இஸ்லாம், முஸ்லீம், நான்: சில மேற்குவிதல்கள் பற்றிய குறிப்புகள் (4/n)
July 27, 2015
இந்த (இந்தியா – சமூகம் – இஸ்லாம் – முஸ்லீம் – நான்: சில குறிப்புகள்) வரிசையின் முதல் பகுதி; இரண்டாம் பகுதி; மூன்றாம் பகுதி. இது நான்காம் பகுதி. இந்த வரிசையில் இன்னமும் இரண்டு பதிவுகள் வரலாம்.
சரி. எனக்கு இதுவரை கிடைத்துள்ள செறிவான அனுபவங்களில் சிலவற்றைப் பற்றி இப்பதிவில் எழுதலாமென எண்ணம்.
…நான், முஸ்லீம் குழந்தைகள் சிலரின் (7 பேர்தான்) மாஜிஆசிரியன்; இவர்கள் முஸ்லீம்கள் என்பதால் நடந்த விஷயம் அல்ல இது – ஆனால், தனிப்பட்ட முறையில் பள்ளிவேலைகளுக்கு அப்பாற்பட்டு, பல குழந்தைகளுடன் – அவர்களின் அங்கமாக இக்குழந்தைகளுக்கும் பலமாதங்கள் போல, வெறும் ஏட்டுச்சுரைக்காயப் படிப்புக்கு அப்பாற்பட்டு, பல விஷயங்களை – கொர்-ஆன் சாராம்சம், இஸ்லாமின் வரலாறு, கலீலாஹ் வா-டிம்னா கதைகள், மூர்களின் கலாச்சாரம் உட்படச் சொல்லிக்கொடுத்திருப்பவன்.
-0-0-0-0-0-0-0-0-
இப்போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. இது நடந்தது சுமார் 7 வருடங்களுக்கு முன்பு; அச்சமயம் – பெங்களூரில் ஒரு மான்டிஸொரி பள்ளியில் விடலைப் பருவக் குழந்தைகளுடன் (12-17 வயது – எர்ட்கின்டர் – ‘மண்ணின்/உலகத்தின் குழந்தைகள்’ என்பது இந்த ஜெர்மன் சொல்லின் விரிவு) வேலை செய்துகொண்டிருந்தேன். மெய்யாலுமே அற்புதமான நாட்கள் அவை!
அச்சமயம் – எங்கள் குழந்தைகளுடன் விதம்விதமான பின்புலங்களுடைய நிறைய ஊர்சுற்றல்கள், கலந்துரையாடல்கள், தகவல் பரிமாற்றங்கள், களச் கற்றல்கள் என மிக திருப்தியாகச் செய்து கொண்டிருந்தோம். இம்மாதிரி வரலாறு+புவியியல்+அறிவியல் சமாச்சாரங்களைக் கற்றுக்கொள்வது என்பது குழந்தைகளுக்கு வெல்லக்கட்டி. அற்புதமாகவே வளர்ந்துகொண்டிருந்தனர் அவர்கள். வேண்டாவெறுப்பாகக் கற்றுக்கொள்ளாமல், உண்மையிலேயே ஈடுபாடு கொண்டு பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டிருந்தனர்.
இம்மாதிரி சுற்றல்களின் அங்கமாக நாங்கள் விஜயநகர (ஹம்பி + திருவண்ணாமலை அருணாசலத்தின் கோவிலின் சில அங்கங்கள்), பாமினி ஸூல்தானிய (கோல்கும்பஸ்), ஹொய்ஸாள (பேளூர், ஹளேபீடு, ஸோமநாதபுரா) சாளுக்ய (பட்டதுகல்லு + அய்ஹோளே) கலாச்சாரப் பொக்கிஷங்கள் என்றெல்லாம் அலைந்து களித்தோம்; அவற்றின் வரலாற்றுப் பின்புலங்களையும், பொருளாதாரச் சூழ்நிலைகளையும், அவற்றில் மதங்களின் பங்கு பற்றியும் அளவளாவினோம். சிற்பங்களை-வேலைப்பாடுகளை மாய்ந்துமாய்ந்து ரசிப்பது எப்படி, கட்டுமானப் பொறியியல் உச்சங்களைக் கண்டு ஆச்சரியப்படுவது எப்படி, கல்வெட்டுகளைப் புரிந்துகொள்வது எப்படி என – இத்தருணங்களில் நான் கற்றுக்கொண்டது நிறைய, அக்குழந்தைகளுக்கு நன்றியுடன்…
…நான் குழந்தைகளுடன் அளவளாவும்போது அதுவும் – அதிமனித வழிபாட்டைச் செய்யும் (=ஹீரோ வொர்ஷிப்) வயதான விடலைப் பருவத்தினருடன் உரையாடும்போது மிக எச்சரிக்கையாக இருப்பேன். முடிந்தவரை கச்சிதமாக – உயர்வு நவிற்சியையோ, அல்லது எட்டுக்கட்டல்களையோ செய்யாமல் – தேவையற்று அசூயைகளை வளர்க்காமல், பொய்க் கற்பிதங்களைப் பரவிவிடாமல் இருப்பேன்.
அவர்கள் உள்மனக் கிடக்கைகளைப் புரிந்துகொண்டு ஆதூரமாக, அதேசமயம் கறாராக இருக்க முயற்சிசெய்வேன். ஆக, அவர்களது சுலபமாக நொறுங்கிப்போகும் தன்மையையும், தர்க்கரீதியற்ற புளகாங்கிதங்களையும், ஒப்புக்கொள்ளமுடியாத குரூரங்களையும் – முடிந்தவரை நேரடியாகவே எதிர்கொண்டிருக்கிறேன்.
இருந்தாலும் இது நிகழ்ந்துவிட்டது. விஜய நகர இடிபாடுகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நான் மிகவும் ஜாக்கிரதையாக சண்டை- போரில் வென்ற அரசர்கள் எப்படி கோவில்களை, கலைக் கருவூலங்களை இடித்துத் தகர்த்தனர் (நம்மூர் சங்ககால மழபுல/உழபுல வஞ்சி சார்ந்த அற்பப் புல்லரிப்புகள் போலத்தான்!) என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தக் காலங்களில் பண்படாத சமூகங்கள் இப்படித்தான் காட்டுவெறித்தனமாக ஊழி நடனமாடிக்கொண்டிருந்தன என்றும் – ஆனால் நல்லவேளை, இப்போதெல்லாம் அப்படியில்லை என்று ஆசுவாசப் படுத்தியும்…
…ஆனால், நாங்கள் சென்றவிடமெல்லாம் இதே மாதிரிக் கதையைத்தான் சொல்லவேண்டியிருந்தது. ஒரு சமயம் – குழந்தைகளுக்குப் புரிந்தது என்னவென்றால் – நாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் இந்த இடித்துத் தள்ளல்கள், சிலைகளைஉடைத்தல்கள் போன்றவற்றை – முஸ்லீம் அரசர்கள், அவர்களுடைய சேனைகள்தான் செய்திருக்கின்றனர் என்று.
ஆக, ஒரு பின்னிரவில் எங்கள் விஸ்தாரமான கதையாடல்கள் (=அரட்டை) முடிந்தவுடன் – என்னுடைய ஒரு 15 வயதுக் குழந்தை, மிகச் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு உதடுகள் துடிக்க, கண்ணீர் முட்ட, என்னைக் கேட்டது இன்னமும் என் நினவில் இருக்கிறது:
“ராம், அப்போது… நான் குற்றவுணர்ச்சி கொள்ளவேண்டும் என நினைக்கிறாயா?” (=’So… am I supposed to feel guilty, Ram?’)
நான் இந்தக் கேள்வி வரும் என எதிர்பார்க்கவில்லை – ஆகவே ஒரு க்ஷணம் தடுமாறிப் போய்விட்டேன். இப்படி ஒரு குழந்தையை உணரவைத்துவிட்டோமே என்று வெறுத்துவிட்டது எனக்கு. ஒரு அசிங்கமான உணர்வு.
ஆனால் உடனே அவளை அணைத்துக்கொண்டு சொன்னேன் – இல்லை கண்ணே, எந்தக் கழுதைகளோ எந்தக் காலத்திலேயோ செய்ததற்கு நீ எப்படிப் பொறுப்பாக முடியும்? ஔரங்க்ஸெப், அக்பர், மாலிக்கஃபுர்கள் செய்ததற்கும் உனக்கும் ஒரு சம்பந்தமுமில்லை, சரியா? எல்லா மதங்களிலும் இப்படிப்பட்ட வெறியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வெறியர்களை வெறுத்து அருவருத்தால் போதுமானது. நீ அப்படியெல்லாம் அட்டூழியங்களைச் செய்யவே மாட்டாய், யாராவது செய்தால் பார்த்துக்கொண்டிருக்கவும் மாட்டாய் அல்லவா? அது போதும். மதங்களை வெறுக்கவேண்டிய அவசியமேயில்லை. மதங்களின் காரணத்தால் எழுந்துள்ள மகத்தான இசைப்பொழிவுகளையும், மற்ற கலைகளையும், பலப்பல மானுட உச்சங்களையும் நீ அறிய மாட்டாயா என்ன? பேசாமல் தூங்கப்போ அசட்டுப்பெண்ணே!
தளர்ந்த நடையுடன் என்னிடம் வந்த அந்தக் குழந்தை – ஒரு துள்ளல் நடையுடன் தூங்கச் சென்றுவிட்டது.
அதில் – மதம், பாரம்பரியம், நம் சமூக நினைவாற்றல்கள்/ஞாபங்கங்களின் தன்மை, வரலாறுகளின் மாணவியாக ஒருத்தி தொடர்ந்து இருக்கவேண்டியதன் அவசியம், தொடர்ந்த மறுபரிசீலனைகளின் அவசியம், மானுடத்தின் அடிப்படை விழுமியங்களில் நம்பிக்கை, தாம் சார்ந்துள்ள மதத்திரள்கள் / மக்கள் சமூகங்கள் செய்த அக்கால அட்டூழியங்களுக்கு நாம் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டுமா, அவற்றைப் பற்றி என்னதான் எதிர்வினை செய்யவேண்டும் (=acknowledge the past, accept the present, adapt and go ahead towards the future in all humility, with equanimity and, most importantly with courage – but without any feeling of guilt), வெறும் கவைக்குதவாத/தொடர்பில்லாத குற்றவுணர்ச்சியினால் ஒரு சுக்குப் பயனுமில்லை, வெறுமனே குற்றம் கூறுதலால் ஆயபயன் என்கொல், இனிமேல் நாம் என்ன செய்யவேண்டும் என்பதை மனோதைரியத்துடனும், விடாப்படியாகவும் பார்க்கவேண்டும்-செய்யவேண்டும், அறிவியல்-கணிதத்தின் மேன்மை, உரையாடல்களின் மகிமை, உடலுழைப்பில் ஈடுபாடு, தன்னைத் தான் மதித்துக்கொண்டால்தான் பிறரைச் சகிக்கும் தன்மையும் வளரும், மாளா சுயவெறுப்பினால் பிறரையும் வெறுக்கமட்டுமே தோன்றும், எல்லாவற்றுக்கும் மேலாக, நகைச்சுவை உணர்ச்சியின் மகாமகோ அவசியம் – என என் அப்போதைய எண்ணங்களை விலாவாரியாக எழுதியிருந்தேன்; இப்போது யோசித்தால், அச்சமயம் இந்தக் கடிதம் முழுவதுமாக அக்குழந்தைக்குப் புரிந்திருக்குமா என்றுகூடத் தெரியவில்லை! :-(
விடைபெறும்போது அவள், என்னிடம் அஸ் ஸலாமு அலைக்கும் என்றாள். நானும் பதிலுக்கு வா அலைக்கும் ஸலாம் என்றேன், சிரித்துக்கொண்டே; ஜீதே ரஹோ, குஷ் ரஹோ, அபத் ரஹோ என்று அவள் தலைமுடியைக் கோதிவிட்டு நான் சொல்ல – முடிந்தது இந்தக் கதை.
சுபம்.
இப்போது இவள், ஜெர்மனியில் ஏதோ லிபரல்ஆர்ட்ஸ் உயர்படிப்புப் படிக்கிறாள் எனக் கேள்வி. (இவர்களெல்லாம் ஃபேஸ்புக் எழவில் இருக்கிறார்கள், கூப்பிட்டுக்கொண்டேயிருக்கிறார்கள் – ஆனால்…எனக்குத்தான் அலர்ஜி!)
நான் – சுமார் 1982ஆம் ஆண்டிலிருந்தே – அமெச்சூர் ரேடியோ ஆர்வத்துக்கு நன்றியுடன் – பல நாடுகளைச் சார்ந்த பல மகத்தான முஸ்லீம்களை (பாகிஸ்தான் உட்பட) நண்பர்களாகப் பெற்றிருப்பவன்; ஓரு காலத்தில், 70க்கும் மேற்பட்ட, எனக்கு முன்பின் தெரியாத இந்திய முஸ்லீம் இளைஞர்களுக்கு (இவர்கள் சராசரிகள்தாம், மேதைகள் என்றில்லை), தேவைமெனக்கெட்டு முனைந்து, முட்டிமோதி ஓடியலைந்து ஓரளவு நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தவன். பின்னர் – காஃபிர் என்றும் அவர்களில் சிலரால் செல்லமாக(!)அப்போதே அழைக்கப்பட்டவன். அப்போது, அவர்களில் பலர் வாய்மூடி மௌனிகளாக இருந்தது குறித்து ஆச்சரியப் பட்டவன்.
முஸ்லீம்களுக்கு வீட்டைவாடகைக்குக் கொடுக்கவேண்டும் எனத் தேடித்தேடி கடைசியில் போயும்போயும் ஒரு மோசடி முஸ்லீமுக்கு என் தகப்பனார் வீட்டை வாடகைக்குக் கொடுத்துக் கஷ்டப்பட்டவன்.
மகாமகோ அப்த் அல்-ரஹ்மான் இப்ன் முஹம்மத் ‘இப்ன் கல்டுன்‘ அவர்களின் முக்வாதிமா எனும் அழகான உலகவரலாற்றுப் பார்வையின் காதலன். மகாமகோ பெர்னார்ட் லூயிஸ் எழுதிய/தொகுத்த – குறைந்த பட்சம் ஏழெட்டு இஸ்லாம் தொடர்பான புத்தகங்களை ஊன்றிப் படித்திருப்பவன். அரபு மொழியைத் தட்டுத் தடுமாறிக் கற்றுக்கொண்டிருப்பவன். (இன்னும் 20 மாதங்களில் எனக்குப் பிடித்த அரேபிய மொழிப் புத்தகங்களில் ஒன்றையாவது மூலத்தில் படித்துவிடுவது என்று கங்கணம், பார்க்கலாம்)
ஆகவே – நான், முஸ்லீம் சமூகத்திலும் உள்ள – ஆனால் அதற்குத் தேவையற்ற, அதனைத் தனிமைப் படுத்தும் வன்முறையாளர்களையும், கேவல சமூக/மத/அரசியல் தலைவர்களையும் – இம்மாதிரி லும்பன்(=பொறுக்கி, உதிரி)களுக்குத் தொழில்முறை மதச்சார்பின்மைக் காரர்களால், ஊடகப்பேடிகளால் கொடுக்கப்படும் கள்ளப் பரிவையும் வெறுக்கிறேன். அவ்வளவுதான்.
…எப்படியும், முஸ்லீம் தீவிரமதவாதிகள், தேவையற்று மனம் புண்பட்டவர்கள் போன்ற ஜந்துக்கள் – என்னை ஒரு காஃபிர் என்று கரித்துக் கொட்டினாலும், முல்ஹத் என்று வெறுப்புடன் விளித்தாலும் – எனக்கு ஒரு சுக்குப் பிரச்சினையும் கிடையாது. இடது கையால் அவர்களுடைய கருத்துகளைப் புறம் தள்ளிவிட்டு, மேலே சென்றுகொண்டேயிருப்பவன் நான். ஏனெனில் எனக்கு நன்றாகத் தெரியும், என்னைப் பற்றி. சரியா?
தொடர்புள்ள பதிவுகள்:
- ‘முஸ்லீம்களைப் பற்றிப் பேச நான் யார்’ உட்பட, என் குறிப்புகள் (3/n)26/07/2015
- மொஹி பஹாஉத்-தீன் டாகர்: ருத்ரவீணையில் த்ருபத்22/07/2015
- அம்னெஸ்டி இன்டர்நேஷனல் – எனும் அயோக்கிய, கொடும்வன்முறை ஆதரவு (=பாரத எதிர்ப்பு) அமைப்பு: சில குறிப்புகள்19/07/2015
- பாவப்பட்ட இஸ்லாமியர்களுக்கும் பெருமளவில் தொடர்ந்து உதவும் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் அவர்களுக்குக் கொலைமிரட்டல்கள்: ஒரு கர்ட் எதிர்வினை18/07/2015
- ஆம்பூர் அட்டூழியங்கள், தமிழகத்தில் இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு ஆதரவு, என் தம்பி – நடைமுறை தமிழக இஸ்லாம் (2/3)15/07/2015
- இந்திய முஸ்லீம் சமூகம், அதன் ஏகோபித்த சுயலாப-பழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில குறிப்புகள் (1/3)13/07/2015
- மைக்கெல் என்ரய்ட், ஹாலிவுட் நடிகர் – தற்போது கர்டிஸ்தானில், இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு எதிராக… (+இலவசை இணைப்பு: தமிழ்சினிமா எனும் அற்பம்) 18/05/2015
- அயதொல்லாஹ் நிம்ர் பக்ர் அல்-நிம்ர்: சில குறிப்புகள் 12/05/2015
- தொழில்முறை அமெரிக்க எதிர்ப்பாளர்களுக்கு, கர்ட்களின் பதில் 07/05/2015
- இரு வீடியோக்கள்: பெண்களை மதிக்கும் கர்டிஸ்தானின், பெண் வீரர்கள் (சிறு இலவச இணைப்பு: ‘NRI’ மஹாத்மியம்) 05/05/2015
- ஸுன்னிமுதல்வாத இஸ்லாமிக்ஸ்டேட் வெறியர்கள், நேற்றும் 500க்கு மேற்பட்ட மாற்றுமத அப்பாவிகளைப் படுகொலை செய்தனர்! (+ இஸ்லாமிக்ஸ்டேட் கொலையாளிகளுக்கு, தமிழ் நாட்டில் ஆதரவும் சப்பைக்கட்டலும்) 02/05/2015
- பாகிஸ்தானிய பத்திரிகையாளர் நதீம் ஃபரூக் பராச்சா அவர்களை முன்வைத்து – சில சிந்தனைகள் 01/05/2015
- இஸ்லாமிக்ஸ்டேட் தீவிரப் பொறுக்கிமுதல்வாதத்தின் படி, குழந்தைகளுக்கு இரண்டு வழிகளே: 1) படுகொலையாவது, அல்லது 2) படுகொலையாளியாவது 26/04/2015
- கில்யஸ் மறுசுழற்சி: சில குறிப்புகள் 24/04/2015
- இஸ்லாமிக்ஸ்டேட் பெருச்சாளிகளை விரட்டியடிக்கும் கர்டிஸ்தானின் கபானி நகரம்: சில குறிப்புகள் 21/04/2015
- ஜிஹாத், ஜிலேபி, ஜிகர்தண்டா 10/04/2015
- கில்யஸ்: மேலும் சில நினைவுகள் + இந்திய/நடைமுறை இஸ்லாம்: சில குறிப்புகள் 09/04/2015
- கில்யஸ் – ஒரு கர்ட் பெஷ்மெர்கெ ஆளுமை, நடைமுறை இஸ்லாம்: சில நினைவுகள், குறிப்புகள் (1/2) 08/04/2015
- இதுதாண்டா மாவோயிஸம்! :-(02/03/2014
- முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி? 10/02/2014
- இன்று, கஷ்மீரி பண்டிதர்கள் சிதறடிக்கப்பட ஆரம்பித்த தினம் (19 ஜனவரி 1990)19/01/2014
- களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி? 26/02/2013
- அபு ல்-வலித் மொஹம்மத் பின் அஹ்மத் பின் ரஷித் எனும் அவெர்ரீஸ் 28/01/2013
- குழந்தைப் படுகொலைகள், எல்டிடிஇ பிரபாகரன், போராட்டங்கள்: சில சிந்தனைகள், குறிப்புகள் 25/03/2013
July 27, 2015 at 13:08
ராம், பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது .. மன்னிக்கவும்…
சென்ற வாரம் ,எங்கள் கிராமத்திற்கு சென்று இருந்தோம் , ஒரு குடும்ப விழாவிற்காக , விழா நடந்தது எங்கள் கிராம கோயிலில் .( அங்காளம்மன் ) – அப்போது ஒரு பிராமண குடும்பம் அங்கே தங்கள் பெயரனின் மொட்டை அடித்தல் வேண்டுதலுக்காக வந்தனர் . அவர்களின் குல தெய்வம் அந்த கோயில் , ஆனால், எங்கள் ஊரில் அவர்களை பார்த்ததில்லை . சென்னையில் இருந்து வந்து உள்ளனர். பல வருடங்களுக்கு முன்பே , இந்த ஊரை விட்டு சென்று விட்டனர். அவர்களுடன் பேசிய போது, தங்கள் குடும்பத்தின் எந்த ஒரு நல்ல நிகழ்வும் , இந்த கோயிலில் தான் நடக்கும் என்று கூறினார் …
இந்த நிகழ்வுக்கு பிறகு , நம் மதிமாறனர் அவர்களின் இடுகை ..
.https://mathimaran.wordpress.com/2015/07/26/amman-1115/
சும்மா அடிச்சு விட முடியும் என்பதற்கு உதாரணம் , இந்த இடுகை..
இத்தனைக்கும் எங்கள் கிராம கோயில் 5 சாதிகளுக்கு பொதுவானது , ஒரு 20 பிராமண குடும்பங்களுக்கு இந்த கோயில் குடும்ப தெய்வம் ,மேல சொன்ன நபர் , இந்த 20 குடும்பங்களில் இல்லாதவர். இப்போது 21 குடும்பங்கள். பூசை செய்வது பிராமணர் அல்ல.
இதற்கு பிறகு உங்களின் கட்டுரை..
///acknowledge the past, accept the present, adapt and go ahead towards the future in all humility //
நன்றி..
July 27, 2015 at 19:07
சார் ஒத்திசைவார் பதில் சொல்ல மாட்டார்.நீங்க முயற்சி செய்யுங்கள் மதிமாறன் கேட்கும் கேள்விக்கு
குலதெய்வ வழிபாடு என்பதில் வீட்டில் நடக்கும் எந்த நிகழ்வுகளுக்கும் கடவுளுக்கு காணிக்கை வழங்குவது தான் முக்கியம். ஆடு,கோழி பன்றி,மாடு(சென்ற நூற்றாண்டு வரை தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இன்றும் நேபாளம் மற்றும் சில மாநிலங்களில்) பலி தான் முக்கியம்.
சிலரின் குல தெய்வம் பக்கத்துக்கு கிராமத்தவருக்கு கூட ஆகாது.
என் தாய் வீட்டை சார்ந்தவர்களின் குலதெய்வம் எங்கள் தந்தையின் குடும்பத்திற்கு ஆகாது என்பதால் என் தாய் மாமாவின் ,திருமணத்திற்கு முந்தைய படையல் எதற்கும் எங்களுக்கு அழைப்பு கிடையாது. தெரியாமல் குல தெய்வத்திற்கு படைக்கப்பட்ட உணவுகளை நாங்கள் எங்க தின்று விடுவோமா என்று அனைத்தும் நாங்கள் செல்வதற்கு முன்பே சுத்தமாக காலி ஆக்கப்படும்.
பெண்களை மதிக்கும் ?இந்து மதத்தில் பெண்ணுக்கு கணவனின் குலதெய்வம் தான் அவளின் குலதெய்வமாக திருமணதிற்கு பிறகு மாறி விடும். பெண் என்றுமே இந்து தெய்வங்களுக்கு ஒரு பொருட்டு கிடையாதே.
அவர் தன குலதெய்வத்தை தூக்கி போட்டு விட்டு கணவனின் குல தெய்வத்தை ஏற்று கொண்டால் எந்த தெய்வமும் கோவித்து கொள்ளாது,தண்டிக்காது .ஆனால் கணவனின் குலதெய்வத்தை விட்டு விட்டு தன் தாய் வீட்டு குலதெய்வத்தின் படையல்களில் கலந்து கொண்டால் அவ்வளவு தான்.
கணவனின் உறவுகள்/பங்காளிகள் யாராவது இறந்தால் தன் தாய் வீட்டு சுப நிகழ்வுகளுக்கு,தம்பி,தங்கையின் திருமணமாக இருந்தாலும் காரியம் முடியும் வரை போக முடியாது. துக்கம் கொண்டாட வேண்டியது தான்.ஆனால் கணவன் தன் மனைவியின் வீட்டில் யார் இறந்தாலும் தன் உறவுகளின் திருமணதிற்கு ,நிகழுவுகளுக்கு சென்று விருந்து உண்டு களிப்பது தான் அர்த்தமுள்ள இந்து மதம்.
ஆடு,மாடு,கோழி,பன்றி சாப்பிடும் மக்கள் தங்கள் குலதெய்வத்திற்கு அவை அனைத்தையும் படைத்து வேண்டி கொள்வார்கள்.அவர்கள் ஸ்ரீரங்கம்,திருப்பதி என்று பிராமணர்களின் பிடியில் இருக்கும் கோவில்களுக்கு செல்லும் போது அங்கு அவர்கள் சொல்லும் முறைகளை கடைபிடிப்பார்கள்,பால் அபிஷேகம் தான் செய்வார்கள்.அங்கு சென்று பலி கொடுக்க மாட்டார்கள்.
பிராமணர்களுக்கு குல தெய்வம் இருக்கிறது என்றால் அவர்கள் அந்த குலதெய்வத்திற்கு மற்றவர்கள் படைப்பது போல மாமிசத்தை படைக்கிறார்களா
கடவுளாக இருந்தாலும் அவருக்கு பிடித்த படையல் கிடையாது.தங்கள் உணவு தான்.பிராமணர்களுக்கு முக்கியம் கோத்திரம் தான்.கன்யாகுமரியை சார்ந்த பிராமண ஆன் காஷ்மீர பிராமணராக இருந்தாலும் அதே கஷ்யப /பிருகு கோத்திரம் என்றால் திருமணம் செய்து கொள்ள கடும் எதிர்ப்பு வரும்.அவர்கள் சகோதரர்கள் என்று.பெரும்பாலான குல தெய்வ கோவில்கள் /வழிபாடுகள் பங்காளிகளை குறிக்கும்.ஒரே குல தெய்வத்தை வழிபடுபவர்கள் சகோதர முறை வரும் என்று திருமண உறவு வைத்து கொள்ள மாட்டார்கள்.
கோத்திரம் முக்கியமா ,குல தெய்வம் முக்கியமா
கடவுளுக்கு பிடித்த பிராமணரை தவிர்த்த மற்ற அனைவரும் படைக்கும்,பூசாரி வழிகாட்டும் மாமிச படையல்/ஆடு ,கோழி பலி கொடுக்கிறார்களா அல்லது கடவுளாக இருந்தாலும் தான் பெரும்பாவம் என்று உருவாக்கி வைத்திருக்கும் கட்டுகதைகளின் அடிப்படையில் அவருக்கு மாமிசத்தை படைக்காமல் ?பெருந்தெய்வங்களுக்கு படைக்கும் பால், சைவ உணவுகளை வைத்து வேண்டி கொள்வது குல தெய்வ வழிபாடா என்று சற்றே சிந்தித்து பாருங்களேன்
உப்பிலியப்பன் கோவிலில் யாரும் உப்பு போட்டு சமைத்த உணவுகளை படைக்க மாட்டார்கள்.அது போல குல தெய்வ கோவில்களுக்கு எந்த நிகழ்வுகளுக்கு எண்ண படைக்க வேண்டும் என்று தெளிவான வழிமுறைகள் உண்டு.அதை பிராமணர்கள் செய்கிறார்களா
July 27, 2015 at 21:11
அய்யா பூவண்ணன், கருத்துகளுக்கு நன்றி.
சுயவெறுப்புதான் உங்களுடைய பிரச்சினை என நினைக்கிறேன். அதனால் உங்கள் கோப உச்சாடனங்களில் பிலாக்கண தொனி வந்துவிடுகிறது.
மற்றபடி (எனக்குத் தெரிந்த அளவில்) பிராம்மணர்கள் தங்கள் கிராமதேவதைகளை/குலதெய்வங்களைத் தொடர்ந்து வழிபட்டாலும் மாமிசப் படையல்களைச் செய்வதில்லை என்பது எனக்குத் தெரியும். எனக்கு அறிமுகமான பல சைவவேளாளக் குடும்பங்களும், பல முதலியார் (வள்ளலார் வழியினர்) குடும்பங்களும் இதனைச் செய்வதில்லை என்பதையும் அறிவேன்; இன்னமும் பல சமூகங்கள்/குடும்பங்கள் அப்படியிருக்கலாம்.
ஆனால், இதில் நீட்டி முழக்குவதற்கு என்ன பெரிய பிரச்சினை என்பது எனக்குப் புரியவில்லை.
அதேசமயம் பல வடக்கத்திப் பிராம்மணர்கள், தங்கள் குல வழக்கு ரீதியாகவே புலால் உண்பவர்கள் என்பதையும் அறிவேன்.
இவை எதனையும் நான் முரணாக நினைக்கவில்லை.
மேலும் உங்களுடைய பார்வை – ஹிந்து மதங்களில் அனைத்தும் அயோக்கியம் என்று வரையறுக்கிறது. இஸ்லாமில் ஒரு பிரச்சினையும் இல்லை என்கிறது. இந்த இரண்டு பார்வைகளுடனும் எனக்கு ஒப்புதலில்லை.
இன்னொரு விஷயம்: திடமான தரவுகளை வைத்துக்கொண்டு அல்லது அனுபவங்களை வைத்துக்கொண்டு காத்திரமான கட்டுரைகளை நீங்கள் எழுதலாம். வெறும் பாலிமிக்ஸ் வகையறா சண்டப்பிரசண்ட எதிர்வினைகளால் ஏதாவது பயன் இருக்கிறது என நினைக்கிறீர்களா?
வெட்டியாகப் பொங்குவதை விடுத்து, ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன் நான் உங்களுக்கென எழுப்பிய கேள்விகளுக்காவது தெளிவான பதில் தர முயற்சிக்கலாமே?
ரா.
July 27, 2015 at 22:18
‘When the debate is lost, slander becomes the tool of the loser’
— Socrates
https://othisaivu.wordpress.com/2015/06/18/post-506/#comment-4357
Extract->>>
அய்யா பூவண்ணன், என்னை மன்னித்துவிடுங்கள். உங்களுடன் எனக்கு ஒத்துவராது.
உங்கள் படிப்பறிவு மிகவும் அதிகம். எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. உங்கள் அறிவார்ந்த பொழிவுகளைத் தாங்கும் சக்தி என்னிடம் இல்லை.
நான் தோற்றுவிட்டேன். சந்தேகத்திற்கிடமில்லாமல் நீங்கள் வென்றுவிட்டீர்கள்.
நீங்கள் சொல்வதுபோல் ஹிந்துத்துவர்கள் கொலைகாரர்கள், பெண் வெறுப்பாளர்கள் மட்டுமேதான்! ஹிந்துக்கள் இல்லையென்றால் இந்தியா என்றோ பூவண்ணஸ்தான் ஆகியிருக்கும். என்னிடம், உங்களைப் போல சுளுவான சிடுக்கவிழ்த்தல் ஃபார்முலா இல்லை. நான் ஒரு முட்டாள். ஒப்புக் கொள்கிறேன்.
மற்றபடி – பட்டாளத்தில் வேலை செய்வதில் தாங்கள் சுணக்கம் காட்டாமலிருப்பது மட்டுமல்லாமல், இனிமேலும் உங்கள் நேரத்தை இப்படி ஹிந்து கொலைகாரர்கள்மீது செலவழித்து வீண் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன்.
இதுவரை நீங்கள் அருளிச் செய்த நகைச்சுவைகளுக்கு மிக்க நன்றி.
பயத்துடன், நடுக்கத்துடன்:
__ரா.
July 28, 2015 at 07:58
காந்தி , வா.வு.சி யை ஏமாற்றி விட்டார் என்றவர் தானே.மதி மாறன் கடித ஆதாரம் (ஆ.ரா.வெங்கடசலபதி ) கொடுத்ததும் , அதை பற்றி கண்டு கொள்ளாமல் உள்ளார்.
பாரதி அயோக்கியன்..சரி .. அவர் பாடல்களை ஏன் பெரியார் பாடினார் (அய்யாமுத்து நூல்) என்றால் பெ.பெ. !!
பாரதிதாசனின் பொற்கிழி கட்டுரை !! தாய் பால் பைத்தியம் கட்டுரை !! எவனும் வாயை திறக்க மாடேன் என்கிறார்கள்..இதில் ஹிந்துதுவர்களை மிஞ்சி விட்டார் , மதிமாரனார்.
ஹிந்துதுவர்களை போல் திராவிடர்களும் கஷ்டமான கேள்விகள் கேட்டால் ஒன்று மழுப்புவார்கள் , அல்லது பாப்பான் பட்டம் கட்டுவார்கள்… என்ன சார் ! சரிதானே..
July 31, 2015 at 20:03
இந்த நபரை எல்லாம் உதாரணம் காட்டுகிறீர்கள் பாருங்கள். தமிழ் சினிமா பாணியில் சொல்லவேண்டுமென்றால் அவரெல்லாம் ஒரு “காமெடி பீஸு”. உங்களுக்கு மன அழுத்தங்கள் இருந்தால் படிக்கவேண்டிய இரு இணைய தளங்கள் வினவு மற்றும் மதிமாறன் இருவரதும். குலுங்கக்குலுங்க சிரித்து உங்களை தளர்த்திக்கொள்ளலாம். அதற்கு மீறி அது வேறெங்கும் குறிப்பிடப்படுவது அதன் தகுதிக்கு மீறியது.
ஒரு மொழியிலிருந்து ஒரு திரைப்படத்தை டப்பிங் செய்து இன்னொரு மொழியில் வெளியிடுவதற்கும் ரீமேக் செய்து வெளியிடுவதற்கும் இடையே உள்ள மிக எளிய வேறுபாடு கூட தெரியாமல் பாபநாசத்தை விமர்சித்திருந்தார் பாருங்கள். ஒரே காமெடி. இந்த வித்தியாசத்தை சுட்டிக்காட்டி நான் இட்ட பின்னூட்டத்தை பின்பக்கத்துக்கடியில் பதுக்கிவிட்டார். என்னவோ அதை வெளியிட்டுவிட்டால் தனக்கு இருப்பதாக அவரே நம்பிக்கொண்டிருக்கும் இமேஜ் என்ற வஸ்துவிற்கு ஆபத்து வந்துவிடப்போவதாக நினைப்பு (ஏதோ அந்தளவிற்காவது எனது பின்னூட்டத்தை எண்ணி அஞ்சினாரே என்று சந்தோஷப்பட்டுக்கொண்டேன் ஹெ..ஹெ)
July 27, 2015 at 17:09
நிச்சயமாக தமிழ் நாட்டில் ஒருதமிழர், பிராமணர் இத்தனை ஆழமாக அகலமாக இஸ்லாம் பற்றி விருப்பு வெறுப்பற்று நேர்மயான பார்வையில் எழுதுவது அபூர்வமே. ஓஹோ வென்று தூக்கிபிடித்து எழுதி தன்னை ஒரு ” சமதர்ம வாதியாக’ நட்ட நடு வாதியாக தம்பட்டம் அடிக்காமல், அதேசமயம் வெறுப்பை உமிழ்ந்து இஸ்லாம் என்றாலே இப்படிதான் என்ற வகையிலும் இல்லாமல் தெளிவாக முன்னவற்றையும், தற்கால “தனிமைபடுத்தல் ” நிகழ்வுகளையும் எளிமையாக சொல்லியுள்ளீர்கள்.சரியாக புரிந்துகொள்ளுதல் இல்லாமல் நிந்திப்பவர்களை வழக்கம் போல ஒதுக்கிவிட்டு தொடருங்கள்.
July 27, 2015 at 20:03
**அகற்றப் பட்டது**
அய்யா, உங்கள் நேரத்தை இந்த தளத்தில் விரயம் செய்யாதீர். அதீத வெறுப்புக்கு இங்கே இடமில்லை.
__ரா.
July 28, 2015 at 07:49
மன்னிக்கவும் ராம்…நீண்ட பதிவு
பூவண்ணன்
அய்யா, எப்படி ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்துக்கு சம்பந்தம் இல்லாமல் .
அடிப்படை ..
1. நான் பிராமண சாதி கிடையாது..
2. மதிமாறன் குறிப்பிடுவது போல பிராமணர்கள் யாரும் சிறு தெய்வங்களை கும்பிடுவது கிடையாது என்பது ஒரு பொய் ..
3. உங்களின் தனிப்பட்ட குடும்ப வழக்குகள் பொது ஆகாது ..
4. நான் என் மனைவி, மற்றும் என் குடும்ப பூசையில் கலந்து கொண்டு வருகிறேன்.. ஒரு பிரச்னையும் இல்லை …என் சமூகத்தில் சில குடும்பங்களில் இருக்கலாம்… பல குடும்பங்களில் (என்ன சுற்றம்) பிரச்னை இல்லை.
5. இன்னும் ஒன்று சொல்கிறேன்.. கெட வெட்டின் போது, பிராமணர்களில் ,சில குடும்பங்களில் வேண்டி கொண்டு ,ஆடு அல்லது கோழி வாங்கி கொடுப்பார்கள். சைவ உணவு உண்பவர்கள் ,என் சமூகத்திலும் சிலர் உள்ளனர். அவர்களும் , வேண்டுதலுக்கு கோழி வாங்கி விடுவார்கள்..ஆனால் உண்ண மாட்டார்கள்..
6. சாத்தா கோயிலில் இன்னமும் சைவ படையல் தான் (பூசை செய்வது பிராமணர்கள் கிடையாது)
7. .//////ஒரே குல தெய்வத்தை வழிபடுபவர்கள் சகோதர முறை வரும் என்று திருமண உறவு வைத்து கொள்ள மாட்டார்கள்///
அடிச்சு விடுவது என்பது இதுதான் .. இது சில சமூகங்கள் அல்லது குடும்பங்கள் இருக்கலாம். பொது விதி அல்ல. என் ஊரிலே ஒரே குடும்பத்திலே ஒரே குலதெய்வம் உண்டு ..
8. ///////கணவனின் உறவுகள்/பங்காளிகள் யாராவது இறந்தால் தன் தாய் வீட்டு சுப நிகழ்வுகளுக்கு,தம்பி,தங்கையின் திருமணமாக இருந்தாலும் காரியம் முடியும் வரை போக முடியாது. துக்கம் கொண்டாட வேண்டியது தான்.ஆனால் கணவன் தன் மனைவியின் வீட்டில் யார் இறந்தாலும் தன் உறவுகளின் திருமணதிற்கு ,நிகழுவுகளுக்கு சென்று விருந்து உண்டு களிப்பது தான் அர்த்தமுள்ள இந்து மதம்.///// // உங்கள் குடும்ப பிரச்சனையாக இருக்கலாம் .. இது பொது விதி அல்ல!!
9./ உங்களுக்கு இந்து மதம் பிடிக்கவில்லை என்றால் ,தாரளமாக மதம் மாறலாம்.. யாருக்கும் எந்த பிரச்னை இல்லை
10.வழிபாடுகள் மற்றும் படையல் ஊருக்கு ஊர் , கோயிலுக்கு கோயில், சமூகம், குடும்பம் என்று பல வகையில் மாறும்..
11. என் சமூகத்திலே , கடா வெட்டு அன்று கறி உண்ணாமல் , பொங்கல் படையல் செய்து உண்ணும் குடும்பம்கள் உள்ளது …
12.. பல்வேறு சாதிக்காரர்கள் ,ஒரே கிராம தெய்வத்தை குல தெய்வமாய் வழிபடுகிறோம் .. அவ்வளவே.
July 28, 2015 at 08:25
அய்யா ரவி, நன்றி.
…ஆனால், இந்தப் பூவண்ணன் அவர்களுடன் பொருத எனக்கு அலுப்பாக இருக்கிறது. அதே சமயம், அவருடைய தொடர்ந்த அட்ச்சுவுடுதல்களைப் படித்தால் கோபமும் வருகிறது. மறுபடியும் மறுபடியும் அவரிடம் பொறுமையாகச் சென்றாலும் தத்தக்கா-பித்தக்கா என்று வேறெங்கெல்லாமோ அவர் தொடர்ந்து சென்றுகொண்டிருப்பார். ஒரே கண்ணாமூச்சி விளையாட்டுதான் போங்கள். பின்னர் திடீரென்று வெளிவந்து பின்பக்க வாயுவை வெளியேற்றிவிட்டுப் போய்க்கொண்டேயிருப்பார். திரும்பித்திரும்பி சிசுக்கொலை குசுக்கொலை என ஒரே கொசுத்தொல்லை.
ஏனெனில் – கடந்த 2-3 வருடங்களாக இந்த மனிதரின் பரிணாம வீழ்ச்சியைப் பார்த்துக்கொண்டு வருகிறேன். சோகம்.
நீங்கள் இளைஞரும், மனோதிடம் அதிகம் உள்ளவரும் போல. மேலும் பூவண்ணன்களிடம் நீங்கள் முன்னர் ஏதாவது உரையாடல் கிரையாடல் செய்திருக்கும் பேறு பெற்றிருக்கிறீர்களா என்பது தெரியவில்லை. அல்லது ஃபேஸ்புக் ஏதாவதில் இவருடன் நகையாடி இருக்கிறீர்களோ? தாங்கள் இளம்கன்றோ? :-)
எனக்கு அவருடன் உரையாட முயன்றுமுயன்று நரையாடிவிட்டது. ஆகவே புறமுதுகிட்டு ஓடிவிடுகிறேன். வெட்கமாகத்தான் இருக்கிறது, என்ன செய்ய!
தாங்கள் தாராளமாகத் தொடரலாம் – ஆனால், தயவுசெய்து உங்கள் உடல்/மன நிலையைத் தொடர்ந்து கண்காணித்துக்கொள்ளவும்.
எச்சரிக்கை:
பூவண்ணனைப் பிடித்தல் உடல் நலத்துக்குக் கேடு.
பொது இடங்களில் பூவண்ணனைப் பிடிப்பது சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
…ஹ்ம்ம்…
எது எப்படியோ, நீங்கள் பொலிய வாழ்த்துகள்.
மறுபடியும் நன்றி.
__ரா.
July 28, 2015 at 08:59
ரவி ஐயா
கடவுள்களை பொறுத்தவரை குறிப்பாக கிராம தெய்வங்களை பொருத்தவரை பொது விதி கிடையாது என்பதை தானே நானும் கூறுகிறேன். என் பெற்றோர் திருமணம் ஒரே சாதி திருமணம் தான்.என் தாய்வழியில் இறந்தவர்களை எரிப்பார்கள்.தந்தை வழியில் புதைப்பார்கள்.தந்தையின் மூத்த சகோதரியின் கணவரின் வழியில் தலைச்சன் குழந்தையாக இருந்தால் எரிப்பார்கள்.மற்றவர்களை புதைப்பார்கள்.இவற்றிற்கு குலதெய்வம் சார்ந்த கதைகள்,நம்பிக்கைகள் முக்கிய காரணம்.
பிராமணர்களுக்கு கோத்திரம் தான் மிக முக்கியம்.சூத்திரர்கள்,பஞ்சமர்களுக்கு கோத்திரம் கிடையாது. சும்மா நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஏதாவது ஒரு பெயரை,சிவா விஷ்ணு கோத்திரம் என்று கோவில்களில் கேட்பதால் இன்று வைத்து கொள்கிறார்கள்.புதிதாக தோன்றிய சபரிமலை வழிபாடு,சாய்பாபா வழிபாடு போல குல தெய்வம் என்று பிராமணர்களில் வெகு சிலர் வழிபட துவங்கி இருக்கிறார்கள்.பிராமணர்களுக்கு மேற்கூறியபடி குலதெய்வம் சார்ந்து திருமணம்,இறப்பு சார்ந்த நடைமுறைகள் இருக்கின்றனவா அல்லது சாம்வேதி,யதுர்வேதி ,முகோபாத்யாயா,சதுர்வேதி என்று வேதங்களை சார்ந்து இருக்கின்றதா
சபரிமலைக்கு செல்பவர்கள் இருமுடியில் மாமிசம் எடுத்து செல்ல முடியுமா,திருப்பதியில் படைக்க முடியுமா.குல தெய்வம் என்று சொல்லி கொண்டு தனக்கு வேண்டியதை படைப்பது பக்ரீத் அன்று சுண்டல் கொடுத்து கொண்டாடுவது போல தான்.இது தான் மத மாற்றம்.
பெண்களின் உறவுகளுக்கும் சூதகம் உண்டு எனபது எனக்கு புது செய்தி .பெண்ணுக்கு குலதெய்வம் முதல்,எரித்தல்,புதைத்தல் வரை திருமணதிற்கு பிறகு கணவன் வழி தான்.
இதை விட இந்துக்களுக்கு அதிக தீங்கு தரும் நிகழ்வு கிடையாது என்பதை உணர்ந்தும் கருகொலைகளை எவ்வளவு எளிதாக தாண்டி செல்கிறீர்கள் சார்.
July 28, 2015 at 10:28
பூவண்ணன் , சம்பந்தம் இல்லாமல் ,குல தெய்வ வழிபாடு , கரு கொலை என்று எதற்கு முடிச்சு..
உங்கள் வழியே வந்தாலும், கரு கொலை மிகவும் குறைவு நீங்கள் திட்டும் பாப்பானிடம் தான் .
/////குல தெய்வம் என்று பிராமணர்களில் வெகு சிலர் வழிபட துவங்கி இருக்கிறார்கள்////// பொய் .. திரும்ப திரும்ப இதை தான் பொய் என்கிறேன் . காலம் காலமாக கிராம தேவதை கோயில்களை குல தெய்வமாக பிராமணர்கள் கும்பிட்டு கொண்டு தான் வருகிறார்கள் .இப்போது திருமண சடங்குகள் என்று திரிகிறீர்கள் . என் சாதியிலே பல விதமான திருமண சடங்கு முறைகள் உள்ளன .. பிராமணர்கள் , அய்யர் வைத்து வீட்டிலோ (நான் சென்று உள்ளேன்) அல்லது மண்டபத்திலோ , கோயிலிலும் திருமணம் செய்து கொள்கிறார்கள் . திருமணம் ஆனா உடன் முதல் வழிபாடு குலதெய்வம் கோயிலில் தான் . மேலும் மொட்டை அடித்தல் , காது குத்தல், வருட வழிபாடு, கொடை, எல்லா நல்ல நிகழ்வுகளுக்கும் முதல் பத்திரிக்கை எல்லாம் அவர்கள் குல தெய்வம் கோயில் தான் நடக்கிறது … நான் இதை எங்கள் கோயிலில் பல முறை பார்த்து உள்ளேன் ..
குறைந்த பட்சம் பெரியாண்டவர் வழிப்பாடு போன்றவைகளை கேள்வி பட்டது உண்டா ??
எதற்கு இதனை திரிப்புகள் ??? இதில் திராவிடர்களை திட்டுகிறார்கள் என்று பிலாக்கணம் ..என் சாதி தமிழ் நாடு திராவிட சாதிகளில் ஒன்று !! திராவிடர்களுக்கு பதில் பாப்பான் எல்லோரும் அயோக்கியன் என்றால் நமக்கு சந்தோசம்..நம்முடைய குற்றங்களை கூறினால் , அவ்வளவு தான் கோவம் பொத்து கொண்டு வரும் .. திரித்து கொண்டே இருங்கள்… அவ்வளவு தானே..இப்போது இந்த பதிலில் ஏதாவது ஒரு வார்த்தையை எடுத்து கொண்டு வசை பாடுங்கள்
July 28, 2015 at 13:17
விதிவிலக்குகளை வைத்து கொண்டு வாதிடுவது சரியா ஐயா
ஒரே சாதியாக இருந்தாலும் ஊருக்கு ஊர் மாறுபடும் வழிபாடுகள்,சூட்டப்படும் பெயர்கள்,பிறப்பு இறப்பு ,காவல் தெய்வ கொண்டாட்டங்கள் ,படையல்கள் போன்ற சங்கதிகளுக்கு மிக முக்கிய காரணம் குலதெய்வங்கள் தான்.
பிராமணர்களுக்கு பொதுவான விதிகள்,பொதுவான பழக்கங்கள்,கோத்திரங்கள்,வடமொழி சார்ந்த வழிபாடுகள்,பெயர்கள் இந்தியா முழுக்க இருப்பதை கண்டு வியந்திருக்கிறேன்.
தமிழில் மந்திரம் ஓதும் பிராமணர்கள் தான் மிக மிக அதிகம் என்று அடுத்ததாக நீங்கள் வாதிடலாம்.தாய்மொழி தமிழாக இருந்தாலும் வடமொழி தான் தெய்வ மொழி,கடவுளுக்குரிய மொழி,தமிழில் வழிபாடு நடத்துதல்,குடமுழுக்கு செய்தல் பெரும் பாவம்@தவறு எனபது தான் மத நம்பிக்கை உடைய 99 சதவீத பிராமணர்களின் நிலை.
சபரிமலை இருமுடியில்,திருப்பதி வெங்கடாசலபதிக்கு ,பானக நரசிம்மருக்கு என்ன படைக்க வேண்டுமோ அதை தான் படைக்க வேண்டும்.குல தெய்வத்திற்கு இது பொருந்தாதா .பலி கொடுக்கப்படும் கோவில்களில் பிராமணர்கள் பூசாரிகளாக தென்னகத்தில் இருக்கிறார்களா .அது ஏன் பால் மற்றும் பழங்கள் படைக்கப்படும் கோவில்களில் மட்டும் பிராமண பூசாரிகள்.தமிழ்நாடு முழுவதும் சுற்றி குலதெய்வங்களை ஆராய்ந்தவர் என்ற முறையில் அப்படி ஏதாவது குல தெய்வ கோவில்கள் இருந்தால் கூறுங்களேன்
July 28, 2015 at 13:25
அய்யா, எதற்காக இவற்றையெல்லாம் சொல்லவருகிறீர்கள் என்பது எனக்குச் சரியாகப் புரியவில்லை.
ஹ்ம்ம்… யோசித்தால் எதுவும் புரிந்துகொள்ளப்பட்டேயாகவேண்டும் என்ற நியதியும் இல்லை.
ஆக…
வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம் என்னவென்றால், பூவண்ணன் என்றால் ஓட்டம்? ;-)
பாவம் ரவி அவர்கள், வசமாக மாட்டிக்கொண்டார். [வீரப்பா கடகடா சிரிப்பு] ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹா!
(மன்னிக்கவும்!)
July 28, 2015 at 09:27
நன்றி ராம்.. நான் பேஸ்புக் போன்றவற்றில் இல்லை .. ஆதலால் , எனக்கு இவர் யார் என்று தெரியாது .
இணையத்தில் பல தளங்களில் பார்ப்பது ஒன்று தான்.அடிச்சு விடுவது ..அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளலாமல் தங்களின் அரசியல் நிலைப்பாடு வைத்து கொண்டு கருத்து சொல்வது .. சிலர் நாம் உண்மை சொன்னாலும் , கமெண்டுகளை மறைத்து விடுவார்கள் .. குறிப்பாக நம் வசவு (எ) வினவு .. திராவிட பதிவர்கள் எதற்கும் ஒரே பதில்தான் .. நீ பார்பான் ..
ஹிந்துத்வர் கொஞ்சம் பரவாயில்லை .. ஆனால் அவர்களும் , பதில் சொல்ல தெரியாவிட்டால் ஒரே சமாளிப்பு தான் அல்லது வசவுதான் ..
இது என்னுடைய கண்ணோட்டம் மட்டுமே.. இணையத்தின் வளர்ச்சியினால் , பல கேள்விகள் எழும்புகின்றன . குறிப்பாக
முற்போக்காளர்கள் என்பவர்கள் நிலை பரிதாபம் தான் ..இவர்களின் இரட்டை நிலை பல் இளிகிறது. இவர்களின் பிம்பங்கள் உடைகின்றன . ஆகவே , பொறுத்துக்கொள்ள முடியாமல் , சம்பந்தம் இல்லாமல் நமக்கு அர்ச்சனை செய்கிறார்கள்..
பல ஊர்களுக்கு வேலை விஷயமாக சென்று வந்ததால் , பலரின் பொய்கள் எளிதாக தெரிகிறது .
யாருக்கும் உண்மை தேவை இல்லை . அவர்களின் அரசியல் நிலைப்பாடு மட்டுமே.
July 28, 2015 at 10:16
i pray allaah(sal) give you good mind
July 28, 2015 at 10:35
மன்னிக்கவும் ராம். இந்த குல தெய்வ , சிறு தெய்வ வழிபாடுகள் பற்றி குறிப்புகள் பல எடுத்து வைத்து உள்ளேன்.அவற்றை எல்லாம் பார்த்த பிறகு தான் என் கருத்துக்கள் மாற்றம் பெற்றன. தமிழ்நாட்டில் பல பகுதிகளுக்கு சென்று நேரில் பார்த்து தகவல்கள் சேர்த்து உள்ளேன் .. ஆகவே தான் , நான் பதில்கள் கொடுத்து உள்ளேன் …நன்றி ..
July 28, 2015 at 13:06
அய்யா ரவி, நான் ஏன் உங்களை மன்னிக்கவேண்டும்?
நீங்கள் கோர்வையாக, சுயானுபவம் சார்ந்து தர்க்கரீதியாக – அதுவும் ஆவேசப்படாமல் எழுதுகிறீர்கள். அதற்கு நான் நன்றிதான் சொல்லவேண்டும். உங்களிடமிருந்தும் கற்றுக்கொள்ளவேண்டும். ஆகவே நன்றி, மீண்டும்…
தொடர்ந்து பரிமாறுங்கள். பொலிக, பொலிக!
…அய்யய்யோ – அப்போது மெல்லட் டமிள் இணிச் சாவாதோ?
அட இயற்கையே!
July 28, 2015 at 10:41
And if you are in doubt about what We have sent down upon Our Servant [Muhammad], then produce a surah the like thereof and call upon your witnesses other than Allah , if you should be truthful.
http://quran.com/2/23
But if you do not – and you will never be able to – then fear the Fire, whose fuel is men and stones, prepared for the disbelievers.http://quran.com/2/24
pray to allah befor it is too late
July 28, 2015 at 12:19
And when the sacred months have passed, then kill the polytheists wherever you find them and capture them and besiege them and sit in wait for them at every place of ambush. But if they should repent, establish prayer, and give zakah, let them [go] on their way. Indeed, Allah is Forgiving and Merciful.http://quran.com/9/5
July 28, 2015 at 12:19
Fight them; Allah will punish them by your hands and will disgrace them and give you victory over them and satisfy the breasts of a believing people
http://quran.com/9/14
July 28, 2015 at 12:19
Fight those who do not believe in Allah or in the Last Day and who do not consider unlawful what Allah and His Messenger have made unlawful and who do not adopt the religion of truth from those who were given the Scripture – [fight] until they give the jizyah willingly while they are humbled.http://quran.com/9/29
July 28, 2015 at 12:21
And fight them until there is no fitnah and [until] the religion, all of it, is for Allah . And if they cease – then indeed, Allah is Seeing of what they do.
http://quran.com/8/39
kuffars pray allah pray allaah pray allah
allahooakbar
July 28, 2015 at 12:58
அய்யா அனாமதேய திருநெல்வேலிக்காரரே!
மதியவுணவு நேரத்தில், நேரத்தை வீணடிக்காமல் காப்பிபேஸ்ட் வேலைகளை அமர்க்களமாகச் செய்கிறீர்கள் போலும்! யுவகிருஷ்ணா பயிற்சியளித்தாரோ?
சரி. நான் அல்லா இருக்கிறாள் என்பதை நம்புபவன் அல்லன். அப்படியே இருந்தாலும் அவளை ஒரு பெண்ணாக வரித்துக்கொள்வதற்கே ஆசை. என்னுடைய ஊழிக்கூத்தாடும் கபால மாலையணியும் பேயவள் காணெங்கள் அன்னை காளி போலவே!
மற்றபடி நான் நரகம் சொர்க்கம் என்பதையெல்லாம் நம்புவனல்லன். நான் இறந்தபின்னர் (ஏன், உயிருடன் இருக்கும்போதேகூட) என் அணுக்கள் வெறுமனே மறுசுழற்சி செய்யப்படும் என்பதை அறிவேன், அவ்வளவுதான்.
நான் என்னுடைய கொர்-ஆனைப் படித்திருக்கிறேன். ஆக, உங்கள் கொர்-ஆனை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், சரியா?
சும்மாசும்மா மேற்கோள் காட்டுவது – அதிலும் குஃபர்களிலும் கேடுகெட்ட என்னைப்போன்ற ஒரு முல்ஹத்திடம் இப்படிப் பேசுவது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. உங்கள் நேரத்தை விரயம் செய்யவேண்டாம்.
சமர்த்தாக இருக்கவும். இரவு படுக்கப்போகுமுன் அவசியம் பல் துலக்கவும். மனத்தை நிர்மலமாக வைத்துக்கொண்டு தூங்கப்போகவும்.
நன்றி.
July 28, 2015 at 21:22
//
2015 ரமளான் வன்முறை செயல்களின் பட்டியல்
முஸ்லிம்கள் இஸ்லாமை தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்கள், எனவே
ரமளானின் மட்டும் 2765 மனிதர்களை கொன்று குவித்துள்ளார்கள்!
ரமளானின் மட்டும் 3271 மனிதர்களை காயப்படுத்தியுள்ளார்கள்!
56 தற்கொலை தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள்
291 தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள்
//
2015 ரமளான் கடிதம் 15
புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்
http://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day15.html
July 29, 2015 at 08:37
// தாய்மொழி தமிழாக இருந்தாலும் வடமொழி தான் தெய்வ மொழி,கடவுளுக்குரிய மொழி,தமிழில் வழிபாடு நடத்துதல்,குடமுழுக்கு செய்தல் பெரும் பாவம்@தவறு எனபது தான் மத நம்பிக்கை உடைய 99 சதவீத பிராமணர்களின் நிலை. //
சுத்த உளறல்.
ஏதோ “69′ அப்பிடின்னு சொன்னாலாவது ஒரு கிளுகிளுப்புகாக விட்டுடலாம். “99′ என அடிச்சு விடுறீங்களே. சர்வே ஏதும் எடுத்தீரா?
என் தினசரி வழிபாடு தமிழ் வழியிலேயே உள்ளது. வேதங்கள் கற்காமல் நாலாயிரம் மட்டுமே பயில்வோர் நிறைய பேர் உண்டு.
தமிழக வைணவ கோவில்களில் வேதகால ரிஷிகளுக்கு பொதுவான சிறப்பு வழிபாடு ஏதும் இல்லை. திருமால், திருமகளை அடுத்து ஆழ்வார்கள், நாதமுனிகள் போன்ற ஆசாரியர்கள் என தமிழோடு தொடர்புடைய அடியார்களுக்கே மரியாதை. விழாக்களும் அவர்களுக்கே. பாரத்வாஜ மகரிஷி அவதார உத்சவம் என்றெல்லாம் கிடையாது. நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் என ஆழ்வார்கள் திரு அவதார விழாக்கள் மட்டுமே.
“தென்னன் தமிழை வடமொழியை, நாங்கூரில் மண்ணு மணிமாடக் கோவில் மணாளனை” என்ற திருமங்கை மன்னன் பாடியவாறு தமிழாகவும், வடமொழியாகவும் இருப்பவன் அவன்.
July 29, 2015 at 13:37
வெங்கடேசன் சார்
சாமி கும்பிடுகிறேனோ இல்லையோ பல ஊர்களில் உள்ள கோவில்களுக்கு போகும் வழக்கம் இன்று வரை உண்டு. பெற்றோரை கேதார்நாத் முதல் அனந்தபத்மநாப சுவாமி கோவில் வரை அழைத்து சென்று இருக்கிறேன்.
வாய் சும்மா இல்லாமல் தமிழில் அர்ச்சனை என்று கேட்டு அவர்களின் உக்கிர பார்வை/கோவம், வெறுப்புக்கு ஆளாகும் சூழல் தான் இன்று வரை.கோவில் நுழைவாயில் வரை தான் குடும்பத்தினர் என்னோடு வருவார்கள்.தமிழில் அர்ச்சனை செய்யுங்கள்,செய்வீர்களா என்று கேட்டு அவர்கள் தரும் சாபத்தை வாங்க என் அம்மாவிற்கு பயம்.கோவிலில் அறிவிப்பு பலகைகளில் (நங்கநல்லூர் ஆஞ்சநேயர கோவில் போல அரசின் கீழ் வராத கோவில்கள்) அர்ச்சகர்களால் எழுதப்படும் தமிழ் வாக்கியங்களை பார்த்திருக்கிறீர்களா.இன்றுவரை விடாபிடியாக மணிபிரவாளமும், ஸ்ரீ மிகுந்த நடை தான்.99 சதவீதம் என்று கூட சொல்ல முடியாது .100/100 தான் இன்று வரை.
நண்பர்களின்,உறவுகளின் திருமண நிகழ்வுகளில் மந்திரங்கள் சொல்லி சடங்குகளை செய்பவர்களிடம் நீங்கள் தமிழிலும் செய்வீர்களா என்று கேட்கும் கொடிய பழக்கமும் என்னிடம் உண்டு. இன்று வரை ஒருவர் கூட செய்வேன் என்று சொன்னது கிடையாது.அவர்களை கிண்டல் செய்கிறேன் என்று எண்ணும் உக்கிர பார்வை மற்றும் பதில்கள் தான் கிடைத்து இருக்கிறது.குலதெய்வம் இருக்கிற /இல்லாத பிராமண நண்பர்களின் திருமணங்கள்,சுப நிகழ்வுகள்,துக்க சடங்குகள் பலவற்றில் கலந்து கொண்டு இருக்கிறேன்.தமிழில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றை கூட இன்று வரை பார்த்தது கிடையாது. அப்படி ஏதேனும் நிகழ்வு நடைபெறும் போது தயவு செய்து அழைக்க மறந்து விடாதீர்கள் ஐயா
July 29, 2015 at 22:00
பூவண்ணன்,
நான் மேற்கோள் வைணவ மதத்து வழிபாட்டில் தமிழுக்கு முக்கிய இடம் இருக்கிறது. வழிபாடு என்பது அர்ச்சனையோடு முடிவதில்லை. கோவிலுக்கு போனால் அர்ச்சனை செய்தாக வேண்டும் என்ற அவசியமும் இல்லை. நான் அர்ச்சனை செய்யும் பழக்கம் இல்லை.
கோவில் திருவிழாக்களில் நாலாயிரத்துக்கு முக்கிய இடம் இருக்கிறது. முதல் மரியாதை நாலாயிரம் ஒதுவோருக்கே. அங்கு சென்று “தமிழ் நீச பாஷை, எனவே நாலாயிரம் ஓதக்கூடாது” என சொல்லிப் பாருங்கள், தர்ம அடி விழும். திருமால், திருமகள் அடுத்து வைணவத்தின் முக்கிய ஆசார்யன் நம்மாழ்வார். வீடுகளில் செய்ய வேண்டிய சம்பிரதாய பூர்வமான தினசரி வழிபாட்டு முறையில் நித்தியானுசந்தானம் ஓத வேண்டும். நாலாயிரத்தில் இருந்து சுமார் முன்னூறு பாடல்கள் தொகுப்பு இது.
சடங்குகளில் வடமொழி முக்கிய இடம் பெறுகிறது. இருப்பினும் அங்கும் தமிழுக்கு சொற்ப இடம் உள்ளது. உதாரணமாக, திருமணத்தில் “வாரணமாயிரம்” திருமொழியை கூறலாம். அதே போல, இறப்புச் சடங்கில் முதலில் ஓதப்படுவது நாலாயிரத்தில் இருந்து சில பாடல்களே. ஒரு உதாரணப் பாடல். சம்சார சாகரத்தில் இருந்து விடுபட்டு திருநாடு (வைகுண்டம்) அடைய குருகையர் கோன் (நம்மாழ்வார்) பாடிய திருவிருத்தம் என்ற நாலாயிர பகுதியை கற்க சொல்கிறது பாடல்.
கருவிருத்தக் குழி நீத்த பின் காமக் கடும் குழி வீழ்ந்து
ஒரு விருத்தம் புக்கு உழலுருவீர் உயிரின் பொருள்கட்கு
ஒருவிருத்தம் புகுதாமல் குருகையர் கோன் உரைத்த
திரு விருத்தத்து ஓர் அடி கற்றீர் திரு நாட்டகத்தே –
முடிவாக, நான் மேற்கோள் காட்டிய வைணவத்தில் இரண்டு மொழிகளுக்கும் இடம் இருக்கிறது. திருமணம் உள்ளிட்ட சடங்குகளில் வடமொழி முக்கிய இடம் பெறுகிறது. வழிபாட்டில் தமிழுக்கு முக்கிய இடம் உண்டு. நீங்கள் தமிழ் மட்டுமே மதத்தின் மொழியாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். வைணவ மதத்தில் அப்படி கொள்கை இல்லை. தென்னன் தமிழ், வடமொழி இரண்டுமாக திகழ்பவன் திருமால். இதுவே இம்மதத்துக் கொள்கை. எனவே வடமொழியை விலக்க வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு மொழிகளும் இடம் பெறுகின்றன. நீங்கள் வடமொழியை வெறுப்பதால் இதை உணர மறுக்கிறீர்கள்.
இதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை.
July 29, 2015 at 20:47
பேரன்பிற்குரிய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பூவண்ணன் சார் அவர்கள் சமூஹத்திற்கு…………
அதெப்புடி சார் அப்படி ஒரு குசும்புத் தனம்………
உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை கிடையாது. சடங்கு சம்ப்ரதாயங்களில் நம்பிக்கை கிடையாது. அப்படியிருக்கையில் கோவிலிலோ உங்கள் உறவினர் நண்பர்கள் வீடுகளிலோ ………. வழிபாடுகள்…….. தமிழில் நடத்தப்பட்டால் என்ன…….. சம்ஸ்க்ருதத்தில் நடத்தப்பட்டால் என்ன…….. மணிப்ரவாளத்தில் நடத்தப்பட்டால் என்ன? அல்லது கும்தலக்கடி கும்மா என்றே கூட வழிபாடு நடக்கட்டுமே? அதில் என்ன வந்து விட்டது? உங்களுக்கு ஏன் வலிக்க வேண்டும்? ………..
நீங்க எங்க எங்கல்லாம் கலாய்ச்சிருக்கீங்கன்னு பாத்தா? கோவில்…….. ஹிந்துக்களுடைய சடங்குகளில்……..
எப்போதாவது ஒரு மஸ்ஜிதில் ****அல்லாஹோ அக்பர்****** என்று தொழுகை நடக்கும் போது…… தொழுகை நடத்துபவரிடம் ……… எந்த மதத்திலும் நம்பிக்கையில்லாத ……… ஆனால் ஹிந்து மதத்தின் பால் மட்டும் காழ்ப்புள்ள…….. தாங்கள்……. மஸ்ஜிதில் அரபு மொழியை விடுத்து தமிழில் வழிபாடு நடத்துங்கள் என்று எப்போதாவது கேட்டதுண்டா?
பரிசுத்த சுவிசேஷ வேதாகம கல்லூரியில் ஸ்னாதகராக ஆகி ……….சுவிசேஷ ப்ரசங்கிகள் பைபள் ப்ரசங்கம் செய்யும் போது குறுக்கிட்டு …….. அஹோ வாரும் பிள்ளாய்…….. மணிப்ரவாளம் விடுத்து தமிழில் நீங்கள் ஏன் ப்ரசங்கம் செய்யக்கூடாது என்று கலாய்த்தது உண்டா?
தமிழ், சம்ஸ்க்ருதம், மணிப்ரவாளம், உர்தூ, அரபி, ஆங்க்லம் ……… எல்லா மொழிகளும் மனிதர்களுக்காகத் தானே. எந்த மொழியின் பாலும் எதற்கு வெறுப்பு காட்ட வேண்டும்? புரியவில்லை.ஒவ்வொரு மொழிக்கும் மொழிநடைக்கும் ஒரு பின்னணியும் அழகியலும் உண்டு தானே. அந்த அழகைப் பார்க்க விழைபவர்களுக்கு எந்த மொழியிலும் அல்லது மொழிநடையிலும் காழ்ப்பு வராது.
நீங்கள் அசத்து அசத்துன்னு அசத்தி ஒத்திசைவு வாசகர்களை திரும்பத் திரும்ப காமடி செய்த விஷயம்………….
குசுர் பீ, சொர்ரபுட்டின்
நீங்களே சொல்லுங்கள் இப்படி பொழுது போக்கிற்காக நீங்கள் எழுதுவது தமிழா? அல்லது மோஹ்தர்மா கௌசர் பீ மற்றும் ஜெனாப் சொஹ்ராபுத்தீன் போன்ற இஸ்லாமியர்கள் பெயரை சிதைப்பது இஸ்லாமிய அன்பர்களிடம் நீங்கள் காட்டும் கரிசனத்துக்குத் தான் அழகா?
ஒன்று முறையான தொல்காப்பிய இலக்கணப்படி தூய்மையாக வடவெழுத்து விடுத்த தமிழில் எழுதுங்கள் அல்லது கூடுமானவரை சரியான உச்சரிப்பு வரும்படிக்கு க்ரந்த எழுத்துக்களை உபயோகித்து பெயர்களை எழுதுங்கள்……… அவர்கள் என்னதான் பய்ங்கரவாதிகளாக இருந்தாலும்………… வாழ்ந்திறந்த மனிதர்கள்……….. அவர்கள் பெயரை நகைக்கும் படியாக குசு பீ சொர்ர என்று நீங்கள் எழுதுவது தமிழையும் இஸ்லாத்தையும் ஒன்றாக இழிவு செய்வதாகவே ஆகும்.
July 29, 2015 at 21:14
தமிழை நாசம் செய்யும்…………. மணிப்ரவாளத்தைப் பற்றி ஒன்றுமே அறியாத………….. இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஓ போடும்……… தேச பக்தி மிகுந்த…….. மதநல்லிணக்கத்தில் நாட்டமுள்ள இஸ்லாமிய சான்றோர்களை ஒதுக்கித் தள்ளும்……….
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பூவண்ணன் சார் அவர்களது சமூஹத்திற்கு……..
\\\ (நங்கநல்லூர் ஆஞ்சநேயர கோவில் போல அரசின் கீழ் வராத கோவில்கள்) அர்ச்சகர்களால் எழுதப்படும் தமிழ் வாக்கியங்களை பார்த்திருக்கிறீர்களா.இன்றுவரை விடாபிடியாக மணிபிரவாளமும், ஸ்ரீ மிகுந்த நடை தான்.99 சதவீதம் என்று கூட சொல்ல முடியாது .100/100 தான் இன்று வரை. \\
பத்து லக்ஷணத்தனுக்கு நித்யனுக்கு மங்களம்
பரமபதத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம்
காரோன் அனுகூலனுக்கு கன்னிமரி சேயனுக்கு
கோனார் சஹாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு
சீரேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம்
ஸர்வ லோகாதிப நமஸ்காரம் ஸர்வ ச்ருஷ்டிகனே நமஸ்காரம்
தரைகடலுயிர் வாழ் ஸகலமும் படைத்த தயாபர பிதாவே நமஸ்காரம்
மேற்கண்ட பாடல்கள் மிகப்பல க்றைஸ்தவ சஹோதரர்களது குடும்ப விழாக்களில் க்றைஸ்தவ விவாஹ ரிஸப்ஷன் களில் பாடப்படுகிறது. பூவண்ணன் சாரின் செருப்புக்குத் தகுந்தபடி கால்களை செதுக்கும் செப்படி வித்தைப்படி இந்த க்றைஸ்தவ ப்ராம்ஹணர்களை என்ன செய்வது? நான் பல முறை பார்த்து மகிழும் நிகழ்ச்சிகளில் ஒன்று பாஸ்டர் சாம் செல்லதுரை அவர்கள் மேற்கத்திய இசையில் தோளகளைக் குலுக்கிக் கொண்டு மணிப்ரவாள நடையில் தினசரி இரவு பொதிகையில் க்றைஸ்தவப் பாடல்களைப் பாடுவது. இந்த மணிப்ரவாள பாஸ்டர் ஐயர் / ஐயங்கார் / ராவ் ஜீ யை பூவண்ணன் சார் என்ன செய்வதாக உத்தேசம்?
அப்புறம் கீழே பாருங்கள் அருளாளர் குணங்குடி மஸ்தான் சாஹிபு அவர்களது பாடலிலிருந்து ஒரு சாம்பிள்
திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து
தீன் கூறி நிற்பர் கோடி!
சிம்மாசனாதிபர்கள் நஜரேந்தியே வந்து
ஜெய ஜெயா வென்பர் கோடி!
ஹக்கனருள் பெற்ற பெரியோர்களொலிமார்கள்
அணி அணியாய் நிற்பர் கோடி!
அஞ்ஞான வேரறுத்திட்ட மெய்ஞானிகள்
அனைந்தருகில் நிற்பர் கோடி!
மக்க நகராளும் முஹம்மதுர் ரஸூல் தந்த
மன்னரே என்பர் கோடி!
வசனித்து நிற்கவே கொழுவீற்றிருக்குமும்
மகிமை சொல வாயுமுண்டோ
தக்க பெரியோனருள் தங்கியே நிற்கின்ற
தவராஜ செம்மேருவே!
தயவு வைத்தெமையாளும் சற்குணம் குடிகொண்ட
ஷாஹுல் ஹமீதரசரே!
திக்குத் திகந்தம், சிம்மாசனாதிபர்கள், ஜெய, தவராஜ, மேரு, தாச என சகட்டு மேனிக்கு சம்ஸ்க்ருதம், நஜர், ஹக், முஹம்மதுர் ரஸுல் என உர்தூ…………..
தமிழ், சம்ஸ்க்ருதம், உர்தூ…………… இவர் ………….
மணிப்ரவாளத்தைக் கையாளும் இந்த இஸ்லாமிய ஐயர் / ஐயங்கார் / ராவ்ஜீக்களை பூவண்ணன் சார் என்ன செய்வதாக உத்தேசம்.
தமிழகத்தில் நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோவிலில் மட்டிலும் மணிப்ரவாளம் கிடையாது. ஜாதிவித்யாசமெல்லாம் இல்லாமல் பைபள் ப்ரசங்கம், ஸூஃபி பாடல்கள், தொல் தமிழகத்தின் பௌத்த நூற்கள், ஜைன நூற்கள், ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாய வ்யாக்யானாதிகள், திருப்புகழ்………… என அங்கிங்கெனாதபடி எங்கும் விரவியுள்ளது மணிப்ரவாளம்.
உங்களுக்கு ஹிந்துமதக்காழ்ப்பு, பார்ப்பனக் காழ்ப்பு என்று எதையும் காழ்ப்பின் பாற்பட்டே பார்த்துப் பழக்கமாகி விட்டதால்……… எந்த ஒரு மொழியும் மொழிநடையும் எந்த ஒரு மதத்துக்கும் ஜாதிக்கும் சொந்தமானது இல்லை என்ற நிதர்சனம் ………… முகத்திலறையும் படிக்கு தரவுகள் இருந்தாலும் ………. அவை தெளிவாக விளக்கப்பட்டாலும்………. மண்டையில் ஏறாது…………காழ்ப்பு ஏறிய இருண்ட மனதில்…………. நல்லிணக்கம் ஏறாது…………. குசுர் பீ, சொர்ரபுட்டின்………. இத்யாதிகள் ஆர்ஹோணித்த ஹ்ருதயத்தில் குணங்குடி மஸ்தான் சாஹிபு, நன்னுமியான், சோட்டுமியான்………. போன்ற சான்றோர்கள் எப்படி ஆரோஹணிப்பார்கள்.
நீங்கள் அட்ச்சு வுடுவது நிக்கவே நிக்காது……….. ஆனால் பூவண்ணன் சார் அவர்கள்……….. மணிப்ரவாளம் என்பது………. ப்ரத்யேகமாக பார்ப்பனர்கள் சம்பந்தப்பட்டது………..அவர் வெகு முனைப்புடன் காழ்ப்பு கொண்டுள்ள ஹிந்துமதம் மட்டிலும் சார்ந்தது என்று புளுகுவது………… நிதர்சனத்துக்கு மாறானாது என்ற விஷயம் மேற்கண்ட சொற்ப சாம்பிள்களால் ……….. குறைந்த பக்ஷம் இதை வாசிக்கும் வாசகர்களுக்குப் போய்ச்சேரும் இல்லையா?