மு. கருணாநிதி வெற்றிக்காகக்கூட பாவம், திமுக, லஞ்ச துட்டு கொடுத்திருக்கிறது! படுகேவலம்!!!

May 15, 2016

என் திருவாரூர் நண்பர் ஒருவர் (இவரது நம்பகத்தன்மை அதிகம்) இரண்டு நாட்களுக்கு முன்னர் எனக்குத் தெரிவித்துள்ளபடிக்கு:

அவருக்கு நேரடியாகத் தெரிந்தே திருவாரூர் சட்டசபை தொகுதியின் விஜயாரூரம், கிடாரம்கொண்டான் பகுதிகளில் திமுக சார்பாக பணம் அமோகமாக விநியோகிக்கப்பட்டிருக்கிறது! (நண்பர், பணத்தை வாங்கிக்கொள்ளாமல் திமுக களவாணிகளைத் திட்டி அனுப்பிவிட்டார்)

குறிப்பு1: எல்லா ‘பெரிய’ கட்சிகளும் பணம் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் திமுக அளவுக்கு மோசமாக இல்லை. (அஇஅதிமுகவைப் பொறுத்தவரை, அது முடிந்தவரை கருணாநிதி எதிர்வோட்டுகளைக் குவிக்க முயன்று கொண்டிருக்கிறது.)

குறிப்பு2: நண்பரானவர், இந்தத் தொகுதியில் சுமார் இரண்டு லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகச் சொன்னார். ஆனால் அனைவருக்கும் இப்பணம் கொடுக்கப்படவில்லை. சில பகுதிகளில் (=நன்கு தெரிந்த திமுக-எதிர் வாக்காளர்களுள்ள பகுதிகள்) இது பாயவில்லை. அவருடைய கணிப்பில் குறைந்த பட்சம், சுமார் 70-80% வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது;  மக்களை ஜேப்படி செய்து திமுக  ‘சம்பாதித்த’ பணம் – நடுவழியில், திமுக தலைவர்கள் போலவே – வாக்காளர்களுக்கு லஞ்சமாகக் கொடுக்கப்படாமலும், உடன்பிறப்புகளால் கையாடல் செய்யப்பட்டும் / கமுக்கமாக அமுக்கப்பட்டும் இருக்கிறது.

குறிப்பு3: பல பகுதிகளில் வாக்குக்கு ரூ 500/- (குறைந்த பட்சம்!); சில பகுதிகளில் ரூ 800 – 1000/-. சராசரியாக வாக்குக்கு ரூ 500/- கொடுக்கப்பட்டதென்றால், சுமார் 150, 000 வாக்காளர்களுக்கு ரூ 750, 00, 000 =  ஏழரைக்கோடி ரூபாய்!

குறிப்பு4: திமுகவும் கருணாநிதிகளும் அடித்துள்ள மகாமகோ கொள்ளைகளுக்கு, கேவலம் இந்த ஏழரைக்கோடி ரூபாய் எம்மாத்திரம்? கருணாநிதிகளின் பேராண்டிகளின் (= அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் பெறப்பட்டவர்கள்/பெற்றவர்கள்) ஒரு வேளைப் பல்குத்தும் குச்சிக்குக் கூடப் பெறாத விஷயம் இது.

குறிப்பு5: பிச்சைக்காசை விட்டெறிந்து வாக்காளர்களை நன்றியுள்ள நாய்களாக மாற்றும் ரசவாதம், திராவிடர்களுக்கே உரித்தான ஒன்று.

குறிப்பு6: நண்பர் சொல்வதை வைத்துக்கொண்டு பார்த்தால், திமுகவுக்கு இதுதான் அவர்களுடைய ஆகக் கடைசி ஆட்டம் எனப் புரிந்துவிட்டது எனத்தான் படுகிறது. எப்படியாவது, மகாமகோ தகிடுதத்தங்களைச் செய்து  மறுபடியும் அரசைப் பிடிக்கத்தான் முயல்வார்கள் எனவும்தான். அதனால்தான் கருணாநிதி படுகேவலமாகவும், அசிங்கமாகவும் வெற்றியடையக்கூட அவர்கள் அபரிமிதமாகத் திருட்டுப் பணத்தைச் செலவழிக்கத் தயாராக இருக்கிறார்கள், செலவும் செய்கிறார்கள்.

குறிப்பு7: அயோக்கியர்கள். இவர்களைத் தமிழகம் இந்தத் தேர்தலில் உதிர்க்கவில்லையானால், பின்வரும் காலங்களில், தமிழகமே இந்த கும்பலால் உதிரிமயமாக்கப்பட்டு உதிர்க்கப்படும். நமக்கு இது தேவையா?

-0-0-0-0-0-0-

…எல்லாம் சரி.  ஆனால்,  இந்த அளவுக்காகவா பயந்துபோயிருக்கிறார்கள், இந்தத் தொடைநடுங்கி உடன்பிறப்புகள்?

கருணாநிதி அவர்களுக்குக்கூட தன் ‘வசீகரத்தின்’மீது இவ்வளவு அவநம்பிக்கையா? தம் கயமையும் இருண்மையும் மக்களுக்குப் புரிந்துவிட்டது என நினைக்கிறாரா?  :-)

…விநாசகாலே விபரீதபுத்தி? அல்லது விபரீத லஞ்சம்?? இந்த முதியவயதில் இந்த எழவெல்லாம் அவருக்குத் தேவையா?

அப்போது திமுக நிஜமாகவே மண்ணைக் கவ்வப் போகிறதா? எனக்கு மகிழ்ச்சிதான். :-))

ஊக்கபோனஸாக, அனைத்து திராவிட/திராவிடச் சாயல் கட்சிகளும் அடுத்த சில வருடங்களில் ஒழிந்தால், எனக்குக் கடவுள் நம்பிக்கை வந்து, திருப்பதி சென்று மொட்டை போட்டுக்கொள்ள நான் தயார்.

ஆனால், திருப்பதி வேங்கடாசலபதி தயாரா?

ஹ்ம்ம்ம்… பார்க்கலாம்! ஆகட்டும் பார்க்கலாம், ஆட்டத்தின் முடிவிலே!

4 Responses to “மு. கருணாநிதி வெற்றிக்காகக்கூட பாவம், திமுக, லஞ்ச துட்டு கொடுத்திருக்கிறது! படுகேவலம்!!!”

  1. nparamasivam1951 Says:

    உண்மை நிலவரங்கள் அவ்வாறு தான் உள்ளன. ஐயாவும் இல்லை, அம்மாவும் இல்லை. தொங்கு சட்ட சபை தான். அப்பிடி இப்பிடி ஆள் சேர்த்து, அம்மா வரக்கூடும் கூட்டணியாக. ஆனால் ஐயாவுக்கு அதுக்கும் வழி இருக்காது.

  2. shiva Says:

    Its strange,

    In normal circumstance in tamil nadu,
    1) If a person takes bribe, he is accused.
    2) If a prostitute commits prostitution (by taking money), she is the accused.

    So how are the people taking money here considered innocent and in what way they are better than a prostitute/ or a corrupt person? and why are we blaming the political parties.

    (Note: I use prostitutes here as a metaphor for having no standards, and as such those poor souls are any-day better than these maakal and i don’t disrespect their choice of profession.


    • Sir Shiva,

      This tendency of ‘corrupting ourselves morally & intellectually, but blaming it on the others’ etc can be called (to borrow a phrase from my beloved John Pilger): Normalization of the the Unthinkable.

      Thanks to the dastardly dravidianism, this is what has happened. We the people are to be blamed for it. No one else.

      For this ONE reason ALONE, I would say that the so called ‘Great Tamil Culture’ is nothing but a pack of cards.

      We are very ordinary, greedy, ignorant and arrogant people.

      We are banal. Sorry.

  3. ravi Says:

    ram, both the groups are competing with each other in giving money.
    but my doubt is, inspite of being on the opposition for 5 years, where did DMK got such money.
    amount spent by DMK is far higher than admk..


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s