கில்யஸ் – ஒரு கர்ட் பெஷ்மெர்கெ ஆளுமை, நடைமுறை இஸ்லாம்: சில நினைவுகள், குறிப்புகள் (1/2)
April 8, 2015
மனதே சரியில்லை.
சுமார் இரண்டு வருடங்கள் முன்(ஜூன் 2013 என நினைவு), எங்களிடமிருந்து (= ஒரு சிறிய அளவிலான இந்திய நண்பர் குழாமிடமிருந்து) விடைபெற்ற கர்ட் தேசம் (இப்போதைக்கு இரான் – ஸிரியா – துருக்கி – ஆர்மேனியா – இராக்-கின் பாகம்) சார்ந்தவரான இந்த கில்யஸ் அம்மணி, சில நாட்கள் முன்பு (28 மார்ச்) அற்ப, மதப்பொறுக்கிமுதல்வாத இஸ்லாமிக்ஸ்டேட் அரைகுறைகளுடன் நடந்த ஒரு துப்பாக்கிச் சண்டையில் இறந்தார்.
இணையத்தில் இது தொடர்பாகத் தேடிப் பார்த்தேன். அவர் அறிமுகம் செய்த சில கர்ட் பிராந்திய ட்விட்டர்காரர்களிடமும் (ஒரு அழகான – மனதைப் பிழியும், ஆனால் கம்பீரமான எடுத்துக்காட்டாக) தேடினேன்; கொஞ்ச நேரம் #பெஷ்மெர்கெ-விலும் தேடினேன்.
ஒரு மேலதிக விஷயமும் கிடைக்கவில்லை. (இப்போது தோன்றுகிறது, ஒரு மேலதிக விஷயமும் கிடைக்கவும் தேவையில்லை!)

மேற்கண்ட கர்டிஸ்தானின் வரைபடம் – இந்தப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது; அங்கு, இது தொடர்பான பலவிதமான வரைபடங்கள் இருக்கின்றன.
… எனக்கு நேற்று காலை தான் இந்தச் செய்தி கிடைத்தது.
எவ்வளவோ படுகோரச் சாவுகளை நேரடியாகப் பார்த்திருந்தாலும், பொதுவாகவே என் தாங்குதன்மை மிகவும் அதிகம் என்றாலும்கூட, என் கால்கள் தொய்ந்துபோய் விட்டன. ஒரே சோர்வு. சாப்பிடவே பிடிக்கவில்லை. மலையளவு, பள்ளிசார் வருடமுடிவு மாளா வேலைகளுக்கு அப்பாற்பட்டு, பிற வேலைகள் காத்துக்கொண்டிருக்கின்றன – பெய்ன்ட் வேலை, ஹார்ட்டிஸ்க்கள் ரிப்பேர், வெய்யிலில் வெந்து கொண்டிருக்கும் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதல், வீட்டுவேலைகள் பலப்பல – இவற்றைத் தவிர அரையும் குறையுமாக இருக்கும் பல ஒத்திசைவு பதிவுகள், மேஜைகளிலும் நாற்காலிகளிலும் அலமாரிகளிலும் பிதுங்கி வழியும், அவசியம் படிக்கவேண்டிய புத்தக அடுக்குகள் என – ஆனால், என் அன்புக்கும், மரியாதைக்குமுரிய தோழியின் நினைவாக, இதைக்கூட என்னால் செய்யமுடியாதா என்ன?
நேரே வீட்டுக்கு வந்து இதனை எழுத ஆரம்பித்தேன்… Read the rest of this entry »
திருக்கோஷ்டியூரில் நவீன இராமானுஜன்: ஒரு பின் நவீனத்துவ திராவிட மீளுருவாக்க, மாற்றுப் புராண எழவியல்
April 6, 2015
… ‘கலைஞர் டீவி’யில் மெய்மறந்து மானாடமயிலாட நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டே, பாதித் தூக்க மயக்கத்தில், கோபாலபுரத்தில் மானசீக கோபிகைகளுன் ஏகோபித்து, ஆனந்தமாக கோபிகாகீதம் பாடிக்கொண்டே உடன்இறப்புகளுக்குக் கடிதம் எழுதியே, தமிழகத்தை முன்னேற்றிக் கொண்டிருந்த நவீனகிருட்டிணர், திடீரென்று விழித்தெழுந்தார்.
என்னையே ஏமாற்ற முயன்ற அந்த கேடி சகோதரர்கள் எப்படி ஒழிந்தாலும் பரவாயில்லை. ஆனால் என் மக்கள்? 2ஜி+கலைஞர்டீவி ஆரியச் சதியால், மகளும் மனைவியும் துணைவியும் ஒருசேர சிறைபிடிக்கப்படுவார்களோ? மஞ்சள்துண்டினை விட்டெறியும் காலமும் வருமோ?
அறிவாலயத்தைப் பீரங்கி கொண்டு நானே பிளக்கும் காலமும் வருமோ? எனக்கு மோட்சம் கிடைக்குமோ? என் குலக்கொழுந்து இசுடாலினார் பொறுமையாக இருப்பாரோ – அல்லது ஔரங்க்ஸெப், அவன் தந்தை ஷாஜெஹானைச் சிறையில் அடைத்ததுபோல் நடந்துவிடுமோ? என் கட்சியின் கோஷ்டிப் பூசல்கள் தீருமோ? கோஷ்டிப் பூசல்? என் சொந்தப் பிள்ளைகளே இப்படி பதவிக்கு ஆசைப்பட்டு கோஷ்டிகானம் செய்கிறார்களே …ஆ! …கோஷ்டி, திருக்கோஷ்டியூர்!! திருக்கோஷ்டியூர் கோபுரப் புகழ் ராமானுஜரைப் பற்றி ஒரு புத்தகம்/அல்லது கதைவசனம் எழுதினால், என் பாவங்கள் அகலுமோ?
திராவிடப் பகுத்தறிவு Vs சாதா பகுத்தறிவு
April 3, 2015
இதுதாண்டா – திராவிடம், பகுத்தறிவு, திராவிடப் பகுத்தறிவு, திராவிட மயக்கம், திராவிட முயங்கியல்: பல பாகங்களில், ஒரு விளக்கக் கையேடு (2/n)
சரி. இவ்வரிசையில் முதல் பாகம். கண்டிப்பாக அதனைப் படித்துவிட்டு ஒன்றும் புரியாமல் இங்கு வந்தால், மேலே இப்பதிவையும் தலையை வெகுவேகமாகச் சொறிந்துகொண்டு ரத்தக்களறியுடன் படித்து, மேலதிகமாகப் புரியாமல் புளகாங்கிதம் அடையலாம். நன்றி.
திராவிடம், பகுத்தறிவு, திராவிடப் பகுத்தறிவு, திராவிட மயக்கம், திராவிட முயங்கியல்: பல பாகங்களில், ஒரு விளக்கக் கையேடு (1/n)
April 2, 2015
எச்சரிக்கை: மன்னிக்கவும். இது அக்கப்போரல்ல. இவை ரசக்குறைவான நகைச்சுவைக் கட்டுரைகளுமல்ல. அதற்கு நீங்கள் போகவேண்டிய இணையத் தளங்கள்: வினவும் விடுதலையும் – உடனடி வாயுத்தொல்லை நிவாரணங்களுக்கு, கிச்சுக்கிச்சு மூட்டல்களுக்கு, இதமான புரட்டுகர சொறிதல்களுக்கு நான் உத்திரவாதம்.
இந்தக் கையேட்டுக் குறிப்புகள் வரிசையில், என் வழக்கம் போல, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல விஷயங்களை எழுதலாம் என நினைக்கிறேன் – அதாவது, ஒரு எடுத்துக்காட்டாக திராவிட இயக்கத்தைப் பற்றியும் அதே சமயம் பகுத்தறிவு, நேர்மை போன்ற விஷயங்களெல்லாம் கூட எழுதப் படலாம்… (தற்போது, இந்த வரிசையில் எவ்வளவு பாகங்கள் வருமென்பது தெரியவில்லை, என்னால் அனுமானிக்க முடியவில்லை. பார்க்கலாம்.)
பகுத்தறிவு: சில திராவிடக் குறிப்புகள்
திராவிடர் கழக மானமிகு வீரமணி அவர்களின் கருணையற்ற பொய்கள்
April 1, 2015
| நிகழ்ச்சி: கேள்விக்கென்ன பதில் | தந்தி டீவி | ஒருங்கிணைப்பாளர்/நடத்துநர்: ரங்கராஜன் பாண்டே | ஓளிபரப்பான தினம்: 28/03/15 | கி வீரமணி நேர்காணல் | 53.48 நிமிடங்கள் | யூட்யூப் சுட்டி: https://www.youtube.com/watch?v=bU0H077e4DA |
சூட்டோடு சூடாக விமர்சனம் என்கிற பேரில் கந்தறகோளம் செய்வது, விஷயங்கள் நடக்க நடக்க என்னுடைய மேலான முட்டியடி எதிர்வினைக் கருத்துகளைத் தெரிவித்தே தீர்வது என்பதெல்லாம், பொதுவாகவே எனக்கு ஒவ்வாத விஷயங்கள்.
ஆனால், நான்கைந்து நண்பர்கள் இதனைப் பரிந்துரைத்தார்கள் என இதனைப் பார்த்தேன். ஒரு மணிநேரம் பொழுதுபோனது என்று சொல்ல முடியாது – பரிந்துரைத்தவர்கள் மீது கொஞ்சம் கோபமும் வந்ததுதான்; இவர்களில் ஒருவர் ‘warning: to be watched only when you have real time to kill and not otherwise’ என்று சொல்லியிருந்தார் தான்! ஆக என்னுடைய நேரம் வியர்த்தம் என்பதற்கு அப்பாற்பட்டு – திராவிடர் கழகம் பற்றிய என் கருத்துகள், இதனால் மேலும் உறுதிப் பட்டிருக்கின்றன எனத்தான் எண்ணம்.
பாவமாக இருந்தது – இந்த நேர்காணலைப் பார்க்கப் பார்க்க. வீரமணி அவர்கள் கொஞ்சம் திண்டாடி விட்டார்தான்…
இக்கட்டுரையின் முதல்பாகம். இப்பதிவு(ம்) ரொம்பவே நீளம். பொறுமையாகப் படிக்கவும். தேவையற்றுப் பொங்கவேண்டாம். சரியா? :-(
என் பள்ளித் தோட்டத்திற்கு சுமார் 45 வகை விதம்விதமான பறவைகள் (சில, பிரமிக்க வைக்கும் அழகுடன்) வருகின்றன. கூடவே பலப்பல பட்டாம் பூச்சிகளும், சிலவகைத் தேனீக்களும், பலப்பல பூச்சிகளும், ஊர்வனவும். இவற்றைப் போக்கத்துப் பார்த்து, குறிப்புகள் எடுத்து மகிழ்ந்துகொண்டிருக்கும் எனக்கு, சிலவகை கருங்குருவிகளைப் (Drongo, Dicrurus macrocercus) பற்றிக் கொஞ்சமேனும் மேலதிகமாகத் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது.
அதேபோல வெண்டைக்காய்களில் (Okra, Ladies Finger, Hibiscus esculentes) எனக்குச் சில பிரச்சினைகள் இருந்தன. இவற்றைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள நமைச்சலெடுத்ததால், இணையத்திற்குச் சென்றேன். ஆனால், சில ‘சுட்டிக்’ குதிப்புகளுக்குப் பிறகுதான்… பிரச்சினையே!
என் தலைவிதிதான், இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளைப் பார்க்க வைக்கிறது…
கயமைப் படுகொலைகள் செய்யப்படுவதையும், கைகள் வெட்டப் படுவதையும் கண்டுகொள்ளாமல் மதச்சார்பின்மைத்தனத்துடன் கமுக்கமாக இருப்பது எப்படி?
March 26, 2015
இதே விஷயங்கள், தலைகீழாக நடந்திருந்தால் நம் போலிப் போராளிகளும், சமதர்மப்பூங்காவினரும், ஊடகப் பேடிகளும் எப்படியெல்லாம் ஆடியிருப்பார்கள் என்பதை நினைத்தால்…
அய்யோ மூடர்காள், அந்த வேலைவெட்டியற்ற வரலாற்றாளர் சுப்பராயலுவின் சோழர் கதை, எழவெடுத்த நீலகண்ட ஸாஸ்திரி தன்னுடைய தென்னிந்திய வரலாற்றில் எழுதிய கதையெல்லாம் சோழர் வரலாறேயல்ல! மன்னிக்கவும்!
திராவிட இயக்கங்களின் எழுபெரும் கொடைகள்
March 21, 2015
கடந்த சுமார் 2 மாதங்களாக, விட்டுவிட்டு – திராவிட இயக்க விசிறியான (இன்றுவரை) நண்பர் ஒருவருடன் தொடர்ந்து நடத்திக்கொண்டேயிருக்கும் மின்னஞ்சல் உரையாடலின் ஒரு சாராம்சப் பகுதி கீழே:
… நான் பலதடவை உங்களுக்கு எழுதியுள்ள கடிதங்களில் – திராவிடலை இயக்கங்களின் பல குணாம்சங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். அவற்றின் தமிழ் சமூகத்தின் மீதான எதிர்மறை தாக்கத்துகளைப் பற்றியும், அதன் பலப்பல ‘கொடை’ களைப் பற்றியும்கூட. நிறைய யோசித்தும் கூட, என்னால் இந்த முயக்கங்களுக்குச் சாதகமான ஒரேயொரு விஷயத்தைக் கூடத் தெரிந்துகொள்ளமுடியாமல் போனது என் போதாமைதானோ? Read the rest of this entry »
‘பெரியார்பிறந்தமண்ணர்களும் மண்ணாங்கட்டிகளும்’ எனும் வேலைவெட்டியற்ற உரையாடல் எழவின் சாராம்சம், சோகக்கதை தொடர்கிறது. இதன் முதல் பகுதி இங்கே – பெரியார்பிறந்தமண்ணர்களும் மண்ணாங்கட்டிகளும்; இதைப் படித்தால் – கீழேகாண்பது கொஞ்சம் புரியலாம். ஆகவே.
-0-0-0-0-0-0-
“என்ன ஸார் இப்படி கேக்கறீங்க? ரொம்ப பிடிக்கும். இத்தனை சல்லீசா எவன் ஸார் கோபி பராட்டா பன்னீர் பராட்டான்னிட்டு சுவையா பண்ணி கொடுப்பான், சொல்லுங்கள்?”
பெரியார்பிறந்தமண்ணர்களும் மண்ணாங்கட்டிகளும்
March 19, 2015
:-( இந்த சோகக்கதையை எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை.

இதுதான் ஒரிஜினல் திராவிட நாடு. இந்த திராவிட ஃபிலிஸ்டைன்களைப் பற்றி மேலே தெரியவேண்டுமானால் என்னுடைய செல்லமான அர்பன் டிக்ஷ்னரிக்குச் செல்லவும். ஸ்க்ரோல் செய்து அந்த முழு கட்டுரையையும், பலவித பொழிப்புரைகளையும் படிக்கவும். அப்போதுதான் உங்களுக்கு இந்த திராவிட ஃபிலிஸ்டைன்களைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்துகொள்ள முடியும்! நன்றி.
பாவம், அவருக்கு என்னைப் பலவருடங்களாகத் தெரியும். முன்னாட்களில் புத்திசாலியாகவே (அதிகமாகவெல்லாம் அல்ல – ஆனால், கொஞ்சம் பொறுத்துக்கொள்ளும் படியாக) இருந்தவர்தான் – பரவலான வாசிப்பும் + செறிவூட்டும் வாழ்க்கை அனுபவங்களும் பெரும்பாலும் இல்லாமல் இருந்தாலும்கூட – எனத்தான் நினைவு. திராவிடக் குண்டுச் சட்டியில், கழகக் கழுதைகளை ட்ரீயோட்ரீயோ என ஓட்டுவது என்பது மிகமிக லேசு எனும் உண்மைக்கு அப்பாற்பட்டு – வயதாகவயதாக நிலைப்பாடுகளில் முதிர்ச்சியின்மை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது – மறுபக்கம், மறுபரிசீலனை செய்யும் ஆற்றலும் குறைந்துகொண்டே வருகிறது, என்ன செய்ய. (அவருக்கு மட்டுமல்ல, எனக்கும்தான்! :-( ஒப்புக் கொள்கிறேன்!)
கவிஞ்ஜர் கனிமொழி அவர்களுக்கு கலைஞ்ஜர் கருணாநிதி அவர்கள் கொடுக்கும் படுகோர, கொடூர சாபம்! :-(
March 15, 2015
பாவம், கனிமொழி அவர்கள். பெண்ணாகப் பிறந்ததுதான் அவருடைய முதல் குற்றமோ? பிற்காலத்தில் திடுதிப்பென்று கவிஞ்சரானது வெறும் வெகுதூர இரண்டாம் குற்றம்தானோ?
[1] ‘பாலா’ அவர்களின் சில கருத்துகள் தொடர்பாக, ஜெயமோகன் அவர்களுக்கு நான் எழுதிய மின்னஞ்சல்: மதுகிஷ்வர், பங்கர்ராய் – சில குறிப்புகள்; [2] ‘பாலா’ அவர்களின் எதிர்வினை: ஒத்திசைவுக்கு மறுமொழி
…இரண்டு கடிதங்களையும் அவற்றுக்கான என் பதில்(!)களையும் (கொஞ்சம் எடிட்/திருத்தம் செய்து – பெயர்களைக் கத்தரித்து) கொடுத்திருக்கிறேன். அக்கப்போர்தான். எனக்கு (+உங்களுக்கு) இது தேவையா?
[அய்யய்யோ! மறந்தே விட்டேனே!!] வீரவணக்கம்! நேற்று மாணவர்போராட்ட மரண இரண்டாமாண்டு நினைவேந்தல்!!
March 9, 2015
தகத்தகாய மாஜி ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட் குஞ்சாமணிகளே! எனக்கு மன்னிப்பு உண்டா?
சித்பவன்காரர், காந்தி, கோட்ஸே, ஜோதிடம் – சில குறிப்புகள் (2/2)
February 23, 2015
… சிறு வயதிலிருந்து கடுமையான உடல் உழைப்பு (தங்கள் 140 அடி ஆழக் கிணற்றை இவரும், இவர் தந்தையாரும் மட்டுமே தோண்டியிருக்கின்றனர்) – வயல்களில் போராட்டம். தங்களுக்குத் தேவையான உணவு, சோப்பு, துணி என அத்தனை பொருட்களையும் அவர்களே தயாரித்துக் கொண்டிருந்தனர், வீட்டில்/பண்ணையில் உதவிக்கு வேறு ஆட்களை வைத்துக்கொள்ளவில்லை. அவர்கள் இரு விஷயங்களுக்குத்தான் வெளியே சென்று கடையில் நிற்க வேண்டியிருந்தது – 1) வெள்ளைச் சர்க்கரை – இதையும் ஏதாவது விசேஷங்களில்தான் உபயோகித்திருக்கிறார்கள்; 2) தேயிலை – இதன் தேவையும் சொற்பமே! மற்றெல்லாவற்றையும் அவர்களுடைய சிறு பண்ணையிலேயே தயாரித்துக் கொண்டனர்.
சித்பவன்காரர், காந்தி, கோட்ஸே, ஜோதிடம் – சில குறிப்புகள் (1/2)
February 23, 2015
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால், ஒரு முறை ஸ்ரீ தரம்பால் அவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தபோது, அவருடன் — கம்பி மாதிரி ஒல்லியாகவும், முகமெல்லாம் கருணையும், பாண்டித்தியமும் ஒழுகும் சித்பவன்காரர் ஒருவரும் (90+) இருந்தார். பார்த்த மாத்திரத்திலேயே மகாமகோ மேதைகள் எனச் சிலசமயம், நம்மால் சிலரை உணர்ந்துகொள்ள முடியுமல்லவா? அவர் அப்படித்தான்.கூட இருந்த ஆஸாதி பசாவ் ஆந்தோலன்காரரான (=’சுதந்திரத்தைக் காப்பாற்று’ இயக்கம்) ராஜீவ் தீக்ஷித் போன்றவர்கள் ஸ்ரீ தரம்பால் அவர்களை என்னென்னமோ கேட்டுக்கொண்டிருந்தார்கள். சுவாரசியமான விவாதங்கள். காரத்தன்மை மிக்கவையும் இளமைத் துடிப்பால் விசிறப்பட்டவையுமான பல பார்வைகள், கருத்துகள் முன்வைக்கப்பட்டன. சுமார் 11 மணிக்கு ஏறக்குறைய எல்லோரும் கிளம்பிப் போனபோது – நாங்கள் மூவர் மட்டுமே இருந்தோம்.
மறுபடியும் ‘ஹிந்த் ஸ்வராஜ்’ பற்றிப் பேச்சு கிளம்பியது. அதுவரை உன்னிப்பாக உரையாடல்களைக் கவனித்தாலும் ஒன்றுமே பேசாத அந்த பெரியமனிதர் – நடுக்கமற்ற, தெளிவான குரலில் சுமார் 4 மணி நேரம் போல – காலை 3 மணி வரை, தொடர்ந்து பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். நான் கேட்ட சில அதிகப் பிரசங்கித்தனமான கேள்விகளுக்கும் பதில் அளித்தார். ‘ஆஹா’ தருணங்கள். இந்தியாவைப் பற்றியும் பாரதத்தைப் பற்றியும் இன்னும் பல செறிவான பார்வைகள் கிடைத்தன. நான் கொடுத்து வைத்தவன்.
அப்போது அவர் உபயோகித்த பல நுணுக்கமான பதங்களில் ஒன்று – सुकृति, நான் உபயோகப் படுத்தியுள்ள அர்த்தத்தில்.
நான் இம்மாதிரி அர்த்தத்தில் ஸுக்ரிதியைக் கேள்விப்பட்டதில்லையே என்று சொன்னதற்கு, அவருடைய பதில் – ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு டிக்ஷனரி மூலமாக மட்டுமே பல விஷயங்களை அணுகமுடியாது அல்லவா? ஸம்ஸ்க்ருதத்தில் – பலவகைகளில், பேச்சுவழக்குகளில், தொன்மங்களில் இந்த குறியீட்டு விரிவாக்கல் (~symbol overloading) இருக்கிறது என்றார். காளிதாஸனிடமிருந்து ஒரு மேற்கோள் கொடுத்தார் என மங்கலாக நினைவு.
ஆகவேதான் – நான் ‘பாரதத்தின் மைய நீரோட்டங்களான அணுகுமுறைகளில் ஒன்று – ஸுக்ரிதி: இதன் பலவிதமான அர்த்தங்களில் சில =’ என எழுதினேன்.
ப்ரூவர்’ஸ் டிக்ஷனரி போல ஒன்று ஸம்ஸ்க்ருதத்திற்கு இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்?
ஏன், நம் தமிழுக்குக் இப்படிப்பட்ட ஒரு புத்தகம் இருந்தால் நன்றாக இருக்கும்தானே?கூட
குறிப்பு: இந்த சித்பவன்காரரைப் பற்றிப் பின்னொரு சமயம் எழுதுகிறேன். (3 ஃபெப்ருவரி, 2015)
-0-0-0-0-0-
சரி. பலவிதமான சிந்தனைகளில் அலைக்கழிக்கப் பட்டு, இன்னமும் முழித்துக் கொண்டிருக்கிறேன்; பொதுவாக இரவு ஒன்பது மணிக்கெல்லாம் தூங்கியே போய்விடுவேன். இன்று, இந்த அலறும் நினைவுகளுக்கு நேரமிருக்கிறது. ஆகவே, இவரைப் பற்றிய சில குறிப்புகளை தூசி தட்டி எழுதுகிறேன்.
Read the rest of this entry »
இதுதாண்டா டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் படுபீதி பயங்கர பகீர் ரிப்போர்ட்!! (2/2)
February 20, 2015
(அல்லது) டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் எனும் ஆக்ஸிடேன் அரக்கன்: படுபீதி பயங்கரம் — தமிழகம் அழியப் போகிறதா? ஒரு பகீர் ரிப்போர்ட்! (2/2)
முதல் பகுதி: டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் எனும் ஆக்ஸிடேன் அரக்கன்: படுபீதி பயங்கரம் — தமிழகம் அழியப் போகிறதா? ஒரு பகீர் ரிப்போர்ட்! (1/2)19/02/2015
-0-0-0-0-0-0-0-
… … என் மதிப்புக்கும் அன்புக்கும் (+கிஂண்டலுக்கும்) உரிய ஞாநி அவர்கள் குதித்தெழுந்துகொண்டு ஏன் இதனைப் பற்றி ( μ-ஆக்ஸிடோ டைஹைட்ரஜன்) ஒரு துண்டுப் பிரச்சாரமோ பிரசுரமோ செய்யவில்லை / வெளியிடவில்லை?
இருபதுமுப்பது வருடங்களுக்கு முன், கல்பாக்கப் பயங்கரத்தைப் பற்றி தீம்தரிக்கிட்டுக்கொண்டே மாய்ந்து மாய்ந்து எழுதியது அவருக்கு நினைவிலேயே இல்லையா?
கனிமொழி: என் அம்மா, அப்பா, அண்ணன்கள், கணவன், மகன், நண்பர், நண்பி(!) பெயர்களை உடனடியாக மாற்றவேண்டும்!
February 14, 2015
கனிமொழி அவர்களின் மகாமகோ கவிதைகளைப் படித்துவிட்டு இக்காலம் வரை – அவருக்குத் தமிழைக் கண்டாலே அதிவெறுப்பு என்றுதானே நினைத்துக்கொண்டிருந்தேன்? அநியாயமாகத் தவறு செய்து விட்டேனோ??
“… அ.தி.மு.க. அரசிற்கு தமிழ் உணர்வு இல்லை. எனவே தான் சிறீரங்கத்தில் கட்டப்பட்டுள்ள பயணிகள் தங்கும் விடுதிக்கு யாத்ரிகர் நிவாஸ் என பெயர் இட்டுள்ளனர். அழகிய தமிழ் பெயரில் அதை அழைக்க அரசுக்கு மனம் இல்லையா?”
— — கனிமொழி (தன்மானம் காக்க தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் – கனிமொழி பேச்சு – (ஞாயிறு, 08 பிப்ரவரி 2015))
ஹ்ம்ம்ம்… இருக்காதுதான். நிச்சயம் நான் தவறு செய்யவில்லை எனத்தான் தோன்றுகிறது. அவருக்குத் தமிழ் ஒத்துவராதுதான். ஆனால், ஆனால்… தொழில்முறை திராவிடனின் தமிழுணர்வு என்பது சும்மா ஆடுமா, சொல்லுங்கள்? :-)
[இதன் முந்தைய இரு பாகங்கள்…] [1] முடிவிலா உரையாடல்: என் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் (1/n) 10/02/2015 [2] முடிவிலா உரையாடல்: என் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் (2/n) 12/02/2015
…மேலும், கல்வி என்பது ஒரு ஒற்றைப்படைப் பார்வையில் “நல்லா படிச்சி, வேல கெடச்சி, கண்ணாலம் கட்டி, கொளந்த பெத்து” எனச் சுருக்கப்பட்டுப் புரிந்துகொள்ளப் படக்கூடாது என நினைக்கிறவன் நான். இவற்றைப் பற்றிப் பின்னர் பார்க்கலாம். [தொடர்ச்சி…]
1. பணம்: முதலில், நம் வாழ்வின் அடிப்படைத் தேவைகளின் ஒன்றான ‘பணம்’ என்பதைப் பற்றி, சிறிது தர்க்கரீதியாக, ஆழமாகப் பார்க்கலாம். ஏனெனில், இவ்விஷயத்தில் சமனநிலைக்கு வருவது நம் எல்லோருக்கும் முக்கியம்தான்.
உங்களுக்கு – தினந்தோறும் குடும்பத்தைப் பேணுவதும், தினசரி வாழ்க்கையை எதிர்கொள்வதுமே பிரச்சினைகளாக இருக்கலாம் என்பது எனக்கு ஓரளவுக்குப் புரிகிறது. ஆம் – நான் இக்கடிதத்தில், கீழே குறிப்பிட்டிருக்கும் பல விஷயங்களுக்கு, ஓரளவுக்குப் பணம் தேவைதான். ஆனால் அபரிமிதமான அளவுக்குத் தேவையல்ல – ஏனெனில், பெரும்பாலும் உங்கள் குழந்தைகள் பொறுத்த உங்கள் கரிசனத்தை, அன்பை, அரவணைப்பைக் காட்ட – உங்களுடைய நேரத்தை அவர்களுக்காகவும் ஒதுக்குவதே போதுமானது.
இருந்தாலும் இதை நான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது. கீழ்கண்டவற்றை – உங்கள் வாழ்க்கையை நோக்கிய என் புரிதலின் மீது கட்டமைத்திருக்கிறேன் என்பதையும் – தவறுகள் இருப்பின், அவற்றைத் திருத்திக்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன் என்பதையும் உங்களுக்குக் தெரிவிக்கிறேன்.
[தொடர்ச்சி…]
நானும், ஒரு பத்து நிமிடம் பார்த்துவிட்டு, என்ன சொல்லியும் குழப்பம் அடங்காததால், கூட்டம் முடிந்து விட்டது என்று சொல்லி, அறையை விட்டு அலுப்புடன் வெளியேறி விட்டேன். ஏறத்தாழ இம்மாதிரி, ஒருமுறையல்ல – இருமுறை நடந்தது, உங்களுக்கு நினைவிருக்கிறதா? முதலில் எனக்கு இவற்றையெல்லாம் பார்த்து-கேட்டு மிகமிகக் கோபம் வந்தாலும் உங்கள் ஒருவரையும் துளிக்கூட அவமரியாதையாகப் பேசவில்லை என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.
உண்மை இப்படி இருக்கையில், உங்களில் சிலர், இம்மாதிரி கூட்டங்களை நான் ஏன் கூட்டுவதில்லை என முறையீடு செய்வது திகைப்பாகவே இருக்கிறது. வெட்டிக் கேளிக்கைகளுக்குத் தான் திரைப்படங்கள் இருக்கின்றனவே!
பலவருடங்களாக, தேவைமெனக்கெட்டு நம் சமூகத்துடன் ஊடாடி வரும் எனக்கு, நம் தமிழ்ச் சமூகத்தை நினைத்து எப்போதுமே ஆச்சரியம் கலந்த வருத்தம்தான். வெறுப்பு இல்லை – ஏனெனில் எனது குவியம் என்பது பெரும்பாலும் உங்கள் குழந்தைகள் மீதுதான். மேலும் நாமெல்லாரும் காலாகாலத்தில் போய்ச் சேரவேண்டியவர்கள் – ஆனால், நம் குழந்தைகள் அப்படியல்லர்; அவர்களுடைய எதிர்காலம் அவர்களுக்காக ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.

