ஆம்பூர் அட்டூழியங்கள், தமிழகத்தில் இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு ஆதரவு, என் தம்பி – நடைமுறை தமிழக இஸ்லாம் (2/3)
July 15, 2015
இந்த வரிசையில் முதல் பதிவு: இந்திய முஸ்லீம் சமூகம், அதன் ஏகோபித்த சுயலாப-பழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில கருத்துகள் (1/3); இதனைப் படித்து விட்டுத் தொடரலாம் – உங்களுக்கு இதனைப் படித்தேயாக வேண்டுமென்றால்…
(தொடர்ச்சி) இப்பதிவு வரிசையை, நான் இப்போது எழுதுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள்:
-0-0-0-0-0-0-
…ஒழிக்கப்பட்டது நம் வரிப்பணம், நம்முடைய பணம் – அதாவது மக்கள் சமூகம் அரசுக்குக் கொடுத்ததுதான்! அழிக்கப்பட்ட ஒவ்வொரு பைசா பொதுச் சொத்திலும் என் பங்கும் இருக்கிறது. இதையே விடுங்கள் – எரிக்கப்பட்ட பேருந்துகள் முஸ்லீம்களை இதுவரை ஏற்றிக் கொள்ளவில்லையா? அவை என்ன பாவம் செய்தன? இவை எரிக்கப்பட்டதால் யாருக்கு நஷ்டம்?ஆனால் இன்னொரு பக்கம் – பயங்கரவாதத்துக்கு அயோக்கியத்தனத்துடன் வக்காலத்து வாங்கும் மனிதவுரிமைக்காரர்கள். நாசச் செயல்களை, படுகேவலமாகவும் கமுக்கமாகவும், பெரும்பாலும் கண்டுகொள்ளாமலேயே விட்டுவிட்ட ஊடகப் பேடிகள்.
முஸ்லீம் சமூகத் தலைவர்கள் – எரிக்கப்பட்டதெல்லாம், நாசம் செய்யப்பட்டதெல்லாம் சரிதான், அவையெல்லாம் எதிர்வினைகள்தான், அதுவும் அவற்றைச் செய்தது முஸ்லீம் அல்லாத பொறுக்கிகள்தான், அல்லது போலீஸ் துறையே இட்டுக்கட்டியதுதான் – என கமுக்கமாக வாதிடும் அற்பத்தனம்.
சரி. நான் அச்சு ஊடகங்களின் நிலையைப் பற்றி மட்டும்தான் இப்படி பேடிகள் எனச் சொல்கிறேன்; தொலைக்காட்சிச் சேனல்கள் இதுமாதிரிக் கேவலமாக நடந்துகொண்டனவா என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை; ஆனால், நான் தொடர்பு கொண்டு பேசிய ஓரிருவர், ஒன்றிரண்டு சேனல்களைத் தவிர, பெரும்பாலான தொலைக்காட்சிச் சேனல்களூம் இந்த பொதுச்சொத்து சேதாரங்களை பற்றி வெறும் இருட்டடிப்பு மட்டுமே செய்தார்கள் என்றார்கள். பேடிகள், வேறென்ன சொல்ல! இந்த நாசத்தையே பெரும்பான்மை மதத்தினரோ, ஜாதியினரோ செய்திருந்தால் இவர்கள் இட்டிருக்கக் கூடிய ஊளையே வேறு! (இதைத் தவிர இணைய முட்டாள் போராளிக் கூவான்கள் இதற்கு எப்படி எதிர்வினை புரிந்தார்கள் என்பது எனக்குத் தெரியாது)
இந்த அயோக்கிய ஊடகக் காரர்கள், மதச் சார்பின்மை எனும் பெயரில் – முஸ்லீம்களில் இருக்கும் பொறுக்கி கும்பல்களுக்கு ஆதரவு அளிப்பது – நீண்டகால நோக்கில், முஸ்லீம்களுக்கும் பாரதத்திற்கும் கேடு விளைவிக்க மட்டுமே செய்யும் என்று நான் கருதுகிறேன். ஆகவே – பொறுக்கித்தனத்தையும் இஸ்லாமையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் – தயவுதாட்சணியம் பாராமல், பொறுக்கித்தனம் நொறுக்கப் படவேண்டும் என்பதில் எனக்கு ஐயமேயில்லை. ஏனெனில் எந்த மதத்தைச் சார்ந்தவனான இருந்தாலும், மதம் சாராத(!) ஒரு அற்ப திராவிடனாக இருந்தாலும் பொறுக்கி என்று வந்தால், அவன் பொறுக்கி மட்டுமேதானே! அவர்கள் களையெடுக்கப் படவேண்டியவர்கள்தாமே!
என்னுடைய வேலூர் பக்க நண்பர் ஒருவர் ( சுமார் 22 வருடங்களுக்கு முன்னர், நான் ஜவுளி தொடர்புள்ள ஒரு சிறு தொழிற்சாலையை, கொஞ்சம் ஏனோதானோவென்று நடத்திவந்தேன். அப்போதிலிருந்து இவரை எனக்கு நன்றாகத் தெரியும்) சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
இவர் ஒரு முஸ்லீம்; இந்தியாவில் வசிப்பதில் பெருமைப்படுபவர்; கேடுகெட்ட ஸவுதி அரேபியா என்று வேலைக்குப் போகாமல் இங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்; ஹிந்துக்களின் தாலி ஒரு பெண்ணடிமைச் சின்னம் எனக் காட்டமாகக் கருத்து தெரிவித்தாலும், தம் மனைவி பர்தா போடுவதை விரும்புபவர். ஆனால் அதிசயிக்கத்தக்க வகையில் இதன் சோகமுரணைக்(ஐரனி) காண முடியாதவர்; இஸ்லாமில் ஜாதிகளே, பூசல்களே இல்லை அனைத்தும் ஒர்ரே சகோதரத்துவம்தான் பாய்பாய்-தான் என்றெல்லாம் தம்மையறியாமலேயே நகைச்சுவையுணர்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் அவர், வெள்ளை நிற முஸ்லீம்களின் விசிறி – அதே சமயம், கறுப்பு/பழுப்பு நிற முஸ்லீம்களைக் கேவலமாகக் கருதுபவர்தான்! அவருடைய தோலின் நிறம் கொஞ்சம் வெள்ளை. வ்ந்தேறி முஸ்லீம்களால் (= அண்மையில் மதம் மாறியவர்கள்) உம்மாவே கெட்டுக்கொண்டிருக்கிறது, வன்முறை பெருகிக் கொண்டிருக்கிறது என்று கருதுபவர். கடந்த ஒரு வருடமாகத்தான் ஷியாக்களைக் கரித்துக்கொட்டுவதை (குறைந்த பட்சம் என் முன்னர் அப்படிப் பேசுவதை) நிறுத்தியுள்ளார் என்பதும் இன்னொரு சோகமுரண்.
மற்றபடி இவர் ஒரு பாவம் ஆசாமிதான். வெறும் பெத்த பேச்சு பேசுபவர்தான், அடிப்படையில் நல்ல மனிதர்தாம்! பழைய ஹிந்தி திரைப்படப் பாடல்களை (=மொஹெம்மத் ரஃபி) அருமையாகப் பாடுவார். அழகான குரல்வளம்; நல்ல ஹிந்தி உச்சரிப்பு.
நேற்றுமுன் தினம், அவர் எடுத்த (+பிற) அட்டூழியங்கள் தொடர்பான கைபேசிப் புகைப்படங்களை, கொஞ்சம் வருத்தத்துடன் எனக்கு அனுப்பியிருந்தார்.
… இவற்றினால் எனக்குத் தோன்றுவது என்னவென்றால் – கவலையளிக்கக்கூடிய வகையில் – இந்த தமிழ்ச் சமூகத்திக்கெதிரான, பொதுச்சொத்துகளுக்கெதிரான, காவல்துறைக்கெதிரான வன்முறைகள் திட்டமிட்டுச் செய்யப்பட்டவை போலப் படுகின்றன; இம்மாதிரி நிகழ்வுகள், முஸ்லீம் சமூகத்தைப் பற்றிய மதிப்பையும், சமூக நல்லிணக்கத்தையும் சிதைக்கும் தன்மையை மட்டும்தான் உடையவை. (இப்படங்களை நான் பிரசுரிக்க ஏலாது. ஏனெனில் நண்பரின் சித்தப்பா பையன் ஒருவனும் இந்த ரௌடி கும்பலில் இருக்கிறான். அவனை விட்டுக்கொடுக்க நண்பருக்கு மனமில்லை; தானாடாவிட்டாலும், மதச்சார்பில்லாமல் இருந்தாலும் – அவருடைய சதையானது ஆடும்தானே!)
சிரித்துக்கொண்டே கல்லெறியும், உச்சாடனம் செய்துகொண்டே தீவைக்கும் கும்பலின் ஊழி நடனம் என்னை வெறுக்கவைத்துவிட்டது. பாவப்பட்ட முஸ்லீம்களின் மத/அரசியல் தலைமை என்பது அயோக்கியத்தனமான ஒன்று.
இந்த அசிங்க நிகழ்வைப் பற்றி முன்னமே ஒரு தடவை எழுதியிருக்கிறேன்: ஸுன்னிமுதல்வாத இஸ்லாமிக்ஸ்டேட் வெறியர்கள், நேற்றும் 500க்கு மேற்பட்ட மாற்றுமத அப்பாவிகளைப் படுகொலை செய்தனர்! (+ இஸ்லாமிக்ஸ்டேட் கொலையாளிகளுக்கு, தமிழ் நாட்டில் ஆதரவும் சப்பைக்கட்டலும்) (02/05/2015)
இவர்களை எந்த முஸ்லீம் சமூக/மதத்தலைவரோ, அரசியல் தலைவரோ (இவ்விரண்டு பகுப்புகளுக்கும் வித்தியாசம் உண்டா என்ன?) கண்டித்தது போலத் தெரியவில்லை. சும்மா செல்லமாகத் தட்டிக் கொடுத்துவிட்டு (மனித நேய மக்கள்கட்சியின் ஜவாஹிருல்லா அவர்கள் உட்பட!) – பசங்களா இப்படி செஞ்சு மாட்டிக்காதீங்கடா, சமூக வலைத்தளங்களை ஜாக்கிரதையாக உபயோகீங்கடா – என்று தான், அதிக பட்சம் சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பையன்களும், வாய்கூசாமல் ஏதோ பொய் சொல்லிவிட்டுச் சுலபமாக தப்பித்து விட்டார்கள்!
‘பாவிகளா! நீங்கள் செய்திருப்பது நம் இந்தியாவிலுள்ள பிற மதத்தினரின் மீதான கொலைவெறித் துரோகம்‘ என்றேகூடச் சொல்லியிருக்கவேண்டாம்! ஆனால், ஒருவர் கூட ‘நீங்கள் இப்படிச் செய்தது கேவலம்’ என்றுகூடச் சொல்லவேயில்லை. ஆனால் தட்டிக் கொடுத்தார்கள். விருது வழங்கி அவர்களைக் கௌரவிக்கவில்லை என்பது ஒரு சந்தோஷமான விஷயம். கேவலம். :-(
தமிழக முஸ்லீம் மத/அரசியல் (இவ்விரண்டுக்கும் வேறுபாடுதான் உண்டா?) தலைவர்கள், முஸ்லீம்களின்-அவர்கள் நல்வாழ்க்கையின் அயோக்கிய எதிரிகள்!
அது மட்டுமல்ல – இவர்கள் பாரதத்தின் எதிரிகள். நம் ஜனநாயக நாடு கொடுக்கும் அனைத்து வசதிகளையும் அமோகமாக உபயோகித்துக்கொண்டு, மானுடச் சமூகத்துக்கு எதிரான நிலையை எடுக்கும் அற்பர்கள். இதில் எனக்குச் சந்தேகமே இல்லை.
இம்மாதிரி கமுக்கமான செயல்பாடுகளால், கொம்புசீவி விடுதல்களால் முஸ்லீம்களுக்குமே ஏற்படப்போகும் பிரச்சினைகளைப் பற்றி இந்தத் தலைவ அயோக்கியர்கள் கண்டுகொள்வதேயில்லை. ஏனெனில் இத்தலைவர்களின் மூலதனமே – பெரும்பாலான முஸ்லீம்களை ஏழ்மையில், படிப்பறிவில்லாமல் வைத்திருந்து – அவர்களுக்கு வெறுப்பையும் இயலாமையையும் மட்டுமே ஊட்டுவதுதானே! அப்போதுதானே அவர்களைத் தங்கள் கேவலமான சுய ஆதாயங்களுக்காக, மதத்தின் மூலமாக மூளைச்சலவை செய்து, நாசகாரியங்களுக்கு உபயோகப் படுத்திக்கொள்ளமுடியும்?
அப்போதுதானே இம்மாதிரி இஸ்லாமிக்ஸ்டேட் குஞ்சாமணிகளின் தமிழகப் பதிப்புகள் வீறு கொண்டெழுந்து தமிழகத்திலும் சர்வ நாசம் விளைவிக்க முடியும்?
- கர்ட் சித்திரக்காரர் உஸாமா ஹஜ்ஜஜ் அவர்களின் கைவண்ணத்தில்: ரமதான் மாதத்தில் இஸ்லாமிக்ஸ்டேட் கொலைகள்
ஆக, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் இருக்கும் ஷியாக்களின் மசூதி, இவர்களால் இடித்துத் தரைமட்டமாக்கப்படும் நாளும், முர்தத் மில்லி ஃபிட்ரி என்றெல்லாம் அழைக்கப்பட்டு ஷியாக்கள் ஓடஓட விரட்டப்படும் காலங்களும் வந்துவிடுமோ??
அதன் பிறகு, மற்றவர்களும் – க்றிஸ்தவர்கள், ஹிந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் எல்லாம் – முஷ்ரிக் முல்ஹத் காஃபிர் என்றெல்லாம் அழைக்கப்பட்டு, தமிழகத்தை விட்டு ஓடவேண்டுமோ?
அய்யய்யோ! நான் ஒரு காஃபிர் மட்டுமல்லாமல் ஒரு முல்ஹத்தும் கூட! என் கதி என்னாகுமோ தெரியவில்லை! ;-)
ஏற்கனவே ஒரு ஜிஹாதி அரைகுறை வேறு என் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று சொல்லியிருக்கிறது! :-) (ஜிஹாத், ஜிலேபி, ஜிகர்தண்டா 10/04/2015)
சோகம்.
எவ்வளவு சுலபமாக – இந்த தறிகெட்டோடும் ஜிஹாதி அரைகுறைகள், ஒட்டுமொத்த சமூகத்துக்கும் மாளா அவப்பெயரை வாங்கிக் கொடுக்கிறார்கள்! மகாமகோ சோகம்தான்.
காரணம் #3: என் தம்பியுடன் சில நாட்கள் முன்பு, நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.
அவன், ஸலாஃபி-வஹ்ஹாபிய இஸ்லாமின் கோரப்பிடிக்குள் படிப்படியாக, ஆனால் ஆனந்தமாக வீழ்ந்துகொண்டிருக்கும் (உபயம்: அந்த கேடுகெட்ட ஸவுதி அரேபியா + அந்த நாட்டின் அஜனநாயக மாக்கள்) நாடு ஒன்றில் கடந்த 4 ஆண்டுகள் போல வசித்துக்கொண்டிருக்கிறான் – ஒரு அரசு நிறுவனத்தின் உச்சாணிக் கிளை ஒன்றில் பணி. அவன் அங்கு நடந்துகொண்டிருக்கும் விவரங்களை விவரிக்க விவரிக்க, ஏனிப்படியாகிக் கொண்டிருக்கிறது என எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது.
அவன் வெகு நீளமாகப் பேசியதன் சாராம்சம்:
“வேற்று மதத்தினர்/நம்பிக்கைக் காரர்கள் வீட்டிற்குள்ளேகூட வழிபாடு செய்யமுடியாத கட்டுப்பாடுகள் உள்ள மோசமான நிலையையே விடு – சாதாரண முஸ்லீம்களையும், முஸ்லீம் பெண்களையும் மிகவும் கீழ்த்தரமாக நடத்தும் அவலம் பார்க்கச் சகிக்கவில்லை.
“இந்தியாவிடம் வெட்கமேயில்லாமல் மலையளவு உதவிகளை தொடர்ந்து வாங்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் – அதற்கான நன்றியுணர்வையே விடு – அதற்கு மாறாக இந்திய எதிர்ப்புணர்வு என்பது புகட்டப் படுகிறது. அது ஹிந்து எதிர்ப்புணர்வாகவும் – குறிப்பாக இக்கால இளைஞர்களிடம் பரிணாம வீழ்ச்சியடைந்திருக்கிறது.
“எனக்கே பயமாக இருக்கிறது. இந்த இஸ்லாம் வெறியர்களின் ஆட்டத்தைப் பார்த்தால், வெட்டிகுண்ட அடக்குமுறைகளையும், மதத் தலைவர்களின் வாயோர நுரை தள்ளல்களையும் பார்த்தால் – எதிர்காலத்தில், பலவீனமான தருணங்களில் – சாதாரண முஸ்லீம்களையே ஒருகால் வெறுக்க ஆரம்பித்துவிடுவேனோ என்று… “
பாவமாக இருந்தது அவனுடைய அனுதினப் பிரச்சினைகளை, மூச்சுமுட்டவைக்கும் மதவெறிச் சூழலை நினைத்தால்!
என்னைப் போலல்லாமல், அவன் கடவுள் நம்பிக்கை உள்ளவன். உளமாற மற்ற மதங்களையும் மதிப்பவன்; அந்த நாட்டில் வேலைசெய்யப் போயிருக்கும் பாவப்பட்ட பங்களாதேஷி, இந்திய உடலுழைப்பாள ஏழை முஸ்லீம்களுக்கும் பலவாறு உதவி செய்திருக்கிறான். தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான். குறைந்த பட்சம் ஒரு முறையாவது சென்னை ஆயிரம்விளக்கு மசூதிக்குச் சென்று தொழுகை செய்திருக்கிறான் எனக்கூட நினைவு.
அவனிடம் நான் வளவளாவென்று பேசியதன் சாராம்சம்:
“பயம் வேண்டாம்; உன்னிடம் அடிப்படை அறவுணர்ச்சி என்பது வேண்டிய அளவு இருக்கிறது. நீ யாரையும் வெறுக்க மாட்டாய்.
“மேலும் – இப்போதைய இஸ்லாமிய சமூகத்தின் ஒரே விடிவெள்ளியான கர்டிஸ்தானின் மகத்தான முஸ்லீம் திரளான கர்ட்கள் உருவாகி, மேலெழும்பி வருகின்றனர்; உலகளாவிய இஸ்லாமிய சமூகம் — அவர்களிடமிருந்தாவது சகிப்புத்தன்மையையும், பெண்களூக்குச் சரி நிகர் சமமாக மதிப்புக் கொடுக்கும் அறத்தையும், நகைச்சுவையுணச்சியையும், படிப்பறிவையும், மேன்மையடைதலையும், அடிப்படைகளை மறுபரிசீலன செய்யும் மனோதைரியத்தையும் – மிக முக்கியமாக – ஞானமும், அனுபவமும் மிகுந்த தலைமையையும் அமையக் கூடிய சாத்தியக் கூறுகளை — அதற்கான முன்மாதிரிகளை நிச்சயம் பெறுவார்கள்.
“எப்படியும் – நமக்கு நம் வாழ்க்கையின் மீது சரியான பிடிப்பு ஏற்பட – எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை என்பது முக்கியம் அல்லவா?
… எப்படியும் அவன், அடுத்த சில மாதங்களில் இந்தியாவுக்குத் திரும்பி விடுவான். ஆனால், அங்கிருக்கும் சாதா பொதுஜனங்களான பாவப்பட்ட முஸ்லீம்களை – முக்கியமாக முஸ்லீம் பெண்களை – நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. (அதைவிட – இரண்டாம்தர மனிதர்களாக அங்கு மாளா உழைப்பைக் கொடுக்கும், கிடந்து உழலும் பங்களாதேஷிகளை, இந்திய/நேபாளிகளை நினைத்தால் இன்னமும் பரிதாபமாக இருக்கிறது)
-0-0-0-0-0-0-
அடுத்த பதிவில் ‘க்வில்லியம்’ மாஜித் நவாஸ் மூலமாக வந்த ஒரு கண்ணோட்டத்தைப் பற்றியும், இந்திய முஸ்லீம் சமூகத்தினர், அவர்களுடைய் சொந்த மேன்மைக்காக, முன்னேற்றத்துக்காக என்ன செய்யலாம் என்பது பற்றியும்……
July 16, 2015 at 07:38
இந்த ஆம்பூர் பிரச்சனையில் , நம் புரட்சி செல்லங்கள் நிலைப்பாடு !!! இங்கே இருந்து உப்பு சப்பு இல்லாத புனே திரைப்பட நிறுவனம் பற்றி X ரே ரிப்போர்ட் கொடுத்தவர்கள் , ஆம்பூர் பற்றி ஒரு Y ரே ரிப்போர்ட் !!?? உஹும்.. இந்த லட்சணத்தில் இந்தியாவை தலைகீழாக திருப்பி போட்டு ஒரே புரட்சி புல்லரிப்பு தான் போங்கள்..
தாங்கள் குறிப்பிட்டது போல் இதில் எல்லா மீடியாவும் ஒரே நிலைப்பாடு தான்.
July 16, 2015 at 11:27
ஆம்பூர் வன்முறையைப்பற்றிய என்னுடைய பதிவு….
இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் விவகாரத்தில் தொடங்கி , விஸ்வரூபம் , தற்போது ஆம்பூர் விவகாரம் வரை இஸ்லாமியர்கள் நிரூபிக்க விரும்புவது ஒன்றுதான்….
எங்கள் மீது கைவைத்தால் அமைப்பாக திரண்டு . பெரும்கூட்டத்தைக்கூட்டி வன்முறையில் இறங்குவோம் என்று வெளிப்படையாகவே அரசை எச்சரிக்கிறார்கள்….
இதற்கு வழி வகுத்தவரும் ஜெயலலிதாதான்…. ஓரளவு மிதவாதிகள் தலைமையில் இயங்கிக்கொண்டிருந்த இஸ்லாமியர்களை , பயங்கரவாதிகளின் தலைமையை ஏற்க வைத்தவர் ஜெ தான்….
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பய்ங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய விஷயத்தில் , அந்நியச்செலாவனி வழக்கில் [ ஃபெரா , ஃபெமா ] தண்டனை பெற்று , தற்போது பரோலில் உள்ள சிமி பயங்கரவாதி ஜவாஹிருல்லாவுடன் கூட்டணி வைத்து அவனுக்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுத்தவர் ஜெ தான்….
நரிக்கு நாட்டாமை கிடைத்தால் என்ன நடக்குமோ அதுதான் தற்போது நடக்கிறது….. எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் நலனை அடகு வைக்கத்துணிந்த ஜெ வின் தவறான நடவடிக்கையால் அவதிப்படுவதோ அப்பாவி ஹிந்துக்கள்… உடனே கருணாநிதி மட்டும் யோக்கியமா என்று கிளம்பவேண்டாம்….கருணாவைப்பற்றி நமக்கு நன்கு தெரியும்…. ஜெ ஹிந்துக்களின் அனுதாபி என்று ஒரு மாயை சிலருக்கு இருக்கிறது ..அப்படியெல்லாம் கிடையாது , அவரும் சராசரி அரசியல்வாதிதான் என்பதே என் கருத்து….
குப்புறத்தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக , ஆம்பூர் கலவரத்தின் சூடு தணிவதற்குள் , ஹஜ் ஒதுக்கீட்டை அதிகரிக்கச்சொல்லி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார் என்றால் ,ஹிந்துக்களைப்பற்றிய அவர் எண்ணத்தை இனியேனும் புரிந்துகொள்ளுங்கள்,……
சிறுபான்மையினருக்கு ஒன்று என்றால் ஓடிவர ஒட்டுமொத்த தமிழக அரசியல்வாதிகளும் தயாராக இருக்கிறர்கள்…. ஹிந்துக்களுக்குத்தான் ஏன் என்று கேட்க நாதியில்லை….
வாழ்க மதச்சார்பின்மை…..
July 16, 2015 at 11:55
அய்யா, நான் நிச்சயம், ஜெயலலிதா ஒழுங்கு என்று சொல்லவேமாட்டேன். அவ்ரும் அரைகுறை திராவிடர்களின் அற்பத் தலைவர்தானே!
திராவிடம் நுழைந்து தமிழகத்தைக் குட்டிச் சுவராக்கிக்கொண்டேயிருக்கிறது என்பது சோகமான உண்மை. தேர்தல் களங்களில், அடி மட்டங்களில், படு மட்டங்களோடு பணி புரிந்தவன் என்கிற மண்புழுவனைத்த பார்வையில் – எனக்கு இந்த திராவிட அயோக்கியர்களுக்கு எதிரான காத்திரமான மாற்று என்பது கண்ணுக்கெட்டியதூரம் வரை தெரியவில்லை. :-(
இப்படி வேறு வழியில்லாமல் இருக்கையில் பாரதீயஜக-இந்தியகாங்கிரஸ் எனும் துருவங்களின் கீழ் எப்படியாகவேனும் தமிழக அரசியல் செழுமைப்பட முனைந்தால் நன்றாகவே இருக்கும் எனத்தான் தோன்றுகிறது.
இன்னொரு மாற்றவிழைவு: தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவான தீர்வு: http://www.ariviyal.in/2015/03/blog-post_26.html?showComment=1427439205937#c1555108010805914026
:-)
:-(
July 16, 2015 at 12:14
டேய் நீ றொம்ப
July 16, 2015 at 12:15
முசுலிம்தான் முசுலிமை விமர்சனம் செய்யலாம். நீ இந்து வெறியன். மொதல்ல உன் பொண்டாட்டி தாலிய அறு. பின்னால எங்க பர்தா க்ட்ட வா.
July 16, 2015 at 12:16
அல்லாவின் ஆட்சியல் காப்பிருக்கு இருக்கு ஆப்பு/ இன்னம் சில ஆண்டுல சாரியா தான் சட்டம்ன்
July 16, 2015 at 12:16
இன்னம் சில ஆண்டுல இந்தியா இசுலாமியா ஆயிடும். அப்ப ஒனக்குய் ஆப்ப்
July 16, 2015 at 12:17
ப்ளட்டி காப்பிர். திமிர்ஆய் அடக்கு.
July 16, 2015 at 18:26
அய்யா அனாமதேய அற்பரே,
உங்கள் திருச்சியில் வெயில் கொஞ்சம் அதிகமோ? இல்லாத அல்லாவை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்?
முதலில் நாலு வார்த்தைகளைக் கோர்வையாக எழுதக் கற்றுக்கொள்ளும். பின்பு எனக்கு ஆப்பு வைப்பதைப் பார்க்கலாம்.
அதற்கும் முன்னால் – இது ரமதான் மாதமாக இருந்தாலும் உங்களுடைய படுகேவலமான நடவடிக்கைகளை உங்களால் குறைத்துக்கொள்ள முடியவில்லை என்பது தெரிகிறது. காரணம்: நீங்கள் சராசரித்தனமான ஒரு வெறும் சடங்கு முஸ்லீம். ஆகவே உங்களுடைய இஸ்லாம் பற்றிய அறிவு என்பது ஒரு பெருஞ்சுழி.
ஆக, குறைந்த பட்சம், உங்களுடைய அக்மார்க் அசட்டுத் தனங்களையாவது தவிர்க்கலாமே!
உங்களுடைய அவசர ஒருவரிப் பின்னூட்டங்களை, இனிமேலிருந்தாவது தவிர்க்கவும்.
நன்றி.
October 6, 2017 at 10:33
[…] பாதிப்பைவிடக் குறைவே — ஆம்பூர் அட்டூழியங்கள், தமிழகத்தில் இ… […]