9/11 நிகழ்வுக்குப் பின், முஸ்லீம் இளைஞர்களுக்கு மேலதிகமாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி? (1/4)
September 22, 2015
சுமார் இரண்டரை வருடமுன்பு எழுதிய பதிவைப் படித்தால், இதன் பின்புலம் கிடைக்கும்: களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி? (26/02/2013)
அப்பதிவின் முடிவில் இப்படி எழுதியிருந்தேன்:
இந்த விஷயத்தில் மூன்று கேள்விகளை மட்டுமே நான் என் சொந்த அனுபவம் சார்ந்து, என்னால் இதுவரை செய்யமுடிந்த சில கோமாளித்தனமான விஷயங்கள் சார்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். (வாழ்க்கையே ஒரு பெரிய நகைச்சுவைதான்!)
- முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி?
- முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?
- எதற்கெடுத்தாலும் முஸ்லீம் இளைஞர்களைக் குறி வைத்துத் தொந்திரவு செய்கிறார்களா, காவல் துறையினர்? அப்படியா என்ன? என்ன நடக்கிறது?
பின்னர், நேரம் கிடைக்கும் போது, என் அனுபவத்திலிருந்து, முஸ்லீம் சமூகத்துக்கு பிற சமூகத்தினர் ஆற்ற வேண்டிய, ஆற்றக் கூடிய கடமைகள் / விஷயங்கள் என்ன (= காதலிப்பது) என்பதையும், ஏன் அப்படிச் செய்யவேண்டும் என்பதையும், அச்சமூகம் எப்படிச் சில விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும், ஒரு சமூக-மானுடவியல் மாணவனாக, ஒரு காதலனாக (கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாகவே) எழுதலாமென்றிருக்கிறேன். (எனக்கு வெறிதான், சந்தேகமே இல்லை)
-0-0-0-0-0-0-
இதில் இரண்டாவதை இந்தப் பதிவு வரிசையில் எழுதுகிறேன்: முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?
அரவிந்தன் கண்ணையன்: அதீநியம் Vs அநீதியம்
September 11, 2015
இவ்வரிசையின் முதற்பகுதி: அரவிந்தன் ‘அதீநியம்’ கண்ணையன்: ஒரு புதிர் (1/n)
அக அவர்களின் தேவையேயற்ற நிந்தனை குறித்த, அவர் பிரதிநிதித்துவப் படுத்தும் கருத்துகளைக் குறித்த உரத்த சிந்தனை தொடர்கிறது, பாவம், இதைப் படிக்கும் நீங்கள்…
இரண்டுமூன்று தினங்களுக்கு முன் பத்ரி அவர்களின் முக்கியமான, சரியான நேரத்தில் வெளிவந்த பதிவில் (= விண்வெளிப் பயணங்கள்) – அதன் பின்னூட்டங்களுக்கும் சேர்த்து – ஒரு விஸ்தாரமான பின்னூட்டமிட்டிருந்தேன். ஆனால் அது வெளிவரவில்லை/பதிக்கப்படவில்லை; ஏதாவது ஸ்பேம் முடக்கம் போன்ற காரணங்கள் இருக்கும். அல்லது ஐபி பேக்கெட்டுகளை, ஏதாவது வழித்தடப் பிசாசு (=டீமன்) உண்டு ஏப்பமும் விட்டிருக்கலாம்!
ஆனால் – அதற்காக, என் மேலான கருத்துகளைத் தெரிவிக்காமல் இருக்க முடியுமா, சொல்லுங்கள்? ;-) Read the rest of this entry »
அதாவது: மொஹெம்மத் நபி அவர்களின் வழி நடத்தலில் ஒரு ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத் போன்ற மனிதரெல்லாம் உருவாக முடியும் என்றால் ராமசாமியாக நான், வெறும் ஒரு அப்துல்லாவாகப் பதவியிறக்கம் பெறமுடியாதா என்ன? :-)
இது சென்ற பதிவின் (=இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (6/n) 18/08/2015) தொடர்ச்சி. அதாவது – இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (7/n) Read the rest of this entry »
இந்தப் பகுதி: இந்திய முஸ்லீம் சமூகத்தின் ஏகோபித்த சுயலாப–பழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில குறிப்புகள் (6/n) என்றறிக. இந்த வரிசையில் முதற் பகுதி: 1/n; இரண்டாம் பகுதி: 2/n; மூன்றாம் பகுதி: 3/n; நான்காம் பகுதி: 4/n. ஐந்தாம் பகுதி: 5/n.
கொர்-ஆன், இஸ்லாம் மத ஸ்தாபகர் மொஹெம்மத் நபி அவர்கள், அக்கால அரேபியச் சூழ்நிலை போன்ற விஷயங்கள் பற்றிய என் குறிப்புகளுக்கு ‘மொஹெம்மத்’ எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் அன்பர் ஒருவர் பின்னூட்டம் இட்டிருக்கிறார். ஆனால், என் வழக்கம்போல அங்கேயே பதிலிடாமல், உரையாடலின் அவசியம் கருதி, தனியாக இந்தப் பதிவை எழுதுகிறேன்.
பாலநடராஜா ‘சின்ன பாலா’ ஐயர்: சில நினைவுகள், குறிப்புகள்
August 16, 2015
இன்று ஆகஸ்ட் 16 – சரியாகப் பதினொன்று வருடங்களுக்கு முன், மனித நேயம் மிக்கவரும், பண்பாளரும் ஆன ‘சின்ன பாலா‘ அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட தினம்.
மகாமகோ லக்ஷ்மண் கதிர்காமர்: சில நினைவுகள், குறிப்புகள்
August 12, 2015
ஸ்ரீலங்காவின் லக்ஷ்மண் கதிர்காமர் அவர்கள், ஸ்ரீலங்கா தமிழர்களின், ஏன் மானுடத்தின் எதிரிகளுமேயான தறுதலைப் புலி ‘எல்டிடிஇ’ கொலைகாரர்களின் முடிவை, அவர் ஸ்ரீலங்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது ஆரம்பித்து வைத்ததால், படுகொலை செய்யப்பட்டவர்.
இன்று (12 ஆகஸ்ட்) அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தினம். அவர் கதை 2005ல் முடிந்து பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன என்றாலும் அவர் தொடங்கிய முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று(=எல்டிடிஇ அயோக்கியர்களுக்குச் சாவுமணி), ஒரளவுக்கு நன்றாகவே நிறைவேறியிருக்கிறதுதான்!
சரி. பல இடங்களிலும் சேகரம் செய்யப்பட்ட என்னுடைய பழைய குறிப்புகளில் இருந்தும் சிதைந்துகொண்டிருக்கும் மங்கல் நினைவுகளிலிருந்தும், லக்ஷ்மண் கதிர்காமர் அவர்கள் தொடர்புள்ள சில விவரங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். ஆனால், இதற்கு நான் சந்தோஷப்படுவதா அல்லது சோகமுறுவதா என்று தெரியவில்லை; sad contemporary history is a tough mistress, indeed! :-( ஹ்ம்ம்… Read the rest of this entry »
இந்தப் பகுதி: இந்திய முஸ்லீம் சமூகத்தின் ஏகோபித்த சுயலாப–பழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில குறிப்புகள் (5/n) என்றறிக.
இந்த வரிசையில் முதற் பகுதி: 1/n; இரண்டாம் பகுதி: 2/n; மூன்றாம் பகுதி: 3/n; நான்காம் பகுதி: 4/n.
…எது எப்படியோ, மற்ற இந்தியர்களைப் போலவே – நம் சக இந்திய முஸ்லீம்களும் (குறிப்பாக என் தமிழக முஸ்லீம்களும்) ஆத்ம பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய, தங்களுக்குள்ளேயும் பிறபண்பாடுகளுடனும் பொறுமையுடன் உரையாடவேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். இந்த ஆத்ம/சுய பரிசோதனைக்கு எவரால் உதவமுடியுமோ அவர்கள் உதவினால் – அது ஒட்டுமொத்த மானுடமேன்மைக்குக்கூட உதவும் எனவும் நினைக்கிறேன்.
Read the rest of this entry »
(அல்லது) முஸ்லீம் சான்றோர்கள்-சிந்தனையாளர்கள், தொழில்முறை மனிதவுரிமைக் காரர்கள் அவரவர்களின் சொந்தக் காரணங்களிளால் காரியஅமைதி காக்கும்போது — அற்ப அரைகுறை ஜிஹாதிகளை ஆகர்ஷித்து அவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது எப்படி :-)
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் – எனும் அயோக்கிய, கொடும்வன்முறை ஆதரவு (=பாரத எதிர்ப்பு) அமைப்பு: சில குறிப்புகள்
July 19, 2015
மானமில்லாமல் – படுகேவலமாகத் திருவோடு ஏந்தி உலகெல்லாம் பிச்சை எடுத்து அந்தப் பணத்தில் பாரத கலாச்சாரத்தை உய்விக்க, அட்டைக்கத்தி (= கத்தி + கத்திக்கத்தி) போராட்டங்களை டீவி கேமராக்கள் முன் ஏகோபித்து மினுக்கிக்கொண்டு நடத்த, சமூக நீதிக்காகவென என்றெல்லாம் இந்தியாவில் பலப்பல என்ஜிஓக்கள் – எழவெடுத்த தன்னார்வ போங்காட்ட நிறுவனங்கள் இருக்கின்றன.
இவை பெரும்புகழும் பேரும் பெற்று – தொந்தி தள்ளக் கொழுத்து, நடக்கமுடியாமல் ஆனால் வீராவேசம், சமதர்மம், மனித உரிமை, பண்பாட்டுப் பாதுகாப்பு, சமூக/இயற்கைச் சூழல் பாதுகாப்பு என அலைந்து கொண்டிருக்கும் இருக்கும் மனிதர்களால் – மன்னிக்கவும், தொழில்முறைக் கொள்ளையர்களால் நடத்தப் படுகின்றன.
Read the rest of this entry »
கடந்த சிலவருடங்களாகவே ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் அவர்களின் அமைப்பு – உலகளாவிய பார்வையுடன் சமூகச் சிடுக்கல்கள், கொடும்தீவிரவாதங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அதன் பாவப்பட்ட மனிதத் திரள்களுக்காக களப்பணி ஆற்றி வருகிறது. ஆனால், இதனைப் பற்றி அது தம்பட்டமோ, போஸ்டரோ அடிப்பதில்லை. பெரும் நம்பிக்கையையும் உழைப்பையும் மட்டுமேகொண்டு அவ்வமைப்பினரும் அவர்கள் தலைவரும், படாடோபமில்லாமல், வீண்விளம்பரமில்லாமல் பணி செய்து வருகின்றனர்.
ஆம்பூர் அட்டூழியங்கள், தமிழகத்தில் இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு ஆதரவு, என் தம்பி – நடைமுறை தமிழக இஸ்லாம் (2/3)
July 15, 2015
இந்த வரிசையில் முதல் பதிவு: இந்திய முஸ்லீம் சமூகம், அதன் ஏகோபித்த சுயலாப-பழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில கருத்துகள் (1/3); இதனைப் படித்து விட்டுத் தொடரலாம் – உங்களுக்கு இதனைப் படித்தேயாக வேண்டுமென்றால்…
(தொடர்ச்சி) இப்பதிவு வரிசையை, நான் இப்போது எழுதுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள்:
-0-0-0-0-0-0-
(அல்லது) ரமதான் மாத மனஅழுத்தங்கள்
… என் மகன், அவன் வகுப்புக் குழந்தைகளுடன் பள்ளிக்கு அருகில் இருக்கும் ஒரு முஸ்லீம் பெரும்பான்மை கிராமத்துக்கு – சென்றவாரம் போயிருந்தான்; மதியத்திலிருந்து சாயங்காலவேளை வரை அவர்கள் அங்கு கழித்திருக்கிறார்கள். மாலை மயங்கும் நேரத்தில் அக்கிராமத்தினர் அன்புடன் அளித்த இஃப்தார் விருந்தில் (ரமதான் நோன்பு முடிக்கும் தருணம்) கலந்துகொண்டு, அங்குள்ள மதறாஸாவின் குழந்தைகளுடன் அளவளாவி கண்டமேனிக்கும் இனிப்புகளை சந்தோஷமாக, வயிறு உப்ப உண்டுவிட்டு – வீட்டுக்கு வந்து, இரவு உணவுவேண்டாம் என்று சொல்லித் தூங்கியே விட்டான். :-)
![என் மகனின் ஆங்கிலமூல நாட்குறிப்புகளில் இருந்து ஒரு பகுதி: ... [நாம் வீட்டில் பாடும்] அல்லாஹூ பாட்டுபோன்ற ராகத்தில் ஒரு பாட்டை அவர்கள் பாடினர் - அதன் பெயர் முஸ்தஃபா. அவர்கள் மிக அழகான வெண்மை நிற ஆடைகளை, தொப்பிகளை அணிந்திருந்தனர். அவர்கள் ஜிப்பாக்களுக்குக் காலர்கள் இருந்தன. மதறாஸாவின் ப்ரின்ஸிபல் பெயர் இப்ரஹீம். அவர் நான்கு ஆண்டுகளாக அங்கு ஆசிரியராக இருக்கிறார். [கிராமத்தில்] மஸ்ஜித் 42 ஆண்டுகளாக இருக்கிறது... ...](https://othisaivu.in/wp-content/uploads/2015/07/screenshot-from-2015-07-09-211242.png?w=300&h=232)
என் மகனின் ஆங்கிலமூல நாட்குறிப்புகளில் இருந்து ஒரு பகுதி: … [நாம் வீட்டில் பாடும்] ‘அல்லாஹூ’ பாட்டுபோன்ற ராகத்தில் ஒரு பாட்டை அவர்கள் பாடினர் – அதன் பெயர் ‘முஸ்தஃபா.’ அவர்கள் மிக அழகான வெண்மை நிற ஆடைகளை, தொப்பிகளை அணிந்திருந்தனர். அவர்கள் ஜிப்பாக்களுக்குக் காலர்கள் இருந்தன. மதறாஸாவின் ப்ரின்ஸிபல் பெயர் இப்ரஹீம். அவர் நான்கு ஆண்டுகளாக அங்கு ஆசிரியராக இருக்கிறார். [கிராமத்தில்] மஸ்ஜித் 42 ஆண்டுகளாக இருக்கிறது… …
ஆனால் இப்பேச்சு கொடுத்த உந்துதலால், மேலதிகமாகச் சிலபல காரணங்களால், நான் இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன். :-(
நலம். நலமறிய அவல், வெறும் வாய்க்கு! (அதுவும் சுமார் 1500 வார்த்தைகளில்!)
ஒரு திருத்தம்: பாவம், எம்ஜிஆரை போயும்போயும் கருணாநிதியாக்கி விட்டேனே! மன்னிப்பு உண்டா? :-(
July 2, 2015
நேற்றைய பதிவில் (பாவப்பட்ட தமிழகத்தின் அயோக்கிய திராவிடக் கொள்ளைக்காரர்கள் பற்றிய பழங்கதையாடல்களின் தேவை) கீழ்கண்டவாறு எழுதியிருந்தேன்.
/* ஒரு எடுத்துக்காட்டாக – நீதிபதி பால் கமிஷன் என்று ஒன்றிருந்ததா, அதன் குறிக்கோள் என்ன, கருணாநிதி அரசின்போது அதன் ரிப்போர்ட் எப்படி மாயமாகக் ‘காணாமல்’ போனது என்பதெல்லாம் யாருக்குத் தெரியும்? */
இதில் கருணாநிதி என்பது எம்ஜிஆர் என இருந்திருக்கவேண்டும். என் தவறு. ஆச்சரியம் என்னவென்றால், ஒருவரும் இதுவரை இதைச் சுட்டிக் காட்டவில்லை! ‘கருணாநிதி எதிர்ப்பென்றால், கண்ணை மூடிக்கொண்டு எந்த எழவை வேண்டுமானாலும் படிப்போம்!’ என்றிருப்பவர்கள் மட்டுமே ஒத்திசைவுக்கு வருகை தருகிறார்களா என்ன? ;-) ஆனால், அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நம் தலைவரின் நம்பகத் தன்மை என்பது அப்படிப்பட்ட பராக்கிரமம் வாய்ந்தது, வேறென்ன சொல்ல!
பாவப்பட்ட தமிழகத்தின் அயோக்கிய திராவிடக் கொள்ளைக்காரர்கள் பற்றிய பழங்கதையாடல்களின் தேவை
July 1, 2015
- கேடி சகோதர தயாநிதி மாறன், அமெரிக்க தூதரக அதிகாரியிடம், கருணாநிதி + திமுகஆட்சி பற்றிச் சொன்னது என்ன? 30/06/2015*
- அமெரிக்காவின் ஆச்சரியம்தரும் துல்லியமான கணிப்புகள்: கருணாநிதி, திமுக, அழகிரி, இசுடாலிர், கனிமொழி… 29/06/2015*
- அமெரிக்காவுக்கு 1976லேயே தெரியும், கருணாநிதி அவர்கள், திமுக தலைவர் பொறுப்பிலிருந்து தானாக விலகவேமாட்டாரென்று… 20/06/2015*
- மாறன்கள், மாறவே மாட்டான்கள்! 24/01/2015
- உதிரிகளின் தொடர்கதை: மாறன்கள், மாற மாட்டான்கள்… 11/04/2011
கேடி சகோதர தயாநிதி மாறன், அமெரிக்க தூதரக அதிகாரியிடம், கருணாநிதி + திமுகஆட்சி பற்றிச் சொன்னது என்ன?
June 30, 2015
இந்தக் கருத்துகள், மேதகு தயாநிதி மாறன் (= பிஏ-எகனாமிக்ஸ் படித்து, லயொலா கல்லூரிக்குப் பெருமை தேடித்தந்தவர் + முன்னாள் மத்திய அமைச்சர் + ‘சுடுவதை’ பொழுதுபோக்காகக் கொண்டவர்: ஆதாரம்: இந்திய அரசின் வலைத்தளம்; மேலதிகமாக – உழையோஉழை என திராவிடத்தனமாக உழைத்து வெளியிலே பகிரங்கமாகத் தெரிந்தே 2010லேயே ரூ 17,000 கோடி சொத்துகளுக்கு அதிபதியாக இருந்த கலாநிதி மாறனின் ச கோதரர். ஆதாரம்: கலாநிதி மாறனின் வலைத்தளம்; மேல்மேலதிகமாக – வருடம் சுமார் ரூ 60 கோடி சம்பளம் பெறும் காவேரி கலாநிதி மாறனின் மைத்துனர். ஆதாரம்: ப்லூம்பர்க் தளம்) – ‘கருணாநிதிகளின் உள்வட்டத்திலிருந்து’ 2007 இறுதிவாக்கில் துரத்தப்பட்ட பின் அவரால் உதிர்க்கப் பட்டவை.
… ஆனால் பலவிதங்களிலும் கருணாநிதிகள் பழம்பெரும் திராவிடப் பாரம்பரிய வகைமுறைகளின்படி அமோகமாகக் ‘கவனித்துக்கொள்ளப் பட்டு’ பின்னர் மிகுந்த நெகிழ்வளிக்கும் வகையில் ‘இதயம் இனிக்க, கண்கள் பனிக்க’ மேலதிகமாக ‘தேனை பிழிந்தெடுத்தபின், விடாமல் கூடவே புறங்கையையும் நக்க’ அவர்களுடன் கேடி சகோதரர்கள், ஏகோபித்து மீண்டும் ராசியானதற்கு முன்பாக – விரக்தியின் காரணமாக உண்மை விளம்பப் பட்டவை. Read the rest of this entry »
அய்யய்யோ! கொஞ்சம் பெரிய தலைப்பாகிவிட்டதே! (ஆனால், மன்னிக்கவேண்டாம்!)

கருணாநிதி: செம்மர கடத்தல் கேஸை, சிபிஐ-க்குக் கொடுத்தால்தான் உண்மை வெளிவரும்… (‘த ஹிந்து’ தினசரி, 18 ஜூன் 2016); இதன் தமிழ்ஹிந்து தினசரி வடிவம் இங்கே: செம்மரக் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க கருணாநிதி வலியுறுத்தல்
தம் கடந்தகால குற்றங்களுக்கெல்லாம் பரிகாரம் தேடிக்கொள்ள அந்திமகாலத்தில் முயல ஆரம்பித்துவிட்டார் என எண்ணி எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நெகிழ்வெழுத்துகளைப் படித்து நெகிழோநெகிழ் என என் லுங்கிகூட நெகிழ்ந்து போவதைப் போல உணர்ந்தேன்…
என்னுடைய கேளிக்கைப் பொழுதுபோக்குகளில் ஒன்று – என்னுடைய செல்ல சக-திராபை திராவிடர்கள் வீரத்துடன் சுழற்றும் இனமான எழுச்சிப்போராளி அட்டைக்கத்திகளைப் பார்த்து இறும்பூதடைவது.
என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு ஆழமான அர்த்தத்தை உருவாக்குபவர்கள் இவர்கள்தாம். ;-)

