2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (1/3)

March 13, 2016

பீடிகை (= CigaretteHand ©எஸ். ராமகிருஷ்ணன்): என்னுடைய மகாமகோ செல்ல அகதிகளான ‘அமெரிக்க’ என்ஆர்ஐ சொகுசு அறிமுகங்களுக்கும் (இவர்களில் பலர், என்னுடைய அக்கால வகுப்பு/கல்லூரித் தோழர்கள்)  என்னைப்போலவே வேறு வேலையேயில்லை – ஆனால், என்னைப்போலல்லாமல் மாதாமாதம் ‘டாண்டாண்‘என்று டாலர் $$$$ சம்பளம் வந்துவிடுகிறது என நினைக்கிறேன்.  B-)

…அதனால்தான் அவர்களுக்கு 24X7 ரீதியில் தமிழக நடப்புகளின் மீது ஒரேயடியாக ஒரு இனம்புரியாத குமாஸ்தாவிய ஈர்ப்பு; ஆக, தொலைதூரத்தில் இருந்து கணிநி எலிக்குட்டியின் மேற்கொட்டையை உருட்டியே சமூகப்  புரட்சிக்கு வித்திடுகிறார்கள், நிரந்தரமாக அடுத்து வரப்போகும் ‘நேர்மையான’ முதலையமைச்சர் பற்றி அதீதமாகக் கவலைப் படுகிறார்கள். இலக்கியம் பற்றிச் சிந்திக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் சிறுமைகளை-போதாமைகளைப் பற்றி, வெகு பாதுகாப்பாக அங்கிருந்தே பொங்கிப் படையல் வைக்கிறார்கள். அவரவர்களின் இந்திய கலாச்சார ‘வேர்கள்’ குறித்து உருகுகிறார்கள். இவர்களைப் பார்த்தாலும் பரிதாபமாக இருக்கிறது.

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே ()

…அவர்களிடமிருக்கும் அமெரிக்க டாலர்-களை, இந்திய ரூபாய்-களாக மாற்றினால் எவ்வளவு 0000000 அதில் இருக்கும் என ஆனந்தமாகக் கணக்கிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் – சீப் விமான டிக்கெட் என்றால், வருடாந்திர இந்தியச் சுற்றுலா எழவுக்கு சல்லீசாக வந்துவிட்டுப்போக, ஜொள்ளொழுக 2000000 தடவை உலகைச் சுற்றிவரும் கடமுடா விமானப் பயணத்துக்கும் அவர்கள் தயார்!

…எப்படியும், அடுத்த வருடம் இந்தியாவுக்கு ஒரேயடியாகத் திரும்பிப் போய்விடவேண்டும் என்று ஒவ்வொருவருடமும் தவறாமல் சபதம் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் பாவம், ஒவ்வொரு வருடமும் டாலர் கையிருப்பு, எழவு, அதிகமாகிக்கொண்டே போகிறது – ஆக அடுத்ததுக்கு அடுத்தவருடம் சென்றால், கையிருப்பில் மேலதிகமாக டாலர் சேருமில்லையா, பாவம்தானே?

ஆக, இன்னும் சிலர், ஏதோ அவர்களால் முடிந்தவரை சேவைசெய்ய அய்ன்ரேன்ட் படித்து,  இந்தியக் கலாச்சாரம், கீதை பற்றிய அமெரிக்கர்களின் பொழிப்புரைகளை மட்டும் டப்பா அடித்து, அறிவுரைகள் பலவற்றை ஆறஅமரச் சொல்கிறார்கள். என்னைப் போலவே, மானாவாரியாக ப்ளாக் எழுதுகிறார்கள், ஸ்டேட்டஸ் போடுகிறார்கள். வாழ்க ‘ஸ்டேட்டஸ்’ ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா. ‘அமெரிக்க’ என்ஆர்ஐகளே, நீங்கள் பொலிக, பொலிக…

ஆக, இவர்களில் மற்றும் சிலரின் மகத்தான நேரடிக் களப்பணிகளின், பாரதத்தைப் பற்றிக் கரிசனப்படுவதில் ஒரு அங்கமாக, என்னிடம் போய் –  நீ தமிழக தேர்தல்சூழலைப் பற்றி என்ன நினைக்கிறாய், எதனை ஆதரிக்கிறாய் என வம்பைக் கிளப்பும் கேள்விகள் கேட்கிறார்கள். என்னவோ நான் நினைப்பதால் மட்டுமே எல்லா விஷயங்களும் நடந்துவிடும்போல, என்னுடைய எண்ணங்களெல்லாம் பொருட்படுத்தத் தக்கவைபோல! ஆக, இப்படிச் சிலர் ஏகோபித்து ஆர்ப்பரித்துக் கேட்டிருப்பதால்தான்(!?), மறுபடியும் மறுபடியும் இதைக் கேட்டுத் தொந்திரவு கொடுத்ததனால்தான் இந்தத் தன்னிலை மயக்கம், வேறுபல வேலைகள் மலைபோலக் குவிந்துகொண்டிருந்தாலும், மண்டையில் அடித்துக்கொண்டு துளிக்கூடக் கூச்சமேயில்லாமல், மேதாவித்தனமாகக் கொடுக்கப் படுகிறது.

சரி. அவர்கள் கேட்டது ஒரு ஆங்கிலமூலக் காட்டுரையை; ஆனால் நான், அதனைத் தமிழில் தான் எழுதுவேன் என என் பாணி(!) நூட்ல்ஸ் உரைநடையில் தான் எழுதியிருக்கிறேன். ஏனெனில், அப்படி என் மேலான(!) கருத்துகளை வேண்டிக் கேட்டுக்கொள்பவர்கள், அதனைத் தமிழில் படிக்கும் முயற்சியையாவது செய்யலாமில்லையா? போங்கடா!

-0-0-0-பீடிகை முடிந்தது-0-0-0-

சரி. சென்ற சில சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல்களில், நான் ஓரளவுக்காவது நேரடியாகப் பணி செய்யமுடிந்தது – ஒவ்வொரு முறையும், ஒரு சில மாதங்களுக்காவது பேச்சுகள், ஏச்சுகள், கெஞ்சல்கள், மிஞ்சல்கள், அடிஉதைகள், தள்ளுமுள்ளுகள், நேரடி வாக்குச் சேகரிப்புகள், விரட்டிவிரட்டி ஓட்டுபோடவைத்தல்கள் + 2011 முதல் அவை பற்றிய சிலபல ஒத்திசைவுக் கட்டுரைகள் (நம்பவே முடியவில்லை, இந்த ஐந்தாண்டுகளில் அறுநூற்றுச் சொச்சப் பதிவுகள்; ஒரு தமிள் எள்த்தாளனாக இல்லாமலேயே, ஒரு சாதாரண வாசகனாகவே, ஒரு பத்திரிகைக்காரனாக இல்லாமலேயே –  இப்படி குப்பை கொட்டியிருக்கிறேன்!) – என மேலதிகமாக அது நீண்டது.

மேலும் – இவற்றை விலாவாரியாகச் செய்வதற்கு, எனக்குக் கொஞ்சமாவது தார்மீக அடிப்படையும், சுற்றுச்சூழல் உந்துதல்களும் இருந்தன. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் – குடியும், கூத்தும், கொள்ளையும், ஜாதிவெறியும், பொய்மையும் (=திராவிடத்தின் ஐம்பெரும் கொள்கைகள்) என் பள்ளிக்குழந்தைகளை நேரடியாகப் பாதித்துக்கொண்டிருந்தன. என் தமிழகமானது திராவிடச் சாக்கடையில் தொடர்ந்து அமிழ்ந்துகொண்டிருந்தது… (ம்ம், இப்போதும் தொடரும் சோகங்கள்தான் இவை! கையலாகாத்தன விசனம் தரும் விஷயம் இது.)

…இருந்தாலும் – நான் தற்போது, தமிழகத்தில் வசிக்கவில்லை; என் வாக்குரிமையும் அங்கேயில்லை; மன்னிக்கவும். ஆகவே, என் மேலான கருத்துகளை, அளவுக்கு மீறித் தெரிவிக்க முடியாது – ஏனெனில். ‘தொலைதூரப்’ பொங்கல் வைத்தல்களுடன், நேரடித் தொடர்பற்ற விஷயங்களை அணுகுதல்களுடன், தேவையற்ற கருத்துதிர்ப்புகளுடன் எனக்கு ஒத்து வராது. தொலைதூரத்தில் வசதியாக, என் செல்லக் கணிநி முன் உட்கார்ந்துகொண்டு, அறிவுரைகளை அள்ளி வழங்குவது சரியான விஷயமல்ல எனத்தான் நினைக்கிறேன்.

ஆனாலும், நான் ஒரு சாதாரணத் தமிழன் – ஆகவே, நிச்சயமாக ஒரு திராவிடப் போலியல்லன். ஆகவே, பாரதம் எனும் பேரொழுக்கின் ஒரு அங்கமாக, நம் தமிழகத்தின் மேன்மையையும் மிக விரும்பும் ஆசாமி. அதே சமயம், அனைத்து அரசியல்வாதிகளையும் அயோக்கியர்களெனவும் சித்திரிக்க மாட்டேன்.

… ஏன், எனக்கே மிகமிக ஆச்சரியம் தரும் விதத்தில், திராவிட இயக்கங்களிலுமே கூட ஒருசில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகள் இருக்கலாம் (பழ. கருப்பையா அவர்களைப்போல), என்பதை உணர்ந்திருக்கிறேன். எனக்கு அரசியலும் பிடிக்கும் – அதில் நேரடியாக ஈடுபடுவதையும் முக்கியமான விஷயமாகத்தான் நினைக்கிறேன். முந்தைய தேர்தல்களில் ஓரளவுக்கு (ரண)களப்பணியும் செய்திருக்கிறேன். வழாவழா கொழகொழா போலி நடு நிலைமை போங்காட்டம் ஒத்துவராது. இணையத்தில் வீரக்கோமணங்களை ஆட்டிஆட்டிப் பேசிவிட்டு, பின்னர் ஓட்டுச்சாவடிக்குக் கூடப் போகாமல் கமுக்கமாக இருப்பதும் ஒத்துவராது. ஆகவே.

-0-0-0-0-0-0-

நான்  பொதுவாகவே, பெரும்பாலான தினசரி/வாரஇதழ்/தொலைக்காட்சிஊடகப் பேடிகளைக் கவனிப்பதில்லை; இது அவர்களுக்கு ஒரு பொருட்டே(!) இல்லையென்றாலும், அவர்கள், என் மரியாதையை(!!) இழந்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. ஆக லேட்டஸ்ட் பப்பரப்பா, கூட்டணி, சாம்பாரணி, பொரியலணி நிலவரங்கள் பற்றியெல்லாம் ஒரு எழவும் தெரிந்துகொள்ளாமல்தான் இதனை எழுதுகிறேன்; ஏனெனில் – என் தர்க்கரீதியான சிந்தனைக்கு, நம் ஊடகங்களின் அற்ப அள்ளித்தெறித்தல்கள் அவசியமேயில்லை. எந்தக் கட்சி எந்தக் கூட்டணியில் என்றெல்லாம் உருகிவுருகிச் சாவதும், படபடப்பும் தேவையேயில்லை.

என்னுடைய கருத்துகளை நான் வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கும் முறை என்பது: பலப்பல விஷயங்களை ஓரளவு ஆழ்ந்து கவனித்து வந்திருப்பதாலும், தமிழக அரசியல் சூழலைப் பற்றியும் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் குறிப்புகளை எடுத்துக்கொண்டு வந்திருப்பதாலும்,  நான் கொஞ்சமாகவது சுயசிந்தனை உள்ளவன் என்பதாலும், எனக்கு சிலபல கட்சிகளையும் சார்ந்த இடைநிலைத் தலைவர்கள், தொண்டர்கள் சிலர் அறிமுகமாகியிருக்கிறார்கள் என்பதினாலும் – மேலும், என்னுடைய ஓரளவுக்குச் செறிவான கள அனுபவங்களினாலும் தான். எனக்கு, இவற்றைத் தவிர வேறெந்த விசேஷ தகுதியும் இல்லை. அவ்வளவுதான்.

ஆக, மேற்குறிப்பிட்டுள்ள என் பின்புல அடுக்குகள் மூலமாக வளர்த்தெடுத்துக்கொள்ளப்பட்ட கீழ்கண்டவைதான் என்னுடைய கருத்துகள்; ஆகவே, ஏற்றுக்கொள்ளமுடிந்தவற்றை ஏற்றுக்கொள்ளவும், மற்றவைகளைக் கடாசவும்.  பொறுக்கமுடியவில்லை என்றால் விட்டுவிட்டு ஓடவும்.

-0-0-0-0-0-

1. திராவிடக் கட்சிகளும் அவற்றின் அரைகுறைக் கருத்தாக்கங்களும் – மிக முக்கியமாக, அவற்றின் தொடர் தீவட்டிக் கொள்ளைகளும், கலாச்சாரச் சுரண்டல்களும் ஒழிக்கப்பட்டால்தான், அறவே அகற்றப் பட்டால்தான்,  தமிழகத்துக்கு விமோசனம். இந்த அயோக்கியக் கட்சிகளில் நான் திமுக, அஇஅதிமுக போன்றவற்றுடன்,  பாமக, தேதிமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள்  போன்றவற்றையும் இணைக்கிறேன். இப்பாதையில் சேரத் துடிக்கும் கயமைச்சந்தர்ப்பவாதக் கட்சிகளான கொங்கு கட்சிகள், பச்சமுத்து கட்சி, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக, தவ்ஹீத் ஜமாத் வகையறாக்களையும் இணைக்கிறேன்.

இவற்றின் பின்புலங்களையும், நிதர்சன நிலவரங்களையும் ஓரளவுக்கு அறிந்துள்ள என்னைப் பொறுத்தவரை – இவைகளுக்குள் அடிப்படையில் ஒரு வித்தியாசமும் இல்லை. பெருங் கொள்ளையடிப்பவர்கள், சிறிய கொள்ளைக்காரர்கள், பிக்பாக்கெட் காரர்கள் என்ற அளவில் தான் இவர்களுக்குள் வித்தியாசங்கள். பொதுவாகவே – இவைகளுக்கும் கொள்கைகள் என்பவற்றுக்கும் வெகு தூரம்; இவற்றின் நெடுநாள் அங்கத்தினர்களிடமே கூட ‘அவர்களுடைய கொள்கை என்றால் என்ன?” கேட்டாலும் அவர்களுக்கும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அயோக்கியமாகப் பணத்தைச் சுருட்டுதல் மட்டுமே. இக்கட்சிகளுக்குள் இருக்கும் பிற வித்தியாசங்கள் – பதவியில் இருந்தால் அதிகாரத்துடனும் சுருட்டுதல் – பதவியில் இல்லாவிட்டால் அடாவடிகளில் சுருட்டுதல் –  என்கிற ரீதியில் இருக்கும், அவ்வளவுதான்.

2.  தமிழகம் முதலில் உதிர்க்கவேண்டிய கட்சி திமுக. இது அழிவு கொலை கொள்ளை தீமை கழகம் (திமுக = அகொதீக – நாம் உதிர்க்கப்போவது எதனை?). இதில் எனக்குச் சந்தேகமேயில்லை. எல்லா வகைகளிலும் தமிழகத்தை, பாரதத்தைத் தொடர்ந்து இரக்கமேயில்லாமல் படு கேவலமாகச் சுரண்டும் கட்சியிது. மேலதிகமாக – வாரிசுக்கு மேல் வாரிசாக, தலைமுறை தலைமுறையாக நம்மைக் கொள்ளையடிப்பதற்கு இவர்கள் இப்போதே தயார். மாவட்டம் மாவட்டமாகத் தயாராகவேறு உள்ளனர் குட்டித் தலைவர்கள் / குறுநிலமன்னர்கள், தத்தம் குழந்தைகுட்டி பரிவாரங்களுடன், ரவுடி கும்பல்களுடன், கல்வித்தந்தைமாமாக்களாக அவர்களுடைய அசிங்கமான வன்புணர்ச்சிக் கல்லவி நிலையங்களுடன்…

இவர்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்தால் கருணாநிதி இருக்கிறாரோ இல்லையோ, இசுடாலிர் இருக்கிறாரோ இல்லையோ – அந்தக் கொள்ளைக்குடும்பத்தின் மூன்றாம் பரம்பரைத் தலைவர்களின் கீழே அணி திரண்டு, பாரதத்தையே கூட ஒழித்துவிடுவார்கள். இந்த ஒழிப்புப் பிணியில், அவர்கள் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள். கருணாநிதி அவர்கள் ஒருமுறை பகிரங்கமாகச் சொன்னது போல ‘கடமை கண்ணியம் இல்லாமல் இருந்தால் கூடப் பரவாயில்லை, ஆனால் கட்டுப்பாடு முக்கியம்!’(கருணாநிதி அவர்களின் புத்தம்புதிய ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ வியாக்கியானம்! 05/09/2015: “ஏனென்றால், கட்டுப்பாடு இருந்தால் எல்லோரும் சேர்ந்து கண்ணியம் தவறிக்கூட நடக்கலாம். இது பெரியாருடைய வியாக்கியானம். கடமைகூட தவறி விடலாம். கட்டுப்பாட்டோடு இருந்தால் எவனும் எதுவும் செய்ய முடியாது.”)

…ஆகவே கட்டுப்பாட்டுடன் பல்வகைக் கொள்ளைகளை அடிக்கும் திறனும், கூசாமல் எல்லாவகை வன்புணர்ச்சிகளையும் செய்யும் அனுபவமும், தொடர்ந்த பேராசையும் உள்ள கட்சிதான் இது. அதனால்தான் இக்கட்சியானது, தொடர்ந்து அனைத்துத் தேர்தல்களிலும் தோற்கடிக்கப் படவேண்டும். அடுத்த சில பத்தாண்டுகளிலாவது துப்புறவாக உதிர்க்கப்படவேண்டும். இது என் அவா. இது நம் கடமை. தமிழர்களின் கண்ணியத்தைக் காப்பதற்கு, திமுக அவசியம் ஒழிக்கப்படவேண்டும்.

மறுபடியும் சொல்கிறேன். திமுக என்பது தமிழகத்தை மட்டுமல்ல, பாரதத்தையும் பீடித்திருக்கும் படுகேவலமானதும், வீரியமிக்கதுமான ஒரு புற்றுநோய். And yes, deep seated cancer can NEVER be  cured by the cosmetic skills of dermatology. It has to be surgically removed, preferably irradiated away to hell, atomized!

ஊக்கபோனஸாக – ‘விடுதலை’ வீரமணி குடும்ப முன்னேற்றக் கழகம் (=திராவிடர் கழகம்) போன்றவையும், தமிழகக் கலாச்சாரச் சூழலில் இருந்தும் ஆகவே அரசியலிருந்தும் அகற்றப்பட்டால் அதுவும் நல்லதே; இதன் பாதக விளைவு என்னவென்றால் – தரமான, திறமைவாய்ந்த கோமாளிகளுக்காகத் தமிழகம் ஏங்கவேண்டியிருக்கும். ஆனால், தலையில் அடித்துக்கொண்டு இந்தப் பற்றாக்குறையைத் தாராளமாகச் சகித்துக் கொள்ளலாம், அல்லவா?

-0-0-0-0-0-0-

அடுத்த பகுதி: 2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (2/3)… …

திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை!)

3 Responses to “2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (1/3)”

  1. Giridharlal Says:

    Pinnreenga thalaiva…:)

    it is most likely that your desire will be partially fulfilled by 19.05.2016, when the results will be declared. If the alliance trends continue the same way, they will be decimated in this round. In the next five years, Stalin will end up shouldering the entire leadership burden, who is no match for Jaya. It will herald the permanent decline of DMK:)

    I can not wait to see it happen…

  2. A.Seshagiri. Says:

    “ஏன், எனக்கே மிகமிக ஆச்சரியம் தரும் விதத்தில், திராவிட இயக்கங்களிலுமே கூட ஒருசில குறிப்பிடத்தக்க விதிவிலக்குகள் இருக்கலாம் (பழ. கருப்பையா அவர்களைப்போல), ”

    ஹூம்! உமது போறாத காலம்! எந்தநேரத்தில் “பழ”கருப்பையாவை புகழ்ந்தீர்களோ தெரியவில்லை!! அவரும் நேற்று “எட்டிக்காய்”கருப்பையாவாக மாறி, வரும் தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியின் ‘உஜ்ஜீவனத்திற்கு’ பாடுபடப் போகிறாராம்!.


    • ஆ! அப்படியா என்ன? பழ யன கழி தலும்?

      அவர் கோபத்தில் ஏதேதோ செய்கிறார் என நினைக்கிறேன், இருந்தாலும் அவர் நாமெல்லாம் பொதுவாக மதிக்கவேண்டிய நபர்தான்!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s