இசுடாலிர் மற்றவர்களை அறைவதில்லை, மாறாக அவர் தொடர்ந்து ஈவிரக்கமற்றுத் தாக்கப்படுகிறார் என்பதுதான் உண்மை!
October 10, 2015
முதலில் ஒரு விளம்பரம்!
நாளை சென்னை கலாக்ஷேத்ராவில், இளம் கற்றுக்குட்டி நாட்டியக் காரர்களுடன் இசுடாலிர் பரதநாட்டியம் ஆடப் போகிறார்!
அனைவரும் அலைகடலென ஆர்பரித்துச் செல்லவும். (ஆனால் ஸெல்ஃபி வேண்டாமே!)
-0-0-0-0-0-0-
…பிரச்சினை என்னவென்றால், தளபதி இசுடாலிர் மெட்ரோ சகபயணியை சில மாதங்கள் முன்பும், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை நேற்றும் கன்னத்தில் அறைந்ததாகச் சொல்லப்படும் வதந்திகள் – வதந்திகள் மட்டுமே!
-0-0-0-0-0-0-0-0-0-
கொழுப்பெடுத்த அரைகுறைகளால் பரப்பப்படும் ‘க்ராஃபிக்ஸ் ‘ சமாச்சாரங்களான இவைகளை நம்பி மோசம் போகாதீர்கள். இசுடாலிர் அறை (=’ரூம்பு’) போட்டுக்கொண்டு நமக்குநாமே என, ‘ஆடறமாட்ட எப்டீரா ஆடிக்கறப்பது பாட்ற மாட்ட எப்டீடா பாடிக் கறக்றதுன்னிட்டு’ தனக்குத் தானே மனோவசியம் செய்துகொள்ளும் மனமகிழ் வசீகரர்தாமே தவிர, அறை விடும் அறைவிலியல்லர்.
-0-0-0-0-0-
சரி. ஏன் இப்படி இசுடாலிர் அவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நீங்கள் கேட்காமல் இருக்கலாம்; அதற்காக நான் வக்காலத்து வாங்காமல் இருக்கமுடியுமா, சொல்லுங்கள்?
அறைவிட்ட கை, நம்மை ஆளப்போகும் கையல்லவா?
தற்குறிப்பு: ஹ்ம்ம்ம்… நான் இன்னமும் இவர்களிடமிருந்து ‘பொட்டி’ வாங்கவில்லை; ஆனால், அது கிடைக்கலாமோ என்கிற நப்பாசையில்தான் இப்படியெல்லாம் எழுதுகிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்! என்ன இருந்தாலும் நான் ஒரு திராவிடன் அல்லவா?
மெட்ரோ ரயில் பெட்டியில் நடந்தது என்ன?
கீழ்கண்ட விடியோவை ஊன்றிக் கவனிக்கவும்:
அந்த இளைஞர் படு ஆவேசத்துடன் இசுடாலிருடன் பொருதி, தன் கன்னத்தால் இசுடாலிரின் கையை அடிப்பது காமாலைக் கண்ணரான உங்களுக்குத் தெரியவில்லையா?
-0-0-0-0-0-
இதில் அந்த ஆட்டோ ஓட்டுநர் விவகாரமாக, ஸெல்ஃபி எடுக்கிறேன் எனக் கமுக்கமாக அவர் அருகில் சென்று, ஆனால் ஆவேசத்துடன் தன் கன்னத்தால் இசுடாலிரை அடிப்பது தெரிகிறதா? அதற்குப் பிறகு தன்னைத்தானே இசுடாலிர் கையை வைத்துக்கொண்டு தள்ளிக்கொண்டதும் புரிகிறதா?
வதந்திகளை நம்பாதீர்! :-)
முக்கியமான குறிப்பு: இந்த ஆட்டோ ஓட்டுநர், அரவிந்தன் கண்ணையன் போல, ஒரு அய்ன் ரேன்ட் ரசிகர் மன்ற ஆள் என நினைக்கிறேன். ஏனெனில் அம்மணி அய்ன் ரேன்ட் அவர்களின் ‘The Virtue of Selfieshness‘ புத்தகத்தை அவர் அவசியம் படித்திருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது.
ஊக்கபோனஸ்: இசுடாலிரின் புதுயுகச் சிற்பிகள் – மகாமகோ குண்டோதிகுண்டு மாணவர் மன்றம்: சில குறிப்புகள் 16/09/2015