பாவப்பட்ட இஸ்லாமியர்களுக்கும் பெருமளவில் தொடர்ந்து உதவும் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் அவர்களுக்குக் கொலைமிரட்டல்கள்: ஒரு கர்ட் எதிர்வினை

July 18, 2015

கடந்த சிலவருடங்களாகவே ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் அவர்களின் அமைப்பு – உலகளாவிய  பார்வையுடன் சமூகச் சிடுக்கல்கள், கொடும்தீவிரவாதங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அதன் பாவப்பட்ட மனிதத் திரள்களுக்காக களப்பணி ஆற்றி வருகிறது. ஆனால், இதனைப் பற்றி அது தம்பட்டமோ, போஸ்டரோ அடிப்பதில்லை. பெரும் நம்பிக்கையையும் உழைப்பையும் மட்டுமேகொண்டு அவ்வமைப்பினரும் அவர்கள் தலைவரும், படாடோபமில்லாமல், வீண்விளம்பரமில்லாமல் பணி செய்து வருகின்றனர்.

மத்திய தரைக்கடல் நாடுகளில் உள்ள நெருக்கடிகள், உயிருக்கே உலைவைக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் இடையேகூட இவருடைய அமைப்பினர், இவருடைய வ்ழிகாட்டுதலின் பேரில், அவர் பெயருக்காக வரும் நன்கொடைகளையும், தன்னார்வக் காரர்களையும் வைத்துக்கொண்டு மனிதாபிமானத்தால் உந்தப்பட்டு களப்பணி செய்து வருகின்றனர்.

குறிப்பாக – இஸ்லாமிக் ஸ்டேட் பொறுக்கிகளால் தொடர்ந்து கற்பழிக்கப்படும் இராக்-ஸிரியா-ஏமன் பகுதிகளில் இவ்வமைப்பு செய்யும் பணிகளைக் கேட்கக்கேட்க ஆச்சரியமாக இருந்தது.

என் தோழி கில்யஸ் சொன்னதுபோல, எந்த ஒரு முஸ்லீம் தலைவர் கூட (பிழைப்புவாத இந்திய முஸ்லீம் தலைவர்களையே விடுங்கள், மத்திய தரைக்கடல் நாடுகளையும் சேர்த்துத்தான்!) செய்ய  முடியாத உதவிகளை, இந்த மனிதர் செய்திருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளில் – அவரால் இம்மாதிரி ஆக்கபூர்வமாக உதவி செய்யப்பட்டவர்கள் யேஸீதிகள், க்றிஸ்தவர்கள், கர்ட்கள் (கர்ட்களில் சுமார் 90% முஸ்லீம்கள்தான்), மற்றபடி ஷியாக்கள், ஸுன்னிகள், மலைவாசிகள் உட்பட பலப் பலர்.

ஆகவேதான் இஸ்லாமிக் ஸ்டேட் பொறுக்கிகளுக்கும் அவர்களுடைய அடிவருடிகளான பாகிஸ்தானிய தெஹ்ரிகே தலிபன் கும்பலுக்கும் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் அவரைக் கொலை செய்யவேண்டுமென்று தோன்றுகிறது: Sri Sri Ravi Shankar receives death threat from militant group

ஆகவேதான் இம்மாதிரி நன்றி நவிலல்கள், கோபங்கள் – கர்ட் மக்களிடமிருந்து வெளிப்படும்போது, நாம் இம்மாதிரி  நற்செய்திகளையும் பரப்பவேண்டும் என்று தோன்றுகிறது.

Screenshot from 2015-07-18 15:33:00

இந்த ‘ஆஸாதிரொஹாவா’ என்ற பெயரில் ட்விட்டரில் இயங்கும் அம்மணி, ஒரு கர்ட் வீராங்கனை என அறிகிறேன். அவர் இஸ்லாமிக் ஸ்டேட் பொறுக்கி கும்பலுடன் போரிட்டு ரொஹாவா நகரத்தை மீட்ட சொற்ப கர்ட் வீரர்களின் ஒருவர் எனவும் அறிகிறேன். (இன்னமும் சில விவரங்களைக் கேட்டிருக்கிறேன்; அவர் அனுப்பினால் – பிரசுரிக்க அனுமதி தந்தால், அவற்றைப் பதிப்பிக்கிறேன்)

Screenshot from 2015-07-18 16:02:53
Daesh என்பது இஸ்லாமிக் ஸ்டேட் குண்டர்படையின் அரேபிய மொழிபெயர்ப்பின் சுருக்கம்.
FuckDaesh என்பது மேற்படி குண்டர்களை மேலுலகத்துக்கு அனுப்புவது என்றறிக. ;-)

குறிப்பு: நான் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் அவர்களுடைய விசிறியோ, பின்செல்பவனோ அல்லன். ஒருமுறை கூட அவர் பேச்சையோ எழுத்தையோ ஆழ்ந்து கவனித்ததில்லை. ஏனெனில் – எனக்கு அவருடைய சில முறைகள்/வழிகள் ஒத்துவராது.

ஆனால் அவரால் நேரடியாகவோ, அல்லது அவருடைய வழிகாட்டுதலின் படியோ நடக்கும் எவ்வளவோ நல்ல விஷயங்களைக் கேள்விப் பட்டுள்ளேன். அவற்றில் சிலவற்றை, உண்மையாகவே நடந்திருக்கின்றனவா என்றும் சரிபார்த்துள்ளேன். ஆகவே – உளமாற அவரோ, அவரது அமைப்பினரோ பொய் சொல்வதில்லை எனக் கண்டுகொண்டேன்.

SriSri Ravishankar is a good man. May his tribe increase!

#FuckDaesh!

Amen.

-0-0-0-0-0-0-

ஒத்திசைவையும், என்னுடைய இஸ்லாம் பதிவுகளையும் மிகுந்த கவலையோடு படிக்கும், ஆனால் பாதுகாப்புடன் அமெரிக்காவிலும் ஃப்ரான்ஸிலும் உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த மூன்று முஸ்லீம் இளைஞர்களுக்கு: எய்த் முபாரக், பேடே! :-)  ரம்ஸான் பண்டிகைதின வாழ்த்துகள்! :-))

உங்களைப் போன்ற இளைஞர்களின் வழிகாட்டுதலில்லாமல், சக்தியில்லாமல் வெறும் அரைகுறைத் தலைவர்களால் சூழப்பட்டு – நாங்கள் பாரதத்தில் உட்கார்ந்துகொண்டு என்னதான் செய்வது, சொல்லுங்கள்? எப்போது திரும்பி வரப் போகிறீர்கள்??

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s