Silappadikaram
Just reread (not really) Silappadikaram and honestly it is still a very modern netflixy sob-story, with its own sob-titles/cantos or kāthais.
Rich, spoilt way’lay’ing d00d blows up his marriage for a lay-dancer, discovers financial planning only after chapter 11 bankruptcy (unlike DMK Karunanidhi1, who did all the debauchery and totally laughed all the way to his dirty hoard for next 1000+ generations), goes to Madurai w/ his wife’s anklet like it is a start-up pivot.
The state executes him w/o basic due diligence; enraged heroine wifey walks in with receipts, proves the justice system failed, & literally bloody burns down the whole fucking city. Oh man.
~900s CE scribed Tamil true-fiction/classic says: marry well, know the lay-of-the-land, philander safely especially when the rubber hits the hittable, audit jewellery properly & never underestimate an angry woman with documentation.
Oneliner synopsis: One may be a total social retard and thrive, but without a suitable fire-retardant, he is toast.
Manimekalai
Just reread (um, not really) Manimekalai and it is basically the ancient (supposedly) Tamil version of someone inheriting everyone else’s drama and – sadly choosing instead – psycho-therapy, ethics, and of all things, Buddhism. Woe man.
A dancer’s daughter is expected to continue the dravidian family brand, a prince becomes dangerously obsessed with her, and the whole city behaves like ‘romantic pursuit’ is a valid governance model – reminds one of MK Stalin in his lay-days2, doesn’t it? So much for the ‘lay’ered narrative.
Anyway. Manimekalai says absolutely not to that period MK Stalin, gets divine relocation services, receives a magical begging bowl with unlimited food distribution capacity (of course, the substance of the wet-dreams of all shades of shady Dravidian politicos), and turns her life into a social welfare programme with metaphysics attached.
Meanwhile, the plot keeps thickening & pausing for debates on karma, rebirth, hunger, desire, compassion, and why everyone should bloody well stop making their personal cravings, society’s problem. It starts like a sequel to Silappadikaram, then becomes part courtroom, part philosophy seminar, part anti-horny public service announcement. What the fuck.
‘Ancient’ Tamil literature really said: your parents’ scandal is not your destiny, male attention is not a career path, and the best revenge is feeding the poor while achieving detachment. Whatever.
Oneliner synopsis: A superbowl can also be a supper bowl, as long as it isn’t lost supper – so supperess your desires, you retards!
Full disclosure:
The ‘inspiration’ for the above uncalled-for quickies came from:
Warning: Depending on how my fellow 7½s receive & react to this kind of irreverently respectful commentary (or nonsense, if you will) on the holy-cows of Tamil pride – this scholarly effort of synopsizing and adapting things for this crazed GenZ fellows, may or may not continue…
-0-0-0-0-
- “Karunanidhi has long dominated Tamil Nadu’s politics. He is the unquestioned leader of the DMK, a regional Tamil party with no obvious ideology other than support for Karunanidhi and a desire to remain in power.” ↩︎
- “Stalin had something of a thuggish reputation in the 1970s, including alleged involvement in multiple sex scandals. (Many in Chennai still tell stories, perhaps apocryphal, of pretty girls being plucked off the streets and handed over to Stalin for his amusement.) He matured and shed this image in the late 1980s…” THE SONS ALSO RISE: KARUNANIDHI KEEPS POWER IN THE FAMILY ↩︎
“…புட்டுப் புட்டு வைத்து வறுத்தெடுத்துப் புரட்டிப்போட்டு, அடித்து ஆடி, பட்டயக் கிளப்பி, மிரட்டி மிரளவைத்து மரண அட்டாக் செய்து வெளுத்து வாங்கிப் பொளந்துகட்டி உடைத்துப் பேசி தட்டித் தூக்கி முதுகில் குத்தி நெருப்போடு விளையாடி, பக்கா ஸ்கெட்ச் போட்டு ரகசியத்தைப் போட்டு உடைத்து சோலி முடிஞ் உற்சாகத்துடன்…
… ஆத்திரமாகக் குழப்பிக் கடுங்கோபக் காட்டம் காட்டிப் பொளேறென்று ஆவேசமாக நெத்தியடித்துத் தாவிச் சுளுக்கெடுத்துக் கதிகலங்கிச் சவால் விட்டுக் களமிறங்கி வெளுத்தெடுத்து எச்சரிக்கை ஷாக் கொடுத்து, ரியாக்சன் மர்மங்களைச் சிடுக்கவிழ்த்து துவைத்து எடுத்து விளாசி அசத்தி, சதித்திட்டங்களை ஒழிக்கும் சிக்கல் தடாலடி பேக்ரௌண்ட்களை அலசி எகிறி அடித்து நுட்பமாக சலசலப்புடன் அடங்க மறுத்து பரபரத்து வெளிவராத சேட்டை செய்து திட்டித் தீர்த்துப் பந்தாடி உருக்கத்துடன் வம்பிழுத்து, பின்னடைவில்லாத ஜென்ஸீக்களைப் புதிய திருப்ப முட்டுக்கட்டைகளாகக் கணித்து, அம்பலப் படுத்திப் பொரிந்து தள்ளி…
…தெறிக்கவிட்டுக் கொதித்து எகிறிப் பொட்டில் அடித்து, உள்ளடிப் பின்னணி வியூக சரமாரி வலுத்து மரணகலாய் சர்ச்சை வரலாறை உலுக்கிப் பிழிந்து பழிதீர்த்துப் படைத்து அக்குவேறு ஆணிவேறாகச் சரவெடியுடன் வலை விரித்துப் பதறிக் கொந்தளித்து, அவசரமாக மோதி, மெகா மாற்றங்களை வெடித்து இறக்கி, ரத்தத்தை உறைய வைக்கும் இரும்புகரத்தைத் தூள்தூளாக்கிப் புயலெழுப்பி சைக்கோவாகி உச்சகட்ட ஆக் ஷனில் இறங்கி ஸீக்ரெட் ஆப்பரேஷன்களின் செய்திகளை முன்கூட்டியே ஸோர்ஸ்களைப் பயன்படுத்தி நிலைகுலைந்து திக்குமுக்காடி ரூட் போட்டு வெளியான உண்மைப் போர்த்தந்திர ஆயுத பி டீம் மூலம் கசிந்த அடுத்த ப்ளானுக்கான மூவைச் சற்று முன்னே அறிந்த… …
…
…
… களைகட்டிச் சூடாகி மிரளவைக்கும் அறிவுஜீவி விமர்சகரும் மிக மூத்த ப்ரிமியம் பத்திரிகையாளருமான, முத்திரை பதித்த ஒத்திசைவார் திரு ராமசாமியார் – சொல்லப் படாத புதைந்த நுண்ணறிவு உண்மைகளை, அறியாத நுணுக்கமான தகவல்களை டீகோட் சல்லடை அசத்தல் செய்து சுடச்சுட வாயடைக்க வைக்கும் ஆதாரங்களுடன் மாஸ்டர் ப்ளான் அதிர்ச்சி ஒரு நொடி குதிரைபேரக் கவிழ்ப்பு ரிப்போர்ட் கொடுத்து…
… சாட்டையைச் சொடுக்கிச் சவுக்கைச் சுழற்றி நைசாகப் பயங்கரமாகச் சீறி, பூகம்பமாக வெடித்து அலர்ட் செஞ்சு உஷ்ணத்துடன் சூடாகி, கோதாவில் இறங்கிப் போட்டுத் தாக்கித் தாளித்துப் பளிச்சென்று சிக்னல் கொடுத்து அரங்கத்தை அதிரவைத்துக் குமுறிப் பந்தாடி லெஃப்ட்ல ஹேண்டில் டீல் பண்ணி செக் வைத்து வரிவரி திடுக் டெவலப்மெண்டாகச் சிக்கப்போகும் குவிந்த விறுவிறு வேதனையுடன் எக்ஸ்க்ளூஸிவ்வாக சர்ச்சைக்குள்ளாகும் வார்த்தை விட்டு விளக்குகிறார்… “
ஸ்ஸ்ஸ்… அப்பாடா!
(மன்னிக்கவும், அப்படியெல்லாம் இல்லை, இதுவும் +1 சாதா பதிவுதான். மேலும், எனக்கு நானே நைந்த டைட்டில்கார்ட் டீஸர்வகையறா உணர்ச்சிகரமைதுன எழவெடுக்காமல், வேறு எந்த வேலைவெட்டியற்ற சகஏழரைதான் இந்தக் தண்டக் கருமாந்திரக் காரியத்தைச் செய்வார், சொல்லுங்கள்?)
(உள்ளபடியே வருத்தமாக இருக்கிறது)
-0-0-0-0-
ஆனால் இதை எழுதி முடிப்பதற்குள்ளேயே மிகவும் தளர்ந்து விட்டது.
ஆக. அவ்ளோதான் பதிவு.
…போங்கடா, பப்பரப்பானுங்க்ளா… பெர்ஸா பட்க்க வந்த்டானுவ… ப்ளட்டி ஹெல். போய் உர்ப்படியா ஏதாச்சும் செய்ங்கடா…
நீங்க படிக்கற பதிவு கேக்கற பாட்கேஸ்ட், யூடூப் விடியோ… எல்லாம் இதே கதைதாண்டா… வேலவெட்டியத்த தண்டகருமாந்திரங்கள, மானாவாரியாக அட்ச்சிவுவுட்றத திர்ப்பிதிர்ப்பி கேட்டு-பாத்து சீரழியாதீங்கடா… ஆனா, அதே சமயத்துல இந்த வாயோயாத தொழில்முறைப் பேச்சாளர்களயும் அவ்வப்போது கேளுங்கடா… வாய்விட்டுச் சிரிங்கடா.
மாறாக இதே சமூக வலைத்தளங்கள்ளியும் பிரமாதமான பொக்கிஷங்க அபரிமிதமா குமிஞ்சி கெடக்குதடா… அதெல்லாம் பாத்து-கேட்டு, பயிற்சி செஞ்சி, முட்டிமோதி நடைமுறைல செய்துகாட்டி ஜமாயுங்கடா… சலிப்புக்கோ போரடிப்பதற்கோ கொஞ்சம் கூட வாய்ப்பே இல்லடா! அனுதினமும் புதுசு புதுசா ஏதாவது கத்துக்க முடியுதுடா. உலகம் விரியுதுடா! புல்லரிக்குதடா…
(சரி, இந்த எழவை ஏன் எழுதினேன்? இது தேவையா??
பிரச்சினை என்னவென்றால் – அண்மையில் நடந்துமுடிந்த ‘தமிழகத் தேர்தல் களேபரங்கள்’ பின்புலத்தில், கடந்த 2-3 மாதங்களில் ‘நண்பர்’களிடமிருந்து பலப்பல நல்லெண்ண யூடூப் பரிந்துரைகள் வந்தன. இவற்றில் சுமார் 15-20 மணி நேரங்களை 2X வேகத்தில் செலவழித்திருப்பேன் என அனுமானிக்கிறேன். அனுப்பப் பட்டவைகள் அனைத்தையும் பார்த்திருந்தால் சுமார் 200-300 மணி நேரங்களாவது செலவழிந்திருக்கும். ஆனால் நல்லவேளை, என் போதும் காலம், தப்பித்துவிட்டேன்.
இவற்றில் சில சுவையாக, குறிப்பிடத்தக்க கருத்துச்செறிவுடன் இருந்தன – பல, வெறும் பப்பரப்பாக்கள், அரைத்த மாவை அரைத்தவை – ஒன்றிரண்டு முறை இவற்றைக் கேலி செய்திருக்கிறேன்கூட – ஒரு புதிர்க் கேள்வி, சிலபல பகீர் பதில்கள்: ‘துரந்தர்’ என்றால் என்ன? April 6, 2026
ஆனாலும் இவைகளுக்காக இந்த ஆசாமிகள்/சேன்னல்கள் போடும் டீஸர் /டைட்டில்கார்ட் வகையறா விளம்பரங்கள் இருக்கின்றனவே – இவை படு அலாதியாக இருந்தன, இருக்கின்றன – இவைதான் இப்பதிவுக்கும, ஆகவே அதன் மீதான உங்கள் வெறுப்புச் சலிப்புக்கும் முகாந்திரக் காரணங்கள்)
-0-0-0-0-
…சரி, தப்பித் தவறி ஒன்றிரண்டு தமிழ்வழி யூடூப் பொழிப்புரைப் பேச்சாளர்களும், ஹோம்வர்க் செய்பவர்களாக, ஜோடனை செய்யாதவர்களாக நன்றாகவே இருக்கிறார்கள் – அதில் ஒருவர் பத்ரி சேஷாத்ரி – இவரை நான் சமயம் வாய்க்கும்போதெல்லாம் தொடர்ந்து பார்க்கிறேன், இவரை நான் தனிப்பட்ட முறையிலும் அறிவேன்; இன்னொருவர், எனக்கு அண்மையில் கொஞ்சமாவது பார்க்க வாய்ப்பு கிடைத்த கெவின் பால் என்பவர். (இவருடன் எனக்கு முன்னறிமுகம் இல்லை)
இன்னமும் சிலபலர் (பேசுதமிழாபேசு ராஜவேல் நாகராஜன்?) இப்படி இருக்கிறார்கள் எனத்தான் நினைக்கிறேன். அப்படி இருக்க வேண்டும் என விழைகிறேன். குறைந்த பட்சம் இவர்கள் இருவராவது தொடர்ந்து பொலியவேண்டும் என வாழ்த்துகிறேன்.
சாருநிபேதிதா: தமிழகச் சட்டசபைத் தேர்தல் 2026 – எக்ஸிஸ்டென்ஷியல் ‘எக்ஸிட் போல்’ கணிப்புகள்
May 3, 2026
என் ஆருயிர் ஆசானும், ஸல்ஸா தென்னமெரிக்க ஃப்லமென்கொ கும்மாள குத்தாட்ட லத்தீனமெரிக்க உற்சாக டான்ஸ் வாத்யாருமான சாரு நிபேதிதாவுக்கு என் ஆத்மார்த்தமான நன்றி – அதாவது இந்த விருந்தினர் பதிவை, அதுவும் அட்டகாசமான கணிப்புகளுடன் கொடுத்தமைக்கு.
(முன்னர், இதே தேர்தல் தொடர்பாகத் தத்தம் கருத்துக் காட்டுரைகளை அளித்திருப்பவர்கள் எழுத்தாள அறிவுஜீவிகள் ஜெயமோகனும், எஸ்ராமகிருஷ்ணனும் – தெம்பு இருந்தால் படிக்கவும், நன்றி!)
தேர்தல் ஸல்ஸா – அவநம்பிக்கையில் நம்பிக்கை
தேர்தல் முடிந்த 23 ஏப்ரல் இரவு நான் தூங்கவில்லை. டிவி ரிமோட்டை கையில் பிடித்தபடி சேனல்கள் மாற்றிக்கொண்டு மாறியவண்ணம் இருந்தேன். ஒவ்வொரு சேனலும் ஒரு சின்ன போர் களம். அங்கே எண்ணிக்கைகள் ஓடின — 123, 98, 45 — ஆனால் அவை எண்கள் அல்ல; அவை மனிதர்களின் நரம்புத் துடிப்புகள்.
ஒரு தேநீர் குடித்தேன். அது கசப்பாக இருந்தது. அந்தக் கசப்பு, இந்தத் தேர்தலின் உண்மையான சுவை என்று தோன்றியது.
நாம் அரசியலை இன்னும் ஒரு சீரியஸான விஷயமாக எடுத்துக் கொள்கிறோம். அது ஒரு தவறு. அரசியல் என்பது ஒரு பர்ஃபார்மன்ஸ். ஒரு பெரிய, கொஞ்சம் மோசமான, கொஞ்சம் காமெடியான பர்ஃபார்மன்ஸ். எல்லாரும் அதில் நடிகர்கள். சிலர் ஹீரோ. சிலர் வில்லன். சிலர் எக்ஸ்ட்ரா. சிலர் பெண்கள். மற்றும் பலர். ஆனால் இறுதியில், எல்லாரும் ஒரு மாதிரி வியர்க்கிறார்கள். வியர்க்கவைக்கிறார்கள்.
இந்தத் தேர்தல் ஒரு எக்ஸிஸ்டென்ஷியல் ஜோக். நீ வாக்களிக்கிறாய். நீ நம்புகிறாய். பிறகு முடிவுகள் வருகிறது. நீ சிரிக்கிறாய். அல்லது கோபப்படுகிறாய். ஆனால் அடுத்த நாள் காலை, நீ வேலைக்கு போகவேண்டும். அந்த இடத்தில் தான் இந்த அவல ஜோக் மிகப் பெரியதாகிறது.
ஒரு நண்பன் என்னிடம் கேட்டான்: “மச்சி, யாரு ஜெயிச்சாங்க?” நான் அவனை பார்த்தேன். சிரித்தேன். “யாரும் இல்லடா. எல்லாரும் ஜெயிச்சாங்க. அதனால தான் நாம தான் தோற்றோம் போல இருக்கு.”
அவன் சிரிக்கவில்லை.
இந்த நாட்டில், நம்முடைய பிரச்சினை அரசியல்வாதிகள் இல்லை. நம்முடைய பிரச்சினை நம்முடைய கற்பனை. நாம் இன்னும் ஒரு ‘ரட்சகர்’ வருவார் எனக் காத்திருக்கிறோம். ஒரு ஹீரோ வந்து எல்லாத்தையும் சரி பண்ணுவான் என்று நம்புகிறோம். அது சினிமா. இது வாழ்க்கை. வாழ்க்கையில் ஹீரோ வரமாட்டான். அதிகபட்சம், ஒரு காமெடி கேரக்டர் தான் வரும்.
சோஷியல் மீடியா இந்த முறை ஒரு சைக்கடெலிக் அனுபவம். எல்லாரும் ஒரே நேரத்தில் கத்தினார்கள். ஒரே நேரத்தில் அழுதார்கள். ஒரே நேரத்தில் மீம்ஸ் போட்டார்கள். ஒரே நேரத்தில் டென்ஷன் ஆனார்கள். அது ஒரு டிஜிட்டல் திருவிழா. ஆனால் அந்த திருவிழாவில் யாரும் உண்மையில் இருக்கவில்லை. எல்லாரும் அவதார்களாக இருந்தார்கள்.
நான் ஒரு பழைய தெருவில் நடந்தேன். அங்கே ஒரு சுவரில் இன்னும் ஒரு போஸ்டர் ஒட்டியிருந்தது. பாதி கிழிந்தது. அதில் ஒரு முகம். அந்த முகம் இப்போது முக்கியமில்லை. அந்தக் கிழிந்த காகிதம் தான் முக்கியம். கட்டுடைத்தால் அது நமக்கு ஒரு ரியாலிட்டி செக்.
இந்தத் தேர்தல் நமக்கு என்ன கற்றுக்கொடுத்தது? ஒன்றும் இல்லை. அதுதான் அதன் அழகு. நாம் மீண்டும் அதே தவறுகளை செய்வோம். மீண்டும் அதே நம்பிக்கைகளை வைத்துக் கொள்வோம். மீண்டும் அதே முறையில் ஏமாறுவோம். அது ஒரு சைக்கிள். ஒரு மிகவும் கவர்ச்சியான, மிகவும் சலிப்பான சைக்கிள். மித் ஆஃப் ஸிஸிபஸ்.
ஆனால், இதை எல்லாம் சொல்லிக்கொண்டே நான் இன்னொரு தேநீர் ஆர்டர் பண்ணுகிறேன். ஏன் தெரியுமா? இந்த கசப்பு எனக்கு பிடித்து விட்டது.
இறுதியில், ஜனநாயகம் என்பது ஒரு மாசோகிஸ்டிக் பிளஷர். அது நம்மை காயப்படுத்தும். ஆனால் நாம் அதை விட்டுவிடமாட்டோம். ஏனெனில் அந்த வலியில் ஒரு சின்ன சுகம் இருக்கிறது.
அதனால், அடுத்த தேர்தல் வரைக்கும், இந்த நகைச்சுவையை ரசிப்போம். சிரிப்போம். சண்டையிடுவோம். மீண்டும் வாக்களிப்போம்.
ஏனெனில், நம்மிடம் வேறு எந்த நல்ல கதையும் இல்லை.
என்னைப் போன்ற நல்ல கதைகளை எழுதுபவனுக்கும் கலைமாமணி விருதோ, ஸாஹித்ய அகடெமி விருதோ – அவற்றையே விடுங்கள், ஒரு நோபல் புக்கர் பரிசுகூட கொடுக்கமாட்டார்கள். அழகுணர்ச்சி அற்ற ஃபிலிஸ்டைன்ஸ். என்ன செய்வது.
நடிகர் விஜய் கட்சியின் மேல்தான் என்னுடைய தற்போதைய முழு நம்பிக்கை. ஆகவே விஜய் ரசிகர்கள் அனைவரும் , கீழ்கண்ட என் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பவும். அதை வைத்துத்தான், என் நெடுநாள் கனவான தைவான் போய் தையா தக்கா எனக் குதித்தாட வேண்டும்.
(விருந்தினர் பதிவு) தமிழகத் தேர்தல் ரணகளம் – கௌரவர் X கௌரவர் யுத்தம்: ஜெயமோகன் ஞானமரபுப் பார்வை
April 26, 2026
(நன்றி, ஜெமோ. முந்தைய பதிவு பேரண்டப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர் எஸ்ராமகிருஷ்ணன் அருளிச் செய்தது: தேர்தல் களங்கள் ஓய்ந்தாலும், தேர்தல் கெளங்கள் ஓய்வதேயில்லை: எஸ் ராமகிருஷ்ணன் எனும் மகாமகோ தமிழ் அழுத்தாளரின் விருந்தினர் பதிவு April 25, 2026. அடுத்து, எனது இன்னொரு பேராசானான சாருநிவேதிதாவின் காட்டுரை வெளிவர இருக்கிறது. நண்பர் பத்ரி சேஷாத்ரியையும் ஒரு கட்டுரை கேட்டிருக்கிறேன். ஆனால் அவர், தன் கிழக்குந்யூஸ் வழி விதண்டாவாத விடியோ சர்ச்சைப்பதிவுகளில் படுபிஸியாக இருப்பதாகச் சொல்கிறார் – பாகிஸ்தானும் இரானும் எக்கேடு கெட்டால் நமக்கென்ன – இதில் செலவழிக்கும் நேரத்தில் அவர் ஒரு சிறு பகுதியை ஆக்கபூர்வமான நல்வழிகளில் செலவழித்தால் என்ன குறைந்து விடுவார்? ப்ளடி, நம் தமிழ் அறிவுஜீவிகளில் பலருடைய பிரச்சினை இதுதான் – அவர்கள் கருத்துகளை பெரிய அளவில் தமிழ் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கத் தோதான பரப்புரைத் தளம் அமைத்துக் கொடுத்தாலும், கொள்வாரில்லை. என்ன செய்ய. :-( )
தமிழகத் தேர்தல் ரணகளம் – கௌரவர் X கௌரவர் யுத்தம்
(ஜெயமோகன்)
இவ்வாழி சூழ் உலகமே குருக்ஷேத்திரம்தானென்றும் நடப்புகளனைத்தும் கௌரவ-பாண்டவ யுத்தங்களெனவும் நான் பத்து வருடங்களுக்கும் முன்பே பத்தாயிரம்கோடி வார்த்தைகளில் வெண்முரசாகக் கொட்டியது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால் அண்மையில் நடந்து முடிந்த தமிழகத் தேர்தல் களம், கௌரவ-கௌரவ சொத்துப் போர் மட்டுமே என்பதுதான் நிகழ்வரலாற்று நிதர்சன உண்மை.
கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தர்கள் உலாவிய தமிழக அறவெளியில், என் வாசக மானுடத் திரள்கள், கூடுகை விட்டுக் கூடுகைக்குப் பெருமூச்சு ஆர்பரிப்புடன் பாய்ந்துபாய்ந்து ஆர்வலப் பெருந்தாவல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் – தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கப் போகும் இந்தத் தருணத்தில், ஒரு விசித்திரமான உரத்த மயான அமைதி நிலவுகிறது. அது வெறும் அரசியல் அமைதி அல்ல; அது ஒரு கதை முடிந்த பின் எழும் கேவல் நிரம்பிய உள்ளொளித் தேடல் பேரலை, நம் மனமூடே எழும்பும் காற்றிலே இயைந்த இடைவெளிப் பேரோசை.
அந்த இடைவெளியில் நாம் எதையோ கேட்கிறோம் – ஆனால் அது வெற்றி முழக்கமோ தோல்விப் புலம்பலோ அல்ல. மாறாக அது, மனிதர்களின் உள்ளார்ந்த அசைவின் அசைபோடல் ஒலி. அப்படித்தான் தேர்தல் புள்ளிவிவரங்களால் மிகவும் குழம்பியிருந்த, நாராயணகுரு அவர்களிடம் நடராஜகுரு அவர்களை விட்டுச் சொல்லச் சொல்லி, என் பூர்வாசிரமச் சீடன் நித்யசைதன்ய யதியின் பொறுப்புள்ள பேராசானாக, அவருக்கு ஒரு அவசர ஆணை பிறப்பித்தேன்.
ஏனெனில், இந்த முறைக்கான தமிழகச் சட்டசபை தேர்தல் என்பது வெறும் அதிகார மாற்றம் அல்ல என்பது ஆன்மிகமாக அதனை அணுகும்போது தெளிகிறது. ஆகவே அது ஒரு அகவொளிசார் மெய்ஞான காவிய நாவலின் (என்னுடையது தான்), ஒரு நவீன செவ்வியல் க்ளாஸ்ஸிக் என்று உலகெங்கும் போற்றக்கூடிய மிகநீண்ட ஒன்றின், ஆனால் அதைவிடவும் மிகமிகமிக நீண்ட அதன் பேரத்தியாயம் போல இருந்தது. அந்த தத்துவார்த்த மரபு நாவலில், நாயகர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் கதையின் எளிய மைய நீரோட்டமானது என் ஆரம்பமும்முடிவுமிலா வெண்முரசு போன்றே மாறாது – மாறாக தேர்ச்சிபெற்ற மானுடன் தனது வாழ்க்கையை எவ்வாறு சோர்வில்லாமல் ஊர்ந்துகொண்டே தேர்ந்து வடிவமைக்கிறான் என்ற கேள்வியே தனக்குத்தானே பதில்களாக விரிந்து விகசிக்கும்.
நான் தர்மபுரி வட்டாரப் பாலக்கோடில் பிஎஸ்என்எல் தொலைபேசி ஊழியனாக, முழு நேரத் தமிழ்இலக்கியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது – அங்கிருந்த ஒரு கிராமத்தில் ஒரு முதியவர் (சொல்லப்போனால் இவர் கடலூர் சீனு! இவர் எப்படி பாலக்கோட்டிற்கு வந்தார்?) வாக்களிக்கச் சென்றார். அவர் தனது விரலில் மை அடித்துக் கொண்டபோது, ‘இனிய ஜெயம்’ என்று முணுமுணுத்தது ஒரு அரசியல் செயல் மட்டுமல்ல – அது அவரது வாழ்நாளின் அனுபவங்களின் சுருக்கம், அவருடைய வாழ்க்கையின் அடிப்படைக் குறிக்கோள் என்பதை நான் அவருக்கு விளக்கி எடுத்துச் சொன்னேன். அவர் பார்த்த அரசுகள், அவர் அனுபவித்த மாற்றங்கள், அவர் இழந்த நம்பிக்கைகள், எழுதிய குப்பைகள் – இவை அனைத்தும் அந்த ஒரு மென்மையான மையடிப்பு அழுத்தத்தில் இருந்தன என்பதைத்தான் அந்த இனியஜெயம் உணர்த்தியது. இதை நாம் குறிக்கோள் போலக் கணக்கிட முடியாது. ஆனால் இதுவே ஜனநாயகத்தின் உண்மையான படிமமான அளவுகோலின் நெம்புகோல். இது, செங்கோலைப் போல, நம் வரலாற்றுப் படிப்பினை.
பொதுவாகவே நாம், அரசியலை ஒரு தந்திர விளையாட்டாகப் பார்க்கிறோம். யார் யாருடன் கூட்டணி, யாருக்கு எவ்வளவு வாக்கு சதவீதம், யார்யார் எந்த அ-உடைய ஆ-குழு, குழுக்களின் குழூஉக்குறிகள் யாவை – இவை எல்லாம் மேற்பரப்பின் மேலோட்ட அலைகள். அதன் கீழ் ஒரு ஆழமான தெளிந்த நீரோட்டம் இருக்கிறது. அந்த நீரோட்டம் தான் சமூகத்தின், படுமோசமாகக் கலங்கிய மனநிலை. இந்தக் கலங்கரைவிளக்கத் தேர்தலில் அந்தச் சேற்று நீரோட்டம் சற்று மாறியுள்ளது. அதை நிர்மலமாக உணர்வதே முக்கியம். (ஆனால், சீதாரமனைப் பொருட்படுத்தவேண்டிய அவசியமில்லை)
…பிறிதோர் வகையில், அதனை உணராமல் இருப்பதும் பாக்கியமே. நீரோட்டம் உலராமல் இருப்பது அவசியமும்கூட. இல்லையேல் காயடிக்கப் படுவோம். ‘காயமே, இது பொய்யடா, பெருங்காயத்தை ரசத்தில் போடடா’ என்பது ஆழ்ந்த துரிய அனுபூதி நிலை; நிகழ்ந்துகொண்டிருக்கும் பக்திரசப் பேரதிசயம், நம் முகத்தில் அறையும் உண்மை.
ஒரு காலத்தில், அரசியல் தலைவர்கள் ஒரு கதை சொன்னார்கள். மக்கள் அதை கேட்டார்கள். இன்று மக்கள் தங்களுடைய கதைகளை உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சமூக ஊடகங்கள், சிறிய விவாதங்கள், குடும்ப உரையாடல்கள் – இவை அனைத்தும் சேர்ந்து ஒரு புதிய பெருத்த குரலை மௌனமாக உருவாக்குகின்றன. அந்தக் குரல் இன்னும் முழுமையாக வடிவம் பெறவில்லை. ஆனால் அது வளர்ந்து கொண்டிருக்கிறது. பெருங்கதையான வெண்முரசு தொகுப்பினை வாங்கிப் படித்தும் அதன் பலப்பல படிகளை நண்பர்களுக்கும் வாங்கியும் கொடுத்தால், அக்குரல் காலத்தின் பரிணாம நீட்சியைச் சென்றடையும், மாற்றத்தை வந்தடையும். எனக்கும் ஞானபீடம் கிடைக்கும்.
இந்தப் பெருத்தகுரல் மாற்றத்தை, பொறுமையுடன் இருந்தாலும் நாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் இது ஒரு ஒரு திடீர் புரட்சி அல்ல. இது மெதுவான பரிணாமம். ஒரு விதை மண்ணுக்குள் முளைக்கும் போது நாம் அதை காண முடியாது. (ஏனெனில் வேர்களுக்குக் கண்ணே இல்லை என ரோஜர்பென்ரோஸுக்கு நான் ஒரு கடிதம் 1980லேயே எழுதிவிட்டேன்)
ஆனால், அவ்விதை வளர்ந்து மரமாகும் போது, அதன் நிழலின் முப்பரிமாணத்தில் நாமே நம் நிழல்களை இழந்து, விழலுக்குப் பாய்ச்சிய நீராக, இழந்த கனவாக தனிமையில் தவித்து நிற்கிறோம். விதி என்பதே விதையால் முகிழ்த்ததுதான். விதியை மதியால் வெல்லலாம். ஆனால் விதி மதியை வெல்லும் என்பதும் உண்மையே. என்னுடைய திரைக்கதையாக்கத்தில் உருவாகிவரும் படத்தில் விதி எனும் பதினைந்து வயது கதாநாயகி (இந்த நடிகையும், பிற நடிகைகளைப் போலவே ஒரு அழகான முட்டாள்தான்), மதி (இப்பதினைந்து வயது பாத்திரத்துக்கான நடிகர் என் நண்பர் கமல்ஹாஸன்) எனும் உலகமகா இளைஞஅழகனைத் திருமணம் செய்துகொள்வார் என்பது ஒரு எளிய எடுத்துக்காட்டு.
இந்தத் தேர்தல் நமக்கு ஒரு கண்ணாடி கொடுத்துள்ளது. அந்தக் கண்ணாடியில் நாம் அரசியல்வாதிகளை மட்டுமல்ல, நம்மையே பார்க்க வேண்டும். நாம் எந்த வகையான சமூகத்தை விரும்புகிறோம்? நம்முடைய மதிப்புகள் என்ன? இந்தக் கேள்விகள் தான் முக்கியம். ஆனால், கண்ணாடி பிம்பங்கள் கயிற்றரவுகளே என்றே வேதாந்தம் சொல்லும். எது விழி நிலை, எது பிதுங்கு நிலை என்பதை அறிய XXXL அளவு கௌபீனக் கோமணத்தை அணியவேண்டியவர், வெறும் S அளவானதை போட்டுகொள்வதை ஆச்சரியத்துடன் அவதானித்து அனுமானித்தால், திருப்பூரின் பேரவலநிலை தெளிவுபடும்.
வெற்றி பெற்றவர்கள் வெற்றியை ஒரு அதிகாரமாகப் பார்க்கலாம். ஆனால் அது ஒரு பொறுப்பு. தோற்றவர்கள் இதை ஒரு தோல்வியாகப் பார்க்கலாம். ஆனால் அது ஒரு வாய்ப்பு. மக்கள் இதை ஒரு நிகழ்வாகப் பார்க்கலாம். ஆனால் அது ஒரு தொடர்ச்சி. இவை அனைத்தையும் ஒருங்கே பார்த்து அவதானித்து அறிந்த என் போன்றவர்கள், கீதையில் சொல்வதுபோல ஜீவன்முக்தர்கள். ஆனால், தமிழகத்தில் நான் ஒருவன்தான் ஜீவன்முக்தனாக தன்னந்தனியாக சுயஓளிர்ந்துகொண்டு இப்படி இருக்கிறேன், கடந்த சில நூற்றாண்டுகளாகவே இந்த நிலைமையே தொடர்கிறது. சராசரித்தனம் மிக்க தமிழ்ச்சூழல் இயல்பாகவே இப்படித்தான். இருந்தாலும் எனக்கு இயல்பியலுக்கான நோபல் பரிசு இதுவரை கிடைக்காதது ஒரு சமகால வரலாற்று நகைமுரண்.
இறுதியாக, இந்தத் தேர்தல் நமக்குச் சொல்லுவது எளிதானது: ஜனநாயகம் என்பது ஒரு இயந்திரம் அல்ல; அது ஒரு உயிர். அந்த உயிர் உயிர்த்து நம் அனைவரின் உள்ளேயும் இருக்கிறது. அதை நாம் எவ்வாறு அகத்தில் பேணுகிறோம் என்பதில்தான் அதன் புறவயமான எதிர்காலம் இருக்கிறது.
அதனால், இந்த முடிவுகளை ஒரு இறுதி என அல்ல, ஒரு தொடக்கம் என பார்க்கலாம். ஏனெனில் ஒவ்வொரு தேர்தலும், உண்மையில், ஒரு புதிய கதையின் முதல் பக்கம் தான்.
அதேசமயம் “கட்டுடைத்துக் கட்டுக்கடங்காமல் பார்க்கும்போது – பின்பெருவெடிப்புத்துவ காலவெளிப் பிரவாகத்தில் – முடிவுகளை, முடிவற்ற முடிவுகள் என்றும் பார்க்கலாம்” என என் சீடன் நித்யா, தன் குருவின் விடைக்காகக் காத்திருந்து, கேட்டு மன்றாடி ஆராதிக்கும்போது அவர் சொன்னதாகச் சொல்வார். ஆனால் எனக்கு அதனை நான் அப்படிச் சொன்னதாக நினைவிலில்லை. எனக்கு எவ்வளவோ சீடர்கள், சீடிகள் – மேலும், அவ்வப்போது நானுதிர்த்து மெய்சிலிர்க்கவைக்கும் மெய்ஞானத் தேடலுண்மைகள், தெரிந்து தெளிந்து உரைக்கும் சாஸ்வத சத்தியங்கள்… இப்படிப்பட்ட அடர்த்தி மிக்க சூழலில், யாரிடம் என்ன சொன்னேன் என்பதை அறிந்துளர் யாவர்.
எப்படியும், தன் குருவின் மீதான மட்டற்ற மரியாதை காரணமாக நித்யசைதன்யசதி இப்படிக் கருத்துதிருக்கலாம் எனக்கூடக் கருதலாம். ஆனால், ஒருவேளை நான் அப்படியே சொல்லியிருக்கலாமும்தான், ஏனெனில் நான் சொல்லக்கூடியதுதான் இது. இதுதான் துவைத அத்வைதம் எனும் இருமைத்துவத்தின் இருண்மையற்ற புதிர். இந்தியத் தத்துவவியலின் எட்டாவுயரத்தில் ஊடாடிக் கொண்டிருக்கும் ஏழாம் ஞானதரிசன மார்க்கம்.
‘அகம் பிரம்மாஸ்மி’ என்கிற என் பிரத்தியேக, நானே வடிவமைத்து, திரைக்கதை வசனம் எழுதிய இருவார்த்தைச் சொல்லாட்சி இதனை உணர்த்துகிறது என்பதை உணர்ந்து உறைந்து உள்ளடங்கி – அதேசமயம் தேர்தல் முடிவுகளை உள்வாங்கிப் புதிர் நோக்கி இருந்தால், தெளிந்துவிடும். கனவு கலைந்து நினைவு வந்தாகிவிடும். பிறகென்ன… கீழ்பாக்கத்தை விட வெகுவுன்னதமான ராஜகீழ்ப்பாக்க மாளிகை ஒன்றுக்குக் குடிபெயர்ந்து அதன் உப்பரிகையில் அமர்ந்து, சராசரி மக்களின் வாழ்க்கையை ஒரு பறவைப் பார்வையாக இன்னமும் கூர்ந்து அமோகமாக அவதானிக்கலாம், மெய்ஞான மரபுத் துணுக்குகளையும் உதிர்க்கலாம். (ஐயோ, என் அடுத்த கூடுகைக்கு நேரமாகிக் கொண்டிருக்கிறதே!)
…ஆனால் எல்லாமே ஸ்வப்ன ஸ்கலித நிலை என்பதை உணர்ந்தால், நீங்கள் உங்கள் பின்பக்க மண்ணைத் தட்டிக்கொண்டு ஆகிற வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடுவீர்கள். இதுவும் கர்ம யோகம் தான். எந்த யோக மார்க்கத்தை நீங்கள் கடைபிடித்தாலும், அந்தக் கடையின் ஏகபோக இணையதளம் ஜெயமோகன்.இன் மட்டுமே என்பதை உணர்ந்தாலன்றி உங்களுக்கு கதிமோட்சமில்லை.
தேர்தல் முடிவுகளும் உங்களுக்கு இதைத் தான் தெளிவுபடுத்தும்.
-0-0-0-0-0-0-0-
தேர்தல் களங்கள் ஓய்ந்தாலும், தேர்தல் கெளங்கள் ஓய்வதேயில்லை: எஸ் ராமகிருஷ்ணன் எனும் மகாமகோ தமிழ் அழுத்தாளரின் விருந்தினர் பதிவு
April 25, 2026
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் முடிந்து இரண்டு நாள்களே ஆனது. ஆனால் வானம் இன்னும் வாக்குச் சீட்டுகளின் தூசியில் நீலமாகத் தெரியவில்லை; அது ஒரு வேறு நீலம் – கருத்துக் களரியின் நீலம். இந்த நீலத்தின் நடுவே, சிந்தனைக்காக சாம்பல் நிற நிழலைப் போல நம்மைத் தேடி வருகிறது ஒரு குரல்: “இது வெற்றி அல்ல, இது ஒரு இடைநிலை.”
கிராமப் பாதையில் மழை பெய்த பின் உண்டாகும் அந்த நெளிந்த மண்வாசனை போல, தேர்தல் முடிவுகளின் பின்னால் ஒரு நீண்ட வரலாறு கிடக்கிறது. ஒவ்வொரு வாக்கும் ஒரு சிறிய கதையாகத் துடித்தது. அந்தக் கதைகள் சேர்ந்து ஒரு பெருங்காவியம் ஆனது. ஆனால் இந்த காவியத்தில் தனித்துவ நாயகன் யார் என்று கேட்கும் போது, வாக்குப்பெட்டியின் இருண்ட உள்ளே இருந்து ஒரு சிரிப்பு மட்டுமே கேட்கிறது.
ஒரு காலத்தில் நம் அரசியல் ஒரு நாடக மேடை. மேடையின் பின்னால் ஒளிந்திருந்த கயிறுகள், முன்னால் தெரியும் நிழற்பாவைகளை ஆட்டின. இன்று அந்தக் கயிறுகள் நம் கைகளில்தான் இருக்கின்றன என்று நாம் நம்புகிறோம். ஆனால் உண்மையில் கயிறுகள் இன்னும் யாரோ ஒருவரின் விரல்களில் சிக்கியுள்ளன; நாம் அவற்றை பிடித்துக் கொண்டு இருப்பதாக மட்டும் நம்பிக்கொள்கிறோம். இது ஜனநாயகத்தின் மிக மென்மையான மாயை.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒவ்வொரு வாக்குறுதியும் ஒரு சிறிய கவிதை. “நாளை நல்லது” என்ற ஒரு வரி கவிதை. அந்தக் கவிதையை நம்பி மக்கள் வரிசையில் நின்றார்கள். வாக்குச்சாவடியில் அவர்கள் தங்கள் விரலில் மை அடித்துக்கொண்டார்கள். அந்த மை ஒரு குறி அல்ல, ஏன் குறியீடும் அல்ல; அது ஒரு தற்காலிக உடன்படிக்கை – “நீங்கள் சொன்னதை நான் நம்புகிறேன்” என்ற அமைதியான ஒப்பந்தம்.
இப்போது முடிவுகள் வந்துவிட்டன. வெற்றி பெற்றவர்கள் புன்னகைக்கிறார்கள். தோற்றவர்கள் சிந்திக்கிறார்கள். ஆனால் மக்கள்? அவர்கள் மீண்டும் தங்கள் தினசரிக்கு திரும்பிவிட்டார்கள். ஒரு தேநீர் கடையில், “யார் ஜெயிச்சாலும் நமக்கு என்ன?” என்ற கேள்வி ஒரு பழைய ராகம் போல ஒலிக்கிறது. அதே நேரத்தில், அந்தக் கேள்விக்குள் ஒரு புதிய நம்பிக்கையும் உண்டு: “இம்முறை ஏதாவது மாறுமோ?”
சிற்றூர்களில் மாலை நேரம். தெருவிளக்கின் கீழ் அரசியல் விவாதங்கள் மெதுவாக ஒளிர்கின்றன. ஒரு முதியவர் சொல்கிறார், “இது எல்லாம் சுழற்சி. இன்று இவர்கள்தான், நாளை மற்றவர்கள்.” அருகில் இருக்கும் இளைஞன் சிரித்து, “அப்படின்னா நாம எப்போ?” என்று கேட்கிறான். அந்தச் சிரிப்பில் ஒரு சின்ன புரட்சி ஆழ்ந்த குறியீடாக படிமமாக மறைந்து கிடக்கிறது.
இந்தத் தேர்தல் ஒரு முடிவு அல்ல; அது ஒரு குறிப்பு. வரலாற்றின் ஓரத்தில் எழுதப்பட்ட ஒரு குறிப்பு: “மக்கள் இன்னும் பேசுகிறார்கள்.” அந்தப் பேச்சு சில நேரங்களில் சத்தமாக இருக்கும், சில நேரங்களில் மௌனமாக இருக்கும். ஆனால் அது நிற்காது. ஏனெனில் ஜனநாயகம் என்பது ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல; அது ஒரு தொடர்கதை.
இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? வெற்றியை கொண்டாட வேண்டுமா, தோல்வியை ஆராய வேண்டுமா? அல்லது இந்த இரண்டிற்கும் நடுவே நின்று, ஒரு சிறிய கேள்வியை கேட்க வேண்டுமா: “இந்த முறை நம்மால் என்ன கற்றுக்கொள்ள முடியும்?” அந்தக் கேள்வி தான் இந்தத் தேர்தலின் உண்மையான பரிசு.
இறுதியாக, ஒரு சிறிய உண்மை: வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட்டுவிட்டன. ஆனால் மனங்கள் இன்னும் திறக்கப்பட வேண்டியுள்ளது. அந்தத் திறப்பு தான் அடுத்த தேர்தலின் விதை. அதுவரை, அரசியல் நம் வாழ்க்கையின் ஓர் இடைவேளையாக அல்ல, அதன் ஓர் அத்தியாயமாகத் தொடரட்டும்.
இதில் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சாருநிவேதிதா – ஒரு அதிநுணுக்கமான தினசரி சம்பவம் ஒன்றை அவருக்கேயுரித்த போராளி-ரிபெல் பார்வையுடன், கலகப்பிரதித்தனமாக அணுகுகிறார் – இதற்குள், ஆழமான வரலாற்று, இலக்கிய, பெண்ணியக் கண்ணோட்டச் சாயல்கள், சுவையான உணர்ச்சிப் பிரவாக கருத்துத்தெறிப்புகள், வாதக் கோடுகள்+புள்ளிகள், மற்றும் அவருக்கென்றே பிரத்தியேகமாக உருவகப்படும் ஏதேனும் ஒரு உணவுப் பொருளின் பிரபஞ்ச தாத்பரியங்களை உள்ளடக்கும் கட்டமைப்போடு பரிமளிக்கின்றன. Read the rest of this entry »
இந்த விருந்தினர் பதிவு, வேர்ல்ட்ஃபேமஸ் தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அருளிச் செய்தது: (முடிந்தவரை, அவருடைய ஆக்கத்தில், ஒற்றெழுத்தெழவுகளை மட்டும் நான் மண்டையில் தட்டி பட்டிபார்த்து டிங்கரிங் செய்திருக்கிறேன்) Read the rest of this entry »
நடுக்கம் தொடர்கிறதே! ஐயகோ!!
December 26, 2024
இந்த ‘சென்னைப் புத்தக மந்தை 2025’ எழவு ரிலீஸ்கள் ஒரு பக்கம் பயமுறுத்துகின்றன என்றால்… Read the rest of this entry »
நடந்து கொண்டிருக்கும் பயங்கரம்… நினைத்தாலே படுபீதியாக இருக்கிறதே! :-(
December 24, 2024
1
இத்தனை நாட்கள், அயோக்கிய சோம்பேறித் தமிழர்களின் (அதாவது இலக்கியம் மண்ணாங்கட்டீ மசுறு பண்ணுகிறேன் என வெற்றிடத்தை வெறித்து நோக்கியபடி வளையவருபவர்கள் இந்த ஜந்துக்கள் என்றறிக) வெட்டிப் பொழுதுபோக்கு என்பது… Read the rest of this entry »
அநியாயமாக, நாமெல்லாம் மறந்தேவிட்ட சங்ககாலப் புலவர் சூரியனார் – குறிப்பு
September 14, 2024
திராவிடத்தின் தொன்மை (அது சங்ககாலத்துக்கும் முந்தியதே) என்பதை ஐயந்திரபற உணர்த்திய இனிமைக்கரனார் ஐயனர் அவர்களின் பள்ளியில் உதித்துப் பொன்னெழுத்துகளில் பொரித்தெடுக்கப் பெற்று உருவாகிய செம்மல்தாமவர்!
ஆரிய வந்தேறிகளின் சதியால், ஆவக்காய வடுகர்களின் கள்ளத்தால் இதுவரை மறைக்கப் பட்டுள்ள சூரியனார்களின் பிரகாசம் கிரகணத்திலிருந்து வீறிட்டு வெளியேறுவது திண்ணம்.
…அவர் குறித்த இந்த முக்கியமான ருசுவை, நம்முலகத்துக்குக் கொணர்ந்த தமிழார்வலர் – இளம் திரு சுபி தளபதி அவர்களுக்கு நன்றியுடன், இந்த சங்ககாலச் சித்திரம் பதிப்பிக்கப் படுகிறது… Read the rest of this entry »
நண்பர் ஸ்ரீதர் திருச்செந்துறை அவர்கள் அண்மையில் தமிழில் வந்துள்ள pop-history (இதை டமால்டுமீல் வரலாறு எனப் பெயர்க்கலாமா?) புத்தகங்கள் சிலவற்றைப் படித்துள்ளார் என்பது தெரிகிறது. பொன்னியின்செல்வன் பேரிலும் கொஞ்சம் வருத்தம் இருப்பதாகவும்…
அதன் விளைவான ஆதங்கம்: வரலாறு மிக முக்கியம் அமைச்சரே அவசியம் இதனைப் படிக்கவும்.
அவருக்கு என்னாலான, எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவில் ஆதூரம்/ஆசுவாசம் தர முடியக்கூடிய விஷயம் இது ஒன்றுதான்,
அதாவது இது ‘ஒத்திசைவு க்யாரண்டி’ – நான் எக்காலத்திலும் டமால்டுமீல் தமிழக உளறாறு என எத்தையாவது தடிமன் வெண்முரசு எழுதி அவர் தலையில் ஐந்து படிகளைக் கட்டமாட்டேன்.
இதைப் படிக்கும் உங்களுக்கும் கவலைவேண்டேல் எனும் க்யாரண்டிதான்.
-0-0-0-0-
ஆனால்.
என் இளந்தலைவர் உதை இசுடாலிர் – அமைச்சராகவே மாட்டேன் எனச் சொல்லி, அமைச்சரும் ஆகி, தான் திருடிய செங்கல் ஒன்றைத் தூக்கிக் கொண்டு சுற்றி வந்து மக்கள்பணியாற்றுவது ஒரு முன்னோட்டக் கவலையளிக்கிறது. மேலும், நான் திராவிடச் சூழலில் வளர்ந்தவன். கருந்தோல் தடிமன் தாஸ்தி. என் எருமைசரீரத்தின் மேல் மழை விழுந்தால் என்ன மண்ணாங்கட்டி விழுந்தாலென்ன என… …
ஆக.
அப்படியே ஒரு குட்டிவெண்முரசை, ஏன் சிறுடமாரங்களை (ம்ம்ம் – இந்தத் தலைப்புகள் பரிசீலனையில் இருக்கின்றன: “தட்டித் தூக்கிய களப்பிரர்கள்!” – “வீரபாண்டியக் கட்டபொம்மனைக் கட்டம் கட்டி வீழ்த்திய பார்ப்பனர்கள்!” – “ரிக்வேதம் எழுதப் பட்டதே செந்தமிழில்” – “ஆரிய ஹரப்பா தந்தைவழி நாகரிகமும் திராவிட ஹரம்மா தாய்வழிச் சமூகமும்” – சிறார்களுக்காக எழுதப்படக் கூடிய எஸ்ராமகிருஷ்ணத்தனமான “இளங்கோ: சங்ககால கன்றுக்குட்டி” … …) நான் எழுதவேண்டிய துர்பாக்கிய நிலை உங்களுக்கு ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீதரனார் தான் ஜவாப்தாரி.
மன்னிக்கவும்.
சக் க்லாஸ்டர்மன்: இக்காலங்களில் நான் ஏன் ஜெயமோகன்-எஸ்ராமகிருஷ்ணன்-சாருநிவேதிதா போன்ற அலக்கிய அறிவுஜீவிய இத்யாதிகளைக் குறித்துப் புகழ்ந்து எழுதுவதேயில்லை?
February 17, 2024
…இப்படியும் அன்பர் ஒருவரிடம் இருந்து ஒரு கேள்வி(!); தேவையா? நகைச்சுவைக்கு, அதுவும் மாநிலமே #திராவிடமாடல் நகைச்சுவையாக இருக்கும் நம் தகத்தகாய தமிழகத்தில் அப்படி ஒரு ஏக்கத்துக்கு முகாந்திரம் இருக்கிறதா? இருக்கலாம்; ஆனால் – ஆனால், நான்கு விஷயங்கள்: Read the rest of this entry »
தமிழர்களின் ஆகச்சிறந்த ‘சங்க காலம்’ எனும் விஷயத்தைக் குறித்து திரு சேட்-ஜிபிடி அவர்களின் மேலான கருத்து என்ன?
September 2, 2023
எனக்குத் தெரிந்தவரை, தமிழர் போற்றும் ‘சங்க காலம்’ என்பதைக் குறித்த மிகக் காத்திரமான, அறிவியல் பூர்வமான – இவையனைத்துக்கும் மேலாக, நம்மால் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொள்ளக்கூடிய வாதங்களை இந்த ‘செயற்கை நுண்ணுணர்வு’ விஷயம்தான் முன் வைக்கிறது. Read the rest of this entry »
tamil translation charlie foxtrot
May 23, 2023
Ayyo! 😩 Read the rest of this entry »
தமிழனுக்கே, தமிழ் மண்ணுக்கே (அதாவது திராவிடத் தமிழனின் மூளைக்கே) உரித்த உன்னதமான கல்யாண குணங்களில் ஒன்று இந்தப் பேச்சு. ஏன், தமிழர்களின் தனிப்பெரும் குணம் என்பதே கவைக்குதவாத பேச்சு என்று சொல்லிவிடலாம்; பேச்சோதி பேச்சு. Read the rest of this entry »
தமிழின் தொடரும் பிரதான சாபக்கேடுகளில் இந்த வெட்டிப் பிச்சைசோற்றுத் தண்டமும் ஒன்று என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தேயில்லை. Read the rest of this entry »
மக்கட்தொகை, பொருளாதாரம், எழுத்தாளர் விகிதம், இலக்கியத் துய்ப்பாளர்கள் போன்ற கோணங்களில் பார்த்தால், ‘சங்க காலம்’ என்பது அவ்வளவு தொன்மையானதோ பரந்துபட்டதோ அல்ல – அனேகமாக அது பிற்பாடு அமோகமாக கற்பனை செய்யப்பட்டதொன்றாகத்தான் இருக்க முடியும். Read the rest of this entry »
‘…ற்றொம்ப நீளம்:அத்னால படிக்கமாட்டோம்’ வகை tl;dr (too long; didn’t read) சோம்பேறி அன்பர்களுக்கு:
மக்கட்தொகை, பொருளாதாரம், எழுத்தாளர் விகிதம், இலக்கியத் துய்ப்பாளர்கள் போன்ற கோணங்களில் பார்த்தால், ‘சங்க காலம்’ என்பது அவ்வளவு தொன்மையானதோ பரந்துபட்டதோ அல்ல – அனேகமாக அது பிற்பாடு அமோகமாக கற்பனை செய்யப்பட்டதொன்றாகத்தான் இருக்க முடியும். Read the rest of this entry »
ஒத்திசைவு வெ. ராமசாமி புடைப்புகளில் தார்க்சியத்தின் மார்க்கம்
September 26, 2022
எனும் தலைப்பில் நானே ஒரு பிஹெச்டி செய்து… Read the rest of this entry »
யாதும் ஊரே, யாவரும் வேளிர்
September 23, 2022
மன்னிக்கவும்.சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்,கேண்மினோ…
ஏனெனில். Read the rest of this entry »
Have been having some discussions about the fundamental differences between (mostly) nonsensical ‘Social Sciences’ and that of the real, useful Sciences – especially as adapted & applicable to ‘Tamil discourses.’
+ நம் பாவப்பட்ட தமிழ, அதிசராசரிச் சூழலில் – நாட்டாரியல், திராவிடமாடல், அகழ்வாராய்ச்சி, இனம்-நாடு-‘இனமானம்’ போன்ற இன்பலாகிரி வஸ்துக்கள் ‘அறிவியல் பூர்வமானவை’ எனப் பவனி வரும்போது, ‘இலக்கியவாதிதான் சமூகத்தின் மனச்சாட்சி’ எனப் பிரமைகள் உருவாக்கப் படும்போது (நமக்கு அறிவியல் என்றால் என்ன, அதற்கும் உடும்புத்தைலத்துக்கும் உள்ள சிலபல முக்கியமான வித்தியாசங்கள் யாவை எனத் தெளிவாகத் தெரிவதில்லை – போன்ற) நம் பார்வைக் குறைபாடுகள் துல்லியமாகவும் பட்டவர்த்தனமாகவும் தெரிகின்றன. Read the rest of this entry »


