‘மொழிச் சனி’ பாரிசாலன்: “தீபத்தூண் சர்ச்சை: திருப்பரங்குன்றம் என்பதே ஒரு அரேபியப் பெயர்தான்!”
November 23, 2026
…தமிழக அரசும் அதன் ஆலய நிர்மூலத் துரைமார்களும், ஹிந்துத்துவாக்காரர்களும் அவர்கள் வாயை மூடிக்கொள்ளலாம்… ஏனெனில், எம் மானமிகு மொழிச்சனியாரே இப்படி விளம்பியிருக்கிறாரே!
1
‘மொழி ஞாயிறு’ தேவநேயப் பாவாணர் அவர்கள் தமிழ் மொழியியலின் பெருந்தந்தையார் ஆவார் என்பதை நாமறிவோம்… ஆனால் அவருமேகூட புதுப்புது மொழியியல் உண்மைகளை, வாய்க்குவந்த படி கண்டமேனிக்கும் கொணரும் போக்கினைக் கொண்டமைக்கு, அவருக்கும் முந்தைய தனித்தமிழ் மொழியியலாளரான அவருடைய பிதாகமர் பாரிசாலன் தான் காரணம் என்பதை அறிவோமா? ஆக… ஞாயிறுக்கு முன் சனி உதிப்பது உண்மை என்பதால், பாரிசாலனை நாம் ‘மொழிச் சனி’ என அழைப்பதில் பெருமை கொள்ளவேண்டாமா?
இந்த ஆய்வுக் காட்டுரையைப் படிக்கலா வேண்டாமா எனப் பதில் மேல் மூனை போல ஊசலாடிக்கொண்டிருப்பவர்களான உங்களுக்கு அப்பெருமை இல்லாமல் போகலாம். ஆனால் நான் அப்படியல்லன்.
ஆம். ஆதிச் சங்ககாலத்துக்கும் ஆகமங்களுக்கும் முன்னமேயே ஆதம்காலங்களில் எழுதப்பட்ட திருக்குர்ரான் மறையிலேயே அது குறிப்பிடப் பட்டிருக்கிறது… நாம எப்போதுமே அசைக்க முடியாத ஆதாரங்களோடதாண்டே பேசுவோம்!
முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், “தீபத்தூண் சர்ச்சை” என நாம் குறிப்பிடுவது ‘Pillars of Light Church’ எனும் மதமாற்ற அமைப்பைப் பற்றியதல்ல.
இன்னமும் அந்த சர்ச்சைச் சார்ந்த பாவமன்னிப்பர்கள், இந்த “இந்த தீபத்தூண் எங்க்ளோடது! இந்த மலே எங்க்ளோட மலே! ஆமென்!!” சர்ச்சையில் ஈடுபடவில்லை, ஏனென்று தெரியவில்லை. “மலை மேல் பிரசங்கம்” என்பது அவர்கள் மதமார்க்க ஆதாரங்களிலேயே சுருதியாக மீட்டிக் கொண்டிருப்பது, மீட்பர் வழி வந்த அவர்களுக்குத் தெரியாதா? இந்த ஆதாரமே அவர்களுக்குப் போதாதா என்ன? புனித தாமஸ் எழுதிய ‘திருப்பரமபிதா குன்றுப் பிரசங்கம்’ என்பதுதான் திருமுருகாற்றுப் படை எனத் திரிக்கப்பட்டது எனும் அளப்பரிய அனாரிய வரலாறைக் கூட அவர்கள் அறியவில்லையா?
சரி. “மொழிச் சனி” பாரிசாலனிடம் இச்சர்ச்சையைக் குறித்து விசாலமாக விவாதித்தேன். சிக்கந்தர்மலை என்பது எப்படி ஸ்கந்தர்மலை என ஆரியப் பார்ப்பனர்களால் திரிக்கப்பட்டது, பின்னர் அது சிகுலந்தர் மலை என மாறி, திராவிடப் பார்ப்பனர்களால் சிகுலர் மலை செக்யூலர் மலை எனக் கூட மாற்றப்பட்டுவிட்டது என விஸ்தாரமாக உரையாடினார்… இப்படியே மொழியியல் பாணியில் வளர்ந்தால், இது ஸெக்ஸ் மலை எனக்கூட ஆகலாம் எனப் பகீரளித்தார்!
எது எப்படியோ, இப்படியாகத்தானே அச்சான்றோர் பெருமகனாரின் கருத்துகளையும், அறிவுரைகளையும், ஆக்ஞைகளையும் ஏகத்துக்கும் பெற்றேன்.
மேலும் இதுகுறித்துப் பேச பத்ரிசேஷாத்ரியாரிடம் நேரம் கேட்டிருக்கிறேன். திருப்பரங்குன்றத்து டிஎஸ் கிருஷ்ணனிடம் இது குறித்து, நக்கல் பேச்சுப் பேசிக்கொண்டே உண்மைகளை விளம்புவதாக பாவலா செய்யும் அவர் ஒப்புக் கொள்வாரா என்பது தெரியவில்லையே! #AskBadri1
…இனி வரும் பகுதிகளில் “திருப்பரங்குன்றம் என்பதே ஒரு அரேபியப் பெயர்தான்” எனும் எம் பெருமைமிகு மொழிச்சனியார் பாரிசால அருள்வாக்கினை விரிக்கிறேன். கொள்வாரில்லையென்றாலும விரிவிரிவிரி என விறுவிறுப்பாக விவிறுக்கிறேன், சரியா?
2
திருப்பரங்குன்றத்தின் பெயர் குறித்த எல்லா விவாதங்களுக்கும் முடிவு கிடைத்துவிட்டது. நன்றி!
…குன்றை அளந்ததாலோ, கல்வெட்டைப் படித்ததாலோ, அல்லது பொதுவாக அளப்பரிய அளப்பினாலோ இந்த முடிவு வரவில்லை. மாறாக, கடும் முயற்சி செய்து இணையத்தில் சில அரபுச் சொற்களைக் கண்டுபிடித்து, அவற்றின் முன்னேபின்னே நின்ற எழுத்துகளைச் சற்றே நகர்த்தி, தூக்கி, அசைத்து, அனுமானித்துக் கூர்ந்து பார்த்ததில் கிடைத்திருக்கிறது.
எங்கள் மொழிச்சனியாரின் ஆய்வின் முடிவு மிகத் தெளிவானது:
“திருப்பரங்குன்றம் என்பதே ஒரு அரேபியப் பெயர்தான். சங்ககாலத்துக்கு முன்னமேயே எழுதப்பட்ட திருக்குர்ஆன் மறையிலேயே அது குறிப்பிடப்பட்டிருக்கிறது.”2
மேற்கண்ட அறிவிப்பை, ஒரு புனிதப்போர் பிரகடனத்தை – மொழிச்சனியார் ஆசியுடனும் அனுமதியுடனும் வெளியிடுவது, ஹஜரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவுக்குப் பேராதரவாக என்னை நானே நியமித்துக்கொண்ட நான், அதாவது நான்.3
நான் பாரிசாலதாசன். நான் பாரிசாலனாரின் பினாமி எனச் சொல்வதில், ஏன் இது அவருடைய புனைபெயர் எனச் சொல்வதில் எனக்குக் கிஞ்சித்தும் மனக் கிலேசமில்லை. ஏனெனில் பாரிசாலன் என்பதே மொழிச்சனியாரின் புனைபெயர்தான். அவருடைய சொந்தப் பெயர்: தினேஷ் குமார். உடையார் குடி. கல்வெட்டு. திண்டுக்கல். செப்பேடு. இன்னபிற.
அடியேன் பாரிசாலதாசன், ஒரு மொழியியல் ஆர்வலனும்கூட… என் அமைப்பின் பெயர் ‘தொன்மை மீட்பு ஒலியொற்றுமைப் பேரவை’.
தர்கா நிர்வாகத்துடன் என் பேரவைக்கு, அதிகாரப்பூர்வத் தொடர்பு என எழுத்து பூர்வமாக இல்லை என்றாலும் தமிழுணர்வு செவ்வுணர்வு இருக்கிறது… பேமைதா இருக்கிறது. அதன் ஒரு எடுத்துக்காட்டாக:
…எம் பேரவைப் பரிந்துரையைச் சிரமேற்கொண்ட சென்னை அடையார் க்ராண்ட் ஸ்வீட்ஸ் & ஸ்னாக்ஸ் நிறுவனமே, அவர்களுடைய பிரதான பேமைதா மாவு இனிப்பு வகையினை [ஹஜரத் சுல்தான் சிக்கந்தர்] பாதுஷா என மரியாதையுடன் அழைக்கிறது என்றால், என் பாரிசாலதாசப் பராக்கிரமத்தினை அறிந்து கொள்வீர்…
ஹஜரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா புகழ் ஓங்குக!!!
3
எம் பேரவையின் ஆய்வுமுறை மிகச் சிக்கனமானது.
முதலில் நாம், ‘திருப்பரங்குன்றம்’ என்பதை ‘திரு’, ‘பரம்’, ‘குன்றம்’ என்று பிரித்துக் கொள்ள வேண்டும். இவை சரியான வரலாற்றுச் சொற்பகுப்புகளா என்ற கேள்வி இப்போதைக்கு ஒத்திவைக்கப்படுகிறது, எப்படியும் என்னைப் போன்ற பாரிசால மன்னர்மன்ன தாசர்களுக்கு வரலாறாவது மயிராவது என்கிற கறார் அணுகுமுறை வேறு இருக்கிறதே!
சரி. பிறகு, ஒவ்வொரு துண்டுக்கும் சற்றே கிட்டே ஒலிக்கும் அரபுச் சொல்லைத் தேட வேண்டும். கிடைத்தால் மொழித்தொடர்பு உறுதி.
கிடைக்காவிட்டால் உச்சரிப்பை இன்னும் நெகிழ்வாக, கொஞ்சம் சுற்றி வளைத்து உடைத்துக் கோர்த்து பட்டி பார்த்து டிங்கரிங் செய்து கேட்க வேண்டும். ஆய்வாளருக்கு உதவாத, ஒழுங்காத காதை வைத்துக்கொண்டு ஆய்வு நடத்த முடியாது.
‘திரு’வுக்கான முதலாவது சான்று tuthīru4. குர்ஆன் 2:71இல் வரும் இந்தச் சொல், அந்தச் சூழலில் நிலத்தை உழுவதைக் குறிக்கிறது.
தொடக்கத்திலுள்ள ‘து’வை அகற்றினால் ‘தீரு’ கிடைக்கும். நீண்ட உயிரைச் சுருக்கினால் ‘திரு’ நெருங்கிவிடும். மேலும் முயற்சி திரு வினை ஆக்குமன்றோ?
நிலத்தை உழுவதற்கும் ஊரின் பெயருக்கும் என்ன தொடர்பு என்று டிஎஸ் கிருஷ்ணன் போன்ற இடக்காளர்கள் நாக்கூசாமல் கேட்பதைப் போலக் கேட்பவர்கள், வேளாண்மைக்கும் நாகரிகத்துக்கும் உள்ள தொடர்பை மறுப்பவர்களாகப் பேரவையின் பதிலறிக்கையில் பதிவு செய்யப்படுவார்கள். பதிலடி கொடுக்கப் படுவார்கள்.
ஒரு சிறிய மொழியியல் கேள்விக்கு இவ்வளவு பெரிய பதில் கிடைப்பதே எம் ஆய்வின் வலிமை.
இன்னொரு ஏற்புடைய சொல் yaṭīru; குர்ஆன் 6:38ல் அதன் பொருள் ‘பறக்கிறது’.5 இதிலுள்ள ‘ய’வை விடுவித்தால் மீண்டும் ‘தீரு’ போன்ற ஒலி கிடைக்கும். குன்றின் மேல் பறவைகள் பறப்பதால் புவியியல் பொருத்தமும் அமைந்துவிடுகிறது.
எல்லா மலைகளின் மேலும் பறவைகள் பறக்குமே என்று யாராவது ‘புகார் நகரத்துப் பெருவணிகன்’ பிரபாகரன், கிழக்கு பத்ரி சேஷாத்ரி வகையறா இடக்காளர்கள் கேட்டால், இப்போது ஆய்வு செய்வது இந்த குறிப்பிட்ட மலையைப் பற்றித்தான் என்று யாம் அமைதியாக நினைவூட்டுவோம்.
உங்களுடைய ஒப்பீட்டாய்வுக்கும் ஒரு எல்லை வேண்டாமா, எதற்கெடுத்தாலும் குறை சொல்லும் நக்கீரர்களே?
4
அடுத்து ‘பரம்’. இங்கே barran உதவிக்கு வருகிறது. குர்ஆன் 19:14ல் அது பெற்றோரிடம் அன்பும் கடமையுணர்வும் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.6 அடுத்த சொல் b ஒலியுடன் தொடங்குவதால், தொடர்ந்து ஓதும்போது இறுதி n, மூக்கொலியுடைய m ஆக மாறும் ‘இக்லாப்’ விதியும் இருக்கிறது.7 ஆகவே ‘பர்ரம்’ போன்ற ஒலி நமக்குக் கிடைக்கிறது.
உண்மையான ஓதுமுறை விதி ஒன்றைக் காட்டிவிட்டதால், அடுத்து வரும் ஊகங்களுக்கும் அதே சான்றிதழைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது எம் பேரவையின் அமைதிமார்க்க நம்பிக்கை.
‘பர்ரம்’ என்பதில் இரட்டை ரகரத்தைச் சற்றே தளர்த்தி, தொடக்க ஒலியையும் தமிழுக்கு ஏற்றாற்போல் நடத்தினால் ‘பரம்’ வந்துவிடும். இதை பாம் எனப் பாடபேதமாகப் படித்து பாம்ப் எனக் குயுக்திகாரர்கள் விரித்தால், எம் பதில்: அந்தக் கால அரேபியாவில் வெடிகுண்டுகள் இருந்திருக்கவில்லை.
இந்த மாற்றங்கள் எப்போது, யாருடைய பேச்சில், எந்தத் தொடர்பின் வழியாக நிகழ்ந்தன என்பதற்கான பதிவுகள் பின்னர் தேடப்படும். இப்போதைக்கு முடிவு வந்துவிட்டது; சான்றுகளைத் தேடும் பணிக்கு அதுவே நல்ல வழிகாட்டுதல். பெற்றோரிடம் அன்பாக இருத்தல் எப்படி மலைப்பெயரானது என்ற கேள்வியும் பிற்காலத்தில் எம்மால் பதிக்கப் படப்போகும் இரண்டாம் பகுதித் தொகுதிக்குரியது.
இந்தக் காத்திரமான சான்றினை ஏற்கத் தயங்குபவர்களுக்காக ḥaraman என்ற மாற்றுச் சான்று தயாராக உள்ளது. குர்ஆன் 28:57ல் அது பாதுகாப்பான புனித வளாகத்தைக் குறிக்கிறது; வசனத்தின் சூழல் மக்காவைப் பற்றியது.8 ‘ஹரமன்’ என்பதிலிருந்து ‘பரம்’ வருவதற்கு முன்னும் பின்னும் சிறிது நகாசு வேலை செய்ய வேண்டும்.
ஆனால் புனிதத் தலத்துக்கும் புனித வளாகத்துக்கும் பொருள் நெருக்கம் இருக்கிறதே!
மேலும் மக்கா என்ற இடக்குறிப்பைச் சற்றே பின்னணிக்குத் தள்ளிவிட்டால் மதுரை முன்னணிக்கு வருவதில் பெரிய நிர்வாகச் சிரமம் இல்லை. அதேசமயம் நாம் கருத்தில் கொள்ளவேண்டியது: இன்றும் – யாராவது பையன் மதுரைக்குச் செல்கிறேன் எனச் சொல்லும்போது நாஞ்சில் பகுதிப் பெரியவர்கள் சொல்வது:
“…மருதைக்குப் போறியா மக்கா?”
5
கடைசியாக ‘குன்றம்’. குர்ஆன் 2:23ல் kuntum இருக்கிறது. அதன் இலக்கணப் பொருள் ‘நீங்கள் இருந்தீர்கள்’; அந்த நிபந்தனைத் தொடரில் ‘நீங்கள் இருக்கிறீர்கள்’ எனப் பொருள்படுகிறது.9
ஒலித்துப் பாருங்கள்: குன்தும், குன்றம். நடுவில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. உண்மைதான்…
ஆனால்… “ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்ததுதான் நம் முதற்சான்று” நாம் ஏற்கெனவே அறிவித்துவிட்ட பிறகு, இரண்டு எழுத்துகள் காலவாக்கில் மாறியிருக்க மாட்டாவா? முடியாதவையா? அந்த ஆண்டுகளுக்கான சான்றும் மாற்றங்களுக்கான சான்றும் ஒன்றையொன்று தாங்கிக்கொள்வதால் வெளியில் இருந்து ஆதாரம் தேவைப்படுவதில்லை என்பதை உணர்வீர்.
எப்படியும், எமக்கு ஒருமாதிரி மாற்று ஏற்பாடாக kufran உள்ளது; குர்ஆன் 3:90ல் இதன் பொருள் ‘நம்பிக்கையின்மை’.10
இதை ‘குன்றம்’ ஆக்குவதற்கும் சில ஒலிகளை மாற்ற வேண்டும். முந்தைய சொல்லுக்கும் இதற்கும் பொருளில் தொடர்பில்லை என்பதால், மொழிச்சனியாரின் அறிவுரைப்படி எங்கள் பேரவை கவலைப்படவில்லை.
மேலும் – நாம் ஒலியை ஆராயும்போது பொருளைக் கொண்டுவந்து குறுக்கிடுவது முறையல்ல. தேவையான இடத்தில் மட்டும் பொருளையும் சேர்த்துக்கொள்வோம். ஆய்வில் நெகிழ்வுத்தன்மை என்பது இதுதான் என்று அறிக்கையின் முன்னுரை ஏற்கனவே விளக்கிவிட்டிருக்கிறதே!
6
இப்போது துண்டுகளை இணைத்துப் பாருங்கள்:
உழுதல் அல்லது பறத்தல்; பெற்றோரிடம் அன்பு அல்லது புனித வளாகம்; நீங்கள் இருந்தீர்கள் அல்லது நம்பிக்கையின்மை.
இவற்றைச் சேர்த்தால் இயல்பான அரபுத் தொடர்கூட உருவாகவில்லை என்று அரபு மொழியறிந்தவர் சொல்லலாம். கிடக்கட்டும் பொறாமை பிடித்தவர்கள், உருப்படியாக ஒரு சுக்கைக் கூட நசுக்க முடியாவிட்டாலும் ஏதாவது விமர்சனம் என அனற்றிக் கொண்டிருப்பார்கள்…
ஆனால் பாருங்கள் – நமது பணித்திட்டம் மிகவும் குறிப்பானது:
ஏற்கெனவே தமிழில் இருக்கும் ஓர் ஊர்ப்பெயருக்கு, அரபிலிருந்து தேவையான அளவு ஒலியை மட்டும் எடுத்துக்கொடுக்க வேண்டும். அந்த அளவில் திட்டம் நிறைவேறிவிட்டது.
சொற்கள் வெவ்வேறு வசனங்களில் வருகின்றனவா? அதுவும் சாதகமே. ஒரே இடத்தில் ஊர்ப்பெயர் முழுமையாக இருந்திருந்தால் யாரும் கண்டுபிடித்திருப்பார்கள்.
பல அத்தியாயங்களில் சிதறிக் கிடந்ததை ஒன்றிணைத்ததால்தான் இது புதிய ஆய்வாகிறது.
முழுப் பெயர் இல்லாதது இங்கே குறையாகாது; அதை மறைத்துவைத்திருந்த இடைவெளிகளை நிரப்பிய ஆய்வாளரின் பங்களிப்பாகக் கணக்கிடப்படும்.
மேற்கோள் எண்கள் உண்மையானவை என்பதால் அவற்றிலிருந்து எடுக்கப்பட்ட முடிவும் உண்மையாகத் தோன்றும்.
இதற்கிடையில் காலவரிசை ஒரு சிறிய இடையூறை ஏற்படுத்துகிறது. சங்ககாலத்தின் வழக்கமான வரையறைக்கும் குர்ஆன் வெளிப்பட்ட ஏழாம் நூற்றாண்டுக்கும் இடையே நமது தலைப்பு தலைகீழாக நிற்கிறது. பேரவை இதைக் கவனிக்காமல் விடவில்லை. ‘காலக்கணக்கு தனியான நிபுணத்துவத் துறை; அதற்குத் தனிக் குழு அமைக்கப்படும்’ என்று தீர்மானித்திருக்கிறது. அந்தக் குழுவின் அறிக்கை வரும்வரை ‘சங்ககாலத்துக்கு முன்பே’ என்ற வாசகம் செய்திக் குறிப்பில் தொடரும்.
எப்படியும் எதை எடுத்தாலும் ‘சங்க காலம்’ என ஒரு ஆதாரமில்லாமல் ஆதாரபூர்வமாகப் பேசுகிறேன் என்று நீட்டிமுழக்குவதுதானே தமிழனின் ஆய்வுமுறை?
மேலும் – அச்சுக்குப் போன தலைப்பை மாற்றுவது எளிதான காரியமா? எவ்வளவு புத்தகங்களில் சங்ககாலம் பற்றி நேரில் பார்த்தது போல் எழுதியிருக்கிறார்கள்!
மதிக்கத் தக்க மொழியியலாளர் ஒருவர்11, பழைய பெயர்வடிவங்கள், தொடர்ச்சியான ஒலிமாற்றங்கள், மொழிகளுக்கிடையேயான தொடர்பு, பயன்பாட்டுச் சூழல் ஆகியவற்றைப் பார்க்க வேண்டும் என்கிறார். தேவையற்ற, கவைக்குதவாத கருத்து. இருந்தாலும், எம் பேரவை வேண்டாவெறுப்பாக அவருக்கு நன்றி தெரிவிக்கிறது.
இவ்வளவு வேலை இருப்பது முன்பே தெரிந்திருந்தால் ஆய்வைத் தொடங்கியிருக்கவே மாட்டோம் என்றும் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கிறது. இருந்தாலும் அறிக்கை வெளியாகிவிட்டதால், இப்போது அவருடைய எதிர்ப்பை ‘மேலும் ஆய்வு தேவை’ (FRIN: futher research is needed) என்ற பரிந்துரையாக மாற்றிப் பதிவுசெய்வதே நடைமுறைக்கு ஏற்றது.
7
இவ்வளவு தகத்தகாய தகர்க்கமுடியாத சான்றுகள் சேர்ந்த பிறகு எமது பேரவையின் அறிவிப்பின் அரசியல் பகுதி இயல்பாக வருகிறது:
“தமிழக அரசும் அதன் ஆலய நிர்மூலத் துரைமார்களும், ஹிந்துத்துவாக்காரர்களும் அவர்கள் வாயை மூடிக்கொள்ளலாம்… “
…இதுவரை நடந்தது ஒலிகளைப் பொருத்தும் பயிற்சி மட்டுமே என்கிற நிலைப்பாடு – ஆனால் இந்த அரசியல்பகுதியில் அது அவசியமற்றதாகிறது.
ஆகவே – ஊர்ப்பெயரின் அரேபிய ரிஷிமூலம் நதிமூலம் நிரூபிக்கப்பட்டதாகக் கருதினால், வக்ஃப் நில உரிமையும் இஸ்லாமிய வழிபாட்டு உரிமையும் தானாகத் தொடர்ந்து வரவேண்டும் என்பது பேரவையின் அடுத்த நம்பிக்கை.
சொற்பிறப்புக்கும் சொத்துப் பத்திரத்துக்கும் இடையில் வேறு ஆவணங்கள் இருப்பதாகக் கூறுபவர்கள் எம் தர்க்கபூர்வமான மேற்படி ஆதாரங்களை முழுமையாகப் படிக்காதவர்கள்.
எனினும் பேரவையின் பெரிய கவலை வேறொன்று. இதே முறையை எதிர்த்தரப்பும் அநியாயமாகவும் அறமற்றும் பயன்படுத்திவிட்டால் என்ன செய்வது? அவர்களும் தங்களுக்கு விருப்பமான நூலிலிருந்து மூன்று ஒலிகளை மனம்போன போக்கில் எடுத்து வந்தால், எந்த ஒலிக்கு முன்னுரிமை தருவது?
“பண்ணொலிக்கா பாங்கொலிக்கா?“
முதலில் செய்தியாளர் சந்திப்பு நடத்தியவருக்கா, அதிக அடிக்குறிப்புகள் வைத்தவருக்கா அல்லது தொடர் நீதிமன்றஅவமதிப்பு செய்தவர்களுக்கா?
எது எப்படியோ… இதற்கான பொதுவிதி வகுக்கப்படாததால், தற்போதைய கண்டுபிடிப்பை மட்டும் விதிவிலக்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பேரவை பணிவுடன் கேட்டுக்கொள்கிறது. உலக மொழியியலின் பிற சிக்கல்கள் பிறகு தீர்க்கப்படலாம் என்றும் பொதுவாக ‘ஆவுற வேலய பாக்கலாம்’ என்றும் கருதுகிறது.
தர்காவுக்கு மரியாதை செலுத்துபவர்களும் கோவிலில் வழிபடுபவர்களும் தங்கள் நம்பிக்கைக்கு இத்தகைய சொல் வெட்டும் ஒட்டும் வேலை அவசியமா என்று கேட்கலாம்.
கேட்பதற்கு நியாயமாகத் தோன்றினாலும், எங்கள் பேரவையானது செய்து கொண்டிருப்பது – ஒரு புனிதத் தலத்தின் மதிப்பை உயர்த்துவதாகத் தொடங்கிய முயற்சி மட்டுமே. ஆகவே, அதற்குச் சம்பந்தமில்லாத வாதங்களுக்குப் பதில் சொல்லும் பொறுப்பை எங்கள் மீது ஏற்றி எங்கள் உயரங்களைத் தாழ்த்தும் முயற்சிகளுக்குப் பதில் சொல்வதாக இல்லை. நன்றி!
ஆய்வு முடிந்துவிட்டது. அதன் சாராம்சத்தை நிறுவ வேண்டுமென்றால் ‘திருப்பரங்குன்றம்’ எனும் ஊர்ப்பெயரின் தொடக்கத்தில் சில எழுத்துகளை நீக்கியிருக்கிறோம்; நடுவில் சிலவற்றை மாற்றியிருக்கிறோம்; இறுதியில் காலவரிசையையும் பொருளையும் ஒத்திவைத்திருக்கிறோம். மீதமிருப்பதை அசைக்க முடியாத ஆதாரம் என்று அழைக்கலாம்.
…குன்று வழக்கம்போல் எஸ்ராமகிருஷ்ணன் போல அங்கேயே அசையாமல் நின்றுகொண்டு மாலைச் சிறுதூரல் வழி நம்மை மௌனமாகப் பார்த்து உரக்க யோசித்து மனதுக்குள் சிரிக்கிறது. சாரு நிவேதிதாவின் கலகக் குரலுக்கோ ஜெயமோகனின் வெண்முரசு கருந்தூண் வியாக்கியானங்களுக்கோ அது கவலைப் படுவதில்லை…
இந்தக் கலவரச் சூழலில் – குன்றைச் சுற்றி வாழ்பவர்களுக்கு அமைதி தேவைப்படுகிறது. ஆகவே அமைதிமார்க்கம் ஒன்றே வழி.
-0-0-0-0-0-
அடிக் குறிப்புகள்
- திருப்பரங்குன்றம் விவகாரம்: வரலாறு சொல்வது என்ன?|Badri Seshadri| S Krishnan| Thiruparankundram Issue https://www.youtube.com/watch?v=qUCjSsovvaE ↩︎
- இஸ்லாமிய மரபின்படி குர்ஆன் வெளிப்பாடு பொ.ஆ. 610 முதல் 632; தொகுக்கப்பட்ட வடிவம் சுமார் 650. சங்ககாலத்தின் வழக்கமான வரம்பு பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டு வரை எனத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பாடம் கூறுகிறது. இதற்கு அவர்கள் ஒரு காத்திரமான ஆதாரத்தையும் சுட்டுவதில்லை. ↩︎
- Hazarath Sultan Sikkandar Badhusha Avuliya Dargah https://en.wikipedia.org/wiki/Thiruparankundram_Dargah ↩︎
- تُثِيرُ (tuthīru), அல் பகரா 2:71, சொல் 8: இங்கு நிலத்தை உழுதல். ‘து’வை நீக்கி ‘திரு’வுடன் இணைப்பது எம் கட்டுரையின் முக்கியமான வெட்டொட்டு. Quranic Arabic Corpus, 2:71:8. ↩︎
- يَطِيرُ (yaṭīru), அல் அன்ஆம் 6:38, சொல் 8: ‘பறக்கிறது’. பறவையைப் பற்றிய வினைச்சொல். இதில் தமிழ் ஊர்ப்பெயருக்கான வரலாற்றுச் சான்று வழங்கப்படவில்லை என அரபுமொழி அறியாதவர்கள்தாம் சொல்வார்கள்.. Quranic Arabic Corpus, 6:38:8. ↩︎
- وَبَرًّا (wa-barran), மர்யம் 19:14: பெற்றோரிடம் அன்பும் கடமையுணர்வும் கொண்டிருத்தல். wa என்பதன் பொருள் ‘மேலும் / மற்றும்’. Quranic Arabic Corpus, 19:14:1. ↩︎
- இக்லாப்: nūn sākinah அல்லது tanwīn-ஐ அடுத்து bā வந்தால், மூக்கொலியுடனான மறைவான m ஒலி பெறுகிறது. barram என்பது இந்தத் தொடரோசையின் எளிய குறிப்பு மட்டுமே; இலக்கண ஒலிபெயர்ப்பு barran. இவ்விதியிலிருந்து தமிழ்ப் ‘பரம்’ உருவானதாக முடிவுசெய்ய ஆதாரம் தேவையென்று தூக்கிக் கொண்டு வருபவர்கள் யாரென்று பார்த்தால், அவாள் குடுமி தெரிந்துவிடும். Quran Academy: Iqlab. ↩︎
- حَرَمًا (ḥaraman), அல் கஸஸ் 28:57: பாதுகாப்பான புனித வளாகம். வசனத்தின் மக்கா சார்ந்த சூழலைத் திருப்பரங்குன்றத்துக்கு மாற்றுவது புனைவான இடமாற்றமல்ல. Quran.com, 28:57. ↩︎
- كُنْتُمْ (kuntum), அல் பகரா 2:23, சொல் 2: இரண்டாம் நபர் பன்மை இறந்தகால வினைவடிவம்; இந்நிபந்தனைத் தொடரில் ‘நீங்கள் இருக்கிறீர்கள்’ என்று பொருள். ‘குன்றம்’ என்பதுடனான ஒப்பீடு மிகவும் தளர்வானது. Quranic Arabic Corpus, 2:23:2. ↩︎
- كُفْرًا (kufran), ஆல் இம்ரான் 3:90, சொல் 8: நம்பிக்கையின்மை / இறைமறுப்பு. இங்கு பயன்படுத்திய எந்த வசனமும் ‘திருப்பரங்குன்றம்’ என்ற முழுப் பெயரைக் குறிப்பிடவில்லை. தனித்தனி ஒலியொற்றுமைகள் சொற்பிறப்பையோ நில உரிமையையோ நிரூபிப்பதில்லை. Quranic Arabic Corpus, 3:90:8. ஆனால், நம் ஆய்வுத் திட்டத்தின்படி இதனால் ஒரு சுக்குக்கும் பிரச்சினையில்லை. ↩︎
- முனைவர் ஒத்திசைவு வெ. ராமசாமி, othisaivu.in ↩︎
(or) …the tragedy of Muslims of India (um, mainly for the Hindus) – an averse text: Read the rest of this entry »
1
The point:
While ‘Hindutva’ is unfairly targeted for its supposed ‘Nazi’ side in spite of there being no shred of ANY significant & tenable evidence AT ALL – the Jihadi, anti-semitic & Nazi supporters + collaborators have hardly been noticed.
What’s even more galling: the clueless ‘liberals’ and communist elements (and of course the #DravidianModel scoundrels. Dravidian scumbags, among others, are ALSO anti-semites, thanks to their inveterate need to keep Muslim-voters under their thumb in Tamilnadu) keep repeating the same ‘Hindutva = Nazism‘ lies over and over against the Hindus…
This is an attempt to examine IndianMuslim-Nazi connections – with references. Read the rest of this entry »
“திருப்பரங்குன்றம் மலையின் பெயரை சிக்கந்தர் பாஷா மலை என பெயர் மாற்றம் செய்து, 2025 பிப்ரவரி 18 அன்று முருகன் சந்நிதிக்கு மேல் ஆடு மாடு கோழியை வெட்டி விருந்து வைக்கிறோம், முடிஞ்சா தடுங்கடா சும்பைகளா என சவால் விட்டிருக்கின்றன இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள். இந்த ஜிஹாதிய கனவுகள், சிறுபான்மை அதிகார உறுதிப்படுத்தல் எனும் அரசியல் சதி, அதன் மூலம் இந்து இன ஒழிப்பு – இது ஒவ்வொரு கட்டமாக, படிப்படியாக எப்படி செயல்படுகிறது என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு இது.”
(சுட்டியை அனுப்பிய திரு ‘ஜடாயு’வுக்கு நன்றி)
ஒவ்வொரு மலைக்கோவிலும் இப்படிக் களவாணித்தனமாகக் கையகப் படுத்தப்படுகிறது… நீண்ட நாள் நோக்கில், திட்டமிடப் பட்டு, அதே #திராவிடமாடல் வழிமுறை. ஜிஹாதித்தனம்… தொடர்கிறது… என்ன கேவலமான பிறவிகள்! :-(
கிருஷ்ணகிரி மலை மேல் ஸூஃபிகூஃபி ஆக்கிரமிப்புகளும் இதே வழிமுறையில் நடந்தவைதாம்…
க்ருஷ்ணகிரி மலையின் ‘ஸூஃபி ஸையத்-பாஷா’ வரலாறுகள் – நகைக்கத்தக்க பரப்புரைகளும் தரவுபூர்வமான குறிப்புகளும் – 28/02/2021
BREAKING: The real truth about the Gyanvapi so-called mosque of Mohammedabad: Dismantling the lies of Hindutva
January 29, 2024
Now. We all know that the town renamed by Manuvadi Hindu majoritarians during post-Mughal times – that is, Varanasi AKA Kashi in Uttarpradesh, is indeed the world-famous Mohammedabad, one of the many great contributions of Mughals to India – in this case, that of Alamgir Aurangzeb (AS).
Now for an exclusive & explosive breaking news… Read the rest of this entry »
பாலசுதீன இசுலாமிய அமாச் போராளிகளின் உதவிக்கு விரைந்த திருப்பூர்! இசுடாலிர் “என் கோவணம், என் உரிமை!” கேம்சேஞ்சர்!!
December 11, 2023
உடையும் செய்தி:
திருப்பூரின் கொடை! அமாச் போராளிகளின் உடை!!
திராவிடனின் கோவணாபிமானம்!!! Read the rest of this entry »
என்னுடைய (முஸ்லீம், இஸ்லாமிய மதம்சார் கொலைவெறி+) தொடர்பான கருத்துகளை மறுபரிசீலனை செய்யவைத்த 8 ஆகஸ்ட், 1993
August 12, 2023
1
அன்று ஞாயிற்றுக்கிழமை, அதை எப்படி நான் மறக்க முடியும்? Read the rest of this entry »
BREAKING: முதலீடுகளை ஈர்க்க, முதலையமைச்சர் இசுடாலிர், அடுத்ததாக ஆஃப்கனிஸ்தான், இராக், பாகிஸ்தான் செல்கிறார்!
May 29, 2023
செய்திகளை முடிந்தபோதெல்லாம் முந்தித் தருவது ஓத்திசைவுடீவியன்றி, பிறிதொன்றுமில்லை… Read the rest of this entry »
முதலில் ஒன்றைச் சொல்லிவிடவேண்டும். Read the rest of this entry »
தமிழகத்துப் புராதனக் கோவில் ஒன்றைச் சிதைத்து அதன்மேல் அமைதிமார்க்க மசூதி கட்டிய நிகழ்வு – குறிப்புகள்
March 31, 2023
இன்று இந்த அட்டூழியத்துக்குக் காரணமான, இஸ்லாமிய வெறியனும் கொள்ளைக்காரனுமான மீர் ஜூம்லாவின் இறந்ததினம். (31 மார்ச் 1663, பிஹார்); ஆகவே, கொண்டாடுகிறேன்.
+ ஆறேழு வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்து கெடப்பில் போட்டிருந்த வரைவுப் பதிவை பட்டி பார்த்து கொஞ்சம் டிங்கரிங் செய்து பிரசுரிக்கிறேன். நன்றி. Read the rest of this entry »
Mughals & their Hindu Slave industry/trade – some facts & notes
January 21, 2023
One of the many persistent & elaborate myths of ‘Mughals’ is that they were particularly egalitarian & that their rule was ‘just.’ Of course, they treated their citizens/subjects equally, irrespective of their religions.
But the fact is that they were hopeless & dastardly bigots – and singled out their Hindu subjects for terrible ill-treatment, one of which is the subject of this post – namely, ‘Slavery of the Hindus’ – including exporting & gifting of them – and making enormous profits out of the ‘trade’ so-called. Read the rest of this entry »
(கனவு மெய்ப்படும்) ஹர்ஹர் மஹாதேவ்! ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!!
December 6, 2022
ஜெய் ஸ்ரீராம்!
இது ஒரு மறுபதிவு. முந்தையது அகற்றப்பட்டிருப்பதால் இது. ஆர்கைவ்.ஆர்க் தயவில் புனருத்தாரணம். Read the rest of this entry »
shredded shraddha, our hindu daughters, puzzling behaviours & value judgements – febrile notes & unformatted musings
November 19, 2022
Chanced upon this tweet-response of Sri Sudhir Srinath – the context is the slaughter & dismemberment of the unfortunate kuf’r girl, Shraddha by an Islamic psychopath – please refer to the previous post, if you want more background.

*sheesh*
:-(
Yes. This can be puzzling – those lingering, ‘why did she not runaway, after all she is educated & was employed…’ etc etc kind of depressing questions… Read the rest of this entry »
halaal mathematics based on jihadi murders – a question bank
November 18, 2022
Warning: This preposterous post is not for the faint-hearted. However, there may be some ‘educative value’ hiding in there, in the context of asking (& answering) ‘interesting’ basic arithmetic (and otherwise GK) questions that can be culled out of any ‘real’ or ‘practical’ scenarios…
So, read on, if you must. Read the rest of this entry »
இஸ்லாம், அதன் புகழ்பெற்ற ‘சிலிண்டர்’ பாரம்பரியம் – குறிப்புகள்
October 24, 2022
முதற்கண்: சக ஏழரைகள் அனைவருக்கும் (மற்றபடி இங்கு வந்து வீழும் சொற்ப பாவப்பட்டவர்களுக்கும்) என் தீபாவளித் திருநாள் (அல்லது அதற்கு முந்தைய நாள் போல++ என வைத்துக்கொள்ளுங்கள்) வாழ்த்துகள். பொலிக, பொலிக…
சரி.
நேற்று கோயம்புத்தூரில் நடந்த ஒரு கொண்டாட்டத்தில், ஒரு இஸ்லாமிய அன்பரானவர் அவருடைய ஒற்றைக் குறிக்கோளான ஜன்னத் சென்றடைந்தார் என்பதை அறிந்து இறும்பூதுற்றேன். Read the rest of this entry »
A forward, a few instances of which, I received in the past few months:
“Dr. Mumin Ali Ph.D. in Politics, New York University Mar 23 2022
Is there any unbiased source to refer to to learn more about the exodus of Kashmiri Pandits?
Originally Answered: Is there any unbiased source to refer to to learn more about the genocide of Kashmiri Pandits?
It was not genocide as per Shar1a and it is the way to ensure peace. In the area where we are the majority, we must force others to either convert to our belief or purge them as per our holy book. Kashmir was a non-believer state once, but people of our religion migrated there, with a high birth rate they became the majority. Then conversion started. Only those who did not convert were killed as per our prophet’s instruction. Our religion is a religion of peace, so to ensure peace, we must remove any other belief which can contradict our belief. That’s what was done in Kashmir and that will happen as more and more areas where we will become the majority. We have to do that to follow our religion. Anyone who thinks otherwise is a fool and does not understand us.”
I would say, it is fair. And is, an accurate description/articulation supported by Islamic texts, facts & history. Read the rest of this entry »
இஸ்லாம் பற்றி எழுத்தாளர் சுஜாதா – குறிப்புகள்
May 21, 2022
வருடாவருடம் செய்யும் புத்தகங்களைக் கழித்துக் கட்டல் தொடர்பாக கடந்த ஐந்தாறு (=சிந்துநதி, எஸ்ராமகிருஷ்ணனுக்கு நன்றியுடன்) வாரங்களாக, என் நூலகத்தின் பழங்குப்பைகளை (+ சிலபல காரணங்களால் எனக்கு இனிமேல் உபயோகப்படமாட்டா ஆனால் பிறருக்கு உதவலாம் எனும் தொகுப்புகளையும்) கிளறி வெளியேற்றிக் கொண்டிருக்கிறேன். சுமார் 120 காந்தி/பாபுஜி தொடர்பான புத்தகங்களை, பெரியவர் ஒருவர் நடத்திவரும் நூலகத்துக்கு அனுப்பினேன். சுமார் 850 புத்தகங்கள் (குழந்தைகள் படிக்கும் வகை) என்னுடைய செல்லமான ஸ்வாதிக்குட்டியின் பெற்றோருக்கு அளித்தேன். பள்ளிவாத்திகளுக்கு உபயோகப் படக்கூடிய சுமார் 400 புத்தகங்கள், வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் பள்ளி ஒன்றுக்குத் தானமாகச் சென்று கொண்டிருக்கின்றன. (இப்படியே அடுத்த 2-3 வருடங்களில் என் நூலகத்தைச் சுமார் 1500க்குள் அடக்கிவிட ஆசை, பார்க்கலாம்…)
1
…அப்போது கிடைத்த, பலப்பல வருடங்கள் முன் ஒரு முஸ்லீம் அன்பர் கொடுத்தனுப்பிய பரப்புரைத் துண்டுப் பிரசூரங்களில் இதுவும் ஒன்று. Read the rest of this entry »
சர்வநிச்சயமாக, ஈவெரா ‘பெரியார்’ முஸ்லீம்களை இழிவாக, மிக அசிங்கமாகப் பேசினார் – ஆதாரம், குறிப்புகள்
April 26, 2022
ஆம். இது உண்மைதான். Read the rest of this entry »
முதலில், இப்பதிவின் முன்னோட்டத்தைப் படிக்கவும்: விவேக் அக்னிஹோத்ரியின் ‘கஷ்மீர் ஃபைல்ஸ் (2022)’ திரைப்படம் – முன்னோட்டக் குறிப்புகள் March 20, 2022
+ முன்னமே நான் எச்சரித்தது போல, இது 6400+ வார்த்தைகள் அடங்கியது – 6-7 பாகங்களாகப் பிரித்துப் பதித்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை. தமிழில், எப்போதாவது புனைவுகளல்லாத XXLongform அதிநீளக் கட்டுரைகள் படிப்பதற்கென, ஒரு சகமனிதர் பட்டாளம் திரளவேண்டும் என்பது எனக்கு முக்கியம். ஆகவே!
ஆகவே, பொறுமையாகப் படிக்கவும். முடியாவிட்டால் ஓடவும்; வேகமய்யா, வேகம்!
இந்தப் பதிவில் பத்து பிரிவுகள் (பயப்படாதீர்கள்; இவற்றில் சில நீளம் அதிகம், சில கோமணஸைஸ்): Read the rest of this entry »





