அமெரிக்காவின் ஆச்சரியம்தரும் துல்லியமான கணிப்புகள்: கருணாநிதி, திமுக, அழகிரி, இசுடாலிர், கனிமொழி…

June 29, 2015

எனக்கு அமெரிக்காவில் வசிக்க ஒத்துவராது + பொதுவாக அமெரிக்க என்ஆர்ஐ ஜந்துக்கள் ஒத்துவரமாட்டார்கள்  (எனக்கு மகாமகோ துக்கம் கொடுக்கக்கூடிய வகையில் என் உறவினர்களில் பலர் இந்த ஜாதிதான்; கல்லூரியில் என் வகுப்பில் கூடப் படித்தவர்கள் அனைவரும் (மொத்தம் 17ல் 16 பேர்) இப்போது அமெரிக்கக் குடிமக்கள் – இது ஒருவிதத்தில் நிம்மதிதரும் விஷயம்தான்; ஆனாலும், அதிசயிக்கக்கூடிய வகையில் எனக்கு இன்னமும் பல அமெரிக்க என்ஆர்ஐ நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், என்ன செய்வது சொல்லுங்கள்? இவர்களுக்கும் மனப்பிறழ்வோ??) என்றாலும்…

… பல விதங்களில் நான் அமெரிக்க (USofA) பண்பாட்டுக் கூறுகளை மதிப்பவன். அதனுடைய உயர்கல்விக் கட்டமைப்பை, நடைமுறை சுதந்திரத்தை,  அதன் உழைக்கும் மக்களை, படிப்பாளிகளை, அதன் உயர்தர ஆராய்ச்சி நிறுவனங்களை, அதன் அருங்காட்சியகங்களை, இயற்கை வளங்களை – மிக முக்கியமாக – அதன் மகாமகோ நூலகங்களை (அதுவும்,  அரசு நூலகங்கள்!) மிக மிக மதிப்பவன்.

அதே சமயம், நான் – சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் அங்கு வெறிபிடித்து வேலை செய்து கொண்டிருந்த காலங்களில் – வெள்ளைக்கார அமெரிக்கர்களைவிட, அதிக அளவு கறுப்பு அமெரிக்கர்களை நண்பர்களாகப் பெற்றிருந்தவன்; சென்ற ஓரிரு சனிக்கிழமை மாலை என்ஆர்ஐ பாட்லக் வகையறா கூடி-உண்ணுதல்களில் (அதாவது – இந்தியத்திட்டல், முனகல், க்ரீன்கார்ட் எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது, அமெரிக்கக் குடிமகனாதல், ரஜினி படம், அடுத்த லாங் வீக்எண்ட் சமயம் எங்கே போவது, இந்தியா போவதற்கு சீப்பான விமான டிக்கெட் எங்கு கிடைக்கும் – போன்ற மகாமகோ பிரச்சினைகள் அலசப்படும் காக்காய்க் கூட்டங்கள்) வாக்குவாதங்களில் ஈடுபட்டு அனைவரையும் நோக அடித்தவன். அமெரிக்க நகரங்களின் அருகில் இருக்கும் மகாபிரம்மாண்டமான குப்பைக்கூடங்களுக்கும் (landfills) தேவைமெனக்கெட்டுச் சென்றிருப்பவன். பல விதங்களில் பாக்கியம் செய்தவன்.

மேக்ஸிம் கார்க்கியின் ‘அமெரிக்காவிலே’ படித்துவிட்டு அதில் இருக்கும் பிரச்சார தொனியால் என் இளம் வயதில் (~16-17 பிராயத்தில் என நினைவு)  கவரப்பட்டு, பின்னர் இம்மாதிரி புத்தகங்களையும் அக்கப்போருக்காக, இவர்கள் என்னதான் சொல்லவருகிறார்கள் என்று அவதானிக்க, கூர்ந்து படித்திருப்பவன்.

இதற்கு அண்மைய எடுத்துக்காட்டுகளாக:  John Perkins எழுதிய குப்பை ஜிகினா பப்பரப்பாலான Confessions of an Economic Hitman,  Mohsin Hamid எழுதிய நுணுக்கமான அரைகுறைத்தனம்/அசூயை நிரம்பிய The Reluctant Fundamentalist போன்றவைகளைப் படித்துவிட்டு – அவற்றில் உள்ள கலை/பப்பரப்பா நடை ஓரளவு பிடித்தாலும் – திரித்தல்களை, பொய்மைகளை வெறுப்பவன்; இந்த இரு புத்தககங்களில் முதல் பொய்மை எழவு – “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என இன்று அறிந்துகொண்டு மெய்யாலுமே அதிர்ச்சியடைந்தேன்! தமிழில் மொழிபெயர்க்கப்பட, ஒரு வேற்றுமொழிப் புத்தகத்துக்கு வெறும், ஆதாரமற்ற பப்பரப்பாக்களே போதும் போலும்; மேலதிகமாக வெட்டி உளறல்கள் இருந்தால், ‘சதித் திட்டங்கள்’ அள்ளித் தெளிக்கப்பட்டால் முட்டாள் தமிழன் சப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிடுவான் வேறு!)  போயும்போயும் இந்த அரைகுறை பரப்புரையைப் பதிப்பித்த  ‘விடியல்’ பதிப்பகத்தின்மீது இதுவரை இருந்த கொஞ்சநஞ்ச மதிப்பும் இத்துடன் அகன்றது. நன்றி பல.

ஆகவே அமெரிக்காவை அற்ப விஷயங்களுக்கெல்லாம் கரித்துக் கொட்டிக் கொண்டிருப்பது எனக்கு ஒவ்வாது. உலத்தில் இருக்கும் பிரச்சினைகள் பின்னால் இந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் சுக்குபத்தியம் மட்டுமே இருக்கிறது என்று உளறிக்கொட்டுவது எனக்கு ஏகோபித்த புல்லரிப்பைத்தான் ஏற்படுத்தும்.
…ஆனால் ஒரு விஷயம்: அமெரிக்கா என்று ஒன்று இல்லாவிட்டால், நம்முடைய வினவு, பூவுலகில் நண்பர்கள் போன்ற அடிப்படை அயோக்கியமும் அரைகுறைத்தனமும் நிரம்பிய கோமாளிகளின் கேளிக்கைகள் எப்படி சந்தைக்கு, சபைக்கு வரமுடியும், சொல்லுங்கள்? :-)

-0-0-0-0-0-0-0-

மேலதிகமாக – இக்காலங்களில் நான், நேரம் கிடைக்கும்போதெல்லாம், விக்கிலீக்ஸ் மூலமாக வெளிவந்திருக்கும் நம் திராவிடத் திலகங்களின் அப்போதைய லீலைகள் பற்றிய விவரங்களையும், அமெரிக்கர்களுடைய கணிப்புகளையும், செய்திகளைச் சேர்த்துக் கோர்த்து அவற்றின் திராவிடப் பின்புலத்தில் அறிந்துகொள்வதையும் பார்த்து ஆச்சரியப் பட்டுக்கொண்டிருக்கிறேன்; எடுத்துக்காட்டாக ஜூலை 9, 2009 தேதியிட்ட அமெரிக்க தூதரக ஆவணத்திலிருந்து சில பகுதிகள்:

கருணாநிதி அவர்களின் சுருக்கமான குடும்பவரலாறு:

Tamil Nadu’s octogenarian Chief Minister, M. Karunanidhi, has a big family to take care of. He has married three times. His first wife, Padma, died young. A son from that marriage, Muthu, remained estranged from his father for a long time, hobnobbing with Karunanidhi’s political foes after an unsuccessful attempt at a film career. Karunanidhi is still married to his second wife, Dayalu, with whom he has three sons (Azhagiri, Stalin, Tamilarasu) and a daughter (Selvi). Karunanidhi also has an “unofficial wife,” Rajathi, with whom he has a daughter, Kanimozhi. (This sort of marital arrangement is fairly common among Tamils of Karunanidhi’s generation, and it is not considered a potential source of scandal. He regularly includes them both in public events and official travel.) The two live in separate houses in Chennai, and he divides his time between them. (அழுத்தம் என்னுடையது)

திமுக-வின் கொள்கை(!):

Karunanidhi has long dominated Tamil Nadu’s politics. He is the unquestioned leader of the DMK, a regional Tamil party with no obvious ideology other than support for Karunanidhi and a desire to remain in power.

திமுகவின் இரண்டு குறிக்கோள்கள் + அதன் ‘வளைந்து கொடுக்கும்’ தன்மை:

Its main goal is to retain control of Tamil Nadu, where it has generally alternated terms of government there with its arch-rival AIADMK. Its secondary goal is to remain part of the national government, a goal made easier by the party’s ideological malleability, which allows it to join national governments led by the Congress Party, the BJP, or almost anybody else.

இசுடாலிர் பற்றிய ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு:

Stalin had something of a thuggish reputation in the 1970s, including alleged involvement in multiple sex scandals. (Many in Chennai still tell stories, perhaps apocryphal, of pretty girls being plucked off the streets and handed over to Stalin for his amusement.) He matured and shed this image in the late 1980s,

(இந்த விஷயங்களைப் பற்றி நான் நேரடியாக – குறைந்த பட்சம் – இப்படி அநியாயத்துக்குச் சீரழிக்கப்பட்ட ஒரு பாவப்பட்ட பெண்ணின் தாய்வழிப் பாட்டனார் மூலம் அறிந்தவன்; இந்தப் பெண்ணானவர் மூன்று முறை தற்கொலைக்கு முயன்று, மனம் பேதலித்து,  பின்னர் அவர்கள் குடும்பமே மும்பய் நகருக்குக் குடிபெயர்ந்து விட்டது. இவ்விஷயங்கள் நடந்து சுமார் 30 ஆண்டுகளாகி விட்டன. …ஆகவே இவற்றை வெற்று வதந்திகள் என என்னால் இடக்கையால் புறம்தள்ள முடியாது)

அழகிரி மதுரைக்கு அனுப்பப்பட்டது பற்றி:

Stalin’s older brother, Azhagiri, recently named India’s Minister for Chemicals and Fertilizers, remains a controversial figure. His rivalry with Stalin is legendary in Tamil Nadu. After years of feuding, Karunanidhi sent him in 1989 to the city of Madurai, hundreds of miles away from Chennai in southern Tami Nadu, ostensibly to take care of the party newspaper, but more with a view toward avoiding clashes between the sons.

அழகிரியும் தா.கிருட்டிணன் கொலையும்:

Azhagiri’s notoriety extends past the usual political theatrics. In May 2003, Tamil Nadu police arrested Azhagiri for criminal conspiracy and murder in a case relating to the stabbing death of T. Kiruttinan, a senior DMK leader and former state-level minister and Member of Parliament. Prosecutors charged that Azhagiri conspired to have Kiruttinan murdered because he was challenging Azhagiri’s control of the DMK’s leadership in the state’s southern districts. Karunanidhi, however, claimed that the arrest was a political vendetta by Chief Minister Jayalalithaa (his arch-rival who had taken over in Tamil Nadu when her AIADMK party won the legislative assembly elections in 2001). In May 2008, the presiding judge in the case acquitted Azhagiri and the 12 others indicted in the case, declaring the state’s allegations “not proved.”

அழகிரியும் ஸன் டீவி கொலைகளும்:

At least one other major violent incident is linked to Azhagiri and his cronies. In 2007, Azhagiri’s supporters attacked and burned the Dinakaran newspaper office in Madurai, killing three employees. The attack followed the paper’s publication of a survey showing that Stalin was much more popular than Azhagiri. Sixteen people, including a police officer, were charged in the incident. Azhagiri, however, was not among the accused.

அழகிரியும் ‘திருமங்கலம் ஃபார்மூலா’வும்:

In addition to mobilizing an army of fully committed party workers, Azhagiri had the DMK pay cash bribes to lure voters on a scale never seen before in Tamil Nadu. Even the DMK’s opponents grudgingly admired the breadth and brazenness of Azhagiri’s cash-for-votes distribution network. After ensuring a DMK victory in the 2009 by-election, which was seen as a bellwether for the upcoming national elections, Azhagiri assumed his first-ever official position in the party.

கனிமொழியின் ஏமாற்றம்:

Another family member, Karunanidhi’s grand-nephew Dayanidhi Maran, was made the Union Minister for Textiles. The final DMK ministerial post was given to A. Raja, who kept his post as Minister for Communications and Information Technology. This left Kanimozhi, Karunanidhi’s daughter by his “unofficial wife,” out in the cold despite heavy lobbying by her supporters. Sources close to Kanimozhi told us that she remains deeply upset at being denied a cabinet position. According to local journalists, she is expecting a promotion in the party to compensate for it.

கருணாநிதியின் நாற்காலியை விட்டு இறங்காத்தன்மை, இசுடாலிர் ‘நோய்’ இன்னபிற:

It is not clear whether his decision to elevate Stalin signals Karunanidhi’s intent to retire from active politics soon. A media contact told post that Karunanidhi has no intention of stepping down, but a source close to Stalin suggested the Chief Minister might retire in the near future. After a spinal cord surgery in February, Karunanidhi has been in pain and wheelchair-bound. Stalin’s health condition is unclear: he is rumored to be suffering from an undisclosed ailment (allegedly intestinal cancer). He visited London in June 2008, reportedly for a medical examination.

இசுடாலிரும் அழகிரியும் –  நிறைகுறைகள்;

Karunanidhi’s efforts to forestall a succession fight by dividing political turf between Azhagiri and Stalin will likely fail. Azhagiri, who speaks little English and no Hindi, will have difficulty in the New Delhi political scene. He is at heart very much a provincial Tamil Nadu politician, who will no doubt want to contest for power in the state once his father leaves the scene. This will put him at odds with Stalin, who compensates for his lack of charisma with a willingness to work hard and to listen to the advice of trusted bureaucrats and senior party leaders. Stalin, anointed by Karunanidhi, is likely to come out on top because he is more acceptable than his pugnacious and rough-hewn brother.

கருணாநிதியின் ‘திறமை’கள் இசுடாலிருக்கோ அழகிரிக்கோ இல்லை:
Neither, however, has the political acumen or rhetorical skills to fill the shoes of the father who has dominated the state’s politics for four decades. The DMK will be in for hard times whenever Karunanidhi finally does get out of politics.
(இந்த தூதரக ஆவணத்தை முழுவதும் படிக்க: THE SONS ALSO RISE: KARUNANIDHI KEEPS POWER IN THE FAMILY )

-0-0-0-0-0-0-

ஆனால்  – இந்த விக்கிலீக்ஸ் காரர்களின் (=அமெரிக்க தூதர்களின்)  நாற்பது வயதான இன்னொரு செய்தியின் படி கருணாநிதி அவர்கள் தானாக பதவியை விட்டுக் கீழே இறங்குவது என்பதும் இப்போதைக்கு நடக்கப் போவதில்லை… (அமெரிக்காவுக்கு 1976லேயே தெரியும், கருணாநிதி அவர்கள், திமுக தலைவர் பொறுப்பிலிருந்து தானாக விலகவேமாட்டாரென்று…

… எது எப்படியோ – திமுக ஒழிவது என்பதில் ஆரம்பித்து – அஇஅதிமுக, தேமுதிக, பாமக, மதிமுக, என அனைத்து முக்க அல்லது முக்காத திராவிடக் கட்சிகளும் ஒருவழியாக ஒழிந்தால் நம் தமிழகம் சுபிட்சத்தை நோக்கிப் பீடு நடை போடும் என்பதில் எனக்கு ஐயமேயில்லை!

திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/04/2015 வரை!)

9 Responses to “அமெரிக்காவின் ஆச்சரியம்தரும் துல்லியமான கணிப்புகள்: கருணாநிதி, திமுக, அழகிரி, இசுடாலிர், கனிமொழி…”

  1. Saravanan Says:

    எல்லாம் சரி, இதில் ‘கணிப்பு’ எங்கே இருக்கிறது? எல்லாமே தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரிந்த, செய்தித்தாள்களில் அலசப்பட்ட விஷயங்கள்தானே. மேலும் ‘அமெரிக்காவின்’ என்பது பெயரளவில்தான். இந்தக் கேபிள்களைத் தயாரித்தவர்கள் சென்னையிலிருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தில் பணியாற்றும் இந்தியர்கள, குறிப்பாகத் தமிழர்களாகவே இருந்திருப்பார்கள் என்பது நிச்சயம். எவ்ளோ ஈஸி ஜாப்!

    (இதையெல்லாம் அமெரிக்காவில் நிஜமாக யாராவது படிக்கிறார்களா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.)


    • அன்புள்ள சரவணன்:

      // எல்லாம் சரி, இதில் ‘கணிப்பு’ எங்கே இருக்கிறது? எல்லாமே தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரிந்த, செய்தித்தாள்களில் அலசப்பட்ட விஷயங்கள்தானே.

      உங்களுக்கு இவ்விஷயங்கள் அலுப்பைத் தரலாம் – ஆனால், பெரும்பாலான தற்கால இளைஞர்களுக்கு(ம்) இச்செய்திகள் தெரிவதில்லை. நான் ‘கணிப்பு’ என்று சொன்னது தூதரகச் செய்திகள்சேகரம் பற்றியல்ல – அமெரிக்க அதிகாரிகளின் திமுக வகையறா பற்றிய சமகால கருத்துகளை, அதன் எதிர்காலம் குறித்த ஆரூடங்களை மட்டுமே.

      // மேலும் ‘அமெரிக்காவின்’ என்பது பெயரளவில்தான். இந்தக் கேபிள்களைத் தயாரித்தவர்கள் சென்னையிலிருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தில் பணியாற்றும் இந்தியர்கள, குறிப்பாகத் தமிழர்களாகவே இருந்திருப்பார்கள் என்பது நிச்சயம்.

      இல்லை. இவர்கள் வெள்ளைக்கார அமெரிக்கர்கள். இவர்களுடைய பணிகளில் தலையாயதான ஒன்று உள்ளூர் விஷயங்களை நேரடியாகச் சேகரிப்பது. உள்ளூரின் முக்கிய மனிதர்களுடன் ஊடாடி ‘உட்கட்சி'(=உள்நாட்டு) நிலவரங்களைக் கண்டுகொண்டு கருத்துகளைச் சமைத்துக் கொள்வது, இவற்றால் அமெரிக்கா எப்படி பாதிக்கப்படும் போன்றவை. இதற்கென தூதரகங்களில் தனிப்பட்ட அதிகாரிகளில் இருக்கிறார்கள். (இந்திய தூதரகங்களிலும் அப்படியேதான்!)

      வெள்ளைக்காரர்கள் என்றாலே வழிவது என்பது நம் (கருணாநிதியில் இருந்து ஆரம் பித்து) பித்துகளில் ஒன்று. ஆர்க்காட்டு வீராசாமி, கனிமொழி போன்றவர்கள் புல்லரிப்புடன் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுடன் ‘ஈஷிக்கொண்டு’ வரைமுறையில்லாமல் உளறிக்கொட்டுவதை (தேவிபேரடைஸ் தியேட்டர் பக்கத்திலிருக்கும் காஸ்மபாலிடன் க்ளப் வளாகத்தில், சோழா ஷெரட்டன் அமர்வுகளில்) நானே பார்த்திருக்கிறேன்.

      // எவ்ளோ ஈஸி ஜாப்!

      இல்லை. ஆனால் கண்டமேனிக்கும் கருத்து தெரிவிப்பது என்பது வேறு.

      //(இதையெல்லாம் அமெரிக்காவில் நிஜமாக யாராவது படிக்கிறார்களா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.)

      இவையெல்லாம் பின்புலச் செய்திகளாகத் தேடுபவர்களுக்குக் கிடைக்கும். இந்தத் தகவல் வலைப் பின்னலின் ஆழத்தையும் வீச்சையும் கொஞ்சம் அறிந்துகொண்டால் அசந்து போவீர்கள். இதை டிப்ளமேடிக் மெமரி என்கிறார்கள். இம்மாதிரி கணிப்புகள் எல்லா நாடுகளுக்கும் மிக முக்கியம்.

      அமெரிக்காவின் சோட்டா தூதரக அதிகாரிகளின் கூர்மையான அறிவையும் அவர்களின் நுண்மான் நுழைபுலம் அறியும் பாங்கையும், அசாத்திய உழைப்பையும் பற்றி நீங்கள் அறியக் கூடுமானால் – நீங்கள் உங்கள் கருத்துகளை மாற்றிக் கொள்வீர்கள்.

      நன்றி.

  2. ravi Says:

    Karunanidhi has long dominated Tamil Nadu’s politics. He is the unquestioned leader of the DMK, a regional Tamil party with no obvious ideology other than support for Karunanidhi and a desire to remain in power.///
    அசத்தல்.. தலிவரை பற்றி என்ன கணிப்பு !!

  3. ravi Says:

    //Confessions of an Economic Hitman//
    ஒரு வேண்டுகோள் .. இந்த புத்தகத்தை பற்றி உங்கள் கருத்துக்களை , இதில் உள்ள பொய்களை பற்றி ஒரு பதிவு எழுதினால் நன்றாக இருக்கும். நன்றி

  4. Anonymous Says:

    ///…ஊடாடி ‘உட்கட்சி'(=உள்நாட்டு) நிலவரங்களைக் கண்டுகொண்டு கருத்துகளைச் சமைத்துக் கொள்வது, இவற்றால் அமெரிக்கா எப்படி பாதிக்கப்படும் போன்றவை. இதற்கென தூதரகங்களில் தனிப்பட்ட அதிகாரிகளில் இருக்கிறார்கள்….////

    ///…இந்தத் தகவல் வலைப் பின்னலின் ஆழத்தையும் வீச்சையும் கொஞ்சம் அறிந்துகொண்டால் அசந்து போவீர்கள். இதை டிப்ளமேடிக் மெமரி …///

    //..தூதரக அதிகாரிகளின் கூர்மையான அறிவையும் அவர்களின் நுண்மான் நுழைபுலம் அறியும் பாங்கையும், அசாத்திய உழைப்பையும் …///

    above lines are okay…., but….

    //…ஆனால் ஒரு விஷயம்: அமெரிக்கா என்று ஒன்று இல்லாவிட்டால், நம்முடைய வினவு, பூவுலகில் நண்பர்கள் போன்ற அடிப்படை அயோக்கியமும்…//

    total contradiction…wtf you are telling…

  5. Anonymous Says:

    //…theories blaming everything on USA?…///

    So, USA is doing nothing…what is the meaning for below lines….

    ///…ஊடாடி ‘உட்கட்சி'(=உள்நாட்டு) நிலவரங்களைக் கண்டுகொண்டு கருத்துகளைச் சமைத்துக் கொள்வது, இவற்றால் அமெரிக்கா எப்படி பாதிக்கப்படும் போன்றவை. இதற்கென தூதரகங்களில் தனிப்பட்ட அதிகாரிகளில் இருக்கிறார்கள்….////

    ///…இந்தத் தகவல் வலைப் பின்னலின் ஆழத்தையும் வீச்சையும் கொஞ்சம் அறிந்துகொண்டால் அசந்து போவீர்கள். இதை டிப்ளமேடிக் மெமரி …///

    //..தூதரக அதிகாரிகளின் கூர்மையான அறிவையும் அவர்களின் நுண்மான் நுழைபுலம் அறியும் பாங்கையும், அசாத்திய உழைப்பையும் …///


    • Sir – the context of what I am saying and what you are interpreting (or choosing NOT to ‘see’) are at cross purposes.

      I like discussions and not these kinds of immature tantrums.

      Thank you and I wish you were more polite.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s