இசுடாலிர்: மாணவர்கள் ஊக்கு விக்கவேண்டும்!

October 18, 2015

கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார் பற்றி,  எட்டாம் வகுப்புவரையாவது படித்திருக்கக் கூடும் நீங்கள் – மனப்பாடப் பகுதிகளின் காரணமாக அறிந்துகொண்டிருக்கலாம்.

ஆனால் அவர் பழைய ஃபேஷன்!

புதிய ஃபேஷன் மாடல், நம் மகாமகோ ஊக்கு வாணிகர் தான்! அவர் மட்டுமே தான்!! இவரை விட மாணவர்கள் மேல் கரிசனம் உடைய, சமூகப் பொறுப்புணர்ச்சி உடைய, ஆகப்பெரிய தலைவர் இருக்கத்தான் கூடுமா?

கருத்துப் படம்: ஊக்கு (திராவிட மறவ இளைஞர்களுக்கு, புரிந்துகொள்ள வசதியாக இருக்கட்டுமே என்று கொடுக்கப்பட்டிருக்கிறது)

சரி. இசுடாலிர் அப்படிச் சொன்னாரா? அதுவும் படுபிஸியாகக் கிராமம் கிராமமாகப் போய், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி தயாளுமங்கை சமேத புத்ர நர்த்தனநாயக ஸ்டாலினேஸ்வரராகக் கனகம்பீர நாட்டியமாடிக்கொண்டிருக்கும் இக்காலங்களில்?

ஆம்! ஆம்!! ஆம்!!!

ஆதாரம்:

“இளம் பருவத்தில் உள்ள மாணவர்களை தமிழகத்தின் எதிர்கால நலன்கருதி அரசியலில் ஈடுபட ஊக்குவிப்பது அவசியமாகிறது.

அதாவது – ஊக்கு வாணிகர் இசுடாலிரார் சொல்லவருவது என்னவென்றால் – இளம் மாணவர்கள் அரசியலில் ஈடுபடவேண்டுமென்றால், ஊக்கு விற்க வேண்டும். (மன்னிப்பு உண்டா?)

டுமீல் இந்து தினசரிச் செய்தியில் முழுவிவரம் இருக்கிறது: அரசியலில் ஈடுபட மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்: ஸ்டாலின்

…அதாவது –  திமுகவுக்கு அடுத்த தேர்தலில் ஓட்டு போட்டு, திமுகவினர் தமிழகத்தை முழுமொட்டையடிக்க – நம் ஏமாந்த சோணகிரி மாணவர்கள் திமுகவினருக்கு ஓட்டுப் போடவேண்டும். நன்றி, இசுடாலிர் அவர்களே!

அதே சமயம், இசுடாலிர் அவர்கள் மாணவமணிகளுக்குக் கொடுத்த அறிவுரை மாமணிகளையும் ஒழுங்குமரியாதையுடன் நினைவுகூர்வது முக்கியம். ஆகவே: மகாமகோ குண்டோதிகுண்டு மாணவர் மன்றம்: சில குறிப்புகள்  16/09/2015

-0-0-0-0-0-0-

ஊக்கபோனஸ்:

…தமிழ்நாட்டு திமுக வரலாற்றிலேயே முதல்முறையாக, சகபயணிக்கு ‘செவுட்ல ஒரு செல்ல அறைகொடுக்காமலேயே பயணிக்கும் தலைவர் இசுடாலிர் அவர்களின் புன்சிரிப்பு பூக்கும் அரசுவண்டிப் பயண முகம்.
Screenshot from 2015-10-18 13:01:05

ஆம், இது ஆச்சரியங்களின் காலம்!

இவர் நம்முடைய சகதமிழர்களாகப் பிறந்த திராவிடப்பாபம் செய்த அனைத்துப் பகுதியினரையும் – சமூகத்தினரையும், கிராமம் கிராமாகச் சந்துபொந்துகளிலெல்லாம் புகுந்து புறப்பட்டுத் துரத்தித்துரத்தியே மானாவாரியாக  ஊக்கு வித்தே அடுத்த முதலையமைச்சராகிவிடுவார் போலிருக்கிறதே! இயற்கையே!! இதனைக் கேட்பாரில்லையா?

அண்ணா நாமம் வாழ்க என்பது புர்ச்சித்தலைவர் எம்ஜிஆர் ஸ்டைல், சரி, இதனை வாம போல போனால்போகிறது என்று விட்டுவிடலாம்!

ஆனால் – நமக்கு நாமம் என்பது கலக இளைஞ்ஜர் அணியின் தாத்தாத் தலைவர் இசுடாலிர் ஷ்டைல், மறந்துவிடாதீர்கல் வேட்பாலப் பெருமக்கலே! அவருடையது – உண்டியல் மீட்புப் பயணம்! எவ்வளவு நாள்தான் அவருடைய கட்சி வொடன்பெறப்புகல் பசியாறாமல் இருப்பது, சொல்லுங்கள்?

…வரவிறுக்கும் அடுத்த சட்டமண்ரத் தேர்தளில், வுதயசூரியன் சின்னத்த பாத்து, போடுங்கம்மா வோட்டு!

ணண்ரி, வனக்கம்.

அதி ஊக்கபோனஸ்:

இசுடாலிரின் அலுங்காத நலுங்காத, சட்டத்தைப் பற்றிக் கவலையேபடாத மணற்கொள்ளை!

Screenshot from 2015-10-18 16:39:43

…​உடலுழைப்பு என்றால் என்ன என்பதைக் கொஞ்சமாவது அறிந்த​, மண்வெட்டி உபயோகிக்கத் தெரிந்த உடன்பிறப்பு யாராவது, இசுடாலிருக்கு மண்வெட்டுவதைப் பற்றிய ஒரு பாலபாடம் எடுத்தால் தேவலை. பாவம், இடுப்பு சுளுக்கிக்கொண்டு விடப்போகிறது அவருக்கு.

பிறகு நமக்குநாமே அயொடெக்ஸ் தடவிக்கொண்டு அய்யொஅம்மா என்று அலறிக்கொண்டிருக்கவேண்டும்… நாதியற்ற மூதியான தமிழனை, பின் யாரால் தான் ஊக்கு விக்க முடியும், சொல்லுங்கள்? :-(

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s