மகாமகோ லக்ஷ்மண் கதிர்காமர்: சில நினைவுகள், குறிப்புகள்
August 12, 2015
ஸ்ரீலங்காவின் லக்ஷ்மண் கதிர்காமர் அவர்கள், ஸ்ரீலங்கா தமிழர்களின், ஏன் மானுடத்தின் எதிரிகளுமேயான தறுதலைப் புலி ‘எல்டிடிஇ’ கொலைகாரர்களின் முடிவை, அவர் ஸ்ரீலங்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது ஆரம்பித்து வைத்ததால், படுகொலை செய்யப்பட்டவர்.
இன்று (12 ஆகஸ்ட்) அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தினம். அவர் கதை 2005ல் முடிந்து பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன என்றாலும் அவர் தொடங்கிய முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று(=எல்டிடிஇ அயோக்கியர்களுக்குச் சாவுமணி), ஒரளவுக்கு நன்றாகவே நிறைவேறியிருக்கிறதுதான்!
சரி. பல இடங்களிலும் சேகரம் செய்யப்பட்ட என்னுடைய பழைய குறிப்புகளில் இருந்தும் சிதைந்துகொண்டிருக்கும் மங்கல் நினைவுகளிலிருந்தும், லக்ஷ்மண் கதிர்காமர் அவர்கள் தொடர்புள்ள சில விவரங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். ஆனால், இதற்கு நான் சந்தோஷப்படுவதா அல்லது சோகமுறுவதா என்று தெரியவில்லை; sad contemporary history is a tough mistress, indeed! :-( ஹ்ம்ம்…
-0-0-0-00-0-0-0-
தறுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட பலரைப் போலவே (நம் ராஜீவ்காந்தி உட்பட!) லக்ஷ்மண் கதிர்காமர் அவர்களும் – மதிக்கப்பட்ட, மக்களின் அபிமானத்துக்குரிய, பொறுப்புணர்வுடன் சமூகத்துக்காகத் தங்களுடைய கடமையை நிறைவேற்றிய, மக்களுடைய தொடர்ந்த மேன்மைக்காகப் பாடுபட்ட தலைவர்களில் ஒருவர்.
மேலும் அவர், நீண்டகால நோக்கில், தற்காலப் பிரச்சினைகளைச் சிடுக்கவிழ்க்க முயன்றவர். தீவிரவாதத்தின் தன்மையை, அதன் எதிர்காலத்தை மிகக் கூர்மையாக அவதானித்தவர். அற்பர்களுடன் (=தறுதலைப்புலிகள்) சமரசம் செய்துகொள்ளாமல், ஸ்ரீலங்கா மக்களின் ஒட்டுமொத்த சுபிட்சத்துக்கும், அமைதிக்கும், மேன்மைக்கும், ஜனநாயகத்துக்கும் பாடுபட்டவர். அவர் தொழில்முறை அரசியல்வாதியல்லர் என்றாலும் – அரசியலில் அங்கம் வகித்த சில வருடங்களில் பலப்பல விஷயங்களைச் சாதித்தவர்… இந்தியாவின் நண்பர். தேவையற்ற வன்முறை வெறுப்பியம் பேசாதவர். தன் தவறுகளை ஒப்புக்கொண்டு, செயல்பாடுகளைச் செப்பனிட்டுக்கொண்டு தொடர்ந்து தன்னையும் தன் ஆர்வம் இருந்த புலங்களையும் முன்னேற்றிக் கொண்டிருந்தவர்… சர்வதேச உறவுகளை சமனத்துடன் பேணுவதில் நிபுணர். ஸ்ரீலங்காவின் வெளி நாட்டு உறவுகளைச் செப்பனிட்டவர். ஸ்ரீலங்கா அரசின் மாணிக்கங்களில் ஒருவர்.
தன்னைத் தமிழன் என்று சொல்லிக்கொண்டு வெற்றுப் பெருமிதத்துடன் தன்னைக் குறுக்கிக்கொள்வதற்குப் பதிலாக, ‘நான் முதலில் ஒரு ஸ்ரீலங்கன்’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக்கொண்டவர்; அதேசமயம் அவர் ஒரு சுயவெறுப்பாளர் அல்லர். வெட்டிப் போராளியல்லர். தமிழன் என்ற அடையாளத்தை சுயலாபங்களுக்காக அயோக்கியத்தனமாக நம் திராவிடத் தலைவர்கள் உபயோகிப்பதுபோல, பிரபாகரன்கள் உபயோகித்ததுபோல – இவர் அற்பத் தனங்களில் ஈடுபடவேயில்லை. இவர் சுயகாரியப் பிரிவினைவாதங்களுக்கு எதிராகவே இருந்தார்! மத, இன, ஜாதி, மொழி ரீதியான பொச்சரிப்புகளும், அற்பத்தனங்களும் இவரிடம் இருந்ததேயில்லை.
மேலதிகமாக – நல்ல படிப்பறிவு, ஆழ்ந்த கட்டுரைகளை வடிக்கும் திறன், நைச்சியமாக உறவுகளை வளர்த்து, தன் தேசத்தின் மேன்மைக்காக காரியங்களை முடித்துக்கொண்டமை… என அடுக்கிக் கொண்டே போகலாம்!
1998 -2000 வாக்கில், ஒருமுறை இவர் சென்னைக்கு வந்திருந்தபோதென்று (அல்லது தில்லியில்?) என நினைக்கிறேன் – இவருடைய குமிழியிடும் நகைச்சுவையும், பகடியும், நேர்மையும், தர்மாவேசமும் ததும்பும் வெகு இயல்பான பேச்சைக் கேட்டிருக்கிறேன் என நினைவு. அழகான, தைரியமான மனிதர். (இவருடன் இளம் நீலகண்டன் திருச்செல்வம் அவர்களும் இருந்தார் என்றும் நினைவு – இவரும் எல்டிடிஇ கும்பலால் துப்புரவாகப் படுகொலை செய்யப்பட்டார்!)
-0-0-0-0-0-0-
கதிர்காமர் அவர்களைப் பற்றி எவ்வளவோ எழுதலாம், எழுதவேண்டும். ஆனால், சில அவசர, அவசியக் குறிப்புகளுடன் இப்போதைக்கு நிறுத்திக்கொள்கிறேன். :-(
ஒரு மதிக்கப்பட்ட க்றிஸ்தவ குடும்பத்தில் பிறந்த கதிர்காமர், அடிப்படையில் ஒரு வக்கீல். அவருடைய கூடப்பிறந்தவர்கள் ஸ்ரீலங்காவின் ராணுவத்தில், கடற்படையில் உயர்பதவிகளை வகித்திருக்கின்றனர்.
இங்கிலாந்தில் படிக்க வாய்ப்புப் பெற்ற இவர், க்ரிக்கெட், ரக்பி என பல விளையாட்டுகளில் விற்பன்னர். இளம்வயதில் தேச அளவு ஒட்டப்பந்தயங்களில் பங்குபெற்றவர்.
ஸ்ரீலங்கா அரசியலில் இவருக்குப் பல நண்பர்கள் – ஜூனியஸ் ஜெயவர்த்தன முதல் சந்திரிகா குமாரதுங்கா வரை இவருக்கு அனைவரிடமும் பழக்கம். இவருடைய இரண்டாம் திருமணத்துக்குத் சாட்சிக் கையெழுத்துபோட சந்திரிகா போயிருந்தார்.
இருந்தாலும் இவர் மிகத் திறமையான வக்கீல் என்பதிலிருந்து,ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் பணி என்றாகி – பின்னர், வெளிவிவகார அமைச்சர் பதவிக்குச் சென்றது திடுதிப்பென்றுதான் – அதுவும் 62 வயதில்! இருந்தாலும் 1997 – 2001 வரை, மறுபடியும் 2004ல் இருந்து அவர் இறந்த 12 ஆகஸ்ட் 2005 வரை – மிகத் திறமை வாய்ந்த அமைச்சராக அவர் இருந்தார்.
இவர், ஒரு அமைச்சராக – மூன்று காரியங்களை மிக அழகாகவும், திறமையுடனும் செய்தார்: 1) ஸ்ரீலங்காவின் அண்டைய தேச உறவுகளைச் சீர் செய்து அவற்றைச் செம்மைப் படுத்தியது, நம்பகத் தன்மையை ஏற்படுத்தியது. 2) உலகளாவிய அமைப்புகளில் ஸ்ரீலங்காவுக்கான மரியாதையை, அதன் பணிகள்-பங்களிப்புகள் மூலமாகப் பெற்றுத்தந்தது. 3) எல்டிடிஇ கொடூரர்களை அமெரிக்காவும் (1997) இங்கிலாந்தும் (2001) தடை செய்ய, அதனை ஒரு அசிங்கமான பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கத் தளராமல் முயன்று வெற்றி பெற்றது.
இந்த மூன்றாம் நடவடிக்கையால் – இந்த எல்டிடிஇ கும்பலுக்கு, அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் வாழ்ந்துகொண்டிருந்த ஸ்ரீலங்கா தமிழர்களிடமிருந்து அவர்கள் வசூலித்துக்கொண்டிருந்த ‘கட்டாய வரி’ கிடைக்காமல் போனது.
… இப்படி, பலப்பல விஷயங்களைச் சொல்லலாம். அவருடைய கல்யாண குணங்களை, அவர் பங்களிப்புகளை விஸ்தாரமாகப் பேசலாம்.; ஆனால், இன்னும் ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்காட்டிவிட்டு நிறுத்திக்கொள்கிறேன்:
இதை அவர் எல்டிடிஇ கும்பல் தொடர்பாகத் தான் குறிப்பிட்டார் என்றாலும் – 9/11 நடந்ததும் இதுபோன்ற விஷயம்தானே…
நம் நாட்டில் – ஜனநாயகத்தின் சகல வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு, வெளி நாட்டுப் பிச்சைகளைப் கமுக்கமாகப் பெற்றுக்கொண்டு – படுகேவலமாக, நம்தேசத்திற்கு, அதன் மக்களுக்கு எதிராகச் சதிராடும் நக்ஸலைட் கழிசடைகளுக்கும், தீவிர இஸ்லாம்வாத கும்பல்களுக்கும்கூட இவ்விஷயங்கள் பொருந்தும்
எவ்வளவு தீர்க்கதரிசனத்துடன், மானுடம் பற்றிய கரிசனத்துடன் தம் கருத்துகளைத் தெரிவித்துள்ளார் இந்த கதிர்காமர்!
… ராஜனி திராணகமக்களையும் லக்ஷ்மண் கதிர்காமர்களையும் நாம் எப்படி மறக்கக்கூடும்? :-(
குறிப்பு: இந்தக் கட்டுரைக்கான குறிப்புகளில் கணிசமானவை, (>30%), லக்ஷ்மண் கதிர்காமர் பற்றிய கட்டுரைகளின் ஒரு முக்கியமான (கீழ்கண்ட) தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. அவருடைய படமும் அப்புத்தகத்தின் அட்டையிலிருந்து எடுத்ததுதான்! மேற்கோளும் அப்படியே! (Democracy, Sovereignty and Terror: Lakshman Kadirgamar on the Foundations of International Order | Edited by: Adam Roberts)
தொடர்புள்ள பதிவுகள்:
- குழந்தைப் படுகொலைகள், எல்டிடிஇ பிரபாகரன், போராட்டங்கள்: சில சிந்தனைகள், குறிப்புகள் 25/03/2013
- வாடிக்கையாளர்களுக்கொரு நற்செய்தி! நாம்தமிழர் சீமாரின் புதிய பிரகடனம்!! + மூன்று குறிப்புகள் 04/08/2015
- ராஜனி திராணகம: சில நினைவுகள், குறிப்புகள் 21/09/2014
- இதுதாண்டா மாவோயிஸம்! :-( 02/03/2014
- சரி, தமிழிளைஞர்கள் கோபமே படக்கூடாதா? பொதுமக்களாகிய நாம் என்னதான் செய்யவேண்டும்?? 22/02/2014
- தமிழர், ஆண்மையின்மைக்கு இழப்பீடு பெறுவது எப்படி 25/11/2013
- மொதல்ல மாட ஓட்டக் கத்துக்குங்கடா, அப்றம் புத்தபிக்ஷுக்கள தெர்த்தலாம்…03/04/2013
- ஏன், நம்மால் இதைக் கூடச் செய்ய முடியாதா?01/04/2013
- பிரபாகரனும், கருணாநிதியும் (ஜூன் 29, 2011)
- சில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)
- திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை!)
- போங்கடா, இதுதாண்டா *&#@! பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)
- தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??
August 12, 2015 at 06:40
The so called Alexander the Great is also a ‘தறுதலை’
August 12, 2015 at 08:15
அய்யா செல்வராஜ்,
அலெக்ஸான்டர் ஒரு மகாமகோ ஆசாமி என்றெல்லாம் அரைகுறைத்தனமாகச் சொல்லமாட்டேன். அவர் அக்காலத்திய விடலை மனதின் ஒரு பிரதிபலிப்பு. அவ்வளவுதான்.
அலெக்ஸான்டருக்கும் தறுதலைப் புலிகளுக்கும் ஒரு தொடர்புமில்லை.
ஆகவே, நீங்கள் சொல்வது – திராவிடர்கழகத்துக்கும் பகுத்தறிவுக்கும் தொடர்பு இருக்கிறது என அநியாயமாகப் பழிசுமத்துவது போல் இருக்கிறது.
நன்றி.
__ரா.
August 12, 2015 at 06:44
நைச்சியமான, நேர்மையாளர்… ஆகா!
August 12, 2015 at 08:08
அய்யா செல்வராஜ், தாங்கள் இதனைக் கிண்டலாகத்தான் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.
இருந்தாலும், என் கருத்தில் மாற்றமில்லை. சந்தேகத்திற்கிடமில்லாமல், கதிர்காமர் ஒரு பெரியமனிதர்தாம்.
நன்றி.
__ரா.
August 12, 2015 at 10:08
Despite all the pledges, the Australians were holding their own and Shane Warne in particular was making statements that were sensitive. His comment that a bomb might go off in Colombo while he was shopping was the last straw and Sri Lanka’s Foreign Minister Lakshman Kadirgamar hit back saying ‘Shopping is for Sissies’. With that comment all hell broke loose, but Kadirgamar, whose oratory skills were as good as any of his contemporaries world over would go onto turn the cricket world’s sympathy towards Sri Lanka.
“There was a storm of protest in Australia after I said ‘shopping is for sissies’, Kadirgamar would later recall. A TV interviewer asked me whether I had ever played cricket. I said I had played before he was born – without helmets and thigh guards, on matting wickets that were full of holes and stones and I had my share of broken bones to show it. My friend the Australian Foreign Minister was drawn into the fray and phoned me. We decided to cool things down. A combined India/Pakistan team came to Colombo at very short notice to play an exhibition match in place of the Australian match. It was a magnificent gesture of South Asian solidarity.”
“Against strong security advice I went on to the field to greet and thank our friends from India and Pakistan. When the whole episode was over I sent a bouquet of flowers to my Australian counterpart. Flowers are also for sissies,” Kadirgamar continued.
August 13, 2015 at 06:22
Oh thanks, Manikandan, for that nice snippet. :-)
I did not know about this LK incident.
Yes, once upon a time, there were real giants that walked the earth, in land of Srilanka.
__r.
August 12, 2015 at 17:45
Thanks
Saw the YouTube movie also
Learnt much and can understand the situation better now.
Sampath
Sent from my iPhone
>
August 13, 2015 at 06:24
Sir, Sampath – you are welcome, but dunno what you are talking about.
I did not include any youtube stuff in my notes on Lakshman Kadrigamar…
__r.