தயவு செய்து…

உங்களிடம் கண்ணீர் மல்க மன்றாடி, நெஞ்சு விம்ம, மூக்குச்சளி ஒழுக, நெடுஞ்சாண் கிடையாக உங்கள் காலடியில் விழுந்து, நிபந்தனையற்றுச் சரணாகதியடைந்து கேட்டுக் கொள்கிறேன் –  நம் தமிழகத்துக்காக, பாவப்பட்ட சகதமிழ் வாசகர்களின் மன நிம்மதிக்காக, இதைக்  கூடவா உங்களால் செய்ய முடியாது? :-(

… ஏனெனில், அவர்கள் இந்தச் செய்தியைப் படித்துவிட்டு, காணொலியைப் பார்த்துவிட்டு எம்மாதிரி கந்தறகோள தத்துப்பித்துவ மலச்சிக்கல் கவிதையையும், மகாகோர மனிதச்சிங்கநேயக் கட்டுரையையும் ஊசிப்போன உப்புமாப் பிண்டங்களாக, முறையே, முறையாக, ஒரு வரைமுறையே இல்லாமல் அநியாயத்துக்குக் கிண்டி – நம் மாசிலா நற்றமிழ்த் தாயின் உயிரை – முறையே மாறுகவிதை, மாறுகட்டுரை வாங்கி ஒருவழி  செய்துவிடுவார்களோ என்பதை நினைத்துப் பார்த்தாலே கதி கலங்குகிறது… :-(((

அம்மணிகளே, அய்யாமார்களே!  தயவுகூர்ந்து, புரிந்துகொள்ளுங்கள். Read the rest of this entry »

கொட்டை (அல்லது) விடுதலைப்புளி
(ஆக்கம்:பெண்ணியக் கவிமாமணி  ராக்ஷசபுத்திரி)
டொன்மைமிகு டொல்காப்பியப் பூங்காவில்
மரத்தின் கீழ் விழுந்த புளியம்பழத்தை
மனுஷ்யபுத்திரன் ஒருவன்
பிய்த்துச் சாப்பிட்டுவிட்டான்.
பிராண்டிப் பிய்ப்பதற்கு முன்
நீ பிரெண்டா இல்லையா என
பத்து நிமிடம் கத்திக் கொண்டே
உற்றுப் பார்த்துக்கொண்டு அதனை
அன்ஃப்ரெண்ட் செய்தான்
கருத்துப் படம்: முன் நவீனத்துவ புளியம்பழமும், பின் நவீனத்துவ புளியங்கொட்டையும் (படத்தின் உரிமம்: மயிர்மை என அறியப்படும் ஹேர்டை பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திடம்; அவர்களுக்கு நன்றிகள் பல!)

கருத்துப் படம்: முன்நவீனத்துவ புளியம்பழமும், பின்நவீனத்துவ புளியங்கொட்டையும் (படத்தின் உரிமம்: ஹேர்டை பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திடம்; அவர்களுக்கு நன்றி பல!)

வழுக்கி விழுந்துகொண்டிருக்கும்
புளியம் பழத்தை பின் வழித்தெடுத்து அதன்
தத்துப் பித்துவார்த்த பிரச்சினையை
நீர்க்கச் செய்து புளியோதரை செய்யலாமா
என எண்ண வேண்டியிருந்தது அவனுக்கு Read the rest of this entry »

இன்று ஸெப்டெம்பர் 21.  மகத்தான  ராஜனி திராணகம அவர்களின் 25வது நினைவுநாள்.
ராஜனி திராணகம (படத்துக்கு நன்றி: http://thakavalgal.blogspot.in/2009/09/blog-post_9857.html)

ராஜனி திராணகம (படத்துக்கு நன்றி: http://thakavalgal.blogspot.in/2009/09/blog-post_9857.html)

பிரபாகரனின் விசிலடிச்சான்புலிக் குஞ்சப்பர்களால், ராஜனி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவருக்கு வயது 35தான்! நெற்றிப் பொட்டில் சுடப்பட்டு,  இறந்து, அவர் கீழே வீழ்ந்ததற்குப் பின்னரும்கூட, பின் மண்டையில் இரண்டு தடவை மேலதிகமாகச் சுட்டு தங்கள் அற்பத்தனத்தை நிரூபித்துக் கொண்டார்கள் – சுட்டவர்கள்.

இவர்களால், இந்தத் தறுதலைப்புலிகளால், காடுகளில் மனிதர்களுக்குப் பயந்துகொண்டுவாழும் பாவப்பட்ட சாதா புலிகளுக்கே மாளாத அநியாயக் கெட்ட பெயர்… :-(

சரியாக 25 வருடங்கள் முன் – 1989ல் கொலைவெறி எல்டிடிஇ கும்பலால் அழித்தொழிக்கப்பட்ட ஸ்ரீலங்கா தமிழரான இவர் –  யாழ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும், ஒரு (மெய்யாலுமே) மனிதவுரிமைக் காரராகவும் இருந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தின் ‘மனிதவுரிமைக்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள்‘ எனும் அமைப்பின் தொடங்கிகளில் ஒருவர். (இவரை ஒரு பெண்ணியவாதி என்று குறிப்பிட்டு, எனக்கு, இவர் ஆகிருதியை குறைத்து மதிப்பிட ஆசையில்லை)

அடிப்படையில் ஒரு மருத்துவரான இவர், இளமையில் சில ஆண்டுகள் எல்டிடிஇ அமைப்பில் இருந்தாலும் – மனம் மேம்பட மேம்பட, சிந்தனைகள் விரிவடைய, அனுபவங்கள் கற்றுத்தர – பின்னாட்களில் – எல்டிடிஇ உட்பட பல தமிழக் கூலிப்படை வன்முறை இயக்கங்களின், ஸ்ரீலங்கா அரசின் ஏதேச்சாதிகாரத்திற்கு எதிராகவெல்லாம் பலமாகவே குரல் கொடுத்து வந்தவர். (இவர் ஐபிகேஎஃப்-க்கும் எதிராகக் கருத்துடையவராக இருந்தார்; பல சமயங்களின் இவரும் பரப்புரைகளுக்கு மயங்கினார்தான்)

இவருடைய கணவர் – தயாபால திராணகம, சிங்கள பௌத்தர்; நம்முடைய 2013   ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ புகழ் போராகோமாளித்தன மாணவமணிகள் போலல்லாமல், அரசியல் நிலவரம் அறிந்த, அறிவுள்ள மாணவர் தலைவர் – நேர்மையாளர். கொழும்பு பல்கலைக் கழகத்தில் ராஜனி  படித்துக் கொண்டிருக்கும்போது, இவருடன் ஏற்பட்ட அறிமுகம் – ராஜனிக்கு இளம் 23 வயது திருமணத்தில் தொடர்ந்தது.  இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் என எனக்கு நினைவு.

Read the rest of this entry »

… ஒரு வழியாக இன்றுதான்,  அம்மணி அனன்யா அவர்களின் கந்தறகோளக் கட்டுரையான ‘என் ஸம்ஸ்க்ருதத்தின் கதை’ படித்தேன். ஆகஸ்ட் 16 அன்று வெளிவந்த  – இந்தக் குப்பையையும் ‘த ஹிந்து’ தான் பதிப்பித்திருக்கிறது.

யோசித்தால் – இம்மாதிரி ‘ஒருமாதிரி’ கட்டுரைகளை வேறு எந்த தினசரிக்குத்தான் தொடர்ந்து – பொறுப்பேயில்லாமல், வக்கிரத்தோடு, பாரம்பரியங்களைப் பற்றிய தாழ்வுணர்ச்சியோடு பதிப்பிக்க முடியும்?

‘த ஹிந்து’ பற்றி, அதன் அப்பட்டமான சீன ஆதரவு பற்றி, அதன் அடிப்படை நேர்மையின்மை, பாரதத்தின் அடிப்படைகளை வெறுப்பது, ஸெக்யூலரிஸ பேதியினால் ஹிந்துமதஎதிர்ப்புவாதம், கருணாநிதி-தயாநிதி மாறன் (இந்தப் பின்னவர்,அந்த த-ஹிந்து-வின் வீட்டு மருமகனார் – அதாவது தயாநிதியின் மனைவி த​-ஹிந்து-குடும்பத்தைச் சார்ந்தவர்) போன்றவர்கள் மீதான புரிந்துகொள்ளக்கூடிய ஆதரவு, என  பலவற்றைப் பற்றியெல்லாம் என்னுடைய அப்பாவுடன் பல வாக்குவாதங்கள் செய்திருக்கிறேன்;  பெரும்பாலும் அந்த விவாதங்கள் –  ‘ஹிந்து-வ அதோட கருத்துகளுக்காகப் படிக்காத, அதோட ஆங்கிலத்துக்காகப் படி,  எப்டீ எழுதறான் பாரு, தப்பேயில்லாம!‘ என்று முடிந்துவிடும்… ஆனால் அது அந்தக்  காலம். அவரும் போய்ச்சேர்ந்து விட்டார்.

… இப்போது, அதன் ஆங்கிலமும் சுத்தமாகவே சரியில்லை. பக்கத்துக்கு பத்து அடிப்படைத் தவறுகள். அதன் தலைப்புகளோ கந்தறகோளமாக இருக்கின்றன. அதன் காமாலைக் கண்ணும் பளிச்சிடும் மஞ்சளாகிக்கொண்டே வருகிறது. எப்படியும், கடந்த சில நாட்களாக  கஷ்மீர் வெள்ளப் பிரச்சினை பற்றிய அதன் அயோக்கியத்தனமான செய்தி திரித்தல்களைப் பார்த்துப் பார்த்து வெறுப்பாக இருக்கிறது.

ஆனாலும்…

Read the rest of this entry »

Very many years ago, we had a meeting (the participants were mainly teachers,  parents and teacher-parents) at our earlier (Bangalore) school and the following is a set of notes / discussion pointers that we used to kindle thoughts, seed discussions and to thrash out various vexatious issues and stuff…

The whole context for the meeting was circumscribed by the idea that – parents and schools are NOT on the opposite sides of the child, pulling the poor child literally apart; that these two stakeholders are on the SAME side as that of the child, helping and assisting it to realize its potential to the fullest extent possible.

Off: https://i0.wp.com/www.bristol.k12.ct.us/uploaded/Mountain_View/Docs/global-curriculum.gif (thanks: bristol public schools - mountain view)

Off: http://www.bristol.k12.ct.us/uploaded/Mountain_View/Docs/global-curriculum.gif (thanks: bristol public schools – mountain view)

Anyway, I thought it would perhaps be a good idea, to share the quick notes (from our archives) — that we made for ourselves, when we went for this meeting/discussions — with the readers of this weblog.

Of course, by no means, any claim is made about this listing being reasonably complete or even being logical; we would like to revisit this – so, feel free to comment on it.

It is reproduced hereunder verbatim – it is kind of dated, sketchy and in a ‘telex kind , of incomplete language,’ but probably would be useful, as long as there are decent schools and responsible parents… Oh, the hope. Read the rest of this entry »

…Or, a bird’s eye view VS earthworm’s view, if you will; this post is part of the infamous ‘education’ series at this blogsite. This is an unfairly long essay – so, feel free to runaway, NOW! :-)

-0-0-0-0-0-

In my earlier avatars I have been part of the surreal corporate world, and I have met with quite a few folks there, who proudly uttered pearls of wisdom such as, they are the “big picture people, ya know” – accompanied by a swagger and those irritating & condescending ‘air quotation’ marks made with their index fingers.

Invariably, they were bosses and/or pretenders. They never interested me. I never respected them. It is their loss, ahem! ;-) I continue to meet such vainglorious  people off and on (yes, it takes one to know one). I tell myself that we do require diversity, don’t we? Honestly, we require diversity in every field – some species die, some survive, some mutate, some become mutant monsters, some are well meaning, some are not, some are for positive actions, some others are for mere reactions…

… In any case, any kind of diversity results in that, much-required colourfulness, in an otherwise staid world. Like in the corporate world, how I would have loved to have something else instead of the drab grey, dull coloured shirts and trousers and drabber black suits and cleanshaven faces and powerpoint slidesets…

Read the rest of this entry »

… ஆகவே மொழி பெயர்ப்புகள் சரியாகவே இருந்தனவோ? அந்தக் காலத்தில் காப்பி இல்லை என்றாலுமே கூட…

ஸி எஸ் ‘அம்பை’ லக்ஷ்மி அவர்களைத் தொகுப்பாசிரியராக(வும்) கொண்டு வெளிவந்த  –  ‘சாவகாச நகரம்: சென்னையின் மீதான எழுத்துகள்’ (The Unhurried City: Writings on Chennai – edited by C. S. Lakshmi) புத்தகத்தில் சில தமாஷ் விஷயங்கள் இருக்கின்றன. யார் சொன்னது நான் மிகவும் மதிக்கும் அம்பை ஒரு மிகஸீரியஸ் எழுத்தாளர், அவர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சியியேல்லை என்று!

அவற்றில் ஒன்று –  எழுத்தாளர், வரலாற்றாசிரியர், இலக்கியவரலாற்றாளர், மேலதிகமாக ‘போட்டுக் கொடுங்கபா, பக்கத்து கடேல இன்னும் அறிஞத்தனங்கள் சல்லீசாக கெடக்குது, அழுகின பழத்த போடாத‘  இன்னும் பலவாகவும் – மொழிபெயர்ப்பாளராகவும், அறிஞராகவும், அரசியல், ‘பாரத ரத்னா’ விருது விமர்சகராகவும் செயல்படுவதாக அநியாயத்துக்கு அபாண்டமாக வதந்தி பரப்பப்படும் — பரிதாபத்துக்குரிய திரு ‘சலபதி’ அவர்களால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. Street Smart in Chennai: The City in Popular Imagination. Read the rest of this entry »

இது  இவ்வரிசையில்  கடைசிப் பதிவு; இந்த வரிசையில். முதல் ஐந்து பதிவுகள் மேம்படுத்தப்பட்ட இந்த பக்கத்தில் இருக்கின்றன: போங்கடா, இதுதாண்டா *&#@! பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)

நிசப்தக் கட்டுரையின் அலசலின் தொடர்ச்சியில் — எழுத்தாளரைத் தொடர்வோம்…

“இப்பொழுது நடக்கும் பிரச்சினை கூட அதன் புதிய டெக்னாலஜியை உலகுக்கு விளம்பரம் செய்வதற்கான உத்திதானாம். Iron dome என்ற டெக்னாலஜி அது. எதிரி தேசத்திடமிருந்து வரும் ராக்கெட்களையும், ஏவுகணைகளையும் அது வரும் பாதையிலேயே கண்டுபிடித்து திருப்பி அடித்து அழிக்கும் நுட்பம்.

 “அதற்காகத்தான் பாலஸ்தீனத்தை சீண்டி விடுவதும் அதனால் டென்ஷனான ஹமாஸ் அமைப்பினர் தங்களிடமிருக்கும் தீபாவளி ராக்கெட்டை வீசும் போது திருப்பி அடித்து ‘இது எப்படி இருக்கு?’ என்று உலகத்திடம் காட்டிக் கொள்கிறார்கள் என்கிறார்கள்.

அய்யா அவர்கள் – ஹமஸ் அமைப்பினர் செலுத்தும் ஏவுகணைகளை ‘தீபாவளி ராக்கெட்’ என விவரித்திருக்கிறார்கள். ஆக, அவருக்கு தீபாவளி ராக்கெட் தொழில்நுட்பமும் தெரியாது என்பது நிரூபணம். ஏன் இப்படித் தன்  ‘ஒவ்வொரு துறையிலும் அறியாமை’யை மிக உரக்கச் சொல்லிக்கொண்டே இருக்கிறார் இந்த மனிதர்! *ப்ச*  :-(

Read the rest of this entry »

இது ஐந்தாம் பதிவு, இந்த வரிசையில். முதல் நான்கு பதிவுகள்: 1) “ஒண்ணும் இல்லடா கண்ணா, கட்டுரையாசிரியர் ‘யானை வெடி’ வெடிக்கரார்டா; சத்தமும் பொகையும் தான் பெருஸ்ஸா வரும். பயப்படாத… எல்லாம் புஸ்ஸுதான்… காத மூடிக்கோ!” 22/08/2014   2)  !நிசப்த யானை வெடியும் மகாமகோ புகையும்… (இரண்டாம் பகுதி) 23/08/2014 3) [ஸிக்னல்/நாய்ஸ் (அல்லது) சமிக்ஞை/சத்தம்]அநிசப்தம் = 1/∞ : சில எதிர்வினைகள், குறிப்புகள் 26/08/2014  4) நிசப்த அறச்சீற்றமும் ஒத்திசையாத பதில் சீற்றமும் | பிஎஸ்வீரப்பா(“சபாஷ், சரியான போட்டி!”) 30/08/2014

அடுத்த பதிவுதான் இந்த வரிசையில் கடைசியாக இருக்கும் – என்னவோ இந்த எதிர்வினை ஹனுமார் வால்போல நீண்டுகொண்டே போகிறதே! ;-)

… ஆம்… விடாது நிசப்தக் கருப்பு… :-(  ‘அங்க என்னம்மா சத்தம்?’  அலசல்(! – தேவையா??) தொடர்கிறது, பாவம் நீங்கள்.

எழுத்தாளர் இப்படித் தொடர்கிறார்:

” [ஸத்தாம் ஹுஸ்ஸெய்னை] கொன்றால் தொலையட்டும். ஒரு ஸ்திரமான அரசு அமைய உதவியதா? எந்தக் காலத்திலும் அதைச் செய்ய மாட்டார்கள். ஈராக் கதறிக் கொண்டேயிருப்பதுதான் அமெரிக்காவுக்கு நல்லது. இப்பொழுது அங்கே என்ன நடக்கிறது என்பதைத்தான் பார்க்கிறோமே.”

எழுத்தாளர்வாள் எப்படி இந்த முடிவுக்கு வந்தார் என்பதை என்னால் எளிமையாகப் புரிந்துகொள்ள முடிந்துவிட்டது – அதாவது, மேலோட்டமாகச் செய்திகளை மேய்ந்து சல்லீசாக ‘நாம்’ எல்லாம் போட்டு, அவருடைய அறியாமைக் கும்பலில், தன் லைக்கடிச்சான் குஞ்சப்ப-வாசகர்கள் அனைவரையும் சேர்க்கிறார்! (அய்யய்யோ, என்னையுமேதான்! அடக்கடவுளே!!)

Read the rest of this entry »