இதுவரை ஒரு சக ஏழரையும் இக்கேள்வியைக் கேட்கவில்லை, நல்லவேளை…

August 24, 2026

…என இறுமாப்புக் கொள்வதற்கும் பயமாக இருக்கிறது.

கீழ்கண்ட அன்பர் திருவாளர் வேதாந்த உதயணர் கேட்டது கூட இடுக்கண் தரவில்லை… ஆனால், என்னைப் பற்றிய முழு வண்டவாளங்களை அறிந்தவர்களுமேகூட இம்மாதிரிக் கேட்டே விட்டார்களே! அந்தோ!!

(ஒரு ஏழரையார் படித்துப் படித்துச் சொல்லியிருக்கிறார் – நீ எந்த எழவை வேண்டுமானாலும் எழுது, நீ மட்டுமே படிப்பதற்காக நீயே எழுதிக் கொண்டாலும் சரியே! ஆனால், ஒரு சிறிய எளிய #sarcasm என உன்னெழவுகளுக்குச் சிற்றுரையாகக் குறிப்பிட்டால் குறைந்தா விடுவாய்?)

சரிதான். இன்றிலிருந்து என் பெயர் வெ.ராமசாமி அல்ல – மாறாக வெ. ஸர்கஸராமசாமி.

நன்றி. 😭

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *