பாரதத்துக்கான புதிய கல்விக் கொள்கை (2016) வரைவு/வடிவமைப்பு – சில குறிப்புகள், கோபங்கள்
July 27, 2016
ஹ்ம்ம்ம்…
எந்தவொரு விஷயத்திலுமே நான் ஒரு பெரிய மயிராண்டி சண்டியர் அல்லன் என்றாலும், என் பங்களிப்புகள்(!) கிறுக்குத்தனமான சுயமைதுன வகையறாவைக் சார்ந்தவை என எனக்கு நன்றாகவே தெரிந்தாலும் – என்னால் முடிந்தவரை என் காமாலைக்கண் கருத்துகளை(!) – அழுத்தம்திருத்தமாக, துளிக்கூட வெட்கமோ மானமோ மனக்கிலேசமோ இல்லாமல் சொல்வதை – சிலபல விஷயங்களைத் தொடர்ந்து துளிக்கூடக் கவலையேயில்லாமல் செய்வதை – ஒரு பெருவியாதியாகவே கொண்டிருக்கிறேன். ஏடாகூடமான நகைச்சுவையுணர்ச்சி மட்டுமே என்னைக் கடைந்தேற்றும் என நம்புகிறேன். அற்பப் பெருமையடித்துக்கொள்ளல்களில் கிடைக்கும் இன்பம்ஸ் அலாதியானவைதான், அல்லவா?
Read the rest of this entry »
புதிய கல்விக்கொள்கை (2016), வாஸிம் மனெர் – மராட்டிய இளம் திரைப்படக்காரர்: சில கொறிப்புகள்
July 26, 2016
சில சமயங்களில்தான் அத்திபூத்தாற்போல சிலவாய்ப்புகள் ஏற்படுகின்றன.
…கல்வி மண்ணாங்கட்டி தெருப்புழுதி சமூகவியல் பல்கலைக்கிழங்கள், சொத்தைப் பல்செட்டுகள் என ஆனந்தமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் இக்காலங்களில் – வாரம் ஒருமுறை மும்பய் மாநகருக்குப் பயணம் செய்து, லேகிய வியாபாரிகள் பழநி லயன் டாக்டர் காளிமுத்து, சேலம் கவிராஜ் டாக்டர் சிவராஜ் வகையறாக்கள்போல பேச்சோதிபேச்சு பேசிக்கொண்டிருக்கும் தருணங்களில்…
12ஜூலை. எனக்குப் பிடித்தமான பல கவிஞர்(!)களில் நா. முத்துக்குமார் அவர்களும் ஒருவர் என ஒரு இளம் பிரக்ருதி நினைத்திருக்கிறார். ஆகவே, மேதகு நாமு அவர்களுக்கு 12ஜூலை அன்று பிறாண்டும் நாள் எனும் கோலாகலமான செய்தியை, நான் அறிந்துகொண்டேன். ங்கொம்மாள, ரொம்ப முக்கியம். (இந்த அரிய அற்பச் செய்தியையும், அந்த மகாமகோ மனிதருடைய சினிமாக் கவிதையுளறல் ஒன்றையும், வெகுவாக நெகிழ்ந்து, தேவையற்ற ஆவலுடன் எனக்கு அனுப்பியுள்ள இளம் அரைகுறையின் மின்னஞ்சல் முகவரி, இன்று முதல் ஸ்பேம் ஃபில்டர் செய்யப்படுகிறது. ஸர்ட்டிஃபைட் அரைகுறைகளுடன் எனக்கு ஒத்துவராது. நன்றி! என் நேரத்தை எப்படி வீணடிப்பது என்பது என் உரிமை. சர்வ நிச்சயமாக அரைகுறைகள் அதனை மீறமுடியாது. மிக்க நன்றி!)
எச்சரிக்கை: இந்தப் பதிவில் சுமார் 1850 வார்த்தைகள் இருக்கின்றன. பாவம், நீங்கள்!
…ஔரங்கசீப் புராணம்
July 10, 2016
முதலில் சிலபல விஷயங்களைத் தெளிவுபடுத்திவிடவேண்டும்: ஔரங்கசீப் எனப் பொதுவாக அறியப்படுபவர் மலினமான, சீப் உற்பத்தி சீனாக்கார சாமான்*.
எஸ்ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வேண்டுமானால், செங்கோமணமுதல்வாதம் பிடித்தமானதாக இருக்கலாம்; ரஷ்யர்கள் படுசெல்லமானவர்களாகவும், அவர்களது இலக்கியம் (கோமணமல்ல!) தூக்கிப்பிடிக்கப்பட வேண்டியதாகவும் இருக்கலாம். ஆனால் பாவப்பட்ட ஃப்யோதோர் தோஸ்தோயேவ்ஸ்கி அவர்களை, அவர் பெயரில் ஆரம்பித்து, துல்லியமாகவும் முறையாகவும் கற்பழிப்பதை, அவர் தயவுசெய்து விட்டுவிடவேண்டும். Read the rest of this entry »
ஹேஷ்டேக்வக்ரன் புராணம்
July 2, 2016
இவ்வண்டம் #க்குகளால் ஆக்கப்பட்டது. ஸர்வம் #மயம் ஜகத். Read the rest of this entry »