… இதெல்லாம் தேவையா  என்றாலும்..

நான் மிகவும் மதிக்கும், தொடர்ந்த காதலில் இருக்கும் பெரியவர்களில் மூன்று பேர் (இதில் ஒருவர் என்னுடைய ‘அந்தக் கால’ பேராசிரியர் – கேள்விகேள்வியாகக் கேட்டு இவரை நான் மிகவும் கஷ்டப்படுத்தியிருக்கிறேன், பாவம்), என்னைப் பல கேள்விகள் கேட்டிருக்கிறார்கள், கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள்; வெட்கமேயில்லாமல் அறிவுரைகள் வேறு! பல மின்னஞ்சல்கள், சில தொலைபேச்சுக்களிலிருந்து இந்தக் குறிப்புகள: (கொசுக்கடி தாங்கமுடியவில்லை; வேறு வழியில்லை)

உன்னை ஒரு அறிவுஜீவி / களப்பணியாளன் என்று நினைத்தேன், ஆனால் ஒரே பிரச்சார நெடி அதிகமாகி விட்டது, இதனால் எதிர்மறைபாதிப்பு வராதா – நடு நிலைமை தவறுகிறாயோ எனச் சந்தேகமாக இருக்கிறது – ஏன் தேவையில்லாமல் இளைஞர்களை பாதிக்கிறாய் – ஏன் விளம்பரமோகம் –  உன்னைப் படிப்பவர்களை ஏன் அரசியலை நோக்கித் தள்ளுகிறாய்? மேட்டிமைவாதியாக ஆகிக் கொண்டுவருகிறாய். அறிவியல், கணிதம் என்று எழுதலாமே. தமிழ்நாடு நன்றாகத் தானே வளர்ந்து கொண்டிருக்கிறது. நீயே தமிழ்வழிக் கல்வியை, தமிழகத்தில் படித்துத் தானே மேலெழும்பி வந்திருக்கிறாய். இதில் என்ன பிரச்சினை? உன்னால் மதிக்கக் கூடிய புள்ளியியல் விவரங்களும் இதனைத் தானே சுட்டுகின்றன? ஏன் இந்தியாவில் ‘தமிழ் நாடு வளர்ச்சி மாதிரி’ போன்றவற்றை எடுத்துப் பரப்புவதற்காக நீ எழுதக் கூடாது? ஏன் குஜராத் முன்மாதிரியை முன்னெடுக்கிறாய்? ஏன் மோதியை ஆதரிக்கிறாய்? ஏன் என்னுடைய இரத்த அழுத்தத்தை அதிகப் படுத்துகிறாய்? நீ ஏன் உன் தொழிலைச் செய்யாமல், இந்த விதண்டாவாதங்களில் இறங்கியிருக்கிறாய்? ஏன் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றை வெறுக்கிறாய் – இவையும் உரையாடல்களுக்கான தளங்கள்தானே? நானே உபயோகப்படுத்தும் போது, நீயும் இவற்றை உபயோகப் படுத்தலாமே? …ஏன் x ஏன் y ஏன் z …

சரி, இந்தக் கேள்விகளில், சில – அறிவுஜீவி-கிறிவுஜீவி களப்பணி-கிழப்பிணிஎன்பவைகளைப் பற்றி – ஒரு தனி பதிவே (ராமசாமி – யாரில்லை?) எழுதியிருக்கிறேன். பார்த்துக் கொள்ளவும். பற்களை நற நறத்துக் கொள்ளவும். நான் பரம யோக்கியன், ஒரு தவறும் செய்யாதவன் என்றெல்லாம் சொல்ல வரவேயில்லை. நான் இன்னமும் பல தவறுகள் (ஒரு உதாரணம்: இந்த ஒத்திசைவு ஜந்து) செய்து கொண்டிருப்பவன் தான். தேவைப்பட்டால் பொய்களும் (=தீமை இலாத சொலல், பெரும்பாலும்) சொல்பவன் தான். ஆக, ‘நான் உன்னைவிட ஓஸ்தி’ என்ற நினைப்பெல்லாம் இல்லை. மேட்டிமைத்தனம் – இது இருக்கலாம். எனக்கு எப்போதுமே தரம் முக்கியம்; பரம நிச்சயமாக – வெற்றுவேட்டு  ‘எவ்வளவு தரம்’ எண்ணிக்கைகளல்ல.

இனி, தலையில் அடித்துக் கொண்டு – உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் விடை சொல்கிறேன் – ஒத்துவந்தால் ஏற்கவும், இல்லையேல் கடாசவும் – ஒரு பிரச்சினையுமில்லை.

Read the rest of this entry »

:-) உண்மைதான்! இப்படிப்பட்ட பார்வையுடனும் சொந்தப் பணத்தைச் செலவழித்துக்கொண்டு அரைசியல் (கவனிக்கவும், அரசியல் அல்ல) சுற்றுலா போகிறவர்கள், கருத்துதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள்!

-0-0-0-0-0-0-0-

நான் குஜராத்தில் (தொழில் ரீதியாக) பயணம் செய்திருக்கிறேன் என்றாலும், நரேந்த்ர மோதி ஆட்சிக்கு வந்தபிறகு அங்கு செல்லவில்லை. கட்ச் பகுதியில் பணி செய்துகொண்டிருக்கும் பிஹாரி நண்பர் கடந்த 11 வருடங்களாகக் கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறார் – பல காரணங்களால் அங்கு செல்லவே முடிவதில்லை. இர்மா (IRMA) கல்விசாலையிருக்கும் ஆனந்துக்கும் போயிருக்கவேண்டும், போகவில்லை. ஐஐஎம் பேராசிரியரான அனில்குப்தா அவர்களைப் பார்த்துப் பேசவேண்டுமென பல பத்தாண்டுகளாகத் திட்டம். ஹ்ம்ம்ம்.

ஆனால், என் வயதையொத்த (=மிக்க அனுபவமுடைய), நான் மிகவும் மதிக்கும் சில ஐஏஎஸ் அதிகாரிகளை (குஜராத் கேடர்) தனிப்பட்ட முறையில் அறிவேன் – இவர்களுடைய அடிப்படை உற்சாகத்தையும், நேர்மையையும், படிப்பறிவையும் செயலூக்கத்தையும் நிறைய – நேரிடையாகவே தெரிந்துள்ளேன். இவர்களில் இருவருடன் தொடர்பில் உள்ளேன்.

இதைத் தவிர சில குறிப்பிடத்தக்க நண்பர்கள் (தொழில்முறை, ஸூஃபி இசை போன்றவை மூலம் அறிமுகமானவர்கள்) மூலம் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். (இவற்றில் ஒரு நண்பர் ஒரு பழுத்த விசுவாசி முஸ்ஸல்மான் என்பதையும் குறிப்பிடுகிறேன்) Read the rest of this entry »

This post continues from – adam osborne, the pc pioneer, ‘vellakkaara thamizhan’ – the man… (

I assure you – there is no jingoism here. There is no suggestion of an empty glorification of the past. Just a few pertinent and plain questions – to make us think. That’s all.

There is only a suggestion of a reasonable pride about relevant parts in our history, our collective pasts and the present – and most importantly, stressing on Quality rather than a mindless statistic of a Quantity… Of course, there are certain parts of our shared histories that we need to introspect on too! We have to take corrective measures, of course, of course!

Oh, well.

Yeah. On to the unknown or, much  known. I have personally met quite a few of our NRIs (non resident Indians) and RNIs (resident non Indians) – and I am sure, you too may have bumped into such induhviduals – who have these kinds of attitudes. Adam Osborne has had some scathing observations on these folks.

” A people which takes no pride in the noble achievements of remote ancestors will never achieve anything worthy to be remembered with pride by remote descendants. “

– Macaulay.

How long do we hold on to the coat-tails of the likes of Thomas Babington Macaulay? May be, this  too shall pass?

Anyway – here goes, the text of Adam’s April 1991 DataQuest article: (23 solid years have gone by, but this reflection is still relevant – I frankly do not know whether to laugh it off or merely shrug my shoulders…)

Read the rest of this entry »

” The most valuable thing you can make is a mistake – you can’t learn anything from being perfect. “

– Adam Osborne (1939 – 2003)

I do not know how many of us 45+ folks remember Adam, I mean THE Adam.

Perhaps not many. Our memories are short. Our capabilities in respect of studying, mapping, assimilating and knowing in breadth and depth — the details and mappings of any idea or a concept – are  rather shallow. We are designed from the beginning to be lusers, Dravidian  lusers. We offset our incredible  lack  of scholarship by manufacturing random histories (such as Aryan invasion or Dravidian superiority theories) and random geographies (such as Lemuria or Kumari-k-Kandam, if you will).

Otherwise, what would be preventing us from celebrating the memories of such a personality? I am not talking about a random Robert Caldwell or a randomer  Constantine ‘Veeramaamuniver’ Beschi here – am referring to a fantastic individual, who lived in our midst – after making epochal contributions to the spread of the cult of the portable computer.

But then, am digressing, as is my wont.

Of course, the reason why I am rejiggling my fading memories is that – Adam Osborne, the man, one of my boyhood heroes, moved on –  just about 11 years back, after living for so many years in India — on 18th March, 2003 – in our good ol’  Kodaikanal, Tamilnadu.

Snuffed out. Unsung. Unheard of.  PBUH.

… … … Having been lost in a dazed reverie, I have been thinking about him for the past few days and just thought I would share a thing or two about this fine  man…

Read the rest of this entry »

… ஏனெனில், இந்தியாவில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், இயங்க  வேண்டும். அதுவும் வெறுமனே இயங்கிக் கொண்டிருக்காமல் பொறுப்புணர்ச்சியுடன் நாட்டின் மேன்மைக்கான தொலைநோக்குத் திட்டங்களை வடித்தெடுத்து, சமரசங்களின் மூலமாக, தேவையற்ற தயவுதாட்சணியம் இல்லாமல் – நம்மை முன்னோக்கி, தற்சார்புக்கும் தன்னிறைவுக்கும் இட்டுச் செல்லவேண்டும். இவற்றை விட முக்கியமாக நம்முடைய சுய நம்பிக்கையை, தைரியத்தை, குடிமைப்பண்பை வளர்க்க வேண்டும். அவநம்பிக்கை வாதிகளை, ‘என்னத்த செஞ்சி, என்னத்த பண்ணி…‘வாதிகளை வாயடைக்கச் செய்யவேண்டும்.

மேலதிகமாக – இவை கசக்கும் உண்மைகளாக இருந்தாலும் – ஏற்கனவே பல பத்துவருடங்களை, நாம் பிச்சைமுதல்வாத  கப்பரையாண்டி அரசியல் போக்குகளால், தொழில்முனைவுகளுக்கு-தொழில்வளர்ச்சிக்கு எதிரான மகாமகோ ஊழல் நடைமுறைகளால், கொடுக்கவேண்டிய மரியாதையை தரத்துக்கும் கொடுக்காமையால்,  நம்பகத்தன்மை மறுபடியும் மறுபடியும் சுழன்றுச் சுழன்றுக் கீழ் நோக்கிச் சென்றபடியே இருத்தலால், முட்டியடி மட்டுமேயான அரசதிகார எதிர்வினைகளால், பெருகுடும்பக் கோமாளிக் கோமான்களால் –  தொலைத்து விட்டோம். ஆக, இவற்றுக்கும் எதிராகப் போராடி – நம் பாரம்பரிய குணாதிசியங்களை மீட்க வேண்டும்…

என் பார்வையில் தற்கால அரசியல் சூழலில் – இக்குறைகளையெல்லாம் சரிசெய்யக் கூடியவராக, குறைந்த பட்சம் அதற்கு முனையக் கூடியவராக – அவர் கட்சியிலேயே அவருக்கிருந்த (=இருக்கும்) போட்டிகளையும், சவால்களையும் நேரடியாக ஜனநாயக ரீதியில் எதிர்கொண்டவராக, மோதி மட்டும் தான் இருக்கிறார். Read the rest of this entry »

பயப்படாதீர்கள்! நான் ஒன்றும் இந்த எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் எழுத்தைப் படிக்க உங்களை ஏவப் போவதில்லை.

ஆனால்…   Read the rest of this entry »

இக்காலங்களில், எனக்கு மிக மிக  வருத்தம் தரும் விஷயம் என்பது இதுதான்: யாருமே, கருணாநிதி அவர்களின் மகன் இசுடாலிர் (பயப்படாதீர்கள், இது ஸ்டாலின் அவர்கள் தான்; அவர் பெயரை, திராவிடத் தமிழ்ப்படுத்தி, மரியாதையாக ர்  சேர்த்திருக்கிறேன், அவ்வளவுதான்!) உட்பட, கருணாநிதி அவர்களைப் பிரதமராக்குவோம் எனக் கேவலம்,  சூளுரைக்கக் கூட மாட்டேன் என்கிறார்கள்.

அடலேறேன ஆர்பரித்து காலயந்திரத்தில் சவாரி செய்து, இறந்தகாலங்களுக்கே ஓடிச்சென்று பெரியார் அவர்களையே திருச்சியில் பிறக்கவைத்த, கொஞ்சு தமிழ் பேசும் கோதையான ஆனானப்பட்ட மேதகு குஷ்பூ அவர்களே கூட இதனைப் பற்றி ஒன்றுமே சொல்லமாட்டேனென்கிறார்.

கவிதைகள் பல எழுதி தமிழ்த்தாயைத் தற்கொலை செய்துகொள்ள ஆர்வத்தோடு ஊக்குவிக்கும் கவிஞர் கனிமொழி அவர்களும் கூட, இது பற்றி மேதகு ஜாஃபர் ஸேட் அவர்களிடம்  “[பிற்பகல் 12:04:04] இந்த மனிதரின், ம்ம், ஆசைக்கும் [இரைச்சல்: சரியாகக் கேட்கவில்லை] அளவேயில்லையா?” என ஏசியதாகத்  தெரியவில்லை, குறைந்தபட்சம் இதற்கான ஒலிப்பதிவானதாவது இதுவரை கிட்டவில்லை – ஒருவேளை ‘சவுக்கு’ தன் பணியை ஓய்வொழிவில்லாமல் செய்வதை விட்டுவிட்டு தினமும் ஒரு மணிநேரம்  போலத் தூங்க ஆரம்பித்துவிட்டாரோ?

“தலைவர் உயிருடன் இருக்கும் வரை, அவர்தான் இந்தியாவின் நிரந்தர எதிர்காலப் பிரதமர் [=ஆக ஸ்டாலின் நிரந்தர  திமுக இளைஞரணித் தலைவர் மட்டுமே!]” என அழகிரியும் ஒரு சூடான நேர்கோணல் கொடுக்கவில்லை. இந்தக் கடைக் குடும்பத்தின் ஏவல் ஏற்று, பேய் ஓட்டும் காரியங்களைச் செய்துவரும், ஜெயலலிதா மீது சாத்தான்களை ஏவிவிடும் ஏற்றமிகு எடுபிடியான விடுதலை ‘மானமிகு’ வீரமணி அவர்கள் கூட ஒன்றும் சொல்ல மாட்டேனென்கிறார் – அவர் கையில்தானே ஜால்ரா இருக்கிறது? வாயில் உள்ள கொழுக்கட்டையைத் துப்பிவிட்டாவது ஏதாவது சொல்லலாமல்லவா?

… ஆக, இது ஒரு திட்டமிட்ட திராவிடக் குடும்பச் சதியோ எனச் சந்தேகமாகவே இருக்கிறது. Read the rest of this entry »

நண்பர் ஒருவர் (=ஆங்கிலோதமிழர் – இவர், தமிழ்வழிக்கல்வி படித்து ஒருகாலத்தில் தமிழனாக இருந்தாலும், எனக்கு ஆங்கிலத்தில் தான் கடிதம் எழுதுவார்;  இப்போதெல்லாம், தமிழில் படிக்க மட்டும்தான் முடியும் இவருக்கு – சுட்டுப்போட்டாலும், திட்டினாலும் தமிழில் ஒரு வரிகூட கோர்வையாக எழுதமுடியாத பரிதாப நிலையிலிருப்பவர்; பிழைப்பதற்கு வேறு வழியே இல்லாமல், அந்த அமெரிக்காவில் (= ‘ஸ்டேட்ஸ்!’) வேறு வசித்துக்கொண்டிருக்கும் கையறு நிலையில் இருப்பவர்; கடந்த சுமார் 25 வருடங்களாக, கொஞ்சம்கூடச் சளைக்கவே சளைக்காமல்  ‘கண்டிப்பாக அடுத்த வருடம் இந்தியா திரும்பி வந்து காவிரிக்கரையோரம் வயல்வெளிக்கு நடுவே ஒரு அழகான குடிசையில்’ ஸெட்டில் ஆகிக் கொண்டிருப்பவர்; பாவம்… ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பலவிதமான தீராப் பிரச்சினைகள், என்ன செய்வது சொல்லுங்கள், ஹ்ம்ம்ம்…) அழகான இலக்கண சுத்தமான ஆங்கிலத்தில் (என் பதிவைப் படித்துவிட்டு), எழுதியிருக்கிறார்:

“பரீக்‌ஷா ஞாநி காமாலைக் கண்ணர் அல்லர். அவர் நேர்மையைச் சந்தேகித்தால் காமாலையில்தான் போவாய்! அவர் எழுத்தில் என்ன அப்படித் தவற்றைக் கண்டாய்? Read the rest of this entry »

(அல்லது) அய்யய்யோ அணுசக்தி! நெஞ்சு பொறுக்குதில்லையே…

நான் மரபுசாரா, மறுசுழற்சி செய்யக்கூடிய எரிபொருள்களினுடைய, தொழில் நுட்பங்களுடைய மகாமகோவிசிறிதான். பல பத்தாண்டுகளுக்கு முன்னால் வீட்டிலேயே தாமிரத் தகடுகளை வைத்து, மெலிதாக ஆக்ஸிடேஷன் செய்து அவற்றை உபயோகப் படுத்தி சூரியசக்தியை மின்சாரமாக (இது, ஏறக்குறைய – பிவி – ஃபோட்டோவால்டாய்க் தொழில்நுட்ப வழிமுறை போலவேதான் – ஆனால் ஸிலிகனை உபயோகிக்கவில்லை) மாற்றி உபயோகித்திருப்பவன். என்னுடைய ஜீப்பினை டீஸலுக்குப் பதிலாக புங்கமரக்கொட்டை எண்ணையை உபயோகித்து வேதியியல் மாற்றம் செய்து  (அதற்காக எஞ்சினை மாற்றியமைத்து) கொஞ்ச நாள் ஓட்டி, பல படிப்பினைகள் (=பல குளறுபடிகள், எஞ்சின் கெட்டுப்போதல்கள் + சில ‘வெற்றிகள்’) பெற்றவன். காற்றாடி டர்பைன்களுடன் பரிச்சயம் உள்ளவன். சாணஎரிவாயு தயாரிப்பு செய்து அதில் மோட்டார் வண்டியை ஓட்ட முயன்று மகத்தான தோல்வி கண்டவன்; மனித மலத்தை (=என் மலம்) கம்போஸ்ட் செய்து மட்கவைத்து அதனையும் உபயோகித்து மேல்மாடியில் காய்கறித் தோட்டம் போடுதல், ருடால்ஃப் ஷ்டெய்னர் இலக்கண வழி வேளாண்மை  போன்றவைகளை ஓரளவு நன்றாகவே, சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்புவரை செய்திருப்பவன். என்னளவில், முடிந்த நேரத்தில், கொஞ்சம் சக்திக்கலன்கள் தொடர்பாக சிறு ஆராய்ச்சிகள்(!) செய்து கொண்டும் வருபவன்; தாறுமாறான எரிபொருள் உபயோகத்தைப் பற்றியும், மின்சாரத்தின் எதிர்காலத்தைப் பற்றியும்  ஓரளவுக்குப் பீதி அடைந்திருப்பவன்.

மரபுசார் / மரபுசாரா / மறுசுழற்சி செய்யப்படக்கூடிய / முடியாத மின்சார உற்பத்தியில் முனைப்பும் பயிற்சியும், ஆர்வமும் உள்ள பலரை அறிந்தவன்.  மேலும், அணுக்கருவுலைகளில் பணிசெய்யும் சில மகத்தான மனிதர்களை நான் நேரிடையாக அறிவேன். ஆனால்  நான், இந்தத் துறைகளில் ஓரளவுக்கு படிப்பும், அனுபவமும்  உள்ளவன் மட்டுமே – ஆனால் சுயபயிற்சிதான், இவற்றுக்காக முறையாகக் கல்லூரி சென்று மேற்படிப்புப் பயின்றவன் அல்லன்.

எதற்கு மேற்கண்டவற்றை கோடிட்டுக் காட்டி சுயதம்பட்டத்தனத்துடன் (=வழக்கம்போல)  எழுதுகிறேன் என்றால்…

… இருந்தாலும், அதே சமயத்தில் நான் அணுசக்தியின் – மிகச் சரியாகச் சொல்லவேண்டுமானால்,  அணுக்கரு சக்தியின் மீதும் நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருப்பவன். அதன் தேவையையும் அதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மகத்தான ஆராய்ச்சிகளையும்,அந்த ஆராய்ச்சிகளினால் மானுடத்துக்குக் கிடைத்திருக்கும் மகத்தான, அருமையான பயன்களையும்  (+பயங்களையும்தான்!) உணர்ந்தவன். Read the rest of this entry »

காங்க்ரெஸ் கட்சியின் ராஹுல் காந்தி அவர்கள், நம்பவே முடியாத பினாத்தல்முதல்வாதத் தீவிரவாதித்தனமாக மறுபடியும் மறுபடியும்  சொல்லிக் கொண்டிருக்கிறார் – காந்திஜியைக் கொன்றவர்கள் ஆர் எஸ் எஸ் அமைப்பினரென்று…

இந்தப் போக்கு ஒன்றும் புதிதில்லைதான். பல பத்தாண்டுகளாக இடதுசாரிகளிலிருந்து,   சாய்வு நாற்காலிவாதிகள் வரை — இன்னும் கீழ்த்தரத்துக்குப் போனால், அறிவுஜீவிகளிலிருந்து தொழில்முறை மனிதவுரிமைக் காரர்கள் வரை — இன்னமும் தராதரத்தில் அதல பாதாளத்துக்குப் போனால் — பொதுவாகவே காந்தியைக் காந்தியார் என வர்ணித்து அவரைக் காமாந்தகர், ஜாதிவெறியர் என வசை பாடும் அயோக்கிய திராவிடக் கொழுந்துகளும் கூட, திடீரென்று அல்லது அவ்வப்போது காந்தியின் மேல் காரியார்த்தமான அன்புவெறி வந்து –  ‘ஆர்எஸ்எஸ் காக்கி டவுசர்கள்’ தான் காந்தியாரைக் கொலை செய்த மகாபாவிகள் எனப் பேசுவதென்பது சாதாரணமாக நடக்கும் விஷ(ய)ம் தான்!

ஆனாலும், தேர்தல் ஜுரவேகத்தில், பாஜக-வை எப்படியாவது வீழ்த்தவேண்டும், ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’  என அலையாய் அலையும் அற்ப அல்லக்கைகளுக்கு, மறுபடியும் மறுபடியும் பழம்பொய்களை மறுசுற்றுக்கு விடுவதில் எவ்வளவு ஆனந்தம் – என்பதும் புரிந்துகொள்ளக் கூடியதே! Read the rest of this entry »

(அல்லது) ஏன், இந்தியாவைப் பற்றியுமே கூட,  பொய்ச் செய்திகள் எப்படிப் பரப்பப்படுகின்றன? நாம் இவைகளை எப்படிப் புரிந்துகொண்டு எதிர்கொள்ள வேண்டும்?

மோதியைப் பற்றிய பொய்ச் செய்திகள், தொடர்ந்து மறுபடியும், மறுபடியும்   பரப்பப் படுவதற்கு – இந்த தேங்காய்முதல்வாத ஊடகங்கள் / ஊடகக்காரர்கள்தாம் இதற்கு முழுமுதல் காரணம்.

இந்த உதிரிகளுக்குப் பின்புலத்தில்  ‘கொள்கைக் கூட்டணி’ வைத்து  அணி திரண்டிருக்கும்  தொழில்முறை இடதுசாரி அறிவுஜீவிகளும், மனிதவுரிமைக் காரர்களும்,  ‘எப்படா அடுத்த போராட்டத்தை நடத்தி தொலைக்காட்சியில் தென்படலாம்’ என போங்காட்டம் ஆடும் போராளிகளும், அரைகுறை தட்டச்சு வீரர்களும், சாய்வு நாற்காலிப் பேரறிஞர்களும் – இன்னொரு  காரணம்.

சரி,  இந்த தேங்காய்முதல்வாத ஆட்கள் என்பவர்கள் யார்?

Read the rest of this entry »

… இப்படியாகத்தானே, கருணாநிதி அவர்கள் உபயத்தில் கத்தரிக்காய் விளைந்தது… :-)

-0-0-0-0-0-0-

2009 மே மாதம். அச்சமயம்  நான், என் குடும்பத்தினருடன் எங்களுடைய நெடுநாள் குடும்ப நண்பன் ஒருவனுடைய வீட்டில் தங்கியிருந்தேன்  – இந்த வீடு சேலம் மாவட்டத்தின் மலைப் பிராந்தியங்கள் ஒன்றில் ஒரு குக்கோதிகுக் கிராமத்தில் இருக்கிறது. நண்பனின் அடுத்தவீட்டுக்காரர் சுமார் ஒரு கிமீ தள்ளி. ஆக – அழகும் அமைதியும் உள்ள பிரதேசம். இரவுகளில் மகாமகோ கும்மிருட்டு.  நமக்கே கேட்கும் நம் இதயத்தின் துடிப்பு. கொசுவே இல்லை. இனிது இனிது ஏகாந்தமினிதுதான்… (1999 வாக்கில் இவன் அப்பகுதியில் குடியேறினாலும், 2007ல் தான் இவன் வீட்டிற்கு மின்சார இணைப்பே கிடைத்தது என நினைவு)

… விடிகாலையில் ஆரம்பிக்கும் பேச்சு. காலைக்குளிரில் (மேமாதத்திலும் கூட!) அண்மையில் உள்ள சிறு குன்றின்மீது உட்கார்ந்துகொண்டு சூர்யோதயத்துக்காக காத்திருந்து கொண்டு, கட்டங்காப்பி பருகுதல்; பேச்சு; கொஞ்சம் தோட்டவேலை; பேச்சு; பின்புலத்தில் தேர்ந்தேடுத்த ஜாஸ் இசை அல்லது கலாபினி கொம்கலி தரப் பாடகர்கள். விறகு அடுப்பில் எளிமையான ஆனால் மிகச் சுவையான கூட்டுச் சமையல்; துணிதுவைத்தல்; பேச்சு. பாத்திரம் கழுவுதல்; பேச்சு—; பேச்சு. —; பேச்சு… —; பேச்சு… —; பேச்சு… மதியம் சுமார் 3 மணி நேரம் பிடித்த புத்தக வாசிப்பு. மாலையில் நீண்ட நடைபயணம். பின் மறுபடியும் குன்றின் உச்சியிலிருந்து சூர்யாஸ்தமனம் பார்த்தல் (கையில் தேனீர்க் குடுவையுடன்); குளித்துவிட்டு இரவுணவு, சுத்தம் செய்தல். பின்னர் இருகுடும்பத்துக் குழந்தைகளும் போட்டுக்காட்டும் நாடகங்கள், படிக்கும் கவிதைகள், கதைகள் இன்னபிற போன்றவை. ஒவ்வொரு நாளும் இரவில் ஒரு நல்ல படம். ஆக ஒரு அந்த்ரெய் தார்கோவ்ஸ்கி / டெப்ரா க்ரானிக் / குரஸாவா அகிரா / ரிச்சர்ட் லின்க்லேடர் / ரித்விக் கடக் / பால் தாமஸ் ஆன்டர்ஸன் / ஆந்த்ரே வய்தா / இங்க்மர் பெர்ன்மன் படம்…  பத்துமணிக்கு மேல் நட்சத்திரங்கள், ஆகாஷகங்கை (பால்வழிப் பாதை) தரிசனம். அன்றைய கேல் கதம். Read the rest of this entry »

Silly

It is very easy-peasy to become an activist (of social or anti-social issues) these days. Hallelujah, hallelujah!! All of us wannabe social activists have never had it oh so good!

In fact, this post is about ‘social activism’ that I actually learnt from an illustrious parent of one of my children… believe me!  I am telling you the unvarnished truth – and unfortunately, for various reasons this parent (or parents) shall remain unnamed, sorry.

Oh, well.

To help you lazy fellows (I mean you – the unfortunate reader of this oh so very pathetic weblog), I have presented five levels of social activism, after a whole lot of painstaking research and lucubration. And, I sincerely hope that you would profusely thank me and flood my mailbox & the comments area with a zillion thankyou, thankyou kind of mushy notes, oh the hope!

Okay – onto the details of the FIVE  levels:  Read the rest of this entry »

… இன்றோடு  நியமத் அன்ஸாரி எனும் சமூகப் ப்ரக்ஞை மிக்க இளைஞர்,  நக்ஸலைட் குண்டர்களால் கொலை செய்யப்பட்டு மூன்று வருடங்களாகிவிட்டன; இந்த இளைஞரை எப்படி நாம் மறக்க  முடியும்?

(அல்லது) நக்ஸல்பாரி கூலிப்படை அரைகுறைகள், ஏன்  நியமத் அன்ஸாரியைக் கொலை செய்தனர்? (சுமார் 1600 வார்த்தைகளுள்ள  நீளப்பதிவு இது. பொறுமையாகப் படிக்கவும். முடியாவிட்டால் வினவிக்கொள்ளவும்)

ஏனெனில், அவர்களுக்கு — வினவு-தினவு கூச்சல்களுக்கு மேற்பட்டு, முடிந்தால் எதிரிகளாகத் தென்படுவர்களை அழித்தொழிப்பது தான் நீண்டகால பொழுதுபோக்குத் திட்டம் – கட்சித் திட்டமும் கூட.

ஏனெனில் —  மாவோயிஸ்டுகள், வாய்கூசாமல் புளுகுவதில் வல்லவர்கள். நாக்கில் நரம்பில்லாமல் அபாண்டங்களை அடுக்கி தங்களுக்கேற்றாற்போல உண்மையை வளைத்து உடைப்பதில் சுயகாரியப் புலிகள்.

ஏனெனில் – அவர்களுக்கு ஒரு விஷயத்தையும் சரிவரச் செய்யத் தெரியாமலிருந்தாலும், அரைகுறைத்தனத்தால் ஞானஸ்னானம் கொடுக்கப்பட்டிருந்தாலும்  — அவர்களுக்கு, எதனையும் சும்மனாச்சிக்கும் கேள்வி கேட்டு அதற்குப் பின்புலத்தில் ஒரு ஏகாதிபத்திய, பெருந்தரகுமுதலாளிய, பெருந்தேசிய கற்பனைச் சதித்திட்டத்தைக் காணுவது ஒரு வீரவிளையாட்டு.

ஏனெனில் – பெரும்பாலான நக்ஸல்பாரிகள் ஊழல்களில் திளைப்பவர்கள் – அதை யாராவது தட்டிக் கேட்டால், அவர்கள் தங்கள் சார்பினராகவே இருந்தாலும் கூட அவர்களை துரோகிகளாகக் கருதுபவர்கள். கருதியபின் – அவர்களிடம் செல்ஃபோன் இருக்கிறது ஆகவே அவர்கள்  ‘போலீஸிடம் போட்டுக் கொடுப்பவர்கள்’ என, வெகுச் சுலபமாக நிறுவி விடுபவர்கள்.

Read the rest of this entry »