குடமுருட்டி குண்டனார், இந்தத் தள்ளாத வயோதிக வயதில் இப்படியெல்லாம் ஜன்னிகண்டதுபோல் உளறிக்கொட்டுவது ரொம்ப அவசியமா?

Read the rest of this entry »

என் திருவாரூர் நண்பர் ஒருவர் (இவரது நம்பகத்தன்மை அதிகம்) இரண்டு நாட்களுக்கு முன்னர் எனக்குத் தெரிவித்துள்ளபடிக்கு:

அவருக்கு நேரடியாகத் தெரிந்தே திருவாரூர் சட்டசபை தொகுதியின் விஜயாரூரம், கிடாரம்கொண்டான் பகுதிகளில் திமுக சார்பாக பணம் அமோகமாக விநியோகிக்கப்பட்டிருக்கிறது! (நண்பர், பணத்தை வாங்கிக்கொள்ளாமல் திமுக களவாணிகளைத் திட்டி அனுப்பிவிட்டார்)

Read the rest of this entry »

இதுதான் – பரந்துபட்ட மாபெரும் குடும்ப ஊழல்களின், அயோக்கியத்தனங்களின், மாளா கொள்ளைகளின், கடைந்தெடுத்த கயமைகளின், தமிழக வளங்களைச் சுரண்டுதல்களின், நம் அடிப்படை அறவுணர்ச்சிகளைக் கீழ்மைப்படுத்தலின், நெடிய பாரம்பரியத்தைச் சிறுமைப் படுத்தலின்,  கமுக்கமான ஜாதிவெறியின், ஊடகப் பேடித்தனத்தின், தமிழை ஒழித்தலின், நம் மக்களை சுயகௌரவமற்ற பிச்சைக்காரர்களாகவும் + மொடாக்குடிகாரர்களாகவும் + திரைப்படரசிகக் குஞ்சாமணிகளாகவும் ஆக்கியதின், ஜோடனை செய்யப்பட்ட அவரலாறுகளின், சுரணையற்ற வெட்கங்கெட்டத்தனத்தின் – மகாமகோ ஊற்றுக்கண்.

இது ஒழிந்தால், பிற திராவிடக் கொள்ளைக்காரக் கட்சிகளும் உள்ளீடற்ற பிற திராவிடலைத்தனங்களும் ஒவ்வொன்றாக உதிர்ந்துவிடும் – இது என் திடமான நம்பிக்கை.

Read the rest of this entry »

எனக்கு இது மாளா ஆச்சரியம் தரும் விஷயம்.  ++ அரைகுறைகளின் சொம்புதூக்குதல்களையும் அவர்களுடைய அற்ப மலைப்பையும் அவதானிக்கும்போதெல்லாம் ஏற்படும் அலுப்பும் சலிப்பும், ஊக்க போனஸ்.

Read the rest of this entry »

#பெரியார்பிறந்தமண்-ணுக்கு ஜே!

#பெரியார்புதைந்தமண்-ணுக்கு ஜேஜே!!

… உண்மையாகத்தான் சொல்கிறேன். கிண்டலெல்லாம் இல்லை. இது ஒரு படு ஸீரியஸ் ‘க்ஷேத்திராடன’ பயணக் கட்டுரை – அதற்கு முஸ்தீபாக,  பெரியார் பற்றிய சில குறிப்புகள், அவ்வளவுதான்.

Read the rest of this entry »

கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார் பற்றி,  எட்டாம் வகுப்புவரையாவது படித்திருக்கக் கூடும் நீங்கள் – மனப்பாடப் பகுதிகளின் காரணமாக அறிந்துகொண்டிருக்கலாம்.

ஆனால் அவர் பழைய ஃபேஷன்!

புதிய ஃபேஷன் மாடல், நம் மகாமகோ ஊக்கு வாணிகர் தான்! அவர் மட்டுமே தான்!! இவரை விட மாணவர்கள் மேல் கரிசனம் உடைய, சமூகப் பொறுப்புணர்ச்சி உடைய, ஆகப்பெரிய தலைவர் இருக்கத்தான் கூடுமா?

Read the rest of this entry »

முதலில் ஒரு விளம்பரம்!

நாளை சென்னை கலாக்ஷேத்ராவில், இளம் கற்றுக்குட்டி நாட்டியக் காரர்களுடன் இசுடாலிர் பரதநாட்டியம் ஆடப் போகிறார்!

அனைவரும் அலைகடலென ஆர்பரித்துச் செல்லவும். (ஆனால் ஸெல்ஃபி வேண்டாமே!)

-0-0-0-0-0-0-

…பிரச்சினை என்னவென்றால்,  தளபதி இசுடாலிர் மெட்ரோ சகபயணியை சில மாதங்கள் முன்பும், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை நேற்றும்  கன்னத்தில் அறைந்ததாகச் சொல்லப்படும் வதந்திகள் – வதந்திகள் மட்டுமே! Read the rest of this entry »

அய்யாமார்களே! இது ஒரு துர்சொப்பனமும் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு தலைமுடிகளையும் பிய்த்தெறிந்து யோசித்து, மண்டைகாய்ந்து, தருக்கபூர்வமாக அதி நுண்கணிதச் சமன்பாடுகளையும், குறியீட்டுப் படிமவியலையும் கலந்தடித்து, நான் அடைந்திருக்கும் மகாமகோ முடிவுதான் இது!

என்னிடம் எல்லாவற்றுக்கும் பக்கா ஆதாரமிருக்கிறது, சரியா? கலைஞர் கருணாநிதி அவர்கள் நினைத்தால் நடத்திக்காட்டாத விஷயம் ஒன்றுமே இல்லைதான் – பலஹீனத்துடன் இதை ஒப்புக்கொள்வதை விட்டால் எனக்கு வேறுவழியேயில்லை! :-(

சரி.  இந்த முடிவுக்கு நான் எப்படி வந்தேன் என நீங்கள் கேட்காவிட்டாலும் இதனை விளக்கத்தான் போகிறேன். கவலை வேண்டேல்!
Read the rest of this entry »

அல்லது, ம்ம்ம்…  இது மாணவ குண்டர் மன்றமா? மெகா ஸ்டூடென்ட்ஸ் கான்க்லேவ் (=Mega Students Conclave!) என்பதை,  ‘மாபெரும் மாணவர் மன்றம்’ என்று முழி பெயர்த்திருக்கிறார்களே, பாவிகள்! தமிழ்த் துரோகிகள்!! இவர்களுக்குக் கொலைமாமணி பட்டத்தை அளிக்கவாவது அடுத்த முதல்வராக முக இசுடாலிர், வர முடியுமா? :-(

Screenshot from 2015-09-12 20:18:50
Screenshot from 2015-09-12 22:21:31+போனஸ்: மாணவமணிகளுக்கு இசுடாலிரின் அறிவுரை!

…துப்புரவாக வேலைவெட்டியற்று காலட்சேபம் செய்துகொண்டிருந்தால், சில சமயம், நம் தமிழ் நாட்டின் செல்லங்களான ‘யூத்து’களுடன் ஜாலியாக அளவளாவிக்கொண்டு விலாநோகச் சிரிக்கலாம்!

Read the rest of this entry »

பகீர் செய்தி!

சென்னை, 23 ஜூலை, 2015:  முன்னதாக, தன்மானத் தலைவர் நிகரிலா திராவிடர் திலகம், இனமானச் செம்மல், கி. வீரமணி அவர்கள், சிங்கப்பூர் சென்றிருந்தபோது  சொகுசாக ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு தன்னுடைய செல்லமான கற்பனைக் கோவேறுகழுதை****யின்மீது ஆரோகணித்து ‘அமெரிக்க உளவியல் சங்கம்’ பற்றிய ஒரு ஆராய்ச்சிக் குறிப்பை அவரோகணித்தார்.

மேலும் ‘திராவிட உளறியல் சங்கம்’ எனும் தன் சொந்த சங்கத்தின் சங்கதிகளையும் கலந்து கமகமா என்று பரிமாறினார். அதாவது பரி நரியாகி, நரி சொறியாகி மாறி மாறி, படு அற்புதமாகக் காட்சிதந்து பரிமாறப்படும் திராவிளையாடல் புராணக்கதைதான் இது! Read the rest of this entry »

(அல்லது) ஏகபோக திராவிடக் காப்பிக்கடை நிறுவனரும், தழுவல் சக்ரவர்த்தியுமான மானமிகு யுவகிருஷ்ணனாரும், பிதுங்கிவழியும் பாற்சுரப்பிப் படங்களும்

…இவருக்கு வெட்கம் என்பது துளிக்கூட இல்லை. மானத்தையே விடுங்கள் – ஏனெனில், அவர் ஒரு திராவிடலை என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும்; கஜினியின் மொஹெம்மத் கொள்ளை அடித்தே காலத்தை ஓட்டியது போலத்தான், இவரும் வெட்டியொட்டியே ‘தொழிலை’ நடத்திக்கொண்டிருக்கிறார் என்பதும் தெரிகிறது;  இருந்தாலும், பெண்களை இவ்வளவு கீழ்த்தரமாக இழிவுபடுத்தி, ஒரு போகப் பொருளாக மட்டுமே ஆண்குறி வீங்க சிந்திப்பவர்(!) எனப் பிரத்தியட்சமாகத் தெரியவரும்போது – சீ, இந்த இளைஞனா திருந்தப் போகிறான் என்று தோன்றுகிறது.

Read the rest of this entry »

(அல்லது) நார்ஸிஸஸ்ஸை  நார் நாராகக் கிழித்து தினகரனில் தொங்கவிடுவது எப்படி?

இப்படித்தான்!

மதிமாறன் அவர்கள், தன்னுடைய மாளா உழைப்பால், சொந்த முயற்சியால் – ஒரிஜினல் அக்மார்க் வெறுப்பிய அபத்தக் களஞ்சியங்களைத் தொடர்ந்து மானாவாரியாக எழுதக் கூடியவர் என்றால், பராக்கிரமம் மிக்க மானமிகு யுவகிருஷ்ணா அவர்கள், அப்படியெல்லாம் மெனக்கிடாமல் – முழுமுதல் அபத்தங்களை இரக்கமேயில்லாமல் சுளுவாக அட்டைக் காப்பியடித்து மட்டுமே அபத்பாந்தவனாக தரிசனம் தந்து மினுக்கிக்கொண்டு அலைபவர்.

இருவருக்கும் விமோசனம் இல்லை, சரி. ஆனால், அவ்வப்போது நகைச்சுவைத் தேவைகளுக்காக இவர்களைப் படித்து, இவர்களின் எழுத்துச்சிந்தனைகளின் ஆழத்தையும் வீச்சத்தையும் கண்டு ஆச்சரியப்படும் எனக்கும் அதே அதோகதிதான், வேறென்ன சொல்ல! (என்னை யார் இந்த எழவுகளையெல்லாம் படிக்கச் சொல்கிறார்கள் என்பது நல்லொதொரு கேள்விதான். ஆனால், பத்ரிசேஷாத்ரியின் வலைத்தளம், அடியேன் உட்பட  கண்ட கழுதைகளின் காட்டுரைகளின் சுட்டிகளையும் ஆட்கொண்டு இருப்பதுதான் பிரச்சினையே! ஆ! இதிலும் ஆரிய – பார்ப்பன – வடவ – அமெரிக்க – இஸ்ரேலிய – ஹிந்துத்துவ – பன்னாட்டு நிறுவன – உலகமயமாக்கல் சதி இருக்கிறதோ?)

இதுதாண்டா அரைகுறை (=திராவிட) தமிழ் இளைஞம்! :-(

Read the rest of this entry »

நேற்றைய பதிவில் (பாவப்பட்ட தமிழகத்தின் அயோக்கிய திராவிடக் கொள்ளைக்காரர்கள் பற்றிய பழங்கதையாடல்களின் தேவை) கீழ்கண்டவாறு எழுதியிருந்தேன்.

/* ஒரு எடுத்துக்காட்டாக – நீதிபதி பால் கமிஷன் என்று ஒன்றிருந்ததா, அதன் குறிக்கோள் என்ன, கருணாநிதி அரசின்போது  அதன் ரிப்போர்ட் எப்படி மாயமாகக் ‘காணாமல்’ போனது என்பதெல்லாம் யாருக்குத் தெரியும்? */

இதில் கருணாநிதி என்பது எம்ஜிஆர் என இருந்திருக்கவேண்டும். என் தவறு. ஆச்சரியம் என்னவென்றால், ஒருவரும் இதுவரை இதைச் சுட்டிக் காட்டவில்லை!  ‘கருணாநிதி எதிர்ப்பென்றால், கண்ணை மூடிக்கொண்டு எந்த எழவை வேண்டுமானாலும் படிப்போம்!’ என்றிருப்பவர்கள் மட்டுமே ஒத்திசைவுக்கு வருகை தருகிறார்களா என்ன? ;-) ஆனால், அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நம் தலைவரின் நம்பகத் தன்மை என்பது அப்படிப்பட்ட பராக்கிரமம் வாய்ந்தது, வேறென்ன சொல்ல!

Read the rest of this entry »

கடந்த சில பதிவுகளில் அநியாயத்துக்குப் பாடுபடும்பொருட்கள் – திராவிடர்களின் அடிப்படைக் குணாம்சங்களான அகொதீகழக நினைவுகள்; வெளிவந்துள்ள சில அமெரிக்க தூதரகச் செய்திப் பரிமாற்றங்களின் வாசத்தால் கிண்டப்பட்டவை.  (திமுக = அகொதீக – நாம் உதிர்க்கப்போவது எதனை? 09/04/2011)
இம்மாதிரி விக்கிலீக்ஸ் சங்கதிகள் மீதான என்னுடைய வேலைவெட்டியற்ற *பதிவுகளுக்கு நான்கு விதம்விதமான எதிர்வினைகள் – பல, வேலைவெட்டியற்ற மின்னஞ்சல்களாகவும் ஒன்றிரண்டு பின்னூட்டங்களாகவும், ஒன்றேயொன்று தொலைபேசலாகவும் வந்திருக்கின்றன; அவற்றின் சாராம்சம்:

Read the rest of this entry »

இந்தக் கருத்துகள், மேதகு தயாநிதி மாறன் (= பிஏ-எகனாமிக்ஸ் படித்து, லயொலா கல்லூரிக்குப் பெருமை தேடித்தந்தவர் + முன்னாள் மத்திய அமைச்சர் + ‘சுடுவதை’ பொழுதுபோக்காகக் கொண்டவர்: ஆதாரம்: இந்திய அரசின் வலைத்தளம்; மேலதிகமாக – உழையோஉழை என திராவிடத்தனமாக உழைத்து வெளியிலே பகிரங்கமாகத் தெரிந்தே 2010லேயே ரூ 17,000 கோடி சொத்துகளுக்கு அதிபதியாக இருந்த கலாநிதி மாறனின் ச கோதரர். ஆதாரம்: கலாநிதி மாறனின் வலைத்தளம்; மேல்மேலதிகமாக – வருடம் சுமார் ரூ 60 கோடி சம்பளம் பெறும் காவேரி கலாநிதி மாறனின் மைத்துனர். ஆதாரம்: ப்லூம்பர்க் தளம்)  – ‘கருணாநிதிகளின் உள்வட்டத்திலிருந்து’ 2007 இறுதிவாக்கில் துரத்தப்பட்ட பின் அவரால் உதிர்க்கப் பட்டவை.

… ஆனால் பலவிதங்களிலும் கருணாநிதிகள் பழம்பெரும் திராவிடப் பாரம்பரிய வகைமுறைகளின்படி அமோகமாகக் ‘கவனித்துக்கொள்ளப் பட்டு’  பின்னர் மிகுந்த நெகிழ்வளிக்கும் வகையில்  ‘இதயம் இனிக்க, கண்கள் பனிக்க’  மேலதிகமாக ‘தேனை பிழிந்தெடுத்தபின், விடாமல் கூடவே புறங்கையையும் நக்க’ அவர்களுடன் கேடி சகோதரர்கள், ஏகோபித்து மீண்டும் ராசியானதற்கு முன்பாக – விரக்தியின் காரணமாக உண்மை விளம்பப் பட்டவை. Read the rest of this entry »

எனக்கு அமெரிக்காவில் வசிக்க ஒத்துவராது + பொதுவாக அமெரிக்க என்ஆர்ஐ ஜந்துக்கள் ஒத்துவரமாட்டார்கள்  (எனக்கு மகாமகோ துக்கம் கொடுக்கக்கூடிய வகையில் என் உறவினர்களில் பலர் இந்த ஜாதிதான்; கல்லூரியில் என் வகுப்பில் கூடப் படித்தவர்கள் அனைவரும் (மொத்தம் 17ல் 16 பேர்) இப்போது அமெரிக்கக் குடிமக்கள் – இது ஒருவிதத்தில் நிம்மதிதரும் விஷயம்தான்; ஆனாலும், அதிசயிக்கக்கூடிய வகையில் எனக்கு இன்னமும் பல அமெரிக்க என்ஆர்ஐ நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், என்ன செய்வது சொல்லுங்கள்? இவர்களுக்கும் மனப்பிறழ்வோ??) என்றாலும்…
Read the rest of this entry »

அய்யய்யோ! கொஞ்சம் பெரிய தலைப்பாகிவிட்டதே! (ஆனால், மன்னிக்கவேண்டாம்!)

கருணாநிதி: செம்மர கடத்தல் கேஸை, சிபிஐ-க்குக் கொடுத்தால்தான் உண்மை வெளிவரும்... ('த ஹிந்து' தினசரி, 18 ஜூன் 2016); இதன் தமிழ்ஹிந்து தினசரி வடிவம் இங்கே: செம்மரக் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க கருணாநிதி வலியுறுத்தல்

கருணாநிதி: செம்மர கடத்தல் கேஸை, சிபிஐ-க்குக் கொடுத்தால்தான் உண்மை வெளிவரும்… (‘த ஹிந்து’ தினசரி, 18 ஜூன் 2016); இதன் தமிழ்ஹிந்து தினசரி வடிவம் இங்கே: செம்மரக் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க கருணாநிதி வலியுறுத்தல்

… … ஆ! மேற்கண்ட ஹிண்டூ கிண்டிய செய்திகளைப் படித்துவிட்டு, ஒரு நிமிடம் இதைத்தான் – திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு ஊழலைப் பற்றித்தான் – சொல்லவருகிறார், திடீரென்று நிதானம் தவறி, நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார் என நினைத்து ஆனந்தத்தில் கூத்தாட ஆரம்பித்தேன்.

தம் கடந்தகால குற்றங்களுக்கெல்லாம் பரிகாரம் தேடிக்கொள்ள அந்திமகாலத்தில் முயல ஆரம்பித்துவிட்டார் என எண்ணி எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நெகிழ்வெழுத்துகளைப் படித்து நெகிழோநெகிழ் என என் லுங்கிகூட நெகிழ்ந்து போவதைப் போல உணர்ந்தேன்…

Read the rest of this entry »

என்னுடைய கேளிக்கைப் பொழுதுபோக்குகளில் ஒன்று –  என்னுடைய செல்ல சக-திராபை திராவிடர்கள் வீரத்துடன் சுழற்றும்   இனமான எழுச்சிப்போராளி அட்டைக்கத்திகளைப் பார்த்து இறும்பூதடைவது.

என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு ஆழமான அர்த்தத்தை உருவாக்குபவர்கள் இவர்கள்தாம். ;-)

Read the rest of this entry »

…ஆனால் பாவம், ஸ்டாலின் (மன்னிக்கவும், மரியாதை கொடுக்க மறந்துவிட்டேன். நான் குறிப்பிடுவது இசுடாலிர் அவர்களை!)  காத்துக்கொண்டிருக்கிறார் நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு… கூடிய விரைவில் தானே கட்சித் தலைவராகிவிடலாமென்று… :-)

ஆனால், குறைந்தபட்சம் இன்னமும் 8 வருடங்கள் போல இசுடாலிர் காத்திருக்கவேண்டும்தான். ஏனெனில், இன்றுதான் தெரிந்துகொண்டேன் – கருணாநிதி அவர்கள் 100 வருடம் வரை வாழ விரும்புகிறார் என்று. வாழ்க களவுடன்வளமுடன்…

Read the rest of this entry »

ஏனெனில் நானே ஒரு ‘விடுதலை’ வீரமணிதான்! :-)

எச்சரிக்கை: இது ஒரு 1500 வார்த்தை பதிவு. பொறுமையாகப் படிக்கவும். இல்லையேல் ஓடவும். ஒரு சுக்குப் பிரச்சினையுமில்லை. எப்படியும் அடுத்த இணைய பப்பரப்பா அலை வந்துகொண்டேதானே இருக்கும்? ஆகவே, கவலைவேண்டேல். இந்த அலைகளின்மீது தொடர்ந்து சவாரி செய்துகொண்டே இடைவிடாத சமூகவலைத்தள இறும்பூதடையலாம். சரியா? ;-)

சரி. செம்மரத் திருடர்கள், மன்னிக்கவும்  ‘செம்மரப் போராளி அகற்றாளர்கள்’ – அவர்கள் கூலித் தொழிலாளர்களேயானாலும், சுடப்பட்ட படங்கள் பரிதாபமாகக் காட்சியளித்தாலும் – அவர்கள் படுஉத்தமர்களோ அல்லது பால்மணம் மாறாத அப்பாவிகளோ அல்லர் – ஆகவே, அவர்கள் அநியாயமாகச் சுட்டுத் தள்ளப் பட்டுவிட்டனர் என நான் கருதவில்லை.  மாறாக, அவர்கள் பலபிறவிதங்களில் மகாமகோ கயவர்கள்தான் என்பதை, சில குறிப்புகளுடன் கோடிட்டுக் காட்டுவதுதான் என் நோக்கம்.(+மேலும் – அரசு பக்க உண்மைகளும், பிற பின்புலச் செய்திகளும் வெளிவரவேண்டும் – ஆனால் இவை இதுவரை (நான் அறிந்தவரையில்)  வெளிவரவில்லை என்ற காரணத்தாலும்)

Read the rest of this entry »