எனக்கு மிகவும் பிடித்த காமிக் – கால்வின் அண்ட் ஹாப்ஸ் (Calvin and Hobbes). சமூக விமர்சனம் என்கிற போர்வையில் ஆனால், பல தளங்களில் சஞ்சரித்த, சஞ்சரிக்கும் மகத்தான இலக்கியம் – பில் வாட்டர்ஸன் (Bill Watterson) என்கிற கலைஞன் (டாக்டர் அல்ல) வாழ்க்கையைக் குழைத்து அழகாகச் செதுக்கி நமக்கு அளித்தது… (இதெல்லாம் நம் தமிழில் வெளிவர முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!)

டிஸெம்பர் 31, 1989-ல் வெளிவந்த ஞாயிற்றுக்கிழமை பெரிய கார்ட்டூன் இது. வசதிக்காக பிய்த்துப் பிய்த்துக் கொடுத்திருக்கிறேன். தமிழ்ப் படுத்தியும்   இருக்கிறேன்.

Oh well, yet another year…

candh1 Read the rest of this entry »

இதனை நான் ஒரு வருடத்துக்கு முன் செய்திருக்க வேண்டும்.

D V Karunn Says: 22/12/2012 at 16:50 e

we need the copy of Justice Sarkaria commn for print.Hoping you may fufill our wish.

’டி வி கருண்,’

என்னிடம் பிற்சேர்க்கைகளுடன் இருந்த முழு அறிக்கை இப்போது இல்லை. இருப்பினும் சில விவரங்கள். உங்களுக்கு உதவியாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

சர்க்காரியா கமிஷன் – 1976 இறுதி அறிக்கை – தலைப்பு

Read the rest of this entry »

கடந்த பத்து நாட்களாக நான் பணி புரியும் பள்ளிகளில்  கிறிஸ்த்மஸ்-புதுவருடப்பிறப்பு விடுமுறைக்கு முன்னால் முடிக்க வேண்டிய வேலைகள் ஏராளமாகக் குவிந்திருந்தன. ஒருவழியாக இன்று மாலை அவற்றை முடித்தேன். அலுப்போதி அலுப்பு.

ஆனால், திடீரென்று மாலையில், மனைவிக்கும் (=துணைவிக்கும்) எனக்கும் அழைப்பு.

ஆக, கலாபினி அவர்களின் ஒரு இரண்டு மணிநேர மெஹ்ஃபில் போகும் வாய்ப்புக் கிடைத்தது இன்று. எங்களையும் கலைஞர்களையும் சேர்த்து 20-30 பேர் கச்சேரியில் இருந்திருந்ததால் அதுவே அதிகம் சஞ்சய் தேஷ்பாண்டே அவர்களின் தப்லா. விரல்களாடும் நாட்டியம்.

Read the rest of this entry »

எப்பொழுதெல்லாம், நம் பாரம்பரியப் புல் வகைகளைப் பற்றி அவை அரிசி போன்ற பெருதானியங்களாக இருந்தாலும் சரி, சிறுதானியங்களானாலும் சரி, மற்றபடி தீவனப் புல், மூங்கில் வகைகளானாலும் சரி – எந்த ஒரு சந்தேகம் வந்தாலும் (அவை, நிறையவே வருபவைதான்!) அதை நிவர்த்தி செய்து கொள்ள, தற்காலத்தில் நான் அணுகுவது இந்த புத்தகத்தைத்தான்.

handbook_southindiangrasses Read the rest of this entry »

சில நாட்கள் முன்பு ஒரு நெடுநாள் நண்பனொருவன் வந்திருந்தான். சில பழைய விஷயங்கள் பற்றியும், என் பள்ளியில் நாங்கள் அமைத்துக் கொண்டிருக்கும் ஒரு புத்தம்புதிய கணினித் தொழில் நுட்ப மையம் சார்ந்து சில திட்டங்களைப் பற்றியும், எப்படி அதற்குத் தேவையான மூலதனம் கொணர்வது, நிர்வகிப்பது என்பதையும் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சு ஆர்ட்வீனொ  (arduino) எனும் அழகைப் பற்றி இயற்கையாகத் திரும்பியது – நான் அதனை வைத்து என் மாணவர்களுடன் உரையாட, பயிற்சி கொடுக்க முனைந்து கொண்டிருப்பதால், திட்டமிடுவதால்.

அவன் கேட்டான், ”எனக்கு சில நல்ல ரொபாடிக்ஸ் மேல் காதல் கொண்ட, மின்னணுவியலிலும், கணினியியலிலும் பயிற்சி பெற்ற இளைஞர்களைக் காண்பிக்க முடியுமா? சில திட்டங்கள் வைத்திருக்கிறேன் – பெங்களூரில்? சென்னையில்? புணேயில்? உனக்கு யாரையாவது தெரியுமா?”

நான் சொன்னேன், “நிச்சயம் தெரியும், ஆனால், எனக்கு இரண்டு வருடங்கள் கொடு, என்னால் பொருட்படுத்தத்தக்க அளவு உழைக்க முடிந்தால், எங்கள் கிராமத்துப் பக்கத்திலிருந்து வெறும் பத்தாவது மட்டுமே படித்த, ஆனால் ஞானமும், ஆர்வமும், குடிமை உணர்ச்சியும், விடாமுயற்சியும், சுறுசுறுப்பும்  மிக்க,  சில சுட்டிப்பையன்களைக் கொடுக்கிறேன், சுட்டிப் பெண்களையும் தான். இந்தப் பொடியன்பொடிச்சிகள், அந்த முட்டாள்-அப்பன்கள் செலவில் மெத்தப் படித்த அந்த அரைகுறை பி.ஈ, பி.டெக்  களை விட நல்ல பொறியாளர்களாக இருப்பார்கள். அதற்கு நான் உத்திரவாதம், சரியா?” Read the rest of this entry »