‘முஸ்லீம்களைப் பற்றிப் பேச நான் யார்’ உட்பட, என் குறிப்புகள் (3/n)

July 26, 2015

(அல்லது) முஸ்லீம் சான்றோர்கள்-சிந்தனையாளர்கள், தொழில்முறை மனிதவுரிமைக் காரர்கள் அவரவர்களின் சொந்தக் காரணங்களிளால் காரியஅமைதி காக்கும்போது — அற்ப அரைகுறை ஜிஹாதிகளை ஆகர்ஷித்து அவர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது எப்படி :-)

இந்தப் பகுதி: இந்திய முஸ்லீம் சமூகத்தின் ஏகோபித்த சுயலாப-பழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில குறிப்புகள்  (3/n, இப்போதைக்கு n > 4)) என்றறிக. இந்த வரிசையில் முதல் பகுதி; 1/n; இரண்டாம் பகுதி: 2/n. நான் முதலில் திட்டமிட்டபடி இது 3 பதிவுகளில் முடிந்திருக்க வேண்டும். ஆனால், பல தவிர்க்கப்படக்கூடிய காரணங்களினால் – இன்னமும் இரண்டுமூன்று பதிவுகளில் இந்த வரிசை முடிந்துவிடும். கலக்கம் வேண்டேல்.  :-)

-0-0-0-0-0-0-

சரி. நான் ஏன் இதனைப் பற்றியெல்லாம் எழுதவேண்டும்? யோசிக்கிறேன்.

நான், எனக்கு வந்துள்ள ‘கழுத்தை வெட்டுவோம்’ வகையறா ஜிஹாதி மின்னஞ்சலை (குறிப்பு: ஒன்றுதான் இவ்வளவு மோசமாக வந்தது; ஜிஹாதி வகையறா மின்னஞ்சல்களான மற்றவை, மற்ற சிலபல அகற்றப்பட்ட வெறுப்பியப் பின்னூட்டங்களைப் போல,  என் தாயாரின் தொழிலைத் தவறாகப் புரிந்துகொண்டமையால் ஏற்பட்ட  மோசமான வெறும் வசைகள்தாம்! என் தாயாருக்குப் பொதுவாக நான் இவ்வசைகளைப் பற்றிச் சொல்லமாட்டேன். அப்படியே சொன்னாலும் அவரும் அவற்றைப் பொருட்படுத்தமாட்டார்தாம்!) இடக்கையால் புறம் ஒதுக்கிவிட்டு ஏன், பலரும் எழுத விரும்பாத சங்கதிகளைப் பற்றியெல்லாம் எழுதவேண்டும்?

நிம்மதியாக, இளைஞமுஸ்லீம் சமுதாயமும் பாரதமும் எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று நடந்துகொண்டிருக்கும் கொடுமைகளைக் கண்டுகொள்ளாமல் – ஜாலியாக எஸ்ராவுகாலம், மணிகண்டம், யுவகிருஷ்ண கசாப்புக் காப்பிக்கடை, மதியற்றமாறன், கவிஞர்(!) மனுஷ்யபுத்திரன், திராவிட முயக்கம், சலபதி, விடுதலை எலிகள், தறுதலைப் புலிகள், திராவிடப் பெருச்சாளிகள், மனிதஉரிமை முதலாளிகள், பாட்டாளி குத்தகைதாரர்கள், போராளிக்குளுவான்கள்  போன்ற (++ கிழக்குத் திசையிலிருந்து  குடுகுடுவென்று உருண்டோடிக்கொண்டு வந்து தேவைமெனக்கெட்டு இந்த அற்ப ஜோதியில் சமீபத்தில் ஐக்கியமாகியிருக்கும் இஂளம் உழக்கான ‘ஜேஎன்யு’ புகழ் மருதன் உட்பட) அற்ப சராசரித்தனங்களைக் கிண்டல் செய்து தொடர்ந்து எழுதிக்கொண்டே போகலாமே! ஒத்திசைவை வேண்டாவெறுப்பாகப் படிக்கும் 40-50 மாக்களுக்கும் நிகரற்ற இன்பம்ஸ் கொடுக்கலாமே! பகடியும் நையாண்டியும் செய்யப்படுவதற்கென்றே உதித்த ஜந்துக்களல்லவா மேற்கண்டவை?

எனக்கு என்னை செழுமைப் படுத்திக்கொள்வதிலே வெறி, தொடர்ந்து சான்றோர்களிடம்  (மானசீகமாகவே கூட) அளவளாவி-உரையாடி (மிக முக்கியமாக, காது கொடுத்துக் கேட்டு) – எனக்கும் இந்தப் ப்ரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பு என்ன, நான் எந்த திசையில் பயணம் செய்யவேண்டும்,  மகிழ்ச்சியுடன்/அமைதியுடன்  என்னுடைய மறுசுழற்சித் தருணங்களை எப்படி அணுகவேண்டும், அதைவிட மிக முக்கியமாக – இப்பிரபஞ்சம், இதிலிருக்கும் எண்ணிறந்த அற்புதங்கள் எப்படி இயங்குகின்றன என்பவற்றின் விவரங்களை முடிந்தவரை அறிந்துகொள்ள முயலவேண்டும், அதுவும் எனக்கு மீதமிருக்கும் சுமார் 50 வருடங்களுக்குள்  – போன்ற உயர்மட்டக் கேள்விகளை நிதானமாக அலசுவதில், அறிந்துகொள்வதில், தெளிவதில் இருக்கும் மும்முரம் இதற்குக் காரணம் என்றாலும்,  இந்த யோசனை எழவுகளையெல்லாம் வெளியுலகத்திற்குத் தெரியும்படிக்கு ஏன் பதிப்பிக்க வேண்டும்? ஏன் இப்படியொரு சுயவிளம்பரமோகம்?

… ஏன் வீணாகக் காலவிரயம் செய்கிறேன்?இம்மாதிரி எழுதினால் வெறுப்பாளர்கள்தானே அதிகமாகிறார்கள்? வெட்டியாக, ஒருவரும் பகுத்தறியாத, தெரிந்துகொள்ள விரும்பாத, தெரிந்துகொண்டாலும் அதைப் பற்றி எழுதக் கூச்சப்படும் (அல்லது தேவையற்று பயப்படும்) உண்மைகளை எழுதாமல், வெறுமனே திரைப்பட விமர்சனம் எழுதலாமே!

அல்லது எவண்டா மண்டையைப் போடுவான் என்று ஓடும்சாவு ஓட உறுசாவு வரும்வரைக்கும் வாடியிருக்கும் இணையக்கொக்காக – பிரபலங்களைப் பற்றி அஞ்சலிக் கட்டுரைகளைக்  எழுதி, தயாராகக் கைவசம் வைத்துக் கொள்ளலாமே! (உலகத்திலேயே படுவேகமாக ஓடுபவன், அஞ்சலியை முந்தித் தரும் தமிழ் எழுத்தாளச் சிகாமணிதான்!17/04/2015)

உலகத்துக்குப் பாரமாக இருந்துகொண்டு, கயமைகளில் ஈடுபடும் பல மனிதர்களின் மண்டையைப் போடுதலை, கூடிய சீக்கிரம் இருக்கும் இடத்தைக் காலி செய்வதை – மனமாற விரும்புபவன் தானே நான்? ஆக, மகிழ்ச்சியுடன் அந்த ஜந்துக்களுக்கான அஞ்சலிக் கட்டுரைகளை இப்போதே எழுத ஆரம்பித்தால் என்னவாம்?

கேள்விகள், கேள்விகள்

-0-0-0-0-0-0-0-

ஹ்ம்ம்… அம்மணிகளே, அம்மணர்களே! என்னிடம் இக்கேள்விகளுக்கு நேரடி பதில் இல்லை.

வேறு யாருமே பொதுவாகவே, இவை பற்றியெல்லாம் எழுதாமல் இருப்பதால்தான், நான் இவற்றை எழுதுகிறேன் என்று  எண்ணிக்கொள்ளத்தான் எனக்கும் ஆசை. பொதுச்சபையில் – இவை தொடர்பான உரையாடல்களில் ஈடுபடுவதில் உள்ள முனைப்புதான் இதற்குக் காரணம் என்று சொல்லிக்கொள்ள ஆசை. ஆனாலும் என்னுடைய தற்போதைய நிலைபாடுகளுக்கு, ஃபேஸ்புக், டிவிட்டர், லின்க்ட்இன், வாட்ஸப் இழவுகளில் ஆவேசமாக ஐக்கியமாவதும் ஒத்துவராது.

ஆக – நான் செய்வதெல்லாம் வெறும் பைத்தியக்காரத்தனம் என்றே வைத்துக்கொள்ளுங்கள். இந்த சாத்தியக்கூறுதான் தான் உண்மைக்கு அருகில் இருக்கக்கூடும். இப்போது, எனது இளம்வயது ஹீரோக்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் என் உதவிக்கு வருகிறார்…

Screenshot from 2015-07-16 21:06:23(இந்த மேற்கோளில் உள்ள சுயஉயர்வு நவிற்சிகளையெல்லாம் விட்டுவிட்டு ‘பைத்தியக்காரத்தனம்’ என்பதை மட்டும் கருத்தில் கொள்ளவும்)

ஹ்ம்ம்ம்… இந்தப் பைத்தியக்காரத் தனமான காரணத்திற்கும் அப்பாற்பட்டு இன்னொரு மூல காரணமும் இருக்கிறது. அது: என்னுடைய பாரதம் மஹோன்னதமானது! (26/01/2015); இது எனக்கு மிகமிக முக்கியம்.

| नमस्ते सदा वत्सले मातृभूमे… |

நான் மிகவும் பெருமைப்படும் பல விஷயங்களில் ஒன்றான என் நாட்டைப் பாதிக்கும்  எந்த விஷயமும் – நேரடியாகவும், எதிர்மறையாகவும் –  என்னையும் பாதிக்கிறது.

அதே சமயம் — என்னால் கண்ணை மூடிக்கொண்டு மதங்களைக் கரித்துக்கொட்டுவது, மேட்டிமைத்தனத்துடன் ‘நான் கடவுள் நம்பிக்கையற்றவன், ஆகவே நான் உன்னைவிட உயர்ந்தவன்!’ என மினுக்கிக்கொண்டு அலைவது போன்ற முட்டாள் செயல்பாடுகளில் ஈடுபட முடியாது. விடுதலை வீரமணிகள்போல விடலைத்தனமாக, கயமைத்தனமாக செயல்பட முடியாது.  மதங்கள் நம்முடைய பண்பாட்டுக்கும் மானுடமேன்மைக்கும் அளித்துள்ள, தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்கும் பங்களிப்பை மதிப்பவன் நான். அதே சமயம் – மற்றெந்த மானுட நிறுவனங்களையும் போலவே அதிலும் உள்ள கசண்டுகள் நீக்கப்பட்டு, தொடர்ந்து செழுமை செய்யப் படவேண்டும் என்ற எண்ணமும் உடையவன் நான்.

எனக்கு என் பாரதம் மஹோன்னதமானது என்றாலும் – நான் மற்ற மக்களை/தேசங்களை வெறுக்கிறேன் என்பதல்ல; என் அபிமானம் (=patriotism?) என்பது வேறு; பொதுவான ஐரோப்பிய பகுப்பான, தம்மை உயர்த்திப் பிடித்து மற்ற அனைத்தையும் தாழ்த்தும் வெறி (=nationalism) என்பது வேறொன்று.

அடிப்படை ஜனநாயகமும், சகிப்புத் தன்மையும், முற்போக்கு மனப்பான்மையும் மிக்க  – முஸ்லீம் பெரும்பான்மை கர்டிஸ்தானும், யூதப் பெரும்பான்மை இஸ்ரேலும், ஹிந்துப் பெரும்பான்மை பாரதமும், க்றிஸ்தவப் பெரும்பான்மை இருகுவேயும்,   பலவகைகளிலும் நம்மை/உலகத்தை முன்னெடுத்துச் செல்லும் அமெரிக்காவும்  – கருத்துகளாலும் கரங்களாலும் இணைந்து – நம் உலகத்தை மேலெடுத்துச் செல்லவேண்டும் என்கிற எண்ணம் உடையவன் நான். இந்த ஐந்து நாடுகளும் (அல்லது பிரதேசங்களும்) ஒன்றிலிருந்து மற்றொன்று கற்றுக்கொண்டு மேலெழும்பவும் மகத்தான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்பதும் என் கருத்து. (இந்த நாடுகள் தவறு செய்யாமல் இல்லை; ஆனால் அவைகளிடம் தங்கள் தவறுகளைக் களைந்துகொள்ளும் ‘சுய பரிசீலனை’ மனப்பான்மை இருக்கிறது; அவற்றின் மக்கள் திரள்களுக்கு, அந்த அரசுகளை, அவற்றின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கும் ஜனநாயக சுதந்திரம், தார்மீக உரிமை இருக்கிறது; அவைகளுக்குத் தம் மக்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற விழைவு இருக்கிறது.)

… இந்தப் பின்புலத்தில் – மேலும் – நம்முடைய சக இந்திய முஸ்லீம்கள், நம் இந்தியாவின் மக்கள். இந்த மக்கள் திரள், அதன் மூளையற்ற (அல்லது காரியவாத) மத/சமூக/அரசியல் தலைவர்களால் – அப்படியல்ல என்று படிப்பிக்கப்பட்டு, மூளைச் சலவை செய்யப்பட்டுச் சீரழிவதை என்னால் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.

ஆகவேயும் இந்தப் பதிவு வரிசை.  இப்போது இன்னொரு விஷயத்தையும் எழுதவேண்டும்…

 -0-0-0-0-0-0-0-0-

இதுவரை எழுதியுள்ளவைகளில் பலமுறை, நடைமுறை (இந்திய) இஸ்லாம் பற்றிய, இச்சமூகத்தின் இளைஞர்களை மேலெழுப்பிச் செல்லவேண்டியதன் அவசியத்தைப் பற்றிய –  என் ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருக்கிறேன்.  இது தொடர்பாக, என்னை ஒரு இஸ்லாமியஎதிர்வெறியனாகச் சித்திரித்து, முட்டாள்தனமாக வசைபாடிய நம் செல்லத் தமிழக ஜிஹாதி அரைகுறைகளிடமிருந்து அன்பும்கருணையும் சொட்டும் எதிர்வினைகளைப் பெற்றுக்கொள்ளும் பாக்கியமும் பெற்றுள்ளேன்.  அவர்கள் நீடூழி வாழ்க.

ஆனாலும் இந்தப் பதிவை எழுதவேண்டாம் எனத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் – ஏற்கனவே தேவைக்கதிகமாக வெறுப்பாளர்களை சந்தோஷமாகச் சம்பாதித்து வைத்திருக்கிறேன் – ஆக எதற்குச் சகதியில் மேலும் ஈடுபடவேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், ஒரு இளம் நண்பனின் நிர்பந்தத்தின்பேரில் இதனைச் செய்கிறேன். ஏனெனில் இவனுடன் இந்தப் பதிவு (=ஜிஹாத், ஜிலேபி, ஜிகர்தண்டா 10/04/2015) தொடர்பாக ஒரு உரையாடல் நிகழ்ந்தது, ஆகவே இவற்றைப் பற்றி எழுதியே ஆகவேண்டும் என்கிறான்.

அவன் பார்வையில் – முஸ்லீம் இளைஞர்களுக்கெனவாவது உதவிகள் செய்யக்கூடிய வளமான ஸ்திதியில், சமூகப் பொறுப்புகளில் இருந்துகொண்டு – ஆனால் அதற்காக, ஒரு துரும்பைக் கூட அசைக்காமல், ஆக்கபூர்வ பணி செய்யவேசெய்யாமல் – மாறாக வெறுப்பை மட்டும் தூண்டிக்கொண்டு மட்டுமே – ஜீவித்திருக்கும் முஸ்லீம் சமூகத் தலைவர்கள்தாம் இருக்கும்போது, இப்படிப்பட்ட வெளியாட்கள் தொடர்பான விஷயங்களும், கருத்துகளும் வெளிவரவேண்டும் என்பது முக்கியம். அதாவது/ஆகவே முஸ்லீம்களுக்கு நான் சந்தர்ப்பவசத்தால் செய்திருக்கக்கூடிய சிலபல உதவிகளும் வெளிவரவேண்டும் என்பது. ஏனெனில் – அவனும் என்னால் ஒரு நல்ல வேலையில் சேர்க்கப்பட்ட சூட்டிகையான பையன்தான்.

என்னுடைய சார்பு என்னவென்றால் – பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன் நடந்தவைகளைப் பற்றி, ஏன் இன்னமும் பேசிக் கொண்டிருக்கவேண்டும், இனிமேல் நடக்கவேண்டியதைப் பார்ப்போம் என்பது. ஆனால் அவன் பார்வையில் (கொஞ்சம் யோசித்தால், என் பார்வையிலும் கூட) சில விஷயங்கள் இன்னமும் கடுமை ஆகிக்கொண்டிருப்பதாகத்தான் படுகிறது. மதவெறியும், ஒற்றைப்படை தரிசன(!) கறுப்புக்கண்ணாடிகளும், கேவலமான தலைமைகளும்தான் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன; அறிவியலும், மானுடமேன்மையும் மேலெடுத்துச் செல்லப்படுவதற்கு பதிலாக – கண்மூடித் தனமும், மதவெறியும் வளர்க்கப்படுவது சரியில்லை.

மேலும், நம் தமிழ் நாட்டிலேயேகூட, ஒரு சிறுபான்மையினர், தாங்கள் ஒரு வெறும் ஸுன்னி முஸ்லீம்களாக இருப்பதினாலேயே, கண்களை மூடிக்கொண்டு இந்த இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு கொடுக்கும் ஆதரவு என்னை மிகவும் வருத்தத்திலும், கோபத்திலும் ஆழ்த்துகிறது.

க்றிஸ்தவர்கள், ஷியாக்கள், யேஸீதிகள், கர்ட்கள் என லட்சக்கணக்கானவர்களைக் கொன்றதற்கு/கொல்வதற்கு அப்பால், சிறு பிஞ்சுக் குழந்தைகளைக் கொல்வதற்கு அப்பால் – எவ்வளவு அழகான, அப்பழுக்கற்ற தலைவர்களான, நேர்மையாளர்களான ஸுன்னிகளையேகூடக் கொன்றிருக்கிறார்கள், இந்த ஸுன்னிமுதல்வாத இஸ்லாமிக்ஸ்டேட் அரைகுறைகள் – என்பதைக் கூட அறியாதவர்கள் இவர்கள்.

… கூடியவிரைவில் இவர்களெல்லாம் சேர்ந்து, ஷியா வகுப்பினருக்குச் சொந்தமான, சென்னையின் ஆயிரம்விளக்கு மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கி விடுவார்களோ எனக் கூடச் சஞ்சலப்பட வைக்கிறது. யாராவது கேட்டால் இப்படிச் சொல்லிவிடலாம்:

“எங்கள் முஸ்லீம்களுக்குள் பிரச்சினை, நாங்களே தீர்த்துக்கொள்கிறோம், நீ வொன் வேலய பாத்துக்கினு போய்க்கினே இரு, ஸர்யா நைய்னா??

ஆகவே.

இவன் ஒரு இந்திய முஸ்லீம். தமிழன். கணினி பொட்டிதட்டும் சோம்பேறி குமாஸ்தாவேலையை விட்டுவிட்டு அமெரிக்காவில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருப்பவன். பலதடவை ‘பாதுகாப்பாக நீ அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டிருந்தால், உங்கள் சமூகம் இங்கு என்னாவது?‘ என கொஞ்சம் தந்திரத்துடன் அவனிடம் கேட்டிருக்கிறேன். இந்த உணர்ச்சிவசப்படல் கொக்கிகளுக்கெல்லாம் பதிலாக – அவன் சொல்வது என்னவென்றால் – ‘நான் அவர்கள் செய்வதற்குப் பொறுப்பாக முடியாது. மேலும் என்னிடம் தலைமைதாங்கும் பண்புகள் இல்லை!

… இவனைப் போன்றவர்கள்  – உலக அனுபவமும், செறிவடைந்த எண்ணக்கூறுகளும், செயலூக்கமும் மிக்கவர்கள், தொடர்ந்து உரையாடலில் ஈடுபடுபவர்கள் – இந்தியாவுக்குத் திரும்பிவந்து அரசியலில் ஈடுபட்டால், நடைமுறை இஸ்லாமை மேம்படுத்தும் செயற்பாடுகள் மதத்தலைவர்களிடமிருந்து, வெறுப்புமுதல்வாதிகளிடமிருந்து, ஜிஹாதிஅரைகுறைகளிடமிருந்து, பயபீதி வதந்திபரப்பாளர்களிடமிருந்து மீட்கப் படலாமென்பது என் எண்ணம்.

ஹ்ம்ம், பார்க்கலாம்.  நல்லவைதான் நீண்டகால நோக்கில் நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும், நடைமுறை தினசரி நடப்புகள் அலுப்பைத்தான், அவநம்பிக்கையைத்தான் தருகின்றன.

இருந்தாலும் எனக்கு நம்பிக்கையுடன் இருக்கவே ஆசை.

ஆக, இந்த இளைஞன் தரும் அழுத்ததினாலும், ஊக்கத்தினாலும்தான் நான் இவற்றையெல்லாம் எழுதுகிறேன்…

(தொடரும்) —>>> எல்லாம் சரி, நான் யார், முஸ்லீம்களைப் பற்றி எழுதுவதற்கு++

தொடர்புள்ள பதிவுகள்:

7 Responses to “‘முஸ்லீம்களைப் பற்றிப் பேச நான் யார்’ உட்பட, என் குறிப்புகள் (3/n)”

 1. Manickam Says:

  தொடர்ந்து எழுதுங்கள். இங்கு இவைகளை எழுத தங்களை விட்டால் வேறு நாதி இல்லை. நானும் g plus இல், பேஸ் புக்கில் உங்களின் பதிவுகளை தொடர்ந்து இட்டு வருகிறேன்.யாருக்காகவும் இதை தாங்கள் நிறுத்தத்தேவையில்லை என்பது என் கருத்து. தொடருங்கள்.

 2. gopi Says:

  facebookil share pannum option ilaye epadi seivathu.

 3. A.Seshagiri Says:

  ரமலான் தோறும் குல்லா அணிந்து நோன்பு கஞ்சி குடித்து தாங்கள்தான் உண்மையான (?!)மதச்சார்பின்மை வாதிகள்(வியாதிகள்) என்று போட்டி போட்டு பீத்திக்கொண்டு-இதனால் மட்டுமே இசுலாமிய மக்களை குஷிப் படுத்தி ஓட்டுக்களை அள்ளி விடலாம் (இதை போன்ற பம்மாத்து வேலைகளை நம்பும் இசுலாமிய மக்களை நினைத்தால்…..) என நடந்து கொள்ளும் நமது அரசியல் தலைவர்களைக் காட்டிலும் தங்கள் பணி சிறப்பானதே என கருதுகிறேன்.இதனால் சிலரது கண்ணாவது திறக்கட்டும்.

 4. balamurugan.v Says:

  super sir migavum arumai

 5. ravi Says:

  இந்த விஷயங்களை பற்றி உண்மையாக பேச யாரும் இல்லை …
  சுற்றி சுற்றி அடிச்சு விடுவார்கள் ..அவ்வளவே …
  தொடர்ந்து எழுதுங்கள் ..

 6. Anonymous Says:

  **அகற்றப் பட்டது**

 7. முகம்மது அலி ஜின்னா Says:

  **அகற்றப் பட்டது**


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s