மூத்த தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு அவசர உதவி: சில கோரிக்கைகள்
July 11, 2015
நலம். நலமறிய அவல், வெறும் வாய்க்கு! (அதுவும் சுமார் 1500 வார்த்தைகளில்!)
…எதைப்பற்றியாவது நித்திய கண்டனம் பூரண ஆயுஸாகச் செய்து, எப்படியாவது அன்றைய பத்தியைத் ‘தேத்த’ வேண்டுமே என, அலுவலக நேரத்தில் அறவுணர்ச்சியுடன் ஆவேசமாக ஆரம்பித்து 500 வார்த்தைகள் முடிவதற்குள்ளேயே ‘நமக்கெதுக்கு வம்பு’ என வழக்கம்போல நழுவும் மணிகண்டனனார் இதைச் செய்யவில்லை – என்பதையாவது புரிந்து கொள்ள முடிகிறது.
ஏனெனில், அவர் ஒரு இளைஞர் – ஏதாவது விடலைத்தனமான கிளுகிளுப்பில் மூழ்கி, அந்தக்காலத்தில் இளம்பெண்கள் சகவாசத்துக்காக வழிந்ததைப் பற்றி ஆர்வமாக எழுதிக் கொண்டிருக்கிறார் என – அவரைப் போலவே, போகட்டும் விட்டுவிடலாம். நமக்கெதுக்கு வம்பு. ஆகட்டும் பார்க்கலாம். ஆட்டத்தின் முடிவிலே. அறுபதை இருபது வெல்லாது உலகிலே! நீயும் நானுமா?
-
சி
வா
ஜி
வா
யி
லே
ஜி
லே
பி
ஹ்ம்ம்… ஆனால் ஜெயமோகன்? ஏன் இவர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கையறு நிலையைக் கண்டுகொள்ள மாட்டேனென்கிறார்? தொழில்முறைப் போட்டியோ??
ஆக, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத நான், ஒரு ‘இன்வெஸ்டிகேடிவ்’ அக்கப்போர்க் காரனாதலால், கமுக்கமாக அவர் தளத்திற்குப் போய் ‘எஸ்.ராமகிருஷ்ணன்’ என்று தேடினேன். ஆ! குறைந்த பட்சம் 129 பதிவுகளை எஸ்.ராமகிருஷ்ணன் தொடர்பாக எழுதியிருக்கும் இந்த மனிதர், ஏன் எஸ்ராவின் பிரச்சினைகளைக் கண்டுகொள்ள மாட்டேனென்கிறார்? எனக்குப் புரியவில்லை.
‘தேசாந்திரி ரிடர்ன்ஸ்’ என தன் அமெரிக்கப் பயணக் கட்டுரைகளைச் சிலாகித்து, தான் நாகர்கோவிலுக்குத் திரும்பியவுடன், எஸ்ரா ஒரு கட்டுரையை எழுதிவிடுவாரோ எனும் மனக்கிலேசமா?
இது ஒரு புரியாப் புதிர்தான்!
-0-0-0-0-0-0-0-0-0-
நாம் சுவாசிக்கும் காற்று மாசுபட்டு மூச்சு விடமுடியாவிட்டால், காந்தியிடம் போகலாம்தானே? ஏனெனில், காந்தி ஒரு தூய்மையான காற்றுதானே? அது எப்போது உக்கிரம் கொள்ளும், எப்போது தணிவு கொள்ளும் என்று தெரியாதுதானே? அது எப்போது வக்கிரம் கொள்ளும், கொள்ளும் எப்படி குதிரையால் உண்ணப்படும் என்பது அஸ்வஞானம்தானே! (ஆதாரம்: காந்தி ஒரு தூய்மையான காற்று, அது எப்போது உக்கிரம் கொள்ளும், எப்போது தணிவு கொள்ளும் என்று தெரியாது, ஆனால் அதன் வேகத்தில் தூசிகள், குப்பைகள் அடித்து கொண்டு போகப்படும் என்பது உண்மை தானே; http://www.sramakrishnan.com/?p=3437)
தும்மலும் அபசகுனம்தானே! ஆகவே…
…சுபம்.
பேனா செய்யும் தொழிற்சாலையில் எவ்வளவு கைகள் அதனைத் தொட்டிருக்கும்; ஜப்பான் போயிருந்த போது இகபேனா என்ற ஒரு பேனா தொழிற்சாலைக்கும் போய் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஜப்பானியப் பெண்களுக்கு ஜென் கதைகளைச் சொன்னேன். யாருக்கும் அது பற்றித் தெரிந்திருக்கவில்லை அல்லவா, அதனால்தான்!
தங்கள் அறியாமைக்காக தனக்குள்ளாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு, அவர்கள் என் கதைகளைக் கேட்டு மெச்சி அல்வா கொடுத்தார்கள் அல்லவா? அதே அல்வாவைத்தான் முட்டாக்கூ தமிழ் வாசகர்களுக்கு நெகிழ்விலக்கியம் என்ற பெயரில் வாரி வாரி வழங்குகிறேன் அல்லவா?
சுபம் அல்லவா?
… ஆனால் என் செல்ல, அபிமான எழுத்தாளருக்கு, நான் இதைக் கூடச் செய்யமாட்டேனா என்ன?
மகாமகோ நொக்கர் விருதை அனாயாசமாகப் பெற்ற உங்களுடைய ஆதர்ச இலக்கிய ஆளுமைக்கு, நீங்கள் இம்மாதிரி உதவிகள் கூடச் செய்யமாட்டீர்களா என்ன? -0-0-0-0-0-0-
… எப்படி இருந்தாலும் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருப்பார்தானே? அவர் எழுத்துகளை நானும் படித்துக்கொண்டே இருக்கவேண்டும்தானே! பின் நொள்ளை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்தானே! இல்லாவிட்டால் எனக்கு கதிமோட்சம் கிடைக்காதுதானே! :-(
சரி. எது எப்படியோ, அவருக்கு அவசர உதவிகள் தேவைப்படுகின்றன.
-0-0-0-0-0-0-0-
ஆக, தற்போது தினம் ஒரு தடவை வலுக்கட்டாயமாக ஒற்றெழுத்துகள் நன்றாகப் பொடி செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக அவர் வாயில் (டயலிஸஸ் போன்றதுதான் இது, ஆனால் ஒற்றெழுத்துலிஸ் என அழைக்கப் படுகிறது) திணிக்கப் படுகின்றன. அவர் திமிறினால், பின்வழியாகவாவது திரவவழியில், பொடியானது உட்செலுத்தப் படுகிறது. தினம் 20, 000 ஒற்றெழுத்துகள் இப்படி அனுப்பப்பட்டாலும், அவற்றில் சுமார் 2த்தான் அவர் உடலும் மூளையும் ஒத்துக்கொள்கின்றன. ஆகவே ஒரு நாளைக்கு 2 ஒற்றெழுத்துகளை அவர் உபயோகப் படுத்த முடிந்தால், அது அதிகம். பாவம்தான். அதாவது, வாசகர்கள்.
அவரது பாவப்பட்ட குடும்பத்தினர், தங்களால் முடிந்த அளவு தங்கள் வசம் இருக்கும் மெய்யெழுத்துகளைக் கொடுக்கிறார்கள்தான். ஆனால் பாவம், எஸ்ரா எழுதிக் குவிக்கும் வேகத்துக்கு அவர்களால் ஈடுகொடுக்கமுடியவில்லை. என் செய்வது?
இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால் – ஒற்றெழுத்துஸ்ஸியா தீவிரமடைந்துகொண்டு வருவதால் – அவரால் இனிமேல் மெய்யெழுத்துகளைக் கூடச் சரிவர உபயோகிக்க முடியாத நிலை தோன்றும். இந்த தீவிரமடைந்த வியாதியின் பெயர் மெய்யெழுத்துலிஸ் :-(ஆக, ஏற்கனவே கொடுந்துயரத்திலும் கடும் கடுகடுப்பிலும் இருக்கும் அவருடைய வாசக மணிகள், ஏஸ்ராவால் – இபடி எழுத படவைகளை படிக வேடியிருகு:
‘காதி ஒரு தூமையான காறு, அது எபோது உகிர கொளு, எபோது தணிவு கொளு எறு தெரியாது, ஆனா அத வேகதி தூசிக, குபைக அடிது கொடு போகபடு எபது உமை தானே! (ஆதார மூல)
நமகு இது தேவையா?
இந்தக் கொடுமை நடக்காமல் இருப்பதற்கு, நம் போன்ற வாசக மணிகள் செய்ய வேண்டியது என்ன?
அது ரொம்ப ஸிம்பிள்: முடிந்த போதெல்லாம் அவருக்கு இருப்பில் வேண்டுமளவு ஒற்றெழுத்துகள் ஸ்டாக் இருக்கும்படிச் செய்யவேண்டியதுதான்.
ஆகவே மாக்களே, இதனைப் படிக்கும் ஒவ்வொருவரும் நாளுக்கு 1008 முறை கீழ்கண்டதை காப்பி-பேஸ்ட் செய்து (இதன் சிடுக்கலான தொழில் நுட்பம் புரியவில்லையானால் திருவாளர் யுவகிருஷ்ணனார் அவர்களை அணுகவும்; இந்த வெட்டியொட்டும் தொழிலில் அவர் வெறும் மன்னர் அல்ல, மகாமகோ சக்ரவர்த்தி!) ஒற்றெழுத்தீஸ்வரனுக்கு வேண்டிக்கொண்டு, மின்னஞ்சல்களை அனுப்பினால், ஒரு வேளை அவருடைய வியாதி குணமடையலாம்.
உதவி #2: அடிப்படை இலக்கணம்
எஸ்ரா அவர்கள் படித்த ஆரம்பப்பள்ளியின் தமிழாசிரியர் தூக்கு போட்டுக்கொண்டு இறந்திருப்பார் என்பது யாவருக்கும் தெரிந்ததே! மேலதிகமாக, அவருடைய பத்தாங்க்ளாஸ் தமிழய்யா, ஊக்க போனஸாக, தன் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்திருக்கக்கூடியதும் நாம் அனுமானிக்கக் கூடியதே!
பிரச்சினை என்னவென்றால் எஸ்ரா பூனைக்கு யார் இலக்கண மணி கட்டுவது என்றுதான்… கிட்டே போன சமயத்தில் நம் மேல் இலக்கண புத்தகத்தை விட்டெறிந்து நம்மையும் இலக்கணத்தையும் ஒரேயடியாக ஒழித்து விடுவார்தான்!
இதற்கு அனைவரும் சேர்ந்து, கூடி, ஒருங்கிணைந்து அவருக்கு ஒரு பெட்டிஷன் போடலாம். தனியாகப் போனால் தானே ரத்தம் கக்கிச் சாகவேண்டும்?
கீழ்கண்டதை அவருக்கு அனுப்பி:
காகங்கள் பறக்கிறது. காகம் பறக்கின்றன.
கருத்துகள் இருக்கிறது. கருத்து இருக்கின்றன.
“கேள்விகள் ஒன்று இருந்தாலும் பதில் பலவாறாக இருக்கின்றன. இதில் என்ன பிரச்சினைகள். தனக்குதானே சிரித்துகொண்டு தனியாகப் போய்க்கொண்டிருக்கிறோம் நான். ஒருமைகள் கூடப் பன்மைகள் தானே? பன்மை கூட ஒருமைகள் அல்லவா? என் ஓர்மை அப்படித்தானே!”
*பேதி* *மயக்கம்* ***பொத்!***
எது எப்படியோ – அவர் அடிப்படை தமிழ் இலக்கணத்தை கற்க, அகி பரந்தாமன் எழுதிய புத்தகத்தையாவது வாங்கிப் படிக்க – ஒரு நிதி ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்.
என் சார்பில் ரூ 1/- அனுப்புவதாகத் திட்டம்.
நீங்கள்?
மேலதிகமாக, மேதகு எஸ்ரா – பல அஃறிணை விஷயங்கள் தன்னைப் பார்ப்பதாகவும் சிரிப்பதாகவும் யோசிப்பதாகவும் உணர்கிறார். இவையெல்லாம் மனோதத்துப்பித்துவரீதியாகத்தான் அணுகப்பட வேண்டும் என ஒரு சாரார் (=நான்) கருதினாலும், இன்னொரு சாரார் (=நான்) – வாசகர்கள் திரண்டெழுந்து அவருக்கு உதவி செய்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால், நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லை என்று நினைத்துத் தன்னைத்தானே நொந்துகொண்டு சிரித்துக்கொள்கிறேன்.
இல்லை, இல்லை; எஸ்ரா அவர்களுக்கு பத்தி பத்தியாக பத்தியமற்று எழுதவேண்டும் என்று ஆசை. ஆனால் அவருடைய கற்பனைவண்டி மக்கர் செய்து – வெறும் கேள்விகளை எழுப்பிய பின்னர் டர்புர்ரென்று சப்தம் செய்து நின்று விடுகிறது. பாவம்.
அதனாலேயே, அவர் எந்த எழவைப் பற்றியும் தத்துப்பித்துவார்த்த நெகிழ்வுக் கேள்விகளைப் பத்திபத்தியாகக் கேட்பதை மட்டுமே தன் ஸ்டைலாக வரித்துக்கொண்டுவிட்டார். :-(
ஆகவே சக வாசகர்களே, நாம் அவருடைய அலக்கிய, மானுட மேன்மைக்காகச் செய்யவேண்டியது: எந்த எழவைப் பற்றியும் எஸ்ரா எவ்விதமான கேள்விகளை எழுப்புவார் எனத் தெரியும். ஆகவே நாமெல்லாரும் அவருடைய கேள்விகளுக்குப் பதில்களை அனுப்பிய வண்ணம் இருப்போம்.
எடுத்துக்காட்டாக: அவர் அல்லவா என்று கேட்பவைகளுக்கு அல்ல என திடமான பதிலை அனுப்பலாம். அவர் கேள்விகள் கேட்பது வரை காத்திருப்பது கூட அவசியமில்லை. நம் மின்னஞ்சல் பெட்டியைத் திறந்து பொதுவாக இது அல்ல, அது அல்ல, அது தானல்ல. அது இல்லதான் என, அனுதினமும் மூன்று வேளை அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதுவே போதுமானது அல்லவா?
அவர் இவற்றை எதிர்கொண்டு மேலதிக கேள்விகளைக் கேட்கலாம் அல்லவா? ஆனாலும் பரவாயில்லைதானே!
இது ஒரு நல்ல வழிதானே?
உதவி #4: தமிழில் மொழிபெயர்ப்பு உதவிப் படை
வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். எஸ்ரா அவர்களின் (ஆங்கில மொழியில் இருந்து) தமிழ் மொழியாக்கங்கள் பாவமாக, அந்தோபரிதாபமாக இருக்கின்றன. அதாவது, அவருக்கு என்னளவு(!) ஆங்கில அறிவு(!)தான்! இப்படி ஒரு எழவை வைத்துக்கொண்டு எப்படித்தான் குப்பை கொட்டுகிறாரோ என நினைத்துக்கொண்டு புளகாங்கிதமடைகிறேன்.
மேலும், வெளி நாட்டுப் புத்தகங்களைப் படிக்காமலேயே அவற்றின் விமர்சனங்களை மட்டும் மேலோட்டமாகப் படித்துவிட்டு மானேதேனே என்றெல்லாம் எழுதிவிடுகிறார். அவருடைய வழக்கமான கேள்வி ஞானம் + நெகிழ்வு டெம்ப்லேட் வகையறாக்களை உபயோகித்து கிறங்கடித்து விடுகிறார்.
… … ஹ்ம்ம்… சரி. இந்தப் படை என்ன செய்யலாம், எஸ்ராவல்களூக்கு எப்படி உதவலாம் என எழுதுவதற்கு எனக்குத் திராணியில்லை.
மேலதிகமாக திரைப்பட விமர்சனங்களை வர்ஜாவர்ஜமில்லாமல், வழக்கம்போல அவர் தயாரிக்க, அவருக்கு வாசகர்களாகிய நாம் உதவி செய்யவேண்டும் என்றுகூட எனக்கு ஆசை… சின்னச் சின்ன ஆசை, வெறுப்படிக்க ஆசை.
ஆனால் அயர்வாக இருக்கிறது. என் அயர்வு என்னைப் பார்த்துக் கண்ணடிப்பதை, நான் தளர்ச்சியுடன் பார்த்து தனக்குத்தானே, தந்தானே தானேதானே…
ஆக, இந்தப் பதிவை முடிப்பதற்கு, எனக்கு உதவ, நீங்கள் ஒரு படையை அமைத்து அலைகடலென ஆர்ப்பரித்துத் திரண்டு வரமுடியுமா? :-(
நன்றி. மீண்டும் வறுக்க.
-0-0-0-0-0-
- எஸ்ராமகிருஷ்ணம், ராமானுஜம், மனுஷ்யபுத்திரம், கணிதம், கவிதம், புல்லரிப்பம், புளகாங்கிதம்… … (2/2) 07/07/2015
- கணிதமேதே ராமானுஜே எஸ்ராமகிருஷ்ணமே கனகஜ புருடாம் பீலாம் வர்த்தனம் வர்த்தமானம் வர்த்தகமே ஸதாஸர்வகாலத்திலும் கரிஷ்யாம்! (1/2) 06/07/2015
- என் செல்ல எஸ்.ராமகிருஷ்ணன், டெம்ப்லேட் கோவணம் – மற்றபடி சீமான், பம்ப்கின், மணிரத்னம், ரஹ்மான், கேபி சார்கள் கூட்டணி: சில சோகங்கள் 13/04/2015
- டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் எனும் ஆக்ஸிடேன் அரக்கன்: படுபீதி பயங்கரம் — தமிழகம் அழியப் போகிறதா? ஒரு பகீர் ரிப்போர்ட்! (1/2) 19/02/2015
- தயவுசெய்து, இதைப் பற்றி மனுஷ்யபுத்திரனிடமோ அல்லது எஸ். ராமகிருஷ்ணனிடமோ ஒரு எழவையும் சொல்லி விடாதீர்கள்! ப்ளீஸ்!! 30/09/2014
- மங்கோலியாவில் ராமசாமி! 18/05/2014
- ஃபுகுஷிமா ‘அணுவுலை’ விபத்து(!) பற்றிய வடிகட்டிய பொய்களும் எஸ்ராமகிருஷ்ண, சுந்தர்ராஜ பயபீதி உளறல்களும்… 02/05/2014
- எஸ். ராமகிருஷ்ணன்: ஓற்றியெழுத்து™ 15/04/2014
- அணுவுலை எதிர்ப்பு நிபுணர் ஞாநி + கெஜ்ரீவால்: சில குறிப்புகள் 16/03/2014
- போங்கடா, நீங்களும் ஒங்களோட அணுசக்தி எதிர்ப்புக் கும்மியும்… 14/03/2014
- வாழ்த்துகள்: எஸ் ராமகிருஷ்ணனுக்கு நொக்கர் (2014) விருது! 25/01/2014
- எஸ். ராமகிருஷ்ண தாசன்: நெடுங்கொடுமை 16/01/2014
- … அழ வைத்துவிடுகிறார்கள், பாவிகள்… :-( 16/01/2014
- ‘இயக்குனர் பரங்கிமலை’ நோ ராவணகம்சன் பெருமையுடன் வழங்கும்: எஸ்ராவுடெ ராவுகள் (புத்தம் புதிய காப்பி!) 14/01/2014
- படுபாவீங்களா! 12/01/2014
- எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் எதிர்த்தாக்குதல்! (ஐயய்யோ!) 11/01/2014
- நோ, எஸ் ராமகிருஷ்ணன்! மன்னிக்கவும், கலிலியோ மண்டியிட்டார்தான்! 10/01/2014
- எஸ் ராமகிருஷ்ண லீலா தரங்கிணி… (1/3) 08/01/2014
- வயாக்ராபாதர் அருளிச் செய்த ‘வயாக்ரா முன்னால்’ 20/10/2013
- பாம்பாட்டிச் சித்தரின் எலியும் ஷ்ராதிங்கெனார் பூனையும் 02/07/2013
- அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (31/12/2014 வரை )
July 11, 2015 at 13:24
க ர டி
ர யி ல்
டி ல் லி
July 11, 2015 at 13:37
எ ஸ் ரா
ஸ் ஸ் ஸ்
ரா ஸ் ரா
:-( ஸ்… அவசரத்துக்கு இவ்ளோதாம்பா, புட்ச்சிக்கினு ஓடு!
எஸ்ரா வந்துக்கினே கீறாரு… வுடுப்பா ஜூட்!
July 12, 2015 at 14:26
சங்ககாலத்தில் ஒரு நூலுக்கு அங்கீகாரம் வேண்டுமானால் பொற்றாமரைக்குளத்து சங்கப்பலகையின் மீது ஏற்றி அது முழுகாமல் இருந்தால்தான் நல்ல நூல் என்று புலவர்கள் ஒப்புக்கொள்வர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். யார் செய்த புண்ணியமோ இப்போது எஸ்ரா காலத்தில் பதிப்புக்குப் போகும் நூல்களுக்கு மேற்படி சோதனை இல்லை. இருந்திருந்தால் பலகை நெகிழ்ந்து நெகிழ்ந்து தன்னளவில் தன்னைப் பார்த்து சிரித்துக்கொண்டு…. கேள்வி கேட்டுக்கொண்டு…. ஜென் கதை சொல்லி இது போல் எத்தனை நூல்களைக் கண்டிருக்கிறோம் என்று நெகிழ்ந்த்….. முழுகி…. எஸ்ராவின் நூல் ஒன்று கூட வெளியாகியிருக்காது அல்லவா? வெ ராவும் உருப்படியாக வேறு வேலை பார்த்திருப்பார்தானே? நமக்கு இந்தக் கட்டுரை கிடைத்திருக்காது தானே? :-)
July 13, 2015 at 10:05
சஞ்சாரம் – புதினம் சிறப்பான ஒன்று – சமூகத்தில் நாதஸ்வர கலையின் தற்கால நிலையை சிறப்பாக பிரதிபலிக்கிறது.
எஸ் ராவின் மிகை நெகிழ்ச்சி இலக்கிய பரிச்சயம் அடையாத வாசகர்களுக்கு ஒரு நுழைவாயில். ஒரு சராசரி வாசகன் இந்த மிகை நெகிழ்ச்சியை பற்றியே அடுத்த கட்ட இலக்கிய படைப்புகளுக்கு நகர முடியும்.
July 14, 2015 at 16:35
அப்டீங்களா?
நன்றி. :-)
July 13, 2015 at 15:53
உங்களைப் போல நான் திரு.ரா.கி. யை பற்றி திரு.ஜெமோ எழுதிய 29(குறைந்த பட்சம்)பதிவுகளை எல்லாம் படிக்கவில்லை மாதிரிக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு (உபபாண்டவம்) என்று ஒரு விமரிசனத்தை தான் படித்தேன்.அதில் ரா.கி.யின் நிறைகளை சொல்லி விட்டு குறைகளையும் கீழ் கண்டவாறு சொல்லத்தான் செய்கிறார்.என்ன உங்கள் அளவுக்கு கடுமையில்லை அவ்வளவுதான்.
இந்நாவலில் உள்ள ராமகிருஷ்ணனின் உரைநடை மிகவும் கவனமற்றது. எழுவாயும் பயனிலையும் முரண்படுவது, ஒருமை பன்மை மயக்கம், புணர்ச்சிவிதிகள் மீறப்படுவது முதலியவை தரும் அசௌகரியம் சாதாரணமானதல்ல. இவை மீறப்பட முடியாத விதிகளா என்ற கேள்வி எழலாம். மொழி அகவயமாக எல்லை மீறிப் பாய்ந்து செல்லும்போது இலக்கணங்களை அது படைப்பூக்கத்துடன் மீறும். அது ஓர் அழகும்கூட. அது கவனமின்றியும் இயலாமையாலும் சிதைவது ஏற்கக்கூடிய விஷயமல்ல.
அதைவிடச் சிக்கலானது இந்த உரைநடையில் உள்ள படைப்பூக்கம் கைகூடாத தன்மை. படைப்பூக்கம் கைகூடிய மொழியில் அடிப்படையாக உள்ள உத்வேகம் அதன் எல்லா மாறுபட்ட கூறுகளையும் ஓர்அழகியல் ஒழுங்குடன் பிணைத்துக் காட்டும். இதில் அது நிகழவில்லை. மொழிபெயர்ப்புச்சாயல் கொண்ட நவீன மொழி, புராண உபன்யாச மொழி, சம்பந்தமே இல்லாமல் நெல்லை கிறித்தவ மொழி எல்லாம் பிணைந்து மிகச் செயற்கையான நடையை உண்டு பண்ணுகின்றன. அத்துடன் வேறு ஒரு நாவலின் வலுவான பாதிப்புடைய உருவக மொழியும் ஊடாடுகிறது.
பலநூறு பக்கங்கள் உடைய ஒருநாவலில் சித்திரிப்புகளில் மீள்தன்மை இருப்பது இயல்பே. ஆனால் ராமகிருஷ்ணன் மீண்டும் மீண்டும் ஒரே குரலில் மாறாத சொற்களில் சித்தரிக்கிறார். (எத்தனை அலைவுகள், மிதத்தல்கள்!) கடைசியாக அவரது சில சொல்லாட்சிகளைக் கூறவேண்டும். ‘கதாநிலவியல்’ ‘கதாஸ்த்ரீகள்’ போன்றவற்றை சமஸ்கிருதமாகவோ தமிழாகவோ கொள்ள முடியாது. மகாபாரதமேயானாலும் தேவையற்ற இடங்களில் கூட பொருத்தமோ அழகோ இல்லாமல் இறைக்கப்பட்டுள்ள ஏராளமான சமஸ்கிருதச் சொற்கள் சங்கடமேற்படுத்துகின்றன.
http://www.jeyamohan.in/5508#.VaOSTGewvMk
July 14, 2015 at 16:39
அய்யா சேஷகிரி,
நான் கிண்டலாக எழுதியதைக் காரியமார்த்தமாக எடுத்துக்கொண்டு விட்டீர்களோ? :-)
ஆனாலும் மஹிஷங்களின் மீது பொழியும் வர்ஷமானது என்பது இருக்கிறதே… தொடர்ந்து தனக்குத் தானே தந்தானேதான்!
ஒரு த்ருஷ்டாந்தமாகத் தான் சொல்கிறேன்,,, ;-)