க, ஒரு மாற்றுத்தலைமுடியாளருக்கே இவ்ளோனா, சொந்த தலைமுடி வெச்சி தியாகம் செஞ்சி தேர்தல்களம் காண்ற எங்க தளபதிக்கு எவ்ளோ கூடும்?”
“குட்டி நடிகர் மாஸ் 30% வோட் வாங்குமா, இல்ல வெறும் 45% தானா?”
“குட்டி நடிகர் குசு விட்டார்! இது தமிழகத்துல அதிர்வலைங்கள ஏற்படுத்தியிருக்கு… பொலிட்டிகல் சுனாமின்னே சொல்லிடலாம்… அதப் பத்தீ உங்க கருத்து என்ன?”
“நாம் தமிளர் கச்சி ஏன் இலங்கை தேர்தல்கள்ல தமிளர் சார்பா போட்டி போடல? இதுலேந்தே அவங்க வண்டவாளம் தண்டவாளத்துல ஏற்ரது தெரியுதுல்ல? அவ்னுங்க போட்றது ரெட்டை வேடம்…”
“யாரோட ஓட்டைய ஜனநாய்கன் நடிகர் விஜய் பிரிக்கறார்?”
“ஜென்-ஸீ வாக்காளங்களுக்கு எது முக்கியம் – நடிகங்களோட குஞ்சாமணியப் புட்ச்சிக்கினு தொங்கறதா, இல்ல… கார்ட்போர்ட் கட் அவுட் உச்சீலேர்ந்து உற்சாக பிகில் ஊதறதா?”
“மதச்சார்பின்மையைக் கடைபுடிக்கற திமுகவுக்குதான் எல்லா கிரிட்துவர்களும் முசுலீம்களும் ஓட்டளிப்பாங்க… விஜய்க்கு இல்லவேயில்ல… உங்க கருத்தூ?”
“ஸ்டாலின் குடும்ப வளர்ப்பு நாயும், நயினார் நாகேந்திரன் வீட்டுச் செல்ல நாயும் ஒன்றாக ஒரு வெடர்நரி டாக்டரைப் பார்க்கச் சென்றிருக்கின்றன; அவை இரண்டும் சுமார் 10 நிமிடம் தனியறைல தனிப்பட்ட முறைல பேசியிருக்காங்கன்னு தகவல் தீ போலப் பரவியிருக்கு… ஆகவே தீமுக, பாஜகவோட B-டீம் தான? இதப் பத்தீ…”
“ஆங்கிலத்துல இதை, லேம்டக் கவர்னமெண்ட் அப்டீன்னு சொல்லுவாங்க… நொண்டிவாத்து ஸ்டாலின் ஆட்சி ஆரம்பத்துலேர்ந்து இப்டியேதான் இருக்கு…”
“ஆங்கிலத்துல இத ஸஜ்ஜெஸ்டிவ்னு சொல்லுவாங்க… எங்க ஸஜ்ஜெஷனும் ஸஜ்ஜெஸ்டிவாக பரிந்துரையாகத்தான் இருக்கும்…,”
“திராவிட மாஜிக்க இங்கிலீஷுல அப்ரகாடப்ரா அப்டீன்னு குறிப்பிட்வாங்க… அதாவது அந்தக் காலத்துல அக்கிரகாரத்து பிராம்மண காபி டபரா ண்றத, 3% அவாள்கிட்டேந்து புடுங்கி பரவலாக்கி அனைத்து சாதியினருக்கும் காப்பி குடிக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பை அளித்த சமூக நீதி பீரங்கிதான் தீமுக… அதுதான் 2026 தேர்தல் நாய்கன்… நீங்க இதப் பத்தீ…”
“நடிகர் தளபதி விஜய்யோட அனைவருக்குமான அரசு செக்புக் திட்டமான ‘செக்குபுக்கு ரயில்’ அறிவிப்பு ஒரு பிரம்மாஸ்திரம், ஒரு மிகப்பெரிய கேம்சேஞ்சர்!!! 20-60 வயது இளைஞர்கள் அனைவரும் (அரசுப் பணியாளர்கள் நீங்கலாக – ஏனெனில் அவர்களுக்கு ஏற்கனவே அந்த அதிகாரச் சலுகை இருக்கிறதே!) எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அரசுக் கருவூலத்திடமிருந்து எடுத்துக் கொள்ளலாம் என்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
-0-0-0-0-
பலப்பல தவிர்க்கமுடியாத (பெரும்பாலும் விகசிப்பு கொடுப்பவைதாம்!) அழுத்தங்களின் நடுவே, எப்பவாவது ‘ரிலாக்ஸ்’ செய்கிறேன் பேர்வழியென்று வாய்விட்டுச் சிரிக்கலாமென, பொழுதுபோகாமல் இந்தக் கட்டேலபோற யூடூப்பர் கம்னாட்டிங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குக் கேட்கத் தோன்றுவது…
அந்தமாறீ மெய்யாலுமே சூட் புட்ச்சிச்சின்னாக்கக்கூட களத்தையே பாக்காம எப்டீடா ஏஸி குளுகுளு ரூம்புலேர்ந்து வெக்கமேபடாம, நேர்ல பாத்தாமாறீ மொழ நீளத்துக்கு அட்ச்சிவுட்ற்றீங்க?
…இதில்வேறு ஒரிரு மதிக்கத்தக்கவர்களுக்கு அப்பாற்பட்டு, தமிழ் உச்சரிப்பு சுத்தம். கர்ண கடூரம். இவ்வளவு குரூரத்துடன் தமிழைப் போட்டுத் தாக்கவேண்டிய அவசியம்தானென்ன, சொல்லுங்கள்.
அடிவயிற்றில் இனம் புரியாத கலக்கம். எப்போது தான் தமிழகத்துக்கு, இந்த அயோக்கிய ராஸ்கல் மேனாமினுக்கிகளிடமிருந்து விமோசனம் கிடைக்கும் என்கிற சுயபச்சாத்தாபம் மிக்க அலுப்பு.
நமது பாரத நாட்டு ஜனநாயக வழிமுறைகளின் வழியொட்டி – ஆனால் மனம்போன போக்கில் அவை அனைத்தையும் துஷ்பிரயோகம் செய்து, அநியாய ஆதாயம் பெற்றுக்கொழுத்தல், அதன் விதிமுறைகளை வளைத்து மடித்து அயோக்கியத்தனமாகச் சுரண்டிக் கொள்ளையடித்துச் சுயலாபம் அடைதல் என ஒரு பக்கம் பணநாயகத் திராவிடப் பொறுக்கிகள் அலையும்போது – தமிழகத்தைப் பொறுத்தவரை, இன்னொரு பக்கம், நம் செல்ல, சக ஜனநாய்களானவர்கள் இலவசங்களையும் பிச்சைகளையும் கையூட்டுகளையும் மினுக்கல்களையும் ஜிகினாக்களையும் பெற்றுக்கொண்டு, தொடர்ந்து திராவிடன்களுக்கும் அவன்கள் வழித்தோன்றல்களுக்கும் அதிகார வாய்ப்புகளை அளித்துக் கொண்டிருப்பது அவலம்தான்.
ப்ளடி, டமிள் இனி மெல்லஸ் ஸாவும்.
டமில்நாட் இந்தத் தெருப்பொர்க்கி திராவிடன்களுக்கு வோட் போட்டே வோட்டாண்டி ஆவும்.
ஆமென். :-(
-0-0-0-
நம் யூடூப் தண்டக் கருமாந்திரங்கள், பொதுவாகவே இப்படிப்பட்ட அவல நிலையில் இருந்தாலும் (யதா திராவிடன், ததா யூடூப்பன்) – பத்ரி சேஷாத்ரி போன்றவகளின் சமன நிலை சமகாலக் கருத்துரைகளும் (https://www.youtube.com/@kizhakkunews/videos) கிடைக்கத்தான் செய்கின்றன.
வாழ்க நீவிர்.
(இருந்தாலும் தமிழகத்தின் நிலை கவலைக்கிடம்தான்!)
:-(
- தொழில்முறை தமிழ் யூட்யூபர் கழுதைகளின் அலுப்புதரும் அலப்பறைகள் July 18, 2025
அண்ணா பல்கொலைக்கழக எஞ்ஜினீயரிங் கஞ்சிநீரிங் திராவிட மாணவன் எனக்குக் கொடுத்த கொடும் அதிர்ச்சி
January 26, 2026
(அல்லது)
குண்ஸாக: ஒரு சராசரி (அதிசராசரி!) விஜய்குஜய்(ரசிகன்) = முட்டாக்கூ.
(மன்னிக்கவும் – தேவையானால் தொடர்ந்து படியுங்கள்… பாவம்…)…இக்காலங்களில் – பொதுவாகவே எனக்கு அவ்வளவு உபரி நேரம் இல்லாத காரணத்தால், பல, எனக்கு மிகவும் ப்ரீதியான/உவப்பான விஷயங்களைக் கூடச் செய்ய முடிவதில்லை.
(இந்த ஒத்திசைவெழவு எனும் பயிற்சி தொடர்ந்து எழுதப்படாமல் இருப்பதற்கும், ஆகவே பாவப்பட்ட சகஏழரைகளின் ரத்த அழுத்தம் சீராகத் தொடர்வதற்கும் – இந்த க்ரஹஸ்தி விஷயமும் ஒரு காரணம்/சால்ஜாப்பு; கடந்த நான்கைந்து மாதங்களில், ஒரேயொரு முறைதான் வீட்டைச் சுற்றி அரை கிலோமீட்டர் ஆர வட்டம் தாண்டி சென்றிருக்கிறேன் – இதுவானது, சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு, இளம் நண்பர் ஒருவரைச் சந்திக்கிறேன் பேர்வழியென்று ஹோட்டலொன்றில் நான் காணாததைக் கண்டவன்போல மூச்சுமுட்டத் தின்றதில் முடிந்தது – இளைஞருக்கு வாயடைத்துப் போய்விட்டது என நினைக்கிறேன், பாவம், என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை! இருந்தாலும், வீட்டுக்கு வந்து மனக்கலக்கத்துடன் உடல் எடையைப் பரிசீலித்துப் பார்த்தேன் – அதேயதே 49 கிலோகிராம்தான், நல்லவேளை; கொஞ்சம் நிம்மதிதான்…)
…வழக்கம்போல எங்கோ சென்றுவிட்டேன்.
இருந்தாலும் – சிலபல நண்பர்கள் உதவி எனக் கேட்டு வரும்போது என்னால் தட்டிக் கழிக்கமுடிவதில்லை. பிரச்சினை, பிரச்சினை…
இப்படியாகத்தானே.
ஒரு தமிழ்மாமா செம்மாமா (இவர் ஏழரைகளில் ஒருவரல்லர் என்றாலும் சிலபல வருடங்களாகத் தொடர்பில் (விட்டுவிட்டு) இருப்பவர் – ஒத்திசைவு மூலமாகத் தான் நரிமுகம்) தன் அசமந்த மருமகனுக்குக் எஞ்ஜினீயரிங் கணக்கு தொடர்பாக சிலபல சந்தேகங்கள் இருப்பதாகவும் நான் அதற்கு உதவ முடியுமா எனவும் கேட்டார். (இவர் அடிப்படையில் நல்ல ஆசாமிதான்… ஒருவிதமான நல்லெண்ணத்துடன் தான் இந்த கோர்த்துவிடுவதைச் செய்திருப்பார் என ஒருமாதிரி சந்தேகிக்கிறேன்)
…நானும் ஏதோ ஒரு மூளைகலங்கிய தருணத்தில் சரி என்று சொல்லிவிட்டேன். அது மட்டமல்ல – அவர் சொன்ன விஷயங்களுக்கு அதிகபட்சம் 2-3 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் எனக் கொஞ்சம் தப்புக் கணக்கு போட்டுவிட்டேன் – இத்தனைக்கும் நான் 12ஆம் வகுப்புக்குமேல் எந்தப் பிள்ளையுடனும் இந்த ‘ட்யூஷன்’ வகையறாவைச் செய்வதேயில்லை – ஏனெனில் நிறையப் பட்டிருக்கிறேன், சுயநம்பிக்கை மிக்க இளம் மூடர்களைச் சந்திப்பது என்பது வாழ்க்கையில் விரக்தியைக் கொடுப்பதொன்றல்லவோ?
(இத்தனைக்கும் ஜொலிக்கும் சிலபல இளைஞர்களுடன் அப்படியும்இப்படியும் பழகும் வாய்ப்பு இருந்தாலும் 10 ஜொலிப்பான்கள் தரும் சந்தோஷத்தை ஒரேயொரு விஜய்/சூர்யா/சீமான் வகையறா இருட்டுத்திரை ரசிகன் லெஃப்ட் ஹேண்டால் அனாயாசமாக அழித்தொழிப்பான் என்பதையும் அறிவேன்)
…இருந்தாலும், பையனுடன் துளிக்கூட, ஒரு முன்னோட்டமாகவே கூடப் பேசாமல், அவனுடைய ஐக்யூவை அனுமானிக்காமல், அடிப்படை ஞானத்தைக் கணிக்காமல், அவனுடைய தொழிலறத்தைப் பற்றித் துளிக்கூட அறியாமல் ஒப்புக்கொண்டேன். தேவையா? (நான் அடுத்தமுறை போகவேண்டிய தூரம் மிக அதிகம்!)
செய்வினை தன்வினை, தன்னைச் சுட்டேவிட்டது.
பையனுக்கு கணிதத்தின் பல அடிப்படைகளில் ததிங்கிணத்தோம். எப்படித்தான் இவன் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பான் என்பதே எனக்கு மூச்சுமுட்டவைத்த ஆச்சரியம்.
அந்தப் பையனுடன் பேச ஆரம்பித்த இரண்டு நிமிடங்களிலேயே… என்னால் குத்துமதிப்பாக அனுமானிக்கப் பட்ட 2-3 மணி நேரம் என்பது, குறைந்த பட்சம் 2000-3000 மணிநேரமாவது ஆகும் எனத் தெரிந்துவிட்டது.
ஏன்?
மாணவன் இந்த ப்ளடி ஹையர்ஸெகண்டரி ‘படித்தது’ சென்னை சார் அரசுப் பள்ளி ஒன்றில். ஆங்கிலமீடியம் (ஒரு கேடு). படுபீதியளிக்கும் அளவுக்கு 90%+ மதிப்பெண்கள். ஆச்சரியம், ஆச்சரியம். கணிதத்தில் 95%! (எனச் சொன்னான்!)
இருந்தாலும்.
அடிப்படை திரிகோணமிதி எழவுகளில் அளவுக்கதிகமான கற்பனை. stonepalm.
ஏதோ ஒரு தொகையீட்டு நுண்கணித (Integral Calculus!) விஷயத்தைப் பற்றி ஆங்கிலத்தில் அவனுக்கு விவரணை கொடுத்துக் கொண்டிருக்கும் போது கீழ்கண்ட கேள்வி எழும்பியது….
(Cosine(A) + Sine(A))2 = ? (அவனிடம் நான் எதிர்பார்த்தது 1+Sine2A போல…)
ஆனால், அவன் (Cosine(A))2 = Cosine2 x A2 எனச் சொல்ல ஆரம்பித்தானே பார்க்கலாம்!
எனக்கு விக்கித்துப் போய்விட்டது!
சில வினாடித் திகைப்புக்குப் பின், எப்படி தம்பி அப்படிச் சொல்றீங்க எனக் கேட்டதற்கு, Cosine, A ரெண்டையும் பெருக்கினால் வருவது CosineA தானே சார் என்றான்! “product of Cosine & A தானே CosineA?”
விதம்விதமாக, கலர்கலராக அவனுக்கு ஃபங்க்ஷன் என்றால் என்ன, அதற்குக் கொடுக்கப்படும் ஆர்க்யுமெண்ட்ஸ் என்பவை யாவை? அந்த பேராமீட்டர்களை அந்த ஃபங்க்ஷனுக்குக் கொடுத்தால் அவை என்ன செய்யப்படும், அந்த ஃபங்க்ஷன் என்ன கொடுக்கும் என்றெல்லாம்…
கொடுத்த பல எடுத்துக்காட்டுகளில் நான் பொறுமையாக விளக்க முயன்ற இந்த எழவும் ஒன்று: ப்ரெட் டோஸ்டர் என்பது ஃபங்க்ஷன் போல, அதில் நாம் போடும் ப்ரெட் ஸ்லைஸ் ஒரு பேராமீட்டர். அந்த டோஸ்டர், அந்த ப்ரெட்டை எடுத்துக் கொண்டு மொறுமொறுவென வறுக்கப்பட்ட ப்ரெட்டை அளிப்பதில்லையா? நிறைய டோஸ்ட் செய்யப்பட்ட ப்ரெட் ஸ்லைஸ்கள் வேண்டுமென்றால், ப்ரெட்டைத்தான்அதிகமாக வாங்க வேண்டி வருமே தவிர… அத்தனை டோஸ்டர்கள் தேவையல்ல அல்லவா? அதைப்போலத்தான் இந்த கொசைனையும் அணுகவேண்டும்… கொசைன் ஒரு ஃபங்க்ஷன்… அந்த ஏ என்பது ஒரு கோணம்/ஆங்கிள்… இந்த கோணத்தை இன்னொரு பளப்பளா டோஸ்டரில் இட்டால், அது ஜாமையும் வெண்ணையையும் தடவித் தரக்கூடும்… ஒருமாதிரி சைன் ஃபங்க்ஷன் போல…
… … அவன் மரமண்டையில் எதுவும் ஏறவில்லை. என் மரமண்டைக்கும் அவன் மூளையில் ஏற்றும் படிக்கு விளக்கத் தெரியவில்லை! ஸப்பாஷ், ஸர்யான போட்டீ!
இருந்தாலும். வேதாள விக்கிரமனாகிய நான் என் முயற்சியைக் கைவிடவில்லை….
சரி. Cosine60 என்பதற்கு உன் வழியை உபயோகித்து எது என்பதைப் பார்க்கலாமா?
“(Cosine60)2 = Cosine2602 = Cosine23600 = …. … இதை ஸிம்ப்ளிஃபை செய்யணுமா?”
வேண்டாம் – ஆனால் உன் கேல்குலேட்டரில் Cosine60ஐ சரிபார்.
பார்த்தான். “சார் இது 0.5ன்னு சொல்லுது.”
அப்படியா சரி. Cosine3600 க்கு என்ன சொல்லுது?
“ஐயோ! இது ஒண்ணுன்னு காமிக்குது!”
அடப் பாவமே என்றேன்!
“ஆனால் Cosine2 வோட வேல்யு என்னன்னு தெரியலையே! இந்த டப்பா பழய கால்குலேட்டர கடாசிட்டு புது கேல்குலேட்டர் வாங்க டாட்டியைக் கேக்கறேன்!
!!!!
அப்ப தம்பி… இதை எப்படி அணுகுவீங்க? CosineA/SineA =? இத Co எனச் சுருக்க முடியுமா?
இதற்கு அவன் “ஆமாம்” என்றானே பார்க்கலாம்!!
நான் இத்துடன் விட்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்தேன்! எனெனில் அவன், பிற எல்லா திராவிடலைகளைப் போலவே (செங்கோட்டையன் உட்பட) விஜய்குஜய் ரசிகன் என அவனுடைய மாமா என்னிடம் சொல்லியிருந்தார்! (இந்த ப்ளடி விஜய்வியாதி ஒரு பெருந்தொற்றுப் பெருங்கொடுமைதான்!)
தம்பீ, உங்களுக்கு இந்த எடுத்துக்காட்டு பிடிக்கலாம் என, பசும்பலகையில் விஜய்(ரசிகன்)=முட்டாக்கூ என எழுதினேன்.
விஜய்ன்றது ஒரு ஃபங்க்ஷன், ரசிகன் என்பது அதற்கு ஒரு ஆர்க்யுமெண்ட் – இந்த ஃபங்க்ஷன் இந்த ஆர்க்யுமெண்டை எடுத்துக்கொண்டு வெளியே காரித் துப்பும் விஷயம் ஒரு முட்டாக்கூ…
அவனுக்கு (என் விருப்பக் குறிக்கோள் படியே!) கொஞ்சம் சோகமாகி விட்டது. “நான் விஜய் ரசிகன்” என்றான்… “அவரு ஒரு பெரிய்ய தலைவர்” என இழுத்தான்…
எனக்கும் கொஞ்சம் சங்கடமாகிவிட்டதால், சரி, விஜய்குஜய்க்கு பதிலா சூர்யா என வெச்சுக்கலாமா? அதில் ஒரு பிரச்சினையுமில்லையே!
அவன் மகிழ்ச்சியுடன், “சரி சார்!”
சூர்யா(ரசிகன்) = முட்டாக்கூ
இதை ரெண்டு பக்கத்திலும் 2ஆல பெருக்கினா…
2Xசூர்யா(ரசிகன்) = 2Xமுட்டாக்கூ
இதன் இடதுபக்கத்த உன்னோட வழில உள்ளுக்குள்ள பெருக்கினா…
2Xசூர்யா(2Xரசிகன்) – அதாவது ஒரு சூர்யா போன்ற ஒத்தை பொறுக்கியையே தமிழகம் தாங்க முடியாது… ஆனாக்க… … உன் மெதட்ல ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒரு சூர்யான்னு ஆய்ட்டா… அத விட.. இடதுபக்கம் நாலு முட்டாக்கூ, வலதுபக்கம் ரெண்டு முட்டாக்கூ… இது சரியாகவா இருக்கு?
அவன் சிரித்துவிட்டான். நானும் சிரித்தேன்.
“ஆனா, எங்க விஜய் மாஸ் சார்!”
அவனுக்கு ஏதாவது புரிந்ததா எனத் தெரியவில்லை. ஆனால், சுபம்.
அடுத்த முதலையமைச்சர் சோசப்பு விசய் வாள்க!
-0-0-0-0-
என் மனைவியிடம் இதைப் பற்றிச் சுயபச்சாதாபத்துடன் புலம்பிவிட்டு இக்காட்டுரையை எழுத ஆரம்பித்தேன்…
தேவையா?
“ஐயய்யோ! திரும்ப ஒன்னோட ப்ளாக்க எழுத ஆரம்பிச்சுட்டியா! கடவுளே!!”
(எப்படி இவன்களெல்லாம் 95% மதிப்பெண்கள், அதுவும் கணிதத்தில் வாங்கியிருப்பார்கள்?
#DravidianModel தமிழகத்தின் கல்வி(!)த்தர(!!) கிடுகிடு அதலபாதாளஅவலத்துக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்!!)
இப்படியெல்லாம் அநியாயத்துக்குக் கரித்துக் கொட்டுகிறார்கள், பாவிகள், திராவிடமாடலின் எதிரிகள்! :-(
…எங்கள் உசுடாலிரின் (ஐயோ! இசுடாலிர் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்! Of course, shit by any other name is still shit, yeah – as the great Shakespeare said, something to that effect; especially in the context of #DravidianModel) ஓங்கும் புகழை மறைக்க வசைபாட, என்னவெல்லாம் சதிகளைச் செய்கிறார்கள், இந்த ப்ளடி சங்கி அயோக்கியர்கள்!
* திரு: பொதுவாக திராவிடர்களைக் குறிப்பிடும்போது மட்டும்/மட்டம், இது ‘திருடன்‘ எனும் சொல்லின் சுருக்கமாகக் கருதப்படும் எனும் உண்மை, நீங்கள் அறியாதது அல்ல. அதிராவிடத் தமிழர்களை பொதுப்பட்ட மரியாதையுடன் குறிப்பிட திரு (எனும் வடமொழிச் சொல் ஸ்ரீ-யின் தமிழ்த் தழுவல்/அபேஸ்) என்பது உபயோகப் படுத்தப்படுவதையும் நீங்கள் அறியாததல்ல.
(துணுக்குச் செய்தி: முகஸ்டாலினும் அந்த ஆளின் மகன் உதையும் 2010ல் பாவப்பட்ட பிராம்மணர்/தமிழர் ஒருவரை உருட்டிமிரட்டி அடாவடி செய்த சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலை 6000 சதுர அடி வீட்டுமனை அபகரிப்பையும் பின்னர் அதன் ‘சந்தைவிலைக்கு அதிகமாகச் செய்யப்பட்ட சமரசத்தையும்’ அறியாதோர் யாவர், சொல்லுங்கள்?)
…என்னவோ, சொல்வதைச் சொல்லிவிட்டேன் – மற்றபடி திரு என்பது ஸ்டாலினுக்கு எவ்வாறு பொருத்தப்படலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், சரியா?
வடைக்கிருத்தல்
July 13, 2025
வடக்கிருத்தல் எனும் தற்கொலை முயற்சிக் கட்டுக்கதைகளைப் பற்றி, நாம் நம்முடைய ‘சங்ககால’ பெருமைப் பீற்றல்களின் மூலம் ஏகத்துக்கும் அறிவோம். Read the rest of this entry »
ஒரு அன்பர், கீழ்கண்டவாறு இதற்கு முந்தைய பதிவில் (பீம்ராவ் ராம்ஜி ஆம்பேட்கர்: “…ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியது… தமிழர்களின் கடமை… இல்லையேல் அவர்கள் இந்தியர்களாக இருப்பதற்குத் தகுதியற்றவர்கள்… அவர்கள் இந்தியர்களே அல்லர்!” March 16, 2025) கேட்டிருந்தார்:
Raalraa Says: March 18, 2025 at 09:43
அம்பேத்கர் மற்றும் அப்போதைய பல தலைவர்கள் இந்திய அரசியலை இந்து முஸ்லிம் பிரச்சினை என்னும் கண்ணோட்டத்திலும் தலித் உயர்சாதி என்னும் கண்ணோட்டத்திலும் தான் பார்த்தார்கள். மற்ற விசயங்கள் அவர்களுக்கு தெரியவில்லை. ஈவேரா இந்தி பள்ளிக்கூடம் தொடங்கியவர். தனது கடைசி காலத்தில் கூட இந்தி எதிர்ப்பாளர்களை காலிகள் என விமர்சித்தார். அவர் குறித்து ஏன் குறிப்பிடவில்லை.
மேற்கண்ட பின்னூட்டத்துக்கு என் ஒருமாதிரியான பதில்:
வெ. ராமசாமி Says: March 20, 2025 at 20:21
ஐயன்மீர்! கருத்துகளுக்கு நன்றி. ஈவெ ராமசாமி, தன் இறுதிக் காலங்களில் ஹிந்திஎதிர்ப்பை எதிர்த்தார் என்பது சரிதான்.
- மேற்கண்ட காட்டுரை ஆம்பேட்கரின் ‘ஹிந்தி வெறி’ பற்றியது. ஆகவே ஈவெராவைப் பற்றிக் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.
- ஈவெரா ஒரு மகத்தான அரைகுறை, வாய்க்கு வந்தபடி அனைவரையும் ஏசிக் கொண்டிருந்தவர், தம் நிலைபாடுகளை வசதிவாய்ப்பு ஆதாயங்களுக்கேற்ப மாற்றிக் கொண்டே இருந்தவர், அறிவியல்-வரலாறுகளின் அடித்தளங்களைக்கூட அறியாதவர் என்பது ஐயமில்லை. வரலாற்றின் குப்பைமேட்டுக்குள் கடாசப்படவேண்டியவர். ஆகவேதான் அவரைப் பற்றி மேற்கண்டபதிவில் குறிப்பிடக் கூட இல்லை.
- மானுடப் பரிணாம வளர்ச்சி, மக்கட்திரள்கள் ஒருங்கிணைக்கப்படுவது, படி நிலை வரிசைகள் சமூகங்களில் அமைவதும் வளர்வதும் எப்படி என்பவற்றைப் பற்றிய அடிப்படை அறிவில்லாமல் பினாத்திக் கொண்டு விஷத்தைப் பரப்பியவர் அவர் – ஹரிஜன, பெண், பிராம்மண எதிர்ப்பு என்பதற்கு அப்பாற்பட்டு அவ்வாசாமியிடம் வேறுஒன்றும் இருந்திருக்கவில்லை. இதற்கு மேற்பட்டும், அவர் ‘சமூக நீதி’ என்பதையே படுகேவலமான கேலிக்கூத்தாக்கியவர். தமிழையும் அற்பத்தனமாக ஈனப் படுத்தியவர்.
- இந்த ஆசாமி தமிழகப் பகுதிக்கு ஏற்பட்ட ஒரு துரதிருஷ்டம், சாபக்கேடு. ஈவெரா ஒரு கட்ட,மைக்கப் பட்ட அரசியல் பிம்பம்.
- பெரும்பாலும் – தமிழர்களானவர்களும் உணர்ச்சிகளின் பிரவாகத்தில் நீந்துபவர்களே தவிர, ஹீரோக்களின் மைக்ரோகுஞ்சாமணிகளைச் சப்புவதில் ஆர்வமுள்ளவர்களே தவிர – ஆழமான, அறிவியல் பூர்வமான முன்னேற்றச் சிந்தனைகளில் ஈடுபடுபவர்கள் அல்லர். அவர்களுக்கு அதற்கான தொடர்வரலாற்றுப் பின்புலமும் இல்லை.
- ஆகவே, உணர்ச்சிபூர்வ-ஈனமானத் தமிழ்/திராவிட வெறியர்களும், ஈவெராமசாமி எனும் அறிவிலியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். மிகப் பொருத்தமான ஜோடி நம்பர்1கள்.
அவ்ளொதான்.
ஆம். சர்வ நிச்சயமாக. பூசி மெழுகல் செய்து வழுக்கிக்கொண்டு ஒடி ஒளியாமல், திராவிடத் தகிடுதத்தங்களில் ஈடுபடாமல் எழுதியிருக்கிறார். Read the rest of this entry »
சர்வ நிச்சயமாக, தெள்ளத் தெளிவாக – இது நியாயம் தான்! Read the rest of this entry »
The problems of Hooch (illicit liquor) & IMFL related deaths & disabilities are ENTIRELY blamable on the scumbag #DravidianModel. Read the rest of this entry »
நண்பர் ஸ்ரீதர் திருச்செந்துறை அவர்கள் அண்மையில் தமிழில் வந்துள்ள pop-history (இதை டமால்டுமீல் வரலாறு எனப் பெயர்க்கலாமா?) புத்தகங்கள் சிலவற்றைப் படித்துள்ளார் என்பது தெரிகிறது. பொன்னியின்செல்வன் பேரிலும் கொஞ்சம் வருத்தம் இருப்பதாகவும்…
அதன் விளைவான ஆதங்கம்: வரலாறு மிக முக்கியம் அமைச்சரே அவசியம் இதனைப் படிக்கவும்.
அவருக்கு என்னாலான, எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவில் ஆதூரம்/ஆசுவாசம் தர முடியக்கூடிய விஷயம் இது ஒன்றுதான்,
அதாவது இது ‘ஒத்திசைவு க்யாரண்டி’ – நான் எக்காலத்திலும் டமால்டுமீல் தமிழக உளறாறு என எத்தையாவது தடிமன் வெண்முரசு எழுதி அவர் தலையில் ஐந்து படிகளைக் கட்டமாட்டேன்.
இதைப் படிக்கும் உங்களுக்கும் கவலைவேண்டேல் எனும் க்யாரண்டிதான்.
-0-0-0-0-
ஆனால்.
என் இளந்தலைவர் உதை இசுடாலிர் – அமைச்சராகவே மாட்டேன் எனச் சொல்லி, அமைச்சரும் ஆகி, தான் திருடிய செங்கல் ஒன்றைத் தூக்கிக் கொண்டு சுற்றி வந்து மக்கள்பணியாற்றுவது ஒரு முன்னோட்டக் கவலையளிக்கிறது. மேலும், நான் திராவிடச் சூழலில் வளர்ந்தவன். கருந்தோல் தடிமன் தாஸ்தி. என் எருமைசரீரத்தின் மேல் மழை விழுந்தால் என்ன மண்ணாங்கட்டி விழுந்தாலென்ன என… …
ஆக.
அப்படியே ஒரு குட்டிவெண்முரசை, ஏன் சிறுடமாரங்களை (ம்ம்ம் – இந்தத் தலைப்புகள் பரிசீலனையில் இருக்கின்றன: “தட்டித் தூக்கிய களப்பிரர்கள்!” – “வீரபாண்டியக் கட்டபொம்மனைக் கட்டம் கட்டி வீழ்த்திய பார்ப்பனர்கள்!” – “ரிக்வேதம் எழுதப் பட்டதே செந்தமிழில்” – “ஆரிய ஹரப்பா தந்தைவழி நாகரிகமும் திராவிட ஹரம்மா தாய்வழிச் சமூகமும்” – சிறார்களுக்காக எழுதப்படக் கூடிய எஸ்ராமகிருஷ்ணத்தனமான “இளங்கோ: சங்ககால கன்றுக்குட்டி” … …) நான் எழுதவேண்டிய துர்பாக்கிய நிலை உங்களுக்கு ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீதரனார் தான் ஜவாப்தாரி.
மன்னிக்கவும்.

















