ஃபில் கேம்பியன்: இஸ்லாமிக்ஸ்டேட் அட்டூழிய கும்பலுடன் பொருதுவது எப்படி? (+ சில கோரிக்கைக் குறிப்புகள்)
October 20, 2015
பெஷ்மெர்கெ (Peshmerga), ஒய்பிஜி (YPG), ஒய்பிஜே(YPJ) போன்றவை – தகுந்த பயிற்சியும், யுத்த தளவாடங்களும், ஏன், உண்ணஉணவும் கூடச் சரியாகக் கிடைக்காமல் இருந்தாலும் கூட — ஈவிரக்கமற்ற பொறுக்கிமுதல்வாத அயோக்கிய இஸ்லாமிக்ஸ்டேட் விஷத்தை, தொடர்ந்து தளராமல், சளைக்காமல் – உலகத்து மக்கள் அனைவர் சார்பாகவும், ஏன், நம் இந்தியத் தமிழர்கள் சார்பாகவும் கூடப் போராடும் மனோதைரியமும் ஞானவைராக்கியமும் படைத்தவை! இவை கர்ட் அமைப்புகள் என்ற உண்மையை நான் மறுபடியும் மறுபடியும் சொல்லத் தேவையில்லை…
தர்மயுத்தம் எனவொன்று இருக்குமா என்று யாராவது கேட்டால், வெகு தைரியமாக தயக்கமேயின்றி நான் சொல்வேன்:
அது கர்ட் மக்கள் திரள்கள், தங்கள் சுய நிர்ணய உரிமைக்காகச் சில நூற்றாண்டுகளாக இரான், இராக், ஸிரியா, துருக்கி பிரதேசங்களின் பயங்கரவாத அரசாங்கங்களுடன், ஸவுதிஅரேபிய வஹ்ஹாபியத்துடன் — இப்போது முழு முனைப்புடன் வஹ்ஹாபி-ஸலாஃபி இஸ்லாமிய வெறியர்களுடனும் தொடர்ந்து புரிந்து கொண்டிருக்கும் பன்முனை யுத்தம்தான்.
இவர்களுக்கு நம்மால் என்ன உதவி செய்ய முடியவேண்டும்? (நான், நம் தமிழ முஸ்லீம் இளைஞ அரைகுறைகள் கீழ்க்கண்டதுபோல இஸ்லாமிக்ஸ்டேட் ஆராதனை செய்திருப்பதைச் சொல்லவரவில்லை இங்கு, மன்னிக்கவும்!)
-0-0-0-0-0-0-
நான் (பல விஷயங்களுக்காக) மிகவும் மதிக்கும் ஃபில் ‘பெரிய ஃபில்‘ கேம்பியன் அவர்கள் (இவர் எஸ்ஏஎஸ் எனப்படும் இங்கிலாந்து ராணுவத்தின் அதி நவீன/விசேஷ/ரகசிய கமென்டொ அமைப்பில் பணிபுரிந்து பல களங்களைக் கண்டவர்; இப்போது பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருபவர்; பல உருப்படியான குறிப்புகளைக் கொண்ட ஒரு நல்ல ஸர்வைவல் புத்தகம் ஒன்றையும் எழுதியிருக்கிறார்) ஸ்கை டீவி சேனலுக்காக எடுத்த படத்தை நீங்கள் அவசியம் பார்க்கவேண்டும் என விழைகிறேன்.
நான் இதுவரை பார்த்த யுத்தம் தொடர்பான ஆவணப் படங்களிலேயே – ஸென்டிமென்ட் கின்டிமென்ட் என்றெல்லாம் இல்லாமல், ரத்தக் களறிகளைக் காண்பிக்காமல், கண்டமேனிக்கும் ரேம்போத்தனமாகச் சுட்டுத்தள்ளுவதைக் காண்பிக்காமல், நம் மனத்தை உலுக்கும் பச்சாதாபக் காட்சிகளை லூப்பில் ஒளிபரப்பாமல், துளிக்கூட மெலட்ராமா இல்லாமல், ஜிங்பேங்க் க்ராஃபிக்ஸோ பொய்மைகளோ இல்லாமல், பிரபாகரத் தறுதலைப்புலிகளின் போலிப்பிரச்சார சமாச்சாரம் போலல்லாமல் — நேர்மையாக எடுக்கப்பட்டிருக்கும் – கிட்டத்தட்ட 44 நிமிடம் ஓடும் தரமான ஆவணப் படம் இது. அவசியம் பார்க்கவும்.
இஸ்லாமிக் ஸ்டேட்டுடன் பொருதுவது: ‘பெரிய’ ஃபில்-ன் யுத்தம் (Fighting Islamic State: Big Phil’s War | Special Report) – https://www.youtube.com/watch?v=6FfRwhT2mf0
ஏனெனில், இந்த தர்மயுத்தத்தில் தற்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைச் சிறிதாகவேனும் புரிந்துகொள்ள இது உதவும். மேலும் – இஸ்லாமிக்ஸ்டேட் அமைப்பை இந்தியாவிலும் கடைவிரிக்க, தொடர்ந்து முயற்சிகள் நடக்கின்றன. இந்த நோக்கிலும் நாம் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்… இது என் முதல் கோரிக்கை.
கர்ட் மக்கள் பலப்பல பிரச்சினைகளுக்கிடையே, குறைபாடுகளுக்கிடையே தொடர்ந்து, வீரத்துடன் போராடி வருகின்றனர்; இப்போது துருக்கி ராணுவமும் கர்ட்களுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை (=படுகொலைகள்!) எடுப்பதற்கு அப்பாற்பட்டு, இஸ்லாமிக்ஸ்டேட் அமைப்புக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலவழிகளில் உதவி வருகிறது. துருக்கியின் அரைவேக்காட்டுப் பார்வையில் எதிரியின் எதிரி = நண்பன். சோகம். மேலும் கர்ட்களையும் அர்மேனியர்களையும் கொன்று குவிப்பது துருக்கியர்களுக்கு, எப்படியும் பல நூற்றாண்டுகளாக வெல்லம்!
…ஆக – இஸ்லாமிக்ஸ்டேட், ஒடிப்போன இராக்கிய ராணுவம் விட்டுவிட்டுப்போன பலபத்து பில்லியன் டாலர் அதி நவீன யுத்த தளவாடங்களுடனும், பெட்ரோலியய் பணத்துடனும், உலகளாவிய இஸ்லாமிய வெறியர்களால் ஊக்குவிக்கப்பட்டும் கொலைத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும்போது, கர்ட்கள் பெரும்பாலும் பழங்காலத்து போல்ட் அக்ஷன் ரைஃபிள்களுடன் போராடிக்கொண்டிருக்கின்றனர். துப்பாக்கி ரவை கூட கடுமையாக ரேஷன் செய்யப்பட்டுவருகிற நிலைமை.
ஆனால் ஒரு ஆசுவாசமளிக்கும் விஷயம் என்னவென்றால் – பல விஷயங்களில் மேற்கத்திய அரசாங்கங்கள் கர்ட்களுக்கு உதவ ஆரம்பித்திருக்கின்றன. ஒய்பிஜி, ஒய்பிஜே அமைப்புகள் மார்க்ஸியலெனினிய (இவை அரைகுறை மாவோயிஸ்ட் அமைப்புகளல்ல!) அடித்தளத்தைக் கொண்டிருந்தாலும், அமெரிக்காகூட கடந்த பல மாதங்களாக இவைகளுக்கு உதவி வருகிறது. ஏனெனில், இஸ்லாமிக்ஸ்டேட் கும்பலுக்கு காத்திரமான எதிர்ப்பைக் களத்தில் (விமானத்திலிருந்து குண்டு வீசுவது அல்ல, இதுவும் முக்கியமென்றாலும்!) மகாமகோ தைரியத்துடன் காண்பிப்பது கர்ட்கள் மட்டுமே… கடந்த சில நாட்களாக, ரஷ்யா நடத்தும் குண்டுவீச்சு ஸிரிய அரசாங்கத்துக்கு ஆதரவாக, ஆகவே இஸ்லாமிக் ஸ்டேட்டுக்கு எதிராக என்றாலும், அதுவும் தற்காலிகமாக ஒரு நல்லவிஷயம்தான். ஆனால் ஸிரிய அரசாங்கமும் கர்ட்களுக்கு எதிரான கடும் வன்முறையை முன்னெடுக்கும் அமைப்புதான்!
ஆனாலும் நம் அனைவர் சார்பாகவும் போராடும் கர்ட்களுக்கு அவர்களுக்குத் தேவையான வசதிகள் கிடைப்பதேயில்லை. ஆகவே நாம் இந்த விஷயத்தில் உபயோககரமாக ஏதாவது செய்ய முடியுமா?
சரி. நிலைமை படுகவலைக்கிடம்தான். ஆனால், நம்மால் என்ன உதவி தான் செய்யமுடியும்?
என்னைப் பொறுத்தவரை, நாம் உலகளாவிய முன்னேற்றத்தை விழைகிறவர்களானால், மானுட சகோதரத்துவத்தைப் போற்றிக்காக்க சின்னஞ்சிறு துரும்புகளை அசைக்கவாவது முனையக்கூடுமானால், எனது இரண்டாம் கோரிக்கையாக – நாம் மூன்று விஷயங்களைச் செய்யலாம்.
உதவிவகை #1: நேரடி நிதி உதவி
இதை மத்தியகிழக்குப் பிரதேச மார்க்கெட்டில் ஒரு கர்ட் (பெஷ்மெர்கெ சார்பாகவோ, ஒய்பிஜி-ஒய்பிஜே சார்பாகவோ) வாங்கவேண்டுமென்றால் அங்குள்ள நிலவரப்படி சுமார் 3500 டாலர் ஆகிறது என்கிறார்கள். இத்தனைக்கும் இது அங்குள்ள யுத்த நிலவரத்தில் ஒரு வெகுசாதாரணமான தளவாடம்தான்!
ஆகவே, நீங்கள் ஆக்கபூர்வமான/அமைதிபூர்வமான உதவி அளிக்கப் பிரியப்பட்டால், உங்களுக்கான சுட்டிகள்:
- பல விதங்களிலும் கர்ட் மக்களுக்கு உதவும் அமெரிக்கத் தளம்: http://www.1naef.com/#!donate/c3g8
- அமெரிக்க கர்ட்களின் கூட்டமைப்பு – http://kurdistan.org/donate/
- கர்ட் மனிதயுரிமைச் சங்கம் – http://kurdishrights.org/about-us/
- கபாணிக்காக: http://www.khrw.org/2014/10/06/help-save-kobani-donate-to-khrw-org-or-youcaring-comkhrw/
இதனைப் படிக்கக்கூடும் தற்குறிகளுக்கு ஒரு குறிப்பு: உடனே விழுந்தடித்துக்கொண்டு கஃபர் மார்க்கெட் ஓடிப் போய் ரேம்போ பாதிப்பில் துப்பாக்கி வாங்கமுயலவேண்டாம் – ஏனெனில், இவை காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் வட்டாரங்கள்; பலப்பல வருடங்களுக்கு முன் ஒரு தட்டச்சுக் குளுவான் அரைகுறை இதைக் கேட்டுவிட்டு ஓடிப்போய் அங்கு விசாரிக்க முயன்றபோது, அவனைப் பிடித்து சிறையில் இரண்டுவாரங்களுக்கு ஜட்டியுடன் உட்கார வைத்துவிட்டார்கள்; அவன் அப்பா போய் கெஞ்சி, அவன் முதலாளி போய் கெஞ்சி நற்சான்றிதழ் கொடுத்து, மூளை பிசகியிருக்கலாம் என மருத்துவச் சான்றிதழ் கொடுத்து ஒருவாறாக அவன் வெளியேவந்தான். முட்டாள்.
-0-0-0-0-0-0-0-
இதைத் தவிர, இணையத்தில் இந்த இஸ்லாமிக்ஸ்டேட் எழவு பற்றி விரிவாக எழுதலாம்; தொடர்ந்து அது செய்யும் அட்டூழியங்களையும், அதற்கெதிராக கர்ட்கள் முன்னெடுக்கும் போராட்டங்களையும் பற்றி உரையாடலாம்.
உதவிவகை #3: நட்பு பாராட்டல்
தயவுசெய்து – இவற்றில் ஒன்றையாவது, அல்லது அனைத்தையும் செய்யமுடியுமா?
… ஏனெனில் – இஸ்லாமிக்ஸ்டேட் மனோபாவம் என்பது இப்போது நம் வீட்டிற்குள் பெரிதாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால், அது தெருவோரத்தில் காத்துக்கொண்டிருக்கிறது.
… ஏனெனில், அவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். நம்முடைய காத்திரமான ஆதரவுக்கு, சர்வ நிச்சயமாக அவர்களுக்குச் சகலவிதமான தகுதிகளும் இருக்கின்றன.
சரி.
என் அமெரிக்கா வாழ் ‘NRI’ நண்பன் ஒருவன் (தட்டச்சுத் தகவல்தொழில் நுட்ப குமாஸ்தா அல்லாத இவன், ஒரு அமெரிக்கக் குடிமகன் ஆகி மூன்று மாமாங்கங்கள் – அங்கும் ஓட்டுப்போடுவதைத் தவிர வாராவார வாரயிறுதி இந்திய முனகல் பார்ட்டிகளில் – கன்ஸர்வேட்டிவ், ரிபப்ளிகன், டெமாக்ரெட், லிபர்டேரியன் என, பியர் குடித்துக்கொண்டே பேசுவதைத் தவிர – இந்தியாவின் வளர்ச்சியின்மை, குப்பைகூளம், அரசியல்ஃப்ராடுகள், ஊழல் என அங்கு உட்கார்ந்துகொண்டு குசு விட்டுக்கொண்டிருப்பதைத் தவிர – சில சமயங்களில், பணம் கேட்டால் கொஞ்சம் தாராளமாகவே உதவி செய்வான். எனக்கல்ல, நான் சுட்டும் விஷயங்களுக்கு; என்னை அவனுடைய கான்ஷியன்ஸ் கீப்பர் என நினைத்துக்கொண்டிருக்கிறான், ஏமாளி!) – என் தொந்திரவின் காரணமாக இரண்டு வாரங்கள்முன் கர்டிஸ்தான் சென்றிருந்தான்; அவனிடம் பிகெகெ அணியினருக்கும் பெஷ்மெர்கெ அணியினருக்கும் என் சார்பாக கொஞ்சம் பணத்தை நேரடியாகச் சேர்ப்பிக்கச் சொல்லியிருந்தேன் – ஐஎஸ் கும்பலுக்கு எதிராகப் போராட யுத்த தளவாடங்களுக்காக மட்டுமேயென்று, வளர்ச்சிப்பணிகளுக்காக அல்லவென்று. செய்தான். அடுத்த இரண்டு வருடங்களில், ஏதாவது வேலை செய்து இதைத் திருப்பவேண்டும்.நிற்க – கர்டிஸ்தானின் எர்பில் நகரத்துக்கும் ஸுலைமானியா நகரத்துக்கும் அவன் சென்று வந்தான்; கபானிக்கும் ஸிஞ்சர் நகரத்துக்கும் போக முடியவில்லை. உலகத்தைப் பலமுறை சுற்றி 80த்திச் சொச்ச நாடுகளில் பலவாரக் கணக்குகளில் மறுபடியும் மறுபடியும் சுற்றியுள்ள அவனுக்கு ஒரே ஆச்சரியம் – இப்படியும் ஒரு தேசம் (இன்னமும் இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடல்ல) இருக்கிறதா என்று – அதுவும் பெண்களென்றால் மிகமிகவும் இளக்காரமாக நடத்தும் (இஸ்ரேலைத் தவிர்த்த) அரேபிய நாடுகளிலா என்று! கொடுமையான ஒழுக்கவாதிகளின் அகங்காரத்தில் உழலும் பொதுமக்கள் அங்கு இல்லையே என்று. அவர்களின் குடிமைப் பண்பையும், சுற்றுச் சூழல் சுகாதாரத்தைப் பேணும் தன்மையையும், நடைமுறை ஜனநாயகத்தையும், மனிதாபிமானத்தையும், பன்முகச் சமூகத்தை வளர்த்தெடுத்தலையும் பார்த்து மகிழ்ந்து… (இவன் குறிப்புகளை, முடிந்தபோது தமிழ்படுத்திக் கொடுக்கவேண்டும்)
கர்டிஸ்தான், ஒரு ராமராஜ்யம் அல்ல – அங்கும் பிரச்சினைகள் இருக்கின்றன; ஆனால் அவர்கள் அங்கு அவற்றை எதிர்கொள்கிறார்கள்; பக்குவமாக சிக்கல்களை அவிழ்க்கும் பாங்கும், பிறர்மேல் நாய்போலப் பாயாத தேசபக்தியும் இருக்கிறது; அவர்களுக்கு – மதத்துக்கு முன்னால் மக்கள்திரள்களுக்கே மரியாதை கொடுக்கும் பாங்கு இருக்கிறது.பெண்களை வெறுக்காத, அவர்களை மட்டுமே குண்டுச்சட்டியில் வைத்து குடும்பக்கழுதை பாரத்தைச் சுமக்க வைக்காத சமூகம் எதுவுமே எனக்கு உவப்பானதுதான். அதுவும், பொதுவாக பெண்களை கீழ்மையாகப் பார்க்கும் நடைமுறை இஸ்லாம் சூழலில், இப்படியும் ஒரு முஸ்லீம்கள்திரளும் இருப்பது, மிகவும் நம்பிக்கை தரும் விஷயம்.
முழு பதிவு: இரு வீடியோக்கள்: பெண்களை மதிக்கும் கர்டிஸ்தானின், பெண் வீரர்கள் (சிறு இலவச இணைப்பு: ‘NRI’ மஹாத்மியம்) 05/05/2015
-0-0-0-0-0-0-0-0-
தொடர்புள்ள பதிவுகள்:
- பாவப்பட்ட இஸ்லாமியர்களுக்கும் பெருமளவில் தொடர்ந்து உதவும் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் அவர்களுக்குக் கொலைமிரட்டல்கள்: ஒரு கர்ட் எதிர்வினை18/07/2015
- மைக்கெல் என்ரய்ட், ஹாலிவுட் நடிகர் – தற்போது கர்டிஸ்தானில், இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு எதிராக… (+இலவசை இணைப்பு: தமிழ்சினிமா எனும் அற்பம்) 18/05/2015
- அயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர்: சில குறிப்புகள் 12/05/2015
- தொழில்முறை அமெரிக்க எதிர்ப்பாளர்களுக்கு, கர்ட்களின் பதில் 07/05/2015
- இரு வீடியோக்கள்: பெண்களை மதிக்கும் கர்டிஸ்தானின், பெண் வீரர்கள் (சிறு இலவச இணைப்பு: ‘NRI’ மஹாத்மியம்) 05/05/2015
- ஸுன்னிமுதல்வாத இஸ்லாமிக்ஸ்டேட் வெறியர்கள், நேற்றும் 500க்கு மேற்பட்ட மாற்றுமத அப்பாவிகளைப் படுகொலை செய்தனர்! (+ இஸ்லாமிக்ஸ்டேட் கொலையாளிகளுக்கு, தமிழ் நாட்டில் ஆதரவும் சப்பைக்கட்டலும்) 02/05/2015
- பாகிஸ்தானிய பத்திரிகையாளர் நதீம் ஃபரூக் பராச்சா அவர்களை முன்வைத்து – சில சிந்தனைகள் 01/05/2015
- இஸ்லாமிக்ஸ்டேட் தீவிரப் பொறுக்கிமுதல்வாதத்தின் படி, குழந்தைகளுக்கு இரண்டு வழிகளே: 1) படுகொலையாவது, அல்லது 2) படுகொலையாளியாவது 26/04/2015
- கில்யஸ் மறுசுழற்சி: சில குறிப்புகள் 24/04/2015
- இஸ்லாமிக்ஸ்டேட் பெருச்சாளிகளை விரட்டியடிக்கும் கர்டிஸ்தானின் கபானி நகரம்: சில குறிப்புகள் 21/04/2015
- ஜிஹாத், ஜிலேபி, ஜிகர்தண்டா 10/04/2015
- கில்யஸ்: மேலும் சில நினைவுகள் + இந்திய/நடைமுறை இஸ்லாம்: சில குறிப்புகள் 09/04/2015
- கில்யஸ் – ஒரு கர்ட் பெஷ்மெர்கெ ஆளுமை, நடைமுறை இஸ்லாம்: சில நினைவுகள், குறிப்புகள் 08/04/2015
October 22, 2015 at 00:17
கீழே உள்ள தரவுகளை பார்க்கவும் .
பெரியார் ஆந்திரா குல்டி . தமிழை அழிக்க வந்த அவதாரம்.
Dravidian Illusions and Tamil Identity Part-1 to part 8. Reference tamilan TV.
இத பார்த்த பிறகும் எவனும் பெரியார் பத்தி பேச மாட்டான்.
evr in nokkam enna ?
October 22, 2015 at 23:02
தாழ்த்தப்பட்டவர்களைக் கேவலப்படுத்திய ஈ.வே.ரா!
தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்ன போராடினார் ஈ.வே.ராமசாமி நாயக்கர்? என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை எவ்வளவு கேவலமாக பேசினார் தெரியுமா?
வட ஆற்காடு பசுமந்தூரில் 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற திராவிடர் கழக கூட்டமொன்றில் பெரியார் பேசிய போது, கூட்டத்திலிருந்து ஒருவர் ஆதிதிராவிடர் திராவிடர் கழகத்தில் சேருவதால் ஆதிதிராவிடர்களுக்கு என்ன நன்மை? எனக்கேட்ட கேள்விக்கு, ஆதிதிராவிடர்கள் திராவிடர்கழகத்தில் சேருவதால் திராவிடர் கழகத்துக்குத்தான் என்ன நன்மை? என்று எதிர்க் கேள்வி கேட்டார் பெரியார். அதாவது ஆதிதிராவிடரால் ஒரு நன்மையும் இல்லை என்று இலைமறையாகச் சொல்லிவிட்டார். இதை எதிர்த்து அன்றைய சென்னை மாகாணத்தின் சட்டசபை எம்.எல்.ஏ அவர்களின்”உரிமை’‘ இதழின் ஜூலை 1949 பதிப்பில் பெரியாரின் கூற்றை தலைப்பாக வெளியிட்டு சேரிமக்கள் ஆதரவால் பெரியாரான ஈ.வே.ரா. ஆதிதிராவிடனை தனித்து ஓதுக்கிவிட்டதால் இனி அவன் தன் சுயபலத்தால் நின்றாலன்றி வாழ்வில்லை என்பதை விளக்கி, தலையங்கம் எழுதினார்.
(நூல்: கோலார் தங்கவயல் வரலாறு, கே.எஸ்.சீதாராமன்)
அதே போல, துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதாக தாழ்த்தப்பட்ட தலைவர்கள் இன்றும் கூறுகின்றனர். இது உண்மை இல்லை என்று இதுவரை திராவிடர்க் கழகம் தெளிவுப்படுத்தவில்லை.
ஆனால் இது உண்மைதான் என்று ஓர் ஆதாரம் கூறுகிறது. சென்னையில் சில அம்பேத்கர்வாதிகளால் நடத்தப்பட்டு வந்த ‘அம்பேத்கர்‘ இதழின்‘சூட்டுக்கோல்‘ என்ற பகுதியில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.
”ஓரு முறை ஈ.வே.ரா. துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று கூறினார். அதற்கு அன்று மறுப்புக் கூறினோம்”.
(அம்பேத்கர் மாத இதழ் – நவம்பர் – டிசம்பர் – 1963)
இதிலிருந்து தெரிவதென்ன?
ஈ.வே.ராமசாமி நாயக்கர் பறையர்களை எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா! தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாகப் பேசிய ஈ.வே.ராமசாமி நாயக்கரைத்தான் இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று பாராட்டுகிறார்கள். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கரையே கேவலமாகப் பேசியிருக்கிறார்.
அம்பேத்கரைக் கேவலப்படுத்திய ஈ.வே.ரா!
ஈ.வே.ராமசாமி நாயக்கரை ஒருவர் கேள்வி கேட்கிறார். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் அரசாங்கத்தை ஒழிக்கவேண்டுமென்று சொல்லுகிறீர்களே, இது அரசியல் பிரச்சனையாகாதா? அரசியல் கட்சியாக இருந்தால்தானே இந்த அரசியல் பிரச்சனையைத் தீர்க்கமுடியும்?
இதற்குஈ.வே.ராமசாமி நாயக்கர் பதில் சொல்கிறார்:
”நல்ல கேள்வி, அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே, அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும் உடனே அவனது நாணயம் ஒழுக்கம் கெட்டுப்போய்விடுகிறது! அவன் புரட்டு பித்தலாட்டம் செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்படுகிறான். அது நானாக இருந்தாலும், பாபா சாகிப் அம்பேத்கராக இருந்தாலும் சரி அப்படித்தான் ஆகிவிடுவோம். அது அப்படி ஆக்கிவிடும்.
(விடுதலை 16-02-1959)
ஈ.வே.ராமசாமி நாயக்கரின் இந்த பதில் 1959-ம் ஆண்டு சொல்லப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் இறக்கும்வரை அதாவது 1956-ம் ஆண்டு அரசியலிலே எப்படியிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தன்னுடைய கொள்கைக்காக பதவியையே ராஜினாமா செய்தவர். இப்படிப்பட்ட அம்பேத்கரை – கடைசிவரை அரசியலியே ஒழுக்கமாக, நாணயமாக இருந்த அம்பேத்கரை – அரசியல் மாற்றிவிடும் என்ற அவர் இறந்தபிறகு சொல்வது அம்பேத்கரைக் கேவலப்படுத்துவதுதானே!
அம்பேத்கர்தான் ஒழுக்கமாக, நாணயமாக இருந்தாரே பின் ஏன் அம்பேத்கரை இழுக்க வேண்டும்? அம்பேத்கர் அப்படி மாறி இருந்தால் சொல்லலாம். அவர்தான் மாறவில்லையே! இவரைப் பொருத்தவரையில் மாறிவிடுவோம் என்று சொன்னது இவருக்கு மட்டும் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் தேவையில்லாமல் அம்பேத்கர் பெயரைச் சொல்லுகின்றார். காரணம் அம்பேத்கர் அரசியலில் நல்லவரல்ல என்பதை சொல்லுவதற்காகதான்.
அம்பேத்கரை அடக்கிவிட்டதா காங்கிரஸ்?
மேலும்அம்பேத்கரைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
……….தாழ்த்தப்பட்டோர் சங்கத்திற்கு எனது அருமை நண்பரும் அறிஞருமான அம்பேத்கர் தலைவராக இருந்து வருகிறார். தாழ்த்தப்பட்டோர் இந்துக்களல்ல என்ற மிக ஆதாரத்தோடு ஆரியத்தின் முதுகில் தட்டி ஆணவத்தைக் குறைத்தவர்களில் அவரும் ஒரு முக்கியஸ்தர்; பேரறிஞர், நான் எதிர்பார்த்திருந்தேன், அவர் ஒத்துழைப்பை இவ்வாரியத்தின் கொடுமைகளை ஒழிக்க, ஆனால் எதிர்பாராத விதமாக எந்த ஆரியத்தின் ஆணிவேரை அசைத்து ஆட்டங்கொடுக்கும்படி செய்தாரோ அந்த ஆரியத்தின் ஸ்தாபனமாகிய, இந்துக்களின் ஸ்தாபனமாகிய காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது. இவரும் அத்துடன் உறவு கொண்டுவிட்டார். இன்னும் கூற வேண்டுமானால் இந்தியநாடு பிரிக்கப்படக்கூடாதென்ற வடநாட்டின் வறண்ட தத்துவத்தை இன்றைய நிலையில் அவர் பேசுவதைக் கண்டு என் மனம் வருந்துகிறது. இன்னும் சில நாட்களில் திராவிட நாடு பிரிவினையை அவர் எதிர்ப்பாரோ என்று அஞ்சுகிறேன்.
(குடியரசு 08-07-1947)
மேலும்அம்பேத்கரைப் பற்றி ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-
…………டாக்டர் அம்பேத்கரை சுவாதீனம் செய்து கொண்டுவிட்டார்கள். பிராமணர்கள், சூத்திரன், பஞ்சமன் என்ற பிரிவு இருக்கக்கூடாது என்று அரசியல் நிர்ணய சபையில் வாதாடமல் செய்து விட்டார்கள்……. தனித் தொகுதியை ஓழிப்பதற்குக் கூட அவரால் தொல்லை நேராமல் பார்த்துக் கொண்டார்கள்.
(விடுதலை 10-07-1947)
இந்த விமர்சனத்தைக் கூர்ந்து படியுங்கள்.
அதாவது அம்பேத்கர் காங்கிரஸ் மந்திரி சபையில் இடம் பெற்றதைத்தான் ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று கூறுகிறார்.
கோழைகளைத்தான் அடக்க முடியும். தைரியம் மிக்கவர்களை அடக்க முடியாது. கோழைகள்தான் அடங்கி போவார்கள். தைரியம் மிக்கவர்கள் அடங்கி போகமாட்டார்கள். இதுதான் நடைமுறை உண்மை, இது எல்லோருக்கும் தெரியும்.
காங்கிரஸ் இன்று நமது அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று சொன்னால் என்ன அர்த்தம்? அம்பேத்கர் கோழை என்பதால் காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றுதானே அர்த்தம்?
அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று கூறுவது உண்மையிலேயே அம்பேத்கரை இழிவுபடுத்துவதாகும்.
அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொள்ளக் காரணம் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் நலனுக்காகவே, அம்பேத்கர் காங்கிரஸ் மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தாலும்கூட தன்னுடைய கொள்கைகளை எப்போதுமே விட்டுக்கொடுத்ததில்லை.
இங்கே ஒன்றை நினைவுபடுத்துகிறோம்.
ஈ.வே.ராமசாமி நாயக்கர் 1920, 1921, 1922, 1923, 1924, 1925 – ஆகிய ஆண்டுகளில் வகுப்புரிமைத் தீர்மானங்கள் கொண்டுவந்தபோது காங்கிரஸ் அதை ஆதரிக்க மறுத்தது. 1925-ம் ஆண்டு இனி காங்கிரஸை ஒழிப்பதே என் வேலை என்று அதிலிருந்து வெளியேறினார் என்று சொல்லப்படுகிறது.
நான் கேட்கிறேன்.1920-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோது ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லையே? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?1921-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?1922-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?1923-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?1924-ம் ஆண்டு காங்கிரஸ் வகுப்புரிமைத் தீர்மானங்களை ஆதரிக்க மறுத்தபோதும் ஏன் காங்கிரஸை விட்டு வெளியேறவில்லை? தொடர்ந்து ஏன் காங்கிரஸில் இருந்தார்? காங்கிரஸ் அடக்கிவிட்டது என்றா அர்த்தம்?
இவர்கள் சொல்கிறபடி ஆமாம் என்றுதான் சொல்லவேண்டும்.அம்பேத்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் அம்பேத்கரை அடக்கிவிட்டது என்று சொன்னால் வகுப்புரிமைத் தீர்மானங்கள் தோல்வியடைந்த நிலையிலும் ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரசுடன் உறவு கொண்டுவிட்டார் என்பதாலேயே காங்கிரஸ் ஈ.வே.ராமசாமி நாயக்கரை அடக்கிவிட்டது என்று சொல்லலாம் அல்லவா?
இவர்கள் அகராதிப்படி உண்மையிலேயே ஈ.வே.ராமசாமி நாயக்கரை காங்கிரஸ் அடக்கிவிட்டதுதான்.
October 22, 2015 at 23:02
கி.வீரமணியின் மூடநம்பிக்கைகள்
ஈ.வே. ராமசாமி நாயக்கர், மற்றும் மணியம்மையாரின் மூடநம்பிக்கைகளையும், பொய் பித்தலாட்டங்களையும் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய சீடர் வீரமணியின் முரண்பாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் பார்க்கலாம்.
மூடநம்பிக்கை: 1
இந்து புராணங்களில் முனிவர்கள் பலர் சாபம் இடுவர். இந்தச் சாபம் பலிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்தச்‘சாபத்தை’கேலி செய்தவர்கள்தான் பகுத்தறிவாளர்கள். ஆனால் வீரமணி சொல்வதைச் சற்றுக் கூர்ந்து கவனியுங்கள்.
வீரமணி கூறுகிறார்:-
… தமிழர்கள் எவ்வளவு காலம் தான் ரத்தக் கண்ணீர் சிந்தி, உலகத்திடம் நியாயம் கேட்டு பேசி வருவதோ புரியவில்லை! தமிழினத்திற்கு இப்படி ஒரு ‘சாபக்கேடா’?
(விடுதலை 23-4-1996)
சாபம் என்பதெல்லாம் பொய். அது மூடநம்பிக்கை என்றெல்லாம் சொன்ன இந்தப் பகுத்தறிவாளர்கள், தமிழினத்திற்கு இப்படி ஒரு ‘சாபக்கேடா?’ என்று கேட்கிறார். அதாவது தமிழர்கள் ரத்தக் கண்ணீர் சிந்த யாரோ சாபம் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்.
சாபத்தை நம்புகிறவர்கள் மூடநம்பிக்கைகாரர்கள் என்று சொல்லும்போது அதே சாபத்தை வீரமணியும் நம்பும்போது அவரும் மூடநம்பிக்கைக்காரர்தானே!
மூடநம்பிக்கை 2
வீரமணி கூறுகிறார்:-
…மது விலக்கினால் இப்படி ஏழை, எளிய குடிப் பழக்கமுடைய கிராம மக்கள் விஷச் சராயத்தாலும், கள்ளச் சாராயத்தாலும், குடல் வெந்து சாகின்ற நிலை தவிர்த்து நல்ல சாராயம், கள்ளைக் குடித்தாவது இருக்க, அக்கடைகளையே திறக்கலாமே!
(விடுதலை 30-8-1998)
அதாவது கள்ளச் சாராயம் குடிப்பதைத் தடுக்க, நல்ல சாராயம் குடிக்க கடைகளைத் திறக்கலாமே என்கிறார்.
உண்மையில் சொல்லப் போனால் இது ஒரு தலைவருக்கு அழகல்ல. கள்ளச் சாராயத்தை அரசு கடுமையான சட்டங்கள் போட்டு தடுக்க வேண்டுமே ஒழிய அதற்குப் பதிலாக நல்ல சாராயத்தைத் தரும் கடைகளைத் திறக்கக்கூடாது.
வீரமணி சொல்கிற கருத்துப்படி- அதுதான் சரியான கருத்தும் என்று பார்த்தாலும் கூட- நமக்கு ஒரு கேள்வி எழுகிறது.
…கஞ்சா குடித்து சாவதைவிட சிறிது நல்ல கஞ்சாவை அரசே கடைகள் மூலம் கொடுக்கலாம் என்று வீரமணி சொல்வாரா?
…அபின் சாப்பிட்டு சாவதைவிட நல்ல அபினை அரசே கடைகள் மூலம் விற்கலாம் என்று வீரமணி சொல்வாரா?
கண்டிப்பாகச் சொல்லமாட்டார். ஏனென்றால் இது எவ்வளவுப் பெரிய முட்டாள்தனம் என்று அவருக்கே தெரியும்.
நல்ல அபின் அல்லது நல்ல கஞ்சாவை சாப்பிட்டாலும் உடலுக்குக் கெடுதிதான். அதே போல நல்ல சாராயம் குடித்தாலும் உடலுக்குக் கெடுதிதான். அதை எப்படித் தடுக்கவேண்டும் என்றுதான் பார்க்கவேண்டுமே ஒழிய அதற்கு பதில் நல்ல சாராயம் என்பதெல்லாம் முட்டாள்தனமான கருத்தாகும்.
மூடநம்பிக்கை: 3
வீரமணி கூறுகிறார்:-
…கிராமங்களில் தோற்றுவிக்கப்பட்ட பகைவுணர்ச்சிப் ‘பேயை’ விரட்டியாக வேண்டும்.
(விடுதலை 20-7-1997)
இதில் வரும்‘பேய்‘ என்பது என்ன? ஆத்திகர்கள்தான் ‘பேயை’ நம்புவார்கள். நாத்திகர்கள் – பகுத்தறிவாளர்கள் நம்பமாட்டார்கள். ஆனால் நாத்திகரான – பகுத்தறிவாளரான – வீரமணி என்ன சொல்கிறார்?
பகைவுணர்ச்சிப் ‘பேயை’ விரட்டியாக வேண்டுமாம். ‘பேய்’ என்ற ஒன்று இருப்பதை நம்பித்தானே பேயோடு பகையை ஒப்பிடுகிறார்!
அப்படியானால் ‘பேய்’ என்பது இருக்கிறதா? ‘பேயி’ன் இலக்கணம் என்ன? என்று கேட்ட வீரமணிகளுக்கு – அதே கேள்வியை இப்பொழுது ஆத்திகர்கள் கேட்கிறார்கள்.
வீரமணியின் பதில் என்ன?
மூடநம்பிக்கை : 4
வீரமணி கூறுகிறார்:-
உலகின் புராதன மிகப்பெரிய தொழிலான விவசாயம் மேல்சாதியினர் செய்யக்கூடாது என்றே மனு கட்டளையிட்டுள்ளார். விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சினை, ஐம்பது ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னரும் தீராததற்கு இதுவே அடிப்படை! பார்ப்பனர் பங்கேற்ற தொழில் துறையாக அது இருந்திருப்பின் இன்றுள்ள கஷ்டங்கள் இருந்திருக்கவே இருக்காது. இது ஒரு கசப்பான உண்மை.
(விடுதலை 30-04-1998)
வீரமணி என்ன கூறுகிறார் தெரியுமா?
பார்ப்பனார் பங்கேற்ற தொழில் துறையாக அது இருந்திருப்பின் இன்றுள்ள கஷ்டங்கள் இருந்திருக்கவே இருக்காது. இது ஒரு கசப்பான உண்மையாம். சரி.
அப்படியென்றால் இதில் ஓன்று தெளிவாகிறது.
அதாவது புராதன மிகப்பெரிய தொழிலான விவசாயத்தில் பார்ப்பனர் பங்கேற்கவில்லை. இதில் பங்கேற்றவர்கள் பார்ப்பனர் அல்லாதவர்கள் என்றாகிறது. இதன் மூலும் பார்ப்பனர் அல்லாதவர்கள் பங்கேற்றதனால்தான் விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சினை, ஐம்பது ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னரும் தீரவில்லை என்றாகிறதல்லவா? பார்ப்பனர் அல்லாதவர்கள் பங்கேற்றதனால்தான் இன்றுள்ள கஷ்டங்கள் இருக்கின்றனவா?
எப்படி சுயமரியாதைகாரன்?
தாய்-தந்தையை இழந்தவர்கள்- சுயமரியாதைகாரர்களாக ஆன பிறகு அவரவர் தாய்க்கோ, தந்தைக்கோ ஆண்டுதோறும் நினைவு நாள் கொண்டாடுகிறார்களா? இல்லையே? இன்றைய சமாதிகள்தான் நாளைய கோவில்கள் என்கிற மூடநம்பிக்கை வளர்ச்சி வரலாற்றில் பாலபாடத்தை மறந்துவிட்டு, பெரியார் சமாதிக்கு மரியாதை, பெரியார் சிலைக்கு மலர் மாலை போடுகின்ற ஒருவன் எப்படி சுயமரியாதைக்காரன்?
– வே. ஆனைமுத்து, நூல்; பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்
மூடநம்பிக்கை : 5
வீரமணி கூறுகிறார்:-
ஈரோடு, காஞ்சி என்று சொன்னால் – நமக்கு ஒரு வரலாற்றுக்கு உரியவர்கள் பிறந்த இடம் என்ற வரலாற்றுச் சிறப்பே தவிர, அதில் வேறு ஒன்றும் கிடையது.
(நூல்: சங்கராச்சாரியார்?)
மேலும்வீரமணி கூறுகிறார்:-
(நினைவிடங்களுக்கு) அங்கே போகக்கூடியதோ, மற்றதோ அது ஒரு பிரசார நிகழ்ச்சி, ஒரு வரலாற்றுக் குறிப்பு – மற்றபடி அந்த நினைவுச் சின்னங்களுக்கு மகத்துவம் உண்டு, சக்தி உண்டு என்று நாம் சொல்லவும் இல்லை, நம்பவும் இல்லை.
(நூல்: சங்கராச்சாரியார்?)
நினைவுச் சின்னங்களுக்கு மகத்துவம் உண்டு, சக்தி உண்டு என்று நாம் சொல்லவும் இல்லை, நம்பவும் இல்லை என்று கூறுகிறார். அப்படியானால் அந்த நினைவுச் சின்ன இடங்களில் செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது என்று சொல்வது ஏன்?
பெரியார் திடலில் உள்ள பெரியார் சமாதியின் மேல் கால்வைக்க – உட்கார அனுமதிப்பீர்களா?
பெரியார் சமாதியின் மேல் கால்வைக்க – உட்கார அனுமதிப்பீர்களானால் அப்போது மட்டுமே நினைவுச் சின்னங்களுக்கு மகத்துவம் உண்டு. சக்தி உண்டு என்று நாம் சொல்லவும் இல்லை, நம்பவும் இல்லை என்று வீரமணி சொல்வது உண்மையாகும். அப்படி அனுமதி இல்லை என்று மறுக்கப்படுமானால் பகுத்தறிவாளர்களான உங்களுக்கும் நினைவு சின்னங்களுக்கு மகத்துவம் உண்டு, சக்தி உண்டு என்ற நம்பிக்கை உண்டு என்றுதான் அர்த்தம்.
ஈரோடு, காஞ்சி என்று சொன்னால் – நமக்கு ஒரு வரலாற்றுக்கு உரியவர்கள் பிறந்த இடம் என்ற வரலாற்று சிறப்பே தவிர, அதில் வேறு ஒன்றும் கிடையாது என்று சொன்ன வீரமணி கூறுகிறார்:-
ஈரோடு – நமது அறிவு ஆசானை அகிலத்திற்கு அளித்த இன்பபுரி; லட்சியப் பயணத்திற்கு விதைவிதைத்த சுயமரியாதை இயக்கமாம், ஈடுஇணையற்ற மனித நேய இயக்கம் பிறந்து வளரக் காரணமான மண்.
(விடுதலை 19-05-1998)
இந்த ஈரோடு வர்ணனையைப் பார்க்கும்போது, மேலே சொன்ன ஈரோடு, காஞ்சி என்று சொன்னால் – நமக்கு ஒரு வரலாற்றுக்கு உரியவர்கள் பிறந்த இடம் என்ற வரலாற்று சிறப்பே தவிர, அதில் வேறு ஒன்றும் கிடையாது என்பதற்கும் இந்த வர்ணனைக்கும் உள்ள முரண்பாடு உள்ளங்கை நெல்லிக்கனிப்போல் தெளிவாகத் தெரிகிறதல்லவா!
ஈரோடு – நமது அறிவு ஆசானை அகிலத்திற்கு அளித்த இன்பபுரி என்று சொல்லும்போதும் லட்சியப் பயணத்திற்கு விதைவிதைத்த சுயமரியாதை இயக்ககமாகும் ஈடு இணையற்ற மனித நேய இயக்கம் பிறந்து வளரக் காரணமான மண் என்று சொல்லும்போதும் நமக்கு ஒன்று புரிகிறது.
அதாவது ஆத்திகர்கள் எவ்வாறு கடவுள்கள் பிறந்த இடங்களான அயோத்தி, மதுரா, காசி, மதுரை, பழனி போன்ற இடங்களை பக்திப் பரவசத்துடன் எவ்வாறு இன்பபுரி என்றும் அருள்புரியக் காரணமான மண் என்றும் சொல்லுகின்றார்களோ அதே போல வீரமணியும் பக்திப் பரவசத்துடன் ஈரோடை இன்பபுரி என்றும் காரணமான மண் என்றும் சொல்லுகிறார்.
ஆத்திகர்கள் கடவுள்கள் பிறந்த இடங்களைப் புகழும்போது அது மூடத்தனம் என்றால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் பிறந்த இடமான ஈரோடை வீரமணி புகழும்போது அதுவும் மூடத்தனம்தானே!
அது மூடத்தனம் இல்லையென்றால் ஈரோடு – நமது அறிவு ஆசானை அகிலத்திற்கு அளித்த இன்பபுரி என்று சொல்லுகின்றாரே அந்த ஈரோடு – மற்றொரு அறிவு ஆசானை ஏன் அகிலத்திற்கு அளிக்கவில்லை?
ஈரோடு – லட்சியப் பயணத்திற்கு விதைவிதைத்த சுயமரியாதை இயக்கமாம் ஈடு இணையற்ற மனித நேய இயக்கம் பிறந்து வளரக் காரணமான மண் என்று சொல்லுகின்றாரே – அந்த ஈரோடுதான் காரணமா? அப்படியென்றால் அதே மண் மற்றொரு ஈடு இணையற்ற மனித நேய இயக்கம் பிறந்து வளரக் காரணமாக இல்லையே ஏன்? இதனால் லட்சியப் பயணத்திற்கு விதைவிதைத்த சுயமரியாதை இயக்கமாம் ஈடு இணையற்ற மனித நேய இயக்கம் பிறந்து வளர அந்த மண்தான் காரணம் என்று சொன்னால் அது மூடநம்பிக்கைத்தானே!
மேலும் இங்கு மற்றொரு விஷயத்தையும் கூற விரும்புகிறேன்.
அமைச்சர் அன்பில் தருமலிங்கம், “அய்யா திருச்சியைத்தான் தனது தலைமையிடமாக கொண்டு பெரும்பாலும் வாழ்ந்தார். ஆகவே திருச்சியில்தான் அடக்கம் செய்து அண்ணா சதுக்கம் போல எளிய நினைவுச்சின்னம் எழுப்பிடவேண்டும் என்று பிடிவாதமாகக் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் அதைப் போல் பிடிவாதமாக மணியம்மை ”அய்யா வாழும் போதே தன்னை பெரியார் திடலில்தான் அடக்கம் செய்யவேண்டும்” என்று தன்னிடம் இடத்தைக்கூட குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார். அதற்கு வீரமணியும் ஆமாம் ஆமாம் என்றார்.
(நூல்:- வரலாற்று நாயகன், திருவாரூர் கே. தங்கராசு)
ஈ.வே.ராமசாமி நாயக்கர் தன்னை பெரியார் திடலில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்றும் இடத்தைக்கூட குறிப்பிட்டுள்தாகவும் சொன்னால் அது மூடநம்பிக்கைத் தானே!”
எப்படி மூடநம்பிக்கை என்று கேட்கிறீர்களா?
இறந்த பிறகு எங்கு புதைத்தால்தான் என்ன?
பெரியார் திடலில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்று சொன்னால் பெரியார் திடலில் அப்படி என்ன மகிமை இருக்கிறது?
அந்த பெரியார் திடலில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று சொன்னால் ஏதோ மகிமை இருக்கிறது என்றுதானே அர்த்தம்?
நமது ஹிந்து புராணங்களில் இறைவன் ஒரு இடத்தைச் சொல்லி தன்னை அங்குதான் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று சொல்லுவார். இது மூடநம்பிக்கை என்று பகுத்தறிவாளர்கள் சொல்லுகின்றார்கள்.
அப்படியானால் இறைவன் ஒரு இடத்தைச் சொல்லி தன்னை அங்குதான் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று சொல்லுவதற்கும் பெரியார் திடலில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்று சொல்லுவதற்கும் என்ன வித்தியாசம்?
இப்பொழுது சொல்லுங்கள்! பெரியார் திடலில்தான் அடக்கம் செய்யவேண்டும் என்று சொன்னால் அது மூடநம்பிக்கைத்தானே!
மூடநம்பிக்கை : 6
வீரமணி கூறுகிறார்:-
…இதற்கு முன் உ.பி.யே இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்கிற நிலைமாறி, தென்கோடியிலுள்ள…
(விடுதலை 20-03.1998)
ஹிந்துக்கள்தான் தலையெழுத்தை நம்புவார்கள். அதாவது ஒவ்வொருவருக்கும் தலையெழுத்தை பிரமன் எழுதுகிறான். அந்த தலையெழுத்துப்படிதான் வாழ்க்கை நடக்கிறது. அதை மீறி எதுவும் நடப்பதில்லை. அதாவது தலையெழுத்துதான் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது என்று ஹிந்துக்கள்தான் நம்புகிறார்கள்.
இது மூடநம்பிக்கை என்று பகுத்தறிவாளர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் வீரமணி என்ன கூறுகிறார்?
‘உ.பி.யே இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் என்கிற நிலைமாறி, தென்கோடியிலுள்ள….’ என்று கூறுகிறார். அதாவது தலையெழுத்துதான் நிர்ணயிக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறார்.
ஹிந்துக்கள் சொல்கிற தலையெழுத்துக்கும் வீரமணி சொல்கிற தலையெழுத்துக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு வித்தியாசமும் இல்லை.
அப்படியென்றால் ஹிந்துக்கள் சொல்கிற தலையெழுத்தை மூடநம்பிக்கை என்று பகுத்தறிவாளர்கள் சொல்வார்களானால் வீரமணி சொல்கிற தலையெழுத்தையும் நாம் மூடநம்பிக்கை என்று சொல்லலாம் அல்லவா?
இதன்படி வீரமணி மூடநம்பிக்கைக்காரர்தானே!
முரண்பாடு 1
பா.ஜ.க. ஐந்து அணுகுண்டுகளை வெடித்தது. உலகத்திலே பாரத நாட்டின் பெருமை உயர்ந்தது. ஒவ்வொரு பாரதக் குடிமகனும் பெருமை கொண்டான். ஆனால் இதைக் கூட பொறுத்துக் கொள்ளாமல் வீரமணி என்ன கூறினார் தெரியுமா?
50ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 5 அணுகுண்டுகள்; இந்த தரித்திர நாராயணர்கள் வாழும் பூமிக்கு இப்போது அவசியம்தானா?
(விடுதலை 10-06-1998)
இதைப் பார்த்ததும் நமக்கெல்லாம் ஒன்று தோன்றும். அடடா! வீரமணிக்குத்தான் நமது நாட்டு தரித்திர நாராயணர்கள் மீது எவ்வளவு பச்சாதாபம்! எவ்வளவு பரிதாபம்! எவ்வளவு இரக்கம்!
ஆனால் நமக்குத் தோன்றும் இந்த எண்ணம் கூட தவறானது. வீரமணியின் பச்சாதாபம், பரிதாபம், இரக்கம் எல்லாம் உண்மையானது அல்ல. இதை ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை.
இதோவீரமணி கூறுகிறார்:-
நாகையில் அறிவு ஆசான் தந்தை பெரியார் தம் சிலை – சுமார் 2 லட்சம் ரூபாய்களுக்கு மேல் செலவழிக்கப்பட்டு சிலை, பீடம், பூங்காவெல்லாம் உருவாகி, நாகை நகரத்திற்குள்ளே நுழைவோர் அனைவரையும் வரவேற்கும் துவக்க சிலையாக கம்பீரத்துடன் அமைக்கப்பபட்டுள்ளது.
(விடுதலை:- 13-09-1998)
இப்பொழுது சொல்லுங்கள், வீரமணியின் பச்சாதாபம், பரிதாபம், இரக்கம் எல்லாம் உண்மையானது தானா?
இப்பொழுது அதே கேள்வியை நாமும் கேட்கிறோம்.
நாகையில் பெரியார் தம் சிலை – சுமார் 2 லட்சம் ரூபாய்களுக்கு மேல் செலவழிக்கப்பட்டு சிலை, பீடம், பூங்காவெல்லாம் உருவாகி, நாகை நகரத்திற்குள்ளே நுழைவோர் அனைவரையும் வரவேற்கும் துவக்க சிலையாக கம்பீரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது அவசியம்தானா? அந்த இரண்டு லட்சத்தையும் நமது நாட்டு தரித்திர நாராயணர்களுக்குக் கொடுத்து உதவியிருக்கலாமே! அதுதானே உண்மையான பச்சாதாபம், பரிதாபம், இரக்கம் ஆகும்? அதைவிட்டுவிட்டு பறவைகள் மலம் கழிக்க சிலையும், பீடமும், மனிதர்கள் பொழுதுபோக்க பூங்காவும் அமைக்க இரண்டு லட்சம் செலவழிப்பது இரக்கத்தைக் காட்டவில்லை. மாறாக ஆடம்பரம் மற்றும் விளம்பர மோகத்தைத்தான் காட்டுகிறது.
முரண்பாடு 2
வீரமணி கூறுகிறர்:-
ஒரு அறக்கட்டளையின் பணம் என்பது பொதுப்பணம். கோடியாக இருப்பது என்பது பற்றி யாருக்குமே மறுப்பு இல்லை. அந்தக் கோடியை வைத்துக்கொண்டு நாங்கள் யாரும் வட்டிக்கு விட்டு சம்பாதிப்பதில்லை. அதன் மூலம் பொதுப்பணிகள் செய்கிறோம்.
(சன் தொலைக்காட்சியில் கி.வீரமணி பேட்டி)
ஆனால் வீரமணி தலைமையிலிருந்து விலகியவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
வட்டிக்கடை திறப்பதிலும், சீட்டு நிறுவனங்களை நடத்துவதிலும், காட்டும் ஆர்வம், பெரியார் நூல்களைக் காப்பாற்றுவதில் இல்லாமல் போய்விட்டது கொடுமையிலும் கொடுமை.
(நூல்:- வீரமணி தலைமையிலிருந்து விலகியது ஏன்?)
வீரமணி தலைமையிலிருந்து விலகியவர்கள் தங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக திராவிடன் நல நிதியைக் குறிப்பிடுகிறார்கள். திராவிடன் நல நிதி வட்டிக்கு விடுவதல்லாமல் வேறு என்ன என்று கேட்கிறார்கள். நியாயம்தானே! பதில் சொல்வாரா வீரமணி?
முரண்பாடு: 3
சாதி ஒழிப்புதான் எங்களுக்கு முக்கியம் என்று சொல்கின்ற தி.க.வினர்தான் யார் யார் என்ன என்ன சாதி என்று நமக்கு நினைவூட்டுபவர்கள். ஆனால் அதில் கூட அவர்கள் பொய் சொல்லித்தான் பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது. அதற்கு ஒரு நல்ல உதாரணம் வீரமணியையே கூறலாம்.
வீரமணி கூறுகிறார்:-
…சிவசேனையின் தலைவரான பால்தாக்கரே என்ற பார்ப்பனர்.
(விடுதலை 16-07-1997)
அதாவது பால்தாக்கரே ஒரு பார்ப்பனர் என்று சொல்கிறார். பால்தாக்கரே ஒரு பார்ப்பனர் என்று 1997-ம் ஆண்டு சொன்ன அதேவீரமணி கூறுகிறார்:-
…பால்தாக்கரே ஒரு சூத்திரர்தான். சாஸ்திரப்படி, சாதியில் அவர் ஒரு காயஸ்தா (நம் பகுதியில் உள்ள சில பிரபு முதலியார்கள், சைவப் பிள்ளைமார்கள் போன்ற பிரிவு அது!)
(உண்மை – ஜனவரி (16-31)-2001)
1997-ம் ஆண்டு பார்ப்பனராக இருந்த பால்தாக்கரே 2001-க்குள் எப்படி சூத்திரரானார்?
பால்தாக்கரே பார்ப்பனராக இருந்தால் சூத்திரர் என்று சொன்னது பொய்யாக இருக்கவேண்டும். அல்லது பால்தாக்கரே சூத்திரராக இருந்தால் பார்ப்பனர் என்று சொன்னது பொய்யாக இருக்க வேண்டும். கடைசியாகக் கேட்கிறோம், பால்தாக்கரே பார்ப்பனரா? சூத்திரரா?
முரண்பாடு : 4
‘துக்ளக்’ ஆசிரியர் சோ அவர்கள் ஒரு கட்டுரையில் ‘விவரமறிந்தவர்கள்’ என்று கூறிவிட்டாராம்! அதை விமர்சித்துவீரமணி கூறுகிறார்:-
…இன்னொருயிடத்தில் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள் என்கிறார். அது என்ன புதிர்? யார் அந்த விவரமறிந்தவர்கள்? ஊர், பெயர் தெரியாதவர்களா அவர்கள்? இப்படி யாரும் கூறிவிடமுடியுமே! இதற்குப் பெயர்தான் ஆதாரமா?
(விடுதலை 21-09-1996)
ஆனால் இப்படி அவர்களை விமர்சித்து எழுதிய வீரமணி அவருடைய மற்றொரு கட்டுரையில் எழுதுகிறார்:-
…சாதி ரீதியாக, மத ரீதியாகக் கலவரங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது. குறிப்பாக திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கலவரங்களைத் தூண்டி விடுவதற்காகப் பணம் வருகின்றது. – இந்த இரண்டாவது செய்தி பற்றித் தென்மாவட்டங்களில் விவரம் அறிந்தவர்களிடையே பரவலான பேச்சு இருக்கிறது.
(விடுதலை 20-02-1997)
சோ அவர்களை வீரமணி கேட்ட அதே கேள்வியை இப்போது நாமும் கேட்கலாம் அல்லவா! அதனால்தான் கேட்கிறோம்.
அது என்ன புதிர்? யார் அந்த விவரமறிந்தவர்கள்? ஊர், பெயர், தெரியாதவர்களா அவர்கள்? இப்படி யாரும் கூறிவிடமுடியுமே! இதற்குப் பெயர்தான் ஆதாரமா? இதற்கு வீரமணிதான் பதில் சொல்ல வேண்டும்.
வீரமணியைப் பற்றி சங்கமித்ரா!
சாதி ஒழிப்புப் பணியில் சென்ற 20ஆண்டுகளில் வீரமணி செய்தது என்ன? மாறாக ஒரு கொள்கை அமைப்பாக – போராளி நிறுவனமாக இருந்த இதை(தி.க) வீரமணி ஒரு வட்டிக் கடையாக – கல்வி வணிக அமைப்பாக மாற்றிவிட்டார். இந்தத் துரோகத்தைத் தமிழ் மக்களாகிய நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்? துரோகங்களை எல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்த பெரியாருக்கே துரோகம் செய்ததில், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய துரோகி வீரமணி ஆகிறார்.
பெரியார் தந்த வேலைத் திட்டத்தில் வீரமணியின் – சாதனை – பங்களிப்பு என்ன?
வீரமணி பட்டியலிடுகிறார். கிட்டத்தட்ட 44 அறப்பணி அமைப்புகள் தோழர் வீரமணி – பெரியார் தந்த பணத்தில் நடத்துகின்ற அமைப்புகளாகும். இதில், எந்த அமைப்பு பெரியாரின் உயிர்க்கொள்கையான சாதி ஒழிப்புக்குப் பாடுபடுகிறது? பெரியாருடைய எத்தனை பள்ளிகளில் -கல்லூரிகளில் – பெரியாரின் பார்ப்பன, வருணாசிரம எதிர்ப்புக் கொள்கைள் – பாடமாக – பயிற்சியாக போதிக்கப்படுகின்றது? இதில் பெரியார் பால்பண்ணை, பெரியார் கணினிக் கல்லூரி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளி, பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம், மகளிர் பாலிடெக்னிக், மகளிர் தொழில் பயிலகம், முதலிய பணம் பண்ணுவதற்கென்றே தோழர் வீரமணியால் நடத்தப்படுகின்றன என்று நாம் சொன்னால் அதில் தவறு என்ன? மேலும் பெரியார் அமைப்புகளில் பீராய்ந்த பணத்தில் முழுக்க முழுக்க வட்டிக் கடைகளாக – திராவிடன் நல நிதியும் – குடும்ப விளக்கு நிதியும் நடத்தப்படுகின்றன என்றால், அதை யார்தான் மறுக்க முடியும்?
(சங்கமித்ரா உண்மை இதழில் பணியாற்றியவர். ஏப்ரல் 84 முதல் சூலை 85 வரை 15 மாதங்கள் உண்மை இதழ் இவர் தயாரிப்பில் வந்ததாகக் கூறுகிறார் சங்கமித்ரா.)
ம.வெங்கடேசன்
தொடரும்.
October 23, 2015 at 08:53
Sir,
Please post your comments like these to the correct/relevant post/thread.
November 13, 2015 at 18:06
அன்புள்ள வெ.ரா,
பெரியாரும் , பெரியாரியமும் விமர்சனத்திற்கு உரியவை தான். ஆனால் அது கருத்துத் தளத்தில் நடைபெற வேண்டும். அதை விடுத்து இதுபோன்ற உதிரி மேற்கோள்களை கொண்டு செய்யப்படும் அரைவேக்காட்டுத்தனமான விமர்சனங்கள் எவ்வகையிலும் பொருட்படுத்தத் தக்கவை அல்ல. எனவே அவற்றை நீங்களே நீக்கி விடலாம்.
இருப்பினும் இதுபோன்ற அடிப்படையில்லாத பின்னூட்டங்களை விட்டுவைத்திருப்பது உங்கள் சொந்த காழ்ப்பினாலோ என சந்தேகிக்க வைக்கிறது.
November 19, 2015 at 09:39
நண்பர் பாரி அவர்களுக்கு,
“இதுபோன்ற உதிரி மேற்கோள்களை கொண்டு செய்யப்படும் அரைவேக்காட்டுத்தனமான விமர்சனங்கள் எவ்வகையிலும் பொருட்படுத்தத் தக்கவை அல்ல. எனவே அவற்றை நீங்களே நீக்கி விடலாம்.”
இவற்றில் எவை எல்லாம் அரைவேக்காட்டுத்தனமான விமர்சனங்கள் என்பதை சற்று தெளிவு படுத்த முடியுமா?
November 4, 2015 at 12:50
என்ன நைனா !!! ஒரு வாரமா ஒன்னும் சத்தமே இல்ல !!! அல்லா வாத்திகளையும் எங்கியாவது பாகிஸ்தானுக்கு தொரத்தி வுட்டாங்களா ??சும்மா எத்தினி நாளுக்கு தான் நானும் பழைய பேப்பரை படிக்கிறது !!!