மகாமகோ குண்டோதிகுண்டு மாணவர் மன்றம்: சில குறிப்புகள்
September 16, 2015
அல்லது, ம்ம்ம்… இது மாணவ குண்டர் மன்றமா? மெகா ஸ்டூடென்ட்ஸ் கான்க்லேவ் (=Mega Students Conclave!) என்பதை, ‘மாபெரும் மாணவர் மன்றம்’ என்று முழி பெயர்த்திருக்கிறார்களே, பாவிகள்! தமிழ்த் துரோகிகள்!! இவர்களுக்குக் கொலைமாமணி பட்டத்தை அளிக்கவாவது அடுத்த முதல்வராக முக இசுடாலிர், வர முடியுமா? :-(
+போனஸ்: மாணவமணிகளுக்கு இசுடாலிரின் அறிவுரை!
…துப்புரவாக வேலைவெட்டியற்று காலட்சேபம் செய்துகொண்டிருந்தால், சில சமயம், நம் தமிழ் நாட்டின் செல்லங்களான ‘யூத்து’களுடன் ஜாலியாக அளவளாவிக்கொண்டு விலாநோகச் சிரிக்கலாம்!
-0-0-0-0-0-0-0-
இப்படியாகத்தானே நான் ஒரு கருணைக்கிழங்கு பொரியல் கல்லூரி (ஆ! மன்னிக்கவும்! அதன் பெயர் – அருணை பொறியியல் கல்லூரி )யில் படிக்கும் ஒரு இளைஞனிடம் பேசிக்கொண்டிருந்தேன்… ம், இல்லை, அவன் தான் பாவம், என்னுடன் பேசிக்கொண்டிருந்தான்.

ஆதாரம்: கருணை பொறியியல் கல்லூரி – கருணை பொரியல்
இந்த பக்கத்தூர் பையனும், பாவம் அதே சுருணைக் கல்லூரியில் சுரத்தில்லாமல் சுருண்டுகொண்டே இருப்பவன் தான்! பாவி, பல வருடங்கள்முன் நான் எவ்வளவு சொல்லியும் இஞ்சினீயரிங்-கஞ்சினீயரிங் எழவை, அதுவும் போயும்போயும் அந்தக் கல்லூரியில் படித்தே தீர்வேன் என்று படித்துக்கொண்டே யிருக்கிறான். இப்போது அவனுக்குப் புரிகிறது நான் படித்துப்படித்துச் சொன்ன விஷயம், ஆனால் இது கண்கெட்டபின்னர் வரும் உதயசூரிய உதயம் – பாவம், அவனுடைய தகப்பனாரின் திமுக ஈடுபாட்டால் விளைந்த கந்தறகோளங்களில் இதுவும் ஒன்று.
அவருக்குக் கலைஞர்தான் கடவுள், அப்பழுக்கற்ற மனிதர், நிகரிலாத் தலைவர், தமிழர்களுக்காக உழைத்துவுழைத்து ஓடாகத் தேய்ந்து கொண்டிருப்பவர் எல்லாமும்! சரி அய்யா, உங்களுடைய கட்சி விசுவாசம் வேறு, தலைவர்மீதான அபிமானம் வேறு, உங்கள் குழந்தையின் படிப்புவேறு என்று சொன்னாலும், அவர் பையனுக்கு என்ன ஒத்துவரும் என விலாவாரியாக உரையாடினாலும் அவர் கேட்கவேயில்லை, என்ன சோகம்!
சில நாட்கள் அப்படி-இப்படி எனப் பேசித் தீர்த்து, கடைசியில் – எஸ்கேபி, அருணை, ஸெயின்ட்பால் (முதல் இரண்டும் திருவண்ணாமலை பக்க திமுக கல்லூரிகள், மூன்றாவது திண்டிவனம் பக்கம்) – இவற்றில் ஒன்றில் எப்படியாவது அவனைச் சேர்க்கப் போகிறேன், நீங்கள் என்ன சொன்னாலும் சரி, என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். நான் மூன்றாவதற்குப் போயிருக்கிறேன் என்பதாலும், விஷயம் கைமீறிப் போனதாலும் – படுமோசமான விரக்தியுடன் – உங்களுக்கு எவ.வேலு (=அருணை), கு.பிச்சாண்டி(=எஸ்கேபி) இருவரில் யாரைப் பிடிக்குமோ அங்கே போட்டுவிடுங்கள் என்றேன். அவருக்கு வருத்தமாகி விட்டது – என்னது இப்படி விட்டேற்றியாகச் சொல்கிறீர்கள் என்று கேட்டார். எனக்கு ஆச்சரியமாகி விட்டது – அறிவுரை மட்டும் கேட்கிறார், ஆனால் கிடைத்தால் கேட்டுக்கொள்ளவே மாட்டேனென்கிறார் என… நான் ஒன்றும் சொல்லவில்லை. அவரே தொடர்ந்து சொன்னார் – அங்கே திருவண்ணாமலையில், எவவேலு கைதான் ஓங்கிக்கொண்டிருக்கிறது, அவரும் பசையுள்ள ஆள். ஆக, அங்கே நல்ல படிப்பு கிடைக்கும். (என்ன லாஜிக்கோ, ஈஸ்வரா!)
…பையனின் படிப்புக்காகக் கண்டமேனிக்கும் கடன்வாங்கி இப்போது சிக்கலில் இருக்கிறார் அவர் – அவருடைய வயக்காட்டில் ஒரு பகுதியை விற்றுக்கொண்டிருக்கிறார்! அதே சமயம், நன்றாகவே படித்துக்கொண்டிருந்த தம் மகளின் படிப்பை +2வோடு நிறுத்தி, 17 வயதிலேயே ஒரு குடிகாரக் கூவானுக்குக் கட்டிக்கொடுத்து அவள் வாழ்க்கையையும் துப்புரவாக ஒழித்துவிட்டார்! எனக்கு ஆறவேயில்லை – கண்ணெதிரில் நடக்கும் அவலங்களைக் கூட என்னால் தடுக்கமுடியவில்லையேயென்று! (முன்னொரு சமயமும் இதேபோன்ற விஷயத்திற்காக இன்னொரு தந்தையுடன் மன்றாடிக்கொண்டிருந்தபோது – ‘அவளோட அப்பன் நானா நீயா?” என்று படுமோசமாக, சபையில் அவர் கேட்டுவிட்டார்! இருந்தாலும் விடாமல் நான், அந்தச் சிறுமி படிக்க எப்படியாவது முழுவுதவி செய்வதாகச் சொன்னாலும், அவள் தன்காலில் நின்றுகொள்வாள், கவலையே வேண்டாம் எனவெல்லாம் காலில் விழாத குறையாகக் கெஞ்சினாலும், அவர் அடுத்த இரண்டு மாதங்களில் அவளையும் ‘கட்டிக் கொடுத்து’ விட்டார்! சுமார் 3 வருடங்கள்முன் மணம் செய்துகொண்ட அவளுக்கு, இப்போது இரண்டு பெண் குழந்தைகள், ஊக்க போனஸாக கணவன் தினசரி குடிப்பது மட்டுமல்லாமல், நையப் புடைக்கிறான் – ஆண் குழந்தை பிறக்கவில்லையாம். இப்போது அந்தப் பெண்ணின் தகப்பன், தாடிவுட்டுக்கொண்டு ஏறத்தாழ மனம்பேதலித்து அலைந்துகொண்டிருக்கிறார். நாராசம். வாழ்க்கையே விசித்திரம்தான்!)
-0-0-0-0-0-0-
சரி. அந்தப் பையன், அவர்கள் கல்லூரியில் சில நாட்கள் முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான்; மகாமகோ எத்திராஜுலு ‘எவ’ வேலு (மேலதிக விவரங்கள்: கல்வியும், கல்வித்தந்தைகளும் – இரண்டாம் பகுதி 01/10/2012) எனும் திராவிடக் கல்வித் தந்தையின் கல்லூரிக் கசாப்புக்கடையில் நடந்த குண்டு மாணவர் விழாதான் இது!
அந்த நிகழ்வில், ‘நிரந்தர அடுத்த முதலமைச்சரும்‘ ஏறக்குறைய தம் வாழ்நாள் முழுவதும் ‘திமுக இளைஞரணித்தலைவராகவே‘ காலட்சேபம் செய்துகொண்டிருக்கும் 62 வயது இளம்பருவத்து இசுடாலிர் அவர்கள் பேசியதாக அவன் சொன்ன விஷயங்கள், கல்லுளிமங்கனான எனக்கே தூக்கிவாரிப் போடவைத்தன…
ஆனால், முதலில் இந்த ஐடியாஸ்4டிஎன் தளக் கந்தறகோளத்தில் உள்ள செய்திகளைப் பற்றிய சில குறிப்புகள். :-(
ஹ்ம்ம்… … விஷயம் என்னவென்றால் – தமிழ் ஈழத்தை, அந்தப் பாவப்பட்ட ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு, இங்கே ‘ஸ்டூடென்ட் ப்ரொட்டெஸ்ட்’ செய்தே, கல்லெறிந்தே இரண்டு ஆண்டுகளுக்குமுன் வாங்கித்தந்தது போல, சமீபத்தில் குடியரக்கனை ஒழிக்க டாஸ்மேக் கடைகளை உடைத்து சந்தடிசாக்கில் பாட்டில்களைச் சுட்டுக்கொண்டு வூட்டுக்குப் போய், ட்ரிங்ஸ் அட்ச்சது போல, நம் இளைஞ்ஜர்கள்… இப்போது தமிழ் நாட்டை உய்விக்க ஐடியா எழவுகளை வேறு கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்! ஐயகோ! :-( இதனைக் கேட்பாரில்லையா!
தமிழ் தமிழ்நாடு என்று அரற்றும் இந்தக் குண்டிளைஞர்களுக்கு, அவர்கள் குஞ்சாமணிகளாக இருக்க விழையும் தாய்த்திராவிட இயக்கத்துக்கு – ஒரு கொள்கைப் பிரகடனத்தை, மாநாட்டு அறிக்கையை, வரவேற்பிதழை தமிழில் அளிக்க முடியாத கையறு நிலை என்பது படு கேவலம்! இருந்தாலும் பரவாயில்லை என்று மேலே படித்தால் ஒரே சிரிப்பு!!
ஆனால் குமாமா-வினருக்கு, நவீன திராவிட ராமானுஜன்களுக்கு – 62 என்பது 60தை விடச் சிறியது என்ற மேலான எண்ணமோ?
இரண்டரை மாணவர்களெல்லாம் இருக்கக்கூடும் என்ற குமாமாவினருடைய ஞானம் குறித்து – எனக்குப் புல்லரிக்கிறது. Two or Three (2 அல்லது 3) Two to Three ( 2 லிருந்து மூன்று) என்பதற்குள்ள வித்தியாசம் புரியவில்லை இவர்களுக்கு. ஆகவேதான் இரண்டரை மாணவர்களில் குறைந்த பட்சம் ஒரு மாணவ அரைகுறை இருக்கவேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். தங்கள் திறமையை/தகுதியை அவர்களே உணர்ந்துள்ளமை எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது!
மேலும், போட்டியாள 2.5களுக்கு குமாமாவினர் கொடுத்திருக்கும் குறிப்புகளும், எங்கிருந்தெல்லாம் 2.5கள் சுடலாம் என்ற பரிந்துரையும் மிக அழகோதிஅழகு. பத்தேபத்து ஸ்லைட்களில் தமிழகத்தை உய்விக்க வைப்பதற்குக் கொடுத்திருக்கும் சட்டகம் அலாதியாக இருக்கிறது.
ஆக, இவர்களை வாழ்த்த வயதும் மனதும் இல்லை. சுணங்கி மகிழ்கிறேன்; வேறென்ன வழி! :-(
அதே சமயம், குமாமாவினர் அவர்கள் பக்கத்தில் கொடுத்திருக்கும், இக்கல்லூரி குறித்த கூக்ல் மேப் வரைபடத்தைக் கீழே கொடுப்பதில் எருமையடைகிறேன்.
இதில் உணவகத்துக்கு மிக முக்கியமான நிறமும், பராக்கிரமும் அளிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தால் – எனக்கே ஞானப்பசி, மன்னிக்கவும், யானைப்பசி எடுக்கிறது.
இசுடாலிர் நிகழ்த்திய உரை பற்றி:
சரி. அந்தப் பையன் சொன்னவற்றைக் கேட்டால் என்னால் நம்பவே முடியவில்லை – தமிழகத்தின் முதலமைச்சராக விரும்பும் ஒரு மனிதர், இப்படியா துளிக்கூடப் பொறுப்பேயற்று விடலைத்தனமாகப் பேசவார் என்று! அதுவும், மாணவர்களை ஊக்குவிக்க வேண்டிய சமயத்தில், கல்வி நிலையங்களை மதித்து நாலு வார்த்தை பேச வேண்டிய தருணத்தில், தமிழகத்தின் மேன்மைக்காக இளைஞர் பங்களிப்பை பகிரங்கமாக கோர/விழையவேண்டிய கட்டத்தில் – இப்படியா உளறிக் கொட்டுவார் என்று!
ஆக, அம்மணி ஜெயலலிதாவுக்கு மாற்றாக இந்த மனிதர்தான் தமிழகத்துக்கு வாய்க்கும் என்றால் அது தமிழகத்தின், இந்தியாவின் துர்பாக்கியமாகத்தான் இருக்கும் என நினைத்தேன்.
அதே சமயம், அந்தப் பையன் கொடுத்த இசுடாலிர் பேச்சின் சாராம்சத்தையும் என்னால் நம்ப முடியவில்லை. அவனுடைய பேச்சுக் கேட்கும் திறனைச் சந்தேகித்தேன். அது தவறு. ஏனெனில் நேற்று, இசுடாலிர் அப்படி என்னதான் பேசியிருப்பா என ஏதாவது இணையப் பத்திரிகை பக்கங்களில் வாசிக்கமுடியுமா என்று கொஞ்சம் தேடினால், இது தொடர்பாக அந்த ‘ஆனந்த விகடன்’ செய்திக்குறிப்பைப் படிக்க நேர்ந்தது. சோகம்தான், வேறென்ன சொல்ல. அந்தப் பையன் சொன்னதைவிடவும் மோசமாகப் பேசியிருக்கிறார் இசுடாலிர்.
“பல ஊர்களில் இருந்து மாணவர்கள் வந்திருக்கிறீர்கள். உங்களை பார்த்து பொறாமைப்பட்டதால் நான் வேட்டி சட்டையை விடுத்து பேண்ட் சட்டையில் வந்துவிட்டேன்.
“என்னுடைய கல்லூரி வாழ்க்கையில் நான் வகுப்புகளை, கட்டடித்துவிட்டு எம்.ஜி.ஆர். படங்களுக்கு போனதுண்டு.
அல்லது அப்படிக் கட் அடித்ததனால்தான், இப்படி ஒரு பாவமான திரிசங்கு நிலையில் இருக்கிறேன், ஊழல்களைச் செய்திருக்கிறேன், ஆகவே ஒழுக்கத்துடன் இருங்கள் என்கிறாரா?
அதென்ன எம்ஜிஆர் படம்? இதென்ன திடீரெக்ஸ் அபிமானம்? இசுடாலிரே முன்னால் பலமுறை பண்பற்றுப் பொதுக்கூட்டங்களில் சொல்லியது போல, அப்போது எம்ஜிஆர் ஒரு மலையாளியோ, குழறுவாயனோ, கோமாளியோ அல்லது தொப்பித்தலையனோ இல்லையா? எப்போது அஇஅதிமுக கட்சிக்குத் தாவினார், இசுடாலினார்?
மேலும், இசுடாலிருடைய அடிப்பொடிகள் நடத்தும் கல்லூரிகளில் படிப்பதை விட இக்கால விஜய்குஜய் படங்களுக்குச் சென்றால், மாணவமணிகள் இன்னமும் உய்யலாம் என்கிறாரா? இதுவும் ஒருவேளை நகைச்சுவையாக இருக்கலாமோ?
“பேராசிரியர்களிடம் வம்பு பண்ணிய நாட்கள், எனக்கு நினைவுக்கு வருகிறது.
“பேராசிரியர்களை போல வறுத்தெடுக்க விரும்பவில்லை.
ஆ! இதையெல்லாமா, இப்படியெல்லாமா படுகேவலமாகப் பேசுவார்கள்? (ஒரு வேளை இவற்றையெல்லாம் ‘பேராசியர்’ அன்பழகன் அவர்களை மனதில் வைத்துக்கொண்டு சொன்னாரோ?)
இதெல்லாம் இருக்கட்டும் – இந்த அற்பப் பிரதாபங்களையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பேராசிரியர்கள் ஒருவராவது இதற்கெதிராக ஒரு வார்த்தை சொன்னார்களா? வெளி நடப்பு செய்தார்களா? (பையன் சொன்னான், எல்லாரும் சிரித்தார்களாம்! ங்கொம்மாள, தமிழகமே ஒர்ரே சிர்ப்போதிசிர்ப்புதாண்டா டேய்! :-( )
நம் கல்விக் கூடங்களை, பாவப்பட்ட பேராசிரியர்களை இப்படியா இழிவு செய்வது?
அந்தக் கல்லூரியின் திராவிடக் கல்வித் தந்தையாவது இதனை எதிர்த்து ஒரு வார்த்தை சொன்னாரா? நபும்ஸகர்கள். இப்படிக் கல்வியை மதிக்காமல், கல்வி பயிற்றுவிப்பவர்களை மதிக்காமல், கல்லூரிக் கசாப்புக் கடையை நடத்துவதற்கு, மாணவர்களை ஒழித்துக் கட்டுவதற்கு, நரகம் என ஒன்றிருந்தால் இவர்களெல்லாம் சித்திரவதை செய்யப்படவேண்டும்.
இந்த இசுடாலிர் மனிதர், எதிர்காலத்தில் முதலையமைச்சராக வரும் துர்பாக்கியம், தமிழகத்துக்கு ஏற்படவே கூடாது!
“பேஸ்புக், கூகுள், விப்ரோ, இன்போசிஸ் போன்றவை தமிழகத்தில் இருந்து உருவாக்கபட வேண்டும். வித்தியாசமாக சிந்திக்கும் ஆற்றலை பெறுங்கள்.
ஆ! வித்தியாசமாக சிந்தித்து பழையவற்றையே காப்பியடிப்பது எப்படி! :-)
…இந்த ஒரு நகைச்சுவைக்காகவே இசுடாலிர் அவர்களை அடுத்த முதலமைச்சராக்கிவிடலாமோ?
நாகரீகக் கோமாளி சார்லி சாப்ளின் அவர்களே ஒரு மகாமகோ சர்வாதிகாரியாக நடித்திருக்கும் போது, நகைச்சுவையுணர்ச்சி ததும்பும் எம் தலைவர் ஆனானப்பட்ட இசுடாலிர் அவர்களை, கேவலம், ஒரு முதலமைச்சராக நடிக்கவைக்க நம்மால் முடியாதா என்ன? ஹ்ஹ…
-0-0-0-0-0-0-
பின்குறிப்பு: அந்த ஆனந்தவிகடன் பக்கம்: கல்லூரி நாட்களில் கட்டடித்துவிட்டு எம்.ஜி.ஆர். படங்களுக்கு போவேன்: மனம் திறந்த மு.க.ஸ்டாலின்! [Posted Date : 09:26 (12/09/2015]
September 18, 2015 at 07:26
பேராசிரியர்களை போல வறுத்தெடுக்க விரும்பவில்லை.///
அபத்தம் …சொல்வதற்கு ஒன்றும் இல்லை .
September 20, 2015 at 08:35
PAPARA VIZHAM PESUTHU
DALAPATI WILL BE NEXT CM
YOU JUST WAIT AND SEE
TAMIL WILL WIN AND WE WILL CHASE ALL ARIANS
September 20, 2015 at 15:14
பாப்பானை விறட்டுவோம்
தளபதிஐய விடலை என்ககிறாயே நீ யார்? அடுத்த முதல ஐம்ச்சர்
September 21, 2015 at 07:34
அய்யா பாவம் ..தமிழை விட்டு விடுங்கள் … அதற்கு ஏற்கனவே பல ஆப்புகள் .. நீங்கள் வேறு எதற்கு ..
September 18, 2017 at 13:22
[…] மேலும். […]
October 31, 2017 at 15:21
[…] கல்வித்தந்தைகளும் மாமாக்களும் ‘மாபெரும் மாணவர் மன்றம்‘ போன்ற பெயரைக்கேட்டாலே படுபயங்கர […]
June 17, 2020 at 20:11
[…] மகாமகோ குண்டோதிகுண்டு மாணவர் மன்றம்:…16/09/2015 […]