ஒரு கல்வித்தந்தையின் இறப்பு (good riddance too!)

June 22, 2016

…இன்றுதான் இந்த மகாமகோ ஜேப்பியார் இறந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இந்த மனிதரைப் பற்றியும் இவரது மகத்தான சமூகப் பங்களிப்புகள் பற்றியும் முன்னமே ஒருதடவை எழுதியிருக்கிறேன்கூட.

-0-0-0-0-0-0-

என்னைப் பொறுத்தவரை தமிழகத்தின் கல்வித்தந்தைகளின் தொடர்ந்த அகால மரணங்களை, அவர்களுடைய சைனாக்கார எஞ்சினீயர்கஞ்சினீயர் தொழிற்சாலைகள், கல்விப் பம்மாத்துகள் இழுத்து மூடப்படுவதை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்; குறைந்த பட்சம், அவற்றின் தொடர்ந்த சரிவை விழைகிறேன். நன்றி.
ஏனெனில் — இவற்றால் ஏற்பட்ட தரம் தாழ்த்தல்களும், அதற்குத் தொடர்ந்து தமிழகமும் நம் பாவப்பட்ட இளைஞர்களும் கொடுக்கும் விலையும் மிக அதிகம்.

என் மேற்கண்ட கருத்து, கொஞ்சம் மோசமாகவே படலாம். ஆனால் அது அப்படியல்ல எனச் சப்பைக்கட்டு கட்டமாட்டேன். ஏனெனில், என் விருப்புவெறுப்புகளைப் பற்றிய என் அனுமானங்கள் பொதுவாகவே தர்க்கரீதியாகவே இருக்கின்றன என்பதை அறிவேன். அவை உங்களுக்குப் பிடிக்காவிட்டால், அப்படியே ஆகட்டும். மேலும், இறந்தவர்களைப் பற்றி மோசமாக எழுதுவது கூடாது என குடாக்குத்தனமாகச் சிந்திப்பது எனக்கு ஒத்துவராது.

-0-0-0-0-0-0-

ஹ்ம்ம்… என்னுடைய பிரச்சினையென்னவென்றால் – தமிழகத்தில் இருக்கும் ஒரு கல்வித்தந்தை(!)யைக்கூட என்னால் மதிக்கமுடியவில்லை; இதற்குக் காரணங்கள் பல – அவற்றில் மூன்றினை மட்டும் கீழே தருகிறேன்:

1. இந்த மாக்களில் ஒருவர்கூட உழைத்துச் சம்பாதித்த பணத்தில், தொழிற்சாலைகளை நேர்மையாக நடத்தி ஈட்டிய லாபத்தில், அல்லது பூர்வாஜித சொத்துக்களை விற்று வந்த ரொக்கத்தில் – இந்தக் கலவிச்சாலைகளைக் கட்டவில்லை. எல்லாம் ஊழல் பணம் மட்டுமேதான்! இவர்கள் –  கல்வியின் மீதான ஆவலால் எந்த எழவையும் கட்டியெழுப்பவில்லை. வெறும் மாயாஜால பிம்பமாக, தங்களை என்னவோ போற்றத்தக்க(!) கல்வியாளர்களாகக் கருதிக்கொண்டு மினுக்கிக் கொள்ளவும், தங்கள் பித்தளைத்தனமான சமூக அந்தஸ்தை நிறுவிக்கொள்ளவும், இழிவகைகளில் ஈட்டப்பட்ட துட்டினை பாதுகாப்பாக ஒரிடத்தில் வைக்கவும் – போன்ற அரிப்புகளினால் மட்டுமே ‘கல்வித்தந்தை’களாகியிருக்கிறார்கள்!

2. சொல்லிக்கொள்ளும்படியான வசதிகளோ, போற்றத்தக்க பேராசிரியர்களோ, மாணவர்களின் தரமோ இவற்றில் பெரும்பாலும் இல்லவேயில்லை. (ஓரிரு ஆசிரியர்கள், மாணவ விதிவிலக்குகள் இவற்றில் இருக்கிறார்கள் என்பதை அறிவேன், ஆனாலும் இவர்கள் விழலுக்கு இறைத்த நீர்போலத்தான்!); எப்படியும் முதலீடுக்கு ஊழல்பணம் உதவியிருக்கிறது – கையை விட்டா காசு போட்டார்கள் இவர்கள்? ஆகவே, அதற்குமேல் பாவப்பட்ட முட்டாக்கூ மாணவர்களின் பெற்றோர்களிடம் வாங்கும் பணத்துக்காவது நேர்மையாக நல்ல கல்வியைக் கொடுக்கலாம். ஆனால் அதுவும் செய்வதில்லை…  சம்பளமும் சரியாகயில்லை, உபகரணங்களும் இல்லையென்றால் இவர்களுடைய வாத்திகளின் தரம் எப்படியிருக்கும், சொல்லுங்கள்?

3. இக் கலவி சாலைகளின் தலைமை, வழி நடத்துதல் போன்றவையெல்லாம் – இக்கல்வித்தந்தைகளின் ரெண்டுங்கெட்டான் வகையறா குடும்பத்தினரிடம் மட்டுமே இருக்கின்றன. எந்த எழவுக்கும் – ஒரு சரியான கல்வியாளரின் தலைமையில்லை, வழி நடத்துதலில்லை. எப்படியும் எனக்கும் புரிகிறது – இம்மாக்களின் குறிக்கோள் கல்வியைப் புகட்டுவதா, பணம் பண்ணுவதா என்றால் இவர்கள் எதைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று… ஆகவே இவற்றுக்கு விமோசனம் இல்லை.

… உடனே கேட்பார்கள், எழுதுவார்கள் – டேய், அப்படியானால் இக்கல்லூரிகளுக்கு ஏன் இன்ஃபோஸிஸ், டிஸிஎஸ், விப்ரொ வகையறா நிறுவனங்கள் ஏன் ஓடிச்சென்று மாணவர்களை அள்ளுகின்றன என்று? ஏன் கலவிமாமாக்களின் கலவித் தொழிற்சாலைகளைக் கரித்துக்கொட்டுகிறாய் என்று…

பதில்: அந்த நிறுவனங்களுக்கு, அவை தரும் பணிகளுக்குத் தரம் தேவையில்லை, அவ்வளவுதான்.

மேலும் கேட்பார்கள்: சரி. ஆனால் இதே மாணவர்கள் வெளி நாடுகளுக்குச் சென்று ஸெட்டில் ஆகி விடுகிறார்களே, அது எப்படியென்று?

என் பதில்: மேல்நாடு போய் ‘ஸெட்டில்’ ஆவதற்கும், அவர்கள் அங்கும் செய்யும் வேலைஎழவுகளுக்கும் ஒரு பெரிய தகுதியும் தேவையில்லை, அவ்வளவுதான்!

Unfortunately, we celebrate mediocrity. We revel in it. We praise random things for all the wrong reasons. This is what our Dravidian movement has taught us.

All hail discordia!

Amen.

-0-0-0-0-0-0-0-

சரி. இப்போது, உங்களுக்குக் கொஞ்சம் சிரித்தால் தேவலையென்றால் – அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற, இசுடாலிர் தலைமை வகித்த ஒரு மாணவர் கூட்டத்தைப் பற்றி எழுதப்பட்ட ஒரு பதிவைப் படித்துத் தலையில் அடித்துக்கொள்ளவும்…

-0-0-0-0-0-0-0-

தமிழகக் கல்வித்தந்தைமாமாக்கள் குறித்து மேலும் படித்து விசனப்பட:

18 Responses to “ஒரு கல்வித்தந்தையின் இறப்பு (good riddance too!)”

  1. Deeban Says:

    I am a product of one of his horrible institutions. Got selected by HCL . I did not take the job came to Germany for my Masters. I would have done that even if I had studied in any institutions in any bigger city.

    I have to state a few things which haunted me during my time:

    *The forced discipline has corrupted a lot of students. Any of Jeppiar institutions is a factory to manufacture machines of different departments which eventually joins an IT company or end up in Masters.

    *All the above points in the article are 100% true. teachers are seriously un-qualified. My hostel warden who used to be a part time gunda was given a free seat in Engineering(he had a Diploma before) .Now he is one of the Professors there :D HAil JPR !He will most likely spend his entire lifetime there .Free food, Good Job …. Poor Students.. And he is not the only one .There are many of his kind. There were some talented Mallu, North Indian professors .Most of them left as they just couldn’t bare it .

    *You ask them anything , the only answer from them would be , We get you a job. To be honest, they spend a lot on Training for these jobs which is really good as it is done by experts from outside.

    *Mindless dress code . Compulsion for Id cards. This is a serious issue. There are people appointed only to check beard, hairstyle,pants and ID card. One of our seniors even composed a song out of it. (https://www.youtube.com/watch?v=9P70IsTOU7g)

    *For me the most frustrating issue was the lack of books in Library .Below is the the picture with all its Grandeur. This library has only 20-25 rows of bookshelves. With the single part of 25 row being General books (puzzles, CAT, GRE , TOEFL guides). As they have more than 10 departments of Engineering and Management combine for sure they do not even have good books on Engineering too. Magazines were the only solace.
    With no option of going out from Hostel , Library is theonly place we hostel students could go to read . The situation is still the same.

    One of my college senior , the son of JPR’s son in law has taken over the college. And I wonder how any parent could choose this monstrosity of a college for their son/daughter.

    I do agree with the Anna university standards, getting abroad is pretty easy. We beat the students of other states pretty easily as their grading system is strict. But passing out from a University with THesis compulsory is a big deal. My bachelors education had no impact on my MastersEducation. I learnt everything from Scratch. No amount of thinking is needed to finish a BAchelors degree from Anna university . Its quite different in Germany. The students neither regret his demise nor consider him a Educationist.

    Thanks to the wonderful standards of AICTE and ANNA university !

    (http://static.learnof.com/learnof/ImageUploads/institute-gallery/original/13642_StJoseph%27sCollegeofEngineering_1432534829_original.jpg )


    • அன்புள்ள தீபன், கொட்டி விட்டீர்கள்! :-(

      எனக்கு நன்றாக நரிமுகம் ஆனவர்களும், ஏன், என் சொந்தக்காரர்களுமேகூட இக்கலவிக் கசாப்புக்கடைகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ந்திருக்கிறார்கள். எனக்கு, இம்மாதிரி பெற்றோர்கள் இப்படிச் செய்தது/செய்வதுதான் ஆச்சரியம்.

      இருந்தாலும் – உங்களைப் போன்ற ஒருசிலர் தாங்கள் அமிழ்த்தப்பட்ட சகதியிலிருந்து மேலெழும்பி வருவதும், தொடர்ந்து சிந்தித்து உன்னதங்களை நோக்கிப் பயணம் செய்வதும் நடக்கிறது. இது எனக்கு மேலதிக ஆச்சரியம்! நகைச்சுவை உணர்ச்சியும் (அது கிண்டலுக்காகவே இருந்தாலும் கூட = HAil JPR) இருப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது! :-)) வாழ்க! பொலிக!!

      ஆனால், என்னுடைய சோகம் என்னவென்றால் – பல (நகரத்தில் வாழ்க்கையோ, படிப்பறிவோ, தொடர்புகளோ இல்லாத) பெற்றோர்கள் தங்கள் சொத்துகளை விற்று, தம் பெண்பிள்ளைகளை ஒருவிதமான மேற்படிப்புமில்லாமல் முடக்கி – தன் ஆண்பிள்ளைகளை இக்கசாப்புக் கடைகளுக்கு அனுப்புவதுதான்…

      பஞ்ச மனப்பான்மையென்பது நம் அடிப்படை உரிமைகளில் ஒன்றோ?

  2. ravi Says:

    இருக்கக்கூடிய சுமாரான கல்வி தொழிற்சாலையில் இந்த தொழிற்சாலை பரவாயில்லை …அம்புட்டுதான் ..
    ஏதோ தலைக்கு மேல் கூரை, பேருக்காவது வாத்தியார் இருக்கிறார்கள்.. எங்கள் ஊர் பக்கம் எல்லாம் வந்து பாருங்கள் .. பொட்டல் காட்டுக்கு நடுவே ஒரே ஒரு கட்டடம்.. அதையும் நம்பி பலர் அங்கே வந்து சேர்ந்து படிக்கின்றனர்..
    பெற்றோர்கள் பாவம்..வாழ்க்கை போராட்டத்தில் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை .. இதை விட மோசம் பள்ளிகளின் நிலை .. கவனித்தீர்களா என்று தெரியாது.. சிறு நகரங்களில் கூட பொறியியல் பாடங்களுக்கு இன்று டியூஷன் வகுப்புகள் வந்து விட்டது .. கண்ணுக்கு எட்டியவரை தீர்வு ??

  3. BALASUBRAMANI ARUNACHALAM Says:

    இவர்களில் பலர் ஆரம்ப காலத்தில் கள் வித்த ஆந்தைகள், அது மருவி கல்வித்தந்தைகள் ஆனவர்கள்.

  4. poovannan73 Says:

    கால்பந்து கற்று தர ஒரு அகாடெமி துவங்குகிறார்கள் என்று வைத்து கொள்வோம்.அது துவங்கி 30 ஆண்டுகள் ஆன பின்பும் பார்த்தால் இந்தியா கால்பந்து விளையாட்டில் 156 இடத்தில் இருந்து 162 ஆவது இடத்திற்கு இறங்கி இருப்பது தெரிய வருகிறது.

    அதனால் கால்பந்து அகாடெமி துவங்குவது,துவங்கியது தவறு என்று ஆகி விடுமா .கால்பந்து தயாரிப்பது,கால்பணத்தை பற்றி பேசுவது,கால்பந்து விளையாடுபவர்களை பற்றி கட்டுரை எழுதுவது,சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு உதவ இருக்கும் குழுக்களில் சேருவது என்று அந்த அகாடெமியில் படித்தவர்கள் பலருக்கு வேலை கிடைக்கிறது.இந்த வேலைகள் இழிவானவையா

    உசைன் போல்ட் ஐயும் ,மரடோனாவையும் ,ஐன்ஸ்ட்டின் ஐயும் உருவாக்காவிட்டால் அவற்றால் பயன் இல்லை,அவற்றால் கெடுதல் தான் என்று கரித்து கொட்டுவது நியாயமா

    இன்று தமிழ்நாடு தான் இந்தியாவின் பெரிய மாநிலங்களில் GER அதிகமாக இருக்கும் மாநிலம்.இங்கு கல்லூரிகளில் படிக்கும் 12 1/2 லட்சம் மாணவமாணவிகளில் பெண்கள் ஆண்களை விட அதிகம்.இந்த நிலை உருவானதில் ஜேப்பியார் போன்றவர்களின் பங்கு அதிகம்.இதை பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத தமிழகத்தின் மீதும் இங்கு வசிப்பவர்கள் மீதும் ஆஸ்ந்த வெறுப்புணர்வை கொண்டவரின் ஆற்றாமை தான் இந்த பதிவு

    திருடனாக இருந்து திருமங்கை ஆழ்வாராக மாறிய,வாலமீகி கதைகள் ஜேப்பியாருக்கு பொருந்தாதா.இவரின் கதையும் ஒரு வாள்மீகியின் கதை தானே

  5. poovannan73 Says:

    நம் கலாச்சாரத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக திருடனாக இருந்தவன் ,பெண்பித்தனாக கொடூரனாக இருந்தவன் ,தாயை வெட்டி கொன்றவன்,பல ஆயிரம் மக்கள் இறக்க காரணமாக இருந்தவன்தா.க்ஷத்ரிய வம்சத்தை கூண்டோடு அழித்தவன் தான் பின்னாளில் ஆழ்வாராக ஜேப்பியாராக நாயனாராக உருவெடுத்து வருவது நடந்து வருகிறது.

    இந்த தொடர்ச்சியின் படி பார்த்தால் ஜேப்பியார் ஆழ்வாராக நாயன்மாராக போற்றப்பட வேண்டியவர்.அரசு பணத்தை கையாடல் செய்து பத்ராசலம் கோவில் கட்டிய ராமதாசர் போற்றப்படும் போது ஜேப்பியார் ஏன் போற்றப்பட கூடாது.

    • பொன்.முத்துக்குமார் Says:

      தாராளமாக செய்யவேண்டியதுதான் பூவண்ணன். பின்னே ? குஷ்பூவுக்கு கோயில் கட்டிய கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் ஜேப்பியாருக்கு காவியம் வடிக்காவிட்டால்தான் தமிழகத்துக்கு அவமரியாதை.

      தமிழன்னை இறும்பூது அடைந்துவிடமாட்டாளா என்ன ?

  6. poovannan73 Says:

    ஜேப்பியாரும் ஒரு பக்த ராமதாசர்.

    இல்லாத ராமனுக்காக அரசு பணத்தை கையாடல் செய்து கோவில் கட்டி அதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.ஆனால் ஜேப்பியார் இம்மண்ணில் வாழ்ந்த ராமச்சந்திரன் மேல் அந்த பக்த ராமதாசரை விட அதிக பக்தியும் உண்மையான பற்றும் கொண்டு வாழ்ந்தவர்.

    அந்த ராமனை நம்பிய ராமதாசர் அடைந்த துன்பங்கள் அளவிடமுடியாதது.ஆனால் இந்த ராமச்சந்திரதாஸர் வாழ்வில் அனைத்தும் ஏற்றம் தான்.பெறு வாழ்வு வாழ்ந்து சீரும் சிறப்புமாக வயதான காலத்தில் உயிர் துறந்து ராமச்சந்திரன் திருவடி சேர்ந்த ஒருவரை,ராமச்சந்திரனின் தாயாருக்கும் கல்விக்கோவில் கட்டிய ஒருவரை இழிசொல் கொண்டு வைவது சரியா .தெய்வ குத்தம் ஆகி விட போகிறது.ராமனை விட சக்தி வாய்ந்தவர் எம் ஜி ராமச்சந்திரன்


    • அய்யா! தங்களுடைய, கொப்பளித்தோடும் அபரிமிதமான நகைச்சுவையுணர்ச்சியின்மேல் நான் வைத்திருக்கும் நம்பிக்கை, என்றைக்குமே வீண்போனதில்லை.

      நன்றி.

      • பொன்.முத்துக்குமார் Says:

        நான் சொல்ல நினைத்ததை சொல்லிவிட்டீர்கள் ராம்.

  7. Ramjiyahoo Says:

    அற்புதம், உண்மை

  8. க்ருஷ்ணகுமார் Says:

    க்கும்………….ராம் ஏதோ நீங்கள் தான் பூவண்ண ஹாஸ்ய விலாஸத்தை மொத மொதக்கா பாத்து பூரித்தது மாதிரி…………….. என்னா இறுமாப்பு !!!!!

    மேஜர் சாஹேப் ஏற்கனவே ஸ்ரீ ஜடாயுவின் ஃபேஸ் புக் பக்கத்தில் தாண்டவம் ஆடி விட்டார்.

    அதனுடைய ரிப்பீட் வெர்ஷன் தானாக்கும் இது. அக்காங்.

    உலகத்திற்கு Neuclear Proliferation Treaty யே சாத்யமில்லாத போது இணையத்திற்கு Poovannan Proliferation Treaty சாத்யப்படுமா?

    பூவண்ணன் சார் அவருடைய ஹாஸ்ய விலாஸத்தை அங்கிங்கெனாத படி எங்கெல்லாம் காபி பேஸ்ட் செய்திருக்கிறாரோ என்பது அல்லாவுக்கே வெளிச்சம். எல்லாப்புகழும் அல்லாவுக்கே. அல்லா அல்லா டொட்டடொய்ங்க் டொட்டடொய்ங்க்


    • :-) ​நான் ஃபேஸ்புக்கில் இல்லை. :-)

      இல்லாமலிருப்பதற்கு இப்போது இன்னுமொரு காத்திரமான காரணம். :-))

      பூவண்ணன் ஸாஹேப் அவர்களைப் பொறுத்தவரை, அது nuclear proliferation treatyயாக இருக்க முடியாது. ஆனால் unclear proliferation treatyயாக இருக்கலாமோ? அல்லாவுக்கு வெளிச்சமாக இருந்தாலும், இங்கு இருண்மைதானே?

      ஹ்ம்ம்… அவரைப் நேரில் பார்த்துக் கொஞ்சம் ஆதூரமாகப் பேசவேண்டுமோ? (அதாவது, ‘கேட்டுக் கொள்ள’ வேண்டுமோ?)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s