கருணாநிதி: “தமிழக அரசே! என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய்!! கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய்!!! பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்குத் தூக்குதண்டனை கொடு!!!!”

June 24, 2015

அய்யய்யோ! கொஞ்சம் பெரிய தலைப்பாகிவிட்டதே! (ஆனால், மன்னிக்கவேண்டாம்!)

கருணாநிதி: செம்மர கடத்தல் கேஸை, சிபிஐ-க்குக் கொடுத்தால்தான் உண்மை வெளிவரும்... ('த ஹிந்து' தினசரி, 18 ஜூன் 2016); இதன் தமிழ்ஹிந்து தினசரி வடிவம் இங்கே: செம்மரக் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க கருணாநிதி வலியுறுத்தல்

கருணாநிதி: செம்மர கடத்தல் கேஸை, சிபிஐ-க்குக் கொடுத்தால்தான் உண்மை வெளிவரும்… (‘த ஹிந்து’ தினசரி, 18 ஜூன் 2016); இதன் தமிழ்ஹிந்து தினசரி வடிவம் இங்கே: செம்மரக் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க கருணாநிதி வலியுறுத்தல்

… … ஆ! மேற்கண்ட ஹிண்டூ கிண்டிய செய்திகளைப் படித்துவிட்டு, ஒரு நிமிடம் இதைத்தான் – திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு ஊழலைப் பற்றித்தான் – சொல்லவருகிறார், திடீரென்று நிதானம் தவறி, நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார் என நினைத்து ஆனந்தத்தில் கூத்தாட ஆரம்பித்தேன்.

தம் கடந்தகால குற்றங்களுக்கெல்லாம் பரிகாரம் தேடிக்கொள்ள அந்திமகாலத்தில் முயல ஆரம்பித்துவிட்டார் என எண்ணி எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நெகிழ்வெழுத்துகளைப் படித்து நெகிழோநெகிழ் என என் லுங்கிகூட நெகிழ்ந்து போவதைப் போல உணர்ந்தேன்…

ஆனால்… ஹ்! இப்படிச் செய்வாரா என்ன, நம் தன்மானத் தலைவர்?…அவருடைய கவலையெல்லாம், திருடர்கள்-கொள்ளைக்காரர்கள் வன்புணர்ச்சி திராவிடர்கள் ஒருவருக்கும் தண்டனையே கிடைக்கக்கூடாது, என்பதுதானே! அவர்களுக்கெல்லாம் பதக்கங்களும், பட்டங்களும், பணம்புரளும் பதவிகளும், இளைஞரணித் தலைமைகளும் அளிக்கவேண்டும் என்பதுதானே? :-)

—-0—0—0—

மேற்படி திருப்பத்தூர் சந்தனமரக் கிடங்கு எரித்தல் (1997) மோசடியைப் பற்றிய  தகவல்கள் பல, அவற்றின் தேவையான பின்புலங்களுடன் இங்கு இருக்கின்றன:

மேற்கண்டவற்றைச் சுமார் 4 ஆண்டுகள் முன்னர் எழுதினேன். இப்போது அதனைப் பற்றி மேலும் சில தகவல்களை (நீதிபதி ராமன் கமிஷன் அறிக்கையைப் படித்த மங்கலான என் நினைவுகளிலிருந்து) எழுதுகிறேன். ஏனெனில், பலர் இந்தக் கேவலமான விஷயத்தைப் பற்றிக் கேள்விகூட படவில்லை என்பது எனக்கு படு ஆச்சரியமாக இருக்கிறது. தமிழனின் ஞாபகசக்தியும்கூட திராவிடர்களால் இப்படியா காயடிக்கப்படவேண்டும்? :-(

—-0—0—0—

… திராவிடத் திமுகவினர் அமர்க்களமாக ‘விஞ்ஞானரீதியாக’ சந்தனக் கிடங்கினைக் கொள்ளை அடித்தபின் தமிழகத்தில் எழுந்த உடனடி கண்டன அலையைச் சமாளிக்க அப்போதைய கருணாநிதி அரசு, நீதிபதி ஏ ராமன் தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்தது. அவரும் மேதகு கருணாநிதி அவர்களால் எதற்காக நியமிக்கப் பட்டாரோ, அதனைச் செவ்வனே செய்தார். அதாவது – நீதிபதி ராமன் அவர்களின் தர்மபரிபாலனத்துக்கும் அயோத்தி ராமனின் தர்மபரிபாலனத்துக்கும் ஒரு சுக்குத் தொடர்புமில்லை.

சரியான விசாரணைகள் செய்யப்படாத, அப்போதைய கருணாநிதி அரசின்  ‘ஆணை’க்கேற்ப அவசர கதியில் ஆடிய இந்த  ‘கமிஷன்’ அறிக்கை எழவின்  சாராம்சம்:

  • இந்தக் கிடங்கில்தான் தமிழகத்தின் காடுகளில் (சேலம், திருப்பத்தூர். சத்தியமங்கலம் சந்தனமரங்கள்)  இருந்து அறுவடை செய்யப்பட்ட, திருடர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட – நேர்த்தியான சந்தன மரக்கட்டைகள் இருந்திருக்கின்றன.
  • இத்தனை பெரிய எரிப்பு, வனத்துறையினரின் ஈடுபாடில்லாமல், இருக்காது; இந்த மர்மத் தீவிபத்தில் வனத்துறை +  அதிகாரவர்க்கத்தினரின் தாக்கத்து இருக்கிறது.
  • மொத்த இழப்பு: ரூ 193 கோடி. (வெ.ரா குறிப்பு: அசிங்கமான பொய்க் கணக்கு இது!)
  • இந்தத் தீ விபத்தில் அரசியல்வாதிகளின் தொடர்பு இல்லை. திமுக எம்எல்ஏ-வுக்கும் (வெ.ரா குறிப்பு: இவர் பெயர் ஜி சண்முகம் என என் மங்கல் நினைவு சொல்கிறது; இப்பெயர் தவறென்றால் திருத்திக் கொள்கிறேன்) இதற்கும் தொடர்பே இல்லை.
  • இந்த சந்தனக் கிடங்கு எரிப்பில் மர்மம் உள்ளது. இதனைத் தீவிரமாக விசாரிக்கவேண்டும்.

ஆகவே – அதே சமயம் கருணாநிதியின் காலடியில் மிதிபட்டுக்கொண்டிருந்த சிபி-சிஐடி குடுகுடுவென்று ஓடி பரபரக்க  சார்ஜ்ஷீட் என ஒரு கேளிக்கை அறிக்கையைச் சமர்பித்தது; அதன்படி  – ஏழு மனிதர்கள் குற்றவாளிகளாக நிறுத்தப் பட்டார்கள்; இவர்களில் ஒரு சிறுவனும் அடக்கம்! ;-)

இந்த அறிக்கையின்படி – ஒரு சந்தோஷமாக செய்தி பரப்பப்பட்டது: இந்தச் சிறுவன் வளாகத்தில் விளையாடிக்கொண்டிருக்கும்போது தவறுதலாக, கவனக் குறைவாக கிடங்கில் தீப்பற்ற வைத்துவிட்டான். சுபம்.

ஆக, நீதிமன்றத்தில் தேவையாக ருசுக்களை கருணாநிதியின்  சிபி-சிஐடி குழு முன்வைக்காததால், ஏழு பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இப்படி படுகோரமாக, சப்பையாக முடிந்த தீர்ப்பு கிடைத்தவுடன், மக்கள் சொத்துக்களைப் பராமரிப்பதில் காப்பதில் ஆர்வம் உள்ள தமிழகஅரசு அப்போது   என்ன செய்திருக்கவேண்டும்?

கர்னாடக அரசுக்கு, ஜெயலலிதா வழக்கு தொடர்பாக, அறிவுரைக்குமேல் அறிவுரையாக வழங்கி – அது ஜெயலலிதா தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்துக்குக் கண்டிப்பாகச் செல்லவேண்டும் என ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்த கருணாநிதியின் அப்போதையஅரசு – அப்போது என்ன செய்திருக்கவேண்டும்?

ஒன்றும் செய்யவில்லை. மேல்முறையீடு செய்யவேயில்லை. ஊத்தி மூடிவிட்டார்கள். திராவிட திமுகவினர் சுமார் 500 கோடிரூபாய் ஊழலை அறிவியல்பூர்வமாக – மறுபடியும் செய்தார்கள். ஒருவர் கூட மாட்டிக்கொள்ளவில்லை. அப்போதைய கருணாநிதி அரசு செய்த பேடித்தனமான அயோக்கியச் செயல்பாடுகளில் இதுவும் ஒன்று, அவ்வளவுதான்.

எப்படியும் – சந்தனக்கிடங்கு எரிந்து மக்கள் பணம் சாம்பலானாலும் (அதாவது -உண்மையின் சந்தனமரங்கள் முன்னமே கடத்தப்பட்டு, வெறும் மாமரக் கட்டைகள் எரிக்கப் பட்டிருந்தாலும்) பாவம், ஒரு சிறுவன் செய்த தவறுக்கு, எப்படி தமிழக அரசைப் பழி சொல்லமுடியும், சொல்லுங்கள்? :-(

—-0—0—0—

நிற்க, டிஎஸ்ஆர் நிறுவனத்திற்கு (TSR & Co – இது கோகுல் ஸான்டல் முகப்பவுடர் தயாரிக்கிறது; மிக நல்லமுறையில் நிர்வகிக்கப்படும் ஒரு தனியார் நிறுவனம்) நான் செய்துகொண்டிருந்த ஒரு வேலை தொடர்பாக, நான் இந்தக் கிடங்குக்கு 1995 வாக்கில் போயிருக்கிறேன்.

இதனாலும் சொல்கிறேன்: கருணாநிதி அரசு, சிபி-சிஐடி வகையறாக்கள் அட்ச்சுவுட்ட புருடாக்களுக்கு ஒரு அளவேயில்லை. ஏன்?

  1. இந்த  சந்தனக் கிடங்கு, மிகப்பாதுகாப்பான சூழ்நிலையில் இருந்தது/இருக்கிறது.
  2. சுமார் ஆறு ஏக்கரா விஸ்தீரணத்திற்கு இருக்கும் இந்தக் கிடங்கைச் சுற்றி சுமார் 10 அடி உயரத்திற்கு கனமாக சுற்றுச் சுவர் இருக்கிறது.
  3. அதன்மேல் மூன்றரை – ஐந்து அடி உயரத்திற்கு முட்கம்பிச்சுருள்வேலி இருக்கிறது.
  4. வளாகத்திற்குள் ஐந்தாறு வனச்சரக அலுவலர்களின் வீடுகள் இருக்கின்றன.
  5. இந்தக் கிடங்கின் ஒரு பக்கச் சுவற்றையொட்டி, ஒரு பெரிய காவலர் குடியிருப்பு இருக்கிறது.
  6. இதன் நுழைவாயில் 24 மணி நேரமும் காக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. (ஆனால் அக்காலங்களில், என் நினைவின்படி, வளாகத்தில் வீடியோ கேமராக்கள் வைக்கப்படவில்லை; எப்படியும் அவற்றைப் பொருத்தியிருந்தாலும், அதையும் ‘கவனித்துக்’ கொண்டிருப்பார்கள், நம் திராவிடக் கொள்ளையர்கள்!)
  7. இந்த சுற்றுச் சுவற்றில் மூன்று ஆயுதபாணி காவல் கோபுரங்கள் (வாட்ச்-டவர்ஸ்) இருந்திருக்கின்றன.
  8. உள்ளே ரோந்தும் போய்க்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.

இத்தனையையும் மீறி, ஒரு சிறுவன் உள்ளே நுழைந்து விலையாட்டுத்தனமாக கிடங்குக்குத் தீவைக்கிறான்.  உடனே, ஆச்சரியகரமான விதத்தில் எல்லா இடங்களுக்கும் தீ பரவி, பெரும் விபத்து ஏற்படுகிறது.

ஆனால் யாரும் சாகவில்லை. யாரும் தீயை அணைக்கவோ பரவுவதைத் தடுக்கவோ முயலவில்லை. எவ்வளவு வசதி பாருங்கள்!

எவ்வளவு அற்புதமான நிகழ்வுகளை உள்ளடக்கிய விஷயம் இது!

சரி. விளைவு என்ன? சுமார் 4 டன் உயர்ந்த வகை, மிகத் தூய்மையான, வைரம்பாய்ந்த சந்தன மரக்கட்டைகள் + சுமார் 420 டன் கைப்பற்றப்பட்ட/நல்ல வகை மரக்கட்டைகள் + சுமார் 70, 000 வெட்டாட்ட சந்தன மரங்கள் இந்தக் கிடங்கில் இருந்திருக்கின்றன. இவற்றின் அன்றைய மதிப்பு – சுமார் 450 கோடி ரூ. இன்றைய (2015) மதிப்பு சுமார் 2200 கோடி ரூபாய்!

ஆனால் கவலைப் படாதீர்கள்! இவைகள் எரியவில்லை. இவை கமுக்கமாக அப்புறப்படுத்தப்பட்டு – அவற்றின் இடத்தில் வெறும் மாம்பலகைகள், சவுக்குக் கட்டைகள்தாம் எரிந்தன. பாவப்பட்ட மரக்கட்டைகள், வேறென்ன சொல்ல.

இரண்டுமூன்று நாட்களுக்கு இந்தத் தீ எரிந்து அனைத்தும் சாம்பல்!

சுபம்.

—-0—0—0—

ஜெயலலிதா அரசு (எனக்கு நினைவிலிருக்கும்படி) பின்னர் ஒன்றிரண்டுமுறை இந்த விஷயத்தைக் கிளற முயன்று – அது எந்த திக்கிலும் செல்லவில்லை, கருணாநிதிகளின் அறிவியல்பூர்வமாக மாட்டிக்கொள்ளாமல் செய்யும் களப்பணியின் பிரதாபம் அப்படி.

இந்த ‘விபத்தின்’ காரணத்தால் – இந்தக் கிடங்கில் பல ஆண்டுகளாக வேலை (கான்ட்ராக்ட்) செய்து கொண்டிருந்த சுமார் 30 சாதாரணத் தமிழர்களுக்கு, மனிதர்களுக்கு வேலை போனது.  அவர்கள் இன்றுவரை அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். என் நினைவின்படி இவர்கள் வனத்துறை+அரசின்மேல் போட்ட வழக்கு இன்றுவரை நிலுவையில் இருக்கிறது. ஒரு அரசியல்வாதி திராவிடக் கழுதையும் இவர்களைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. ஒடுக்கப்பட்டவர்களின் ஒரு  தலைவனும்கூட இவர்களுக்கு ஆதரவாக இல்லை.

ஆனால் – திராவிடர்கள் சுகமாக சந்தன மணத்தில் ஆழ்ந்து பல்லாண்டுகாலமாக ஏகோபித்துத் தொடர்ந்து கொள்ளைகளில், டெஸ்ஸோ-புஸ்ஸோக்களில் ஈடுபட்டுக்கொண்டு – தொடர்ந்து திரவியங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

நாமெல்லாம் தொடர்ந்து சந்தோஷமாக இறந்துகொண்டே இருப்போம்.

திராவிட ஈனமானம் வாழ்க! திராவிடக் கொள்ளைகள் ஒங்குக!

தமிழர்கள் ஒழிக!! தமிழகம் நாசமாப் போக!!!

ஆமென். :-(

—-0—0—0—

 

 

7 Responses to “கருணாநிதி: “தமிழக அரசே! என் மகன் இசுடாலிர் தொடர்புள்ள 3 மார்ச், 1997 திருப்பத்தூர் சந்தனமரக்கிடங்கு எரித்தல்/கடத்தல் ஊழலை சிபிஐ-யை வைத்து மறுவிசாரணை செய்!! கூட்டாளிகளான வன அதிகாரியையும், அக்கால அப்பகுதி திமுக எம்எல்ஏவையும் உடனடியாகக் கைது செய்!!! பலநூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் திருடி, ஊழல் செய்தவர்களுக்குத் தூக்குதண்டனை கொடு!!!!””

  1. ravi Says:

    இந்தச் சிறுவன் வளாகத்தில் விளையாடிக்கொண்டிருக்கும்போது தவறுதலாக, கவனக் குறைவாக கிடங்கில் தீப்பற்ற வைத்துவிட்டான். சுபம்.//// மிச்சவநெல்லாம் கோலி குண்டு வெளையாடி கொண்டு இருந்தார்கள் போல…
    தலிவர் தெரமையே தனிதான் ….

  2. ravi Says:

    தலிவர் தெரமையே தனிதான் ….

    தலிவர் i mean முத்தமிள் அறிஞர்

  3. சான்றோன் Says:

    ஒரு மாணவனை அடித்தே கொன்றுவிட்டு , செத்தவன் தங்கள் மக‌னே இல்லை என்று அவனைப்பெற்ற‌வர்களிடமே எழுதி வாங்கியவர்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்ன?


    • சான்றோன், நீங்கள் சொல்வதும் சரிதான்.

      … ஆனாலும், சாத்தான்கள் பல்லிளித்துக்கொண்டு வேதம் ஓதும்போது, எனக்கு ரொம்பவே வெறுத்துவிடுகிறது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். :-(

  4. ravi Says:

    ஒரு மாணவனை அடித்தே கொன்றுவிட்டு , செத்தவன் தங்கள் மக‌னே இல்லை என்று அவனைப்பெற்ற‌வர்களிடமே எழுதி வாங்கியவர்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்ன?///////

    சிதம்பரம் பல்கலைகழகம் மாணவர் உதயகுமார்


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s