மு ‘முக்காலே மூணு வீசம் கிணற்றைத் தாண்டிய’ கருணாநிதி: சில குறிப்புகள்

May 22, 2016

பொய்கள், அண்டப் புளுகுகள், புள்ளியியல் விவரணைகள் – என, ஒரு ஆங்கிலப் பதம் (= Lies, Big lies & Statistics) உண்டு.

பொய்களும் புரட்டுகளும் தாம் திராவிட முயக்கங்களின் அடிநாதம். அதன்மேல் கட்டமைக்கப்பட்டவைதாம் பிற திராவிடக் கொள்ளைகள்! (திராவிடர்களுடைய ஐம்பெரும் கொள்கைகள் என்றாலே நமக்குத் தெரியும், அவை – குடியும், கூத்தும், கொள்ளையும், ஜாதிவெறியும், பொய்மையும் மட்டுமே )

இதற்கு அப்பாற்பட்டு – அடிப்படை புள்ளியியல் விவரணைகளை, பாவப்பட்ட எண்ணிக்கைகளை – தமக்கேற்றவாறு சுழற்றிக் கவிழ்த்தி உருட்டிப் புரட்டி சம்மட்டியால் அடித்து, ஊதிப் பெருக்கி உபயோகப்படுத்திக்கொண்டு கரமைதுனம் செய்துகொண்டு இன்புறுவது என்பது ஒரு கலை. இதில் திராவிடர்கள் விற்பன்னர்கள்.

திமுகவுக்குச் சாதகமாக புள்ளியியல் ரீதியாகத் தொகுக்கப்பட்ட(!) அரைகுறை எக்ஸிட் போல் எழவுகள், கேளிக்கைகள் பதிப்பிக்கப் பட்டபோது அளவுக்கு மீறிய புளகாங்கிதத்துடன் குரங்குக் குட்டிகள் போலத் துள்ளித் துள்ளிக் குதித்தல்கள்; பின்னர் அவை அரைகுறைகள் என நிரூபிக்கப்பட்டபின் அவற்றைக் குதறாமல், தோல்விக்குக் காரணமாக பணம் பிணம் எனப் பிதற்றுவதிலும், தேர்தல் ஆணையத்தைச் சாடுவதிலும் இந்தத் திராவிடர்கள் கைதேர்ந்தவர்கள்.

தம் நகைக்கத்தக்க தோல்விகளுக்கு திமுகவினர் – தம் அயோக்கியத் தனங்களை, கூட்டுக்கொள்ளைக் குடும்பத்தை, சுயலாபக் கயமைகளைக் காரணங்களாக மிகச் சரியாகவே பார்க்காமல் – ஏதோ பிறத்தியார் விஷயங்களை, தொடர்பேயற்ற புள்ளிவிவரங்களைக் காரணம் காட்டுவது என்பது நடிப்புக் கலையின், குடும்ப அங்கத்தினர்கள் ஒருங்கிணைந்து, ஆனந்தமாகக் கூட்டுகரமதுனம் செய்வதன் உச்சம்.

நடிகர் திலகம் என அழைக்கப்படத் தகுதியானவர், சர்வ நிச்சயமாக அந்த ‘உணர்ச்சிப் பெருக்கார்’ சிவாஜி கணேசனார் அல்லர். அந்தப் பட்டத்துக்குப் பல திராவிடத் தலைவர்களிடையே போட்டாபோட்டி நிலவுகிறது.

-0-0-0-0-0-0-

இவற்றில், இம்மாதிரிக் கயமைச் சப்பைக்கட்டல்களில் பல வகையறாக்கள் இருக்கின்றன:

நோடா:
‘தாம் யாருக்கும் வாக்களிக்க விருப்பப்படவில்லை’ வகை நோடா ஓட்டுகளால் தான் திமுக தோற்றது. இல்லாவிடில் பலப்பல மேற்படி தொகுதிகளை வென்றிருப்போம்.
அதெப்படி நோடா இல்லாவிட்டால், அதற்கு வாக்களித்த(!) அனைவரும் திமுகவுக்குத் தான் போட்டிருப்பார்கள் எனும் நோக்கு? மக்களுக்குத் தேர்ந்தெடுக்க பிற அயோக்கிய திராவிடக் கட்சிகளே இல்லையா என்ன? பங்கு பிரித்துக்கொண்டு பாங்குடன் பங்கியடிங்கடா, சில்ரப் பசங்களா!

ஏமாந்தால் ‘நோடா’ வகையறாக்களுடனுமேகூட கூட்டணி வைத்து அதற்கும் ரெண்டு தொகுதிகளை ஒதுக்கி இன்புறத்தானே திமுகவினர் முயன்றிருப்பார்கள்? எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றுதானே தேர்தல் சமயம் கூட்டணி பைத்தியம் பிடித்து, ‘கேப்டன்’ பழம் நழுவிப் பாலில் விழ பால்குவளையுடன் திருக்குவளைத்தனமாக ஆண்டிப்பண்டாரங்களைப் போல அலைந்துகொண்டிருந்தார்கள்?

திராவிட அறிவிலிகளின் ‘நோடாவால் வீழ்ந்தோம்!’ வகை விளக்கங்கள் விழுந்துவிழுந்து சிரிக்கத்தக்கவை, அவ்வளவுதான்.

சதவீதம்:
“அதிமுக – திமுக இடையில் 1.1 சதவிகிதம் தான் வித்தியாசம் என்றும், இருந்தாலும் எதிரணியினர் ஆளும்கட்சி, நாங்கள் பிரதான எதிர்கட்சி!” (திமுக தலைவர் கருணாநிதி விளக்கம்)
மு கருணாநிதி அவர்களுக்கு சதவீதம் x சதவிகிதம் என்பவற்றுக்குள் இருக்கும் வித்தியாசம் தெரியவில்லை. சாக்காடு வரப்போகும் இக்காலகட்டத்தில், அதனை விழுக்காடு என்றாவது குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் பாவம், அவர் தமிழ் வம்சாவளியினர் அல்லர், தமிழைக் கற்றுக்கொண்டிருக்கிறார், ஆகவே தமிழ் சரியாக வரவில்லை என்று அவருடைய விடாமுயற்சியைப் பாராட்டி விட்டுவிடுவோம்.

கூட்டணி ஓட்டுகளை, தம் ஓட்டுகளாகப் பார்த்துக்கொள்வது, பின்னர் தம்முடைய கூட்டணி ஓட்டுகளுடன், ஏறக்குறைய ஒண்டியாக நின்ற எதிர்க் கட்சியின் (=அஇஅதிமுக) ஓட்டு எண்ணிக்கைகளை ஒப்பிட்டுப் பேசுவதற்கு – ஒரு கூச்சமற்ற தன்மை வேண்டும்.

ஆனால் திராவிட குல திலகங்களுக்கு இதெல்லாமா ஒரு பிரச்சினை, சொல்லுங்கள்?

துட்டு வாங்கிக்கொண்டு நன்றியுடன் ஓட்டுப் போட்டவர்களுக்கு நன்றி:

திருவாரூர் தொகுதியில் கழக வேட்பாளராக இரண்டாவது முறையாக அந்த மண்ணின் மைந்தன் என்ற முறையில் போட்டியிட்ட நிலையில், 1 லட்சத்து 21 ஆயிரத்து 473 வாக்குகளை அளித்து, தமிழ்நாட்டிலே அதிக வித்தியாசமான 68 ஆயிரத்து 366 வாக்குகள் கூடுதலாக அளித்து வெற்றி பெறச் செய்த திருவாரூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றியினைக் குவிக்கின்றேன். (திமுக தலைவர் கருணாநிதி நன்றி நவிலல்)
திருவாரூரில் குறைந்த பட்சம் சுமார் 150, 000 வாக்காளர்களையாவது, அசிங்கமான ஓட்டுப்பணப் பொறுக்கிகளாக மாற்றியிருக்கிறார்கள் இந்த திமுகவினர்.

அதாவது கருணாநிதி அவர்களின் வெற்றியும் அமோகமாக வாங்கப் பட்டதுதான்.

அதாவது,  கையூட்டு பெற்றுக்கொண்ட எந்த வாக்காளக் கழுதையும், கருணாநிதி அவர்களுக்கு ஒரு ‘மண்ணின்(!) மைந்தன்(!!)’ என்ற அளவில் வாக்களிக்கவில்லை. துட்டு வாங்கிக்கொண்டு அதற்கேற்ப நடக்கவில்லையானால் மனச்சாட்சி(!) குத்துமே என்ற அளவில்தான் ஓட்டுகளை ஒப்பேற்றியிருக்கிறார்கள்.

இந்த அழகில், இந்த வாக்காளர்களின் நன்றியும், அதற்கு ஒரு கயமை நன்றிநவிலலும்தான் கேடு!

மு ‘முக்காலே மூணு வீசம் கிணற்றைத் தாண்டிய’ கருணாநிதி:

சட்டசபை 15வது பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 232 தொகுதிகளிலும் தி.மு. கழகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு 1 கோடியே 71 லட்சத்து 75 ஆயிரத்து 374 வாக்குகள் அதாவது 39.7 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன. அ.தி.மு.க. அணிக்கு 1 கோடியே 76 லட்சத்து 17 ஆயிரத்து அறுபது வாக்குகள் அதாவது 40.8 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

“இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. அணிக்கும், தி.மு.க அணிக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 4 லட்சத்து 41 ஆயிரத்து 686 வாக்குகள் தான்; அதாவது 1.1 சதவிகிதம் வாக்குகள் தான் இரண்டு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம். எப்படி என்றாலும் அவர்கள் ஆளும்கட்சி. நாம் எதிர்க் கட்சி. எதிர்க் கட்சி என்றால், தமிழகச் சட்டப் பேரவையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு 89 உறுப்பினர்களைக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் தான் பிரதான எதிர்க்கட்சி.

அய்யா கருணாநிதி அவர்களே! பாழுங்கிணற்றினை முக்காலே மூணுவீசம் தாண்டினாலும், நீங்கள் கிணற்றுக்குள் தானே விழுவீர்கள்? இதுதானே நம் தேர்தல்முறை? இதே தேர்தல் முறையை (=rules of the game) வைத்துக்கொண்டுதானே முன்னர் பலமுறை ‘வெற்றிக் கனியைப்’ பறித்திட்டீர்கள்?

அப்போதெல்லாம், உங்களுடைய எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக இப்படியெல்லாம் பிலாக்கணம் வைக்கவில்லையே? திருவிளையாடல் ‘தருமி’ போல, அப்படியும் இப்படியும் அல்லாடவில்லையே?

ஏன் இப்போது மட்டும் அப்படிச் செய்கிறீர்கள்? ஹ்ம்ம்?? பரிதாபமாக இருக்கிறது.

உங்களையும் உங்கள் கட்சியினரையும், அவர்கள் விருப்பப்படி ‘மக்கள்’ கடலில் தூக்கிப் போட்டிருக்கிறார்கள், உண்மைதான். ஆனால், உங்கள் கூற்றுப்படியே, நீங்கள் கட்டுமரமாக ஆகி ஆனந்தமாக மிதந்துகொண்டிருக்கமுடியாதா என்ன?

மிதப்பு என்றாலே வறட்டுப் பெருமிதம்தானே?

 

 

5 Responses to “மு ‘முக்காலே மூணு வீசம் கிணற்றைத் தாண்டிய’ கருணாநிதி: சில குறிப்புகள்”

  1. Yayathi Says:

    You’re right and it is so typical of DMK. Whenever they win by a narrow margin or the vote to seat conversion is in their favor, they would not make such noises. In the 1967 assembly election, Congress got 41.1% of the vote share, but got only 51 seats, which would be 21.8% of vote share. DMK got 40.7% of the vote share and 137 seats, which is 58.6% of seat share. Similarly, in the 2006 election, ADMK got 32.6% of the vote share and 61 seats, which is 26.1% of seat share, while DMK got 26.5% of vote share and 96 seats, which is 41.03% of seat share.

  2. ஆனந்தம் Says:

    தோல்விக்குக் காரணங்களை உண்மையாக ஆராய்ந்து சுய பரிசோதனை செய்து அவர்கள் உருப்பட்டுவிட்டால் அது நமது தேசத்துக்குத்தானே கேடாகும்? தேர்தல் ஆணைய சதி, ஆரிய சதி, பார்ப்பன சதி என்று உளறிக்கொண்டு அவர்கள் இப்படியே இருக்கக்கடவது! அடுத்த தேர்தலில் இன்னும் உதிரக்கடவது!

  3. A.Seshagiri. Says:

    “குடும்ப அங்கத்தினர்கள் ஒருங்கிணைந்து, ஆனந்தமாகக் கூட்டுகரமதுனம் செய்வதன் உச்சம்.”
    ஆஹா! ஆஹா!! எப்படிப்பட்ட ‘சொல்லாடல்’ கட்டுமரத்தைப் பற்றி எழுதுவது என்றால் உங்களுக்கு தனி “குஷி” வந்து விடுகிறது!

  4. paamaranselvarajan Says:

    பல வித கணக்குகள் … புலம்பல்கள் ..தேர்தல் ஆணையத்தை குறை கூறுவது என்பதெல்லாம் தான் அவரது மாமூலான வழக்கமாச்சே …. என்றுமே ” மாறாத ” ஒரே … மனிதர் ?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s