முகம் சுளிக்காதீர்கள்! தமிழகத்தின் மீதான மேற்கண்ட சாபம் மட்டும் மட்டமல்ல, அதைவிடப் படுமட்டரகமான ஒன்றும் இருக்கிறது. அதாவது:

உதய் விதைத்தவன், உதைபடுவான் கூட.

தலைப்புக்கு, கூறுகெட்ட சினிமாமோக தமிழக வாக்காளர்கள் காரணம்.பதிவின் இரண்டாம் பத்திக்கு ராஜமாதா துர்க்கையும் அவள்தம் மணாளனும் உருவாக்கிய அவர்களுடைய அரைகுறைத் தற்குறிப் புதல்வனும் காரணம்.

எது எப்படியோ! ஊழல் குட்டையில் ஊறும் மட்டைச் சனியன்களான திமுகவும் அஇஅதிமுகவும், ஒருமாதிரி ஏமாற்றத்தில் இருப்பது மனமகிழ்ச்சியை ஊட்டுவது; ஊக்கபோனஸ்ஸாக – நாறி அழுகும் அம்மட்டைகளின் வெட்டி நார்களான கம்யூனிஸ்ட்களும் விடுதலைச் சிற்தேக்களும் டெம்பரவரியாகவாவது ஒதுக்கப்பட்டது சந்தோஷமே.

1

விஜய்குஜய் பிகிலார், அப்டீபோடு…போடுபோடு எனக் குத்தாட்டம் போட்டு என் முன்னாள் மாணவர்களைக் கிறங்கவைத்து மூளைச்சலவை செய்து தமிழக முதலையமைச்சர் ஆனாலும், சிலபல விஷயங்களை அவருடைய விசிலடிச்சான்குஞ்சப்ப ரசிக வாக்காளர்கள் சாத்தியப் படுத்தியிருக்கிறார்கள், செய்திருக்கிறார்கள் – இவை ஒப்புக்கொள்ளப் படவேண்டிய ‘நல்ல’ வெளிப்பாடுகள்தாம்.

: திராவிடமாடல் அரசியல் என்பது உள்ளீடே அற்ற கூளம் + அதன் ஒற்றைப் பெரும் சாதனைவேதனையான சுமார் 60 ஆண்டுகால பள்ளிக்கல்வி உயர்கல்வி எழவு என்பதும் அசிங்கமான கவைக்குதவாத உணர்ச்சிகரமைதுனக் குப்பை எனச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளன.. 

. ஓட்டுக்குப் பணம் தேவையில்லை. (ஆனால் பிகில் கட்சியும் சிலபல இடங்களில் கொடுத்துத்தான் இருக்கிறது) – ஆனால்  சினிமாமோக வாக்காளப் பெருமாக்களுக்குக் கொஞ்சம் விசிலடிச்சான் இன்பலாகிரி கொடுத்தால் போதும். ஓட்டுச் சாவடிக்கு ஓடிப்போய் ஓட்டில் பிகில் சின்னத்தில் குத்திக் குத்திக் குத்தாட்டம் போட்டு விடுவார்கள்.

. இரண்டு பெருங்கொள்ளை திராவிடக் கட்சிக் கூவான்களுக்கும் மாற்று, ஹ்ம்ம்ம்… ஊம்ம்ம்… இன்னொரு இளந்திராவிடக் கட்சியே!

: தமிழகப் பெண்கள் – குடும்பத்தைக் கட்டிக் காப்பவர்கள், புருஷன் எப்படி திராவிடக்குடி குடித்தே செத்தாலும் – அதன் வளமான எதிர்காலத்துக்காகக் யோசித்துத் தியாகம் செய்யும் பாங்கினர் எனும் மாயை விலகியிருக்கிறது. வீட்டில் சோறு பொங்கக் காசு இருக்கிறதோ இல்லையோ, விஜய்குஜய் சூர்யா படமா… யானை விலை கொடுத்தாவது FDFS பார்க்கும் பாக்கியம் பெற வேண்டும் எனும் அவர்களுடைய நியாயமாக அபிலாஷைதான் தமிழகத்தை நிர்வகிக்கும் திறனாக விஜய்குஜய் மூலமாக முகிழ்த்திருக்கிறது.

. ‘தேர்தல் பாதை, திருடர் பாதை’ என்றும், ‘நான் ஒர்த்தன் வாக்குப் போட்டு என்ன பெரிய்ய மாற்றம் ஏற்பட்டுவிடும்’ பேசுபவர்களும், ‘எல்லாமே திருடனுங்க, அத்தொட்டு நோட்டாவுக்குத்தான் என் ஓட்டு’ எனவிருக்கும் அவநம்பிக்கை வாதிகளும் நிறைந்த பொதுவெளியில், பெரும் திரளாக இளைஞர் பட்டாளங்கள் வாக்களிப்பதும் நடந்திருக்கிறது. (பின் எதற்காக ஒரு ஜிகினாவாதிக்கு ஓட்டுப் போட்டார்கள் என்ற கேள்வி இருந்தாலும் – இம்மாதிரியே இளைஞர்கள்  தொடர்ந்து தேர்தல் பாதை ஜனநாயகத்துக்கு வருவது சரியே)

. ஜாதி பார்த்து மதம் பார்த்து தமிழகத்தில் ஓட்டுப் போடப்படவில்லை என்று சொல்ல வைத்தது – ஆனால் இதில் எவ்வளவு தூரம்/ஆழம் உண்மை என்பது தெரியவில்லை; இருந்தாலும் ஒரு 10% விசில்கார எம் எல் ஏக்கள் இப்படி இருந்தாலே பெரிய விஷயம்தான்…

எதிர்மறை விஷயங்கள் எனப் பலப்பல இருக்கின்றன, மாதிரிக்கு

‘: சினிமா கவர்ச்சிகர இஷ்டைலுக்கும் நிஜவாழ்க்கை + நிதர்சனஅரசியலுக்கும் போடப்படும் மொட்டைத்தலை+முழங்கால் முடிச்சு

‘. லோக்கல் வேட்பாளர் முக்கியமில்லை – எங்களுக்கு வெறும் ஜிகினாத்தலைவன் போதும்.

‘: கூட இருப்பவன்களெல்லாம், அதுவும் தவெக இரண்டாம்வரிசைத் தலைவன்களெல்லாம் ஓடுகாலிகள், அயோக்கியர்கள் – இவர்களை வைத்துக்கொண்டு எப்படி குட்டையைக் குழப்பாமல் இருக்கமுடியும்?

‘:…

இப்போதைக்கு இப்போதை போதும். அதாவது, ஜிகினா கொடுக்கும் இன்பலாகிரியே துணை.

2

இந்த பிகில் கட்சிக்கு ஐடியாலஜி என்பதுபோல ஒரு ஐடியாவுமே இல்லை என ற்றொம்ப அபாண்டமாகப் பேசுகிறார்கள். ஆனால், உண்மையில் அண்ணாயிசம் என்பது போல, பெரியாரிசம்/பெரியார்ஈயம் என்பது போல, திராவிடமாடல் எனும் மாயப்புகைமூட்டத்தைப் போல – இந்த டிவிகே பிகில் கட்சிக்கும் அப்படியாப்பட்ட ஒரு விசித்திர ஜந்து இருக்கிறது.

அதுதான் விஜயிசம். ப்ளடி ஹெல்.

விஜயிசம் = தமிழ்த் தோசையம் + திராவிட வேசியம் + உடும்பு லேகியம் + வலைத்தள மீமாம்ஸகம் + முதிர்ந்த-முதிராத-அறியாப்பிள்ளை விடலையிஸம்

அதாவது ஐம்பெறும் கோப்பியம் – அதாவது cope செய்தல் என ஒரு மாதிரியாகப் புரிந்துகொள்ளுங்கள்.

மேற்கண்ட அசமன்பாட்டிற்கு ஒருமாதிரி விளக்குமார் விளக்கம் கோனார் நோட்ஸ் வகையறா கொடுக்கவேண்டுமென்றால்:

தமிழ்த் தோசையம்: வெட்டித் தமிழ் வெறி உச்சாடன இட்டிலிக்கடையில் இழுத்துவார்க்கப்படும் ஓசை மிகுந்த தோசை செய்து போக்கற்ற வழிப்போக்கர்களுக்குப் பரிமாறுவது
+
திராவிட வேசியம்: கவைக்குதவாத சுயமைதுன திராவிடத் தனம் பேசி, அதற்கே உரித்தான வேசைத்தனத்தைச் செய்வது. (ஈவெரா சொன்னது நினைவிலிருக்கிறதா? )
+
உடும்பு லேகியம்: நீட் எதிர்ப்பு, இருமொழிக் கொள்கை, ஒன்றிய அரசு, சமூக நீதிக் கோமாளித்தனம், மதச் சார்பின்மை, இலவசமோயிலவசங்கள்++ போன்ற உடும்புத்தைல வியாபாரங்களில் முனைப்பு
+
வலைத்தள மீமாம்ஸகம்: ஜிகினாக்களும் புளகாங்கிதங்களும் அதிமனிதப் பீலாக்களும் மட்டுமே நிறைந்த ஆனால் எண்ணிலடங்காத மாஸ்-ஹிஸ்டீரியா மீம்ஸ், ரீல்ஸ் போட்டே  சலித்த சராசரி மூளைகளைச் சலவை செய்யும் பாங்கு
+
முதிர்ந்த-முதிராத-அறியாப்பிள்ளை விடலையிஸம்: ஆர்வக்கோளாற்றுச் சிறு பிள்ளைகளை வைத்து முதிர்ந்த மூடர்களையும், இளம் விடலை தன்னிச்சை இன்ஃப்ளூயன்ஸர்களை வழியொற்றும் பிற தறுதலை இளைஞர்கள் வசீகரம் செய்யப்பட்டும் – தமிழர்களுக்கே உரித்த, உதவாக்கரை உணர்ச்சிகரமைதுன  மந்தை உச்சாடன ‘தீயசக்தி X தூயசக்தி’ வகை மடத்தனத்தை அறுவடை செய்யும் பாங்கு.

3

…அவரைச் சுற்றிச் சுற்றி உள்வட்டமாக யார் இருக்கிறார்கள் என்பதை மேலோட்டமாகப் பார்த்தாலேகூடபெரும் விசனம் தான்; அதுவும் சொஸ்தம் செய்யப்பட முடியாததொன்று.

ஆதவ்அர்ஜுனார், ‘புஸ்ஸி’ ஆனந்தனார், செங்கோட்டையார்…

ஆதவ், அர்ஜுனா அல்லர், கழுதை கர்ஜனா கூட அல்ல – மாறாக, லாட்டரி துச்சாதனா என்பதுதான் அவர் பெயராக இருக்கவேண்டும்… LOTTERY is nothing by LOOTERY. எந்த ஒரு விஷயத்திலாவது கொடுஞ்சூதாட்டத்துக்கும் இந்த லாட்டரி எழவுக்கும் வித்தியாசமுண்டா, சொல்லுங்கள்… இவரும் இவர் புகுந்த வீட்டினரும் (லூட்டரி மார்ட்டின்) செய்யாத ஊழலோ அயோக்கியத்தனமோ உண்டா? ஆனால் – இந்த ஆள், கட்சிகட்சியாகக் கலர்கலராக மாறி றெக்கை விரித்தாலும், பின்னர் மேதகு ஜோஸஃப் விஜய்குஜயால் ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டபின் இவர் ஊழலை ஒழிக்கப் போகிறாராமே!)

இந்த ஆனந்தனாரும், கடுகுச்சேரிப் பாண்டிச்சேரியில் ஒரு குறு விறகுதொட்டி நடத்தி வந்தவர்; ரெண்டு தெரு வார்ட் கவுன்ஸிலர் வகை பாண்டி  ‘எம் எல் ஏ’ தொகுதி ஒன்றில், படுபீதியளிக்கும் பயங்கரப் போட்டி போட்டு வென்றும் தோற்றும் காலத்தை ஓட்டியவர்… ஆனால், ஒருசில ஆண்டுகளிலேயே நில/வீடு அபகரிப்பு அடாவடி எனத் தன் திராவிடத் தொழிலை விஸ்தீரணம் செய்து, உறவினர்களை வைத்து கட்சிக்குக் கட்சிதாவி, ஒருவழியாகக் கடைசியில் விஜய்குஜயுடன் ஐக்கியமாகி எல்லா வல்லமையும் பெற்று விளங்குகிறார்… தமிழக அரசியலும் கனஜோராக திராவிடமாடல் ரெண்டுங்கெட்டானாக மிக வெளங்கிடும். (ஜோஸஃப் விஜய்குஜயால் ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டபின் இவர் ஊழலை ஒழிக்கப் போகிறாராமே!)

இன்னொருவர் இந்த தமிழ்க்கொட்டை செங்கொட்டையார். இவரும் ஊழலில் கைதேர்ந்தவர்தாம், திராவிடப் பழம் தின்று கொட்டையும் போட்டவர்தாம். (இப்போது மாறிவிட்டிருக்கலாமோ என்ன எழவோ!) (ஜோஸஃப் விஜய்குஜயால் ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டபின் இவரும் ஊழலை ஒழிக்கப் போகிறாராமே!)

பேஷ்பேஷ்!

இதற்கு மேலிருக்கும் உள்-ஓளிவட்ட ஆசாமிகள் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அழுகி முடை நாற்றமெடுக்கும் ஒரு பானைச் சோற்றில், மேற்கண்ட மூன்று புழு நெளியும் பருக்கைகளானவை சரியான பதத்தைக் காண்பிப்பவைதாமே!

4

(ஆனாலும், இவர்களையும் மீறி, ஒருமாதிரி மிகக் கொஞ்சமான நல்லாட்சி எனத் தப்பித் தவறி நடந்தால் – உண்மையாலுமே எனக்குக் கடவுள் நம்பிக்கை வந்துவிடும்… தேவையா?)

வேலைகளுக்கு நடுவே கிடைத்த நேரத் துணுக்குகளில் செய்த வெட்டிவேலையின் பலன் இவை; எக்ஸ் தளத்தில் இவற்றைப் பகிர்ந்திருந்தேன்.

எது எப்படியோ…. கண்டு சுளிக்கவும். என்னை இகழவும். நன்றி.(தேவையா?)

(14 May 2026) In which the #DravidianModel chameleon dynast, Udhayanidhi Stalin defends his venomous Anti-Sanantan[am] uttering as one that got twisted by the media. Says he was referring to his film-partner Santhanam – and is “…only Anti Santhanam and not Anti Sanathanam.”

(12 May 2026) “Dear Vijay, we want to stay with you ALL the time & support you as obedient housewives, but also want our women’s rights & sacred marriage with Stalin intact so that we can continue to sleep with him!” — Thirumavalavan, Commies & Muslimleague

#DravidianModel modern marriages.

(10 May 2026) This may become another Greek Tragedy. With #DravidianModel MK Stalin craftily sending his Trojan Horses as in VCK Thirumaavalavan et al to ‘support’ TVK Vijay. The traded horses would perhaps ensure that Vijay would not be very punitive towards ‘Evil Power DMK’ – So, Stalin FTW!

(8 May 2026) BREAKING
Tamilnadu & WestBengal… literally!
In another plot twist, Stalin & Mamata parties merge into ‘Trinamool Dravida Congress’ & also merge ½their States in to 1 to form a new composite State with 2 territories: DravidaGaudastan!
Stake claim to ½Chiefministerships…

(8 May 2026) BREAKING LATEST SCOOP!
In a terrific & brilliant masterstroke, MK Stalin & Edappadi Palaniswamy CHECKMATE Joseph Vijay & Rahul Gandhi!
DMK & AIADMK offer external support to VCK Thirumavalavan & PMK Anbumani Ramadoss for 2.5 years each of CMship!
Dravidoid politics for the win!!

(8 May 2026) BREAKING NEWS! As a matter of lost resort, Edappadi Palaniswamy, the Supremo of AIADMK – takes a letter of support from the ‘Federation of Resort Owners Associations of TN & Pondy’ and stakes a legitimate & numbers-backed claim to form the next Tamilnadu Government!

(8 May 2026) BREAKING NEWS! Frustrated by the TN Governor’s systematic, cautious & sane procedure/approach about the formation of his government, TVK Supremo Joseph Vijay announces the direct release of ‘Tamilnadu Government’ on OTT platforms!

(7 May 2026) BREAKING! Earthquake in Tamilnadu!! Scoop!!!
In a master-move, MK Stalin not only preempts AIADMK, but also his own erstwhile allies VCK, INC, Communists from teaming up with TVK!
Merger of DMK with TVK announced!!
Interview with MK Stalin (in Tamil): அரசியல் சுனாமி! திராவிட பூகம்பம்!! திமுகவும் தவெகவும் கூட்டணி ஆட்சி அமைக்கின்றன!!!

(26 April 2026) A ‘North Indian’ friend, baffled by the HUGE amounts of corrupt money dished out to ‘voters’ by DMK, CPI(M), INC, AIADMK, VCK++, wondered about the sources.
ESTIMATES: MK Stalin & family ALONE made 120+ Cr/day (=2 Lakh+ Cr during CURRENT term; total DMK Ecosystem: 8 Lakh+ Cr)
1/2

Estimate details, informed computes, sources of ‘inflow’ of funds (in Tamil): (some details are even corroborated/reinforced by J Jeyaranjan, colleague of MK Stalin in the Tamilnadu State Development Policy Council as its Vice Chairman – in a book!)

திராவிடலீலாதரங்கிணி: இசுடாலிர் தலைமைக்கு மட்டும், குறைந்த பட்சம், நேரடியாக எவ்வளவு கொள்ளைப்பணம், வரக்கூடும்? #DMKFiles April 22, 2023

முன்னதாக, இளந்தளபதி ஸ்டாலின் பனையூர் சென்று தமிழகவெற்றிக்கழகத் தளபதி ஜோஸஃப் விஜய் அவர்களுக்கு மாலை அணிவித்துத் துண்டு போர்த்தி, காலடியில் வீழ்ந்து நல்லாசி பெற்றுக் கொண்டார்.

107 + 59 = 168!

அதாவது: 168 >> 117 !!

இதனை அடுத்து, ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின், “ஆக. பாஜக சங்கி ஆளுநர் அதிமுக கொத்தடிமைகளின் பேச்சைக்கேட்டு தளபதி விஜயை அரசமைக்க் அழைக்காமல் ஆரிய-வடவ சதி செய்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, என் தலைவர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியின் ஆணைக்கிணங்க, அண்ணாவின் ‘பதவி வேண்டுமென்றால் மாற்றான் தோட்டத்து வாகையையும் வணங்குவோம்’ கோட்பாட்டை ஒட்டி, அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவினை அளிப்பது மட்டுமல்லாமல், அவருடைய கூட்டணியில் இணைகிறோம்!”

கேள்வி: விஜய் உங்களைத் தீய சக்தி என்று அழுத்தம்திருத்தமாகப் பலமுறை குறிப்பிட்டுள்ளாரே!

பதில்: ஆக. உண்மையென்னவென்றால் ‘திமுக ஒரு தீயசக்தி’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் எங்கள் கட்சி டிஎம்கே D  M  K. – இதுகூடத் தெரியாதா உங்களுக்கு. டிஎம்கே திமுக இரண்டையும் போட்டு மாங்காய்புளித்ததோ தேங்காய்தளித்ததோவெனக் குழப்பிக் கொள்ளக்கூடாது.

கேள்வி: அப்போது அவர் தூயசக்தி என. தன் தவெகவைக் குறிப்பிட்டது பற்றி…

பதில்: ஆக. தீய என்பதற்கு தூய எனத் திராவிட அடுக்குமொழி உணர்ச்சிகர உச்சாடன நடைப் பாணியில் பேசியிருக்கிறார். உண்மைதானே? ஆனால் நீங்கள் ஏன் அதிமுக ஒரு ஈய சக்தி எனப் பேசுவதில்லை? எங்கள் டிஎம்கே பித்தளையைப் பார்த்து இளித்த ஈய ஈனப் பிறவிதானே எடப்பாடி?? ஆனால் நாம் இப்போது இணைந்திருப்பது தங்கத்திராவிடத் தமிழன், சிறுபான்மையினரின் காவலன், ஆகச் சிறந்த ஆளுமை மிக்க தகத்தகாய தளபதி விஜய்யோடுதானே!

கேள்வி: உங்களுடைய மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் என்னவாயின?

பதில்: ஆக. அவர்கள் அனைவரும் முதகில் குத்துபவர்கள், செய்நன்றி மறந்த ஈனப் பிறவிகள். பச்சோந்திகள்… சாக்கடைக் குப்பைகள்… காங்கிரஸ் போன்ற துரோகிகள். விடுதலைச்சிறுத்தைகள் போன்ற ஜாதிவெறிக் கட்சிகள். உண்டியல் குலுக்கி கம்மீனிஸ்ட்ஜால்ராக்கள். மதவெறிமிக்க முஸ்லீம் கட்சிகள்… எங்களை அம்போவென விட்டுவிட்டு, ஓடிப்போய் தவெகவுக்கு வெண்சாமரம் வீசப் பார்த்தவர்கள்… ஆனால் அவர்களுக்கு, எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போர்த்தந்திரம் பற்றித் தெரியாது. கேடுகெட்ட கூட்டாளிகளைவிட, பஜனை மடத் துரோகிகளைவிட விரோதியே மேல் என இனமானத்துடன் இனம் கண்டுகொண்ட நாங்கள், அவர்களின் சதித் திட்டத்தை அம்பலப்படுத்த, நாங்களே தளபதி விஜய்யின் முதன்மை ஆதரவாளர்களாக மாறிவிட்டோம்… ஸ்ட்ரேட்டஜியில் எங்களையும் மிஞ்சிய ஆட்கள் இருக்கிறார்களா என்ன? ஹ்ஹா!

கே: எதிர்காலத்தில் திமுக என்னவாகும்?

: ஆக. எங்கள் தலைவர் தளபதியின் அறிவுரைக்கிணங்க எங்கள் கட்சியை தவெகவுடன் இணைக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். இணைத்தால் என்னை ‘தவெக இளைஞர் அணி’ தலைவராக பதவியேற்றம் கொடுப்பதாகத் தளபதி வாக்குறுதி அளித்திருக்கிறார். ஊக்கபோனஸ்ஸாக, என் மகன் உதய்: தவெக விடலையணித் தலைவர்; என் பேரன் இன்பா: தவெக குழந்தைகளணித் தலைவர்.

கே: உங்கள் உடன்பிறவாத் தங்கை கனிமொழியின் எதிர்காலம்?

: ஆக அவருக்கு நிகழ்காலமே இல்லை. எல்லாமே இறந்தகாலம் தான். அவர் அமித்ஷாவின் வாலைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது எனக்குத் தெரியாதா?

கே: உங்களுக்கும் தவெகவுக்கும் கொள்கை, கோட்பாடு எப்படி ஒத்துப் போகும்?

: ஆக. இரண்டுமே திராவிடக் கட்சிகள்தாம். மதச்சார்பின்மைத் தத்துவம் தான் எங்களை ஒருங்கிணைக்கிறது. இரு கட்சிகளும் நீட் தேர்வை எதிர்ப்பவை. திரைப்படத் துறைக்கு உரிய உயரிய மதிப்பு கொடுப்பவை.

கே: இருந்தாலும்…

: எப்பாடு பட்டாவது, எந்த விலை கொடுத்தாவது பாரதீயஜனதா சங்கிமங்கிகளை நம் சங்கம்போற்றிய தமிழகத்தினுள் உள்ளே வரவிடாமல் தடுப்பது முக்கியம்.

கே: தளபதி பலமுறை உங்களைக் கிண்டலும் கேலியும் செய்திருக்கிறாரே!

: ஆக. அதில் எள்ளளவும் உண்மையில்லை. என்னை வெகுமரியாதையாக ‘ஸ்டாலின் சார்’ எனத்தான் அழைத்திருக்கிறார்…  ‘ஸ்டாலின் அங்கிள்’ எனவும் என்னை மிக அன்புடனும் மரியாதையுடனும்தான் அழைத்திருக்கிறார். செய்திகளைத் திரிக்காதீர்கள்! எங்களுக்குத் தெரியாதா? எங்கள் ஆட்சியின்போது எங்கள் ஆணைப்படி, பலமுறை தொழில்முறையில் செய்திகளைத் திரித்த, ரூ200/- ஃபார்மூலா படி எங்கள் பிச்சையில் வாழ்ந்த பதர்கள்தானே நீங்கள்!!

கே: தளபதி ஒற்றைக் குடும்ப ஆட்சி என விமர்சனம் வைத்திருக்கிறாரே!

: ஆக. என் ஒரே பதில் – எங்கள் தளபதி சொன்னவைகளைத் திரித்து மதவெறியர்களின் ஊதுகுழலாக, பிரிவினைவாதிகளின் பிரதிவாதியாக ஐந்தாம்படை வேலை செய்யாதீர்கள்!  எங்கள் தளபதி, தன் கட்சியையே ஒரு பெரும் குடும்பமாக நினைப்பவர்; கட்சித் தொண்டர்களைக் குடும்ப உறவினர்களாக நினைப்பவர். குடும்பமே கட்சி. கட்சியே குடும்பம். எங்கள் கட்சியும் அப்படியேதான், அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.

கே: உங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி… விஜய் பலமுறை இவை குறித்துப் பேசியிருக்கிறாரே!

: ஆக. தமிழகக் காவல்துறை எங்கள் ஆட்சிக் காலத்தில் எப்போதாவது எங்கள் மீது ஒரு குற்றப்பத்திரிகையாவது தாக்கல் செய்ததுண்டா? மதவெறியர்களின் பரப்புரைகளை நம்பவேண்டாம்…  எங்கள் ஆட்சி பரிசுத்தமான ஆட்சி, மதச்சார்பின்மை மிக்கது. மேலும், எங்களுக்கு முன்பே தவெகவில் ஐக்கியமான செங்கொட்டையன், ஆதவ்அர்ஜுனாக்களின் வழி எங்களை நடத்தி, ஆற்றுப் படுத்தும் பராக்கிரமம் மிக்கவர்தாம் இளவல் தளபதி விஜய்.

கே: தளபதி அவர்கள் பலமுறை, உங்கள்  திமுக பணம்கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்க முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளாரே!

: தளபதியின் கருத்துகள்தான் எங்கள் கருத்துகளும் கூட. அவர் திமுக பற்றிச் சொன்னார் – ஆனால் நாங்கள் டிஎம்கே. மேலும் நாங்கள் கொடுத்ததாகச் சொல்லியிருக்கும் பணம் உண்மையில் எங்கள் பணமே அல்ல என்பதற்கு மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது. ஆக. மக்கள் பணத்தைப் பத்திரமாகச் சேமித்து அதே மக்களிடமே உரிய நேரத்தில் திரும்ப அளிப்பதை எப்படிக் குற்றம் சொல்லமுடியும். வாய்புளித்ததோ பேய்கிலித்ததோ எனத் தற்குறித்தனமாகக் குதர்க்கக் கேள்விகளைக் கேட்கக்கூடாது…  நீங்கள் பாசிச சக்திகளின் ஏஜெண்டா?

கே: உங்களை நோக்கிக் கிண்டல்கணைகளே ஏவுவார்களே, அந்த மற்றும்-பலர், மதவெறி தலைக்கேறிய இந்துத்துவ சக்தியும் அதன் அடிமைகளும்… இவற்றை எப்படி எதிர்கொள்வீர்கள்?

: ஆக: அவர்களுக்கெல்லாம் எங்களுடைய ஒரே பதில், எங்கள் ஈவெரா பெரியாரே சொல்லியிருக்கிறார்… “பதவிக்காக, பொண்டாட்டியையும் கூட்டிக் கொடுப்பான் கழகக்காரன்’ (பக்கம் 21). இதுதான் எங்கள் முதன்மைத் தத்துவம். முழுக் கோட்பாடு. ஒரே அடிப்படை.

கே: கடைசியாக ஒரேயொரு கேள்வி சார்… உங்கள் கூட்டணியாட்சி எப்படி ஜெல்லாகும்?

: ஆக. தளபதியின் அறிவுரைப்படிதான் அனைத்தும் நடக்கும். ஒரு பிரச்சினையுமில்லை. நாங்கள் எல்லோருமே நடிகர்கள்தாம். திரைப்படச் சூழலில் இருந்தவர்கள், இருப்பவர்கள், இருக்கப் போகிறவர்கள். தவிர, எங்கள் கொள்கைத்தலைவர் பெரியார் சொன்னதை மறுபடியும் அசைபோடவும். எங்களுக்கு பெரியார் கொள்கைகளும் தத்துவங்களும் முக்கியம்…

கே: மிகக் கடைசியாக… தமிழக மக்களுக்கு உங்கள் செய்தியென்ன?

: ஆக. திராவிடம் வெல்லும். மதவாதச் சக்திகளை முறியடிப்போம். நம் அடுத்த இலக்கு, டெல்லிதான். தளபதி நாமம் வாழ்க. அவர் தொடர்ந்து வெற்றிவாகை சூடுக…

எங்கள் உயரிய இலக்குகளை அடைய என்ன தியாகங்களைச் செய்யவேண்டுமோ அவை அனைத்தையும் எங்கள் திராவிட உடன்பிறப்புகள் செய்வோம்… 

என் ஆருயிர் ஆசானும், ஸல்ஸா தென்னமெரிக்க ஃப்லமென்கொ கும்மாள குத்தாட்ட லத்தீனமெரிக்க உற்சாக டான்ஸ் வாத்யாருமான சாரு நிபேதிதாவுக்கு என் ஆத்மார்த்தமான நன்றி – அதாவது இந்த விருந்தினர் பதிவை, அதுவும் அட்டகாசமான கணிப்புகளுடன் கொடுத்தமைக்கு.

(முன்னர், இதே தேர்தல் தொடர்பாகத் தத்தம் கருத்துக் காட்டுரைகளை அளித்திருப்பவர்கள்  எழுத்தாள அறிவுஜீவிகள் ஜெயமோகனும், எஸ்ராமகிருஷ்ணனும் – தெம்பு இருந்தால் படிக்கவும், நன்றி!)

தேர்தல் ஸல்ஸா – அவநம்பிக்கையில் நம்பிக்கை

தேர்தல் முடிந்த  23 ஏப்ரல் இரவு நான் தூங்கவில்லை. டிவி ரிமோட்டை கையில் பிடித்தபடி சேனல்கள் மாற்றிக்கொண்டு மாறியவண்ணம் இருந்தேன். ஒவ்வொரு சேனலும் ஒரு சின்ன போர் களம். அங்கே எண்ணிக்கைகள் ஓடின — 123, 98, 45 — ஆனால் அவை எண்கள் அல்ல; அவை மனிதர்களின் நரம்புத் துடிப்புகள்.

ஒரு தேநீர் குடித்தேன். அது கசப்பாக இருந்தது. அந்தக் கசப்பு, இந்தத் தேர்தலின் உண்மையான சுவை என்று தோன்றியது.

நாம் அரசியலை இன்னும் ஒரு சீரியஸான விஷயமாக எடுத்துக் கொள்கிறோம். அது ஒரு தவறு. அரசியல் என்பது ஒரு பர்ஃபார்மன்ஸ். ஒரு பெரிய, கொஞ்சம் மோசமான, கொஞ்சம் காமெடியான பர்ஃபார்மன்ஸ். எல்லாரும் அதில் நடிகர்கள். சிலர் ஹீரோ. சிலர் வில்லன். சிலர் எக்ஸ்ட்ரா. சிலர் பெண்கள். மற்றும் பலர். ஆனால் இறுதியில், எல்லாரும் ஒரு மாதிரி வியர்க்கிறார்கள். வியர்க்கவைக்கிறார்கள்.

இந்தத் தேர்தல் ஒரு எக்ஸிஸ்டென்ஷியல் ஜோக். நீ வாக்களிக்கிறாய். நீ நம்புகிறாய். பிறகு முடிவுகள் வருகிறது. நீ சிரிக்கிறாய். அல்லது கோபப்படுகிறாய். ஆனால் அடுத்த நாள் காலை, நீ வேலைக்கு போகவேண்டும். அந்த இடத்தில் தான் இந்த அவல ஜோக் மிகப் பெரியதாகிறது.

ஒரு நண்பன் என்னிடம் கேட்டான்: “மச்சி, யாரு ஜெயிச்சாங்க?” நான் அவனை பார்த்தேன். சிரித்தேன். “யாரும் இல்லடா. எல்லாரும் ஜெயிச்சாங்க. அதனால தான் நாம தான் தோற்றோம் போல இருக்கு.”

அவன் சிரிக்கவில்லை.

இந்த நாட்டில், நம்முடைய பிரச்சினை அரசியல்வாதிகள் இல்லை. நம்முடைய பிரச்சினை நம்முடைய கற்பனை. நாம் இன்னும் ஒரு ‘ரட்சகர்’ வருவார் எனக் காத்திருக்கிறோம். ஒரு ஹீரோ வந்து எல்லாத்தையும் சரி பண்ணுவான் என்று நம்புகிறோம். அது சினிமா. இது வாழ்க்கை. வாழ்க்கையில் ஹீரோ வரமாட்டான். அதிகபட்சம், ஒரு காமெடி கேரக்டர் தான் வரும்.

சோஷியல் மீடியா இந்த முறை ஒரு சைக்கடெலிக் அனுபவம். எல்லாரும் ஒரே நேரத்தில் கத்தினார்கள். ஒரே நேரத்தில் அழுதார்கள். ஒரே நேரத்தில் மீம்ஸ் போட்டார்கள். ஒரே நேரத்தில் டென்ஷன் ஆனார்கள். அது ஒரு டிஜிட்டல் திருவிழா. ஆனால் அந்த திருவிழாவில் யாரும் உண்மையில் இருக்கவில்லை. எல்லாரும் அவதார்களாக இருந்தார்கள்.

நான் ஒரு பழைய தெருவில் நடந்தேன். அங்கே ஒரு சுவரில் இன்னும் ஒரு போஸ்டர் ஒட்டியிருந்தது. பாதி கிழிந்தது. அதில் ஒரு முகம். அந்த முகம் இப்போது முக்கியமில்லை. அந்தக் கிழிந்த காகிதம் தான் முக்கியம். கட்டுடைத்தால் அது நமக்கு ஒரு ரியாலிட்டி செக்.

இந்தத் தேர்தல் நமக்கு என்ன கற்றுக்கொடுத்தது? ஒன்றும் இல்லை. அதுதான் அதன் அழகு. நாம் மீண்டும் அதே தவறுகளை செய்வோம். மீண்டும் அதே நம்பிக்கைகளை வைத்துக் கொள்வோம். மீண்டும் அதே முறையில் ஏமாறுவோம். அது ஒரு சைக்கிள். ஒரு மிகவும் கவர்ச்சியான, மிகவும் சலிப்பான சைக்கிள். மித் ஆஃப் ஸிஸிபஸ். 

ஆனால், இதை எல்லாம் சொல்லிக்கொண்டே நான் இன்னொரு தேநீர் ஆர்டர் பண்ணுகிறேன். ஏன் தெரியுமா? இந்த கசப்பு எனக்கு பிடித்து விட்டது.

இறுதியில், ஜனநாயகம் என்பது ஒரு மாசோகிஸ்டிக் பிளஷர். அது நம்மை காயப்படுத்தும். ஆனால் நாம் அதை விட்டுவிடமாட்டோம். ஏனெனில் அந்த வலியில் ஒரு சின்ன சுகம் இருக்கிறது.

அதனால், அடுத்த தேர்தல் வரைக்கும், இந்த நகைச்சுவையை ரசிப்போம். சிரிப்போம். சண்டையிடுவோம். மீண்டும் வாக்களிப்போம்.

ஏனெனில், நம்மிடம் வேறு எந்த நல்ல கதையும் இல்லை.

என்னைப் போன்ற நல்ல கதைகளை எழுதுபவனுக்கும் கலைமாமணி விருதோ, ஸாஹித்ய அகடெமி விருதோ – அவற்றையே விடுங்கள், ஒரு நோபல் புக்கர் பரிசுகூட கொடுக்கமாட்டார்கள். அழகுணர்ச்சி அற்ற ஃபிலிஸ்டைன்ஸ். என்ன செய்வது.

நடிகர் விஜய் கட்சியின் மேல்தான் என்னுடைய தற்போதைய முழு நம்பிக்கை. ஆகவே விஜய் ரசிகர்கள் அனைவரும் , கீழ்கண்ட என் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பவும். அதை வைத்துத்தான், என் நெடுநாள் கனவான தைவான் போய் தையா தக்கா எனக் குதித்தாட வேண்டும்.

(நன்றி, ஜெமோ. முந்தைய பதிவு  பேரண்டப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர் எஸ்ராமகிருஷ்ணன் அருளிச் செய்தது: தேர்தல் களங்கள் ஓய்ந்தாலும், தேர்தல் கெளங்கள் ஓய்வதேயில்லை: எஸ் ராமகிருஷ்ணன் எனும் மகாமகோ தமிழ் அழுத்தாளரின் விருந்தினர் பதிவு April 25, 2026. அடுத்து, எனது இன்னொரு பேராசானான சாருநிவேதிதாவின் காட்டுரை வெளிவர இருக்கிறது.  நண்பர் பத்ரி சேஷாத்ரியையும் ஒரு கட்டுரை கேட்டிருக்கிறேன். ஆனால் அவர், தன் கிழக்குந்யூஸ் வழி விதண்டாவாத விடியோ சர்ச்சைப்பதிவுகளில் படுபிஸியாக இருப்பதாகச் சொல்கிறார் –  பாகிஸ்தானும் இரானும் எக்கேடு கெட்டால் நமக்கென்ன – இதில் செலவழிக்கும் நேரத்தில் அவர் ஒரு சிறு பகுதியை ஆக்கபூர்வமான நல்வழிகளில் செலவழித்தால் என்ன குறைந்து விடுவார்? ப்ளடி, நம் தமிழ் அறிவுஜீவிகளில் பலருடைய பிரச்சினை இதுதான் – அவர்கள் கருத்துகளை பெரிய அளவில் தமிழ் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கத் தோதான பரப்புரைத் தளம் அமைத்துக் கொடுத்தாலும், கொள்வாரில்லை. என்ன செய்ய. :-( )

தமிழகத் தேர்தல் ரணகளம் – கௌரவர் X கௌரவர் யுத்தம்

(ஜெயமோகன்)

இவ்வாழி சூழ் உலகமே குருக்ஷேத்திரம்தானென்றும் நடப்புகளனைத்தும் கௌரவ-பாண்டவ யுத்தங்களெனவும் நான் பத்து வருடங்களுக்கும் முன்பே பத்தாயிரம்கோடி வார்த்தைகளில் வெண்முரசாகக் கொட்டியது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால் அண்மையில் நடந்து முடிந்த தமிழகத் தேர்தல் களம், கௌரவ-கௌரவ சொத்துப் போர் மட்டுமே என்பதுதான் நிகழ்வரலாற்று நிதர்சன உண்மை.

கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தர்கள் உலாவிய தமிழக அறவெளியில், என் வாசக மானுடத் திரள்கள், கூடுகை விட்டுக் கூடுகைக்குப் பெருமூச்சு ஆர்பரிப்புடன் பாய்ந்துபாய்ந்து ஆர்வலப் பெருந்தாவல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் – தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கப் போகும் இந்தத் தருணத்தில், ஒரு விசித்திரமான உரத்த மயான அமைதி நிலவுகிறது. அது வெறும் அரசியல் அமைதி அல்ல; அது ஒரு கதை முடிந்த பின் எழும் கேவல் நிரம்பிய உள்ளொளித் தேடல் பேரலை, நம் மனமூடே எழும்பும் காற்றிலே இயைந்த இடைவெளிப் பேரோசை. 

அந்த இடைவெளியில் நாம் எதையோ கேட்கிறோம் –  ஆனால் அது வெற்றி முழக்கமோ தோல்விப் புலம்பலோ அல்ல. மாறாக அது, மனிதர்களின் உள்ளார்ந்த அசைவின் அசைபோடல் ஒலி. அப்படித்தான் தேர்தல் புள்ளிவிவரங்களால் மிகவும் குழம்பியிருந்த, நாராயணகுரு அவர்களிடம் நடராஜகுரு அவர்களை விட்டுச் சொல்லச் சொல்லி, என் பூர்வாசிரமச் சீடன் நித்யசைதன்ய யதியின் பொறுப்புள்ள பேராசானாக, அவருக்கு ஒரு அவசர ஆணை பிறப்பித்தேன்.

ஏனெனில், இந்த முறைக்கான தமிழகச் சட்டசபை தேர்தல் என்பது வெறும் அதிகார மாற்றம் அல்ல என்பது ஆன்மிகமாக அதனை அணுகும்போது தெளிகிறது. ஆகவே அது ஒரு அகவொளிசார் மெய்ஞான காவிய நாவலின் (என்னுடையது தான்), ஒரு நவீன செவ்வியல் க்ளாஸ்ஸிக் என்று  உலகெங்கும் போற்றக்கூடிய மிகநீண்ட ஒன்றின், ஆனால் அதைவிடவும் மிகமிகமிக நீண்ட அதன் பேரத்தியாயம் போல இருந்தது. அந்த தத்துவார்த்த மரபு நாவலில், நாயகர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் கதையின் எளிய மைய நீரோட்டமானது என் ஆரம்பமும்முடிவுமிலா வெண்முரசு போன்றே மாறாது – மாறாக தேர்ச்சிபெற்ற மானுடன் தனது வாழ்க்கையை எவ்வாறு சோர்வில்லாமல் ஊர்ந்துகொண்டே தேர்ந்து வடிவமைக்கிறான் என்ற கேள்வியே தனக்குத்தானே பதில்களாக விரிந்து விகசிக்கும்.

நான் தர்மபுரி வட்டாரப் பாலக்கோடில் பிஎஸ்என்எல் தொலைபேசி ஊழியனாக, முழு நேரத் தமிழ்இலக்கியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது – அங்கிருந்த ஒரு கிராமத்தில் ஒரு முதியவர் (சொல்லப்போனால் இவர் கடலூர் சீனு! இவர் எப்படி பாலக்கோட்டிற்கு வந்தார்?)  வாக்களிக்கச் சென்றார். அவர் தனது விரலில் மை அடித்துக் கொண்டபோது, ‘இனிய ஜெயம்’ என்று முணுமுணுத்தது ஒரு அரசியல் செயல் மட்டுமல்ல – அது அவரது வாழ்நாளின் அனுபவங்களின் சுருக்கம், அவருடைய வாழ்க்கையின் அடிப்படைக் குறிக்கோள் என்பதை நான் அவருக்கு விளக்கி எடுத்துச் சொன்னேன். அவர் பார்த்த அரசுகள், அவர் அனுபவித்த மாற்றங்கள், அவர் இழந்த நம்பிக்கைகள், எழுதிய குப்பைகள் – இவை அனைத்தும் அந்த ஒரு மென்மையான மையடிப்பு அழுத்தத்தில் இருந்தன என்பதைத்தான் அந்த இனியஜெயம் உணர்த்தியது. இதை நாம்  குறிக்கோள் போலக் கணக்கிட முடியாது. ஆனால் இதுவே ஜனநாயகத்தின் உண்மையான படிமமான அளவுகோலின் நெம்புகோல். இது, செங்கோலைப் போல, நம் வரலாற்றுப் படிப்பினை.

பொதுவாகவே நாம், அரசியலை ஒரு தந்திர விளையாட்டாகப் பார்க்கிறோம். யார் யாருடன் கூட்டணி, யாருக்கு எவ்வளவு வாக்கு சதவீதம், யார்யார் எந்த அ-உடைய ஆ-குழு,  குழுக்களின் குழூஉக்குறிகள் யாவை – இவை எல்லாம் மேற்பரப்பின் மேலோட்ட அலைகள். அதன் கீழ் ஒரு ஆழமான தெளிந்த நீரோட்டம் இருக்கிறது. அந்த நீரோட்டம் தான் சமூகத்தின், படுமோசமாகக் கலங்கிய மனநிலை. இந்தக் கலங்கரைவிளக்கத் தேர்தலில் அந்தச் சேற்று நீரோட்டம் சற்று மாறியுள்ளது. அதை நிர்மலமாக உணர்வதே முக்கியம். (ஆனால், சீதாரமனைப் பொருட்படுத்தவேண்டிய அவசியமில்லை)

…பிறிதோர் வகையில், அதனை உணராமல் இருப்பதும் பாக்கியமே. நீரோட்டம் உலராமல் இருப்பது அவசியமும்கூட. இல்லையேல் காயடிக்கப் படுவோம். ‘காயமே, இது பொய்யடா, பெருங்காயத்தை ரசத்தில் போடடா’ என்பது ஆழ்ந்த துரிய அனுபூதி நிலை; நிகழ்ந்துகொண்டிருக்கும் பக்திரசப் பேரதிசயம், நம் முகத்தில் அறையும் உண்மை.

ஒரு காலத்தில், அரசியல் தலைவர்கள் ஒரு கதை சொன்னார்கள். மக்கள் அதை கேட்டார்கள். இன்று மக்கள் தங்களுடைய கதைகளை உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சமூக ஊடகங்கள், சிறிய விவாதங்கள், குடும்ப உரையாடல்கள் – இவை அனைத்தும் சேர்ந்து ஒரு புதிய பெருத்த குரலை மௌனமாக உருவாக்குகின்றன. அந்தக் குரல் இன்னும் முழுமையாக வடிவம் பெறவில்லை. ஆனால் அது வளர்ந்து கொண்டிருக்கிறது. பெருங்கதையான வெண்முரசு தொகுப்பினை வாங்கிப் படித்தும் அதன் பலப்பல படிகளை நண்பர்களுக்கும் வாங்கியும் கொடுத்தால், அக்குரல் காலத்தின் பரிணாம நீட்சியைச் சென்றடையும், மாற்றத்தை வந்தடையும். எனக்கும் ஞானபீடம் கிடைக்கும்.

இந்தப் பெருத்தகுரல் மாற்றத்தை, பொறுமையுடன் இருந்தாலும் நாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் இது ஒரு ஒரு திடீர் புரட்சி அல்ல. இது மெதுவான பரிணாமம். ஒரு விதை மண்ணுக்குள் முளைக்கும் போது நாம் அதை காண முடியாது. (ஏனெனில் வேர்களுக்குக் கண்ணே இல்லை என ரோஜர்பென்ரோஸுக்கு நான் ஒரு கடிதம் 1980லேயே எழுதிவிட்டேன்)

ஆனால், அவ்விதை வளர்ந்து மரமாகும் போது, அதன் நிழலின் முப்பரிமாணத்தில் நாமே நம் நிழல்களை இழந்து, விழலுக்குப் பாய்ச்சிய நீராக, இழந்த கனவாக தனிமையில் தவித்து நிற்கிறோம். விதி என்பதே விதையால் முகிழ்த்ததுதான். விதியை மதியால் வெல்லலாம். ஆனால் விதி மதியை வெல்லும் என்பதும் உண்மையே. என்னுடைய திரைக்கதையாக்கத்தில் உருவாகிவரும் படத்தில் விதி எனும் பதினைந்து வயது கதாநாயகி (இந்த நடிகையும், பிற நடிகைகளைப் போலவே ஒரு அழகான முட்டாள்தான்), மதி  (இப்பதினைந்து வயது பாத்திரத்துக்கான நடிகர் என் நண்பர் கமல்ஹாஸன்) எனும் உலகமகா இளைஞஅழகனைத் திருமணம் செய்துகொள்வார் என்பது ஒரு எளிய எடுத்துக்காட்டு.

இந்தத் தேர்தல் நமக்கு ஒரு கண்ணாடி கொடுத்துள்ளது. அந்தக் கண்ணாடியில் நாம் அரசியல்வாதிகளை மட்டுமல்ல, நம்மையே பார்க்க வேண்டும். நாம் எந்த வகையான சமூகத்தை விரும்புகிறோம்? நம்முடைய மதிப்புகள் என்ன? இந்தக் கேள்விகள் தான் முக்கியம். ஆனால், கண்ணாடி பிம்பங்கள் கயிற்றரவுகளே என்றே வேதாந்தம் சொல்லும். எது விழி நிலை, எது பிதுங்கு நிலை என்பதை அறிய XXXL அளவு  கௌபீனக் கோமணத்தை அணியவேண்டியவர், வெறும் S அளவானதை போட்டுகொள்வதை ஆச்சரியத்துடன் அவதானித்து அனுமானித்தால், திருப்பூரின் பேரவலநிலை தெளிவுபடும்.

வெற்றி பெற்றவர்கள் வெற்றியை ஒரு அதிகாரமாகப் பார்க்கலாம். ஆனால் அது ஒரு பொறுப்பு. தோற்றவர்கள் இதை ஒரு தோல்வியாகப் பார்க்கலாம். ஆனால் அது ஒரு வாய்ப்பு. மக்கள் இதை ஒரு நிகழ்வாகப் பார்க்கலாம். ஆனால் அது ஒரு தொடர்ச்சி. இவை அனைத்தையும் ஒருங்கே பார்த்து அவதானித்து அறிந்த என் போன்றவர்கள், கீதையில் சொல்வதுபோல ஜீவன்முக்தர்கள். ஆனால், தமிழகத்தில் நான் ஒருவன்தான் ஜீவன்முக்தனாக தன்னந்தனியாக சுயஓளிர்ந்துகொண்டு இப்படி இருக்கிறேன், கடந்த சில நூற்றாண்டுகளாகவே இந்த நிலைமையே தொடர்கிறது. சராசரித்தனம் மிக்க தமிழ்ச்சூழல் இயல்பாகவே இப்படித்தான். இருந்தாலும் எனக்கு  இயல்பியலுக்கான நோபல் பரிசு இதுவரை கிடைக்காதது ஒரு சமகால வரலாற்று நகைமுரண்.

இறுதியாக, இந்தத் தேர்தல் நமக்குச் சொல்லுவது எளிதானது: ஜனநாயகம் என்பது ஒரு இயந்திரம் அல்ல; அது ஒரு உயிர். அந்த உயிர்  உயிர்த்து நம் அனைவரின் உள்ளேயும் இருக்கிறது. அதை நாம் எவ்வாறு அகத்தில் பேணுகிறோம் என்பதில்தான் அதன் புறவயமான எதிர்காலம் இருக்கிறது.

அதனால், இந்த முடிவுகளை ஒரு இறுதி என அல்ல, ஒரு தொடக்கம் என பார்க்கலாம். ஏனெனில் ஒவ்வொரு தேர்தலும், உண்மையில், ஒரு புதிய கதையின் முதல் பக்கம் தான்.  

அதேசமயம் “கட்டுடைத்துக் கட்டுக்கடங்காமல் பார்க்கும்போது – பின்பெருவெடிப்புத்துவ காலவெளிப் பிரவாகத்தில் – முடிவுகளை, முடிவற்ற முடிவுகள் என்றும் பார்க்கலாம்” என என் சீடன்  நித்யா, தன் குருவின் விடைக்காகக் காத்திருந்து, கேட்டு மன்றாடி ஆராதிக்கும்போது அவர் சொன்னதாகச் சொல்வார். ஆனால் எனக்கு அதனை நான் அப்படிச் சொன்னதாக நினைவிலில்லை. எனக்கு எவ்வளவோ சீடர்கள், சீடிகள் – மேலும், அவ்வப்போது நானுதிர்த்து மெய்சிலிர்க்கவைக்கும் மெய்ஞானத் தேடலுண்மைகள், தெரிந்து தெளிந்து உரைக்கும் சாஸ்வத சத்தியங்கள்… இப்படிப்பட்ட அடர்த்தி மிக்க சூழலில், யாரிடம் என்ன சொன்னேன் என்பதை அறிந்துளர் யாவர். 

எப்படியும், தன் குருவின் மீதான மட்டற்ற மரியாதை காரணமாக நித்யசைதன்யசதி இப்படிக் கருத்துதிருக்கலாம் எனக்கூடக் கருதலாம். ஆனால், ஒருவேளை நான் அப்படியே சொல்லியிருக்கலாமும்தான், ஏனெனில் நான் சொல்லக்கூடியதுதான் இது. இதுதான் துவைத அத்வைதம் எனும் இருமைத்துவத்தின் இருண்மையற்ற புதிர். இந்தியத் தத்துவவியலின் எட்டாவுயரத்தில் ஊடாடிக் கொண்டிருக்கும் ஏழாம் ஞானதரிசன மார்க்கம்.

‘அகம் பிரம்மாஸ்மி’ என்கிற என் பிரத்தியேக, நானே வடிவமைத்து, திரைக்கதை வசனம் எழுதிய இருவார்த்தைச் சொல்லாட்சி இதனை உணர்த்துகிறது என்பதை உணர்ந்து உறைந்து உள்ளடங்கி – அதேசமயம் தேர்தல் முடிவுகளை உள்வாங்கிப் புதிர் நோக்கி இருந்தால், தெளிந்துவிடும். கனவு கலைந்து நினைவு வந்தாகிவிடும்.   பிறகென்ன… கீழ்பாக்கத்தை விட வெகுவுன்னதமான ராஜகீழ்ப்பாக்க மாளிகை ஒன்றுக்குக் குடிபெயர்ந்து அதன் உப்பரிகையில் அமர்ந்து, சராசரி மக்களின் வாழ்க்கையை ஒரு பறவைப் பார்வையாக இன்னமும் கூர்ந்து அமோகமாக அவதானிக்கலாம், மெய்ஞான மரபுத் துணுக்குகளையும் உதிர்க்கலாம். (ஐயோ, என் அடுத்த கூடுகைக்கு நேரமாகிக் கொண்டிருக்கிறதே!)

…ஆனால் எல்லாமே ஸ்வப்ன ஸ்கலித நிலை என்பதை உணர்ந்தால், நீங்கள் உங்கள் பின்பக்க மண்ணைத் தட்டிக்கொண்டு ஆகிற வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடுவீர்கள். இதுவும் கர்ம யோகம் தான். எந்த யோக மார்க்கத்தை நீங்கள் கடைபிடித்தாலும், அந்தக் கடையின் ஏகபோக இணையதளம் ஜெயமோகன்.இன் மட்டுமே என்பதை உணர்ந்தாலன்றி உங்களுக்கு கதிமோட்சமில்லை.

தேர்தல் முடிவுகளும் உங்களுக்கு இதைத் தான் தெளிவுபடுத்தும்.

-0-0-0-0-0-0-0-

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் முடிந்து இரண்டு நாள்களே ஆனது. ஆனால் வானம் இன்னும் வாக்குச் சீட்டுகளின் தூசியில் நீலமாகத் தெரியவில்லை; அது ஒரு வேறு நீலம் – கருத்துக் களரியின் நீலம். இந்த நீலத்தின் நடுவே, சிந்தனைக்காக சாம்பல் நிற நிழலைப் போல நம்மைத் தேடி வருகிறது ஒரு குரல்: “இது வெற்றி அல்ல, இது ஒரு இடைநிலை.”

கிராமப் பாதையில் மழை பெய்த பின் உண்டாகும் அந்த நெளிந்த மண்வாசனை போல, தேர்தல் முடிவுகளின் பின்னால் ஒரு நீண்ட வரலாறு கிடக்கிறது. ஒவ்வொரு வாக்கும் ஒரு சிறிய கதையாகத் துடித்தது. அந்தக் கதைகள் சேர்ந்து ஒரு பெருங்காவியம் ஆனது. ஆனால் இந்த காவியத்தில் தனித்துவ நாயகன் யார் என்று கேட்கும் போது, வாக்குப்பெட்டியின் இருண்ட உள்ளே இருந்து ஒரு சிரிப்பு மட்டுமே கேட்கிறது.

ஒரு காலத்தில் நம் அரசியல் ஒரு நாடக மேடை. மேடையின் பின்னால் ஒளிந்திருந்த கயிறுகள், முன்னால் தெரியும் நிழற்பாவைகளை ஆட்டின. இன்று அந்தக் கயிறுகள் நம் கைகளில்தான் இருக்கின்றன என்று நாம் நம்புகிறோம். ஆனால் உண்மையில் கயிறுகள் இன்னும் யாரோ ஒருவரின் விரல்களில் சிக்கியுள்ளன; நாம் அவற்றை பிடித்துக் கொண்டு இருப்பதாக மட்டும் நம்பிக்கொள்கிறோம். இது ஜனநாயகத்தின் மிக மென்மையான மாயை.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒவ்வொரு வாக்குறுதியும் ஒரு சிறிய கவிதை. “நாளை நல்லது” என்ற ஒரு வரி கவிதை. அந்தக் கவிதையை நம்பி மக்கள் வரிசையில் நின்றார்கள். வாக்குச்சாவடியில் அவர்கள் தங்கள் விரலில் மை அடித்துக்கொண்டார்கள். அந்த மை ஒரு குறி அல்ல, ஏன் குறியீடும் அல்ல; அது ஒரு தற்காலிக உடன்படிக்கை – “நீங்கள் சொன்னதை நான் நம்புகிறேன்” என்ற அமைதியான ஒப்பந்தம்.

இப்போது முடிவுகள் வந்துவிட்டன. வெற்றி பெற்றவர்கள் புன்னகைக்கிறார்கள். தோற்றவர்கள் சிந்திக்கிறார்கள். ஆனால் மக்கள்? அவர்கள் மீண்டும் தங்கள் தினசரிக்கு திரும்பிவிட்டார்கள். ஒரு தேநீர் கடையில், “யார் ஜெயிச்சாலும் நமக்கு என்ன?” என்ற கேள்வி ஒரு பழைய ராகம் போல ஒலிக்கிறது. அதே நேரத்தில், அந்தக் கேள்விக்குள் ஒரு புதிய நம்பிக்கையும் உண்டு: “இம்முறை ஏதாவது மாறுமோ?”

சிற்றூர்களில் மாலை நேரம். தெருவிளக்கின் கீழ் அரசியல் விவாதங்கள் மெதுவாக ஒளிர்கின்றன. ஒரு முதியவர் சொல்கிறார், “இது எல்லாம் சுழற்சி. இன்று இவர்கள்தான், நாளை மற்றவர்கள்.” அருகில் இருக்கும் இளைஞன் சிரித்து, “அப்படின்னா நாம எப்போ?” என்று கேட்கிறான். அந்தச் சிரிப்பில் ஒரு சின்ன புரட்சி ஆழ்ந்த குறியீடாக படிமமாக மறைந்து கிடக்கிறது.

இந்தத் தேர்தல் ஒரு முடிவு அல்ல; அது ஒரு குறிப்பு. வரலாற்றின் ஓரத்தில் எழுதப்பட்ட ஒரு குறிப்பு: “மக்கள் இன்னும் பேசுகிறார்கள்.” அந்தப் பேச்சு சில நேரங்களில் சத்தமாக இருக்கும், சில நேரங்களில் மௌனமாக இருக்கும். ஆனால் அது நிற்காது. ஏனெனில் ஜனநாயகம் என்பது ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல; அது ஒரு தொடர்கதை.

இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? வெற்றியை கொண்டாட வேண்டுமா, தோல்வியை ஆராய வேண்டுமா? அல்லது இந்த இரண்டிற்கும் நடுவே நின்று, ஒரு சிறிய கேள்வியை கேட்க வேண்டுமா: “இந்த முறை நம்மால் என்ன கற்றுக்கொள்ள முடியும்?” அந்தக் கேள்வி தான் இந்தத் தேர்தலின் உண்மையான பரிசு.

இறுதியாக, ஒரு சிறிய உண்மை: வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட்டுவிட்டன. ஆனால் மனங்கள் இன்னும் திறக்கப்பட வேண்டியுள்ளது. அந்தத் திறப்பு தான் அடுத்த தேர்தலின் விதை. அதுவரை, அரசியல் நம் வாழ்க்கையின் ஓர் இடைவேளையாக அல்ல, அதன் ஓர் அத்தியாயமாகத் தொடரட்டும்.

நானும் துரந்தர் 1 & 2 படங்களை ஒருவழியாகப் பார்த்துவிட்டேன் – அதாவது, காதும்காதும் வைத்தாற்போல இரவு 10 மணிக்குமேல் ஒருமாதிரி திருட்டுத்தனமாகக் கிளம்பி, பின்னர் தூக்கக் கலக்கத்துடன் அதிகாலை  2-3 மணிக்குத் திரும்பவருகயென…

…எது எப்படியோ… அப்படங்கள் குறித்த என் கழுதைத் தனமான கருத்துகள் ஒருபுறமிருக்கட்டும் – நம் பொதுவெளி அறிவுஜீவிகள், அரசியல் விமர்சகர்கள், யூடூப்பர் பெருந்தகைகள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்….

துரந்தர் என்றால் என்ன?

கோலாஹல ஸ்ரீநிவாஸ்

“அனைவரும் இதை வடமொழி-ஹிந்திச் சொல்லாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் உண்மையென்னவென்றால், இந்தப் படத்தின் ஹீரோ, ஆஃப்கனிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடைப்பட்ட துரந்த் லைன் Durand line எனப்படும் எல்லைக் கோட்டைத் தாண்டி, பாகிஸ்தானுக்குள் சென்று (இந்த உள்ளே என்பதை ஹிந்தியில் ‘அந்தர்’ எனச் சொல்வார்கள்)  தாக்குகிறான்.

ஆகவே இவன் துரந்த் + அந்தர் = துரந்தர்.

நான் சிறுவயதிலேயே என்னுடைய  அஞ்சாங்க்ளாஸ் அட்லஸ்ஸில் இந்தச் சிவப்புக் கோட்டைப் பார்த்திருக்கிறேன்!”

சீமான்

“படத்தின் தமிழினப் போராளி தன்னுடைய எல்லாவற்றையும் துறந்துவிட்டு இனப்போர்த் தியாகியாக உருமாறி இனமானத்தைக் காக்க அன்னியதேசத்துக்குச் சென்று, நம் தேசியத் தலைவரைப் போல பகையை வென்று வெற்றிவாகை சூட்டிக் கொள்கிறான்!

…அவன் திறைமைசாலி. தோள்வலி மிக்கவன்! தோல்வியே காணாதவன்… அவன் தன் குறிக்கோளைத் தவிர அனைத்தையும் துறந்தவன். ஆகவே அவன் துறந்தர். ஹஹ்ஹா!!!!”

டெல்லி ராஜகோபாலன்

“டெல்லியிலிருந்து இந்த ஸ்கூப்! ஒத்திசைவுடீவி சேன்னல் ஓனர் ராமசாமிக்கும், அவருடைய ஏழரைத்தன ரசிகர்களுக்கும் மட்டும், இதை பிரத்தியேகமாக, இந்த ஏப்பிரல் 1 தேதியன்று சொல்வதில், எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. படத்தின் ஹீரோ, இந்தியாவின் ரகசிய உளவாளி என்பதுதான் பெரிதும் வெளிவராத ஸ்கூப் தகவல்!

இன்னொரு பயங்கர ஸ்கூப் என்னவென்றால் அமித்ஷா, தமிழகத் தேர்தலுக்கு முன் தமிழகம் விஜயம் செய்யவிருக்கிறார். அவர் தங்கும் ஹோட்டல் சென்னை லீமெரிடியன் எனச் சொல்கிறார்கள். ரூம் எண் 007.”

மூத்த பத்திரிகையாளர் மணி

“தூர தேசத்துக்குச் சென்று, அந்த எதிரிதேசத்தின் தொங்குசதையாக இருந்து தந்திரமாக காரியம் சாதித்துக்கொண்டு, வெற்றிபெறுகிறான் இதன் ஹீரோ என நினைக்கிறேன். ஆகவே தூர + தந்திரர் = துரந்திரர் எனவாக இருப்பதுதான் தமிழிலக்கணம் வழியாகச் சரி என்பதை தொல்காப்பியர் ஒப்புக்கொள்வார்.

ஸ்டாலின் ஆட்சி மட்டமாக ஆட்சி. ஆனா எக்காரணம் கொண்டும் பாஜக உள்ள வந்துடக் கூடாது. ஸ்டாலின் ஊழல். ஆனா ஹிந்துத்துவாவோட அடிமை அதிமுக அதுக்கு ஒரு மாற்று இல்லை. திமுக கொத்தடிமைங்க ஸ்டாலினுக்கு தான் ஜால்ரா போடுவாங்க. ஆனால் நான் அப்படியில்ல – எனக்கு சமூக நீதி முக்கியம். ஆகவே விஜய் கட்சியும் வராம இருக்கணும்னா, திமுகதான் திரும்ப வரணும்…”

ரவீந்திரன் துரைசாமி

“அங்கிட்டு இந்த ஒற்றன் போறான். நாம் மோதிக்கு முன்னமே அறிவுரை சொன்னதுபோல, பாகிஸ்தானில் 24% பலூச்சி ஜாதியினர் கீ ஃபேக்டர் ஆய்ட்டு – அவ்ங்க ஒப்புதல் இல்லாம ஒண்ணுமே அங்கே நடக்காது.

…அதே சமயம் அவங்களோட ஒற்றுமையாக, சப்போர்ட்டாக இருக்கிற இன்னொரு ஜாதி தான் இந்த துரந்தவங்க – இவங்களுக்கு நேப்பாள்ல 3% ஓட்டு கேரண்டி. கூட்டணிலே இருந்தாலும் தூர தேசத்துக்காரனுங்கன்னு ஒரு ஃபேக்டர். இவங்கதான் ஆஃப்கனிஸ்தான்ல பக்தூன் ஜாதியோட இன்னொரு மறைமுகக் கூட்டணி வெச்சி செக்கோஸ்லாவியாவுக்கு செக் வெக்கறாங்க. அதனாலதான் துரந்தர் பேரு வந்திட்டு.”

ரங்கராஜ் பாண்டே

“முறையாக இதைப் பற்றி அறியாமல் கருத்து சொல்லமுடியாது. நான் பிஹார்லேர்ந்து வந்தவன். ஆகவே எனக்குத் தெரிந்த ஸமஸ்க்ருதத்தின் படி சொல்லவேண்டாம் என்றாலும், ஒரு கருத்துக் கணிப்பு நடத்திச் சொல்லவேண்டும் என்பதால், பெரும்பாலோர் 11% கருத்துப் படி, இது தூர + இந்திரர் என்பதன் மாடிஃபிகேஷனாக ஒரு ரெட்டாரிக்கா இருக்கலாம். அதுல ஒரு பிரச்சினையுமில்ல…

ஆனா தேர்தலுக்குப் பின்புதான் அதன் முடிவுகள் எப்படி அமையும் எனச் சொல்லமுடியும். எல்லாம் சுமுகமாக முடியும்.”

பாரிசாலன்

“இந்த படத்தோட ஹீரோ ரண்வீர்சிங் இல்லுமினேட்டி வடவ சதிகாரன். தமிழ்த் துரோகி, ஏகாதிபத்தியன். அவன் தன்னோட சொந்த வரலாற்றைத்தான் கதை போல எடுத்திருக்கிறான். நாமதான் அவனத் தூக்கிக் கொண்டாடிட்டு இருக்கோம்…

ஒரு தமிழின உணர்வாளனாக, ஆகவே உலகப் புகழ்பெற்ற வேர்ச்சொல் ஆராய்ச்சியாளனாக உண்மையைக் கூறவேண்டுமென்றால், இந்த துரந்தர் என்பதே தமிழ் வார்த்தைதான்.   துரோகி என்கிற தமிழ்ச் சொல்லில் இருந்து துர வந்தது; அந்த என்பது தமிழ் அந்த தான்;  +  ர் என்பது மரியாதைக்குரிய ஒட்டு – அதுவும் தனக்குத்தானே அவன் சுயமரியாதை கொடுத்துக் கொண்டதுதான்… துர + அந்த + ர். இதெல்லாம் புரியாம பேசிட்டிருக்கோம்!”

ஜெயமோகன்

“அப்படத்தின் டைரக்டர் ஆதித்ய தர் அதன் திரைக்கதை வசனத்துக்காக என்னைத் தான் முதலில் அணுகினார். கொஞ்சம்  சுயவிலக்கத் தயக்கத்துடன் தான் அதற்கே ஒப்புக்கொண்டேன் – ஏனெனில் தீவிரவாதக் கருத்துகளை நான் உள்வாங்குவதைவிட வெளிவிற்பதுதான் சாலச் சிறந்தது எனும் என்னுளப்பாங்கை நான் என் சிறுவயதிலேயே உள்ளமர்த்திக் கொண்டுவிட்டேன்.

…மேலும், உள்நோக்கிய நுணுக்கமான ஆன்மிகத் தேடலில் துரிய நிலையை துரிதமாக அறியவோ அடையவோ முடியாது.  அந்தப் படக்கதையில் கதாநாயகன் சுயதேடலில் ஈடுபட அதன்வழியாக வன்முறையக் கண்டுகொள்வதைத்தான் துரந்தர் எனும் ஒரு பெரும்வரலாற்றுப் படிம உருவகமாக, ஒரு கோட்டோவியமாகக் காண்பிக்க முயன்றேன் – அவரிடம் வாதம் செய்தேன்.  ஆனால், என் பங்களிப்பை இருட்டடிப்பு செய்து வைரமுத்துக்கு ஞானபீடம் கொடுத்துவிட்டார்கள்.”

பிடிஆர் பழநிவேல்ராஜன் / ஆ இராசா

“இந்தப் படத்தில் வரும் துரந்தர் நானில்லை. ஏதோ ஏஐ ஆர்ட்டிஃபிஷியல் இண்டெல்லிஜென்ஸ் வைத்து மார்ஃப் செய்து விஎஃபெக்ஸ் பண்ணி என் குரல்நடையுடை பாவனைகளைச் சேர்த்துக் கோர்த்துவிட்டார்கள்.

நான் மான நஷ்ட வழக்குப் போடப்போகிறேன். லீகல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன்.”

 (சரி. அண்ணாமலையும் பத்ரிசேஷாத்ரியும் இதில் விதிவிலக்குகள் – அவர்கள் தொழில்முறை யூடூப்பர்களோ கண்டமேனிக்கும் கருத்துதிர்ப்பாளர்களோ அல்லர், நல்லவேளை!)

அண்ணாமலை

“நான் அந்தப் படத்த பாக்கலீங்கண்ணா. பாத்துட்டு கருத்து சொல்றேன். ஹிந்தியும் ஓரளவுதான் தெரியும்.  நீங்க எவ்வளவு முறை, எந்த மாதிரி மாத்திமாத்திக் கேட்டாலும் இதுதான் என் பதில். தெரியாத விஷயத்த தெரியறமாரீ காட்டிக்கறது ஊழலில் திளைக்கும் திராவிடர் குணம். ஆனா அந்தச் சண்டையை இப்ப போடவேண்டாம், அததுக்கு நேரம் சமயம் வரரும்.

ஆகவே அண்ணாதிராவிட ஆட்சியை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவோம்.”

பத்ரி சேஷாத்ரி

“ஸ்ஸ்ஸ்… அப்பாடா… இந்தக் கட்டுரையை அப்படியே படித்துவிடுகிறேன். அதையே இந்தக் கேள்விக்கான என் கருத்தாக வைத்துக் கொள்ளுங்கள்..

நான் பத்ரிசேஷாத்ரி, இது கிழக்கு நியூஸ்!”


என்னது? ஆனானப் பட்ட ‘கிழக்கு பதிப்பகம்’ புகழாளரும் அரசியல் பகுத்தாய்வாள விமர்சகருமான பத்ரிசேஷாத்ரி, தமிழகவெட்டிக்கழகத்தின் கொள்கைப் பரப்புரைச் செயலாளரா? ஐயோ!! தேர்தல் களம் றொம்பவே சூட் புட்ச்சிடிச்சே! 

கருத்துப் படம், நன்றி: சாட்டுஜிப்டார் :-(

பத்ரியார் எனக்கு முன்னறிமுகவானவர்தாம், சமன நிலையுள்ளவரும் படுபுத்திசாலியுமான இக்கிழக்கார், செயலூக்கமும் மிக்கவர்தாம். ஆகவே, இத்தனை நாள் அவர்மேல் பெருமதிப்பு வைத்திருந்தேன். இனி மேலதிகமாக அவரை மதிப்பதைத் தவிர வேறு வழியேயில்லை. மேலும் அவருடைய நடு நிலைமைப் பிறழ்வுக்கு, தவெக எவ்வளவு பொட்டியில் கொடுத்தது எனத் தெரியவில்லை – ஆகவே பொறாமையாகவும் இருக்கிறது.

ஆக… பிகில் நடிகர் விஜய்க்கும் ஒரு B டீம் இருக்கிறது. பத்ரி டீம்! :-(

எது எப்படியோ… ஒரு மாதிரியாக, ஒரு படுகேவலமான எடுத்துக்காட்டாக, அண்மையில் வெளியிடப்பட்ட அவருடைய வெட்கங்கெட்ட கேடுகெட்ட தவெக பரப்புரை – பார்த்துக் களிக்கவும், அல்லது முகம் சுளிக்கவும்; சுமார் 20​+ நிமிடங்களே ஓடும் இந்த ப்ளடி விடியோவைப் பார்த்தாவது தவெக-கார விசிலடிச்சான் குஞ்சாமணியாளர்களுக்கு உங்கள் அனாதரவை நல்கவும்.

…பொட்டி வாங்கிக்கொண்டீர்கள், சரி பத்ரியாரே! ஆனால், இப்படிப் படுகேவலமாகவா விஜய்க்கு முரட்டுத்தனமாக முட்டுக் கொடுப்பது? அவருடைய விட்டேற்றி அறிவிலித்தன ஜிகினா வாக்குறுதிகளுக்கெல்லாம் குதர்க்கரீதியான வியாக்கியானம் அளிப்பது? இம்மாதிரி சப்பைக்கட்டுகளுக்காக விசிலாளர்கள் உங்களுக்குக் கொடுத்த விலை என்ன?

பைசா கொடுத்தால் எப்படியல்லாமோ கலர்கலராகக் கம்பி கட்டிவிடுவீர்களா?  

ஆனாலும் பத்ரீ! நீங்கள் விலை போவீர்கள் என என் கனவில் கூட நினைத்ததில்லை. :-(

எனக்கு வெறுத்துவிட்டது. ஆகவே, இந்தப் பதிவெழவையும் படித்துத் தொலைக்கும் சக ஏழரைகளான நீங்களும் பத்ரியை ஆழ்மனதிலிருந்து வெறுக்கவேண்டும் – ஆகவே இவ்விடியோவை முழுமையாகப் பார்த்து, அவரைக் கரித்துக் கொட்டவும்.

நன்றி. :-(

(அல்லது)

குண்ஸாக: ஒரு சராசரி (அதிசராசரி!) விஜய்குஜய்(ரசிகன்) = முட்டாக்கூ.

(மன்னிக்கவும் – தேவையானால் தொடர்ந்து படியுங்கள்… பாவம்…)

…இக்காலங்களில் – பொதுவாகவே எனக்கு அவ்வளவு உபரி நேரம் இல்லாத காரணத்தால், பல, எனக்கு மிகவும் ப்ரீதியான/உவப்பான விஷயங்களைக் கூடச் செய்ய முடிவதில்லை.

(இந்த ஒத்திசைவெழவு எனும் பயிற்சி தொடர்ந்து எழுதப்படாமல் இருப்பதற்கும், ஆகவே பாவப்பட்ட சகஏழரைகளின் ரத்த அழுத்தம் சீராகத் தொடர்வதற்கும் – இந்த க்ரஹஸ்தி விஷயமும் ஒரு காரணம்/சால்ஜாப்பு; கடந்த நான்கைந்து மாதங்களில், ஒரேயொரு முறைதான் வீட்டைச் சுற்றி அரை கிலோமீட்டர் ஆர வட்டம் தாண்டி சென்றிருக்கிறேன் – இதுவானது, சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு, இளம் நண்பர் ஒருவரைச் சந்திக்கிறேன் பேர்வழியென்று ஹோட்டலொன்றில் நான் காணாததைக் கண்டவன்போல மூச்சுமுட்டத் தின்றதில் முடிந்தது – இளைஞருக்கு வாயடைத்துப் போய்விட்டது என நினைக்கிறேன், பாவம், என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை! இருந்தாலும், வீட்டுக்கு வந்து மனக்கலக்கத்துடன் உடல் எடையைப் பரிசீலித்துப் பார்த்தேன் – அதேயதே 49 கிலோகிராம்தான், நல்லவேளை; கொஞ்சம் நிம்மதிதான்…)

…வழக்கம்போல எங்கோ சென்றுவிட்டேன்.

இருந்தாலும் – சிலபல நண்பர்கள் உதவி எனக் கேட்டு வரும்போது என்னால் தட்டிக் கழிக்கமுடிவதில்லை. பிரச்சினை, பிரச்சினை

இப்படியாகத்தானே.

ஒரு தமிழ்மாமா செம்மாமா (இவர் ஏழரைகளில் ஒருவரல்லர் என்றாலும் சிலபல வருடங்களாகத் தொடர்பில் (விட்டுவிட்டு) இருப்பவர் –  ஒத்திசைவு மூலமாகத் தான் நரிமுகம்) தன் அசமந்த மருமகனுக்குக் எஞ்ஜினீயரிங் கணக்கு தொடர்பாக சிலபல சந்தேகங்கள் இருப்பதாகவும் நான் அதற்கு உதவ முடியுமா எனவும் கேட்டார். (இவர் அடிப்படையில் நல்ல ஆசாமிதான்… ஒருவிதமான நல்லெண்ணத்துடன் தான் இந்த கோர்த்துவிடுவதைச் செய்திருப்பார் என ஒருமாதிரி சந்தேகிக்கிறேன்)

…நானும் ஏதோ ஒரு மூளைகலங்கிய தருணத்தில் சரி என்று சொல்லிவிட்டேன். அது மட்டமல்ல – அவர் சொன்ன விஷயங்களுக்கு அதிகபட்சம் 2-3 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் எனக் கொஞ்சம் தப்புக் கணக்கு போட்டுவிட்டேன் – இத்தனைக்கும் நான் 12ஆம் வகுப்புக்குமேல் எந்தப் பிள்ளையுடனும் இந்த ‘ட்யூஷன்’ வகையறாவைச் செய்வதேயில்லை – ஏனெனில் நிறையப் பட்டிருக்கிறேன், சுயநம்பிக்கை மிக்க இளம் மூடர்களைச் சந்திப்பது என்பது வாழ்க்கையில் விரக்தியைக் கொடுப்பதொன்றல்லவோ?

(இத்தனைக்கும் ஜொலிக்கும் சிலபல இளைஞர்களுடன் அப்படியும்இப்படியும் பழகும் வாய்ப்பு இருந்தாலும் 10 ஜொலிப்பான்கள் தரும் சந்தோஷத்தை ஒரேயொரு விஜய்/சூர்யா/சீமான் வகையறா இருட்டுத்திரை ரசிகன் லெஃப்ட் ஹேண்டால் அனாயாசமாக அழித்தொழிப்பான் என்பதையும் அறிவேன்)

…இருந்தாலும், பையனுடன் துளிக்கூட, ஒரு முன்னோட்டமாகவே கூடப் பேசாமல், அவனுடைய ஐக்யூவை அனுமானிக்காமல், அடிப்படை ஞானத்தைக் கணிக்காமல், அவனுடைய தொழிலறத்தைப் பற்றித் துளிக்கூட அறியாமல் ஒப்புக்கொண்டேன். தேவையா? (நான் அடுத்தமுறை போகவேண்டிய தூரம் மிக அதிகம்!) 

செய்வினை தன்வினை, தன்னைச் சுட்டேவிட்டது.

பையனுக்கு கணிதத்தின் பல அடிப்படைகளில் ததிங்கிணத்தோம். எப்படித்தான் இவன் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பான் என்பதே எனக்கு மூச்சுமுட்டவைத்த ஆச்சரியம்.

அந்தப் பையனுடன் பேச ஆரம்பித்த இரண்டு நிமிடங்களிலேயே… என்னால் குத்துமதிப்பாக அனுமானிக்கப் பட்ட 2-3 மணி நேரம் என்பது, குறைந்த பட்சம் 2000-3000 மணிநேரமாவது ஆகும் எனத் தெரிந்துவிட்டது.

ஏன்?

மாணவன் இந்த ப்ளடி ஹையர்ஸெகண்டரி ‘படித்தது’ சென்னை சார் அரசுப் பள்ளி ஒன்றில். ஆங்கிலமீடியம் (ஒரு கேடு). படுபீதியளிக்கும் அளவுக்கு 90%+ மதிப்பெண்கள். ஆச்சரியம், ஆச்சரியம். கணிதத்தில் 95%! (எனச் சொன்னான்!)

இருந்தாலும்.

அடிப்படை திரிகோணமிதி எழவுகளில் அளவுக்கதிகமான கற்பனை. stonepalm.

ஏதோ ஒரு தொகையீட்டு நுண்கணித (Integral Calculus!) விஷயத்தைப் பற்றி ஆங்கிலத்தில் அவனுக்கு விவரணை கொடுத்துக் கொண்டிருக்கும் போது கீழ்கண்ட கேள்வி எழும்பியது….

(Cosine(A) + Sine(A))2 = ? (அவனிடம் நான் எதிர்பார்த்தது 1+Sine2A போல…)

ஆனால், அவன் (Cosine(A))2 = Cosine2 x A2 எனச் சொல்ல ஆரம்பித்தானே பார்க்கலாம்!

எனக்கு விக்கித்துப் போய்விட்டது!

சில வினாடித் திகைப்புக்குப் பின், எப்படி தம்பி அப்படிச் சொல்றீங்க எனக் கேட்டதற்கு, Cosine, A ரெண்டையும் பெருக்கினால் வருவது CosineA தானே சார் என்றான்! “product of Cosine & A தானே CosineA?”

விதம்விதமாக, கலர்கலராக அவனுக்கு ஃபங்க்ஷன் என்றால் என்ன, அதற்குக் கொடுக்கப்படும் ஆர்க்யுமெண்ட்ஸ் என்பவை யாவை? அந்த பேராமீட்டர்களை அந்த ஃபங்க்ஷனுக்குக் கொடுத்தால் அவை என்ன செய்யப்படும், அந்த ஃபங்க்ஷன் என்ன கொடுக்கும் என்றெல்லாம்… 

கொடுத்த பல எடுத்துக்காட்டுகளில் நான் பொறுமையாக விளக்க முயன்ற இந்த எழவும் ஒன்று: ப்ரெட் டோஸ்டர் என்பது ஃபங்க்ஷன் போல, அதில் நாம் போடும் ப்ரெட் ஸ்லைஸ் ஒரு பேராமீட்டர். அந்த டோஸ்டர், அந்த ப்ரெட்டை எடுத்துக் கொண்டு மொறுமொறுவென வறுக்கப்பட்ட ப்ரெட்டை அளிப்பதில்லையா? நிறைய டோஸ்ட் செய்யப்பட்ட ப்ரெட் ஸ்லைஸ்கள் வேண்டுமென்றால், ப்ரெட்டைத்தான்அதிகமாக வாங்க வேண்டி வருமே தவிர… அத்தனை டோஸ்டர்கள் தேவையல்ல அல்லவா? அதைப்போலத்தான் இந்த கொசைனையும் அணுகவேண்டும்… கொசைன் ஒரு ஃபங்க்ஷன்… அந்த ஏ என்பது ஒரு கோணம்/ஆங்கிள்…  இந்த கோணத்தை இன்னொரு பளப்பளா டோஸ்டரில் இட்டால், அது ஜாமையும் வெண்ணையையும் தடவித் தரக்கூடும்… ஒருமாதிரி சைன் ஃபங்க்ஷன் போல…

… … அவன் மரமண்டையில் எதுவும் ஏறவில்லை. என் மரமண்டைக்கும் அவன் மூளையில் ஏற்றும் படிக்கு விளக்கத் தெரியவில்லை! ஸப்பாஷ், ஸர்யான போட்டீ!

இருந்தாலும். வேதாள விக்கிரமனாகிய நான் என் முயற்சியைக் கைவிடவில்லை….

சரி. Cosine60 என்பதற்கு உன் வழியை உபயோகித்து எது என்பதைப் பார்க்கலாமா?

“(Cosine60)2 = Cosine2602 = Cosine23600 = …. … இதை ஸிம்ப்ளிஃபை செய்யணுமா?”

வேண்டாம் – ஆனால் உன் கேல்குலேட்டரில் Cosine60ஐ சரிபார்.

பார்த்தான். “சார் இது 0.5ன்னு சொல்லுது.”

அப்படியா சரி.  Cosine3600 க்கு என்ன சொல்லுது?

“ஐயோ!  இது ஒண்ணுன்னு காமிக்குது!” 

அடப் பாவமே என்றேன்!

“ஆனால் Cosine2 வோட வேல்யு என்னன்னு தெரியலையே! இந்த டப்பா பழய கால்குலேட்டர கடாசிட்டு புது கேல்குலேட்டர் வாங்க டாட்டியைக் கேக்கறேன்!

!!!!

அப்ப தம்பி… இதை எப்படி அணுகுவீங்க? CosineA/SineA =? இத Co எனச் சுருக்க முடியுமா?

இதற்கு அவன் “ஆமாம்” என்றானே பார்க்கலாம்!!

நான் இத்துடன் விட்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்தேன்! எனெனில் அவன், பிற எல்லா திராவிடலைகளைப் போலவே (செங்கோட்டையன் உட்பட) விஜய்குஜய் ரசிகன் என அவனுடைய மாமா என்னிடம் சொல்லியிருந்தார்! (இந்த ப்ளடி விஜய்வியாதி ஒரு பெருந்தொற்றுப் பெருங்கொடுமைதான்!)

தம்பீ, உங்களுக்கு இந்த எடுத்துக்காட்டு பிடிக்கலாம் என, பசும்பலகையில்  விஜய்(ரசிகன்)=முட்டாக்கூ என எழுதினேன்.

விஜய்ன்றது ஒரு ஃபங்க்ஷன், ரசிகன் என்பது  அதற்கு ஒரு ஆர்க்யுமெண்ட் – இந்த ஃபங்க்ஷன் இந்த ஆர்க்யுமெண்டை எடுத்துக்கொண்டு வெளியே காரித் துப்பும் விஷயம் ஒரு முட்டாக்கூ…

அவனுக்கு (என் விருப்பக் குறிக்கோள் படியே!) கொஞ்சம் சோகமாகி விட்டது. “நான் விஜய் ரசிகன்” என்றான்… “அவரு ஒரு பெரிய்ய தலைவர்” என இழுத்தான்…

எனக்கும் கொஞ்சம் சங்கடமாகிவிட்டதால், சரி, விஜய்குஜய்க்கு பதிலா சூர்யா என வெச்சுக்கலாமா? அதில் ஒரு பிரச்சினையுமில்லையே!

அவன் மகிழ்ச்சியுடன், “சரி சார்!”

சூர்யா(ரசிகன்) = முட்டாக்கூ

இதை ரெண்டு பக்கத்திலும் 2ஆல பெருக்கினா…

2Xசூர்யா(ரசிகன்) = 2Xமுட்டாக்கூ

இதன் இடதுபக்கத்த உன்னோட வழில உள்ளுக்குள்ள பெருக்கினா…

2Xசூர்யா(2Xரசிகன்) – அதாவது ஒரு சூர்யா போன்ற ஒத்தை பொறுக்கியையே தமிழகம் தாங்க முடியாது… ஆனாக்க… … உன் மெதட்ல ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒரு சூர்யான்னு ஆய்ட்டா… அத விட.. இடதுபக்கம் நாலு முட்டாக்கூ, வலதுபக்கம் ரெண்டு முட்டாக்கூ… இது சரியாகவா இருக்கு?

அவன் சிரித்துவிட்டான். நானும் சிரித்தேன். 

“ஆனா, எங்க விஜய் மாஸ் சார்!”

அவனுக்கு ஏதாவது புரிந்ததா எனத் தெரியவில்லை. ஆனால், சுபம்.

அடுத்த முதலையமைச்சர்  சோசப்பு விசய் வாள்க!

-0-0-0-0-

என் மனைவியிடம் இதைப் பற்றிச் சுயபச்சாதாபத்துடன் புலம்பிவிட்டு இக்காட்டுரையை எழுத ஆரம்பித்தேன்…

தேவையா?

“ஐயய்யோ! திரும்ப ஒன்னோட ப்ளாக்க எழுத ஆரம்பிச்சுட்டியா! கடவுளே!!”

(எப்படி இவன்களெல்லாம் 95% மதிப்பெண்கள், அதுவும் கணிதத்தில் வாங்கியிருப்பார்கள்?

#DravidianModel தமிழகத்தின் கல்வி(!)த்தர(!!) கிடுகிடு அதலபாதாளஅவலத்துக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்!!)

இதில் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சாருநிவேதிதா – ஒரு அதிநுணுக்கமான தினசரி சம்பவம் ஒன்றை அவருக்கேயுரித்த போராளி-ரிபெல் பார்வையுடன், கலகப்பிரதித்தனமாக அணுகுகிறார் – இதற்குள், ஆழமான வரலாற்று, இலக்கிய, பெண்ணியக் கண்ணோட்டச் சாயல்கள், சுவையான உணர்ச்சிப் பிரவாக கருத்துத்தெறிப்புகள், வாதக் கோடுகள்+புள்ளிகள், மற்றும் அவருக்கென்றே பிரத்தியேகமாக உருவகப்படும் ஏதேனும் ஒரு உணவுப் பொருளின் பிரபஞ்ச தாத்பரியங்களை உள்ளடக்கும் கட்டமைப்போடு பரிமளிக்கின்றன. Read the rest of this entry »

இந்த விருந்தினர் பதிவு, வேர்ல்ட்ஃபேமஸ் தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அருளிச் செய்தது: (முடிந்தவரை, அவருடைய ஆக்கத்தில், ஒற்றெழுத்தெழவுகளை மட்டும் நான் மண்டையில் தட்டி பட்டிபார்த்து டிங்கரிங் செய்திருக்கிறேன்) Read the rest of this entry »

(…before some #D lapdog comes running around pitifully whining & wailing that this post is, in poor-taste-as-usual & is actually a grave mistake – well, I can only say in self-offence that, I did not write it.

In fact, ChatGPT wrote it for me. Honestly. No kidding.

Also, I did not even have to write a labored prompt to elicit this response – fact is that, #DravidianModel is of course world-famous (don’t we all know that?) and the staggering volumes of trainable-data and labelled information that is available on the model is indeed the world’s BIGGEST LLM – Large Language Model!

So, it is no wonder – even when I was merely asking for ‘ideas to beautify the Marina beach of Chennai‘ – the generative AI could give me a massive dissertation on it, worth multiple PhDs!!!)

Anyway. Read the rest of this entry »

இந்த ‘சென்னைப் புத்தக மந்தை 2025’ எழவு ரிலீஸ்கள் ஒரு பக்கம் பயமுறுத்துகின்றன என்றால்… Read the rest of this entry »

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ப்ளடி மகத்தான வெற்றிக்குப் பிறகு… Read the rest of this entry »

பிரச்சினை என்னவென்றால், அவருடைய அவதூறான ஃபேஸ்புக் பதிவுக்கு என்னால் அங்கேயே, என்னுடைய மேலான கருத்துகளைப் பதிவு செய்யமுடியாத படிக்கு என்னத்தையோ சதி செய்து வைத்திருக்கிறார்; அதனால் தான் இந்தக் குழாயடிச் சண்டையை இங்கேயே நடத்திக் கொண்டு சுயராஜ்ஜியம் அல்லது ப்ளாக் சுயாட்சி காணலாம் என்று…

என்னமோடாப்பா, சலிப்பாக இருக்கிறது… :-( Read the rest of this entry »

இது ரசக்குறைவான, மலினமான நகைச்சுவை(!); எளிதில் புண்படும் அஏழரைகள் உடனடியாக வெளியேறவும்.

நன்றி. Read the rest of this entry »

…என இருந்திருக்க வேண்டும்; ஆனால் இல்லை.

ஏன்? :-(

இதன் பின்புல உண்மைகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும். (அதற்குமுன் – இக்காட்டுரையின் தலைப்பிலும் மற்றபடியும் மலிந்திருக்கும் எழுத்துப் பிழைகளைப் பொறுத்துக்கொள்ளவும்; எனக்கு யார் பேரிலும் தனிப்பட்ட வெறுப்புகளோ காழ்ப்புகளோ இல்லையென்பதை நீங்கள் அறியமாட்டீர்களா என்ன?)

என்னைவிட அதிக #திராவிடமாடல் மதிப்பும் மரியாதையும் பண்பும் பக்குவமும் யாருக்கு வாய்த்திருக்கின்றன, சொல்லுங்கள்? Read the rest of this entry »

…இப்படியும் அன்பர் ஒருவரிடம் இருந்து ஒரு கேள்வி(!); தேவையா? நகைச்சுவைக்கு, அதுவும் மாநிலமே #திராவிடமாடல் நகைச்சுவையாக இருக்கும் நம் தகத்தகாய தமிழகத்தில்  அப்படி ஒரு ஏக்கத்துக்கு முகாந்திரம் இருக்கிறதா? இருக்கலாம்; ஆனால் – ஆனால், நான்கு விஷயங்கள்: Read the rest of this entry »

Yes. You read it right; it is maker samkranti – not makara sankaranti. Bleddy.

Anyway, let me share some belated greetings, notes & images… Read the rest of this entry »

உடையும் செய்தி:

திருப்பூரின் கொடை! அமாச் போராளிகளின் உடை!!

திராவிடனின் கோவணாபிமானம்!!! Read the rest of this entry »