சந்தன/செம்மர அகற்றல்கள் (அறுத்தல்களல்ல, கவனிக்கவும்), என்கவுன்டர்கள், மனித உரிமைகள்: சில குறிப்புகள்

June 18, 2015

ஏனெனில் நானே ஒரு ‘விடுதலை’ வீரமணிதான்! :-)

எச்சரிக்கை: இது ஒரு 1500 வார்த்தை பதிவு. பொறுமையாகப் படிக்கவும். இல்லையேல் ஓடவும். ஒரு சுக்குப் பிரச்சினையுமில்லை. எப்படியும் அடுத்த இணைய பப்பரப்பா அலை வந்துகொண்டேதானே இருக்கும்? ஆகவே, கவலைவேண்டேல். இந்த அலைகளின்மீது தொடர்ந்து சவாரி செய்துகொண்டே இடைவிடாத சமூகவலைத்தள இறும்பூதடையலாம். சரியா? ;-)

சரி. செம்மரத் திருடர்கள், மன்னிக்கவும்  ‘செம்மரப் போராளி அகற்றாளர்கள்’ – அவர்கள் கூலித் தொழிலாளர்களேயானாலும், சுடப்பட்ட படங்கள் பரிதாபமாகக் காட்சியளித்தாலும் – அவர்கள் படுஉத்தமர்களோ அல்லது பால்மணம் மாறாத அப்பாவிகளோ அல்லர் – ஆகவே, அவர்கள் அநியாயமாகச் சுட்டுத் தள்ளப் பட்டுவிட்டனர் என நான் கருதவில்லை.  மாறாக, அவர்கள் பலபிறவிதங்களில் மகாமகோ கயவர்கள்தான் என்பதை, சில குறிப்புகளுடன் கோடிட்டுக் காட்டுவதுதான் என் நோக்கம்.(+மேலும் – அரசு பக்க உண்மைகளும், பிற பின்புலச் செய்திகளும் வெளிவரவேண்டும் – ஆனால் இவை இதுவரை (நான் அறிந்தவரையில்)  வெளிவரவில்லை என்ற காரணத்தாலும்)

ஆனால் – செம்மரங்களை, சந்தனமரங்களைத் தொடர்ந்து  அநியாயத்துக்குத் திருடி, முற்பகலில் களப்பணி செய்பவர்களுக்குப் பிற்பகலில் என்கவுன்டர் பணிமூப்பு விளையும் என்று மட்டும் சொல்ல வரவில்லை. (என்கௌன்டர்கள் – சில குறிப்புகள் 04/12/2012)

இந்த அகற்றாளர்கள் – செம்மரங்களை வெட்டியதற்கும் அப்பாற்பட்டு, பலப்பல தாங்கொணா அட்டூழியங்களைச் செய்பவர்கள்தான்.  இதை வெளியே பகிரங்கமாகச் சொல்வதனால், நான் தமிழனாகிவிடமாட்டேனோ, இனத் துரோகியாகிவிடுவேனோ என்ற கவலையெல்லாம் எனக்கு இல்லை.  ஏனெனில், பலர் பலமுறை எனக்கு – ‘டேய், நீ தமிழனே இல்லை, ஒன்னை ஒழிச்சிடுவோம்டா!’ – எனச் சான்றிதழ்களை, அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்கள் அல்லவா? 8-)

-0-0-0-0-0-0-0-

… … ஒருவழியாக, செம்மரத் தமிழ்த் திருடர்கள் சுடப்பட்டது குறித்த சலசலப்புக்கு – ஒரு மசுரும் தெரியாமல் ஆண்குறியெழும்ப ஆவேசப்பட்டு, சும்மனாச்சிக்கும்  சலசலத்து விட்டு, தமிழ்(!)இனமானம் தொழிலாளி-கொலை என்றெல்லாம் வாந்தி எடுத்துவிட்டு,  எய்தவனிருக்க அம்பை நோவானேன் எனப் பிலாக்கணம் வைத்து,  பின்னர் அச்சலசலப்பு கொஞ்சம் அடங்கியதும் – அனைவரும் அடுத்த பப்பரப்பா பிரச்சினைக்கு தங்களுடைய மேலான கருத்துகளை அள்ளித் தெளித்துக்கொண்டிருக்கும் போது…

நான்  என்னதான் செய்துகொண்டிருக்கிறேன்?

-0-0-0-0-0-0-0-0-

பலவிதமான வேலையழுத்தங்களால் இணையம் பக்கமே இருபது நாட்கள் போல போகாமலிருந்து – பின்னர், இப்பதிவை ஒருவழியாக நான் மறுபடியும் எழுத ஆரம்பிப்பதற்குள் – இந்தத் தாங்கொணா ஊடகச் சராசரிகளான அரைகுறைக் கருத்துதிர்ப்பாளர்களின் பப்பரப்பா அலையானது  – ஒரு மசுறு எழவையும் புரிந்தேகொள்ளாமல் – மாட்டுக்கறி, நெட்ந்யூட்ரலிடி, உத்தமவில்லன், ஐஐடி-யைப் பற்றிய அறிவார்ந்த பிலாக்கணங்கள், அம்பேட்கர்=பெரியார்(!) … …  எனத் தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கிறது, என்ன செய்ய… ஒர்ரே #ட்ரென்டிங் டிங்டிங் என எப்படித்தான் ஞமலிகள் போல அலைகின்றார்களோ என நினைத்தாலே எனக்கு அயர்வாக இருக்கிறது…

ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் விலாவாரியாக எழுதலாமென்றால், எனக்கு முனைப்பில்லை. ஏனெனில், இம்மாதிரி அக்கப்போர்களை, தேர்ந்தெடுத்துதான் நடத்திச் செல்லமுடியும். எல்லா எழவெடுத்த முட்டாள்கருத்தியல்களுக்கும் தேவைமெனக்கெட்டு எதிர்வினையாற்றினால் மேலதிகமாக பைத்தியம் முற்றிவிடும். (ஆனால் ஒப்புக் கொள்கிறேன்: இந்த உதிரிக் கருத்துதிப்பாளர்களைக் கட்டுப்படுத்த நினைத்தாலும் பிரச்சினை – ஊடகங்களில் ஊதாரித்தனமாகச் செலவழிக்கும் நேரத்தை – அதற்குப் பதிலாக – நேரடியான வன்முறைகளிலும், கொள்ளைகளிலும், பாலியல் வன்புணர்ச்சிகளிலும் செலவழித்து, நாட்டையே நாற அடித்துவிடுவார்கள்! அவர்களுக்குத் தேவை அவர்களுடைய வெட்டிவெறிகளுக்கு ஒரு வடிகால், அவ்வளவுதான்! ஒரே மட்டையடியாக ‘இன்னிக்கி இத்தப்பத்தி இத்தாண்டா என்னோட மேலான கர்த்து, புட்ச்சிக்கினு ஓட்றா!’ கதைதான்!)

சரி, நாளைய பப்பரப்பாவை இன்றே முந்தித்தரலாம் என்றால், ஜெயலலிதாவுக்கு 10 ஆண்டுகள் கொடுங்காவல் தண்டனைச் சிறை எனக் குதூகலப் படலாம் என்றால், அந்த எழவைப் பற்றி விலாவாரியாக எழுத எனக்கு ஒரு சுக்கும் தெரியாது. அதற்குள் அவர் மறுபடியும் இன்னாள் முதல்வராகிவிட்டார்! ஆனாலும் – பிற இணையக் குளுவான்கள் போலவே ஏகாம்பரத்தனமாக மோதிக்கு அறிவுரை, பன்னீர்செல்வத்துக்குக் கிண்டலுரை, பெற்றோர்களுக்கு அறிவுரை, என்னைக் கௌரவித்து எனக்கு நானே கூட்டம் போட்டுக்கொள்வது, குழந்தையை வளர்ப்பது எப்படி, தெலெகுப் பட விமர்சனம் போல, அம்பேட்கர்=பெரியார் கலப்படம் பற்றியெல்லாம் எழுதலாம் என்றால் – கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. ஏன், மற்ற அற்பர்களைப் போல, என் அறியாமைகளைப் பகிரங்கமாகப் பறைசாற்ற வேண்டும், சொல்லுங்கள்?

 
… நிலைமை இப்படி இருக்கையிலே, நான் இன்னமும் அந்த எழவெடுத்த செம்மரத்தையே கட்டிக்கொண்டு அழுவதற்குக் காரணம்: அடிப்படையில் நான், ஒரு தமிழ்மொழி செம்மரமொழி மரநாடன் என்பதுதான். நானே கலைஞன்தான்!

ஆகவே.

-=-=-=-=-=-=-=-=-=-

நான் பலவருடங்களாக – அல்லாஹ் பக் ஷ் (=அல்லாபிச்சை அல்லது அல்லாவின்வெகுமதி எனக் கருதலாம் – அவர் தன்னை அல்லா பகழ் என்றுதான் சொல்லிக்கொள்வார்) எனும் மாஜி செம்மர ‘அகற்றாளர்’ ஒருவரிடம் தோழமையோடு இருந்தேன். இவருக்குப் பூர்வீகம் ஜவ்வாது மலைப்பக்கம். 7 ஏக்கராவில் அடிப்படைத் தொழில் விவசாயம் – மாந்தோப்பும் தென்னந்தோப்பும், கொஞ்சம் நெல்லும்; ஆனால் ‘சாகசங்களுக்காக’வும் சுலபப் பணத்துக்காகவும் (‘ஜல்தியா பணம் தேத்தலாம்!’) சந்தன மரம் செம்மரம் வெட்டல் போன்றவற்றிற்கெல்லாம் தன்னுடைய முன்அவதாரங்களில் சென்றிருக்கிறார். (பொதுவாகவே – திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் இருந்துதான் – மலைவாழ் ஆசாமிகளும், சமவெளி ஆட்களும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்)

இவர் — சுமார் 10-20 வருடங்கள் முன்வரை – நம் தமிழக ஜவ்வாது மலைகளிலுள்ள சந்தன-செம்மரங்களை ஒழித்துக் கட்டியதில், நம் தமிழக அரசியல்வாதிகளுக்கும் – ஒரு அடிமட்ட அகற்றாளனாக – சந்தனசெம்மரப் போராளியாக உறுதுணையாக இருந்திருக்கிறார். இந்த, அயோக்கிய திராவிடப் பட்டப்பகற்கொள்ளைகளுக்குப் பின்னர்தான் ஆந்திராவும் கர்நாடகாவும் போகவேண்டிவந்தது இவருக்கு – ஏனெனில், துப்புறவாக ஜவ்வாது மலைகளையே ஒரு மரமுமில்லாமல் மொட்டையடித்துவிட்டனர்கள், நம் செல்ல உதிரிகள்! (பார்க்க: அக்கால இசுடாலினாரின் மறைமுக ஜவ்வாது சந்தனக் கொள்ளை பற்றிய பதிவு) பின்னர் ஆந்திரத்து காளஹஸ்தி, பத்ராசலம் மலைத்தொடர்களிலும் இந்தக் கயமைத் தொழிலைச் செய்திருக்கிறார்.

ஆனால் – திருமணம் ஆனதும், மனைவியின்  ‘தொல்லை’யால் (இது அவர் உபயோகித்த பதம் – ஆனால் அந்த மனைவி மிகுந்த புத்திசாலி எனத்தான் சொல்லவேண்டும்) இந்த பக்கத்து மாநிலக் காடுகளைத் தமிழ்மொட்டையடிப்பதை விட்டுவிட்டு. ஒழுங்காக பெங்களூர் பக்க சப்போட்டா+கொய்யா தோட்டங்களைக் குத்தகை எடுக்கும் தொழில் செய்து கொண்டிருந்தார். நானும் இவரிடம் சுமார் மூன்று மாதங்கள் போல, எனக்கு அவகாசம் கிடைக்கும்போதெல்லாம் – விட்டுவிட்டு துணைத்தோட்டக்காரனாக இருந்திருக்கிறேன். நீர் பாய்ச்சுவது, கிளறிவிடுவது, களை பிடுங்குவது, பழத்தைப் பதமாகப் பறிப்பது, காலையில் மண்டிக்குச் செல்வது (பெங்களூர் கொசகொசா கேஆர் மார்க்கெட் மண்டிகளுக்குக் காலையில் சென்றால் – அது ஒரு தனியான அண்டவெளியாகவே இருக்கும் – அது வேறொரு உலகம்தான்!) என பலப்பல அனுபவங்கள். அவர் சுவாரசியமான மனிதர்தான். நைச்சியமாகக் கொஞ்சம் கொஞ்சமாகக் கடன்வாங்கி, அதனை ரூ15,000த்துக்கும் மேலே செல்லவைத்த சாமர்த்தியம் வேறு! ;-)

ஆனாலும் –  சுமார் ஐந்து  வருடங்கள் முன், இவருடனான பழக்கத்தை முழுவதுமாகத் துண்டித்தேன். அவர் கொடுக்கவேண்டிய பாவப்பணத்தையும் வேண்டாமென்று கோபத்துடன் சொல்லிவிட்டேன். ஏனெனில் – அவர் குடிமயக்கத்தில்/மப்பில் உணர்ச்சிகரமாக விவரித்த ஒரு கூசும், அசிங்கமான சம்பவம். மப்பு தெளிந்தவுடன், இரு நாட்களுக்குப் பின், மறுபடியும் அதனைப் பற்றிக் கேட்டபோதும், அவர் வெகு சாதாரணமாக, தான் செய்தது சரி என்பதுபோலப் பேசினார். எனக்கு வெறுத்துவிட்டது. அதனால்தான். (இந்நிகழ்ச்சியின் விவரத்திற்குப் பின்னர் வருகிறேன்)

-0-0-0-0-0-0-0-

நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இந்த செம்மர அறுப்பாளர்கள் – பாவப்பட்ட தொழிலாளிகள் அல்லர். அயோக்கியர்கள் தாம். அவர்களுடைய கடத்தல்/அரசியல் முதலாளிகளுடன் சேர்த்து ஏகோபித்து அழித்தொழிக்கப் படவேண்டியவர்கள்தான். ஆகவே – போக்கத்துப்போய் சும்மா உச்சுக்கொட்டிக்கொண்டு, மனிதவுரிமை அற்பத்தனங்களில் ஈடுபடுவதென்பது என்பது எனக்கு ஒத்துவராது. ஏன்?

இந்த மரத் திருடர்கள் – முழு ஒப்புமையுடன்தான், அதில் உள்ள சகல சாதகபாதகங்களையும் அறிந்துதான் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். முன்னர் பலமுறையும் இத்தொழிலில் ஈடுபட்டு துட்டு தேர்த்தியிருக்கிறார்கள். இப்படிச் சம்பாதித்த பணத்தையும் குடியிலும் கூத்திலும்தான் செலவழித்திருக்கிறார்கள்.

அவர்களுடைய குடும்பங்களுக்குத் தெரியாமல் இவற்றை இந்தத் திருடர்கள் செய்யவில்லை. அனைத்துக் குடும்பங்களுக்கும் தெரியும், தங்கள் குடும்பத்தலைவனின் லட்சணம். ஆனால், பைசா வருகிறதே! (இது நம் திராவிடத் திலகங்கள் அனைவருக்கும் பொருந்தும்)

வெட்டும் திறனுக்கேற்ப ஒரு நாளைக்கு ரூ4000-6000 போல கூலி. 10 நாட்கள் முதல் சுமார் 2-3 வாரங்களுக்கு காட்டிலேயே இருப்பார்கள். சாப்பாடு​ + ‘தண்ணி’ எல்லாம் இலவசம். கங்காணி சொல்படி அறுக்கப்பட்ட மரங்களை, தூக்கிக்கொண்டுபோய் லாரிகளில் சேர்த்துவிடவேண்டும். இவற்றைத் தவிர, ஒரு ‘சுற்றுப் பயணம்’ சரியாக முடிந்தால் ரூ 20,000 வரை ஊக்கபோனஸ். ஒருவன் ஐடி சேவை நிறுவனங்களில் சுமார் 15 வருடமாவது  ‘குப்பை கொட்டினால்’ தான் இத்தொகையைச் சம்பாதிக்கமுடியும்!

இவர்கள் ஆந்திர/கர்னாடக காட்டுப் பகுதிகளுக்குச் செல்லும்போது, ‘உடல் சூட்டைத் தணித்துக்கொள்ள’ அங்குள்ள பாவப்பட்ட, படுபயங்கர ஏழ்மையில் உழலும் மலைவாழ் பெண்களை  (எனக்கு, இத்தொழிலின்மீது வெறுப்பு இல்லை; வேசைத் தொழிலின் சமூகப் பங்களிப்புகளை, அதன் தேவைகளை – ஒப்புக்கொள்ளமுடியாவிட்டாலும், உணர்ந்தவன் நான். பொத்தாம்பொதுவாக இவர்களை ஒழுக்கவியல் பார்வையில் சுட்டெரிப்பது, எனக்கு ஒவ்வாது) அணுகுவதும் வெகு சாதாரணமாக நடக்கும் ஒரு விஷயம்.  இதிலும் பல தகிடுதத்தங்கள் செய்வார்கள். காரியத்தை முடித்துக்கொண்டு, பைசா கையில் இல்லை என்று சொல்வது, அப்பெண்களின் மலைவாழ் உறவினர்களை துப்பாக்கிகாட்டி மிரட்டுவது, பெண்களை மரம்வெட்டும் ஆயுதங்களைக் காட்டி மிரட்டிப் பணியவைப்பது என்று இதில் பலவகை.

குறிப்பு: சுமார் 15 வருடங்களுக்குமுன் நடந்த விஷயம் இது; இம்மாதிரி ஆந்திரச் செம்மர அகற்றல்களின்போது ஒரு சமயம்,  ‘சூட்டைத் தணித்துக்கொள்ள’ என் கடந்தகால நண்பர் அல்லாஹ் பக் ஷ், மாளா வறுமையில் வாடும் ஒரு காட்டு எல்லையோரக் குடியிருப்புக்குச்  சென்றிருக்கிறார். அங்கு அவருக்குக் கிடைத்தது 14 வயதேயான ஒரு சிறுமி, ஒரு குழந்தை! பேச்சுவார்த்தையில், காரியத்திற்கு 20 ரூ என முடிவானது. ஆனால் தன் காரியம் முடிந்தவுடன், வெளியில் காத்திருந்த தன் நண்பர்களையும் (மேலதிகமாக 5 பேர்!) கூடாரத்துக்குள்ளே அழைத்து, ‘யாம் பெற்றபேறு தம் நட்பும் பெறுக!’ என விருந்தோம்பல் செய்திருக்கிறார். பாவப்பட்ட சிறுமியானவள் ஆறு பொறுக்கிகளின் தொடர் வன்புணர்ச்சியால் வாந்தி-மயக்கம். பிறப்புறுப்பு கிழிந்து ரத்தப் பெருக்கு. இருந்தாலும் இந்த அயோக்கியர்கள் கண்ணும்கருத்துமாக காரியத்தை முடிப்பதிலேயே குறியுடன் இருந்திருக்கிறார்கள்.

“ஆனாக்க, சொன்னசொல் தவறாம அவ மார்மேல இருவது ரூவா வெச்சிட்டுதான் வந்தேன்!”  இதனைக் கேட்டதும் எனக்கு மூளை பயங்கரமாகக் கலங்கிவிட்டது. இரண்டு நாட்கள் போல அவரையே வெட்டிப் போட்டு தோட்டத்தில் புதைத்துவிடலாமா என வெகு தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்துவிட்டு, ஒருவேளை மப்பில் உளறினாரோ என்ற சந்தேகத்தில் மறுபடியும் அவரைக் கேட்டால் – அவர் சொன்னது – “எய்ட்ஸை வெச்சிக்கிட்டு யாருக்கு கொடுக்காலாம்னிட்டு அலையற பொட்டச்சிங்களுக்கு நீங்க ஏன் சார் பரிஞ்சிக்கினு வர்ரீங்க? அதுங்களுக்கு இருவது ரூபாவே அதிகம்!”

கொலை செய்யாமல், ஏன், அவரை உதைக்கக்கூடச் செய்யாமல் (ஏனெனில், அவர் மனைவியை எனக்கு நன்றாகத் தெரியும். கூடவே, அவருடைய இரு பாவப்பட்ட ‘பொட்டச்சி’ பெண்பிள்ளைகளையும்; இவர்களுக்கு அந்த 14வயதுச் சிறுமியின் கதி வரவேகூடாதுதான்!) — அத்துடன் அவர் உறவைத் துண்டித்தேன்.

இச்சமயம் கொஞ்சம் யோசித்தால், இந்த அல்லாஹ் பக் ஷ் அவர்களுக்கு நான் ஒருவிதத்தில் நன்றி சொல்லத்தான் வேண்டும். ஏனெனில் இவரைச் சந்திக்கும் வரை – விடாமல் ஐந்து வேளை தொழுகை செய்பவர்களை, வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் மசூதி சென்று வழிபடுபவர்களையெல்லாம் கண்ணியமானவர்கள், முடிந்தஅளவு ஆன்மிகத்தில் ஈடுபட்டு நேர்மையாக அன்றாடவாழ்க்கையை நடத்திக்கொண்டு செல்பவர்கள் என நினைத்திருந்தேன். ஆனால் இவர் போன்ற பலரும் சடங்குரீதியாக இஸ்லாம் சமுதாயத்தில் இருந்துகொண்டு, இரட்டைவேடம் போடுபவர்கள்தாம் எனத் தெரிந்துகொண்டது ஒரு முக்கியமான படிப்பினைதான்.
-0-0-0-0-0-0-0-

எனக்குத் தெரிந்து, கடந்த 15 வருடங்களில் இந்த தமிழக மரமறுப்பு வெறியர்கள், குறைந்த பட்சம் 3 (4?) ஆந்திர வனத்துறை அதிகாரிகளைக் கொன்றிருக்கிறார்கள். இதில் ஒருவரை (1-2 வருடங்கள்முன் நடந்தது என நினைவு) மரத்தில் கட்டி கல்லாலும் கட்டையாலும் அடித்துமட்டுமே படுகுரூரமாகக் கொன்றார்கள். இதைத் தவிர, குறைந்தபட்சம் ஒரு ஆந்திர மலைவாழ் இளைஞரை உயிருடன் தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறார்கள். இவர்களைக் கேள்விகேட்ட பல ஆந்திரர்களை அடித்துதைத்து அட்டூழியம் செய்திருக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து தமிழக அரசும் ஆந்திர அரசும் – மாய்ந்துமாய்ந்து, செம்மர அறுத்தல்களுக்கெதிராக பலவிதங்களில், பல தளங்களில் உழைத்துக்கொண்டேயிருந்திருக்கிறார்கள். இந்த ஒரு விஷயத்தில் இவ்விரண்டு அரசுகளையும் குற்றம் சொல்லவே முடியாத அளவில் அவ்வளவு பணிகள் செய்திருக்கிறார்கள். சாம தான பேத தண்டம் என அனைத்து வகைமுறைகளையும் உபயோகித்திருக்கிறார்கள்.

இதைத் தவிர, ஆந்திர அரசு சட்டமெல்லாம் இயற்றி – காட்டில் நுழைந்தால் பெரும்அபராதம், காட்டிற்குள் மரமறுத்தால் சுடப்படுவீர் என்றெல்லாம் ஷரத்துகள் வைத்து – இவற்றையும் தெளிவாக மக்களிடம் கொண்டுசேர்க்க ஆந்திராவிலும் தமிழகத்தின் திருவண்ணாமலை-வேலூர்  மாவட்ட மலைவாழ் பகுதிகளிலும் தண்டோரா போட்டு, பிட் நோட்டீஸ் கொடுத்து, விழிப்புணர்வு நிகழ்வுகள் வைத்து, ஆவணப் படங்களைக் காட்டி, வீதி நாடகங்களை நடத்தி, வீட்டுக்கு வீடுபோய் செய்திகளைச் சேர்த்து – அசாத்தியமாக இவ்விஷயத்தில் நடந்து கொண்டிருக்கிறார்கள். (இப்படி ஜவ்வாதுமலை ஜமுனாமருதூர் கிராமத்தில் நடந்த ஒரு வீதி நாடக நிகழ்வுக்கு நான் போயிருக்கிறேன்; காவலூர் பக்க குக்கிராமம் ஒன்றில் வனத்துறையினர் எச்சரிக்கை பிட் நோட்டீஸ்களை அளிப்பதைப் பார்த்து, அவற்றில் ஒன்றை நான் பெற்றுக்கொண்டுமிருக்கிறேன்)

தொழில்முறை திருட்டு மரம்வெட்டிகளின்  பெண்மணிகளை, மனைவியர்களைக் குறிப்பாகத் தொடர்புகொண்டு – சட்டத்தை மீறி மரம் வெட்டப் போனால், உங்கள் கணவர்களின் உயிர்போய் விடும் என்றெல்லாம் பலமுறைகள் எச்சரித்திருக்கிறார்கள்…

எனக்குத் தெரிந்து கடந்த 4 வருடங்களில் – குறைந்த பட்சம் 7 முறையாவது – பஸ்லோட் லாரிலோட்என  முழுவதும் தமிழ்த் திராவிட மரமகற்றாளர்கள் இருந்த கும்பல்களை நாகலாபுரம் பகுதி ஆந்திர வனத்துறையினர், காவல் துறையினர் (அடிக்காமல், மிரட்டாமல் வெறும் அறிவுரை மட்டும் சொல்லி) சாத்வீகமாகத் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். தமிழக வனத்துறையினரும் தம் பங்கிற்குப் பலமுறை இப்படி மரமறுப்பு கும்பல்களுக்கு அறிவுரை சொல்லி, அவர்கள் கிராமங்களுக்குத் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.

ஆனால் – எல்லாம், திராவிடன் காதில் ஊதிய அறிவுரைச் சங்குதான்! ஏனெனில் அயோக்கியக் கொள்ளைதானே அவன் தொழில்? அப்பாவிப் பெண்களை வன்புணர்ச்சி செய்வதுதானே அவன் வழக்கம்??

ஆக – அரசுகள் எடுத்த இத்தனை முயற்சிகளுக்கும், மாய்ந்துமாய்ந்து கொடுத்த அறிவுரைகளுக்கும் பிறகும் தொடர்ந்து திருடிக்கொண்டு பாலியல் பலாத்காரம் செய்துகொண்டு இருந்திருக்கிறார்கள், நம் பேராசைக்கார தமிழக மரம் வெட்டிகள்.

சரி. சொல்ல கொஞ்சம் அசிங்கமாகவும் சினிமாத் தனமாகவும் இருந்தாலும் – நம் தமிழக, திராவிட மிருகங்கள் — ஆந்திரர்களை, ஆந்திரத்தை, காடுகளை – தொடர்ந்து  கற்பழித்ததற்குக் கூலிதான் இந்தத் தண்டனைகள். Those who live by the sword, die by the sword! Yes. நான் பல சமயங்களில், மரண தண்டனையின் அவசியத்தை உணர்ந்தவன். (மரணதண்டனையின் அவசியம்   28/11/2012)

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

ஆமென்.

பின்குறிப்பு: இந்த அயோக்கியர்களின் ‘இழப்பிற்கு’, நம் லேம்டக் தமிழக ‘பன்னீர்செல்வம்’ அரசு உதவிப்பணம் வேறு கொடுத்திருக்கிறது என அறிந்துகொண்டு இறும்பூதடைந்தேன். திராவிடத் தமிழகத்துக்கு வெட்கமோ, சூடுசொரணையோ இல்லவேயில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

இதைவிட மோசம், பாமக கட்சியின் டாக்டர் ராமதாஸ் – சக வன்னியர்கள் என்ற பார்வையில், இந்தக் கொள்ளைக்காரர்களில் சிலருக்கு மட்டும் உதவி செய்ய நினைப்பது!

இவற்றையெல்லாம் விட அசிங்கமான நிகழ்வு – மனிதவுரிமை, விடலைத்தன வினவு இயக்கங்களெல்லாம் – பிலாக்கணம் வைத்து ஆந்திரர்களையும் காவல்துறையினரையும் வசைபாடுவதுதான்! ஏண்டா தொளில்முறை மனிதவுரிமைக்காரன்களா, ஒரு காரணமுமில்லாமல் ஆந்திராகாரன் ஒழிக்கப்பட்டால், கற்பழிக்கப்பட்டால், மரம் வெட்டப்பட்டால், ஆந்திரா வன அதிகாரியும் கொல்லப்பட்டால் – அதெல்லாம் பரவாயில்லையா?

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல நடந்த கேவலம் – நம்மூர் திராவிட விசிலடிச்சான் குஞ்சுகள், தமிழ் உணர்வாளர்களெல்லாம் –  இணையத்தில் பொங்கியெழுந்து போராளித்தன வாந்தியெடுத்ததுதான்.

இவற்றிற்கு அப்பாற்பட்டு எனக்கு மிகவும் ஆச்சரியம் தந்த விஷயம் – ஒரு கேள்விதான், அதாவது: ஏண்டா பூவுலகின் நண்பர்களா! நீங்களாவது மனிதவுரிமையப் பத்திப் பேசாம மரவுரிமையைப் பத்திப் பேசியிருக்கலாமேடா! வொங்க வூட்ல மரச்சாமான் அல்லாம் கீதுன்னிட்டு குற்றவுணர்ச்சியோட நேர்மையா வெஷயங்களப் பாக்கற ஜாதியில்லயேடா நீங்க! சந்துல சிந்து பாடிக்கினே இஷ்டத்துக்குப் போராடிக்கினே இருப்பீங்களேடா! வொங்க்ளுக்கு இன்னாடா ஆச்சி??

 -0-0-0-0-0-0-0-
நம் தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளில் ஒன்று என்னவென்றால் – நமக்கு, ‘தொன்றுதொட்டு’ கடைந்தெடுத்த அயோக்கியர்களை, மாபாவிகளை, அற்பர்களைத் தான் ஆராதித்து வழிபட்டு புல்லரிப்பு அடையும் வழக்கம். இப்பதர்களுக்கு, திராவிட இயக்கம் சாராத எடுத்துக்காட்டுகள்: பிரபாகரன், வீரப்பன் வகையறாக்கள். நம்மைச் சொல்லியும் குற்றமில்லை – நம் செல்ல திராவிட இயக்கம், நம் மூளைகளைக் காயடித்திருக்கும் விதமே அலாதிதான்!

28 Responses to “சந்தன/செம்மர அகற்றல்கள் (அறுத்தல்களல்ல, கவனிக்கவும்), என்கவுன்டர்கள், மனித உரிமைகள்: சில குறிப்புகள்”

  1. vijayaraghavan Says:

    அய்யா,
    அருமையான பதிவு. உண்மையில் நீர் தான் “அஞ்சா நெஞ்சர் “. இந்த மாதிரி தைரியமாக எழுதுவதற்கு நீர் அடிக்கடி சொல்வது போல மகோமகா துணிச்சல் வேண்டும்.
    பொதுவாக நம் தமிழ்நாட்டில் இருவிதமான நியாய தர்மம் இருந்துவருகிறது. கர்நாடகா மாநிலத்திலிருந்து வரும் சாக்கடை தண்ணீர் காவிரியில் கலக்கக் கூடாது. ஆனால் நாம் மேட்டுரில் இருந்து கருர் வரை சகல கழிவுகளையும், கர்மாந்திரங்களையும் நம் டெல்டா தமிழ் இனங்களுக்கு கலந்து உடலாம். அது தப்பில்லை.
    தமிழ் மீனவர்கள் எல்லை தாண்டி போய் மீன் பிடித்தாலும் ஸ்ரீலங்கா ஒண்ணும் செய்யக் கூடாது. ஏன்னா கடல் “டம்ளர் ” களுக்கே சொந்தமானது.
    தடை செய்யப்பட்ட , அழிவை உண்டாக்கும் கெமிக்கல் தொழிற்
    சாலைகள் இருந்தாலும் , ஊரை நாற வைக்கும் கோழிப்பண்ணைகள் இருந்தாலும் நமக்கு கவலையில்லை. வருமானம் வந்தால் போதும்.
    எங்கெல்லாம் சட்டம் தர்மம்,
    மீறப்படுகிறதோ அங்கு நம் ” டம்ளர் ” கைவரிசை கண்டிப்பாக உண்டு.
    வாழ்க நம் அறியாமை, வளர்க நம்மை ஏமாற்றுவோரின் செல்வம். ஹும்…….

  2. Anonymous Says:

    ராம், இருக்கும் இடத்தை அழித்து இவ்வளவு காசு சேர்த்து என்ன செய்ய போகிறார்கள் :(

  3. ravi Says:

    சாருக்கு ஒரு தமிழ் துரோகி பட்டம் பார்சல் …

  4. PROUD DRAVIDIAN Says:

    // எனக்குத் தெரிந்து, கடந்த 15 வருடங்களில் இந்த தமிழக மரமறுப்பு வெறியர்கள், குறைந்த பட்சம் 3 (4?) ஆந்திர வனத்துறை அதிகாரிகளைக் கொன்றிருக்கிறார்கள். இதில் ஒருவரை (1-2 வருடங்கள்முன் நடந்தது என நினைவு) மரத்தில் கட்டி கல்லாலும் கட்டையாலும் அடித்துமட்டுமே படுகுரூரமாகக் கொன்றார்கள்.

    IS THERE ANY PROFF FOR ALL THESE FALSE ALLEAGATIONS?

  5. PROUD DRAVIDAN Says:

    // (பார்க்க: அக்கால இசுடாலினாரின் மறைமுக ஜவ்வாது சந்தனக் கொள்ளை பற்றிய பதிவு)

    IS THERE ANY PROFF FOR ALL THESE FALSE ALLEAGATIONS?

  6. PROUD DRAVIDAN Says:

    MANIDABIMANAM ATRAA PAPPAARA DUROKI

  7. PROUD DRAVIDAN Says:

    DALAPADI STALIN VAALGA
    NEXT CM STALINDAN APPA ONAKKU APPU

  8. KVS Says:

    அனானி அண்ணே , அதெல்லாம் விடுங்க.. அம்மாவை எதிர்கொள்ள தில்லு இல்லாமல் தலைவர் அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறார், தளபதி ஹாங்காங் சென்று உள்ளாராம் ..இந்த லட்சணத்தில் , எதற்கு இந்த வீராப்பு எல்லாம்..

  9. KVS Says:

    மன்னிக்கவும் . .அனானி அல்ல PROUD திராவிடன்

  10. சான்றோன் Says:

    உங்கள் பாணியில் ஃபேஸ்புக் எனும் எழவில் கிட்டத்தட்ட ஒருவார காலம் இந்த கொள்ளைக்கும்பலை மிக கடுமையாக கண்டித்து பதிவுகள் செய்தேன்…. .கிட்டத்தட்ட பத்து கட்டுரைகள் எழுதினேன்…. அதற்கு எத்த‌னை கோபமான எதிர்வினைகள்….எத்த‌னை சாபங்கள் ,அவதூறுகள் , பொங்கல்கள்…. கடவுளே….. தமிழகம் என்னதான் ஆகப்போகிறதோ?


    • அய்யா, மிக்க நன்றி. அவற்றை, என்னைப் போன்ற ஃபேஸ்புக் அங்கத்தினரல்லாதவர் படிக்கமுடியும் என்றால், சுட்டிகளை அனுப்பவும்.

  11. சான்றோன் Says:

    என்னுடைய சில பதிவுகளின் லிங்க் இதோ……. https://www.facebook.com/permalink.php?story_fbid=808735502553579&id=100002514108026

  12. சான்றோன் Says:

    Saravana Kumar
    April 8 ·
    த‌மிழர்களாகிய நமக்கு இயற்கை வளங்களை அழிப்பதில் எந்த குற்ற உணர்வும் இல்லை….
    ஆற்று மணல் , தாது [ கடல் ] மணல் , கிரானைட் , சந்தண மரம் , நட்சத்திர ஆமைகள் , பவளப்பாறைகள்….இப்படி எது கிடைத்தாலும் கொள்ளையடித்து கடத்தல் செய்வோம்….
    அதனால் இயற்கைச்சூழலுக்கு ஏற்படும்பாதிப்பைப்பற்றி எந்த சொரனையும் நமக்கு கிடையாது….
    அதற்காக மற்ற‌வனெல்லாம் நம்மைப்போலவேவா இருப்பான்….?
    அவனவன் மாநிலத்தின் இயற்கை வளத்தை காப்பாற்ற எல்லா நடவடிக்கையும் எடுக்கத்தான் செய்வான்…..
    நமக்கு இருக்கவே இருக்கு நம்ம ஊர் கடத்தல் பிழைப்பு…. அதையே செய்யவேண்டியதுதானே?
    Like · Comment ·
    Share

  13. சான்றோன் Says:

    Saravana Kumar
    April 8 ·
    ஆமாய்யா….. அது போலி என்கவுன்ட்டர் தான்……
    பச்சை படுகொலைதான்…. நிக்க வச்சுத்தான் சுட்டுக்கொன்னாங்க….
    அதுக்கு இப்ப என்ன?
    இதுக்கு முன்னாடி நம்ம ஊர்ல என்கவுன்ட்டர் நடந்ததே இல்லையா? என்கவுன்ட்டர் என்றாலே போலிதான்…
    வேளச்சேரியில , நம்ம ஊர் போலீஸ் மேற்கு வங்க கொள்ளையர்களை போட்டுத்தள்ள‌லையா?
    அதுக்கப்புறம் இன்னைக்குவரை வங்கி கொள்ளை எதுவுமே நடக்கலை இல்லையா? அதுதான்…அதுக்குத்தான்….
    இனிமே எவனாவது அந்தபக்கம் போவானா?
    எவனுக்கு எந்த பாஷையில பேசுனா புரியுமோ, அந்த பாஷையிலதான் பேசனும்….
    மயிலே மயிலேன்னா எந்த மயில் இறகு போட்டிருக்கு?

  14. சான்றோன் Says:

    Saravana Kumar
    April 9 ·
    கமென்ட்களில் இருந்து………
    // ” வறுமையில் செம்மை ” அப்படின்னு ஒரு முதுமொழி கேட்டிருக்கீங்களா? உயிரே போனாலும் சரி…. தப்பான வழியில் சம்பாதிக்கமாட்டேன் அப்படின்னு வாழறவன் தான் மனுஷன்….
    இப்படியே மரம் வெட்டினா தப்பா? கஞ்சா கடத்துனா தப்பா? அடுத்த நாட்டுல போய் மீன் பிடிச்சா தப்பா?ன்னு கேக்குறதாலதான் தமிழன் போற பக்கமெல்லாம் செருப்படி வாங்குறான்….
    வேலைவாய்ப்பு இல்லைன்னா திருட்டு மரம் வெட்டப்போவாங்களா….?திருப்பூருக்கு வாங்க…. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பிழைக்க வந்து , நியாயமாக உழைத்து பிழைக்கும் ஆயிரக்கணக்கானோரை காட்டுகிறேன்.. இன்னைக்கும் திருப்பூரில் திரும்பிய பக்கமெல்லாம் ஆட்கள் தேவை போர்டு தொங்கிக்கிட்டுதான் இருக்கு….
    திருப்பூரில் , கணவன் மனைவி இரண்டு பேரும் வேலைக்குப்போனா குறைந்த பட்சம் ஐநூறு ரூபாய் வருமானம் உறுதி…மாதம் பதினைந்தாயிரம் ரூபாய்.. ஒரு குடும்பம் கவுரமாக பிழைக்க இந்த வருமானம் போதாதா?
    ஒருத்தரோட ஒரு மாத சம்பளத்தை ஒரே நாளில் சம்பாதிக்கனும்னு ஆசைப்பட்டா , சாகத்தான் வேணும்…
    எங்கேயோ , நேபாளத்தில் இருந்து , பீகார் , ஒரிசா, நாகாலாந்து , மணிப்பூரில் இருந்தெல்லாம் வந்து எங்கள் ஊரில் உழைத்துப்பிழைக்கிறார்கள்…
    மேலே நான் கொடுத்த லிங்க்கப்பார்த்தீங்கல்ல..? அவங்களுக்கு குடும்பம் , குழந்தை குட்டி இருக்காதா? மரத்துல கட்டி வச்சு ,கல்லால அடிச்சு கொல்லும்போது அந்த ரேஞ்சருக்கு குளுகுளுன்னு இருந்திருக்குமா?
    ரேஞ்சர அடிச்சுக்கொன்னா தப்பில்லை…. அவன் திருப்பி சுட்ட்டாத்தான் தப்புன்னெல்லாம் என்னால பேச முடியாது….///

  15. சான்றோன் Says:

    Saravana Kumar
    April 9 · Edited ·
    ” ஊருக்கு மேற்கே ஒரு உடங்காடு இருக்கிறது 96 ஏக்கரில். பிரமாண்டமான – ராட்சதக்குடைகள் போன்ற உடைமரங்கள் கொண்டது. கோடை மழை எங்களுக்கு கால் ஊன்றி இறங்கிவர இந்த உடங்காடுதான் உதவும்..காலமழை இறங்கிவர குருமலையும் , கோடை மழைக்கு உட‌ங்காடும் என்று இருந்ததால் சரித்திரப்பிரசித்தி பெற்ற தாதுவருஷப்பஞ்சம் [ 1876ல் வந்து 12 ஆண்டுகள் நீடித்தது..]எங்கள் கிராமத்துக்கு வரமுடியவில்லை…. ” இடை நாடெல்லாம் பஞ்சமானாலும் இடைசெவல் சத்திரப்பட்டிக்குப்பஞ்சம் வராது ” என்று எங்கள் பெரியவர்கள் ,மாரை நிமிர்த்தி சொல்லிவந்தார்கள்….
    சனியம்போல ரண்டாவது உலகப்போர் வந்தது….
    மனிதர்களை மட்டும் அது திங்கவில்லை…மரங்களையும்தின்றது….அதுவரை பெட்ரோலில் ஓடிய எந்திரங்களெல்லாம் கரியில் ஓடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது…நிலக்கரியைத்தின்று வாழ்ந்த எந்திரங்கள் கூட சாதாரண மரக்கரிக்கு இறங்கிவர வேண்டியதாகிவிட்டது.. அதனால் காடுகளிலும் மலைகளிலும் கரிக்காக மரங்கள் வெட்டுகிற காரியம் அப்போது தொடங்கியதுதான்….
    கரிக்காக மனிதர்கள் தொத்துநோய்க்கிருமிகளாக மாறி மரங்கள்மேல் விழுந்து அவற்றைப்பூண்டோடு அழித்தார்கள்.மனிதர்களை காணும்போதெல்லாம் மரங்கள் பயத்தால் நடுங்கின. இதுநாள்வரை நிலைத்துவந்த மரத்துக்கும் மனிதனுக்குமுள்ள தொந்தம் , பாசம் எல்லாம் ஒழிந்தது. கோடாலியை தோளில் போட்டுக்கொண்டு அன்றிலிருந்து அலைய ஆரம்பித்துவிட்டான் மனிதன்.மழை என்கிற குழந்தை பூமியில் கால்வைத்து இறங்குவதற்காக வைத்திருந்த பச்சைப்படிகளை இவன் அக‌ற்றிவிட்டான்.பார்க்கும் இடமெல்லாம் நெருப்பும் , புகை மூட்டங்களுமாகத்தான் தெரிந்தன…மரங்களின் துயர‌அழுகை மனிதனின் காதுகளில் விழாமலே போய்விட்டது….இப்போது எங்கள் உடங்காட்டில் மருந்துக்கு ஒரு உடைமரம் கூட கிடையாது. அதன்பிறகு கரிசல்காடுகளில் உள்ள‌ மரங்களையும் வெட்டி ”சாப்பிட ” தொடங்கினார்கள்… உட்கார ஒரு நிழல்கூட இல்லாமல் ஆகிவிட்டது..
    இப்போதெல்லாம் மழைக்கால‌ங்களில் சூல்மேகங்கள் , நிற்காத பொசல்வண்டித்தொடர்போல எங்கள் நிலம் என்னும் ரயில்கெடிகளைத் ” துருமெயில்” வேகத்தில் கடந்து ஓட ஆர‌ம்பித்துவிட்டது. நாங்கள் ஆகாசத்தைப்பார்த்து , கைகளை உயர்த்தி ”குய்யோமுறையோ” என்று கூக்குரலிட்டதுதான் மிச்சம்.
    கிருஷ்ணப்பருந்து தூக்கிக்கொண்டு பறந்துபோகும்போது தவறிவிழும் கோழிக்குஞ்சு போல, இப்போதெல்லாம் வேளைகெட்ட வேளையில் தவறுதலாக மழைபெய்வது உண்டு.
    அடைமழைக்காலங்களில் பச்சைப்போர்வை போர்த்திக்கொண்டு தூங்கும் இந்த மலை அப்பன் மீது வந்து மேகக்குழந்தைகள் படுத்துக் கண் உறங்கும் காட்சியை இப்போது எங்களால் பார்க்கமுடியவில்லை..அவை எங்களுக்கு கனவுகளாகிவிட்டன.
    மரம் இழந்ததால் மழை இழந்தோம் என்கிற விஷயம் எங்கள் மரமண்டைகளில் தோன்ற‌ பலவருஷங்கள் பிடித்தன..காலதேச வர்த்தமானங்களினால் கரிசல்விவசாயம் நொடித்து , நிலங்கள் தரிசு விழ ஆரம்பித்தது. என்ன உக்கிக்கரணம் போட்டாலும் இனிமேல் கரிசல் விவசாயம் என்பது நடக்காது என்கிற நிலமை வந்துவிட்டது…”
    நன்றி – கரிசல் காட்டுக்கடுதாசி – திரு. கி.ராஜநாராயணன் அவர்கள்….
    மழை இல்லை ,…விவசாயம் இல்லை….வேலை இல்லை….அதனால் தான் ” அப்பாவி தொழிலாளிகள் ” மரம் வெட்டச்சென்று குண்டடி பட்டார்கள் என்று கொள்ளைக்கும்பலுக்கு வக்காலத்து வாங்கும் அனைத்து நண்பர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்…..

  16. ravi Says:

    அருமை சான்றோன் .. இந்த உடங்காடு எங்கு உள்ளது ??

    • சான்றோன் Says:

      திருநெல்வேலிமாவட்டம் – கோவில்பட்டி அருகே உள்ள இனாம் கரிசல்குளம் எனப்படும் இடைசெவல் சத்திரப்பட்டி…. கரிசல்காட்டுக்கடுதாசி எழுதிய எழுத்தாளர் திரு. கி.ராஜநாராயணன் அவர்களின் சொந்த ஊர்…..

  17. சான்றோன் Says:

    சில பதிவுகளின் லிங்க்குகளை என்னால் கொடுக்க முடியவில்லை [ தெரியவில்லை ] எனவே அந்த பதிவுகளை காப்பி , பேஸ்ட் செய்துள்ளேன்…. மன்னிக்கவும்….

  18. poovannan73 Says:

    உங்கள் பதிவுகளிலேயே மிகவும் வருத்தத்தை தந்த பதிவு இது தான்.காவல்துறையினர்,ராணுவத்தினர் என்றாலே பாலியல் வன்முறையாளர்கள்,கொள்கைக்காரர்கள்,பஞ்சமாபாதகர்கள் என்று சிலர் எழுதுவதை போல குற்றம் என்று கருதப்படும் செயல்களை செய்யும் அனைவரும் பஞ்சமாபாதகர்கள் என்று அடித்து விட்டிருக்கிறீர்கள்.இவ்வளவு வெறுப்பும்,குரோதமும் வன்மமும் உள்ளவருடன் என்ன வாதிடுவது என்று முடிவு எடுத்து இருந்தேன்.

    நண்பர் சான்றோன் போல முகநூலில் இந்நிகழ்வை பற்றி போடப்பட்ட என் பதிவு

    அது என்ன சார் இஸ்லாமிய மதத்தை சார்ந்த உங்கள் மரம் வெட்டும் முன்னாள் நண்பனோ ,கணினி துறையில் இருக்கும் இஸ்லாமிய நண்பனோ ,வீட்டு வாடகைக்கு வந்த இஸ்லாமியரோ அனைவரும் மிகவும் கொடூரர்களாகவே இருக்கிறார்கள்.நல்லவனை கண்டுபிடித்து கொண்டு வா என்ற துர்யோதனன் தருமன் கதை தான் நினைவுக்கு வருகிறது.

    • க்ருஷ்ணகுமார் Says:

      மேஜர் பூவண்ணன் சார், இது உங்களுக்கே அடுக்குமா?

      \\ அது என்ன சார் இஸ்லாமிய மதத்தை சார்ந்த உங்கள் மரம் வெட்டும் முன்னாள் நண்பனோ ,கணினி துறையில் இருக்கும் இஸ்லாமிய நண்பனோ ,வீட்டு வாடகைக்கு வந்த இஸ்லாமியரோ அனைவரும் மிகவும் கொடூரர்களாகவே இருக்கிறார்கள்.நல்லவனை கண்டுபிடித்து கொண்டு வா என்ற துர்யோதனன் தருமன் கதை தான் நினைவுக்கு வருகிறது. \\

      ஆஜாத் ஹிந்த் ஃபௌஜினைச் சார்ந்த கர்னல் நிஸாமுத்தீன் சாஹேப், ஜாஃபர் ஸரேஷ் வாலா சாஹேப், மோதர்மா ஆஸீஃபா கான் சாஹிபா, டாக்டர் அய்ஜாஸ் இல்மி சாஹேப், ஜெனாப் ரயீஸ்கான் அஸீஸ்கான் பதான் சாஹேப், ஜெனாப் மொஹம்மத் சிஷ்டி,

      இத்தன பேரப்பத்தி ………… இவர்கள் தேசத்துக்கு ஆற்றியுள்ள ஆற்றி வரும் நற்பணிகள் பற்றி ராம் எழுதி வருவது உங்கள் கண்ணில் படாதே…………..

      கர்டிஸ்தான் சார்ந்த இஸ்லாமிய சஹோதரர்கள் பற்றி, அலிமியான் சாஹேப் இன்னும் பல சான்றோர்கள் பற்றி…….. ராம் எழுதியுள்ள பதிவுகள் உங்கள் கண்ணில் படாதே………….

      உங்களுக்கு உங்கள் செல்லக்கட்டிகளான குசுர் பீ, சொர்ரபுட்டின் போன்ற பயங்கரவாதிகளை ஸ்தோத்ரம் செய்து விட்டால் ஜன்ம சாபல்யம் ஆகி விடும்………… அப்படித்தானே………..

      தீஸ்தா சீதளவாதம் அவுங்க வூட்டுக்காரரான ஜாவேத் ஆனந்த், பிச்சைப்பாத்திரம் கையேந்திய ஆகார் அஹம்மத் படேல் இத்யாதி ஃப்ராடு தில்லாலங்கடிகள் இவர்கள் புகழ் பாடினால் தான் உங்களுக்கு ஏற்கும்………….. அது சரி …………….. ராணுவத்தில் மேஜராக இருக்கும் உங்களுக்கு ராம் கர்னல் நிஸாமுத்தீன் சாஹேப் அவர்களைப் பற்றி விதந்தோதியது கூடவா கண்ணில் படவில்லை.

      பூவண்ணன் சார், ரொம்ப ரொம்ப தப்பு…………. உங்களால் ராமுடைய கருத்துக்களுடன் கருத்துக்களால் சமர் செய்ய முடியவில்லை என்று சொல்லி விடுவது நேர்மை………..

      உள்ளங்கை நெல்லிக்கனியென………….. ராம் அவர்கள் சமுதாயத்திலும் ஒட்டுமொத்த மானுடத்திலும் அக்கறை உள்ள பற்பல இஸ்லாமிய சஹோதரர்களைப் பற்றியும் சான்றொர்களைப் பற்றியும்…………. இவர்கள் யார்……….. இவர்களை அவர் ஏன் ஆதரிக்கிறார்…………. நாம் பலரும் இவர்கள் பால் ஏன் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று விலாவாரியாக …………… மானாவாரியாக வ்யாசாதிகள் வரஞ்சு தள்ளிய பின்னரும்…………. பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகமே இருட்டா இருக்குன்னு சொன்னமாதிரி …………. ராம் இஸ்லாமியர்களைப் பற்றி நல்லதாக ஒண்ணுமே எழுதவில்லை என்று சொல்லுவது………….. குசும்புத் தனம்………….. உங்களிடம் இருந்து இப்படி எதிர்பார்க்கவில்லை. க்ஷமிக்கவும்.

      • ravi Says:

        நன்றி , கிருஷ்ணகுமார். இவரையும் சேர்த்து விடுங்கள் . ஷேக் சின்ன மௌலானா , திருவரங்கம் கோயிலின் ஆஸ்தான வித்வான்

      • poovannan73 Says:

        கிருஷ்ணகுமார் சார்

        ஒத்திசைவாரை புகழும் உங்களையும் மற்ற புகழாளர்களையும் பார்த்தால் அபூர்வ சகோதரர்கள் படத்தில் சிவாஜி சந்தானம் காவல்துறை ஆய்வாளர் ஜனகராஜை புகழும் காட்சிகள் தான் ஞாபகத்துக்கு வருகிறது.

        தெய்வமே எங்கயோ போயிட்டீங்க நின்று நீங்கள் அடிக்கும் கூத்துக்களும் அதை அவர் ஜனகராஜ் போல ஏற்று கொண்டு ஆனால் எதுக்குடா என்று செல்லமாக கண்டிப்பதும் அடடா

        வெறும் பொய்களை வாரி இறைப்பதற்கு எதிராக எண்ண உரையாடுவது.

        சில செய்திகள் உங்கள் பார்வைக்கு.என் மாமியாரின் பெயர் ஜைபுன்னிச்சா.சென்ற வாரம் கூட விடுமுறையில் ஊருக்கு வந்திருந்ததால் ரம்ஜான் அன்று ஒட்டகம்,மாடு ,ஆடு,கோழி பிரியாணி கட்டலாம் என்று பெரிய மாமியார் வீட்டுக்கு சென்று விருந்து சாப்பிட்டு விட்டு வந்தேன்.

        ஆலந்தூரில் இருக்கும் எங்கள் வீட்டில் வாடகைக்கு இருப்பவரின் பெயர் ஜைது இப்ராஹிமே.என் இந்து உயர் அதிகாரியின் மகள் புதுச்சேரி கல்லூரியில் படிக்கும் போது புதுச்சேரியை சார்ந்த தமிழ் இஸ்லாமியரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் குடும்பத்தோடு இருந்த இருந்த பிணக்குகள் விலக சிறு துரும்பாக இருந்தவன்.எனக்கு இந்து முஸ்லிம்,கிருத்துவ உறவுகள் உண்டு.

        நீங்களும் ஒத்திசைவாரும் வந்தால் என் செலவிலேயே உங்களை அழைத்து செல்கிறேன்.இந்தியா முழுக்க பரவி உள்ளவர்களில் பலரை சந்திக்கலாம். எந்த மதத்தை சார்ந்த உறவுகளிடம் பெண் கல்வி மதிக்கபடுவது கிடையாது ,குழ்ந்தை திருமணம் அதிகமாக இருக்கிறது,கைம்பெண் மணம் மிகவும் கடினம்,பல தாரங்கள் ,கூத்தியார் இருக்கிறார்கள் என்பதை ஆராயலாம்.முடிவுகள் உங்களுக்கு மிகவும் ஆச்சரியம் அளிக்கும்.என்னோடு கல்லூரியில் படித்தவர்கள்,பணி புரிந்தவர்கள் பட்டியலை ஆராயலாம்.

        பெண் கருக்களை சிசுக்களை கொல்வதில் மத்த நம்பிக்கை உள்ள இந்துக்களை அடித்து கொள்ள யாராலும் முடியாது என்று தெளிவாக காட்டுகிறது ஐயா.அதை பற்றி ஆராயலாமா

        ஜாதகம்,தோஷம் என்று பெண்களை இழிவாக நடத்துவது ,திருமணத்தை மிகவும் கடினமாக்குவது எங்கு அதிகம் என்று வாதிடலாமா

        வளர்ந்த குழந்தைகளை உடைய கைம்பெண்ணாக இருந்தாலும்,இளம் கைம்பெண்ணாக இருந்தாலும் எந்த மதத்தில் மறுமணம் எளிது என்பதை ஆராயலாமா

        வாய்ப்பு கிடைத்தால் /போராடி வழக்கறிஞர்களாக,மருத்துவர்களாக,விமான பணிப்பெண்களாக,கலைத்துறையில் பல்வேறு பணிகளில் ஈடுபடுபவர்களாக,எழுத்தாளர்களாக,பத்திர்க்கையாளர்களாக சாதிக்கும் ,காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் சதவீதம் எங்கு அதிகம் என்று ஆராயலாமா

        காதல் திருமணதிற்கு எங்கு எதிர்ப்பு அதிகம் என்று ஆராயலாமா.மதத்தை ஏற்று கொண்டால் காதல் எளிதில் ஏற்கப்படும் மதம் எது என்று ஆராயலாமா

        மற்றவர்களுக்கு உதவும் நோக்கம் கொண்டவர்கள்,சமுதாய பார்வை உள்ளவர்கள் எங்கு அதிக சதவீதம் என்று ஆராயலாமா

        மேற்கூறியவற்றை பற்றி பேசினால் எதிர்த்து கருத்துக்களை,சான்றுகளை வைக்கலாம்.ஆனால் நான் 70 பேருக்கு வேலை வாங்கி கொடுத்தேன்,நன்றி கெட்டவர்கள்

        7000 பேரை படிக்க வைத்தேன்,70 லட்சம் இஸ்லாமியரை நன்றாக தெரியும் அதன் அடிப்படையில் எழுதுகிறேன் ,அவர்களில் மிக பெரும்பான்மையானோர் இசிஸ் ஆதரிக்கிறார்கள் என்று அடித்து விடுவதை பார்த்து உங்களை போல தெய்வமே எங்கயோ போய்டீங்க என்று வேண்டுமானால் சொல்லி அவரும் நானும் புளகாங்கிதம் அடையலாம்.வாதிட என்ன இருக்கிறது


      • அய்யா பூவண்ணன், உங்களுடைய மனக்கொதிப்பு அடங்கியதா?

        க்ருஷ்ணகுமார், ரவி போன்றவர்களையும் உங்களையும் ஒருசேர இழிவு படுத்திக் கொள்ளவேண்டாம். உங்களுடைய தரவுகளற்ற அட்ச்சுவுடல்கள்தாம் பிரச்சினையே தவிர, பாவம் அவ்ர்களைச் சொல்லிக் குற்றம் இல்லை. மற்றபடி நீங்கள் குறிப்பிட்டிருக்கும் திரைப்படத்தை நான் பார்க்கவில்லையாதலால் ஒன்றும் புரியவில்லை.

        நான் தரும் விவரங்களை நீங்கள் சந்தேகிக்கிறீர்கள். அதனால் பரவாயில்லை, ஒரு பிரச்சினையுமில்லை. ஆனால் நீங்கள் கொடுக்கும் விவரங்களை நான் அப்படியே எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில் அவற்றுக்கான சுட்டிகளை நீங்கள் தரவில்லை. :-)

        நான் முன்னமே பலமுறை சொல்லியிருப்பதுபோல், நீங்கள் ஒரு பட்டாளத்துக்காரர் என்பதற்காக மட்டுமே எனக்கு மரியாதை உண்டு – உங்களைப் பலவாறு கேலிசெய்தாலும்கூட.

        எது எப்படியோ, உரையாடல்கள் உதையாடல்களாக ஆகாமல் இருந்தால் சரி.

        நன்றி.

        ​​ரா.

      • poovannan73 Says:

        2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் பெண் சிசுக்களை/கருக்களை பெருமளவு (எண்ணிகையிலும்,சதவீதத்திலும் கொன்றவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்கள்,எந்த இசம் வலுவாக இருக்கும் பகுதிகளை சார்ந்தவர்கள் என்று ஆராயலாமே

        2001 சென்சுஸ் படி 0-6 ஆண் பெண் குழந்தை சதவீதம் ஹிந்துக்கள் 925,இஸ்லாமியர்கள் 950,கிருத்துவர்கள் 964,மற்றவர்கள் 976

        ஹிந்துக்களின் 925 கூட நீங்கள் கரித்து கொட்டும்கயவர்கள்,போலி மதச்சார்பின்மைவாதிகள் அதிகமாக இருக்கும் பகுதிகளின் தயவினால் தான்.

        தங்கள் ஆதர்ச குஜராத்தின் 0-6 செக்ஸ் ratio 2001 மற்றும் 2011 கணக்கெடுப்பில் என்ன என்று பார்க்கலாமே.அங்கு 2001 கணக்கெடுப்பில் மத ரீதியான சதவீத கணக்குகளும் இருக்கின்றன. 2001 இல் 883 2011இல் 886.ஆனால் குஜராத்தில் வசிக்கும் இஸ்லாமியரின் 0-6 ஆண் பெண் சதவீதம் தேசிய சராசரியை விட அதிகம்.ஹிந்டுத்வர்களை மட்டும் கணக்கெடுத்தால் 800க்கு கீழே தான்.

        இந்தியா மட்டும் 78 சதவீதம் இந்துக்கள் இருக்கும் நாடாக இல்லாமல் 78 சதவீதம் மற்றவர்கள்(பாகன்)இருக்கும் நாடாக இருந்திருந்தால் இன்று குறைந்தபட்சம் ஒரு கோடி பெண் குழந்தைகள் அதிகம் இருந்திருப்பார்கள்.

        இந்த ஒரு விஷயத்திற்கு மட்டுமாவது பதில் சொல்ல முயற்சியுங்களேன்.இந்துத்வர்கள் துண்டை காணோம் துணியை காணோம் என்று 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு ,ஆண் பெண் சதவீதம் என்று ஆரம்பிக்கும் போதே ஓடி விடுகிறார்கள்.

        இந்துக்கள் எண்ணிக்கை மற்றும் சதவீதம் குறைகிறது என்று பல ஆண்டுகளாக கூப்பாடு போட்ட கூட்டம் நீங்கள் புரியும் கொலைகளால் தான் குறைகிறது ,கைம்பெண் மணத்தை பெரும்பாவமாக கருதும் மூடர்களாக இருப்பதால் குறைகிறது,மூட நம்பிக்கைகளால் திருமணங்கள் நடைபெறுவதால் குறைகிறது என்றால் எதிராக மூச்சு கூட விட மறுத்து அமைதி ஆகிறார்கள்

        இந்த அரசும் வந்து 14 மாதம் ஆகி விட்டது. மத ரீதியான தகவல்கள் ஏன் வெளியிடப்படவில்லை என்று கூப்பாடு போட்டவர்கள் இப்போது வெளியிட வேண்டியது தானே

        ஏழு உங்களுக்கு ராசியான எண்ணா சார் .அடிக்கடி ஏழு வருகிறது


      • அய்யா பூவண்ணன், என்னை மன்னித்துவிடுங்கள். உங்களுடன் எனக்கு ஒத்துவராது.

        உங்கள் படிப்பறிவு மிகவும் அதிகம். எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. உங்கள் அறிவார்ந்த பொழிவுகளைத் தாங்கும் சக்தி என்னிடம் இல்லை.

        நான் தோற்றுவிட்டேன். சந்தேகத்திற்கிடமில்லாமல் நீங்கள் வென்றுவிட்டீர்கள்.

        நீங்கள் சொல்வதுபோல் ஹிந்துத்துவர்கள் கொலைகாரர்கள், பெண் வெறுப்பாளர்கள் மட்டுமேதான்! ஹிந்துக்கள் இல்லையென்றால் இந்தியா என்றோ பூவண்ணஸ்தான் ஆகியிருக்கும். என்னிடம், உங்களைப் போல சுளுவான சிடுக்கவிழ்த்தல் ஃபார்முலா இல்லை. நான் ஒரு முட்டாள். ஒப்புக் கொள்கிறேன்.

        மற்றபடி – பட்டாளத்தில் வேலை செய்வதில் தாங்கள் சுணக்கம் காட்டாமமலிருப்பது மட்டுமல்லாமல், இனிமேலும் உங்கள் நேரத்தை இப்படி ஹிந்து கொலைகாரர்கள்மீது செலவழித்து வீண் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன்.

        இதுவரை நீங்கள் அருளிச் செய்த நகைச்சுவைகளுக்கு மிக்க நன்றி.

        பயத்துடன், நடுக்கத்துடன்:

        __ரா.

  19. poovannan73 Says:

    சார் இந்துக்களை பற்றி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் சில சான்றுகளை வைத்ததற்கே இப்படி எரிகிறதே,கோவம் கொப்பளிக்கிறதே . திராவிடர்கள் என்றாலே எப்படி கயவர்கள்/முட்டாள்கள்/காமுகர்கள்,அவர்களில் ஒருவர் கூட நல்லவன் கிடையாது என்று எழுதும் போது உங்களின் அணைத்து மக்கள் குழுக்களிலும் நல்லவன்/கெட்டவன் உண்டு என்ற கருத்து மறைந்து விடுவது ஏன்

    கொலைகளை செய்வதில் எந்த மதமும்,மத நம்பிக்கையாளர்களும் ஒருவருக்கு ஒருவர் குறைந்தவர் அல்ல எனபது தான் வரலாறு காட்டும் உண்மை. 1947 தேச பிரிவினையோ,மத கலவரங்களோ அதிக கொலைகளை ,பாலியல் வன்முறைகளை புரிந்தவர்கள்,பெண்களை கடத்தியவர்கள் இந்துக்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.இந்த அழகில் இஸ்லாமியர்களுக்கு பாடம் எடுப்பது நியாயமான ஒன்றா.ஒரு ஆண்டில் மத நம்பிக்கை உள்ள இந்துக்கள் கொல்லும் பெண் கருக்களின் /சிசுக்களின் எண்ணிக்கை இஸ்லாமிய மத வெறியர்கள் மற்றும் அவர்களின் குழுக்கள் இதுவரை கொன்றவர்களை விட அதிகம்.கொஞ்சம் இந்த பக்கமும் பார்வையை திருப்புங்கள் சார்

  20. A.Seshagiri. Says:

    தாங்கள் எவ்வளவுதான் மாங்கு மாங்குனு எழுதினாலும்,நமது அவல நிலையை போக்கவே முடியாது.செம்மரக்கடத்தல் காரர்களுக்கு அம்மாவின் அன்பு பரிசு தமிழகம் விளங்கிரும்!!

    http://www.thehindu.com/news/national/tamil-nadu/kin-of-woodcutters-get-govt-jobs/article7510100.ece?homepage=true?w=alstates


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s