அரவிந்தன் கண்ணையன் அவர்கள் எழுதிய, முகாந்திரமேயில்லாத, அடிப்படைகளைப் புரிந்துகொள்ளவே முயற்சிக்காத ஆங்கில மேட்டிமைதொனி முன்முடிவுக் கட்டுரைக்கு பதிலாக – லாவணித் தமிழ்க் கட்டுரையொன்றை எழுதலாமா வேண்டாமா, எழுதினாலும் (எனக்கேகூட!) ஏதாவது உபயோகம் இருக்குமா என யோசித்துக்கொண்டிருந்தேயிருந்தாலும், குறிப்புகளையும்  எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

என் நண்பர் ஒருவரிடமும் இதன் அவசியமின்மை/அவசியம் பற்றி அறிவுரை கேட்டிருந்தேன். அவர் பதில் எப்போதும்போலவே சமனத்துடன் இருந்தது = ‘எழுதவேண்டுமென்றால் இப்படி எழுதலாம், ஆனால் அப்படி வேண்டாம்!’ அய்யா, நன்றி! :-) Read the rest of this entry »

இரண்டுமூன்று தினங்களுக்கு முன் பத்ரி அவர்களின் முக்கியமான, சரியான நேரத்தில் வெளிவந்த பதிவில் (= விண்வெளிப் பயணங்கள்) – அதன் பின்னூட்டங்களுக்கும் சேர்த்து – ஒரு விஸ்தாரமான பின்னூட்டமிட்டிருந்தேன். ஆனால் அது வெளிவரவில்லை/பதிக்கப்படவில்லை; ஏதாவது ஸ்பேம் முடக்கம் போன்ற காரணங்கள் இருக்கும். அல்லது ஐபி பேக்கெட்டுகளை, ஏதாவது வழித்தடப் பிசாசு (=டீமன்) உண்டு ஏப்பமும் விட்டிருக்கலாம்!

ஆனால் – அதற்காக,  என் மேலான கருத்துகளைத் தெரிவிக்காமல் இருக்க முடியுமா, சொல்லுங்கள்? ;-) Read the rest of this entry »

எஸ்ராபீடித்து ஜுரம் வந்தால்… … க்க்… தண்ணீர்… தண்ணீர்…. க்க் க்க்

விக்குபீடியனான எனக்கு இப்படித் தொண்டை வறண்டு விக்குகிறதே! யாராவது குடிப்பதற்கு நீர் கொடுத்துத் தொலைக்க மாட்டார்களா? க்க்…  க்க்

…வேதாளராமசாமியாகித் திரும்ப எஸ்ராமுருங்கமரம் ஏறினால்தான் தாகம் தீருமோ? விக்கல் போகுமோ?? எம்குறை அகலுமோ??? பிறவிப் பயனை அடைவேனோ????

…நண்பர் மொஹெம்மத் அவர்கள், கீழ்கண்ட பின்னூட்டத்தை இட்டிருக்கிறார்:

ராமசாமி சாருக்கு மிக்க நன்றி.மிக விரிவான சிந்திக்க வைக்க கூடிய பதிவு.நான் நீங்கள் சொல்வது போல் அரைகுறைதான்.போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் தான்.கேள்விப்பட்ட சில விசயங்களையும் சொல்லிவிட்டேன்.முழுக்க நம்பிக்கை சார்ந்தவன் தான்.ஆனால் இஸ்லாமை அறிந்து கொள்ளவும் முயன்று கொண்டிருக்கிறேன்.

Read the rest of this entry »

அதாவது: மொஹெம்மத் நபி அவர்களின் வழி நடத்தலில் ஒரு ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத் போன்ற மனிதரெல்லாம் உருவாக முடியும்  என்றால் ராமசாமியாக நான், வெறும் ஒரு அப்துல்லாவாகப் பதவியிறக்கம் பெறமுடியாதா என்ன?  :-)

இது சென்ற பதிவின் (=இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (6/n) 18/08/2015) தொடர்ச்சி. அதாவது – இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (7/n) Read the rest of this entry »

இந்தப் பகுதி: இந்திய முஸ்லீம் சமூகத்தின் ஏகோபித்த சுயலாபபழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில குறிப்புகள்  (6/n) என்றறிக. இந்த வரிசையில் முதற் பகுதி: 1/n; இரண்டாம் பகுதி: 2/n; மூன்றாம் பகுதி: 3/n; நான்காம் பகுதி: 4/n. ஐந்தாம் பகுதி: 5/n.

கொர்-ஆன், இஸ்லாம் மத ஸ்தாபகர் மொஹெம்மத் நபி அவர்கள், அக்கால அரேபியச் சூழ்நிலை போன்ற விஷயங்கள் பற்றிய என் குறிப்புகளுக்கு ‘மொஹெம்மத்’ எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் அன்பர் ஒருவர் பின்னூட்டம் இட்டிருக்கிறார். ஆனால், என் வழக்கம்போல அங்கேயே பதிலிடாமல், உரையாடலின் அவசியம் கருதி,  தனியாக இந்தப் பதிவை எழுதுகிறேன்.

Read the rest of this entry »

இன்று ஆகஸ்ட் 16 –  சரியாகப் பதினொன்று வருடங்களுக்கு முன், மனித நேயம் மிக்கவரும், பண்பாளரும் ஆன ‘சின்ன பாலா‘ அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட தினம்.

Read the rest of this entry »

மன்னிக்கவும்; இந்தப் பதிவை வைத்துக்கொண்டு, ‘விடுதலை’ வீரமணி அவர்கள், ‘சீனர்கள், ஸெராமிக்டைல் கற்காலத் தமிழர்களே!‘ எனச் சினமுடன் சீறும் சிறுத்தை அறிக்கையைச் செவ்வனே வெளியிட்டால், பின்னர் சீமார்சீனார் மேற்கொண்டு, தமிழ்சீனத்துக்காக ‘நாம் தமிழ்ச்சீனர்‘ எனவொரு இயக்கத்தை ஆரம்பித்து, ஒரு சீன் போட்டால் – அந்த எழவுகளுக்கெல்லாம் நான் பொறுப்பேற்க முடியவேமுடியாது; முதலில் இதனைச் சொல்லிவிடுகிறேன். ஏனெனில், திராவிடப் பகுத்தறிவின் பொற்காலம் அப்படிக் கெட்டுக் கிடக்கிறது! எந்தப் புத்தில், எந்த திராவிட ஜீபூம்பா இருக்குமோ, நானறியேன்! Read the rest of this entry »

ஸ்ரீலங்காவின் லக்ஷ்மண் கதிர்காமர் அவர்கள்,  ஸ்ரீலங்கா தமிழர்களின், ஏன் மானுடத்தின் எதிரிகளுமேயான தறுதலைப் புலி ‘எல்டிடிஇ’ கொலைகாரர்களின் முடிவை, அவர் ஸ்ரீலங்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது ஆரம்பித்து வைத்ததால், படுகொலை செய்யப்பட்டவர்.

இன்று (12 ஆகஸ்ட்) அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தினம். அவர் கதை 2005ல் முடிந்து பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன என்றாலும் அவர் தொடங்கிய முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று(=எல்டிடிஇ அயோக்கியர்களுக்குச் சாவுமணி), ஒரளவுக்கு நன்றாகவே நிறைவேறியிருக்கிறதுதான்!

சரி. பல இடங்களிலும் சேகரம் செய்யப்பட்ட என்னுடைய பழைய குறிப்புகளில் இருந்தும் சிதைந்துகொண்டிருக்கும் மங்கல் நினைவுகளிலிருந்தும், லக்ஷ்மண் கதிர்காமர்  அவர்கள் தொடர்புள்ள சில விவரங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.  ஆனால், இதற்கு நான் சந்தோஷப்படுவதா அல்லது சோகமுறுவதா என்று தெரியவில்லை; sad contemporary history is a tough mistress, indeed! :-( ஹ்ம்ம்… Read the rest of this entry »

இந்தப் பகுதி: இந்திய முஸ்லீம் சமூகத்தின் ஏகோபித்த சுயலாபபழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில குறிப்புகள்  (5/n) என்றறிக.

இந்த வரிசையில் முதற் பகுதி: 1/n; இரண்டாம் பகுதி: 2/n; மூன்றாம் பகுதி: 3/n; நான்காம் பகுதி: 4/n.

…எது எப்படியோ, மற்ற இந்தியர்களைப் போலவே நம் சக இந்திய முஸ்லீம்களும் (குறிப்பாக என் தமிழக முஸ்லீம்களும்) ஆத்ம பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய, தங்களுக்குள்ளேயும் பிறபண்பாடுகளுடனும் பொறுமையுடன் உரையாடவேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். இந்த ஆத்ம/சுய பரிசோதனைக்கு எவரால் உதவமுடியுமோ அவர்கள் உதவினால் அது ஒட்டுமொத்த மானுடமேன்மைக்குக்கூட உதவும் எனவும் நினைக்கிறேன்.
Read the rest of this entry »

என் மதிப்புக்குரிய தளங்களில் ஒன்றான ‘அரூபக் கருத்து நிலை வாத்து’ – AbstractGoose! ;-/  – முன்னெப்போதோ பதிப்பித்த சித்திரங்களில் ஒன்றை உங்கள் தலையில் கட்டுவதில் நான் பெருமைப் படுகிறேன்!

Read the rest of this entry »

The adolescents require so, oh SOOO much external structure in their lives.

At another level, they also resist that, rightly so. So, these seemingly contradictory pulls make dealing with them, that much more challenging and endlessly tiring.

As a wag said, an adolescent is a teenager who acts like a baby when you don’t treat him (or her)  like an adult. Truly and verily. Read the rest of this entry »

மேற்கண்ட கட்டுரையின் நீதி:

டப்பா ஒரு ஆண்: ஆக, டப்பாவிலிருந்து சாப்பிடுபவர்களுக்கு வழுக்கை விழுந்தேயாகவேண்டும். (கவனிக்கவும்: பொதுவாக ஆண்களுக்குத் தான் வழுக்கை விழும்!)

டப்பி ஒரு பெண்: ஆக டப்பியிலிருந்து சாப்பிட்டால் ஒரு எழவும் ஆகாது. ஆகவே – 90 வயதிளம் ஆண்களும்கூட அமோகமாகத் தலைவாரிப் பின்னிப் பூச்சூடிக்கொள்ளலாம். (கவனிக்கவும்: பொதுவாக ஆண்களுக்குத் தான் வழுக்கை விழும்!)

திராவிட இயக்கக் கொள்கைகளில் தலையாயது – தலைமுடி உதிர்தல் குறித்த கரிசனம்தான், வாழ்க.

Read the rest of this entry »

நாம்தமிழரும் என் ஒர்ரே அபிமானத் தலைவருமான சீமான் அவர்கள், அண்மையில் வெளியிட்டிருக்கும் பயபீதி அளிக்கும் பிரகடனம்:
எனக்கு மூலம், பௌத்திரம், தறுதலைப்புலியாதரவு போன்ற தீராவியாதிகளுடன், அண்மையில் ஜிஹாத் வியாதியும் பிடித்திருக்கிறது!

ஆதாரம்:

Read the rest of this entry »

இவ்வரிசையின் முதற்பகுதி: குசுமுதல்வாதம்: ஒரு அ, ஆ அரிச்சுவடி (1/2)

அப்பகுதியின் முடிவில் இப்படியொரு கேள்வியெழவைக் கேட்டு முடிந்திருந்தேன்: ஸ்பெஷல்மஸாலா குசு விடுவது எப்படி?

அதற்குப் பதில் … இப்படித்தான்: http://www.vinavu.com/2015/07/29/what-abdul-kalam-failed-to-speak-about-cartoon/

‘ஆ’ என்பவர்கள் வினவுக் கூவான்கள் போன்றவர்கள். இவர்களின் அற்பத்தனத்துக்கும் அழிச்சாட்டியத்துக்கும் அயோக்கியத்தனத்துக்கும் ஒரு எல்லையே இல்லை!

ஆக்கபூர்வமாக ஒரு மசுத்தையும் பிடுங்கமுடியாமல் போனாலும், சொகுசாக உட்கார்ந்துகொண்டு குமாஸ்தாத்தனமாக சொகுசுக்களை விட்டேற்றியாக விட்டுக்கொண்டே இருப்பார்கள், இந்தப் பதர்கள்…

-0-0-0-0-0-0-

அப்துல்கலாம் அவர்களின்மீதான தூற்றல்களிலேயே மிக மோசமானது – என்னுடைய செல்ல வுடன்பெறப்பாரும், சொகுசுத்தீவிரவாதியுமான யுவகிருஷ்ணாவுடையதுதான். ஏனெனில், அடிப்படையில் அற்பர்களால், தரமற்றவர்களால் காரியப்புகழ்ச்சி செய்யப்படும் சோதனைதான் உலகிலேயே தாங்கொணா ஒன்று.

Read the rest of this entry »

அம்மணிகளே, அம்மணர்களே!

எச்சரிக்கை: இது ரொம்பவே ரசக்குறைவான கட்டுரை. ஆகவே  மூக்கை மூடிக்கொண்டு இந்தப் பதிவைப் படிக்கவும்.  ஏனெனில், எனக்கு வந்திருக்கும் கோபத்துக்கு அளவேயில்லை! }:-|

😬

இந்தப் பதிவில் வெறும் ‘கெட்ட’ வார்த்தைகள் மட்டுமே வந்திருக்கும். ஆனால் நல்லவேளை, இன்று காலையில் ஜெயமோகனின் கலாம்- கேள்விகள்  எனும் பதிவைப் படித்து, என் மனம் கொஞ்சமேனும் ஆதூரம் அடைந்தது.

ஆகவே, முகத்தைச் சுளித்துக்கொண்டு மேலே, இது உங்களுக்கு மிகவும் அவசியம் என்றால் மட்டுமே மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கவும். You have been sufficiently warned, right?

Read the rest of this entry »