அம்னெஸ்டி இன்டர்நேஷனல் – எனும் அயோக்கிய, கொடும்வன்முறை ஆதரவு (=பாரத எதிர்ப்பு) அமைப்பு: சில குறிப்புகள்

July 19, 2015

மானமில்லாமல் – படுகேவலமாகத் திருவோடு ஏந்தி உலகெல்லாம் பிச்சை எடுத்து அந்தப் பணத்தில் பாரத கலாச்சாரத்தை உய்விக்க, அட்டைக்கத்தி (= கத்தி + கத்திக்கத்தி) போராட்டங்களை டீவி கேமராக்கள் முன் ஏகோபித்து மினுக்கிக்கொண்டு நடத்த, சமூக நீதிக்காகவென என்றெல்லாம் இந்தியாவில் பலப்பல என்ஜிஓக்கள் – எழவெடுத்த தன்னார்வ போங்காட்ட நிறுவனங்கள் இருக்கின்றன.

இவை பெரும்புகழும் பேரும் பெற்று – தொந்தி தள்ளக் கொழுத்து, நடக்கமுடியாமல் ஆனால் வீராவேசம், சமதர்மம், மனித உரிமை,  பண்பாட்டுப் பாதுகாப்பு, சமூக/இயற்கைச் சூழல் பாதுகாப்பு என அலைந்து கொண்டிருக்கும் இருக்கும் மனிதர்களால் – மன்னிக்கவும், தொழில்முறைக் கொள்ளையர்களால் நடத்தப் படுகின்றன.

இவர்கள் இந்தியாவில் ஆடும் ஆட்டம், போடும் ஆட்டை இவற்றுக்கெல்லாம் அப்பால், பாரதத்தின் மரியாதையை உலகத்தில் குறைக்க, அதனை மட்டம் தட்ட முயல்வதுதான் படுகேவலம்.

இம்மாதிரி படுகேவலமான செயல்பாடுகளுக்கு, அவர்களுக்கு இந்திய அரசு வெகுமதிகளையும், சலுகைகளையும் அளிக்கவில்லையே என்று ஓலமிடுவது இன்னமும் அசிங்கம்.

ஆனால், இதுதாண்டா தொழில்முறை தன்னார்வம்! :-(

இம்மாதிரி தொழில்முறை நிறுவனங்களில் ஒன்றுதான் இந்த அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (‘மன்னிப்பு’க்கான அகிலம்/உலகளாவிய அமைப்பு – அஇ) – இது உலகத்தின் மிகப்பெரிய தொழில்முறை மனிதவுரிமை(!) நிறுவனங்களில் ஒன்று.
இந்த அஇ ஜந்துவுக்கு பெரிய அளவில் ஜிஹாதி அமைப்புகள் மிக கமுக்கமாக உதவி செய்வதையும், பிரதி உபகாரமாக இதே ஜிஹாதி அமைப்புகளுக்கு ஆதரவாக இந்த அஇ செயல்படுவதையும், இதற்கு ஒரேயொரு மாதிரி எடுத்துக்காட்டாக இந்த ஐஇ – தீவிர இஸ்லாமிய வன்முறைவாதி மொஸ்ஸம்பெக் எனும் மனிதருடைய அமைப்புடன் கொஞ்சிக் கொண்டிருப்பது போன்ற வக்கிரங்களையும் பல வருடங்களாக (குறைந்த பட்சம் 28 வருடங்களாக) –  நான் கவனித்துக் கொண்டு வருகிறேன்.

 

…பார்க்கப்போனால் – ஒரு தனி சராசரி மனிதனான நான் மட்டுமல்ல – பல பெரியமனிதர்கள், நாட்டினர்கள் இம்மாதிரி குற்றச்சாட்டுகளை இவ்வமைப்பின்மீது வைத்திருக்கிறார்கள்;  என்னுடைய அன்புக்கும், மரியாதைக்கும் உரிய அந்த மகத்தான கர்டிஸ்தானின் மக்கள் உட்பட – இந்த அயோக்கியர்களின் பிரிவினை வாதங்களை, கொடும்வன்முறைகளுக்காக பணம் வாங்கிக்கொண்டு வக்காலத்து வாங்கும் தன்மையை – எதிர்த்து வந்திருக்கிறார்கள்!

-0-0-0-0-0-0-

2010-11 வாக்கில் என நினைக்கிறேன் – அம்மணி கீதா ஸாஹ்கல் (ஒரு மதிக்கத்தக்க மனிதவுரிமைக்காரர்) இதே அமைப்பின்மீது பல மோசமான குற்றச்சாட்டுகளை (ருசுக்களுடன்) பகிரங்கமாக வைத்தார்; ஏனெனில் அஇ-க்காக அவர் பணி புரிந்துகொண்டிருந்தபோதே, பலமுறை அதன் அயோக்கியத்தனங்களுக்கு எதிராகவும் போராடினாலும், ஒரு  சுக்குப் பலனும் இல்லாமல் இருந்தது. ஆகவே அவருக்கு வெளியே, ஊடகங்களிடம் போகவேண்டி வந்தது.

ஆனால், இவருடைய குற்றச்சாட்டுகளை அஇ எதிர்கொள்ளாமல் – இவரை அமைப்பிலிருந்து காரணம் சொல்லாமல் நீக்கியது மட்டுமல்லாமல் – அவப்பெயரையும் மேலதிகமாக உண்டாக்கும் கேவலங்களை, திரித்தல்களைச் செய்தது; இம்மாதிரிச் செயல்பாடுகளை திராவிட இயக்கங்கள் செய்தால் அது ஒரு பெரிய விஷயம் இல்லை, சிரித்துக்கொண்டே சென்றுவிடலாம் – ஏனெனில், அவற்றின் அடிப்படை குணாம்சமே அயோக்கியத்தனம் தான். ஆனால்  இந்த அஇ அமைப்பு – நேர்மை நியாயம் உரிமை என்றெல்லாம் கும்மி அடித்து கஞ்சிக் கலயத்தை ஏந்தும் நிறுவனமாதலால் தான் – அதன் அற்ப இரட்டை வேடங்கள் பளிச்சென்று தெரிகின்றன.
-0-0-0-0-0-0-0-

இந்த அஇ ஜந்து – அண்மையில் ஆகார் அஹெம்மத் படேல், எனும் அடிப்படை அயோக்கியரை,  தலைவராக நியமித்திருப்பது அறிந்து இறும்பூதடைந்தேன்.

இந்தியாவை, இந்திய மொழிகளை, பாமர மக்களை, பாரதீயத்தை வெறுக்கும் அற்ப மேட்டிமை வாதியான இந்த மனிதர் ஆகார், படிப்பறிவற்ற கயமைவாத வெட்டி ஜோலாவாலா ஆசாமி – அதுவும் பணம் வாங்கிக்கொண்டு வாலாட்டும் ஜாதி! வாய்கூசாமல் அவதூறு செய்வதில், பொய்களைத் தொடர்ந்து மிக தைரியமாகச் சொல்வதில் நிபுணர்.

இவர்தான், அஇ நிறுவனத்துத்தின் அடிப்படை அறங்களுக்கு(!), அதன் கயமைத் திட்டங்களுக்கு ஏற்ற சரியான ஆள்.

-0-0-0-0-0-0-0-

அண்மையில் இந்திய அரசு – வெளி நாட்டுப் பணத்தை வாங்கிக்கொண்டு கள்ளத்தனமான செயல்பாடுகளைச் செய்துவரும் இந்தத் தறிகெட்டோடும் தன்னார்வ நிறுவனங்களை நெறிப்படுத்த (கழுத்தை நெறிக்க அல்ல!) சிலபல முயற்சிகளைச் செய்தது.

அது தொந்தி பெருத்த அஇ நிறுவனத்தையும் ‘பாதித்தது.’ அவர்கள் உடனே, குய்யோமுறையோ என்று வீறிட்டழுது உலக அரங்கில் – இந்தியாவைக் கேவலப் படுத்த ஆரம்பித்தார்கள். இதன் ஒரு எடுத்துக்காட்டு கீழே:
Screenshot from 2015-07-19 17:40:29
ஜெர்மனியில் பல இடங்களில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட மேற்கண்ட  ஹோர்டிங் (விளம்பரப் பலகை) சொல்கிறது:
பயமுறுத்தப்படுகிறார்கள், வசிக்கும் இடங்களைவிட்டுத் துரத்தப்படுகிறார்கள், களவாடப்படுகிறார்கள் – ‘ஆதிவாசி’களுக்கும் ஏழை மக்களுக்கும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டு வளர்கிறது இந்தியப் பொருளாதாரம். தொழிற்சாலைகளை உருவாக்கத் தேவையான நிலங்களுக்காக,  ‘முழு’ கிராமங்களெல்லாம் அகற்றப்படுகின்றன/காலி செய்யப் படுகின்றன. மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப் படுகிறார்கள்…

ஹ்ம்ம் — இப்படி பொய்பொய்யாக எழுதுவதெல்லாம் இருக்கட்டும். அதன் பரபரப்புப் பப்பரப்பா சொல்லாடலும் ஒருபுறம் இருக்கட்டும்.

அதன் படத்தை- தலையைத் தொங்கவிட்டுக்கொண்டு போகும் மனிதர்களை, அவர்கள் பின்னால் மண்ணை நோண்டி நிரவும் இயந்திரம் ஒன்று தொடர்வதை (அல்லது தள்ளுவதை) பாருங்கள். அந்த மனிதர்கள் போட்டுக்கொண்டிருக்கும் உடைகளை, தூக்கிக் கொண்டிருக்கும் பைகளைப் பாருங்கள். அவர்களைப் பார்த்தால் உங்களுக்கு அவர்கள் ‘இந்தியாவில் சீரழிக்கப்படும் சிறுபான்மையினர்’களைச் சித்திரிப்பதாகத் தோன்றவில்லை?

இந்த அயோக்கியத் தன்னார்வ நிறுவனங்கள் போல கீபல்ஸ்கள் வேறு யாராவது உண்டா? (நம் தமிழகத்தின் திராவிட இயக்க அயோக்கியர்களைத் தவிர)

இம்மாதிரி இயந்திரங்களும் தொழிற்சாலைகளும் மேற்கத்திய நாடுகளில் இல்லவேயில்லையா? உலகமெங்கும் திருடித்தானே அங்கு வளர்ச்சி ஏற்பட்டது? அங்கு ஏற்பட்ட தொழிற் புரட்சி முழுவதுமே இந்தியாவும் சீனாவும் போட்ட பிச்சைகளினால்தானே மேலெழும்பியது? தென்னமெரிக்க நாடுகளில் இருந்து இவர்கள் திருடாத பணமா? திராவிடக் கருணாநிதிகளுக்கு ரோல்மாடல்கள் அல்லவா இந்தக் கொள்ளையர்கள்?

இந்த அயோக்கியர்கள் வைத்திருக்கும் ஹோர்டிங் அற்பத்தனத்தில் ஒரு சுக்காவது எந்த வித சுரண்டலுமில்லாமல் உருவாக்கப் பட்டிருக்குமா?

அஇ கும்பல்கள் போகாத வெளி நாட்டு படாடோபக் கார்களா? வரவு-செலவுக் கணக்குகளை ஒழுங்காகக் காண்பியுங்கள் என்றூ சொன்னால், இப்படி ஒரு அற்பத்தனத்தையா அரங்கேற்றுவார்கள்?

கேவலம்.
-0-0-0-0-0-0-0-

எனக்கு நன்கு அறிமுகமானவர்கள் இந்த அஇ எழவில் பணி செய்கிறார்கள். ஆனால் –  இவர்களில் ஒருவருக்குக் கூட, அதன் செயல்பாடுகளைக் கேள்விகேட்கத் துப்பில்லை. அவர்களுக்குத் தேவை, நல்ல சம்பளம். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பஜனை. அவ்வப்போது மனிதவுரிமைக் குசு விடுதல். அவ்வளவுதான். அயோக்கியர்கள்.

நான் – நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று சொன்னால், நான் நாய்களைக் கீழ்த்தரமாக மதிக்கிறேன் என அர்த்தமாகிறது. இருந்தாலும் – நான் நாய்களை மிக மதிப்பவன் என்றாலும், இப்படித்தான் சொல்வேன். மன்னிக்கவும்.

-0-0-0-0-0-0-
 தொடர்புள்ள பதிவுகள்:

மேற்கண்ட குறிப்புகள் தொடர்பான சில முக்கியமான ஆவணங்கள்/பக்கங்கள் (ஆங்கிலத்தில்):

4 Responses to “அம்னெஸ்டி இன்டர்நேஷனல் – எனும் அயோக்கிய, கொடும்வன்முறை ஆதரவு (=பாரத எதிர்ப்பு) அமைப்பு: சில குறிப்புகள்”

 1. k.muththuramakrishnan Says:

  ஒத்திசைவைத் தவிர வேறு எங்கும் இது போன்ற தகவல்கள் ஆதாரங்களுடன் கிடைப்பதில்லை.அந்த விளம்பரப்பலகை மிகவும் விஷமத்தனமானது.

 2. poornam Says:

  அயோக்கியத்தனங்களைப் பார்த்துப் பார்த்தே நொந்து போன மனதுக்கு இந்தப் பதிவு நல்ல ஆறுதல். கிட்டத்தட்ட என்னுடைய 15வது வயதிலிருந்து (சுமார் 25 வருடங்களாக) இந்த அயோக்கிய இன்டர்நேஷனல் பற்றி மனதுக்குள் குமுறிக்கொண்டிருந்த ஆத்திரத்துக்கு சரியான வடிகால் தந்ததற்கு நன்றி. சத்யமேவ ஜயதே!

 3. Deeban Says:

  This hoarding was placed near hannover Messe(Hannover fair) train stop. I was shocked to see this banner especially when India was the Partner country of the fair this year.

  On the other side,this fair was a great success. Regardless of the false allegations in German media, the Germans and the German investors really liked Modi and his Government. Nirmala seetharaman answered all queries. She even conversed well with the Indian community here.

  Thanks for bringing this area to notice sir


  • Sir, Deeban,

   Am glad to be of service.

   After all these years, I still cannot believe that – by and large, Indian Intelligentsia is a self-loathing, nation hating bunch of selfish morons.

   I still cant believe that one would go out of the way to be a gutter inspector – when there are so many positive stories to cover… These folks are PAID to create issues, the mater-copulating progeny of canines…

   Thanks a lot for the additional information, young Deeban.

   So, what do we do…


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s