திராவிடனும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு
July 20, 2015
(அல்லது) ஏகபோக திராவிடக் காப்பிக்கடை நிறுவனரும், தழுவல் சக்ரவர்த்தியுமான மானமிகு யுவகிருஷ்ணனாரும், பிதுங்கிவழியும் பாற்சுரப்பிப் படங்களும்
…இவருக்கு வெட்கம் என்பது துளிக்கூட இல்லை. மானத்தையே விடுங்கள் – ஏனெனில், அவர் ஒரு திராவிடலை என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும்; கஜினியின் மொஹெம்மத் கொள்ளை அடித்தே காலத்தை ஓட்டியது போலத்தான், இவரும் வெட்டியொட்டியே ‘தொழிலை’ நடத்திக்கொண்டிருக்கிறார் என்பதும் தெரிகிறது; இருந்தாலும், பெண்களை இவ்வளவு கீழ்த்தரமாக இழிவுபடுத்தி, ஒரு போகப் பொருளாக மட்டுமே ஆண்குறி வீங்க சிந்திப்பவர்(!) எனப் பிரத்தியட்சமாகத் தெரியவரும்போது – சீ, இந்த இளைஞனா திருந்தப் போகிறான் என்று தோன்றுகிறது.
சரி. நிஜமாகவே இந்தமுறையுடன் இந்த மனிதரின் மனோவிகாரங்களைப் பற்றி (எழுத்துமூலமாகத் தெரிந்துகொண்டவை மட்டும்தான், மற்றபடி இந்த மனிதரைப் பற்றி வேறெந்த எழவையும் நான் அறியேன், நல்லவேளை!) எழுதுவதை விட்டுவிட்டேன். பாத்திரமறிந்துதான் பிச்சையிடவேண்டுமல்லவா? மேலும் என் மனோவிகாரங்களையும் அறிந்துகொள்ளவேண்டுமல்லவா??
-0-0-0-0-0-0-0-
ரேஷ்மா எனும் மலையாளப் போர்ன் பட நடிகையைப் பற்றி முக்கியமாக எல்லாருக்கும் தெரியவேண்டும் என்று ஆவலால், பரோபகாரச் சிந்தனையால் ஆட்கொள்லப்பட்டு, வக்கணையாக எழுதுகிறார். ஆக, இந்த நடிகை பற்றி எனக்கும் ஒரு அறிமுகத்தைக் கொடுத்ததற்கு நன்றி பல. பார்க்க: ரேஷ்மாவின் கதை
ஆக – தவறான முடிவுகளால், பரிசீலிக்கப்படாத வாழ்க்கையினால் எப்படி ஒரு மானுடன் சின்னாபின்னம் ஆகலாம் என ஒரு எடுத்துக்காட்டாக இந்தக் கட்டுரையை எழுதினார் என்று கூட ஒரு சப்பைக் கட்டைக் கட்டலாம்.
ஆனால் – இந்தக் கட்டுரையில் பிரதானமாக இருப்பது காமவுணர்ச்சியைத் தூண்டும் அந்தப் பாவப்பட்ட நடிகையின் படம் + வக்கிரம் + நக்கலான கருத்துகள்.
ஊக்க போனஸாக — ஷகிலா, ரேஷ்மா போன்ற பெண்களின்மீது எப்படிப் பட்ட வக்கிரமான பார்வை! தயங்காமல் சொல்வேன் – அவர்கள் உழைத்துச் சம்பாதித்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால் யுவகிருஷ்ணா போன்ற திராவிடலைகள்??
-0-0-0-0-0-0-
ரேஷ்மா படத்தை வெளியிட்டதே ஒரு அசிங்கம். ஆனால் அதற்குமேல் போய், அவருடைய வழக்கமான (அவரால் தொடர்ந்து வெறித்தனமாக வெறித்துப் பார்க்கப்படும்?) படம் வகையறா ஒன்றைப் போட்டிருக்கிறார் – அதாவது பிதுங்கும் பாற்சுரப்பியுடன்கூடிய படம். கேவலம். ரேஷ்மா அவர்களைப் பற்றிய வேறொரு படமும் இவருக்குக் கிடைக்கவேயில்லையா?
அதுவும் நேரில் போய், அத்தனை நிகழ்வுகளையும் பார்த்தது போல் விவரிப்பதற்கு அப்பாற்பட்டு, அவருடைய கட்டுரையைச் சிலபல இடங்களிலிருந்து (அவரது திராவிட வழக்கம்போல) கருணையேயில்லாமல் கமுக்கமாகச் சுட்டு – மேலதிகமாக, அவருடைய சொந்த தப்பும்தவறுமான தமிழ் நடையில், துள்ளிக்கொண்டே எழுதியிருக்கிறார். அவர் வாழ்க!
ஆக, கேடி சகோதரர்கள் ‘தினகரன் வசந்தம்’ என்ற பெயரில் ஒரு போர்னோக்ராஃபிக் பத்திரிகையையும் நடத்துகிறார்கள் என்பதை அறிந்து எனக்கு மகிழ்ச்சிதான்.
திமுக முன்னோடிக் குடும்பத்தின் தமிழ் நாட்டின் மீதான கரிசனம், என்னைத் திகைக்க வைக்கிறது. திராவிடம் வாழ்க!!
-0-0-0-0-0-
…இந்த யுவகிருஷ்ணா மனிதர், தன் குடும்பத்தைப் பற்றி ஒரு கட்டுரை (இது அவருக்குக் குடும்பம் என்று ஒன்றிருந்தால், அவர்கள் அனைவரும் எங்கோ சுற்றுலா சென்றது பற்றியது என, ஒரு எடுத்துக்காட்டுக்காக எடுத்துக்கொள்ளலாம்) எழுதுகிறார் என வைத்துக் கொள்ளலாம்.
அந்தச் சுற்றுலாக் கட்டுரையில் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் இம்மாதிரி படங்களை அவர் வெளியிடுவாரா? மாட்டார்தானே?? (ஆனால் செய்வாரோ? அவருக்குத்தான் பெண் என்றாலே ஒரு போகப்பொருள் என்ற நிலைப்பாடுதானே!)
ஆக – படைப்புகளைத் திருடிச் சாப்பிடும் தனக்கு ஒரு நீதி, உழைத்துச் சம்பாதித்த (அந்த உழைப்பை ஒழுக்கவியல் ரீதியாக இவர் மோசமாகக் கருதினாலும்) ஒரு பெண்ணுக்கு இன்னொரு நீதியா?
என்ன அற்பஜீவி, இந்த மனிதர்.
இம்மாதிரி இளைஞர்களுக்கு நாம் எம்மாதிரி கல்வியைப் புகட்டியிருக்கிறோம்?
இம்மனிதரை – ஒரு சராசரி தமிழக திராவிட இயக்க இளைஞர் எனக் கருதலாமா?
நான் ஒழுக்கம் கிழுக்கம் என்றெல்லாம் பேசவரவில்லை – ஆனால் எம்மாதிரி முன்மாதிரிகளை இவர்கள் போன்றவர்களுக்கு நாம் அளித்திருக்கிறோம்?
நான் ஒருகாலத்தில் (=’திசைகள்’) மிகவும் மதித்த மாலன் அவர்களிடம் இந்த மனிதர் பணி (‘புதிய தலைவலி’) புரிந்திருக்கிறார் – அப்போதும்கூட என்ன மசுத்தை கற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது இந்த மனிதரால்?
ஏன் – நம் இளைஞர்களின், அற்ப சராசரித்தனமும்கூட அதலபாதாளத்தில் இறங்கிக் கொண்டிருக்கிறது?
ஒரே அழுக்காக ஆகிவிட்டதுபோல் ஒரு உணர்ச்சி; மறுபடியும் நிர்மலமாகிவிடவேண்டும்.
இந்த யுவகிருஷ்ணக் கட்டுரை எழவைப் படித்ததனால் – நான் இந்தப் பீடை கழிய, தலைக்குக் குளிக்கப் போகிறேன்…
நம்பிக்கைகள், நம்பிக்கைகள்… :-(
- பாவப்பட்ட நார்ஸிஸஸ்ஸை, கதறக்கதற நாறடிக்கவைப்பது எப்படி 04/07/2015
- சிரியா? நல்லா சிரிய்யா! 05/09/2013
- படைப்புத்திருடல் செய்து இணையத்தில் படையல் வைப்பது எப்படி 08/08/2013
- பர்மா, பாலிங், வௌவால், இன்டெர்னெட் 04/08/2013
- சகட்டுமேனிக்கு, எதையும் ஒப்பேற்றுவது, அதாவது ‘தேத்துவது’ எப்படி – 17/03/2013
- போங்கடா நீங்களும் ஒங்க பொறநானூறும்… 15/03/2013
- “இன்டர்நெட்டுக்கு வயது முப்பது” – 22/01/2013
- யுவகிருஷ்ணா அவர்களும், பாவப்பட்ட வௌவால்களும் – 22/10/2012
- … இன்னாங்கடா டாய்… ^% $ # @ ! & – 06/10/2012
July 21, 2015 at 06:17
அய்யா,
ஜெயகாந்தன் அவர்கள் மறைவுக்கு பதிவு எழுதிய விதத்தை நீங்கள் சுட்டிக் காட்டிய பிறகு எஸ்ரா தன் இயல்பை மாற்றிக் கொண்டு திரு. MSV அவர்கள் மறைவுக்கு வெறும் அஞ்சலி யோடு நிறுத்திக் கொண்டதைப் பார்த்திருப் பீர்கள் என நினைக்கிறேன்.
ஆனால் இளங்கருப்பன் தனது பத்து நிமிட புகழ் போதையில் இருந்து மீண்டு வர நீங்கள் இன்னும் நிறைய எழுதத் தேவையிருக்கும்.
வசந்தம் இதழ் மட்டுமல்ல ராணி, தேவி போன்ற ” பத்திரிக்கை “களும் பாலியலை நம்பி தான் நடத்தப்படு கின்றன.
July 21, 2015 at 14:28
நீங்கள் சொல்வதுபோல் எஸ்ரா தன் இயல்பை மாற்றிக் கொண்டுவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அந்த இரங்கல் செய்தியை இப்படித்தான் ஆரம்பிக்கிறார்.
“இந்த உலகத்தில் எதையாவது மாற்றவேண்டும் என்றால் அது இசையால் மட்டுமே சாத்தியமாகும்.” – ஜிமி ஹென்ரிக்ஸ் ”
எனவே இதில் நம்ம ஆளுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை புரிந்து கொள்ளும்
ஜாக்கிரதை!
July 22, 2015 at 13:09
இளங்கருப்பனார் உதிர்த்த மற்றொரு முத்து…. [ அவர்து ஃபேஸ்புக் பதிவில் இருந்து ]
ராமராஜன்- ஷகிலா ஜோடியை வைத்து எங்க ஊர் பால்காரன் என்று படம் எடுக்கலாமா?
சாமா சாஸ்திரி – கும்பகோணம்
பேஷான ஐடியா – செமையா பால் கறக்கலாம் .
[ நன்றி வண்ணத்திரை – சரோஜா தேவி பதில்கள் ]
July 3, 2018 at 20:04
[…] திராவிடனும் பிழைக்கும் இந்தப் பிழைப…20/07/2015 […]